உனக்கும் விருது கிடைக்கும் – செவல்குளம் செல்வராசு

முகநூல் நட்பெல்லாம் நட்பல்ல! | Navam K. Navaratnam

எல்லா சமூக ஊடகங்களையும் பயன்படுத்து
எல்லாம் தெரிந்தவனாய்க் காட்டிக்கொள்
கிறுக்கன்போல போல பேசு
கிடைத்ததையெல்லாம் காணொளியாக்கு

கோமாளி போல பேசு
இயல்பாய் பேசுவதாக நடி
சிரிக்க வை, சிரிக்க வை, சிரிக்க வை
அதுபோதும் ஆரம்ப நாட்களில்

உன் போன்றோரைக் கூட்டு வைத்துக்கொள்
சில கேடுகெட்டவர்களைப் பழக்கம்பிடி
கெட்ட வார்த்தைகள் பேசு
சிலரை கேவலமாய்ப் பேசு

விரசமான பாடல்களுக்கு உதடசை
ஆபாச அங்க அசைவுகள் மிக முக்கியம்

அவ்வப்போது ரசிகர்களுக்கு நன்றி சொல்
பயன்படுத்திய உள்ளாடைகள், ஆணுறை, பிஞ்ச செருப்பு,
விளக்கமாறு, விடாய்க்கால அணையாடைகள்
உனக்கு நீயே தூதஞ்சல் அனுப்பு
யார் யாரோ அனுப்பியிருப்பதாய் பொய்யுரை

அவற்றையெல்லாம் நேரலையில் பிரி
அனுப்பியவர்களைத் திட்டுவதாய் பாவனை செய்
உன் செய்கைகள் பிடிக்காத இணையரோ
ஒன்றுமறியாத குழந்தைகளோ
ஒத்தாசைக்கு இருந்தால் கூடுதல் விளம்பரம்

நேரலையில் நாராசமாய்ப் பேசு
அவமானங்களுக்கு அஞ்சாமல்
அத்தனையும் பேசு

தொடர்ந்து செயல்படு இப்படியே
அதுதான் மிக முக்கியம்
நீ பிரபலமாவதற்கு

வேலையற்ற வீணர்கள்
நிறைய இருக்கிறார்கள்
உன்னையும் பேட்டி எடுப்பார்கள்

மனவுளைச்சல் என்று பதிவுபோடு
உனக்கும் ஆறுதல் சொல்ல
ஆயிரம் பேர் வருவார்கள்

உன்னைக் கேலி செய்து
திட்டித் தீர்த்து
உன் பிரபலத்தில் கொஞ்சம்
திருடிக்கொள்ள சிலர் வருவார்கள்

உன்னைக் கழுவி ஊற்றி
அவர்களும் பிரபலமடைவார்கள்
கலங்காதே…
அட அதுவும் கூட விளம்பரம்தான்

அவ்வளவுதான் நீ பிரபலம் ஆகிவிட்டாய்
உனக்கும் ஒருநாள்
விருது கிடைக்கும்

 

 

 

 

 

One response to “உனக்கும் விருது கிடைக்கும் – செவல்குளம் செல்வராசு

  1. தொடர்ச்சியாக எனது கவிதைகளை வெளியிட்டு என்னை ஊக்கப்படுத்தும் இதழின் ஆசிரியர் குழுவுக்கு அன்பின் நன்றிகள். உங்களின் ஆதரவு என்னை உத்வேகம் கொள்ளச்செய்கிறது. மகிழ்ச்சி தொடர்ந்து பயணிப்போம்… இதழின் மற்ற பகுதிகளை விரைவில் படித்துவிட்டு கருத்து பதிவிடுகிறேன்

    Like

Leave a Reply to sevalkulamselvarasu Cancel reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.