இதற்காகவாவும் இருக்கலாமோ?
என் குடும்பமும், நண்பன் சேகர் குடும்பமும், அவன் வீட்டில் லஞ்ச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். என் மகள் மிதிலா திடீரென்று, ‘ஆன்டீ.. நீங்க அப்பளாம்
எந்த பிராண்டு வாங்கறீங்க..?’ என்று கேட்டாள். ‘ஏன்மா.. அப்பளாம் நன்னாருக்கா… நீங்க வீட்டிற்குப் போகும்போது ஒரு கட்டு தரேன்..‘ என்றாள் சேகர் மனைவி.
.’நோ.. நோ.. இல்லே ஆன்டி.. அப்பளம் ரொம்ப ரொம்ப மட்டமா இருக்கு… டேஸ்டே இல்லே… அதன் ப்ரான்ட் தெரிஞ்சுதுன்னா நாங்க வாங்கும்போது அதை வாங்கறதை அவாய்டு பண்ணலாம் இல்லையா.. அதற்குத்தான் கேட்டேன்..‘ என்றாள்.
ஒரு நிமிடம் அயர்ந்து நின்ற நாங்கள், ‘பக பக‘வென்று சிரிக்க ஆரம்பித்தோம்.
இப்படியும் ஒரு கோணமா….!!!