பட்ஜெட் 2023 – லதா ரகுநாதன்

 

Budget 2023

Budget 2023: Four steps govt should take to boost employer branding industry

நேற்று என்பது முடிந்த கதை.நாளை என்பது தெரியாத கதை.இன்று என்பது மட்டுமே நிலையானது. இன்று என்பதை விட இந்த நொடி மட்டும் தான் உண்மையானது என்றும் கூறலாம்.ஆனால் நம்மில் பலர் இன்றைய பொழுதை நடக்கப்போகும் நாளைக்காகச் செலவழித்துவிடுகிறோம்.உதாரணம் என் பிள்ளைக்கு வீடு, அவனுக்குப் பிறக்கப்போகும் குழந்தைகளுக்கு நகை ,கல்யாணத்திற்கு சேமிப்பு, படிப்பிற்கு டெபாசிட் என்று நம் தேவைகளை அடக்கிக்கொள்கிறோம்.ஆனால் பட்ஜெட் அதாவது நமது வருடாந்திர நிதி அறிக்கை என்று வரும்போது மட்டும் நாம்.அன்னியனாக வேடமிட்டு நாளைய பொழுதை மறந்தவனாகிறோம்.இந்தக்காரணத்தால் தான் நிதி அறிக்கையில் நாளைய முன்னேற்றத்தை மனதில் கொண்டு என்ன கூறப்பட்டுள்ளது, எந்தத் துறை முன்னேற்றம் கொள்ளும், தொழில் முன்னேற்றம் எந்த வகையில் இருக்கும், சென்ற வருட அறிக்கையில் கூறப்பட்டது எந்த அளவு செயல்படுத்தப்பட்டிருக்கிறது என்பது போன்றவற்றை பற்றி கவலை படாமல் வரிச்சலுகைகளை மட்டுமே கவனத்தில் நிறுத்துகிறோம்.காரணம்….?

என்ன….கமலஹாசன் பேச்சுபோல் இருக்கிறதா? அட, ஒவ்வொருவருடமும் பட்ஜெட் தினத்தன்று நடக்கும் பேன் ஃபேரைப்பற்றித்தான் கூறுகிறேன். மற்ற எந்த நாடுகளிலும் நிதி அறிக்கை சமர்ப்பித்தல் என்பது ஒரு சாதாரண நிகழ்வு.பல நேரங்களில் ஆளும்.கட்சியும் எதிர்க் கட்சியும் மட்டுமே விவாதிக்கும் ஒரு அறிக்கை.ஆனால் இங்கு அப்படியில்லை.காரணம் பல வருடங்களாக நம் நாட்டில் பட்ஜெட்டும் ஒரு மானிட்டரி டூல் லாக  பயன்படுத்தப்படுகிறது. இந்தக்காரணத்தால் தான் ஒவ்வொரு ஆண்டும் சாமானியர்கள் பாதி பீதி பாதி எதிர்பார்ப்பு என்று கலவையாக இந்த தினத்திற்கு காத்திருக்கிறார்கள்.அரசாங்கம் தன் நிதி தேவைக்கு ஏற்றவாறு வரியை ஏற்றுவதும், புது வரியை அமல் படுத்துவதும், சலுகைகளை மாற்றி அமைப்பதும் என்று ஒவ்வொரு தனி மனிதனின் வரவு செலவு கணக்கையும் தலைகீழாக மாற்றிப்போடுகிறார்கள். உதாரணம் Dividend tax. பல வருடங்களாக இதற்குத் தனி வரி விதிக்கப்பட்டதில்லை.காரணம் இதன் மீதான வரியைக் கொடுக்கும் நிறுவனமே செலுத்தவேண்டும். இது சாஸ்வதம் என்று நம்பி பலர் தங்கள் முதலீட்டை பெரும் அளவில் high dividend yielding  பங்குகளில் முடக்கி இருந்தார்கள். ஆனால் சட்டென்று ஒரு பட்ஜெட் அறிக்கையில் அதன்.மேல் வரி விதிக்கப்படும் என்று மாற்றி அமைக்கப்பட்டது. இதனால் dividend தொகையை முழுவதுமாக வரவு வைத்து தங்கள் வீட்டு பட்ஜெட்டை அமைத்திருந்தவர்கள் நிலை தடுமாறி நின்றார்கள்.

