ஆசிரியர்: சேக்கிழார் அடிப்பொடி
டி. என். இராமச்சந்திரன்
வெளியீடு: சந்தியா பதிப்பகம்
கே.கே.நகர், சென்னை 600 083.
Phone: 044- 24896979
பக்கங்கள்: 340 விலை: ரூ 350
மகாகவி சி. சுப்பிரமணிய பாரதியின் படைப்பாற்றலை வியந்து வியந்து அதை மேல்நாட்டுக் கவிஞர்கள் கீட்ஸ், ஷெல்லி, மில்டன்போன்றோர்களுடன் ஒப்பு நோக்கி சேக்கிழார் அடிப்பொடி டி. என். இராமச்சந்திரன் அவர்கள் மகாகவியின் கவிதை உலகம், அவரின் சீற்றமும், சிரிப்பும் என்று தேன் சொட்டச் சொட்ட அறிவுக்குத் தீனியாக எழுதிய பதினான்கு அற்புதமான கட்டுரைகள் கொண்ட தொகுப்புதான் இந்த நூல்.முதல் பதிப்பு 2000ஆம் ஆண்டில் வந்ததை சந்தியா பதிப்பகம் தனது முதற்பதிப்பாக 2023ஆம் ஆண்டில் வெளிட்டிருப்பது வாசகர்களின் பேறு என்றுதான் சொல்லுவேன்.
ஒவ்வொரு தமிழனும் படித்தறிந்து கொள்ள வேண்டிய கருத்துப் பெட்டகம் இப்புத்தகம். பள்ளிகளும், கல்லூரிகளும் இந்த அரிய நூலை வாங்கித் தங்களது நூலகத்தில் வைக்க வேண்டும். கருத்துப்பிழை, அச்சுப் பிழை யில்லாத இதுபோன்ற நூல்களை தமிழக அரசும் வாங்கி ஆதரவு தருவதன் மூலம் பதிப்பகத்தார்களுக்குச் சிறந்த நூல்களைத்தான் தாங்கள் வெளிட வேண்டும் என்ற ஊக்கம் ஊறும்.
(மாபெரும் உரையாடல்)
ஆசிரியர்: ஹரி கிருஷ்ணன்வெளியீடு: சுவாசம் பதிப்பகம்
பக்கங்கள்: 480 விலை: ரூ 550


மகாபாரதம் ஒரு சமுத்திரம். அதன் ஆழ, அகலங்களை முற்றும் அளந்தறிந்தவர்கள் ஒருவரும் இருக்க முடியாது. அந்த மாபெரும் சமுத்திரத்தில் முத்தெடுக்கும் ஆர்வத்தில் மூழ்கித் துழாவி சிலமுத்துக்களோடு கரை சேர்ந்தவர்கள் சிலருண்டு. அந்தச் சிலரில் ஒருவர் ஹரி கிருஷ்ணன் அவர்கள். “தென்றல்” மின்நூலில் மகாபாரதம் குறித்துத் தொடர்ந்து எழுதி வருகிறார். அதன் முதல் தொகுப்புதான் இந்த நூல். இதில் முத்தான 103 முத்தான கட்டுரைகள் உள்ளன. அத்தனையும் அமுத ஊற்று. வாசகர்களின் நழுவிப் போன பல கேள்விகளுக்கு இதில் ஓரளவு பதில் நிச்சயம் கிடைக்கும். குறிப்பாக இளைஞர்கள், மாணவ, மாணவியருக்கு இந்நூல் பொக்கிஷம்.
அச்சுப்பிழை யில்லாத தரமான அழகான பதிப்புக்கு ஸ்ரீ கிருஷ்ணரின் முகப்போவியம் பாதாம் பாலில் குங்குமப்பூ.