பரோல்..!
‘அமெரிக்காவிலே இருக்காங்களே.. ரமா சித்தி.. அவங்களுக்கு மூணு மாதம் பரோல் ஸாங்ஷனாயிருக்காம். ஒரு பதினைந்து நாளுக்கு இந்தியா வரப்போறாங்களாம்’ என்றேன் சந்தோஷமாக மனைவியிடம்.
நான் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்த என் மகள் மிதிலா, ‘என்ன.. பரோலா.. ரமா சித்தியை எதற்கப்பா ஜெயில்லே போட்டிருக்காங்க.. அவங்க அப்படி என்ன தப்பு பண்ணி இருக்காங்க… எத்தனை வருடம் தண்டனை கொடுத்திருக்காங்க…?’ என்று கேட்டாள் கவலையோடு.
நான் சிரித்துக் கொண்டே. ‘இது குற்றவாளிகளுக்கு கொடுக்கற பரோல் இல்லேம்மா… ரமா சித்தி அமெரிக்காவிலே க்ரீன் கார்டு அப்ளை பண்ணி இருக்காங்க இல்லையா… அது ஸாங்ஷன் ஆக ரெண்டு மூணு வருஷம் ஆகலாம்… அதுக்குள்ளே இந்தியாவிற்கு ஏதாவது காரணத்திற்காக வரணும்னா அவங்க அமெரிக்கன் கவர்ன்மென்டிற்கு அப்ளை பண்ணலாம்..
அவங்க பெர்மிஷன் கொடுப்பாங்க… அதைத்தான் ‘பரொல்’’னு சொல்றாங்க.’
என்றேன்.
அவளும் சிறிது சங்கடத்தோடு என் சிரிப்பில் கலந்து கொண்டாள்.
——————————————
கொஞ்சம் சிரித்து வையுங்க பாஸ்…
‘ஏன்பா.. அந்த பையனுக்கும் பெண்ணுக்கும் கல்யாணமாகி ஒருமாதம் தானே ஆகுது…. அதுக்குள்ளே சம்மந்திகள் ரெண்டு பேரும் இப்படி சண்டை போட்டுக்கறாங்க…..!’
‘அதையேன் கேட்கறே… பெண் பார்க்கப் போனபோது ‘பையனுக்கு எவ்வளவு வருமானம்னு’ பையனின் அப்பாவிடம் கேட்டிருக்கிறார் பெண்ணின் அப்பா… ‘மூன்று லட்சம்’னு பையனின் அப்பா சொல்லி இருக்கிறார்.. ‘அடடா நல்ல சம்பளம் ஆச்சே’ன்னு பெண்ணைக் கல்யாணம்
செய்து கொடுத்திட்டார். இப்போ ஸாலரி ஸ்லிப் வந்ததும்தானே தெரியுது அது மாத வருமானம் இல்லே, வருட வருமானம் என்று..!’