அத்திவரதரை அத்தனை சீக்கிரம் மறக்க முடியுமா ?


*அத்தி வரதா, முக்தி வரம்தா.*
முதல்முறை பார்த்தேன்,
அத்திவரதா, *எங்கள் பக்திவரதா.*
மறுமுறைபார்க்கும் வரம்வேண்டாம், முக்திவரம்தா, *எமக்கு முக்திவரம்தா……*
நித்தம் நின்று வேண்டுதல் வைப்போமென்று, *தண்ணீரில் இருந்தாயோ….*
வெளிச்சம் இந்த உலகை சேரட்டுமென்று, குளத்தை விட்டு, *புண்ணியனே வந்தாயோ….*
நாற்பதாண்டு காலம் மூச்சடைத்து *எம்மை காத்தவனே,* நாற்பத்தெட்டு நாட்கள் சுவாசிக்க *எழுந்து நின்றாயோ….*
அன்று குளத்தில் வைத்தவர்க்கு, *இன்று முகத்தை காட்டினாயோ….*
இன்று தரிசித்த பக்தருக்கு, *என்றும் பக்கத்தில் இருப்பாயோ…..*
அகிலத்தை ஆட்டுவிக்கும், *ஆதி வரதா……*
சகலத்தை நடத்திவைக்கும், *சக்தி வரதா….*
திசையெட்டும் நிறைந்திருக்கும், *காஞ்சி வரதா…..*
உன்னருளால் நிலவட்டும், *சாந்தி வரதா……*
அமைதியில் துயிலும் *வரதப்பா* ,
நாங்கள் சரணாகதி அடைவது உன் *பாதமப்பா…..*
தண்ணீரில் இருக்கும் *மலையப்பா,*
எங்கள் கண்ணீரை துடைப்பது உன் *விரலப்பா…*.
அடுத்த முறை பார்க்க *தீராத ஆசையப்பா,,*
அதற்குமுன் நீ அழைத்தால்,
*அதுஉன் சித்தமப்பா..*
அவன் தலை சந்திரனில்,
*சிவன் அனுப்பிய சந்தராயன்,*
*தண்ணீரை பார்க்கட்டும்…*
வான் மழை வற்றாமல்,
பரந்தாமன் உன்னருள் கொண்டு, *வையகம் தழைக்கட்டும்*
அத்தி வரதா, *முக்தி வரம்தா…*
அத்தி வரதா, *முக்தி வரம்தா..*