” ஏம்பா! இன்னும் எத்தனை நாளைக்குத்தான் கல்யாணம் வேண்டாம்னு ஓட்டல்ல சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக்கிட்டு இருக்கப்போற” “
வீட்டுக்கு வந்தவுடன் அம்மா புலம்ப ஆரம்பிச்சாச்சு –
கிராமத்தில் இருந்து வந்து ரெண்டு நாள் தான் ஆகிறது’_
” கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி என்னைய ஒரு நிலைமைக்குக் கொண்டு வந்துகிட்டு அதுக்கு அப்புறம் அதப் பத்தி யோசிக்கலாம், முடிவு எடுக்கலாம்” என்றேன்
உனக்கென்ன பட்டணத்தில் இருக்க! நான் பட்டிக்காட்டில் உட்கார்ந்துகிட்டு கேட்கிறவங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியல -“
“அம்மா, பேங்க்ல ஆபீஸர் ஆகி அஞ்சு வருஷம் தான் ஆகுது _ வீட்டு லோன் போட்டு வீட்டை கட்டிக்கிட்டு இருக்கேன், அது முடிய ஆறு மாசம் ஆகும் _ வீடு கட்டி முடிச்சாப் பிறகுதான் மற்றதைப் பத்தி எல்லாம் யோசிக்கணும் _
” நீ லேசாகச் சொல்லிட்ட _ உன் தாய் மாமன் என்னைப் போட்டு உசுரை எடுக்கிறார் _அவர் மகள் பெரிய மனுசியாகி எட்டு வருஷம் ஆச்சாம் , ஏதோ காலேஜ் படிப்பு முடித்திருக்கிறாளாம்_ அவர் கோயம்புத்தூர்ல பெரிய வியாபாரம் பண்ணுதாராம் _ சொத்து லட்சக் கணக்கில் இருக்காம் _ ஒரே பொண்ணு. மாப்பிள்ளை தேடிக்கிட்டு இருக்காராம் _. நீ பேங்க்ல ஆபீஸர் அப்படின்னு சொல்லி இருக்காங்க அதான் கார் போட்டுக்கிட்டு போன வாரம் ஊருக்கு வந்தாரு
நான் பேங்க்ல வேலை பார்க்கிறது தெரிஞ்சி உன்னைய தேடி வந்து இருக்காரு _அப்படிப்பட்ட அண்ணன் இத்தனை வருஷமா எங்க போனாரு? நான் காலேஜ்ல சேர்ந்த உடனே எல்லாம் அப்பா காலமாயிட்டாங்க _விசேஷத்துக்கு துணி போட வந்தவரு அதுக்குப் பிறகு இந்த திசையைக் கூட எட்டிப் பார்க்கலை _ஏன்? நமக்கு வசதி இல்லை, எங்கே நெருங்கினால் ஒட்டிக்கிருவாங்களோ, இந்த குடும்பத்தையும் நாம சேர்ந்து இழுக்கணுமோன்னு ஒதுங்கிட்டார் அந்த நேரத்துல அப்பா என்னைக்கோ செஞ்ச உதவியை மறக்காமல் மேலத்தெரு மாமா என் படிப்புக்கு க் கை கொடுத்து ஸ்காலர்ஷிப் காசு வர்ற வரைக்கும் ஒவ்வொரு வருஷமும் ஹாஸ்டலுக்கு பீஸ் கட்ட உதவுனாரே ! சொந்தம்! சொந்தம்ன்னு சொல்லுரியேம்மா அவங்க எந்த வகையில நமக்குச் சொந்தம் ? அதை மறக்க முடியுமா? சொல்லும்மா! “
“”
“அதனால என்ன? அவருக்கு 5000 10000 கொடு வேண்டாம்னு சொல்றேன்”
“இல்லம்மா, அன்னைக்கு என்னை தாங்கி பிடிச்சு நிக்க வச்சவரை நான் இன்னைக்குத் தாங்கணும்_இல்லேன்னா நான் எவ்வளவு உயரத்துக்கு போனாலும் திங்குற சோறு உடம்புல சேராதும்மா _”
“என்ன இருந்தாலும், என் கூடப் பிறந்தவரு_ உறவுன்னா அப்படித்தான் இருக்கும் : அதுக்காகக் கூடி வரும்போது ஒதுக்குறது நல்லதா ? நாளைக்கு உனக்கும் நாலு சாதி சனம் வேணும் _” நீயும் வசதியா ஆயிருவ_ தங்கச்சியும் தங்கச்சி புள்ளையும் வேணும்னு வாராக சரின்னு சேர்த்துக்கிறதுல என்ன குத்தம்?
“” அம்மா உனக்கு எப்படி புரிய வைக்கிறதுன்னு தெரியல! நான் நாலு காசு சம்பாதிக்கிறேன்ன உடனே சம்பந்தம் பேச வாரவரு இந்த பத்து வருஷமா நாம செத்தமா? பொழச்சமான்னு தெரியாமத்தானே இருந்தாரு _ இப்பவும் அப்படியே இருக்கட்டும் நான் ஒரு முடிவுல தான் இருக்கேன் ஆறு மாசம் கழித்துதான் கல்யாணம், அதுவும் நம்மைக் கை தூக்கி விட்ட மேலத்தெரு மாமா குடும்பத்துலதான் _
“அங்க என்னடா வசதி இருக்கு அவங்களே இழுத்துக்கோ பறிச்சுக்கோன்னு பொழுதைக் கழிக்காக, அங்க போய் பொண்ணு எடுத்தா உனக்கு என்னத்த செய்வாங்க?
அம்மா அவங்க கிட்ட இருந்து நான் எதையும் எதிர்பார்க்கலை, எனக்கு செய்ய வேண்டியதென்று நீ நினைக்கிறத எனக்கு முன்னாலே செஞ்சிட்டாங்க _நாங்க அந்தக் காலத்துல படிக்க உதவுனோம். இப்பக் கஷ்டப்படுகிறோம் அதைக் கொடு இதை கொடு ன்னு எப்பவாவது கேட்டு இருக்காங்களா? அந்த பொண்ணு பத்து வரைக்கும் படிச்சு முடிச்சிட்டு காட்டு வேலைக்குத்தான் போகுதாம் _ பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணனும்னு அவரோட ரெண்டு ஏக்கர் நிலத்தை விக்க வெலை சொல்லிக்கிட்டு இருக்காராம் _
“அதுக்கு நீ என்ன செய்யணும்?””
அம்மா இன்னும் அவங்க கஷ்டப்படுறதைப் பாத்து நாம சும்மா இருக்க கூடாது _ நான் அந்த புள்ளையைக் கட்டிக்க முடிவு பண்ணிட்டேன் _இந்த வாரம் அவங்க வீட்டுக்கு போயி என் முடிவைச் சொல்றதாய் இருக்கேன்_ அவங்க செய்த உதவிக்கு எதையும் எதிர்பார்க்கல _அதனால நாமளும் எதையும் எதிர்பார்க்காம நடக்கிறது தான் நம்மளுக்கு கௌரவம் _