‘தாங்க்ஸ் ஃபார் நாட் யூஸிங் மொபைல்”
பணம் எடுப்பதற்காக பாங்கிற்கு சென்றிருந்தேன். என் மகள்
மிதிலாவும் உடன் இருந்தாள். க்யூவில் நின்றிருந்த என்னிடமிருந்து
மொபைல் ஃபோனை வாங்கி தன் சிநேகிதிக்கு கால் பண்ண புறப்பட்-
டாள்.
‘மிதிலா.. இங்கே ஃபோன் யூஸ் பண்ணக் கூடாது. அங்கே
போட்டிருக்கு பார்’ என்று காஷியர் காபினின் முகப்பைக் காட்டினேன்.
‘தாங்க்ஸ் ஃபார் நாட் யூஸிங் மொபைல் ஃபோன்’ என்று ஒரு
போர்டு தொங்கிக் கொண்டிருந்தது.
‘என்னப்பா… ‘மொபைல் யூஸ் பண்ணாதே’ என்று எழுதவில்லையே..
இப்போ என்ன நான் மொபைல் யூஸ் பண்ணலேன்னா என்னைத் தாங்க்
பண்ணுவாங்க. யூஸ் பண்ணினா தாங்க் பண்ண மாட்டாங்க. அவ்வ-
ளவுதானே. எனக்கு அவர்கள் தாங்க்ஸ் வேண்டாம்’ என்று நம்பரை
அழுத்த ஆரம்பித்தாள்.
திகைத்து நின்றேன்.
–