அமெரிக்க போர்க்கப்பல் ஒன்று சான்பிரான்ஸிஸ்கோ நகரின் எம்பார்க்கடெரோ என்கிற இடத்தில் பொதுமக்கள் பார்வைக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
மிகவும் பாதுகாப்பான கப்பலை அவர்கள் எப்படி எல்லாம் மக்களுக்கு அறிமுகப்படுத்துகிறார்கள் தெரியுமா?
வழக்கம்போல அடையாள அட்டை மற்றும் எக்ஸ் ரே சோதனைகளுக்குப் பிறகு 25 பேர்கள் கொண்ட குழுக்களாகப் பார்வையாளர்களைப் பிரித்து ஒவ்வொரு குழுக்கும் ஒரு அதிகாரியை வழிகாட்டியாக நியமித்து கப்பலை சுற்றிக் காண்பிக்கிறார்கள். பார்வையாளர்களுக்குப் பரிபூரண சுதந்திரம். எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். எதை வேண்டுமானாலும் போட்டோ வீடியோ எடுக்கலாம். அதுமட்டுமல்லாமல் அங்கிருக்கும் ட்ரக் , ஹெலிகாப்டர், ஜீப் மற்றும் படகு எதில் வேண்டுமானாலும் உள்ளே சென்று இருக்கையில் அமர்ந்து கப்பல்படை வீரர்கள் போல பவனி வரலாம். அங்கிரிக்கும் துப்பாக்கி, மெஷின் கன், ( குண்டு இல்லை – மற்றபடி அனைத்தும் ஒரிஜினல்) டெலெஸ்கோப் போன்றவற்றை நம்மை உபயோகிக்கச் செய்கிறார்கள். கப்பல் வீரர்கள் அவற்றை செய்து காட்டி நம்மை அவர்களின் ஆயுதங்களுடன் நம் போனிலேயே போட்டோவும் எடுத்து உதவுகிறார்கள்.
நாமும் நமக்குப் பிடித்த இடங்களில் செல்பி எடுத்துக் கொள்ளலாம்.
கப்பல்வீரர்களுக்கு பொதுமக்கள் தரும் மரியாதையையும் அவர்கள் பொதுமக்களுக்குத் தரும் மரியாதையையும் பார்க்கப் பிரம்மிப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கின்றன.
நாம் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளவேண்டியவை நிறைய இருக்கின்றன.
அந்தக் கப்பலில் எடுத்த புகைப்படங்களில் சில இங்கே உங்கள் பார்வைக்கு!