திருவண்ணாமலையில் நேரடி நிகழ்வான கதை கேட்க வாங்க – 14 நிகழ்வில் அசோகமித்ரன் கதைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கதையை சிறந்த கதைசொல்லி எழுத்தாளர் பவா செல்லதுரை சொல்ல கேட்போம் வாருங்கள்..
( மே 6ந் தேதி வெளியிடப்பட்டது )
நன்றி ஸ்ருதி டிவி
திருவண்ணாமலையில் நேரடி நிகழ்வான கதை கேட்க வாங்க – 14 நிகழ்வில் அசோகமித்ரன் கதைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கதையை சிறந்த கதைசொல்லி எழுத்தாளர் பவா செல்லதுரை சொல்ல கேட்போம் வாருங்கள்..
( மே 6ந் தேதி வெளியிடப்பட்டது )
நன்றி ஸ்ருதி டிவி
தமிழ் சினிமாவில இன்னிக்கு ட்ரெண்ட் பேய்ப்படம்.
அந்தக்காலத்து “யார் நீ” யிலிருந்து நேத்திக்கு வந்த “மரகத நாணயம் ” வரை தமிழ் நாட்டில் பேய்ப் படத்துக்குப் பஞ்சமேயில்லை.
இந்த ட்ரெண்ட் குறும்படத்திலும் தொத்திக்கிட்டது.
இந்தப் படத்தைப் பாருங்க. ஹாலிவுட் ரேஞ்சுக்குக் குறும்படம் எடுத்திருக்காங்க !
தமிழ் எழுத்தாளர்களுக்கு ஜெயராஜ் அவர்கள் கூறும் அறிவுரை –
சும்மா சொல்லக்கூடாது ! நெத்தியடி!
என்ன ஆணித்தரமான பேச்சு !
இதை அனைவரும் கட்டாயம் கேட்க வேண்டும் ! மனதில் பதியும் வரை கேட்க வேண்டும் ! கேட்டபின் நிற்க அதற்குத் தக !
ஓர் அமெரிக்கர் இந்தியாவில் வந்து பல தமிழ்த் திரைப்படங்களை இயக்கினார் என்பது எவ்வளவு வியப்பாக இருக்கிறது?
அதுவும் இவர் தான் எம். ஜி. ராமச்சந்திரன், டி. எஸ். பாலையா, என். எஸ். கிருஷ்ணன் ஆகிய நடிகர்களை அறிமுகப்படுத்தினார் என்றால் இன்னும் எவ்வளவு ஆச்சரியமாக இருக்கிறது?
எம்ஜியாருக்குத் தாடையில் ஒரு பள்ளம் இருப்பதால் அவர் கதாநாயகராக நடிக்கத் தகுதியானவர் இல்லை என்று மறுத்த டைரக்டர் அவர். முடிவில் தாடையில் ஒரு ஒட்டுத் தாடியுடன் நடிப்பதை ஒப்புக் கொண்ட டைரக்டர் அவர் ( படம் மந்திரி குமாரி)
அந்தக்கால சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதரை இயக்கியவர்.
காற்றினிலே வரும் கீதம் பாடலைப் பாடிய எம் எஸ் சுப்பலக்ஷ்மியின் மீரா படத்தை இயக்கியவர் அவர்.
அவர் தான் எல்லிஸ் டங்கன் என்ற அமெரிக்கர் . அவர் இயக்கிய படங்கள்:
நந்தனார் (1935) – சில காட்சிகள் மட்டும்
சதிலீலாவதி (1936)
சீமந்தினி (1936)
இரு சகோதரர்கள் (1936)
அம்பிகாபதி (1937)
சூர்யபுத்ரி (1940)
சகுந்தலா (1940)
காளமேகம் (1940)
தாசிப் பெண் (1943)
வால்மீகி (1945)
ரிடர்னிங் சோல்ஜர் (1945)
மீரா (1945)
பொன்முடி (1950)
மந்திரி குமாரி (1950)
அவரைப் பற்றி எடுத்த ஒரு ஆவணப் படத்தை ( சற்று நீண்ட படம்தான் ) பார்த்து ரசியுங்கள். தமிழ்த் திரைப்படச் சரித்திரத்தில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு நிச்சயமாக இது பிடிக்கும்!!
இது ஒரு ஆங்கிலக் குறும் படம். ஆனால் இது சொல்லும் பாடம் நம் அனைவருக்கும் பொருந்தும்.
நாம் குழந்தைகளை எப்படிப் பாதுகாக்கப் போகிறோம் ?
………..திகில் விஞ்ஞானக் கதை
கிரிக்கெட்டில் செஞ்சுரி போடும் டெண்டுல்கர், விராட் கோலி பற்றி நாம் எவ்வளவு பெருமைப்படுகிறோம்.
ஆனால் இவரது செஞ்சுரியைப் பாருங்கள். இதைப் பார்த்தபின் நாமும் ஏதாவது செய்யவேண்டும் என்று தோன்றினால் இந்தப் படத்தை எடுத்தவருக்கு மட்டுமல்ல நமது சமூகத்துக்கும் வெற்றி!
படம் சுலபமான ஹிந்தியில் உள்ளது!
மணிரத்னம் 40% , பாரதிராஜா 20%, பாலச்சந்தர் 40% சேர்ந்து ஒரு குறும்படம் எடுத்திருந்தால் அது இப்படித்தான் இருக்கும் என்பது என் கணிப்பு!
