தமிழக அரசின் விருதுகள் எஸ் எஸ்

Awardee_Groupimage6
தமிழக அரசின் விருது பெற்ற மூவர்  நமக்கு நன்கு அறிமுகமாவர்கள்! 
இளங்கோ அடிகள் விருது பெற்ற முனைவர் மா வயித்தலிங்கன் என்ற தமிழ் ஆசான் !  அவருக்கு எங்கள் வணக்கங்களும் வாழ்த்துக்களும்! 
மற்றவர் வாணி நீச்சல்காரன் என்ற தமிழ் பிழை திருத்தியை அறிமுகப் படுத்திய இளைஞர் இராஜாராமனுக்கு  முதலமைச்சரின்  கணினித் தமிழ் விருது
! வாழ்த்துக்கள்! 
சி பா ஆதித்தனாரின் வார இதழ் விருது  ரமணன் அவர்களைப் பொறுப்பு ஆசிரியராகக் கொண்ட கல்கி இதழிற்கு வழங்கப் பட்டுள்ளது. வாழ்த்துக்கள் !
 
அவர்களுக்கும் விருதுகள் பெற்ற மற்றவர்களுக்கும் குவிகம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.  
================================================================
தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளை ஏற்படுத்தியுள்ளது. அவ்வகையில் திருவள்ளுவர் திருநாள் விருதுகள் மற்றும் சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகளுக்கான விருதாளர்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
திருவள்ளுவர் திருநாள் விருதுகள்:
2021ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது- முனைவர் வைகைச்செல்வன்
தந்தை பெரியார் விருது – அ. தமிழ்மகன் உசேன்
அண்ணல் அம்பேத்கர் விருது – வரகூர் அ. அருணாச்சலம், 
பேரறிஞர் அண்ணா விருது – அமரர் திரு. கடம்பூர் எம்.ஆர். ஜனார்த்தனன்
பெருந்தலைவர் காமராசர் விருது – முனைவர் ச. தேவராஜ் 
மகாகவி பாரதியார் விருது -கவிஞர் பூவை செங்குட்டுவன்
பாவேந்தர் பாரதிதாசன் விருது – அறிவுமதி (எ) மதியழகன்
தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது – வி.என். சாமி
முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது -முனைவர் வீ. சேதுராமலிங்கம்
சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகள்:
2020ஆம் ஆண்டிற்கான தமிழ்த்தாய் விருது -வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம்
கபிலர் விருது -செ. ஏழுமலை
உ.வே.சா விருது – கி. இராஜநாராயணன்
கம்பர் விருது -மருத்துவர் எச்.வி. ஹண்டே
சொல்லின் செல்வர் விருது – நாகை முகுந்தன்
உமறுப்புலவர் விருது -ம. அ. சையத் அசன் (எ) பாரிதாசன்
ஜி.யு.போப் விருது – செருமன் நாட்டைச் சேர்ந்த முனைவர் திருமதி உல்ரீகே நிகோலசு
இளங்கோவடிகள் விருது -மா. வயித்தியலிங்கன்
அம்மா இலக்கிய விருது- முனைவர் தி. மகாலட்சுமி
சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் விருது -ஆ. அழகேசன்
மறைமலையடிகளார் விருது – மறை. தி. தாயுமானவன் 
அயோத்திதாசப் பண்டிதர் விருது – முனைவர் கோ.ப. செல்லம்மாள்
அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது – முனைவர் ஊரன் அடிகள்
காரைக்கால் அம்மையார் விருது -முனைவர் மோ. ஞானப்பூங்கோதை
தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் நாளிதழ் விருது -தினமணி நாளிதழ்
சி.பா. ஆதித்தனார் வார இதழ் விருது- கல்கி வார இதழ்
சி.பா. ஆதித்தனார் திங்களிதழ் விருது- செந்தமிழ் திங்களிதழ்
தேவநேயப்பாவாணர் விருது-முனைவர் கு. சிவமணி
வீரமாமுனிவர் விருது- ஹாங்காங்கைச் சேர்ந்த முனைவர் கிரிகோரிஜேம்சு
சிறந்த மொழிப்பெயர்ப்பாளர் விருது: சோ. சேசாச்சலம், முனைவர் இராம. குருநாதன், ப. குணசேகர், முனைவர் பத்மாவதி விவேகானந்தன், சு. ஜோதிர்லதா கிரிஜா, ஜெ. இராம்கி (எ) இராமகிருட்டினன், சுவாமி விமூர்த்தானந்தர், மீரா ரவிசங்கர், திலகவதி, கிருட்டின பிரசாத்
2019ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருது- சே. இராஜாராமன்
நன்றி : மாலைமலர் 15.01.2021 
முழு விவரம் அறிய தமிழக அரசின் செய்தி வெளியீடு எண்  22 (13.01.2021) ஐ கீழ்க்கண்ட இணையத்தில் பார்க்கவும். 

3 responses to “தமிழக அரசின் விருதுகள் எஸ் எஸ்

  1. நான் தங்கள் இணைய இதழில் எழுத விரும்புகிறேன். கையெழுத்து பிரதி அனுப்பலாமா. சன்மானம் கிடைக்குமா.

    Like

  2. தமிழக அரசு தமிழ்மொழி இலக்கியம் எழுத்தாளர்களுக்கு விருது வழங்கி வருகின்றன தொடர்ந்து தமிழக அரசு கவிஞர் விருது வழங்க வேண்டும் என்னுடைய தனிப்பட்ட கருத்து

    Liked by 1 person

  3. தமிழக அரசு தமிழ் மொழி இலக்கியம் எழுத்தாளர்களுக்கு விருது வழங்கி வருகின்றன தொடர்ந்து கவிஞர் விருது வழங்க வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து

    Liked by 1 person

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.