
*தொடரும் ஜென்மங்களெல்லாம்,*
*தொடரட்டும் நம் பந்தம்,,,,,*
உயிரால் என்னை தைத்து,
*உனக்குள் வைத்தவளே…* வரிகளில் உன்னை வைத்து,
*வார்த்தையால் வணங்குகிறேன்….*
பூமி என்னை சுமப்பதில்லை,
*உன் பாசம் அது சுமக்கும்,,,*
சாமி நான் பார்த்ததில்லை,
*உன் தியாகம் அது கோவிலாகும்,,,*
ஆணோ, பெண்ணோ,.,,,,, *கருப்போ, சிவப்போ,*
குறையோ நிறையோ,
*நிலைப்பேனோ மாட்டேனோ,*
பிறந்து இறப்பேனோ,
*இறந்து பிறப்பேனோ,*
குள்ளமோ உயரமோ,
நல்லவனோ கெட்டவனோ,,,
*போற்றுவேனோ தூற்றுவேனோ,,,*
எதுவும் தெரியாமல், என் மேல் பாசம் வைத்த உயிரே….
*உன் பெயர் தான் அம்மா…..*
ஊஞ்சலாய் தாலாட்டி ,
*ஆசையாய் பாலூட்டி.*
தலையை வருடியபடி,
*முதுகைத் தட்டியபடி,*
*தூங்கவைப்பாய் கொஞ்சியபடி..*
*அசைபோடுகிறேன் ஏங்கியபடி….*
அம்மா, அம்மா என்றபடி,
*கண்கள் இரண்டும் நனைந்தபடி,,*
தேடுகிறேன் தாய்மடி,
*வணங்குகிறேன் உன் காலடி….*
*தொடரும் ஜென்மங்களெல்லாம்,,*
*தொடரட்டும் நம் பந்தம்,,,,*
Nice
LikeLike