சாட் ஜிபிடி வந்த பிறகு நமது மூளையை உபயோகத்தில் வைத்துக்கொள்ள சில மூளைப் பயிற்சி தேவைப்படுகிறது.
பிரைன் ஜிம் (BRAIN GYM) என்று சொல்வார்களே அதுதான் இது !
சுடோகு, விடுகதை, கிராஸ்வேர்ட் , அப்ஜெக்டிவ் டைப் டெஸ்ட் போன்றவை இதற்கு உதவும்.
டெமென்ஷியா, அல்சிமர் போன்ற வியாதி வராமல் தடுக்க 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தினமும் கண்டிப்பாக பத்து நிமிடம் பிரைன் ஜிம் செய்ய வேண்டும்
இனி குவிகத்தில் குறுக்கெழுத்துப் போட்டியுடன் மூளைப் பயிற்சியும் வரும்.
இந்தப் போட்டிக்கு சாட் ஜிபிடி , கூகிள் என்று எதற்கும் போக வேண்டாம். இந்த மாதக் குவிகம் இதழைச் சற்றுப் புரட்டிப் பார்த்தாலே போதும். கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.
இந்த மூளைப் பயிற்சிக்கு பரிசு இருந்தால் சிறப்பு அல்லவா ?
பிடியுங்கள் பரிசு ரூபாய் 100 ( குலுக்கல் முறையில் ஒருவருக்கு)
நீங்கள் செய்ய வேண்டியது ஒவ்வொரு கேள்விக்கும் சரி என்றால் 1 என்றும் தவறு என்றால் 0 என்றும் குறித்துக்கொள்ளவேண்டும். 9 கேள்விக்கான விடையை ஜாக் பாட் எண் போல BINARY வடிவில் எழுதி குவிகத்திற்கு அனுப்பவேண்டும். ( உதாரணமாக – 001001110 ).
குறுக்கெழுத்து விடை எழுதி அனுப்பும் மின்னஞ்சலில் உள்ள கமெண்ட்ஸில்தான் இந்த ஒன்பது இலக்க எண்ணை எழுதி அனுப்பவேண்டும்!!
தயாரா?
மூளைப்பயிற்சி -1
எல்லாக் கேள்விகளும் இம்மாத (ஏப்ரல் 23) குவிகம் பற்றியதே !
சரி என்றால் 1 தவறு என்றால் 0
- குறுக்கெழுத்தில் சரியான விடை எழுதியவர்களில் பத்து பேர் பெண்கள் மூன்று பேர் ஆண்கள்
- சங்கப் பாடல் வரிசையில் வளவதுரையன் அறிமுகப்படுத்தும் இலக்கியம் சீவகசிந்தாமணி
- சின்மய சுந்தரனின் கடவுளின் மரபணுக் கூடம் புத்தகத்திற்கு வாழ்த்துரை வழங்கியவர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன்
- சிறகு ரவிச்சந்திரன் எழுதும் திரைக்கதம்பத்தில் விடுதலை படத்தின் கதாநாயகன் சூரி என்று சொல்கிறார்
- தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் நாகேஷ் வேடத்திற்கு நடிக்க ஆசைப்பட்டவர் சோ
- ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் பத்திரிகை ஆசிரியர் குழுவில் “அண்ணா” இருந்தார்
- மாலதி சுவாமிநாதனின் மனநலக் கட்டுரையில் இந்த மாதம் பேசப்படும் வியாதி டெமென்ஷியா
- வ வே சு வின் இடம் பொருள் இலக்கியம் கட்டுரையில் இந்த மாதம் விளக்கமாகக் கூறி இருப்பது கல்கியின் சிவகாமியின் சபதம் பற்றி
- குவிகம் ஏப்ரல் அட்டைப்படத்தில் உள்ள தின வழிபாடு புத்தகத்தை தொகுத்தவர்கள் இருவர்
நீங்கள் அனுப்பவேண்டியது 0 , 1 மட்டும் இருக்கும் 9 இலக்க எண் மட்டுமே!
இனி, குறுக்கெழுத்துப் போட்டிக்குச் செல்லலாம் !
குவிகம் குறுக்கெழுத்துப் போட்டி ( ஏப்ரல் 2023 )
லிங்க் இதோ:
https://beta.puthirmayam.com/crossword/525B6C1F77
உங்கள் விடையை 19 ஆம் தேதிக்குள் அனுப்பிவிடுங்கள். சரியான விடை எழுதியவர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவருக்கு ரூபாய் 100 பரிசு வழங்கப்படும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மார்ச் 23 குறுக்கெழுத்துப் போட்டியில் கலந்து கொண்டவர் : 20 பேர்
சரியான விடை எழுதியவர்கள்: 13 பேர்
1. ஜனா 2. ஜானகி ஸ்ரீநிவாசன் 3. ரேவதி பாலு 4. சாந்தி ராசவாதி 5. உஷா ராமசுந்தர் 6. ரேவதி ராமச்சந்திரன் 7. ஜெயா ஸ்ரீராம் 8. ஜானகி சாய் 9. நாகேந்திர பாரதி 10. துரை தனபாலன் 11. மனோகர் 12. கமலா முரளி 13. இந்திரா ராமநாதன்
<——– சரியான விடை
கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி !
சரியான விடை எழுதியவர்களுக்குப் பாராட்டுதல்கள் !!
குலுக்கலில் வெற்றி பெற்று 100 ரூபாய் பரிசு பெறுபவர் : ரேவதி பாலு
வாழ்த்துகள்!!!
மூளைப்பயிற்சி 101 101 101
LikeLike
மூளைப் பயிற்சி 101 101 101
LikeLike