கலப்படம் – அவிச்சது இல்ல -சுட்டது

Image result for ஜோக் படங்கள்

 என்னடா நடக்குதிங்கே?

மதியம் ஜூஸ் குடிக்கக் கடைக்கு போனா கடையில, மேஜை_காலி_இல்ல.. எல்லாம் காதல் ஜோடிங்க ..நான் தனியா வேற போயிருந்தேன்.. என்னடா பன்னலாம்னு யோசிச்சேன் ..
போன எடுத்து காதுல வச்சிட்டு ..சத்தமா..

#மச்சி_உன்_ஆளு_யார்கூடவோ_இங்க_ஜூஸ்_குடிக்குதுடா_ அப்படின்னேன்… அவ்ளோதான் #அஞ்சி_டேபிள் காலி #
ஹாயா உட்கார்ந்து ஜூஸ் குடிச்சிட்டு வந்துட்டேன் …

என்னா_வெயிலு…
((((((((((((((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))) 
 
Related image

சங்க காலத்திலேயே எழுதப்பட்ட கணக்கதிகாரம் என்ற நூலில் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையை அறிந்துகொள்ளும் வழிமுறை மிக எளிமையாகக் கூறப்பட்டுள்ளது.

“பலாவின் சுளையறிய வேண்டுதிலேல் ஆல்கு
சிறுமுள்ளுக் காம்பரு எண்ணி – வருவதை
ஆறிற் பெருக்கியே ஐந்தனுக் கீந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுளை.”
– கணக்கதிகாரம்-

விளக்கம் :
பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் உள்ள சிறு முட்களை எண்ணி ஆறாலே பெருக்கி ஐந்தால் வகுக்க பலாப்பழத்தினுள் உள்ள சுளைகளின் எண்ணிக்கையை அறியலாம் !

இது எப்படியிருக்கு? 

(((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))))))))))

Related image

பிரபல பொருளாதார நிபுணர் ரயிலில் போகும்போது பக்கத்தில் இருந்த  கல்லூரிப் பெண்ணிடம் பேசிக்கொண்டு வந்தார். 

“நீங்க என்ன பண்ணறீங்க ” என்று கேட்டாள்  அவள். 

” நானா? இந்தியப் பொருளாதாரத்தைப் படித்துக் கொண்டிருக்கிறேன் ” என்றார் அவர்.

அந்தப் பெண் உடனே ” நான் போன வருஷமே அதைப் பாஸ் செய்துவிட்டேன்”  

(((((((((((((((((((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))))))))))

Related image

விடுமுறைக்கு சித்தி வீட்டுக்குச் சென்றிருந்த குட்டிப்பெண் கேட்டாள்: 

சித்தி ! நான் பிரிட்ஜிலிருந்த மாம்பழத்தை சாப்பிட்டுக்கவா? 

சாப்பிட்டுக்கோம்மா! 

ரொம்ப தேங்க்ஸ் சித்தி

இதுக்கெல்லாம் எதுக்கு தேங்க்ஸ் சொல்லறே? பசிக்குதா கண்ணு ? 

இல்லை சித்தி! நான் ஏற்கனவே அதைச் சாப்பிட்டுட்டேன் 

((((((((((((((((((((((((((((((((((((((((  )))))))))))))))))))))))))))))))))))))))))))

Related image

டாக்டர் ! போன தடவை நீங்க எழுதிக் கொடுத்த மருந்தச் சாப்பிட்டதும் வயித்து வலி சரியாப் போயிடுச்சு ! ரொம்ப தேங்க்ஸ் !”

போன தடவை நான் மருந்தே தரலையே! பேனா  சரியா எழுதுதான்னு கிறுக்கிப் பார்த்ததை எடுத்துக்கிட்டுப் போயிட்டியா? “

(((((((((((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

Image result for ஜோக் படங்கள்

ஒரு பேரிளம்பெண்ணுக்கு வயது 42. ஆனால் 24 வயது மாதிரி தன்னை நினைத்துக் கொள்வாள். அது மாதிரி உடை அணிவாள். வெளியில் போகும்போதெல்லாம் கடைக்காரர்களிடம் தனக்கு என்ன வயது என்று கேட்பாள். அவர்கள் 25 27 28 என்றே சொல்வார்கள். இல்லை எனக்கு 42 என்று பெருமையாகச் சொல்லுவாள். 

ஒருமுறை பஸ் ஸ்டாப்பில் நின்ற கிழவரிடம் ” எனக்கு என்ன வயதிருக்கும்?” என்று கேட்டாள். அவர் கொஞ்சம் யோசித்துவிட்டு, ” நான் உன்னை முத்தமிட்டால்  சரியான வயசைச் சொல்லிவிடுவேன். அது என் ஸ்பெஷாலிட்டி!” என்றார்.

அவள் கொஞ்சம் ஆடிப் போனாலும்  ‘சரி, டெஸ்ட் பண்ணலாம்’   என்று ஒகே  என்று சொன்னாள். கிழவரும் அவளை முத்தமிட்டுவிட்டு ” உனக்கு வயது 42 ” என்று சொன்னார். ஆடிப் போய் விட்டாள். ” எப்படிக் கண்டுபிடித்தீங்க! அந்த ரகசியத்தை எனக்குச் சொல்லிக் கொடுங்க” என்றாள்.

