படம்- நன்றி : விகடன்
‘ஏன்பா… அத்திவரதர் தண்ணிக்குள்ளேயிருந்து வந்து,
நாப்பத்தெட்டு நாள் மக்களுக்கு தரிசனம் குடுத்துட்டு மீண்டும்
தண்ணிக்குள்ளே தூங்கப் போய்ட்டாரே… இப்போ ஏன் நம்ம
மந்திரி அத்திவரதர் தண்ணிக்குள்ளிருந்து வந்து தரிசனம்
கொடுக்க என்னவெல்லாம் ஏற்பாடுகள் பண்ணனும்னு விலாவாரியா
கட்சி செயல் கூட்டத்துலே பேசிக்கிட்டிருக்காரு..!?’
‘ அட, அதையேன்பா கேட்கறே… இது ரெண்டு மாசத்துக்கு
முன்னாலேயே மினிஸ்டருக்கு எழுதிக் கொடுத்த ஸ்பீச்…!
அதை நல்லா மனப்பாடம் பண்ணி பேச இவ்வளவு நாளா-
யிருக்கு… சந்தர்ப்பம் புரியாம அவரும் செயல்கூட்டத்துலே
வெளுத்து வாங்கறாரு…!’
சின்ன வயசுல 2 ரூபாவோட கடைக்குப் போனா நெறய பொருள்களோட வெளிய வரலாம்..
இப்போ அப்புடி இல்ல. எல்லா கடையிலையும் சிசிடிவி காமிரா வச்சிருக்காங்க !!
ட்ரெஸ் போட்ட எருமை மாடுகளை, ராமநாராயணன் படங்களுக்கு அப்புறம் ரோடு கிராஸ் செய்யும்போது பாக்கலாம்.
பேரென்ன ?
மானஸ்தன்..
பாத்தா அப்படி தெர்லயே?
பேர் வெக்கும் போது குப்பற படுத்திருந்தாரு..
பிரசவ அறையிலில் நர்ஸ் பிறந்த குழந்தையை அம்மாவிடம் கொடுத்தாள். அவள் குழந்தையைத் தன் கணவனிடம் கொடுத்தாள். அவன் தன் தாயாரிடம் கொடுத்தான். அவள் தன் கணவனிடம் கொடுத்தாள். அவர் அங்கு வந்திருந்த நண்பரிடம் கொடுத்தார். அந்த நண்பர் தாயிடமே அந்தக் குழந்தையைக் கொடுத்தார்.
“ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? ” என்று நர்ஸ் கேட்டாள்.
“என்ன செய்வது. வாட்ஸ் அப்பிற்கு அடிமையாகிவிட்டோம். எது வந்தாலும் உடனே மற்றவர்களுக்கு அனுப்பணும் அப்படின்கிற உணர்ச்சி உடம்பில ஊறிப் போச்சு! என்று அனைவரும் சொன்னார்கள்.