மீனங்காடி – தொடர் – மூன்றாவது அத்தியாயம்

                           மூன்றாம் மாடி

 image

வேலையில் சேர்ந்த உடனே அந்த டிபார்ட்மெண்டின் தன்மை என்ன -மற்றும் வேலை செய்பவர் யார் யார் என்று தெரிந்து கொண்டாள்.  இதற்கே ஒரு மாதம் பிடித்தது. அங்கு வேலை செய்யும் சிலரின் நடவடிக்கைகளைப் பார்த்தாலே ‘ சாவு கிராக்கி’ ‘குப்பைத் தொட்டி’ என்பது சரியான பெயர் என்று தோன்றும். அதிலும் அந்த பாபு ஏழு தடவை போன் அடித்த பிறகு தான் எடுப்பான்.  எடுத்த உடனே தொடர்பையும் துண்டிப்பான். அதில் என்ன திருப்தியோ அவனுக்கு ! அந்த எலிசபெத் இன்னும் ஒரு படி மேலே !  சீக்கிரமா வேலை செஞ்சா என்ன குறைஞ்சு போயிடும் – என்று மிரட்டிய அதிகாரியின் சொந்த பைலை வேண்டுமென்றே தொலைத்து விட்டு அவரைத் திண்டாட வைத்தவள். மேரி ஸ்டோர் ரூமுக்குப் போகும்போது இந்த மாதிரி பேச்சுக்கள் நிறைய காதில் விழும். மத்தியானம் சாப்பிட்டுவிட்டு டிபார்ட்மெண்டுக்கு வந்தால் நாலைந்து பேர் மேஜை மீது தலை குனிந்து தூங்கிக் கொண்டிருப்பார்கள்.

பத்து மணி ஆபீஸுக்கு பத்தரை வரை ஒருவர் மாற்றி ஒருவராக வந்து கொண்டிருப்பார்கள்.  அதுவரை போன் அடித்துக் கொண்டே இருக்கும்.  வேறு யாரும் மற்றவர் போனை எடுக்கவே மாட்டார்கள். ‘ ஏன் லேட்’ என்றால் ‘ இன்னிக்கு லீவு சொல்ல வந்தேன்’ பாணியில் பேசி விட்டுப் போவார்கள் !  எல்லாமே ரொம்ப ரொம்ப நிதானமாக ஆமை வேகத்தில் நடக்கும்.  மேரிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் தான் அவளை உறுத்திக் கொண்டே இருந்தது.

ராத்திரி குழந்தைகள்  இருவரும் தூங்கிய பிறகு டயரி எடுத்து நேற்று எழுதியதைப் படித்தாள்.

“என்ன ஆபீஸ் ! கொஞ்சம் கூட உயிரே இல்லாத மயான பூமி மாதிரி அல்லவா இருக்கிறது ! மனித நடமாட்டமே இல்லாத தீவு மாதிரி இருக்கிறது ஆபீஸ் ! எதற்குமே சந்தோஷப்படாத ஜந்துக்கள் இங்கு இருப்பவர்கள் ! இப்படிக் கூட இருக்க முடியுமா என்ன?

முப்பது பேர் எனக்குக் கீழே வேலை செய்கிறார்கள். வாங்குகிற சம்பளத்துக்குத் தகுந்தபடி வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணமே இவர்களுக்குக் கிடையாது போலும் !  மனிதர்கள் என்னவோ நல்லவர்கள் போலத் தெரிகிறார்கள்.  ஒரு வேளை வருடக் கணக்காக ஒரே வேலையைத் தொடர்ந்து செய்து வந்ததினால் வந்த அலுப்பா !  வேலையில் ஏன் இப்படி ஒரு மந்தம்?  அதில் வேலை செய்யும் இளைஞர்கள் கூட கிழவர்கள் மாதிரி இருக்கிறார்கள்.  அந்த டிபார்ட்மெண்டின் கலாசாரம் எல்லோரையும் நன்கு பாதித்து இருந்தது.  கொஞ்ச நஞ்ச திறமைசாலியைக் கூட மரக்கட்டையாக மாற்றி விடும் திறமை அந்த டிபார்ட்மெண்டுக்குத் தான் உண்டு.

