உலக இதிகாசங்கள் – எஸ் எஸ்

The Epic of Gilgamesh - Pulkit Agrawal - Literature 114 (Spring 2014-2015) - Harvard Wiki

கில்காமேஷ் விரக்தியின் எல்லைக்கே சென்றான். துயரம் அவனுக்கு அலை அலையாக வந்தது.  தன் விதியை நொந்து கொள்வதைத் தவிர வேறு வழி ஒன்றும் இல்லை என்பதை உணர்ந்து கொண்டான்.

தனது துயரத்தைப் படகோட்டியிடம் பகிர்ந்துகொண்டு தன் வேதனைக்கு வடிகால் தேடினான் கில்காமேஷ்.

“இதற்குத்தானா நான் இவ்வளவு   சிரமப்பட்டேன்! நான் கடந்து வந்த பாதையில் எத்தனை துயரங்கள்! சாவை வெற்றி கொள்ளப் புறப்பட்ட எனக்கு மனிதர்களும்  தேவர்களும்  ஏன் இந்த அண்ட சராசமும் எனக்கு  எதிராக நின்றன! என்னை எப்போது ஆசீர்வதிக்கும் கடவுளர் கூட ‘இது நடவாத காரியம்’ என்று என்னைத் தடுக்கப் பார்த்தார்கள். நான் பிடிவாதமாக அத்தனை எதிர்ப்புக்களையும் இலட்சியம் செய்யாது ஒரே குறிக்கோளுடன் வந்தேன். உத்னபிஷ்டிம் வரை வந்து பார்த்துவிட்டேன். அதுவே எனக்கு வெற்றிதான். அவர் எனக்குச் சாவா வாரம் பெற உதவவில்லை. ஆனால்  என்றும் இளைஞனாக இருக்க உதவும்  பூக்களைப்பற்றிக் கூறினார். அதைப் பறித்து எடுத்தும் வந்தேன். அதைக் கொண்டு  என் வயோதிகத்தை மட்டுமல்ல உருக் நாட்டின் தலைசிறந்த வீரர் அறிஞர் அனைவரையும் இளைமையுடன் இருக்கத் திட்டமிட்டிருந்தேன். ஆனால் ஒரு பாம்பு வடிவில் என் விதி அனைத்தையும் அழித்துவிட்டது. நான் சிந்திய ரத்தம் வேர்வை அனைத்தும் வீணாய்ப் போய்விட்டன. எனக்கு இந்த மாபெரும் பயணத்தால் ஒன்றும் கிடைக்கவில்லை. அத்தனை சிரமமும் வீண். இதற்காகவா  நான் இத்தனை பாடுபட்டேன்?     எப்படியோ அந்தப் பாம்பாவது கிழட்டுத்தன்மை அடையாமல் இளமையுடன் இருக்கட்டும்” என்று சற்று நேரம் புலம்பினான்.

படகோட்டிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

கில்காமேஷும் எந்தவித பதிலையும் எதிர்பார்க்கவில்லை. அவனுடைய தயக்கமும் கலக்கமும் சிறிது காலம்தான் இருந்தது. சுத்த வீரன் ஆயிற்றே அவன்!

இந்தப் பயணம் நான் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. ஆனால் என் விடாமுயற்சி – நான் பெற்ற அனுபவம் இவை இரண்டுமே எனக்குப் போதும். படகோட்டியே! வா! நாம் இருவரும் என்  நாட்டிற்குச் செல்வோம். நான் இன்னமும்  உருக்  நாட்டு மன்னன் தானே ! “

கில் காமேஷ் தன் தலைநகருக்குச் செல்லும் பாதையில் பயணித்தான். படகோட்டியையும் கூட அழைத்துச் சென்றான். மற்றவர்கள் 45 நாட்களில் முடிக்கும் பயணத்தை கில் காமேஷ் மூன்றே நாட்களில் முடித்து உருக் நகரை அடைந்தான்.

