கனவில் குத்திய திருகாணியை
கையால் தடவுகிறேன்
படுக்கை நனைந்து கிடந்த ஈரத்தில் கண்விழித்து
தலைமாடு கால்மாடாய்க் கிடந்துறங்கும்
பிள்ளைகளை நேராக்கி
காற்று போதாமல்
தொடை தெரியக் கிடக்கும்
தலைவியின் பக்கம் வந்து படுக்கிறேன்
சரிந்துகிடக்கும் மாரில் கிளர்ச்சியுற்று
கால் தூக்கிப் போட்டதும்
பதறி விழித்து
சூழல் உணர்ந்தபின் சொன்னாள்
கனவில் ஏதோ குத்தியது போல் இருந்ததென்று…
அறையின் வடகிழக்கு மூலை சுவரில்
அருகில் நிற்கும் இரையைப் பொருட்படுத்தாமல்
இரண்டு கனத்த பல்லிகள்
வாலோடு வால் முறுக்கி லயித்துக் கிடக்கின்றன
ஒன்றோடொன்று அணைத்து…
தொடர்ச்சியாக எனது கவிதைகளை வெளியிட்டு என்னை இன்னும் நிறைய எழுத ஊக்கப்படுத்தும் குவிகம் இதழின் ஆசிரியர் குழுவுக்கும் சிறப்பாக வடிவமைத்துவரும் வடிவமைப்பாளருக்கும் அன்பும் நன்றியும்… மகிழ்ச்சி தொடர்ந்து பயணிப்போம்
LikeLike