குவிகம் குறும் புதினம் திட்டம்
குவிகம் அமைப்பு மின்னிதழ் , பதிப்பகம் , அளவளாவல் என்ற கிளைகளில் படர்ந்து வருவது அனைவருக்கும் தெரிந்ததே!
தற்போது குறு நாவல்களை அச்சில் சிறப்புப் பதிப்பு வகையில் ( Limited Edition) குறும் புதினமாக மாதந்தோறும் கொண்டு வரலாம் என்று திட்டமிட்டுள்ளோம்
சிறுகதை, புதினம் இரண்டிற்கும் தளங்கள் நிறைய உள்ளன. ஆனால் குறும் புதினம் என்கிற குறு நாவலுக்குக்கிடைக்கும் வாய்ப்புகள் குறைவு! அந்த வெற்றிடத்தை நிரப்பவே இந்தத் திட்டம்!
இந்தத் திட்டத்தை எப்படிச் செயலாற்றப் போகிறோம்?
இது அங்கத்தினர்களுக்கு மட்டும் வழங்கப்படும் திட்டம்.
அதன்படி 100 -120 பக்கங்களில் இரு குறு நாவல்களை ஓர் அழகான புத்தகமாக அச்சடித்து மாதா மாதம் அங்கத்தினர்களுக்கு வழங்க இருக்கிறோம்.
எப்படிப்பட்ட குறு நாவல்கள்?
1. பிரபல ஆசிரியர்கள் எழுதியவை
2. குறு நாவல் போட்டிகளில் பரிசு பெற்றவை
3. பிரபல நாவல்களைச் சுருக்கி குறு நாவலாக மாற்றப்பட்டவை
4. புதியதாக நாமே போட்டி வைத்துத் தேர்ந்தெடுத்தவை
5. அங்கத்தினர்கள் தேர்ந்தெடுக்கும் / எழுதும் குறு நாவல்கள்
எந்தக் குறு நாவல்களை வெளியிடலாம் என்பதை அதற்கென்று அமைக்கப்பட குவிகம் குழு தீர்மானிக்கும்.
சமூகம் சரித்திரம், நகைச்சுவை, விஞ்ஞானம் , பெண்ணியம் போன்ற வகைகளில் (genre) அமைந்த குறு நாவல்களைத் தர இருக்கிறோம்.
போற்றிப் பாதுகாக்க வேண்டிய தரமான இலக்கியத்தை அங்கத்தினர்களுக்குத் தருவதே எங்கள் நோக்கம்.
ஒவ்வொரு மாதமும் இரண்டு குறுநாவல்கள் வெளியாகும்.அதில் ஒன்று பிரபலமான குறு நாவல்களை அனுமதியுடன் பிரசுரிக்க உள்ளோம்.
மற்றொன்று எழுத்தாளர்கள் குவிகத்திற்காக எழுதப்பட்ட புதிய படைப்பு!
இந்தப் புதிய குறு நாவல்ளைகளைத் தேர்ந்தெடுக்க ஒரு பரிசுப் போட்டியும் அமைத்திருக்கிறோம்.
பரிசுகள்:மூன்று சிறந்த குறு நாவல்களுக்கு Rs.5000/- Rs.3000/- Rs. 2000/-என்று சிறப்புப் பரிசுகள் வழங்க உள்ளோம்.அவற்றைத் தவிர பிரசுரிக்கப்படும் அனைத்துப் படைப்புகளுக்கும் சன்மானம் வழங்கப்படும்.
போட்டிக்கான விதிமுறைகள்:
இலக்கியத் தரமிக்க புதிய கதைக்களம் கொண்ட குறு நாவல்களை வாசர்களுக்குத் தருவதே எங்கள் நோக்கம்!
குறு நாவல் 5000 முதல் 9000 சொற்கள் அளவில் இருக்கவேண்டும்
இதுவரை அச்சிலோ இணையதளத்திலோ வெளிவராத படைப்பாக இருக்கவேண்டும்.
சமூகம், சரித்திரம். நகைச்சுவை, பெண்ணியம் போன்ற எந்த வகையிலும் இருக்கலாம்.
ஒருவர் மூன்று படைப்புக்களுக்கு மேல் அனுப்பவேண்டாம்.
ஏப்ரல் 2021 முதல் மார்ச் 2022 வரை குவிகம் குறும் புதினத்தில் பிரசுரிக்கப்பட்ட 12 குறு நாவல்களிருந்து சிறந்த மூன்றைத் தேர்ந்தெடுத்து அவற்றிற்கு மேலே குறிப்பிட்ட பரிசுத் தொகைகள் வழங்கப்படும் .ஏப்ரல் 22 புத்தாண்டில் முந்திய வருடத்திற்கான பரிசுகள் வழங்கப்படும்.
படைப்புகள் kurumpudhinam@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு ‘word’ கோப்பாக அனுப்பிவைக்க வேண்டும்
இந்த ஆண்டுக்கான போட்டிக்கு படைப்புகள் அனுப்ப கடைசித் தேதி 30/06/2021.
ஒவ்வொரு ஆண்டும் இது போன்று போட்டிகள் நடத்தி குறு நாவல்களைத் தேர்ந்தெடுக்க உள்ளோம்.
வாருங்கள் புதிய இலக்கியம் படைப்போம் !
———————————————————————
இத்திட்டம்பற்றி உங்கள் ஆலோசனைகள்
( எந்த வகை குறுநாவல்கள் படிக்க விரும்புகிறீர்கள் என்பதையும் எழுதலாம் )
1.
2.
3.
நண்பர்களே! படைப்பாளிகளே!
தமிழ்ப் புத்தாண்டு முதல் (14.04.2021) குவிகம் குறும் புதினம் மாத இதழ் தொடங்கி விட்டது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
படைப்பாளிகளை ஊக்குவிக்கும் நல்லதிட்டம். இது படைப்பாளிகளையும், வாசிப்பாளர்களையும் புதுப்பிக்கும் பாராட்டத் தக்க முயற்சி. குவிகத்துக்கு கைகுலுக்கிவாழ்த்துவோம்.
LikeLike
நல்ல முயற்சி..தொடரவாழ்த்துகள்..
LikeLike
மன்னிக்கவும் கையெழுத்து பிரதிகள் பரிசீலிக்க இயலாது
LikeLike
அங்கத்தினார்கள் மட்டுமேதான் குறுநாவல் போட்டியில் பங்கு பெறமுடியும் என்பது புரியவில்லை ! நான் குறுநாவல் அனுப்பலாமா ?
அன்புடன்
ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன் , கோவை
LikeLike
அங்கத்தினர் மட்டுமல்ல, அனைவரும் குறும் புதினம் போட்டியில் பங்கு பெறலாம்
LikeLike
அங்கீகாரமோ அடையாளமோ கிடைக்கப் பெறாத படைப்பாளர்கள் அடையாளம் பெற ஒரு வெற்றிடம் உருவாக்கப்பட்டுள்ளது. குவிகத்தால் அடையாளப்பட்ட படைப்பாளர் பின்னாளில் பெருஞ்சாதனை புரிந்தார் என்றால் அதற்கான சிறப்பும் விருதும் குவிகத்தையே சாரும். வாழ்த்துகள்
LikeLike