“எனக்குக் கிடைத்த புதிய நண்பா! படகோட்டியே! அதோ பார்! என்  நாடு! என் தலை நகரம். கோட்டையைப் பார்! மதிள் சுவரைப் பார்! அஸ்திவாரத்தைப் பார்! நான் உருவாக்கிய நகரம். அனைத்தும் சுட்ட கற்களால் ஆனது. இதை வடிவமைத்துக்  கொடுத்தவர்கள் ஏழு ஞானிகள். நாட்டில் மூன்றில் ஒரு பங்கு நகரம். இன்னொரு பங்கு பூங்கா. மற்ற பங்கு  வயல்கள். இஷ்டார் தேவியின் கோவில் நகரில் நடுவில் இருக்கிறது. இந்த  மூன்று பங்கும் இஷ்டார் தேவி கோவிலும்  சேர்ந்ததுதான் என் உருக் மாநகரம்.

படகோட்டிக்குச்  சொல்வதுபோல தனக்குத்தானே உறுதி எடுத்துக் கொண்டான் கில்காமேஷ்.

” இது என் புகழ் பரப்பும் நகரம். இந்தப் பயணத்தின் மூலம் எனக்கு உலகத் தேசங்கள் அனைத்தும் தெரியும். எல்லாவித மக்களையும் நான் அறிவேன்.  என்  அறிவு பல திசைகளில் பிரகாசித்தது. எனக்குத் தெரியாத மர்மங்களே இல்லை. உலகின் அனைத்து ரகசியங்களையும் நான் அறிவேன். யாருக்கும் தெரியாத பிரளய காலக் கதையை அறிந்து வந்திருக்கிறேன். இதை என்  நாட்டு மக்கள்  அனைவரும் அறியும் வண்ணம்  ஏற்பாடு செய்வேன். நான் சென்ற நீண்ட பயணத்தைப் பற்றியும் அதில் நான் பட்ட துன்பங்கள் துயரங்கள் வேதனைகள் சோதனைகள் அனைத்தையும் என்  மக்கள் மட்டுமல்ல ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் பின்னால் வரும் பிற்கால சந்ததியினர் தெரியும் வண்ணம் அவற்றைக் கல்லில் வடித்து வைப்பேன். நான் சாவை வெற்றி கொள்ளாமலிருக்கலாம். சாவு என்னை எப்போது வேண்டுமானாலும் தழுவலாம். அதுபற்றி எனக்குக் கவலையில்லை. என்  கதையையும் இந்த உருக் நகரத்தின் கதையையும் அழியாச் சின்னங்களாகக் கற்களிலும் களிமண் ஏட்டிலும்  பொறித்து வைப்பேன். எனக்குச்  சாவு வரட்டும் . ஆனால் என்  புகழுக்குச் சாவே கிடையாது. அது போதும் எனக்கு” என்று வீராவேசமாகச் சபதம் செய்து தன் நகருக்குள் சென்றான் கில் காமேஷ்

நினைத்ததை அப்படியே செய்தான் கில் காமேஷ்.

ஆராவாரத்துடன் இருந்துவந்த  கில்காமேஷ் அமைதியின் மறு உருவமாக மாறினான். மாபெரும்  அயோக்கியர் நம் மன்னர் என்று மக்கள்   ஆரம்பக்காலத்தில்  நிந்தித்த மக்கள் அனைவரும் பின்னர் அவனைக்  கடவுளாகவே  மதிக்கத்  தொடங்கினர்.

என்லில் என்கிற சர்வ வல்லமை படைத்த  தேவனை தன் ஆயுள் முழுதும் மறக்காமல் அவரைப் போற்றிக் கொண்டே  உலகின் மாபெரும் மன்னனாக ஆட்சி புரிந்தான் கில் காமேஷ்.

ஆனால் என்லில் தேவன் கில் காமேஷுக்கு விதித்திருந்த விதி முடியும் காலம் வந்தது. அதை  என்லில் ஒரு கனவின் மூலம் அவனுக்குத் தெரியப்படுத்தினார்.

