2017 இல் சத்யஜித் ராய் அவர்களின் அனுகூல் என்ற மிகச் சிறப்பான விஞ்ஞான சிறுகதையை 21 நிமிட குறும் படமாக மாற்றியிருக்கிறார்கள்.
யூ டியூபில் வெளியிட்ட ஒரே நாளில் ஒரு லட்சம் வாசகர்கள் பார்த்துப் பாராட்டியிருக்கிறார்கள்
இந்தியாவில் சிறந்த விமர்சகர்கள் இதனைக் கொண்டாடியிருக்கிறார்கள்.
அமிதாப் பச்சன் அவர்கள் இதனை மிகவும் பாராட்டியிருக்கிறார்.
இந்தக் கதை விரைவில் உண்மையாக நடக்கக்கூடும். அப்படி நடந்தால் அதன் விளைவுகள் எந்த அளவு பயங்கரமாக இருக்கும் என்பதை எண்ணும் போது ஒரு திகில் – ஓர் அச்சம் நம்மிடம் உருவெடுக்கிறது. .
கதையில் வரும் முக்கிய கதாபாத்திரங்கள் இருவரும் கதைக்குத் தேவையான அளவு கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.
கிளைமாக்ஸ் ஆக வரும் முடிவு, தற்செயலாக நடந்த விளைவா அல்லது கண நேரத்தில் திட்டமிட்ட செயலா ?
ஆராய்ந்து பார்க்க வைக்கும் குறும் படம்.
ரே ரே தான் !
பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை எழுதுங்கள் !