இது ஒரு உதாரணம்தான். இதைப்போல் நிறைய நாம் அடுக்கிக்கொண்டே போகலாம். இதை நான் இங்குச் சொல்வதின் நோக்கம், ஒரு நல்ல நிதி அறிக்கை என்பது நாட்டின் முன்னேற்றத்தை மனதில் கொண்டு சுனாமி அலைகளைக் கிளப்பாமல் கப்பலை அதன் இலக்கு நோக்கி அமைதியாக நடத்திச்செல்ல வேண்டும். மாற்றங்கள் அதிகமாக இல்லாமல் இருக்க வேண்டும். ஒவ்வொரு தனி மனிதனும் இந்த அறிக்கைக்குக் காத்திருந்து பின் உடனடியாக தன் வருமான இலக்குகளை, முதலீட்டு முறைகளை, செலவழிக்கும் நிலைகளை ஒவ்வொரு வருடமும் செய்வது வாடிக்கையாகிவிட்டது.இந்த நிலை மாறவேண்டும். அத்தியாவசிய மாறுதல்கள் கூடாது என்று கூறவில்லை. ஆனால் பக்கம்.பக்கமாக வரி மாற்றங்களும் விதி மாற்றங்களும் இல்லாதிருக்கவேண்டும்.

சரி, இப்போது இந்த வருட நிதி அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய விதி மற்றும் வரி மாற்றங்களுக்கு வருவோம்.

2020 ஆண்டு நிதி அறிக்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது புதிய வருமான வரி திட்டம். இந்தத்திட்டத்தின் கீழ் வரி விதிக்கப்படும் விதிகள் சுலபமாக்கப்பட்டன. இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் நான் கூறியுள்ள கருத்தை நோக்கியே இந்த நகர்தல் உள்ளது. சேமிப்பிற்கு விதி விலக்கு, செலவிற்கு விதி விலக்கு என்று இருக்கும்போது தான் மாற்றங்கள் வருவதற்கு நிறைய வாசல்கள் திறந்து கிடக்கின்றன.அப்படி ஏதும் இல்லாமல் இது தான் உன் மொத்த வருமானம் என்றால் இது தான் நீ செலுத்த வேண்டிய வரி என்று கொண்டுவந்தால் வரி செலுத்துபவருக்கும் அது சுலபம் வரி விதிப்பவருக்கும் அது சுலபம். இந்த வருட நிதி அறிக்கையில் இந்த விதி வகிப்பு முறை மேலும் கவர்ச்சிகரமாக மாற்றப்பட்டுள்ளது. அதன்படி இந்த புது வரி முறையின் கீழ் ரூ7 லட்சம் வருட வருமானம் வரை வரி செலுத்தத்தேவையில்லை.

தவிர, இந்த ஆண்டு முதல் மாத சம்பளம்.பெறுபவர் ரூ 50000 standard deduction ம் பெறலாம். ஆக ரூ 7.5 லட்சம் வரை இவர்கள் வரி செலுத்தத்தேவையில்லை.

 

ரூ 5 கோடிக்கு அதிகமான வருமானத்தின் மீது விதிக்கப்படும் Sur charge  37% இருந்து 25% ஆகக் குறைக்கப்பட்டிருக்கிறது.

மாற்றி அமைக்கப்பட்டுள்ள வரி அடுக்குகள் இவை

ரூ 3 லட்சம் வரை           –  வரி எதுவுமில்லை

ரூ3-6 லட்சம் வரை        – 5%

ரூ6-9 லட்சம் வரை.        -10%

ரூ9-12 லட்சம் வரை.      -15%

ரூ12-15 லட்சம் வரை.    -20%

ரூ15 லட்சத்திற்கு மேல்-30%.

