“குவிகத்து மலர் முகத்தில், இதழோடு இதழ் சேர்த்து,
குவிந்து மதுவில் மயங்கும் – மகரந்தக் காதல் சிட்டு”
பகுத்து அறிதல் என்ற ஒன்றை அறியா பருவம் அது. நண்பர்களுடன் இளமையில் சுதந்திரமாய் கழித்த நாட்கள் பல.
பள்ளியில் தெச்சி பூச்செடிகள் பூத்துக் குலுங்கிக் கிடக்கும்.
அப்பூக்களைக் கொத்தாக எடுத்து, அடிப்பாகத்திலிருந்த தேனை உறிஞ்சிக் குடிப்பது என்பது ஒரு சுகானுபவம்.
பூஜைக்கு சமர்ப்பித்த தெச்சிப் பூக்கள் மறு நாளில் “நிர்மால்யம்” எனப்படும்.
அந்த நிர்மால்ய பூக்களை அம்மா பத்திரப்படுத்தி, காயவைத்து, தேங்காய் எண்ணெயுடன் கலந்து, காய்ச்சி, ஆறவைத்து, பாட்டிலில் நிரப்பி வைப்பார்.
தினமும் காலையில் குளிப்பதற்கு முன் அந்த எண்ணெயை சிறிது தேய்த்து ஊறிய பிறகு குளிக்க, தோல் பளபளக்கும்!
வீட்டுத் தோட்டத்து தெச்சி பூக்களை -ஆர்வமாய்- Loten’s Sunbird என்ற தேன்சிட்டுகள் நாடி வரும்.
கொக்கி போன்ற அலகு கொண்டு அது தேனைப்பருகும்.
அந்த அழகு இறைவனின் எண்ணற்ற லீலைகளில் ஒன்று.
மலரின் இதழோடு தன் அலகிதழ் வைத்து அந்தப் பறவை தேனை உண்ணும் போது அது செடிகளின் மகரந்த சேர்க்கைக்கு பங்களிப்பது என்பது ஒரு போனஸ்.
நான் ரசித்ததை நீங்களும் ரசிக்கலாமே!
அதுதான் இந்த இதழின் அட்டைப்படம் !
புகைப்படமும் கருத்தும் ஸ்ரீராம் –
இயற்கையைப் புகைப்படங்களால் ஓவியமாகத் தீட்டும் கலைஞர்.
புகைப்பட விபரக்குறிப்பு: (Nikon Z7; ISO: 1000; 1/1000 second; f/6.3)
அனுபவம் அருமை. அட்டைப்படம் அற்புதம்
LikeLike
அழகு அட்டைப்படம்….அது என்ன தெட்சிப் பூ கேட்டறியாத பூ….பார்த்தறியப் படம் போட்டிருக்கலாம்
இளவல் ஹரிஹரன்
LikeLike