குவிகம் இதழ் தற்போது 10 ஆம் ஆண்டில் பவனி வந்து கொண்டிருக்கிறது. இவ்வருட இறுதியில் 10 வது ஆண்டைப் பூர்த்தி செய்வோம்!
இந்த மாத இதழிலிருந்து WORDPRESS FREE திட்டத்திலிருந்து WORDPRESS PREMIUM திட்டத்திற்குச் சென்றுள்ளோம். இதனால் நமக்கு பல வசதிகள் உள்ளன. அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக உபயோகிப்போம்.
இந்த இதழில் சென்ற இதழில் இல்லாத சில மாற்றங்கள் உள்ளன. அவை என்னவென்று கண்டால் சொல்லுங்கள் !!
இந்த இதழிலிருந்து சில அறிவியல் கதைகளை பிரசுரிக்கலாம் என்று இருக்கிறோம். அந்த வரிசையில் பானுமதி அவர்களின் திருவாதிரை கதை வந்துள்ளது. நண்பர்கள் சாதாரண கதை அனுப்புவதைவிட அறிவியல் கதை அனுப்பலாம்.
இதிகாசம் , சங்க இலக்கியம், சரித்திரம், இலக்கியம், அறிவியல், மனநலம், ஆன்மீகம், திரைப்படம் , மொழிபெயர்ப்பு , சொல் விளையாட்டு, சிறுகதைகள், கவிதைகள், காணொளி என்று பல GENRE களில் நாம் பயணித்துக்கொண்டு வருகிறோம்.
ஜனவரி முதல் நாள் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இருப்பதை சிறப்பாகச் செய்யவேண்டும் என்று ஆணையிட்டீர்கள் !
அதன்படி இனி வரும் நாட்களில் சின்னச் சின்ன நகாசு வேலைகளுடன் குவிகம் இதழை இன்னும் சிறப்பாகக் கொண்டுவருவோம்.
அதற்கு உங்கள் அன்பும் ஆதரவும் தொடர்ந்து தேவை !
- சுந்தரராஜன்