image

அந்த ஆபீஸுக்குள் – அந்த மூன்றாம் மாடிக்குள் நுழையும்போது ஏதோ ஆக்ஸிஜனே இல்லாத காற்றை சுவாசிப்பது போல மூச்சு மூட்டுகிறது !  போன வாரம் தான் தெரிந்தது அந்த நாலு கிளார்க்குகளும் ஆபீஸில் வாங்கின கம்ப்யூட்டரை இரண்டு வருஷமா உபயோகப் படுத்தாமலே இருக்கிறார்கள் என்று. “ நாங்க இவ்வளவு வருஷமா கூட்டிக் கழித்துக்கிட்டு வரலே ! புதுசா எதுக்கு கம்ப்யூட்டர்?” என்று கூறுகிற கும்பல் அவர்கள்.  இது மாதிரி  இன்னும் எத்தனை பேரோ?

நம்ம வேலையை நாம நல்லா செய்தால்தான் நமக்கும் நல்லது, நம்ம கம்பெனிக்கும் நல்லது. இந்த உண்மையை மூணாம் மாடி மக்களிடம் எப்படிச் சொல்லிப் புரிய வைப்பது?
“நாங்க செய்யற வேலை முக்கியமான வேலை. இது எங்களுக்கே புரியுது.  ஆனால் எங்களைப் பற்றி யாரும் கவலைப் படறதில்லை.  மேலதிகாரிகளும் எங்கள் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில்லை. தாமதமானாலும் வேலை நடந்தால் போதும் என்று விட்டு விட்டார்கள்.” என்று அவர்களே சொல்லும் அளவிற்கு மோசமாகவே இருந்தது அந்த டிபார்ட்மெண்ட்.

இந்த வேலையில் விருப்பத்தோட எவரும் வேலை செய்யறதில்லை. என் ஒருத்திக்குத்தான் பணப் பிரச்சினை.  பெண்களில் பெரும்பாலானவர்கள் டைவர்ஸ் செய்தவர்கள். குழந்தைகளுடன் தனியே வாழ்பவர்கள் !  அந்த ரேணுகா போன வருடம் பாட்டியாகி விட்டாள். இந்த ஜார்ஜ் அவங்க அப்பாவோட உடம்பை சரி செய்யவே இந்த வேலையில் ஒட்டிக் கொண்டிருக்கிறான். எதற்காக எல்லோரும் – என்னையும் சேர்த்து – இந்த வேலையில் இருக்கிறோம் ! நல்ல சம்பளம், சௌகர்யம், பாதுகாப்பு இதுக்குத்தானே !”

மேரி தான் எழுதிய கடைசி வரிகளை மீண்டும் நினைத்துப் பார்த்தாள்.  இந்த வேலை நிச்சயமாக ஒரு வரப் பிரசாதம் தான். நிரந்தர வேலை, நல்ல சம்பளம், நல்ல  பாதுகாப்பு !  திடீரென்று அவளுக்கு ஒரு பயம் வந்தது. ‘ இந்த பாதுகாப்பான வேலை நிரந்தரமாக எப்போதும் இருக்கும் என்பது என்ன நிச்சயம்? இந்த உண்மை இங்கே வேலை செய்பவர்களுக்குத் தெரியுமா? இல்லை புரியுமா? மார்க்கெட் நிலவரம்  நிதிக் கம்பெனிகளை எப்படி எல்லாம் மாற்றுகிறது என்பதை இவர்கள் அறிவார்களா? மற்ற நிதிக் கம்பெனிகளுடன் போட்டி போட்டு முன்னால்  நிற்க நாம் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்ற கருத்து ஏன் இவர்கள் மூளைக்கு இன்னும் எட்டவில்லை? நாம் தயாராக இல்லாவிட்டால் நமது வேலை பறி  போய் புதிய வேலை தேட வேண்டும் என்ற உண்மை ஏன் இவர்களுக்குப் புரியவில்லை?

மேரிக்கு அதற்கான பதில் தெரிந்திருந்தது.  இவர்கள் இந்த டிபார்ட்மெண்டில் ரொம்ப காலமாகவே இருந்து கிணற்றுத் தவளைகளாக மாறி விட்டவர்கள். பெரிய பிரச்சினை வந்து கம்பெனியை மூடுவதற்கு முன்னால் நாம் ‘ரிடயர்ட்’ ஆகி விடுவோம் என்ற நம்பிக்கை அவர்கள் அனைவருக்கும் இருந்தது.  மேரி தன்னைப் பற்றி நினைத்துக் கொண்டாள். தனக்கு அந்த மூட நம்பிக்கை இருக்கிறதா?

