குவிகம் பற்றி சக பத்திரிகையாளர் விமர்சனம்:
குவிகம் புதிய இதழில் சில படைப்புகள் வாசித்தேன்
பெண்ணியம் பேசும் கவிதை மிக யதார்த்தம்
குண்டலகேசியை தில்லைவேந்தன் சிறப்பாகப் படம்பிடிக்கிறார்.
தாகூரின் நாட்டிய வழிபாடு மற்றும் ஆதிசங்கரர் பற்றிய கட்டுரைகள் புதிய செய்திகளைச் சொல்கின்றன.
108 வடைகள் கதைபோலில்லை. சொந்த அனுபவமாக மிளிர்கிறது.
ஆல்பம் ரேவதி ராமச்சந்திரன் சிறுகதையின் முடிவில் சேட்ஜின் மரணம் நெஞ்சைப் பிழிகிறது
— வளவதுரையன்