நாணயம் ஒரு உலகப் பொதுப்பணம் என்பது நிறைய பேருக்குத் தெரிஞ்சிருக்கும். (உதாரணம்: பிட்காய்ன்) ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு நாணயம் இருப்பது போல நாடுகள் அனைத்துக்கும் பொதுவான ஒரு நாணயத்தைக் கொண்டுவரும் முயற்சி தான் இந்த கிரிப்டோ நாணயம். சரி, இந்தப் பொது நாணயத்தைச் செயல்படுத்த ஒரு வங்கி வேண்டுமல்லவா?அதன் சர்வர்களில் தானே உந்த உலக நாணயத்தின் மையப்படுத்தப்பட்ட தகவல் (டேட்டா பேஸ்) இருக்கமுடியும்? இரண்டும் தேவையில்லை என்கிறார்கள் இதன் கண்டுபிடிப்பார்கள். யார் வேண்டுமானாலும் தங்கள் சர்வரில் இந்த நாணய மாற்றங்களைச் சேகரித்து வைத்துக்கொள்ளலாம். பாதுகாப்பு? அங்குதான் வருகிறது பிளாக் செயின் என்ற புதிய தத்துவம். மையப்படுத்துவற்குப் பதிலாக பரவலாக்கப்பட்ட சர்வர்களில் கொடுக்கல் வாங்கள்களைப் பதிவுசெய்யமுடியும் என்கிறார்கள்.
ஒரு புதிரை வெளியிட்டு அதை யாரெல்லாம் விரைவில் சரியான விடை கண்டுபிடிக்கிறார்களோ அவர்கள் தங்கள் சர்வரில் இந்த நாணயப் பரிமாற்றங்களை வத்துக்கொள்ளலாம். அவர்களுக்குத் தங்கள் சர்வரில் பதிவாகும் நாணயப் பற்றுவரவைப் பொறுத்து கமிஷன் கிடைக்கும். இதுதான் பிளாக் செயின் தத்துவத்தின் ஆணிவேர்.
அதைபற்றி அழகு தமிழில் விசைப்பலகை நண்பர் விளக்குகிறார். புரிகிறதா என்று பார்ப்போம்.
(தற்போது டுவிட்டருக்குப் பதிலாக வர இருக்கின்ற மாஸ்டடோன் என்ற செயலியும் இந்த பிளாக் செயின் தத்துவத்தின் அடிப்படையில் தான் இயங்கப்போகிறதாம். )
இன்னொரு நண்பர் பிட்காய்ன் பற்றி அழகு தமிழில் விளக்குகிறார். பாருங்கள் !!