போன் மணி அவள் எண்ணத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தது. நனவுக்கு வந்தாள். அதைத் தொடர்ந்து வந்தன தொடர் வெடிகுண்டு போல ஒரே களேபரம் !

ஒரு முக்கியமான வாடிக்கையாளரின் பைலைக் காணவில்லை. இந்த டிபார்ட்மெண்டில் தான் கடைசியாக இருந்ததற்கான ஆதாரம் இருந்தது.  அடுத்தது வேறு டிபார்ட்மெண்டிலிருந்து இங்கே வந்து ஒருவருடன் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் போதாது என்று ஒரு கம்பெனி வக்கீலோடு பேசும்போது போனை மூணு தடவை வேணுமென்றே ‘கட்’ செய்து விட்டார்கள் என்ற குற்றச்சாட்டு வேறு.  ஒரு முக்கியமான ப்ராஜெக்டுக்கு இன்று தான் கடைசி நாள். அதிலே வேலை செய்யும் ஆள் உடம்பு சரியில்லை என்று இன்று வரவில்லை. பிரச்சினைகள் ஒன்று மாற்றி ஒன்றாக வந்து கொண்டிருந்தன. இவற்றையெல்லாம் யோசித்துக் கொண்டே மதிய உணவிற்குக் கிளம்பினாள் மேரி. !

இந்த டிபார்ட்மெண்டுக்கு வந்த பிறகு மதிய உணவிற்குக் கேண்டீன் போகாமல் வெளியே போய் சாப்பிடும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தாள் மேரி. கேண்டீனில் மற்ற சீனியர் மேனேஜர்கள் இவள் டிபார்ட்மெண்டைப் பற்றி சொல்லும் குறைகளைக் கேட்க முடியவில்லை. இதைத் தவிர்க்கவே அவள் வெளியே போய் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

அப்படியே ஆபீஸுக்கு வெளியில் உள்ள ஒரு சின்ன மலைக்கு அருகே இருக்கும் ஏரிக்கரையில் இருக்கும் உணவு விடுதியில் தான் சாப்பிடுவாள். நல்ல அமைதியான இடம். அப்பப்போ உல்லாசப் பிரயாணிகளும் வருவார்கள். மனதுக்கும் இதமாக இருக்கும் அந்த இடம் !

அவள் இருக்கையை விட்டு இரண்டடி கூட நடக்கவில்லை. மேஜை மீது இருந்த போன் அடித்தது.ஸ்கூலிலிருந்து பையன் கூப்பிடுவானாயிருக்கும், காலையிலேயே ஜலதோஷம், ஸ்கூலுக்குப் போக மாட்டேன் என்று அடம் பிடித்தான். திட்டி அனுப்பி வைத்தாள். இப்போ என்ன பிரச்சினையோ? போனை எடுத்தாள்.

மீனங்காடி (தொடர்)

மீனங்காடி

image

மேரி  அவளது மூன்று வருட வேலையில் முதல்தர மேனேஜர் என்று பெயர் வாங்கியிருந்தாள்.

ஆபீஸுக்குசீக்கிரம் வந்து லேட்டாக வீடு திரும்பும் வர்க்கம் அவள் இல்லை என்றாலும் அவளது மேஜையில் பேப்பர் எப்பொழுதும் தங்கியிருக்காது. அவள் வேலையை அவ்வளவு அக்கறையுடன் செய்வதில் சிறிய சிறிய சிக்கல்களும் இருந்தன. மற்றவர்கள் தங்கள் வேலையையும் அவளிடம் தள்ளி விடத் துவங்கினர். மேரி செய்தால் இன்னும் சிறப்பாக அமையும் என்று சொல்லியே தங்கள் வேலையை அவளை விட்டு செய்யச் சொல்லுபவர் பலர்.

