பிரபா ராஜன் அறக் கட்டளை சார்பாக குவிகம் நடத்திய சிறுகதைப் போட்டி மாபெரும் வெற்றியடைந்திருக்கிறது. அனைத்தும் பெண்களை மையப்படுத்தி எழுதிய கதைகள்.
300 க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் இந்தப் போட்டியில் கலந்துகொண்டது இதன் வெற்றியின் ஒருபக்கம்.
அவற்றை குறிப்பிட்ட நாளுக்குள் படித்து, தரம் பிரித்து சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்த நடுவர்கள் பத்மினி பட்டாபிராமன், மீனாக்ஷி பாலகணேஷ் இருவருக்கும் எத்தனை முறை நன்றி கூறினாலும் தகும்!
முதல் மூன்று பரிசுகளை வென்ற மூவருக்கும் பாராட்டுதல்கள்
முதல பரிசு : ரூ 5000 – பொன் ஆனந்தன் – சோளக்காட்டு பொம்மை என்ற கதைக்காக
இரண்டாம் பரிசு: ரூ 3000 – புவனா சந்திரசேகரன் – வேதாளம் சொன்ன கதைக்காக
மூன்றாம் பரிசு : ரூ 2000 – ஐரேனிபுரம் பால்ராசய்யா – மனதில் உறுதிவேண்டும் கதைக்காக
இவர்களைத் தவிர தேர்ந்தெடுத்த 11 கதைகளுக்கு ஆயிரம் ரூபாய் பரிசளிக்கத் திட்டமிட்டிருந்தோம்.
திரு ராஜன் இன்னும் சிலருக்குப் பரிசு கொடுக்கலாம் என்று கூறியதால் இன்னும் 16 பேருக்கு ரூபாய் 500 பரிசளிக்கிறோம்.
ஆக மொத்தம் ரூபாய் 30 கதைகளுக்கு ரூபாய் 29000 பரிசுகளாக வழங்குகிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் .
பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள் !
பரிசு பெற்ற கதைகள் குவிகம் மின்னிதழில் பிரசுரமாகும்.
முதல் பரிசு பெற்ற கதை இவ்விதழை அலங்கரிக்கிறது
அதுமட்டுமல்லாமல் பரிசு வழங்கும் தினமான 15 ஜனவரிக்குள் இந்த 30 கதைகளையும் புத்தக வடிவில் கொண்டுவரவேண்டும் என்ற கிருபானந்தன் அவர்களின் விடாமுயற்சியால் “சோளக்காட்டுப் பொம்மை” என்ற தலைப்பில் அவை புத்தகமாக வெளிவருகிறது.
உடனுக்குடன் மெய்ப்புப் பார்த்து உதவிய நித்தியானந்தம் அவர்களுக்கு நன்றி.
புத்தகக் கண்காட்சியின் அழுத்தம் இருந்தபோதிலும் மூன்றே நாட்களில் அச்சடித்துக் கொடுத்த அடையார் மாணவர் நகலகம் மேலாண்மையாளர் நாகராஜன் அவர்களுக்கும் மற்ற தொழிலாளர்களுக்கும் குவிகம் – பிரபாராஜன் அறக்கட்டளை இருவர் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் இந்தப் போட்டியில் பங்கு பெற்ற எழுத்தாள நண்பர்கள் அனைவருக்கும் நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
பரிசு பெறாத மற்ற 270 கதைகளும் தரத்தில் எந்த வகையிலும் குறைந்தவை அல்ல. வேறு பத்திரிக்கைகளுக்கு அனுப்பினால் இவற்றில் பல கதைகள் பிரசுரமாகும். ஏன் , பரிசுகளையும் வெல்லக் கூடும்.
உலகில் நடைபெறும் எல்லாப் போட்டிகளுக்கும் எழுதப்படாத பொது விதி இது.
அதனால் பரிசு கிடைக்காத நண்பர்கள் அதனைப் பொருட்படுத்தாது தொடர்ந்து எழுதி மேலும் பல போட்டிகளில் பங்கு பெற வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
வெற்றியைச் சுடரைவிட பங்களிப்பு என்னும் அகல் விளக்குகளின் பணி மிக முக்கியம்.
தொடர்ந்து பயணிப்போம்.
பரிசு பெற்ற கதைகள்: