அலெக்ஸி – எஸ் எஸ்

Android Kunjappan Ver 5.25 | Photogallery - ETimes

EXT. AIRPORT SFO AN INTERNATIONAL FLIGHT IS LANDING AT SFO AIRPORT. YOU SEE THE BAGGAGE TERMINAL. RAMAN PILLAI (65) – DRAGGING CABIN BAG (ONLY CABIN BAG IS SHOWN) HIS FACE AND DRESS ARE SHOWN ONLY AFTER THE FIRST CHARACTER SPEAKS. SEVERAL PEOPLE ARE WALKING AROUND. YOU HEAR ANNOUNCEMENTS.

EXT. KESAVAN (35), BHARANI DAUGHTER N LAW (30) ARE WAITING AT THE BAGGAGE TERMINAL. TENSION IS SEEN ON THEIR FACES. SUDDENLY THERE IS A SURPRISE AND SHOCK ON THEIR FACES

 

KESAV

அப்பா! என்ன இது? இப்படியேவா வந்தீங்க?

Ext. Appa –raman pillai -non brahmin is shown in dhothi and vibuthi and chappal . Displeasure is seen on DIL’s face. On seeing his son, he leaves his cabin bag and leaps forward. Kesav rushes to take the Raman pillai’s cabin bag and stares his appa for a few second. Smile appears on Appa’s face and they hug each other.

BHARANI

என்ன அங்கிள் , இப்படி வேஷ்டி சப்பலோட வந்திருக்கீங்க!

PILLAI

இதுக்கு என்னம்மா குறைச்சல்? எனக்கு இது போதும். பிளேனில எல்லாரும் பாராட்டினாங்க! அது கிடக்கட்டும், எங்கே என் பேரன்?

KESAV

ஆதிக்கு இன்னிக்கு புட் பால் மேட்ச் ! அதனால அவன் வரலை ! பிளேனில வசதியெல்லாம் எப்படி இருந்துச்சு ? பொட்டியெல்லாம் எடுத்துகிட்டீங்களா?

PILLAI

ஒரு பிரச்சனையும் இல்லே! நல்ல வசதியா இருந்துச்சு. பொட்டியெல்லாம் எடுத்து வைக்க அந்தக் கருப்புசாமிதான் உதவினார்.

KESAV

கருப்புசாமியா? யாரு? அவரா ! ஓ கிரேட் ! பேரு நல்லா இருக்கே! வாங்க வீட்டுக்குப் போலாம்! அங்கே ஆதி கூட புதுசா இன்னொண்ணும் இருக்கு ! அது யாருங்க்கிறது சஸ்பென்ஸ் !

( கேசவ் , பரணி  இருவரும் பெட்டியை எடுத்துக் கொண்டு செல்கிறார்கள்.)

 

Ext: an independent house  with a sticker  ‘SMART HOME’ . All the three people get down from the car and go near the main door.

KESAV

அப்பா ! அந்தக் கதவில தெரிற கண்ணடிக்கிட்டே உங்க முகத்தைக் காட்டுங்க!

ராமன் பிள்ளை கண்ணாடியை முறைத்துப் பார்க்கிறார்.  

Kural: ( An old lady voice is heard)

கேசவ் சார்,  பரணி மேடம் ! வெல்கம் ஹோம் !

ராமன் பிள்ளை ! உங்க பையன் வீட்டுக்கு முதல் முறையா வர்ரீங்க! உங்கள் வருகை நல்வரவாகுக! “

Kesav

நைஸ் அலெக்ஸி ! கதவைத் திற”

ALEXA:

Doors Open Automatically .

KESAV

அப்பா! இதைத் தான் நான் சொன்னேன் !  நம்ம வீடு ஒரு  ஸ்மார்ட் ஹோம் அலெக்ஸி  என்கிறது ஒரு கம்ப்யூட்டர் மனுஷி ! நம்ம வீட்டையே அவ தான் கண்ட்ரோல் செய்யரா! உள்ளே வாங்க! இன்னும் நிறைய இருக்கு உங்களுக்கு காமிக்க”

கேசவ் இரண்டு பெட்டிகளையும் அங்கே இருக்கிற ஒரு டிரெக்கில் வைக்கிறான்.

கேசவ்:

அப்பா உங்க கேபின் போட்டியையும் அந்த டிராக்கிலேயே வையுங்க ! அது உங்க ரூமுக்கு தானா வந்துடும்!  அலெக்ஸி ,  இந்த மூணு பெட்டியும்  கெஸ்ட் ரூமுக்கு போகணும்.  நாலாவது பேக் கிச்சனுக்குப் போகணும்

அப்பா! அலெக்ஸி ன்னு கூப்பிட்டு அதுக்கிட்டே ஏதாவது ரெண்டு வார்த்தை பேசுங்க , உங்க வாய்ஸை அது ரிககிநைஸ் பண்ணனும் ”

ராமன் :

என்ன பேசறது? சரி, அலெக்ஸி ! நல்லா  இருக்கியாம்மா?’

