சந்திராயன் -2 – டி ஹேமாத்ரி

எப்படியாவது தொடர்புகொள்,  இதுதான் வேண்டுவது,,*,

Image result for சந்திராயன் 2
தண்ணீர்த்துளியை பார்க்க அனுப்பிய, *சிவனின்*
கண்ணீர்த்துளியை பார்க்க வைத்த *சந்திரனே…..*
தொடும் தூரத்தில் இருக்கிறோம்,
*தொடர்புதான் துண்டித்தது…..*
சுற்றித்தான் வருகிறோம்,
*சமிக்ஞை தான் நின்றது…..*
படம்பிடிக்கும் நேரத்தில் *வெட்கத்தில் தட்டினாயோ,*
அமாவாசை வந்ததென்று *மறந்துபோய் மாற்றினாயோ….*
இந்தியனே வாவென்று
*அரவணைப்பில் அழுத்தினாயோ….*
உலகமே கேளென்று *மெளனத்தை அனுப்பினாயோ….*
உன் மறுபக்கத்தை காண, *ஆசைப்பட்டது எம்மினம்,,,*
மன இறுக்கம் சேர்ந்துவிட, *அசைவற்றுப்போனது பூமியும்..*
தனியான *லாண்டர் ஐ பார்த்துக்கொள்,*
துணையாக *இருக்கட்டும் வைத்துக்கொள்….*
*ஒருநாள் இந்தியா* வந்து செல்,
*சிவனின் உழைப்பை* பார்த்து செல்.
விரைவில் வருவோம், *தமிழில் கதைத்தபடி,*
வரவேற்க காத்திரு, *வெற்றிலை பாக்குடன்….*
கரம்நீட்டி *வாவென்று சொல்*,
கறைகளை துடைத்துவிட்டு *திரும்புவோம்…..*
வடதுருவத்தில் *பாட்டி வடையும்,*
தென்துருவத்தில் *நிலா சோறும்,*
சுவைத்தபடி நாங்கள் *நடந்து செல்வோம்,*
முயற்ச்சியெனும் கயிரை *ஒருபோதும் விடமாட்டோம்….*
*உன்மேல் பாரதக்கொடி பட்டொளி வீசும்…*
*தலைநிமிர்ந்து பார்த்தபடி சரித்திரம் பேசும்….*
எங்கள் *சிவனின் குரல் உடைந்தது,*
இந்தியர்களின் *இதயத்தில் தரை தட்டியது,*
எங்கோ இருக்கும் உனக்கு *யார் சொல்வது,,,*
எப்படியாவது தொடர்புகொள்  *இதுதான் வேண்டுவது,,,*
எப்படியாவது தொடர்புகொள்
*இதுதான் வேண்டுவது…*
*ஜெய் ஹிந்த் !  ஜெய் ஐ எஸ் ஆர் ஓ !!*

One response to “சந்திராயன் -2 – டி ஹேமாத்ரி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.