குவிகத்தின் கடைசிப்பக்கத்திற்கு எப்பொழுதும் கிராக்கி அதிகம்.
டாக்டர் ஜெ பாஸ்கரன் அவர்கள் எழுதுவதால் அதற்கு ஒரு சிறப்பான நட்சத்திர அந்தஸ்து வந்துவிட்டது.
மூன்று வருடங்களாகக் கடைசிப்பக்கத்தில் வந்த கட்டுரைகளின் தொகுப்பு தற்போது புத்தக வடிவில் வந்துள்ளது.
அதற்கான வெளியீட்டு விழா ஆழ்வார்ப்பேட்டை ராஜ் பேலஸில் ஒரு குதூகலமான விழாவாக நடைபெற்றது.
பிரபல எழுத்தாளர் மாலன், கல்கி ஆசிரியர் வி எஸ் வி ரமணன், நாடக ஆசிரியர் ஜெயராமன் ரகுனாதன் , குவிகம் இரட்டையர்களான சுந்தரராஜன் – கிருபானந்தன் இவர்கல் வாழ்த்துரையுடன் நடைபெற்றது.
திரு மாலன் அவர்கள் வெளியிட்டார்.
டாக்டர் ஜெ பாஸ்கர் எற்புரை வழங்கினார்.