அலெக்ஸி :

ஒகே ! ராமன் சார் !, நான் உங்களை அங்கிள்னு கூப்பிடவா இல்ல வேற எப்படி அழைக்கணும்? “

ராமன்:

என்னை மாமான்னு   கூப்பிடு!

அலெக்ஸி :

ஓகே மாமா !

ராமன் ஆச்சரியத்தோட உள்ளே செல்கிறார்.

ராமன்:

எங்கேப்பா என் பேராண்டி?

கேசவ்:

அலெக்ஸி  ! ஆதி பத்தி சொல்லு!”

அலெக்ஸி :

“ ஆதி 8 மணிக்கு வந்தான். பீட்ஸா சாப்பிட்டான். இப்போ அவன் ரூமில தூங்கறான். அவனை எழுப்பட்டுமா? “

KESAV

வேண்டாம் !

Android Kunjappan Ver 5.25 (2019) - IMDb

மூவரும் கெஸ்ட் ரூமிற்குப் போகிறார்கள். ராமனோட மூணு பெட்டியும் அங்கே இருக்கிறது.

கேசவ்

அப்பா! இது தான் உங்க ரூம்!  இது பாத் ரூம். இப்படித் திருகினா சுடு தண்ணி வரும். கை கால் கழுவிட்டு  வாங்க ! சாப்பிடலாம் !

பாத் ரூமிற்குப் போகிறார்!

அலெக்ஸி : 

மாமா,  அந்த ஸ்டாண்டில துண்டு இருக்கு. சுடுதண்ணி பைப்பை நானே உங்களுக்கு சரியான சூட்டில திறக்கறேன். குளிக்கப் போறீங்களா? அந்த டாய்லெட்டில..

ராமன்:

அலெக்ஸி  !நீ கொஞ்சம் வெளியே போறீயா? நான் பாத்ரூம் போயிட்டுவந்து உன்னை கூப்பிடறேன்”  

அலெக்ஸி:

நல்ல ஜோக் மாமா! நீங்க குளிச்சுட்டு வாங்க! நடுவில ஏதாவது வேணுமுன்னா  கேளுங்க 

 

ஸீன்:

சாப்பாட்டு மேஜையில கேசவும் ராமனும் உட்கார்த்ந்து இருக்கிறார்கள். பரணி பறிமாறுகிறாள்.

கேசவ்:

அப்பா! பாருங்க ! உங்களுக்குப் பிடிச்ச ஆப்பம்,  சொதி, தேங்காய்ப்பால், இட்லி சட்னி,சாம்பார்   நல்லா  சாப்பிடுங்க!”

ராமன்

நல்லா இருக்குமா பரணி! எதுக்கு இத்தனை வகை  பண்ணியிருக்கே”

பரணி

ஐயோ, அங்கிள், இதெல்லாம் நான் செய்யல! . எல்லாம் அலெக்ஸி  தான்.செஞ்சிச்சு.  நீங்க வரப்போறதையும் உங்களைப் பத்தின எல்லா விவரத்தையும்  அதுக்கிட்டே  சொன்னோம். அது இனிமே உங்களுக்குத் தேவையானது எல்லாத்தையும் பாத்துக்கும்”

ராமன்:

அதுக்காக பாத் ரூமிலேயும் அவ இருக்கணுமா?

கேசவ்:

ஐயோ அப்பா! அது ஒரு கம்ப்யூட்டர்! ஆளு இல்லே ! இந்த வீடு ஒரு ஸ்மார்ட்  ஹோம் . இங்கே எல்லாத்தையும் அலெக்ஸியே  செஞ்சுடும்.

ராமன்

அதெப்படி?

கேசவ்:

இங்கே பாருங்க ! அலெக்ஸி ! அப்பாவுக்கு அவருக்குப் பிடிச்ச காபி  சூடா கொண்டுவா !

அப்போது மூலையில் இருந்த ஒரு ரோபோ கிச்சனுக்குள் சென்று ஒரு பித்தளை டவரா டம்ப்ளரில் காபி எடுத்துக் கொண்டு வருகிறது. ராமன் அசந்து போகிறார்.

ராமன்

இதுதான் அலெக்ஸியா? 

கேசவ்:

அலெக்ஸி என்கிறது கண்ணுக்குத் தெரியாத கம்ப்யூட்டர். இந்த ரோபோ எல்லாம் அலெக்ஸி  சொன்னபடி கேட்கும். நம்ம வீட்டிலே  ரெண்டே ரெண்டு ரோபோ தான் இருக்கு. கீழே ஒண்ணு, மாடியில ஒண்ணு.

