குவிகம்- எழுத்தாளர் சிவசங்கரி சிறுகதைத் தேர்வு
குவிகம் குழுமத்தின் மற்றுமொரு பரிசுத் திட்டம் !
ஓர் ஆண்டில் வெளிவந்த சிறுகதைகளில் சிறந்த சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றிற்குப் பரிசுகள் வழங்குவது!
அச்சில் மற்றும் இணையத்தில் வரும் வார /மாத /காலாண்டு போன்ற இதழ்களில் வெளியாகும் சிறுகதைகளில் சிறந்த ஒரு சிறுகதையினை ஒவ்வொரு மாதமும் தேர்ந்தெடுத்து அவற்றிலிருந்து மிகச் சிறந்த ஒரு சிறுகதையை ஆண்டுச் சிறுகதையாக அறிவிக்க குவிகம் திட்டமிட்டிருக்கிறது.
-
அச்சிலும் இணையத்திலும் பருவ இதழ்களில் இடம்பெறும் சிறுகதைகளில் சிறந்ததாக ஒருசிறு கதையை ஒவ்வொரு மாதமும் (ஜூலை 1, 2022 முதல் ஜூன் 30, 2023 வரை) ஒரு நடுவர் தேர்ந்தெடுப்பார்.
-
அப்படி தேர்ந்தெடுக்கப்படும் 12 சிறுகதைகளில் சிறந்த ஒன்றை ஆண்டுச் சிறுகதையாக ஒரு நடுவர் தேர்வு செய்வார்.
-
அந்த 12 கதைகளும் நடுவரின் முன்னுரையோடு புத்தகமாக வெளியிடப்படும்.
-
ஒவ்வொரு மாதமும் தேர்ந்தெடுக்கப்படும் கதைக்கு ரூ. 1000 மற்றும் ஆண்டுச் சிறுகதைக்கு ரூபாய் ரூ5000/ பரிசளிக்கப்படும்.
-
சின்னஞ்சிறு கதைகளும் நீண்ட சிறுகதைகளும் தேர்வில் இடம்பெறாது.
-
தேந்தெடுக்கப்பட்ட மாதச் சிறுகதை குறித்த அறிவிப்பு அடுத்தமாதம் குவிகம் மின்னிதழில் அறிவிக்கப்படும்.
-
குவிகம் குழுமத்தின் முடிவே இறுதியானது.
நல்ல முயற்சி. பாராட்டுகள்.
LikeLike
சிறப்பு .நல்ல முயற்சி . பாராட்டுகள் .இலக்கிய சிந்தனை பரிசு போல தொடர்ந்து இதை செய்ய வேண்டும் .நன்றி
அன்புடன்
ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன் ,கோவை
LikeLike