மூன்று லட்சம்.வரையில் தான் zero வரி.பின் ஏழு லட்சம் எப்படி வந்தது என்று யோசிப்பவருக்கு, இதுவரை ரூ 5 லட்சம் வரை ரிபேட் என்று இருந்தது தற்போது ரூ.7 லட்சம் வரை என்று அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்கள் அனைத்தும் புது வருமான வரி திட்டத்திற்கு மட்டுமே. பழைய திட்டத்தின் கீழ் மாறுதல் எதுவுமில்லை.தவிர, நாம் வருமான வரி படிவத்தை பூர்த்தி செய்யத்தொடங்கும்போதே அது புது திட்டத்தைத்தான் முதல் ஆப்ஷனாக by default எடுத்துக்கொள்ளும். நாம் பழைய திட்டத்தின் கீழ் வரி செலுத்தப்போகிறோம் என்றால் நாம் அதை மாற்றவேண்டும்.

Budget Graphic 2023 | U.S. Geological Survey

சேமிப்புத்தொடர்பாக கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள்

1.Senior citizen savings scheme திட்டத்தின் கீழ் இதற்கு முன்பாக கொடுக்கப்பட்டிருந்து ரூ 15 லட்சம் உயர் பட்ச சேமிப்பு நிலை இப்போது ரூ 30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

2 Monthly income scheme உயர் பட்ச சேமிப்பு நிலையும் இரட்டிப்பாகப்பட்டு ரூ 9 லட்சம் மற்றும் ஜாயிண்ட் சேமிப்பு கணக்குகளுக்கு ரூ15 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

3.பெண்களுக்கு புதிய சேமிப்பு திட்டமாக Manila Sa!man Saving Certificate அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.திட்டத்தின் கீழ் இரண்டு வருடத்திற்கு 7.5% வட்டி விகிதத்தில் ரூ 2 லட்சம் சேமிக்கலாம்.

வரி விலக்கு மாற்றங்கள்

1.ULIP அல்லாத மற்ற பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ 5 லட்சத்திற்கு மேல் ஒரு வருடத்தில் ப்ரீமியம் தொகை செலுத்தப்பட்டால் அதில் கிடைக்கும் lumpsum தொகைக்கும் மற்றும் போனஸ் தொகைக்கும் வரி விலக்கு நீக்கப்பட்டுள்ளது.

2.வீடு விற்கும்போது அதில் கிடைக்கும் capital gain தொகைக்கு ஈடாக மற்றும் ஒரு சொத்து வாங்கினால் அல்லது கொடுக்கப்பட்டுள்ள சில Bond களில் சேமித்தால் கிடைக்கும் capital gain tax exemption இப்போது உயர்ந்த பட்ச தொகையாக ரூ10 கோடி என்று கூறப்பட்டுள்ளது.இதற்கும் அதிகமாக இருக்கும் தொகைக்கு வரி செலுத்த வேண்டும்

 

செலவுகள் மீதான வரி மாற்றங்கள்.

1.வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் தொகையின் மீதான TDS 5% இருந்து 20% ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.படிப்பு கடன் அல்லது மருத்துவச் செலவிற்காக அனுப்பப்படும் foreign remittances மீது தற்போது விதிக்கப்படும் 0.5% மற்றும் 5% வரி நிலைகள் தொடர்கின்றன.மற்ற.காரணங்கள் உதாரணம் வெளிநாட்டுப்பயணம், பிள்ளைகள் வெளிநாட்டில் தங்குவதற்கு அனுப்பப்படும் தொகை போன்றவை மீது இந்த புதிய வரி விகிதம் விதிக்கப்படும்.

2.Excise duty,GST மற்றும் Customs duty மாற்றத்தினால் இந்தப்பொருட்களின் விலை குறையக்கூடும்- கைப்பேசி,TV.

