( நன்றி சசிகுமார் முகநூல்)
எங்கள் இனிய நண்பர் காந்தி !
எங்களை ஆழாத் துயரில் ஆழ்த்தி
தன் இனிய நினைவுகளை மட்டும் அளித்துவிட்டு
இறைவனடி சேர்ந்துவிட்டார்.!
கிட்டத்தட்ட ஐம்பது வருட நட்பு!
சிரித்த முகம் ! செயலில் தெளிவு! கடமையில் கண் ! அன்பின் வடிவம் !
பண்பில் குன்று! பார்வையில் இனிமை ! பாசத்தில் மழை !
பேச்சில் திறமை ! கொள்கையில் பிடிப்பு! நேர்மையின் சிகரம்!
கல்லூரிக்கு பேராசிரியர் ! மாணவர்க்கு தோழர் !
குடும்ப விளக்கு! உறவுக்கு தூண் !
கட்சியில் தலைவர்! காட்சிக்கு எளியர் ! இன்னும் எத்தனையோ !
இவை ஒவ்வொன்றும் வெறும் வார்த்தைகள் அல்ல! சத்தியம் !
இவரது வாழ்வின் ஒவ்வொரு அத்தியாமும் அவற்றை நிரூபிக்கும்!
எங்கள் நட்பு மலரின் அழகிய இதழ் ஒன்று உதிர்ந்துவிட்டது !
எங்கள் பஞ்ச முக விளக்கில் ஒரு திரி மட்டும் தனித்து விண்ணில் எரிகின்றது !
எங்களுக்கு இவரும் ஒரு மகாத்மா தான் ! வாழ்க நீ எம்மான் !
காந்தி!, உங்கள் பிரிவால் வாடும்,: சுந்தரராஜன், சந்திரமோகன், சிந்தாமணி, சந்திரசேகரன்