வட்டமிட்டுப் பறக்கும்போதே நோட்டமிட்ட கழுகரசனுக்கு சட்டை உரித்த பாம்பின் பிறந்தமேனி பார்வையில்தெரிந்தது
அலகில் நீர் வழிய சட்டென்று கீழே இறங்கி கால் விரல்களில் பாம்பைப்பற்றி மேலே பறந்து சென்றது.
வயதாகியும். எப்படி இரையைப் பிடித்தோம் என்ற கர்வத்தில் உயரே உயரே பறந்தது.
தன் சகாக்கள் தன்னைப் பார்க்கவேண்டும் என்று ஒருமுறைக்கு இருமுறை காலில் பாம்புடன் வானில்வட்டமிட்டது!
கழுகின் போறாத காலமோ பாம்பின் நல்ல காலமோ கழுகின் பிடியிலிருந்து பாம்பு நழுவித் தரையை நோக்கிவிழுந்தது.
தன் திறமையின்மையை சகாக்கள் பார்த்துவிட்டனவோ என்று ஓரப்பார்வையால் பார்த்தது
கழுகு அரசனுக்குப் பக்கத்தில் இருந்த இளம் கழுகு விஷமச் சிரிப்புடன் சட்டென்று தாழ்ந்து பறந்துவிழுந்த பாம்பை அலகால் பிடித்தது.
அந்தக்கணத்தில் கழுகரசன் புரிந்துகொண்டது தன் அரச பதவி காலாவதியாகிவிட்டது என்று!
கூட்டத்தைவிட்டுப் பறந்துபோய் மலையின் உச்சியில் அமர்ந்து தன் சிறகுகளை ஒவ்வொன்றாக பிய்த்துக்கொண்டு உயிரை விட்டது!
நடந்ததை அறியாத தன் கோழிக்குஞ்சு கழுகின் பார்வையிலும் பாம்பின் பல்லிலும் தப்பியதே என்ற மகிழ்ச்சியில் தன் சிறகால் குஞ்சை மூடி அழைத்துச் சென்றது தாய்க்கோழி !