அருமையான கதை , நடிப்பு, வசனம், எடிட்டிங் .
ஒரு முழுப் படத்தைப் பார்த்த எண்ணம் நமக்கு உண்டாகிறது.
பார்த்து விட்டு உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள் !!
ஒகே காதல் கண்மணியில் ‘கணபதி கணபதி’ என்று அழைத்துக் கொண்டு வரும் பிரகாஷ் ராஜின் மனைவியை ( லீலா சாம்ஸன்) அவ்வளவு சுலபமாக நாம் மறக்க முடியுமா?
அந்தப் பாட்டுகுருவிற்கு வந்தது ஞாபகமறதி வியாதி !
அதைப்போல வயதானவர்களுக்கு வரும் ஞாபக மறதி வியாதியைப் பற்றிய உணர்வு பூரணமான ஒரு குறும்படம்.
இந்த வியாதி நம் பெற்றோர் மற்றும் உறவினர் நண்பர்களுக்கு வந்திருக்கிறது என்பது தெரியாமல் அவர்களை நாம் எப்படிக் கேவலமாக நினைக்கிறோம் என்பதைச் சொல்லும் காவியம்.
இது குறும்படம் அல்ல. பெரும் பாடம்!
இதைப் பார்க்கும் போது கண்ணதாசனின்
“கை இரண்டினை உடல் கட்டி விட்டதன் காரணம் மெய் இரண்டினை சுகம் மீள வைப்பது தானரோ!”
என்ற கவிதை வரிகள் ஞாபகம் வருகிறது !
கைகளை வைத்துக் கொண்டு பேனா பேப்பர் இல்லாமல் நிழலில் கவிதை படைக்கிறார்.
உங்களைத் தூங்கவைத்து, விழிக்கவைத்து, மயக்கிய அந்தக் கால தடங்கலுக்கு வருந்திய (T V ) நிகழ்வுகள்!
மால்குடி நாட்கள்
ஆர் கே லக்ஷ்மணின் கார்ட்டூனுடன் வரும் ஆர். கே நாராயணனின் ” மால்குடி டேஸ் ” – பார்ப்பது ஒரு சுகானுபவம். இந்த எபிசோடைப் பாருங்கள் !
தேசபக்திக்குப் புது விளக்கம் கொடுத்த பாடல் !
ஒரு கலக்கல் பாடல்! கேளுங்கள் ! நிச்சயம் ரசிப்பீக !!
இது ஒரு வித்தியாசமான கொலு விளையாட்டு !
குவிகத்தின் ஆலோசகர் அர்ஜூன் & அனன்யா தங்கள் சான்ஃபிரான்சிஸ்கோ நகர் இல்லத்தில் அமைத்த ‘மிகை யதார்த்த ( AUGMENTED REALITY ) கிராஃபிக் கொலு.’
ஒரு புதுமையான தேடல்! பார்த்து ரசியுங்கள்!
விருட்சம் 100வது இதழ் வெளியீடு.
அருமையாகக் கதை சொல்கிறார்கள்! கேட்போமா?
பிரிவைக் கொண்டாடும் சங்க இலக்கியக் கவிதைகள் என்ற தலைப்பில் எஸ். ராமகிருஷ்ணன் உரை
நன்றி ஸ்ருதி டி வி
அழகான நவராத்திரி.
தயாரித்த திருமதி ரஞ்சனி ராஜாராமனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
ஈஸோ என்ற இத்தாலி ஏரியில் நடக்கலாம் வாருங்கள்!
இதற்கு விளக்கம் தேவையா என்ன?
திரு எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் கதை வசனத்தில் உருவான குறும்படம் கர்ண மோட்சம் .
இதை இந்த மாதக் குறும்படமாக வெளியிடுகிறது குவிகம் .
(நன்றி யூடுயூப்)
கருணாகரன் நடிக்கும் நலனின் இந்தக் குறும் படத்தைப் பாருங்கள்!
குறும்படம் எடுப்பதைப் பற்றியே ஒரு குறும்படமா?
நல்லாவே இருக்கு !
செம கிண்டல் ! ஸோ ஸார்ரி … சூப்பர் !
விஜய் சேதுபதியும் கார்த்திக் சுப்புராஜும் பீட்ஸா படத்தில் பட்டையைக் கிளப்பியிருப்பாங்க !
இப்போது அதே காம்பினேஷனில் ‘காதல் கடந்து போகும்’ என்ற படம் வந்துள்ளது!
முதல் முதல்ல அவர்களின் குறும்படம் எப்படி இருந்தது தெரியுமா?
பார்த்து ரசியுங்கள் ” துரு “
சைனா டீ என்ற குறும்படம். ஒரு கலக்கல் காமெடி. சூடான நடிப்பு . வாசனையுள்ள கதாபாத்திரங்கள். கிளாசைக் கலக்கிக் குடிச்சா அப்படியே கிளாசிக். செம கிக். கட்டிங் போட ரெடின்னா குறும்படம் பாருங்க!
இன்றைய காமெடிப் பேய்ப் படங்களுக்கு இந்த பூதம் ஒரு முன்னோடி என்று சொல்லலாம்.
தங்கச்சியின் புதுக்கணவன் மச்சான் செத்துவிடுவான் என்று பூதம் சொன்னதை நம்பி ஹீரோ படும் பாடு இருக்கிறதே !
ஜாலியான காமெடி !