பரணி:

மாமா! நாளைக்கு காலைல நானும் கேசவும் ஆபீஸ் போயிடுவோம். ஆதியும் ஸ்கூலுக்குப் போயிடுவான். நீங்க தனியா இருக்கணுமேன்னு கவலையே படாதீங்க, அலெக்ஸி   எல்லாத்தையும் கவனிச்சுக்கும்.

ராமன்:

எனெக்கென்னமா வேணும் ? சும்மா கிடந்தாலே போதும்.. அது சரிம்மா! இந்த அலெக்ஸி  வேற என்ன பண்ணும்?

பரணி:

இப்போ பாருங்க !

அலெக்ஸி , வீட்டு டெம்பரெச்சரை 70க்கு வைச்சுடு!  அப்பறம் நாளைக்கு காலேல  டிபனுக்கு , கொஞ்சம் இரு,  அங்கிள், உங்களுக்கு வெள்ளைப் பணியாரமும் சட்னியும் பிடிக்குமில்லே?

ராமன்:

அது கேசவனுக்கு ரொம்பப் பிடிச்சது. அதனால வீட்டில எல்லாருக்கும் பிடிக்கும்

பரணி:

அங்கிள்  அதையே பண்ணிடலாம் அலெக்ஸி  ! அதையே செஞ்சுடு.

அப்பறம், அலெக்ஸி  !  மாமாவோட போட்டியாத் தொறந்து அதில இருக்கிற துணியை எல்லாம் கிலோஸெட்ல வைச்சூடு. அழுக்குத் துணி இருந்தா தோய்ச்சு எடுத்து வைச்சுடு. அவருக்கு வேணுமுன்ன  டிவியைப்போட்டு அதில சன் டிவி சானலைப் போடு!  சாப்பிட்டு முடிஞ்சதும் தட்டையெல்லாம் டிஷ் வாஷரில போட்டிடு. காலையில வீட்டைப் பெருக்கி மொழுகணும். நாளைக்கு எங்க மூணு பேருக்கும் சாப்பாடு வழக்கம்போல எடுத்து  வைச்சுடு!

 

அப்பறம் முக்கியமா, இப்போலேர்ந்து அங்கிளுக்கு நீதான் எல்லா உதவியும் செய்யணும். அவர் கேட்கலைன்னு  நீ சும்மா இருக்கக் கூடாது.  அவருக்குத் தேவையானதை வேணுமான்னு கேட்டு சொன்னபடி செய்யணும். ஒகேயா?

அலெக்ஸி :

ஓகே, மேடம்,  அவர் அங்கிள் இல்லை எனக்கு.  மாமா.. நான் பாத்துக்கறேன் !

கேசவ்:

அப்பா! டயர்டா இருப்பீங்க ! படுத்துத்  தூங்குங்க ! நாலைக்குக் காலையில  நாம அதிகமா பேசமுடியாது. மூணு பேரும் காலையில  7 மணிக்கெல்லாம் போகணும். சாயங்காலம் 5   மணிக்கெல்லாம் மூணு பேரும் வந்துடுவோம்.

அப்ப விவரமா நாம பேசலாம்.

 

ராமன் அறைக்குப் படுத்துக்  கொள்ளப் போகிறார்.

 

அலெக்ஸி :

மாமா!  உங்களுக்கு மொந்தன் பழம் பிடிக்குமில்ல , அதோ அந்த தட்டில இருக்கு சாப்பிட்டுட்டு படுத்துக்காங்க!

மாமா, மறக்காம உங்க ஆயுர்வேத மருந்தை சாப்பிடுங்க!

மாமா:  நீங்க எடுக்கற போர்வை குளிர் தாங்காது. அந்த சிவப்புக் கம்பளி எடுத்துப் போத்திக்கங்க!

மாமா, புது இடம் உங்களுக்குத் தூக்கம் வரலையா? உங்களுக்குப் பிடிச்ச திருப்புகழ் சொல்லட்டுமா?

திருப்புகழ் சொல்லுகிறது

மாமா: உங்களுக்குக் காலு கொடையுதா ? நான் உங்களுக்குக் காலைப் பிடிச்சு விடட்டுமா?

ராமன்:

உனக்கெதுக்கு சிரமம்?

அலெக்ஸி :   

எனக்கென்ன சிரமம்.!

ரோபோ ஒன்று வந்து அவர் காலைப் பிடித்து  விடுகிறது.

ஏன் மாமா, கண் கலங்கறீங்க ? எதுக்கும் கவலைப்படாதீங்க ! நான் உங்களைப் பாத்துக்கறேன்”

ராமன்

நீ தூங்கிக்க, அலெக்ஸி .. நானும் தூங்க முயற்சிக்கிறேன். …

 

மறுநாள் காலை!

