மன நோய் – பாம்பே கண்ணன்

மன அழுத்தமா? உங்களுக்கு ...

 

நிறைய யோசித்த பிறகு மன நோயாளிகள் மருத்துவரைப் பார்ப்பது என முடிவு செய்தேன்

எத்தனை நாட்கள் என்னையே நான் கவனித்துள்ளேன்

நான் மட்டும் ஏன் இப்படி இருக்கிறேன் கடவுளே ஏன் என்னை மட்டும் இப்படி…. அக்கம் பக்கம் பார்க்கிறேன் யாரும் இப்படி இல்லை

நேற்று மாலை 5 மணிக்கு அவரது clinic ல் வரவேற்பு பெண்ணிடம் பெயர் சொல்லி உறுதி செய்து கொண்டேன்

இந்தமாதிரி மருத்துவமனைக்கு வருபவர்களை எல்லோரும் ஒரு மாதிரி பார்க்க ஆரம்பித்து சற்று விலகியே இருப்பார்கள்

மன நோய்க்கும் பயித்தியம் என்ற நிலைக்கும் அதிக வித்தியாசம் இருப்பதில்லை அவர்கள் கையில் ஆயுதம் எடுக்கும் வரை

இந்த receptionist கூட பார்வைக்கு ஒரு மாதிரிதான் இருக்கிறாள்

சே சே வீண் கற்பனை

ஒருவேளை இங்கே வருபவர்களிடம் பேசி பழகி அந்த மன நிலைக்கு கொஞ்சம் கொஞ்சமாக அடி எடுத்து வைக்கிறாளோ

இவளே இப்படி என்றால் உள்ளே அவர்…

.அறையை கண்ணோட்டம் விடுகிறேன்

ஒரே ஒரு பெண் மட்டும் அழுது கொண்டிருக்கிறாள்

அவள் அருகே அவள் அம்மா போல ஒருவர் சமாதானம் செய்ய முயன்று எதோ நினைவு வந்து அழுகிறார்

ஒரு முறை மேலே கடிகாரத்தைப் பார்க்க இன்னும் அழுகை பீரிட்டு கொண்டு வருகிறது

இதென்ன நேரம் பார்த்து நேரம் பார்த்து அழுகை?

அந்த நேரம் பார்த்து என் நண்பன் Medical Representative ஆக இருப்பவன் உள்ளே வர கொஞ்சம் கதிகலங்கி போனேன்

இவன் கொஞ்சம் தளர்ந்த நாக்கு உள்ளவன்
என்னடா இங்க?

வேறு சமயமாக இருந்தால்

அசட்டுதனமான கேள்வி என்று குதறி இருப்பேன்

ஆனால் இருக்கும் இடத்தை மனதில் கொண்டு என்னுடைய violent behaviour யே ஆதாரமாகக் கொண்டு வதந்தி பரப்பி பட்டம் கட்டி நான் admit ஆகி விட்டதாகக் கூட செய்தி பரப்பும் சாத்தியக்கூறுகள் இருந்ததால்

சார் ஒலிப்புத்தகம் கேட்டாரு கொடுக்க வந்தேன் என சமாளித்தேன்

அவன் மேற்கொண்டு எதாவது கேட்டு நான் உளருவதற்குள் டாக்டர் அழைக்க வேகமாக விடை பெற்று உள்ளே போனேன்

ஒரு psychiatrist என்றால் french beard வைத்திருப்பார் நல்ல தொப்பையுடன் சின்ன கண்ணாடி அணிந்து அதன் மேல் புறத்தில் எட்டி பார்ப்பார் மயக்கும் கண்கள் இருக்கும் தலை கலைந்து இருக்கும் என்ற சினிமா பாணி கற்பனைகளுக்கு நேர் மாறாக ஒருவர் என்னைப்பார்த்து முறுவலித்த விதம் கவலைப்படாதே நான் இருக்கிறேன் என்று ஆறுதல் சொல்வது போல இருந்தது

உக்காருங்க என்ன பிரச்சனை சொல்லுங்க

என் மனசுலே எதோ கோளாரு டாக்டர்

அதை நாங்க சொல்லணும் ஏன் இப்படி தோணுது?

எல்லாரும் சிரிக்கும் போது என்னால சிரிக்க முடியலை எல்லாரும் அழும் போது என்னால அழ முடியலை

Very peculiar

ரொம்ப வருஷமா முயற்சி பண்ணிட்டு இப்ப டாக்டரை பாக்க முடிவு செஞ்சேன்

ஓகே ஓகே

எப்பவமே இப்படியா I mean கல்யாண வீட்டுலே…..etc etc

No டாக்டர் இது எங்க வீட்டுலேதான் அதுவும் குறிப்பா

சொல்லுங்க

டாக்டர் ஆர்வமானார்

இந்த TV லே அவங்க காமெடி நிகழ்ச்சின்னு ஒண்ணு வைக்கிறாங்களே அதுலே joke ன்னு சொல்லி அவங்களே சிரிக்கறாங்களே

டாக்டர் முகம் மாறியது

அழைச்சிகிட்டு வர கூட்டம் கைதட்டறாங்க laughter Machine லே வேற சிரிப்பு போடறாங்க எல்லாரும் சிரிக்கறாங்க ஆனா எனக்கு மட்டும் சிரிப்பு வரலை Is something wrong? ரொம்ப வேதனையா இருக்கு எல்லாரும் என்னை பைத்தியம்னு சொல்லிடு வாங்களோன்னு என்னை காப்பாத்துங்க என்னை சிரிக்க வையுங்க டாக்டர் சிரிக்க வையிங்க

டாக்டர் பெரிதாக சிரித்தார்

இது எந்த மனோ வியாதியுமில்லை You are perfectly Normal

டாக்டர் இதை ஒரு certificate ஆ தரமுடியுமா என் மனைவிகிட்ட காட்டணும் நான் கூட டிவி பாதிப்புன்னு பயந்திட்டேன்

No No That TV impact நீங்க வெளியே பாத்திருப்பீங்களே ரெண்டு பெண்கள் அவங்க பிரச்சனையே நேரத்துக்கு சாப்பிடறமாதிரி அந்த நேரத்துக்கு அழணும் எதுவும் பாக்கலைன்னாகூட சரியா அந்த நேரத்துக்கு அழுகை வந்திடும் இப்ப அதுக்குதான் treatmentகொடுத்துகிட்டு இருக்கேன்

என்று ஆழ் மனம் வழக்கமான செயல்களின் தூண்டுதல் அப்பறம் நிறைய ஆங்கில வார்த்தைகளில் எதேதோ விளக்கமளித்தார் எதுவும் இந்த மர மண்டையில் ஏறவில்லை

உங்க fees?
No Thanks என் Profeasion லே ஒரு normal person ஐ பாக்கறது ரொம்ப அபூர்வம் போயிட்டு வாங்க

டாக்டர்??

சாரி போங்க வராதிங்க

வெளியே வந்த போது

அந்த இரண்டு பெண்களும் அழுகை நிறுத்தி இருந்தார்கள்

விளம்பர இடைவேளை முடிவதற்குள் வெளியேறினேன்

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.