இதற்கும் இப்போது வந்துள்ள தனுஷின் புதிய படத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை
அனுமதிக்கப்பட்டுள்ள அளவுக்குள் சல்ஃபர், பொட்டாசியம் மற்றும் பேரியம் ஆகிய வேதி மருந்துகளை பட்டாசில் வைத்தால் காற்று மாசுபடுவதைத் தவிர்க்க முடியும் என்று சொல்லப்படுகிறது. இந்தக் காற்று மாசுவை குறைக்கத் தான் பசுமை பட்டாசுகளைப் (GREEN CRACKERS) பயன்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு, பசுமைப் பட்டாசுகள் குறித்த தேடல் அதிகரித்துள்ளது.
பொதுவாக சிவகாசியில் தயாரிக்கப்படும் பட்டாசுகள், அலுமினியத்தை மூலப்பொருட்களாக வைத்து சல்பர், கார்பன், பொட்டாசியம் நைட் ரேட் ஆகியவை சேர்த்து தயாரிக்கப்படுகிறது. ஆனால், தற்போது கூறப்படும் பசுமை பட்டாசில் அலுமினியத்திற்கு பதிலாக மெக்னீசியம் மூலப்பொருளாக சேர்க்கப்பட்டு உள்ளது. சல்பர் மற்றும் கார்பன் தேவையில்லை. இதனால் பட்டாசின் ஒலி அளவு 120-ல் இருந்து 111 டெசிபலாக குறையும். மேலும் காற்று மாசு 70 சதவீதமாக குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சராசரிப் பட்டாசுகளின் விலையை விட பசுமைப் பட்டாசுகளின் விலை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுச்சூழலுக்கு பெரும்பாலும் மாசு ஏற்படுத்தாத வகையில், நீதிமன்ற உத்தரவுப்படி நிகழாண்டு பசுமைப் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. சாதாரண பட்டாசுகளுடன் ஒப்பிடுகையில் பசுமைப் பட்டாசுகளால் 30 சதவீதம் காற்று மாசு குறையும்.
பசுமை பாட்டாசுகளும், சாதாரண பட்டாசுகளைப் போலவே இருக்கும். வெடிக்கும்போது சப்தம் எழுப்பும், ஆனால் வெளியிடும் மாசு குறைவாக இருக்கும். சாதாரணமான பட்டாசுகளுடன் ஒப்பிடும்போது பசுமை பட்டாசுகள், 40 முதல் 50 சதவீதம் வரை குறைவான நச்சு வாயுவை வெளியிடும். குறிப்பாக பேரியம் நைட்ரúட் மூலப்பொருள் பயன்பாடு 40 சதவீதம் வரை குறையும். உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகள், பசுமை பட்டாசுகளை தயாரித்து தீபாவளியையொட்டி விற்பனைக்கு அனுப்பி வருகின்றன.