பொள்ளாச்சி நடேசன் என்ற தமிழ் அறிஞர் குழந்தைகளுக்குத் தமிழைச் சொல்லிக்கொடுக்கப் புது வழியைக் கண்டு பிடித்துள்ளார். அதன்படி, 32 அட்டைகளில் 30 நாட்களில் தமிழை தமிழ் தெரியாத எவருக்கும் கற்றுக்கொடுக்க முடியும்.
விவரங்களுக்கு அவரது கீழ்க்கண்ட இணைய தளத்தில் பாருங்கள்:
அந்த அட்டைகளை பயன்படுத்தும் முறையையும் இந்தக் காணொளியில் கூறியிருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல், தமிழைப் பிழையின்றி எழுதவும் பேசவும் ஒரு கல்விமுறையைத் தயாரித்து அதனை 30 பாடங்களில் அடக்கி, 30 நாட்களில் மின்னஞ்சல் மூலமாக தினம் ஒரு பாடமாக அனுப்பியும் தருகிறார்.
மேற்கண்ட எல்லாப் பாடங்களையும் அவரது இணையதளத்திலிருந்து இலவசமாக தரவிரக்கம் செய்துகொள்ளலாம்.
இவரது ஆரம்பத் தமிழ் கற்பிக்கும் முறை மூலம் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் உலகில் பல இடங்களில் தமிழ் கற்பிக்கப்பட்டு வருகிறது.
குவிகமும் அவருடன் இணைந்து தமிழைத் தமிழ் தெரியாதவர்களுக்குச் சொல்லிக்கொடுக்க ஒரு நல்ல திட்டம் தீட்டி வருகிறது. அது பற்றிய விவரங்கள் பின்னர் வெளிவரும்.