தன் அயராத உழைப்பால் எண்பது வயதிற்கு மேலாகியும் எழுத்துலக ஜாம்பவானாக இருந்துவந்து, புலம் பெயர்ந்த மனிதர்களில் தாய் மண்ணீன்மீது மட்டில்லா பாசமும் நேசமும் கொண்ட பெரு மதிப்பிற்குரிய பொன் குலேந்திரன் அவர்கள் 11 அக்டோபர் அன்று கனடாவில் இயற்கை எய்தினார் என்பதைக் கேட்டதும் நமது குவிகம் நண்பர்கள் அனைவரும் மீளாத் துயரமடைந்தோம்!
துயரில் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நட்பு வட்டங்களுக்கும் குவிகம் சார்பில் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்!
நண்பர் ராய செல்லப்பாவின் இறுதி அஞ்சலி:
கனடாவில் வாழும் புலம்பெயர் இலங்கைத் தமிழரும், தமிழ்- ஆங்கில இருமொழி எழுத்தாளரும், எனது அருமை நண்பருமான திரு பொன். குலேந்திரன் ஐயா அவர்கள் இயற்கையெய்திவிட்டார்கள் என்ற தகவல் அறிந்து வருந்துகிறேன்.
He passed away on Oct 11, 2022 at Missisauga, Ontario, peacefully, surrounded by his family members. Public viewing will be on Oct 15, 2022 (5pm-9pm) at St.John’s Dixie Cemetery & Crematorium, 737, Dundas St E, Missisauga, ON LAY 2B 5.
அவருடைய முகநூல் பதிவில் 2018இல் அவர் எழுதிய “நீங்களும் எழுத்தாளராகலாம்-எப்படி?” என்ற பதிவை இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.
எப்படி நீங்களும் எழுத்தாளர் ஆகலாம்?
வாசிப்பது, சிந்திப்பது எழுதுவது , பகிர்வது , நிட்சயம் கவலைகளைப் போக்கும் . பல தேச நண்பர்களை உருவாக்கும். பல கலாச்சாரங்களை பற்றி அறியாலாம் . தொழில் நுட்பம் இதற்கு எமக்கு பெரிதும் உதவுகிறது :கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு” இதோ சில சிறு கதைகள் எழுத கவனிக்க வேண்டியவை .
1 கதைகள் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் முக்கியம்
2 தமிழை Unicode யில் எழுத Tamil. Google input tools பாவியுங்கள்
3 தமிழை bamini எழுத்துருவில் எழுதினால் Unicode யுக்கு மாற்றலாம் முக நூல், மின் அஞ்சல், மின் நூல் ஆக்கியவையில் எழுத Unicode அவசியம்
4 தினமும் நடப்பதை அவதானியுங்கள். செய்திகளை வாசியுங்கள். அதில் சிறு கதைக்கு நல்ல கரு கிடைக்கும்
5 கதை நடக்கும் சூழலை சுருக்கமாக ஆரம்பித்தில் விபரிதது வாசகர்களை அழைத்து அந்த இடத்துக்கு கூட்டிச் செல்லுங்கள்
6 கதையின் தலையங்கமம் . கவர்ச்சியாகவும் சுருக்கமாகவும் கதையின் கருவை எடுத்துச் சொல்வதாகவும் இருக்க வேண்டும் . உதாரணம் ( முடிவு, வேலி. மலடி, பெரியம்மா , ஆச்சி.. )
7 கதாப்பாத்திரங்களின் பெயர்கள் சுருக்கமாக இருப்பது நல்லது.
8 கதையில் வர்ணனைகள் அதிகம் இல்லாமல் விறுவிறுப்பபாக எழுத பழக வேண்டும். கதைக்கு எதிர்பாராத முடிவு அவசியம் . முடிந்தளவு யதார்த்தமான கதைகளை வாசகர் விரும்புவார்கள். உதாரணம் ஒரின சேர்க்கை, முதியவயதில் காதல், மதமாற்றம். அவர்கள் மனதில் கேள்விக் குறியைத் தூண்டி விடுங்கள்
9 வசனத்தில் மண்வாசனை வீசவேண்டும்
10 ஒரு வட்டத்துக்குள் கதைகள் இருக்கக் கூடாது . உதாரணம் யாழ் குடா நாடு. காதல் .
11 அப்பில் முதல் கடியில் சுவைத்த போது சுவையாக இருப்பின் முழு அப்பிலையும் சாப்பிட வேண்டும் போல் இருக்கும். அது போல் கதை இருக்க வேண்டும்.
12 எழுதி முடித்வுடன் குறைந்தது மூன்று நாட்களுக்கு ஒரு பக்கத்தில் வைத்து விடுங்கள். அதன் பின் திரும்பவும் எடுத்து வாசியுங்கள். மாற்றங்கள் மனதில் தோன்றும்
13 கதையில் நகைச்சுவையை சேருங்கள்
14 கதி வாசகர்களை பல தடவை வாசிக்க வையுங்கள். அதன் அர்த்தம் அவர்களுக்கு கதை பிடித்து கொண்டது என்பதாகும் . கதை உண்மையில் நடப்பது போல் இருக்க வேண்டும்.
15 இறுதியாக கதையின் முடிவு சமூகத்துக்கு ஒரு செய்தியை சொல்லவேண்டும்
16 மிக முக்கியமாக எழுத்து பிழைகள், இலக்கணப் பிழைகள் இல்லாமல் கதைகள் ; எழுத் வேண்டும், இதற்கு neechalkaran.com மென் பொருளை பாவிக்கலாம் . இன்னும் பல மென் பொருள்கள் உண்டு
17 இலக்கிய திருட்டை தவிர்கவும்
18 ஆஆங்கில வார்த்தைகளை முடிந்தளவு தவிர்க்கவும் .
19 நீங்கள் எழுத எழுத் கற்பனை வளம் வளரும். புதிய யுக்திகளை கையாளுவீர்கள்.
வருந்துகிறோம். அவரது இலக்கிய ஆர்வம், குவிகம் பரிசு அறிவித்த அன்று அவர் இலக்கிய கூட்டத்தில் உரையாற்றியது ஞாப்கம் வருகிறது
LikeLike