 

கேசவ்:

அப்பா நல்லா தூங்கிநீங்களா?

 

ராமன்:

அடேடே ! ரொம்ப நாளைக்கு அப்புறம் இன்னிக்குத் தான் நல்லா  தூங்கிட்டேன் போலிருக்கு. நீங்க ரெண்டுபேரும் ஆபீஸ் போக தயாராயிட்டிங்களே? ஆதி எங்கே?

கேசவ்:

ஆதி ஸ்கூலுக்குப் பஸ்ஸில  போயிட்டான். நாங்களும் போயிட்டு வர்ரோம். எது வேணுமின்னாலும் அலெக்ஸி க்கிட்டே சொல்லுங்க . அது செஞ்சிடும். அவசரமானா  அதுவே எனக்குப் போன் பண்ணி சொல்லிடும்.

ராமன்:

நீங்க ரெண்டுபேரும் கவலைப்படாமே ஆபீசுக்குப் போயிட்டு வாங்க!  என்னைப் பாத்துக்க தான் அந்த டீலக்ஸா  இருக்கே !  இல்லை, அது பேரு என்னடா? மனசில சட்டுன்னு  தங்கமாட்டேங்குது.

கேசவ்:

அலெக்ஸி ப்பா ! அப்பா அந்தப் பேரு கஷ்டமாயிருந்தா உங்களுக்குப் பிடிச்ச பேரு அதுக்கு வைச்சுக் கூப்பிடலாம்! என்ன பேரு வைக்கலாம் சொல்லுங்க?

ராமன்:

அப்படின்னா அதை நான் எச்சுமின்னே கூப்பிடறேன்.

கேசவ்:

அப்பா!

ராமன்:

ஆமாண்டா! உங்க அம்மா பேருதான். அவ தான் என்னை மாமா மாமான்னு கூப்பிட்டு எனக்குத் தேவையானதெல்லாம் அவ உயிரோட இருக்கறவறைக்கும் செஞ்சா !  அவ என்னை விட்டுப் போனதினாலேதானே இங்கேயே வந்திருக்கேன்.

 

கேசவ்:

ஒகே  அப்பா!  நீங்க அலெக்ஸி வை அம்மா பேரைச் சொல்லி  எச்சுமின்னே கூப் பிடலாம்! அலெக்ஸி : உன் மாமாவுக்கு இனிமே நீ எச்சுமி. சரியா?

அலெக்ஸி :

ஓகே !

கேசவ் , பரணி : நாங்க போயிட்டு வர்ரோம் !

போகிறார்கள் !

Android Kunjappan Version 5.25 review: This Soubin-Suraj movie is ...

ராமன்:

எச்சுமி! உன் பிரிவைத் தாங்க முடியாம நான் துடிச்சது உனக்குப் புரியலையா? உன் நினைவை மறக்கணும்னு தானே அமெரிக்காவிக்கே வந்தேன். இப்போ என்னோட ஒவ்வொரு மூச்சிலும் நீயே இருக்கியே?

அலெக்ஸி / எச்சுமி

மாமா , என்ன சொல்றீங்க? நான் உங்களைவிட்டு பிரியவேமாட்டேன்! உங்களுக்கு ஒவ்வொரு நிமிஷமும் நான் சேவை செஞ்சிக்கிட்டே இருப்பேன். அதுதான் எனக்கு இட்ட கட்டளை.

ராமன்:

எச்சுமி, உன் பிரிவை என்னால தாங்க முடியலைம்மா !

எச்சுமி:

மாமா! நான் உங்க கூடதான் இருக்கேன்..

ராமன்:

ஐயோ! எச்சுமி ! உனக்குப் புரியலையே! நான் துடிக்கிற துடிப்பு உனக்குத் தெரியலையே! எச்சுமி ! என்னை உங்கிட்டேயே அழைச்சுட்டுப் போயிடு.!

எச்சுமி:

மாமா! என்ன சொல்றீங்க? ஒண்ணும்  புரியலையே?

ராமன்

எச்சுமி! நான் புரியறபடி சொல்றேன்.. என்னை என் எச்சுமி கிட்டே சேர்த்துடு .ஏ அலெக்ஸி –  எச்சுமி,  என்னைக் கொன்னு போட்டுடு…    அதுதான் எனக்கு வேணும்.. அது தான் என்னோட கட்டளை!

எச்சுமி:

சரி மாமா !

 

சில வினாடிகளுக்குப் பிறகு

 

(ஒரு ரோபோ போன் பண்ணுகிறது.).

 

அலெக்ஸி :

கேசவ் சார்! மாமா உத்தரவுப்படி அவரை அவர் எச்சுமிக்கிட்டே சேர்த்திட்டேன்..

 

(END)

 

 

 

 

 

 

 

 

One response to “அலெக்ஸி – எஸ் எஸ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.