எனக்குப் புதையல் எதுவும் கிடைத்ததில்லை
இப்போதும் ஒன்றும் கிடைக்கப் போவதுமில்லை
ஆனால், அது ஒரு விஷயமே இல்லை
ஏனெனில் நான் எப்படியும் மகிழ்வாக இருக்கிறேன்.
நான் என் பயணத்தைத் தொடர்கையில்
விதைத்ததைவிட அதிகமாக அறுவடை செய்கிறேன்.
என் கிண்ணம் நிரம்பி வழிவதால் நான்
அதன் குட்டித்தட்டிலிருந்து குடிக்கிறேன்.
என்னிடம் அதிகச் செல்வமில்லை
சில சமயங்களில் கடினமாகவும் உள்ளது
உறவும், நட்பும் என்னை நேசிப்பதால்
நான் போதுமான வளத்துடன் இருக்கிறேன்.
இந்த ஆசிகளுக்கு இறைவனுக்கு நன்றிகள்
அவன் கருணையால் வந்த இந்த வரத்தால்
நான் சாஸரிலிருந்து குடிக்கிறேன்
ஏனெனில் என் கிண்ணம் நிறைந்து வழிகிறது.
பாதை கரடு முரடாகவும் செங்குத்தாகவும்
இருக்கையில் துணிவும், சக்தியும் தருகிறான்
நான் வேறேதும் ஆசிகள் கேட்கப் போவதில்லை
ஏனெனில் நான் போதுமான அளவில் ஆசிர்வதிக்கப்பட்டவன்.
மற்றவர் பாரம் தாங்க உதவ முடியாமல்
நாம் பரபரப்பாக இருக்க வேண்டாம்
அப்போது சாஸரிலிருந்து நாம் குடிக்கலாம்
நம் கோப்பைகள் நிரம்பி வழியும் போது.
Drinking From The Saucer
Poem by John Paul Moore
மொழி பெயர்ப்பு பானுமதி.ந)