மேரி மிகவும் பொறுப்புடன் வேலை செய்கிறவள். மற்றவர்கள் சொல்லும் யோசனைகளை அக்கறையுடன் கேட்பாள்.  அதனால் எல்லோரும் அவளை எப்போதும் மதிப்போடுதான் பேசுவார்கள்.  “ மேரி என் குழந்தைக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லை ! நீ என் வேலையைக் கொஞ்சம் கவனிச்சுக்கிறியா?” என்று யார் கேட்டாலும், “கவலைப்படாதே ! நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று சொல்வதுதான் மேரியின் பதிலாக இருக்கும்.  அவள் பார்த்த வர்த்தகப் பிரிவு மிகவும் சௌகரியமாக இருந்தது.  அவளும் டென்ஷன் ஏற்றிக் கொள்ளாமல் மற்றவர்களையும் டென்ஷன் படுத்தாமல் அழகாக நிர்வாகம் செய்து வந்தாள். கூட வேலை செய்பவர்களும், மேலதிகாரிகளும் மேரியையும் அவளது டீம் பற்றியும் பெருமையாகவே பேசுவார்கள்.

இதற்கு நேர்மாறாக ‘வரவு செலவு டிபார்ட்மெண்ட்’ ஒன்று மூன்றாம் மாடியில் இருந்தது. அந்த மோசமான டிபார்ட்மெண்ட் நிதிக் கம்பெனியில் மிகவும் பிரசித்தி பெற்றது. திருத்தவே முடியாத, தண்டமான, மோசமான, சொன்னால் கேட்காத – இன்னும் அலுவலக அகராதியில்  என்னென்ன கெட்ட வார்த்தையில்  திட்ட முடியுமோ அத்தனையையும் தாங்கிக் கொண்டிருப்பது அந்த ‘டிபார்ட்மெண்ட்’.  ‘ குப்பைதொட்டி’ ‘சாவு கிராக்கி’ என்ற சிறப்புப் பட்டப் பெயர்கள் கூட அதற்கு உண்டு.  இதிலே என்ன கொடுமை என்றால் நிதிக் கம்பெனியின் மற்ற எல்லா டிபார்ட்மெண்ட்களும்இத்துடன் தொடர்பு கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்தது. ‘வரவு செலவு’  எல்லோருக்கும் பொது. ஆனால் அதில் இருக்கிற சாவு கிராக்கிகளுடன் பேச எல்லோருக்கும் கொஞ்சம் பயம் தான்.

image

இன்றைக்கு அந்த ‘குப்பைத் தொட்டியில்’ என்ன நடந்தது தெரியுமா?’  அங்கே நடக்கிற சண்டை, அடிதடி, வாக்குவாதம் பற்றி இப்படித்தான் மற்றவர்கள் பேசிக் கொள்வார்கள்.  அங்கே ஏதாவது வேலையாகப் போன அத்தனை  பேரும் “ இது என்ன இழவு டிபார்ட்மெண்டோ” என்று அலுத்துக் கொண்டு தான் போவார்கள். மேரியின் கூட வேலை செய்கிறவன் ஒரு நாளைக்குச்  சொன்னான்“ மேரி இந்த வருடம் நோபல் பரிசு யாருக்குக் கிடைக்கப் போகிறது தெரியுமா? நம்ம மூணாம் மாடி சாவு கிராக்கி டிபார்ட்மெண்டில் உயிருள்ள ஒருவரைக் கண்டு பிடிப்பவர்க்குத் தானாம்”. குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள் மேரி !

சில வாரங்களுக்கு முன்பு மேரிக்கு பதவி உயர்வு வந்தது. அவள் பயந்தபடியே அவளை அந்த மூன்றாம் மாடி ‘வரவு செலவு’ டிபார்ட்மெண்டுக்கு பொறுப்பாளியாகப் போட்டார்கள். உயர் அதிகாரிகளுக்கு மேரியைப் பற்றித் தெரியும்.  அவள் மீது பெரிதும் நம்பிக்கை வைத்திருந்தார்கள். ஆனால் அவளுக்குத்தான் தயக்கமாக இருந்தது, இப்போது இருக்கும் வேலை மிகவும் சந்தோஷமான வேலை. சுறுசுறுப்பான திறமையான மக்கள் ! அதுமட்டுமல்ல !  ஜான் மறைவதற்கு முன்பே அந்த டிபார்ட்மெண்டில் இருந்து வந்தாள். எல்லோருக்கும் ஜானைப் பற்றி மேரியைப் பற்றி நன்றாகத் தெரியும். அவள் சொந்த வாழ்க்கையில் கஷ்டப் பட்ட போதெல்லாம் துணையாய் நின்றவர்கள் அவள் டீம் மக்கள் !.

