அருகாமையின் வாசம்
ஆளை மயக்கும்
பார்வையால் பருகிட
பாதி உயிர் போகும்
கைகள் தீண்டிட
மின்சாரம் பாயும்
உதடுகள் உரசிட
உயிர் கரைந்து போகும்
உணர்விலே கலந்து
உலகம் மறக்கச் செய்யும்
இதழ்கள் பிரிந்திட
ஏக்கம் தாக்கும்
அடுத்த முறைக்காக
ஆவலோடு காத்திருக்க வைக்கும்
காதலியின் முத்தம்…………
(கவிதையின் தொடர்ச்சி) …
முத்தம்
போலத்தான்
இந்த காபியும்…
காபி, பெரும்பாலான தமிழர்களின் வாழ்க்கையோடு கலந்துவிட்ட ஒன்று. நம்மில் பலருக்கு காபியின் நறுமணத்தோடுதான் காலைப் பொழுதுகள் விடியும். அதன் சுவைக்கு அடிமையாகி அதன் மணத்தில் என்னைத் தொலைத்த ஒரு தருணத்தில் தோன்றிய கவிதைதான் இது.
பின் குறிப்பு : காபி என்று தலைப்பிட்டால் இதில் உள்ள சஸ்பென்ஸ் போய்விடும் என்பதால் இது தலைப்பில்லாத ஒரு கவிதை. 🙂