” கில்காமேஷ்!  நீ பூமிக்கு அடியில் சாவு உலகத்தில் இருட்டில்  ஒரு ஓளிச்  சுடரைக் காண்பாய். அதுதான் உன் வாழ்வின் இறுதி நேரம். அத்துடன் உன் விதி முடிவடைந்துவிடும். நீ செய்த சாதனைகளை எண்ணிப்  பார்! உனக்கு அரச பதவி அளிக்கப்பட்டது. அதுதான் உனக்கு அமைந்த விதி!   நித்தியமான வாழ்வு வாழ்வது உன் விதி அல்ல. அதற்காக நீ வருந்தத் தேவையில்லை. மனித குலத்தின் ஒளியாகவும் இருளாகவும் இருக்கும்படி உன்னைப் பணித்தோம். மக்களை ஆளும்  தகுதியை உனக்குத் தந்தோம். நீ போரிட்ட யுத்தங்கள் அனைத்திலும் நீயே  வெற்றி பெற்றாய்! உன்னை எதிர்த்தவரை நீ வென்று வந்தாய். தேவர்களும் உன்னைவிடப் பலசாலிகளும் உன்னை எதிர்க்க வரும்போது உன் அறிவுத் திறத்தால் நீ தப்பி வந்திருக்கிறாய். உனக்குக் கொடுத்த அரசுப் பதவியைத் தவறாக நீ  உபயோகிக்கவில்லை. அனைவரிடமும் நியாயமாக நடந்துகொண்டாய்.

இப்போது  நீ உருக் நாட்டிலிருந்து ஏன் உலகிலிருந்து விடைபெறும் காலம்  வந்துவிட்டது. உன் நினைவைக் கொண்டாடுவது போன்ற ஒரு நினைவுச் சின்னம் எழுப்புவார்கள். அது போன்று உலகில் எவருக்கும் அமையாது.  வீரர்களும் அறிஞர்களும் ஞானிகளும் எல்லோரும் நிலவைப் போல வளர்ந்து தேய்ந்து மறையக்  கூடியவர்தாம். ஆனால் உன்னைப் போல பலம் கொண்டு ஆண்ட மன்னர் வேறு யாரும் இல்லை.  வீரனே! நீ விடை பெரும் காலம் வந்துவிட்டது! ” என்று  என்லில் கனவில் சொல்லி முடித்ததும் கில்காமேஷ் படுக்கையில் சாய்ந்தான்.

நகரத்து மக்கள் அனைவரும் தங்கள் மன்னனுக்காகக்  குரல் எடுத்து அழுதார்கள். உரத்த குரலில் அவன் புகழினைப் பாடிக் கொண்டிருந்தார்கள்!

அவன் ஞானமுள்ளவன்
அவன் அழகன் மக்களை வசீகரிப்பவன்
அவன் மலைகளைக் கடந்து போய் விட்டான்.
இனித் திரும்ப வரமாட்டான்.
விதியின் படுக்கையில் செயலற்று விழுந்துவிட்டான்.
தூண்டிலில் அகப்பட்ட மீன் போலக் கிடக்கிறான்.
சுருக்கு வலை இறுக்கிய மானைப் போலக் கிடக்கின்றான்.
கையும் காலும் இல்லாத சாவுத்தேவன் நம் மன்னர் கில்காமேஷைக் கைப்பற்றிவிட்டான்.
சாவு அரக்கன் நம் தலைவரின் உயிரைக் குடித்துவிட்டான்.
இனி கில்காமேஷ் எழுந்து நடமாட முடியாது.
உருக் நகரிலிருந்து மீளா நகருக்குச் சென்றுவிட்டான்.”

என்று பாடிக்  கதறிக் கதறி அழுதார்கள்.

கில்காமேஷின் மனைவி மக்கள் மற்றும் நகரத்து மாந்தர் அனைவரும்  தன்னிகரில்லாத  கில்காமேஷுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். சாவுத்தேவனுக்குக் கொடுக்கவேண்டிய பலிகளை எல்லாம் தவறாமல் கொடுத்தார்கள்.

உலகைத் துறந்து சென்றுவிட்டான் மாமன்னன்  கில்காமேஷ்! அவனுக்குச் சமமாகச் சொல்ல யாரும் இல்லை! அவன் புகழ் மகத்தானது. இந்த உலகம் இருக்கும் வரை அவன் புகழ் நிலத்து இருக்கும்.

