மலையாள மொழி இலக்கிய உலகில் ஐசக் ஈப்பன் சிறுகதை ,நாவல்,கட்டுரையாசிரியர் என்று பன்முகம் கொண்ட படைப்பாளி.
அவருடைய படைப்புகள் பதினாறு புத்தகங்களாக தொகுக்கப்பட்டுள்ளன.
பல படைப்புகள் ஆங்கிலத்திலும், பிற இந்திய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
ஈவிஜி புரஸ்காரம், தகழி விருது,அபுதாபி சக்தி விருது,கொட்டாரகாரா தம்பிரான் விருது ,எஸ்.கே .பொட்டேகாட் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
’நெருப்பில் ஒரு நகரம் ’ என்ற அவரது சிறுகதை சாதி,மத,இனப் பின்னணியில் மாறி வரும் மனித வாழ்க்கை, சமுதாய அழிவிற்கு இட்டுச் செல்கிற நிலையைக் கருவாகக் கொண்டதாகும்.
இருபதாண்டுகளுக்கு முன்னர் தாம் அனுபவித்த கல்லூரி வாழ்க்கை,வாழ்ந்த நகரம் ஆகியன வெவ்வேறு மதம் சார்ந்த மூன்று நண்பர்கள் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறது.பல ஆண்டுகள் கழிந்த பிறகும், ஒரு முறையாவது அந்த நகரத்திற்குப் போய் வரவேண்டுமென்ற ஆசை அவர்களைத் தூண்ட ,ஆழ்ந்த திட்டமிடலுக்குப் பின்னர் மூவரும்பழையஎதிர்பார்ப்புகளோடு பயணிக்கின்றனர். தோற்றத்தில் மட்டுமின்றிச் செயல்பாடுகளிலும் நகரம் முழுவதுமாக மாறிப் போயிருக்கிறது. மதங்களால் மாறுபட்ட நெருங்கிய மூன்று நண்பர்களைப் பார்க்க நகரம் தயாராக இல்லை.அங்கு வளர்ந்து விட்ட மதப்பின்னணியிலான அபிப்ராயங்கள், தூண்டப்படும் எதிர்ப்புகள் ஆகியன மனித வாழ்க்கையைச் சின்னா பின்னப்படுத்துவதை அவர்கள் பார்க்கின்றனர்.
மத, இன ,மொழிவேறுபாடின்றி தாங்கள் வாழ்ந்த அந்த நாட்களுக்கும், இன்று பரவியிருக்கின்ற எண்ணங்களுக்குமான வேறுபாடு நகரங்கள் அழிந்து போவதற்கான சூழலை உருவாக்குவதை அறிந்து ’எதுவும் செய்ய முடியாத ’நிலையில் வருத்தத்தோடு திரும்புவதாக கதை அமைகிறது.
இந்த கதையைத் தரவிரக்கம் செய்து கொள்ள கீழே கண்ட இணைப்பைச் சொடுக்கவும்.
https://drive.google.com/file/d/1KZVewZgZZFaH5nz3EZkBMHs_3QjOWBVF/view?usp=sharing