ராணு மொண்டால் என்பவர் கல்கத்தாவில் ராணாகட் ரயில் நிலையத்தில் சினிமா பாடல்களைப் பாடி காசுக்காகக் கையேந்திக் கொண்டிருந்தவர். சிறு வயதிலேயே பெற்றொர்களை இழந்தவர். 19 வயதில் திருமணமாகி ஒரு பெண்ணுக்குத் தாயானவர்.
லதா மங்கேஷ்கர் போல அவ்வளவு தத்ரூபமாக அவர் பாட, அந்தக்குரலில் மயங்கிய அதீந்திர சக்கரவர்த்தி என்ற வழிப்போக்கர் ராணுவின் பாடலைப் பதிவு செய்து அதனை யூ டியூபில் போட அது வைரலாகி ராணுவிற்கு ஆயிரக் கணக்கானோர் பாராட்டுதல்களைத் தெரிவிக்க அவரது குரல் வெளிச்சத்துக்கு வந்தது.
அதைத் தொடர்ந்து அவர் சூப்பர் ஸ்டார் ஸிங்கர் போட்டியில் கலந்து கொள்ளவும் ராணுவிற்கு வாய்ப்புக் கிட்டியது. அதில் பங்குபெற்ற பிரபல திரைப்பட இசை அமைப்பாளர் ஹிமேஷ் ரேஷ்மையா ராணுவிற்கு ஹிந்தித் திரைப்படத்தில் பாடும் வாய்ப்பையும் அளித்திருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் அவரை கல்கத்தவில் உள்ள பிரபல மனமகிழ் மன்ரம் அவரை துர்கா பூஜை விழாவில் சிறப்புப் பாடகராக பாடவும் அழைத்திருக்கிறது.
எத்தனை நல்ல உள்ளங்கள்!!!
திறமைக்கு உகந்த மதிப்பைக் கொடுக்க நாம் ஒவ்வொருவரும் முயல வேண்டும். !!!
அவர் ரயில் நிலையத்தில் பாடி வைரலான பாடலையும், திரையில் பாடிய பாடலையும் கேட்டு ரசியுங்கள்!