‘அட கடவுளே…. சீனிவாசன் வாட் ஈஸ் திஸ்..?’
மேஜையில் வைக்கப் பட்டிருந்த கோப்புகளைப் புரட்டிக் கொண்டிருந்த நிதித் துறை அமைச்சகச் செயலர் ஜெயராஜன் அலறினார்.
பக்கத்துக் காபினில் இருந்த சீனிவாசன், ‘என்னமோ ஏதோ’ என்று பயந்து, ஜெயராஜன் காபினிற்கு ஓடி வந்து அவர் பார்த்துக் கொண்டிருந்த ·பைலை எட்டிப் பார்த்தார்.
‘என்ன சீனிவாசன்.. கொரோனா வைரஸில் இறந்த ஆயிரம் பேர்களுடைய குடும்பங்கள் தலா ஐம்பது லட்சம் காம்பன்ஸேஷன் கேட்டு அப்ளை பண்ணி இருக்காங்க.. ஐநூறு கோடி இன் ஒன் கோ… ‘ என்றார் ஜெயராஜன் மூச்சு விடாமல். அவர் முகம் பேயறைந்தது போல் இருந்தது.
‘ஆமாம் ஸார்… இந்த பேஷன்ட்ஸ்களுக்கு ட்ரீட்மென்ட் கொடுத்திட்டிருந்த ப்ராஸஸ்லே சில டாக்டர்ஸ¤களும், செவிலியர்களும் இறந்துட்டாங்க இல்லையா…அவங்க குடும்பங்களப் பார்த்து ஆறுதல் சொல்லப் போயிருந்த நம்ம முதலமைச்சர் பத்திரிகைக்காரங்க கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில் இறந்தவர்களுக்கு ஐம்பது லட்சம் காம்பன்ஸேஷன் கொடுக்கப்படும்னு சொன்னாரில்லையா… அதுதான்… வைரஸால் இறந்தவங்க சம்பந்தப்பட்ட குடும்பங்கள் எல்லாம் அப்ளிகேஷன் போட்டிருக்காங்க…’
‘பட்.. நாம ஒண்ணும் டைரக்ஷன்ஸ் கொடுக்கலையே…ஜி. ஒ. ஒண்ணும் அனுப்பலியே…”
‘சரிதான்… ஆனா ஓபனா முதன்மந்திரி அப்படிச் சொன்னதை கவர்ன்மென்ட் ஆர்டரா எடுத்துட்டாங்க..’
‘அவர் இறந்த டாக்டர்ஸ், செவிலியர்கள் குடும்பங்களுக்குன்னு சொல்லலியே… ஜெனரலா வைரஸால் இறந்தவங்களுக்குன்னு சொல்லிட்டாரே… அதையே வேதவாக்கா எடுத்துட்டாங்க…’
‘ஓ..மை காட்… இப்போ என்ன செய்யறது..? இவ்வளவு பணத்தை எங்கே புரட்டறது…?’
‘ஸார்.. இதுலே ரொம்ப சோகமான விஷயம் என்னன்னா மிகவும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த நூறு பெரியவர்கள் சொல்லி வைத்துக் கொண்ட மாதிரி ‘நம்ம குடும்பத்துக்கெல்லாம் இவ்வளவு பணம் ஒரு போதும் கிடைக்காது.. சம்பாதிக்கவும் முடியாது. நாம போனாலும் நம்ம குடும்பம் சௌக்கியமா கஷ்டப்படாம இருக்கட்டும்னு’ நினைத்து, இந்தத் தொற்று உள்ளவங்களைத் தேடிப் பிடித்து தொத்து வாங்கிக் கொண்டு ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி இறந்துருக்காங்க… ஆல் மோஸ்ட் எ கைன்ட் ஆ·ப் ஸூயிஸைட்..அவங்க குடும்பங்களும் அப்ளை பண்ணி இருக்காங்க..’
