அம்பாள் என்னுள் இருப்பதனால்
அடியேன் உயிர்ப்பாய் உலவுகின்றேன்;
தெம்பும் துணிவும் அவள்தந்தாள்!
திடமாய் வாழ்வைக் கழிக்கின்றேன்!
தீபம் திரியைத் தின்றிடினும்
திரும்ப நெய்யால் உயிர்த்தல்போல்
பாப வினைகள் கீழ்-இழுத்தும்,
பதமாய் என்னை மேல்கொணர்வாள்;
‘கர்மா’ என்றால் நம்பாதீர்!
காக்கும் ‘தேவி’ ஒளிர்கின்றாள்!
பர்மாத் தேக்காய் நின்றிடுங்கள்;(அவள்)
பாதம் ‘சரணே’ என்றிருங்கள்!
நாபி மூச்சைத் தலைகொணர்வீர்;
நாளும் தவமே செய்வீர்நீர்!
கோபம், பொறாமை கொள்ளாதீர்!
குறையும் உண்டோ? சொல்வீரே!.