கிழவரும்  ” ஒண்ணுமில்லே! நேத்து கடைக்காரன்கிட்டே நீ கேட்டுக்கிட்டு இருந்தபோது நானும் அங்கே சாமான் வாங்கிக்கிட்டிருந்தேன் ” என்றார். 

(((((((((((((((((((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

 

 

500-1000 சில உரையாடல்கள் – தரும . இராசேந்திரன்

%e0%ae%9c%e0%af%8b%e0%ae%95%e0%af%8d1

பேருந்து நிலையத்தில் இருவர்

ஏற்கனவே பஸ்ல சில்லறை கொடுக்கமாட்டாங்க ….இப்ப டிக்கெட்டே கொடுக்கமாட்டாங்க …

பிரெஸ்டிஜ் பத்மநாபன் :
 அடியேய் ….ஏற்கனவே atm லே 20000 பணம் எடுத்தாந்து   கொடுத்தா  20ம்  தேதி வந்தா முழிப்பே…இனிமே முதல் தேதியிலிருந்தே  முழிக்க வேண்டியதுதாண்டி …
atm லேருந்து அடுத்தவாரம் பணம் எடுத்து தாரேண்டின்னு சொன்னா  இவ கேக்கல ..இப்ப 1000…500..கையில வச்சுண்டு ..அல்லாடுறா …
கவுண்டமணி …செந்தில்பற்றி…காமெடி
பதுக்கறத 100 . 50 ன்னு  பதுக்குடான்னேன்…கேட்டானா ..இப்ப  எப்புடி முழிக்கிறான் பாரு ?…
சிங்கம் 1
கூட்டத்தை தெரு வரைக்கும் சினிமாக்கொட்டயில …ரேஷன் கடையில …டாஸ்மாக் கடையிலே  பாத்திருப்பே…இப்புடி பேங்கல  பாத்திருக்கியா …
பாத்திருக்கியா ..500டா …1000டா …
சினிமா …சினிமா ..
500 வித்த டிக்கெட்  இனி 100 ஆஹா ..
பிச்சைக்காரன்
ஏன்யா..நான்தான்  500…1000.தை  செல்லாதாக்கினேன் ..100 பிச்சை கேட்டா 1000 போடுரியே ..என்கிட்டயேவா …
தங்க மார்க்கெட்  [500…1000..பாதுகாப்பாக வந்து சேர்ந்தது…தங்கம் விலையும்
உயர்ந்தது ..}
நான் நிரந்தரமாவன் ..அழிவதில்லை ..எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை..
கோடீஸ்வரன் ஸ்டோர்
அதிரடி ஆபர் …
1000 க்கு  சில்லறை கொடுப்பவருக்கு  ரெண்டு 1000 கொடுக்கப்படும் …
பாத யாத்திரை :
என்ன எல்லாம் கூட்டமா நடந்து எங்கே பாத யாத்திரை போறாங்க  ?..
அட  நீங்க ஒன்னு ..அப்பிடியே எங்காவது சில்லறை மாத்த முடியுமான்னு
போய்கிட்டே இருக்காங்க …
மெகா exchange ..one  day ஒன்லி
கிவ் 400 கெட் 500
கிவ் 800 கெட் 1000
veg பாயிண்ட் ஒன் டே  ஒன்லி
400 vegetables  ஒன்லி 500
800 vegetables  ஒன்லி 1000
அப்பா …
அப்போ..2000
எப்ப செல்லாம போகும் …?
அப்புடியெல்லாம்  கேக்கப்படாது..தெரியுதா…?
அப்டின்னா  எனக்கு இனிமே கிப்ட் 50 கொடு போதும் ..என்ன ..?

காபி – சுக்லாம்பரதரம்

Image result for ganesha drinking coffee Image result for degree filter coffee

( கருத்து – புலவர் வயித்தியலிங்கன் அவர்கள்)

விநாயகர் துதி 

சுக்லாம்பரதரம் – வெண்மையான ஆடையை அணிந்தவர்

விஷ்ணும் – எல்லா இடத்திலும் வியாபித்திருப்பவர் 

சசிவர்ணம் – சந்திரனைப் போன்ற நிறம் கொண்டவர்

சதுர்புஜம் – நான்கு கைகளை உடையவர்

ப்ரசன்ன வதனம் – மகிழ்ச்சி ததும்பும் அழகிய திருமுகத்தை உடையவர்

த்யாயேத் – தியானிக்கிறேன்

சர்வ விக்ன உபசாந்தயே – எல்லா தடைகளும் நீங்கட்டும்

காபி 

சுக்லாம்பரதரம்  –  வெண்மையான ஆடை  உடைய பாலில்

விஷ்ணும் – எல்லா இடத்திலும் வியாபித்திருப்பது 

சசிவர்ணம் – டிகாக்ஷன் கலந்ததும் காபி சசிவர்ணமாகிறது – சந்திரன் நிறம் – பொன்னிறம்

சதுர்புஜம் – சூடான காபியை போட்டுத்தர இருகரங்கள் – (மனைவி?)  + அதை ஆற்றிக் குடிக்க இரு கரங்கள்

ப்ரசன்ன வதனம் – குடித்த பின் ஏற்படும் மகிழ்ச்சியான திருமுகம்

த்யாயேத் – (காபியே)  உன்னை தியானிக்கிறேன்

சர்வ விக்ன உபசாந்தயே – அன்றைய நாள் எல்லா தடைகளும் நீங்கி சுலபமாக கழியட்டும்!

