முந்தைய தலைமுறையிரிடையே பிரபலமான திரைப்படப் பாடல்!
காந்தா .. ஸ்வாமி ..
இன்றும் பல மெல்லிசை நிகழ்ச்சிகளில் ஆரவாரத்துடன் ஒலிக்கும் பாடல்!
பாலச்சந்தரின் மன்மத லீலை படத்தின் துவக்கமும் இந்தப் பாடலில்தான் !
“மன்மத லீலையை வென்றார் உண்டோ?”
இந்தப் பாடல் சாருகேசி எனும் பாரம்பரிய இசையில் பாடப்பட்டது. அந்த பாடலுக்குப்பிறகே பிரபல கர்நாடக இசை வித்துவான்கள் சாருகேசி (26 வது மூலராகம்-(மேளகர்த்தா)) இசையை கச்சேரியில் பயன்படுத்த ஆரம்பித்தனர். இதை பிரபல கர்நாடக இசை விமர்சகர் சுப்புடு “சாருகேசியை பிரபலமாக அறிமுகப்படுத்தியவர்” என்று தியாகராஜ பாகவதரை வர்ணிக்கின்றார்!
எம்.கே.டியின் குரலை அந்தக்காலத்தில் ‘கோல்டன் வாய்ஸ்’ என்பர். பெண்மையும் ஆண்மையும் கலந்த அவருடைய குரலுக்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை. அவர் பாடல்களில் 4.5 கட்டை (குரல் தடிமன்) சுருதியில் (சுதி) பாடக்கூடியவர். சுருதியின் உச்ச நிலையிலையிருந்து உடனே கீழே இறங்கிப்பாடும் வல்லமை பெற்றவர். வார்த்தைகளை உடைத்து உடைத்துப் பாடுவதில் வல்லவர். அவரது பாடல்கள், பாமரர்களும் ரசிக்கும் விதமாக இருந்தன.
இவர் தமிழத்திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் !
பாடலாசிரியர் : பாபநாசம் சிவன் பாடியவர் : எம்.கே. தியாகராஜ பாகவதர் திரைப்படம் : ஹரிதாஸ் இசை : ஜி ராமநாதன் மன்மத லீலையை வென்றார் உண்டோ? என் மேல் உனக்கேனோ பாராமுகம்?
நின்மதி வதனமும் நீள் விழியும் கண்டு
என்மதி மயங்கினேன் நான்
என்மதி மயங்கினேன் மூன்று உலகிலும்
என்னுடனே நீ பேசினால் வாய்முத்துதிர்ந்து விடுமோ? – உனை
எந்நேரமும் நினைந்துருகும் என்னிடம் வந்தால் மெனக்கெடுமோ? – உனை
எந்நேரமும் நினைந்துருகும் என்னிடம் வந்தால் மெனக்கெடுமோ?
உன்னை நயந்து நான் வேண்டிய ஓர் முத்தம் தந்தால் குறைந்திடுமோ?
ஒருபிழை அறியா என்மனம் மலர்க்கணை பாய்ந்து அல்லல் படுமோ?
ஒருபிழை அறியா என்மனம் மலர்க்கணை பாய்ந்து அல்லல் படுமோ?–மனம் கவர்
மன்மத லீலையை வென்றார் உண்டோ?
என் மேல் உனக்கேனோ பாராமுகம்?