கற்களிலும் களிமண் ஏட்டிலும் அவன் பதித்த வரலாறும் அவன் புகழும்  இன்றும் அழியாமல் இருக்கிநிறன.

உலகின் மாபெரும் இதிகாசமாக  கில்காமேஷின் கதை என்றென்றும் நிலைத்து நிற்கும்.

வாழ்க கில்காமேஷ் புகழ்!

(அடுத்த இதழில் அடுத்த இதிகாசம் தொடரும்)

பிரிடிஷ் மியூசியத்தில் இருக்கும் கில்காமேஷ் களிமண் பட்டயம் பற்றிய தகவல்கள்: 

Place: British Museum  

Object: The Gilgamesh Tablet

Description : Fragment of a clay tablet, upper right corner, 2 columns of inscription on either side, 49 and 51 lines + 45 and 49 lines. Neo-Assyrian. Epic of Gilgamesh, tablet 11, story of the Flood.

Cultures/periods : Neo-Assyrian
Production date: 7thC BC
Excavator/field collectorExcavated by: Hormuzd Rassam

FindspotExcavated/Findspot: Kouyunjik

Asia: Middle East: Iraq: Iraq, North: Kouyunjik
Materials: clay
DimensionsLength: Length: 15.24 centimetres Thickness: Thickness: 3.17 centimetres Width: Width: 13.33 centimetres

Inscriptions

  • Inscription type: inscription
  • Inscription script: cuneiform

Curator’s comments: This object is the single most famous cuneiform text and caused a sensation when its content was first read in the 19th century because of its similarity to the Flood story in the Book of Genesis. Baked clay tablet inscribed with the Babylonian account of the Flood.

It is the 11th Tablet of the Epic of Gilgamesh and tells how the gods determined to send a flood to destroy the earth, but one of them, Ea, revealed the plan to Utu-napishtim whom he instructed to make a boat in which to save himself and his family. He orders him to take into it birds and beasts of all kinds. Utu-napishtim obeyed and when all were aboard and the door shut the rains descended and all the rest of mankind perished. After six days the waters abated and the ship grounded. The first bird released “flew to and fro but found no resting-place”. A swallow likewise returned but finally a raven which had been sent out did not return showing that the waters were receding. Utu-napishtim, who later told this story to Gilgamesh, thereupon emerged and sacrificed to the gods who, angry at his escape, granted him on the intercession of Ea divine honours and a dwelling place at the mouth of the river Euphrates.

நன்றி: கில் காமேஷ் -உலகத்தின்  ஆதி  காவியம்  தமிழில் க நா சுப்பிரமணியம் ( சந்தியா பதிப்பகம் SAN 163 முதல் பதிப்பு 2003 மறுபதிப்பு 2017 http://www.sandhyapathippakam.com 

One response to “உலக இதிகாசங்கள் – எஸ் எஸ்

  1. நான் சாவை வெற்றி கொள்ளாமலிருக்கலாம். சாவு என்னை எப்போது வேண்டுமானாலும் தழுவலாம். அதுபற்றி எனக்குக் கவலையில்லை. என் கதையையும் இந்த உருக் நகரத்தின் கதையையும் அழியாச் சின்னங்களாகக் கற்களிலும் களிமண் ஏட்டிலும் பொறித்து வைப்பேன். எனக்குச் சாவு வரட்டும் . ஆனால் என் புகழுக்குச் சாவே கிடையாது. அது போதும் எனக்கு” என்று வீராவேசமாகச் சபதம் செய்து தன் நகருக்குள் சென்றான் கில் காமேஷ்…..

    இந்த வீரவுரையுடன் நமக்கு கில்காமேஷூம் சுந்தரராஜனும் விடை கொடுக்கிறார்கள். ஒரு நல்ல திரைப்படம் முடியும் போது ஏற்படும் வருத்தமும் அதே சமயம் திருப்தியும் நமக்கு ஏற்படுகிறது. இந்தக் கதையை விரைவில் புத்தக வடிவில் எதிர்பார்க்கலாமா?

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.