நாலைந்து வருடத்திற்கு முன்னால் அவ்வையார் அதியமானைத் தேடி தர்மபுரிப் பக்கம் போனபோது வழியில் ஒரு கையேந்திபவனில் கும்பகோணம் டிகிரிக்  காப்பி குடித்துவிட்டுப் பாடிய பாட்டு இது!

பாலும் வெந்நீரும் டிகாக்ஷனும் சர்க்கரையும்   இவை  

நாலும் கலந்துனக்கு நான் தருவேன் –   அருமையான

காப்பி என்ற அமிர்தத்தைக் குடித்தபின் நீயெனக்கு

ஹேப்பிஎன்ற சொல்லைத்  தா. 

( இது நம்மோட அதிகப் பிரசங்கித்தனம் )

கொஞ்சம் சிரித்து வையுங்க பாஸ் -சிவமால்

 

டேய் நேத்திக்கு நான் பெண் பார்க்கப் போனேனே..
அந்தப் பெண்ணுக்கு என்னைப் பார்த்ததும் பரவ-
சத்தில் வாயெல்லாம் பல்…

‘பின் ஏண்டா.. அவளை வேண்டாம்னு ரிஜக்ட்
பண்ணினே !’

‘அடப் போடா.. அவ வாயிலே முப்பத்திரண்டில்லே
அறுபத்து நாலு பல்….’

!!!!

சுட்ட வடை – நெட்டிலிருந்து

pic11

நாளைக்கு சினிமாக்கு போறேன். வரியாடா?

முடிஞ்சா வரேன்.

முடிஞ்ச பின்னாடி எதுக்குடா வர? ஆரம்பிக்கும் போதே வந்துடு.

 

எதுக்கு மேனேஜர் உன்னை திட்டினார்?

மேனேஜரோட நாயைக் காணோம்னு பேப்பர்ல அட்வர்டைஸ்மென்ட் கொடுக்கச் சொன்னார்.. நான் ‘ மேனேஜர் நாயைக் காணோம்’னு அட்வர்டைஸ்மென்ட் கொடுத்துட்டேன்..! .

images

‘என்னங்க, குத்துக் கல்லாட்டம் நான் இருக்கேன் ,அங்கே என்னா பார்வை வேண்டிக்கிடக்கு ?”

”சிலையை ரசிக்கிறேன் ,குத்துக்கல்லை என்ன பண்றது ?”

 

5 வயசுல “மதர்” சொல்றதை கேட்கணும்….
25 வயசுல “பிகர்” சொல்றதை கேட்கணும்…
45 வயசுல “சுகர்” சொல்றதை கேட்கணும்….
“இது தான் ஆண்களுக்கு வாழ்க்கையின் விதி

 

கும்பிடும் வரை கடவுள்;
திருட்டுப் போனால் சிலை !

 

கோயில்ல எதுக்கு நடிகர் அஜித்தோட கதையை புத்தகமா விக்கிறிங்க?
யோவ் அது “தல”புராணம்யா.. நீ நினைக்கிற தல” இல்லை.

 

.பேங்கில ஒரு கிராமவாசி  கடன் வாங்க வந்தார். மேனேஜர் ,  உங்கள் சொத்துக்களை அடமானம் வைத்தால் தான் லோன் கிடைக்கும் என்றார்.   சரி என்று நிலத்தைக் கொடுத்து கடன் வாங்கிச் சென்றார். 

கொஞ்ச வருடம் கழித்துக் கடனைக் கட்டிவிட்டுத் தன்னிடம் நிறைய பணம் இருப்பதாகக் கூறினார் அந்தக் கிராமவாசி.  மேனேஜர் தன்னுடைய  வங்கியில் டெபாசிட் பண்ணுமாறு  கேட்டார். பதிலுக்கு அவர் “அடமானமா நீங்க உங்க வங்கியின் சொத்தைக் கொடுங்க ” என்றார்.

 

கொடுத்து வச்சவங்க டெல்லி முழுவதும் வைஃப் இலவசமாமே.?

உன் தலையில இடி விழ.! அது வைஃப் இல்ல வைஃபை..!

kangaru-aadil-ahmed-siddiqui

எங்க மேனேஜர் கங்காரு மாதிரி

ஏன் ,  தாவிக்கிட்டே இருப்பாரா?

இல்லை எப்பவும்  ஒரு குட்டியோட தான்  இருப்பார்.