பச்சிளம் பருவத்தில் இன்னுமொரு தாயுமானவள்
பால்மணம் மாறாப் பருவத்தில் கதைகள்பல கூறியவள்
பிள்ளைப் பிராயத்தில் என்னுடன் பாண்டியாடினவள்
பள்ளிப் பருவத்திலே என்னுடன் பல்லாங்குழி ஆடினவள்
கல்லூரிநாட்களில் என் எண்ணங்களுக்குக் காவலாய் இருந்தவள்
தோளுக்குமேல் வளர்ந்த எனக்குத் தோழியுமானவள்
மணமான பொழுதில் மணியான யோசனைகள் கூறியவள்
இப்படிப் பல்வேறு முகங்களைக் கொண்டவள்
யார் அவள்?
வேறு யாருமில்லை
?
?
?
?
?
?
?
?
?
?
?
என் பாட்டிதான்!!!