
தீய வழியில் சென்று கொண்டிருந்த மக்களை நல் வழிப் படுத்த போதி சத்துவர் சாக்கிய வம்சத்தில் கபில வஸ்து எனும் அழகிய நகரில் அவதரித்து பெற்றோரால் சித்தார்த்தன் என பெயரிடப்பட்டு கௌதம புத்தராக மக்களை வழிநடத்தினார் என்பதை நாம் அறிவோம். அனைவரும் அறிந்தாலும் பௌத்தம் பற்றி பேசும் பொழுது புத்தரைப் பற்றி பேசாவிட்டால் பௌத்த பிஷுக்களின் பாவம் நமக்கெதற்கு என்பதாலேயே மேற்கண்ட அறிமுகம்.
சிவனின் ஐந்து முகங்களிலிருந்து தோன்றியவர்களை ஆதி சைவர் என்பர். அவர்களே பிரம்ம புத்திரர்கள் அல்லது பிராமணர் என்றும் அறியப் படுபவர்கள். அவர்கள் காசிபர், கௌசிகர், அகத்தியர், பரத்துவாசர், கௌதமர் என்ற ரிஷிகளின் வழித்தோன்றலாதலால் அவர்களின் பெயரையே கோத்திரமாக கொண்டனர்.
கௌதம புத்தர் பெற்றோரையும், மனைவியையும், பிறந்த மகனையும் தவிக்க விட்டு உலக நன்மைக்காக துறவு பூண்டார் என்பதையும் நாமறிவோம்.
அரச வாழ்க்கையைத் துறந்து, இரந்து உண்டு பசியால் வாடி, காடு மேடு அலைந்து தன் கொள்கைகளில் உறுதியாக நின்று தம் பக்கம் மக்களைக் கவர்வது ஒரு சாதாரண மனிதப் பிறவியால் இயலாத ஒன்று.
முற்றும் புகழப் படுபவரும், முற்றும் இகழப் படுபவரும் அன்றும் இல்லை, இன்றும் இல்லை, என்றும் இல்லை.
புத்த மதத்தின் மக்களை மயக்கும் கொள்கைகள் சிலவற்றை சென்ற பதிவிலே பார்த்தோம்.
பாலி மொழியில் கொள்கைகள் எழுதப்பட்டாலும் பௌத்தம் சென்ற நாடுகளில் அந்த அந்த வட்டார மொழிகளிலே மொழி பெயர்த்து ஓதப்பட்டது. பௌத்தம் எங்கும் பரவ இது முதல் காரணம்.
ஒன்றுமறியாத பாமரன் அருகே உள்ள புத்த பிஷுவை அணுகி பாலி மொழியில்
புத்தம் சரணம் கச்சாமி ( புத்தரை அடைக்கலம் அடைகிறேன்)
தம்மம் சரணங் கச்சாமி ( தர்மத்தை அடைக்கலம் அடைகிறேன்)
சங்கஞ் சரணம் கச்சாமி ( சங்கத்தை அடைக்கலம் அடைகிறேன்)
பௌத்தத்தை பரப்ப பாலி மொழியை தோற்றுவித்த புத்தர் அவற்றை எழுத்தில் வடிக்க பிரமி என்ற எழுத்தையும் உருவாக்கினார். கி. மு 3 ம் நூற்றாண்டு முதல் கி. பி 2 ம் நூற்றாண்டு வரை பிரமி எழுத்துக்களிலே சாசனம் வடிக்கப் பட்டன. பிரமி எழுத்து வடிவத்திலிருந்து தோன்றியதே நாகரி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளின் எழுத்து வடிவங்கள் என்கின்றனர் வரலாற்று ஆசிரியர்கள். கிரந்த எழுத்துக்கள் 9 ம் நூற்றாண்டு வாக்கில்தான் தோன்றியதாம்.
புத்தரின் கொள்கைகள் மாமன்னன் அசோக சக்கரவர்த்தி முதல் சிங்கள நாட்டிலோ, சீன நாட்டிலோ வசித்த சாமான்யன் வரை அனைவரையும் கவர்ந்தன. பாரதம் தவிர ஏனைய நாடுகளில் இன்றும் நிலை பெற்று பௌத்தம் வளர காரணங்களைப் பார்ப்போம்.
பள்ளிகளின் கூடங்களில் அனைவர்க்கும் கல்வி போதிக்கப் பட்டு இன்றும் பள்ளிக் கூடம் என்ற பெயரை தமதாக்கி குழந்தைகளின் அறிவை மேம் படுத்திக் கொண்டுள்ளன.
சிறைச்சாலைகள் அறச்சாலைகளாகின.
ஆம்.பௌத்த மதம் தோன்றுவதற்கு முன்பே செல் வாக்கு பெற்று வளர்ந்திருந்த வைதீகம், சமண மதங்களுடன் போட்டியிட்டு சண்டையிட்டு, எதிர்ப்புகளை சமாளிக்க போராட வேண்டி இருந்தது.
இவ்வளவு சிறப்புடன் இருந்த பௌத்தத்தையும் வைதீக மதத்தையும் புறந்தள்ளி தன்னை சில காலம் நிலைப் படுத்திக் கொண்ட சமண மதத்தைப் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.