இந்தப்பொருட்களின் விலையில் ஏற்றம் இருக்கும்- வெள்ளி,சிகரெட்,இமிடேஷன் நகைகள்,தங்கக்கட்டிகள்,வெளிநாட்டுச் சைக்கிள் மற்றும்.பொம்மைகள், வெளிநாட்டுச் சமையலறை chimney, வெளிநாட்டு கார் மற்றும்.எலக்ட்ரானிக் vehicles.

மற்ற மாற்றங்கள்

Resident but not ordinarily resident வகையினருக்கு resident கணக்கிலிருந்து பரிசாகக் கொடுக்கப்படும் தொகை ரூ50000 க்கும் மேல் இருந்தால் அதன் மீது வரி விதிக்கப்படும்.

Jawaharlal Nehru Memorial Fund, Indira Gandhi Memorial Trust மற்றும் Rajiv Gandhi Foundation களுக்கு கொடுக்கப்படும் டொனேஷனுக்கு பிரிவு 80G யின் கீழ் deduction கிடையாது (இதில் உள் குத்து ஏதுமில்லை என்று நம்புவோம்!!).

தனி மனிதர் வருமானத்தைப் பாதிக்கக்கூடிய விதிகள் இவை. ஆனால் அரசாங்கம் எந்தப்பாதையில் வளர்ச்சிக்கான அடுத்த காலை எடுத்து வைத்திருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

Infrastructure development அதாவது உள்கட்டமைப்பு வளர்ச்சிக்குக் கணிசமான தொகையைப் பரிந்துரைத்திருக்கிறது. அதே போல் மாநிலங்களுக்கிடையே ஆன இணைப்பு வசதிகளை அதிகரிக்கும் விதம் ஏர்போர்ட், சாலை மேம்படுத்தல், ரயில் வசதி.மேம்படுத்தல் ஆகியவற்றில் கவனத்தைக்கொண்டு சென்றிருக்கிறது. இதே போன்ற முயற்சி வரும் ஆண்டுகளிலும் தொடருமேயானால், இந்தியாவின் முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது.

இதற்கு உதவும் விதம் green hydrogen மற்றும் energy transmission உதவும் விதம் நடவடிக்கைகள் எடுக்கப்போவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவை அனைத்தும் செயல்.படுத்தப்பட்டால் எண்ணெய்க்காக நாம்.மற்ற நாடுகளிடம் தொங்க வேண்டாம்.

இங்கு நாம் கவனிக்க வேண்டியது “இவை அனைத்தும் செயல்முறைப் படுத்தப்பட்டால்’ . காரணம் இதற்கு சில ஆண்டுகளுக்கு முன் Make in India என்று ஏகத்துக்குப் பேசப்பட்டது. பின்னர் privatisation. அடுத்து Bank merger and privatisation.இப்படி ஒவ்வொரு நிதி அறிக்கையிலும் நம் எதிர்பார்ப்பைத் தூண்டும் விதம் அரசாங்கத்தின் எண்ணம் கூறப்படுகிறது.ஆனால் அதை அடைந்துவிட்டோம் அல்லது அடையும் பாதையில் நடந்து கொண்டிருக்கிறோமா அல்லது அவை கடப்பில் போடப்பட்டு விட்டதா என்பது புரியவில்லை. ஏனென்றால் கூறப்படும் கருத்திற்கு ஒரு follow on அடுத்த வருட நிதி அறிக்கையில் இல்லாமல் போகிறது.

நிதி அறிக்கை சமர்ப்பிக்கும்போது, அரசாங்கத்தின் 5 year plan திட்டத்தை முன்னிறுத்தி, அதை நோக்கி ஒவ்வொரு ஆண்டும் என்ன செய்யப்பட்டது, திட்டம் எந்த நிலையில் உள்ளது, அதை ஐந்தாண்டில் சாதித்து முடிக்க முடியுமா என்பதையும் ஒரு சின்ன slide ஆக இணைத்தால் நம்மால் எளிதாகப் புரிந்து கொள்ள இயலும்.

செய்வார்களா…?

 

லதா ரகுநாதன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.