‘ஓ.. வெரி பாதெடிக்.. கொரோனா லாக் டவுனால் மாகாணமே ஸ்தம்பித்துப் போய் கவர்ன்மென்டுக்கு சேர வேண்டிய வருமானமும் மிகவும் குறைந்து போய் விட்டது.. இதுலே நலிந்து போன குடும்பங்களுக்கு நாம் செய்து கொண்டிருக்ம் இலவச சாமான்கள் டிஸ்ட்ரிப்யூஷன் வேறு… இன்·ப்ரா]ஸ்ட்ரக்சர் செலவுகள் வேறு… கவர்ன்மென்ட் ஹாஸ்பிடலில்கொரோனா பேஷன்ட்ஸைத் தனிமைப் படுத்தி வைக்க தனிவார்டுகள்.. பெட்கள்.. இத்யாதி இத்யாதி… நாம கலக்ட் பண்ணிக் கொண்டிருக்கிற பப்ளிக் டொனேஷன்ஸ் இந்தச் செலவுகளுக்கெல்லாம் வெறும் சோளப் போரிதான்.. அப்படி இருக்கும்போது நாம இப்போ இந்தப் பணத்துக்கு எங்கே போகிறது..? நம்ம மந்திரிகள் நம்ம நிதிநிலைமை தெரியாம ஏதாவது ஸ்டேட்மென்ட் கொடுத்துட்டு வந்துடறாங்க.. இப்போ நாம தலையைப் பிச்சுக்கணும்.. ·பண்ட்ஸ் மொபிலைஸேஷனுக்காக… கடவுளே.. இப்போ என்ன பண்ணப் போறேன்.. இந்தப் பணத்தை எப்படி எங்கே மொபிலைஸ் பண்ணப் போறேன்..’ என்று கூறி கண்ணை மூடினார்.
கண்களில் திடீரென்று தண்ணீர் விழுந்த மாதிரி இருக்க சட்டென்று கண்களைத் திறந்தார்.
அவர் கட்டிலில் படுத்திருக்க பக்கத்தில் தண்ணீர் சொம்புடன் மனைவி ஜலஜா நின்றிருந்தாள்.
‘ஏன்.. என்ன ஆச்சு..?’ என்று மலங்க மலங்க விழித்தார் ஜெயராஜன்.
‘அதை நீங்கதான் சொல்லணும்… திடீரென்று புரண்டு புரண்டு படுத்திட்டிருந்தீங்க.. அப்புறம் ‘நான் என்ன செய்யப் போறேன்.. இந்தப் பணத்தை எங்கே மொபிலைஸ் பண்ணப்போறேன்’ என்று பிதற்றினீங்க… என்ன ஏதாவது கனவு கண்டீங்களா…?’என்றாள் ஜலஜா.
சிறிது வெட்கத்துடன் சிரித்தார் ஜெயராஜன். பின் தான் கண்ட கனவை மனைவியிடம் சொன்னார்.
பெரிதாகச் சிரித்தாள் ஜலஜா. ‘நீங்க ·பினான்ஸ் செக்ரடரியே ஆயிட்டீங்களா… ரொம்ப ஆசைதான்… முதல்லே உங்க கம்பனியிலே பிராஞ்ச் மானேஜர் ப்ரமோஷன் வாங்கற வழியைப் பாருங்க.. உங்க வீட்டு வரவு செலவுகளை நேர் பண்ணற வழியைப் பாருங்க.. அப்புறம் செகரடரியாக ஆக யோசிக்கலாம்.. இப்போ நாட்டு வரவு செலவுகளை கோட்டையிலுள்ள செகரடரி பார்த்துக்குவார். நேத்து நியூஸ்லே,ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இறந்திருந்தால் அந்தக் குடும்பங்களுக்கு காம்பன்ஸேஷன் கொடுக்கப்படும்னு முதலமைச்சர் கூறியுள்ளதாக சொன்னார்கள் இல்லையா… அதைப் பார்த்துட்டு அப்படியே படுக்கப் போயிருக்கீங்க.. அது இப்படி ஒரு கனவா வந்திருக்கு… கொஞ்சம் தண்ணீர்குடிச்சிட்டு படுங்க..’ என்று படுத்தாள்.
சிறிது தண்ணீர் குடித்து விட்டுப் படுத்த ஜெயராஜுக்கு தூக்கம் போய் விட்டது.
–