image

ஜான் மறைவதற்கு முன்னால் மேரி எந்த அடாவடி வேலையையும் எடுத்துக் கொள்ளத் தயாராக இருந்தாள். ஆனால் இப்போது ‘மூணாம் மாடி மூணாம் பேஸ்து’ என்று சிலர் சொல்வதைக் காதாலேயே கேட்டாள். அதைப் பற்றி நன்கு  தெரிந்து வைத்துக் கொண்டிருந்தாள்.  ஜானின் கடைசிக் காலத்தில் ஆஸ்பத்திரி செலவிற்கு வாங்கின கடன் இன்னும் அடையவில்லை. மிகப் பெரிய தொகை அது.  இல்லையென்றால் ‘ இந்த பதவி உயர்வும் வேண்டாம் !  அந்த மூணாம் மாடி வேலையும் வேண்டாம்” என்று உதறி விட்டுப் போயிருப்பாள். அவளுக்குப் பதவி உயர்வை விட அந்த வேலை, சம்பளம் எல்லாம் மிகவும் தேவையாய் இருந்தது. மனதைத் திடப்படுத்திக் கொண்டு புதிய பொறுப்பை ஏற்றுக் கொண்டாள்.  இரண்டு வருடங்களில் மூன்று பேர் வந்து ஓடிப்போன டிபார்ட்மெண்ட் அது !.

(தொடரும்) 

மீனங்காடி (தொடர்)

மீனங்காடி

 

( உலகப் பிரசித்தி பெற்ற ‘ THE FISH’ என்ற Stephen C Lundin , Harry Paul and John Christensen எழுதிய புத்தகத்தின் தமிழ் வடிவம். தமிழ் வாசகர்களுக்காக இடம் ,பெயர்,மேற்கோள் எல்லாம் மாற்றப்பட்டுள்ளது)

 

image

 கோவாவில் அது ஒரு மோசமான மழைக்காலம். வானம் மப்பும் மந்தாரமாக இருந்தது.  ஈரமான, குளிரான, தயக்கமான மயக்கம் தரும் திங்கட்கிழமை அன்று. மதியத்துக்கு மேல் மேக மூட்டம் விலகலாம்  என்கிறது வானிலை அறிக்கை.  இது மாதிரி நாட்களில் தான் மேரிக்கு சென்னையின் அருமை தெரியும்.

‘என் வாழ்க்கை எப்படி மாறிவிட்டது?’ மேரி தனது மூன்று வருடங்களை மனதில் மெல்ல வருடிப்பார்த்தாள். அவள் கணவன் ஜானுக்கு கோவாவில்  ஐ டி கம்பெனியில் வேலை கிடைத்டதும்  எவ்வளவு சந்தோஷத்துடன் வந்தார்கள். பழைய வேலைக்கு நோட்டீஸ் கொடுத்து, வீட்டை காலி செய்து, புது ஊரில் புது வீடு பிடித்து, குழந்தைகளுக்கு காப்பகம் கண்டுபிடித்து எல்லாவற்றையும் ஒரே மூச்சில் செய்தார்கள். அவளுக்கும் கோவாவில் ‘முதல் நிதிக் கம்பெனியில்’  வர்த்தகப் பிரிவில் வேலை கிடைத்தது.

 

ஜானுக்கு இந்த ஐ டி கம்பனி மிகவும் பிடித்திருந்தது. சாயங்காலம் வீ ட்டுக்கு வரும் பொது மிகவும் சந்தோஷத்துதுடன் வருவான். கம்பெனியில் செய்யும் வேலை மற்றும் அங்கு நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகள்  எல்லாவற்றையும் மேரியிடம் சொல்லி மகிழ்வான். ஜானும்  மேரியும்   குழந்தைகளைச்  சீக்கிரம் தூங்கப்பண்ணிவிட்டு வெகுநேரம் சிரித்து மனம் விட்டு பேசி விளையாடிக்கொண்டே இருப்பார்கள். மேரியுடைய நிதிக் கம்பெனியைப் பற்றியும் மற்ற உடன் வேலை பார்ப்பவர்களைப் பற்றியும் ஆர்வத்தோடு கேட்பான். பார்ப்பவர்கள் கண்  படும் அளவிற்கு இருவரும் நல்ல நண்பர்கள் போல – காதல் பறவைகள் போலப்  பறந்து திரிந்தனர். ஒருவரை ஒருவர் பார்க்கும் போது அவ்வளவு துள்ளல் மகிழ்ச்சி.

                            image

எல்லாவற்றையும் அழகாகத் திட்டம் போட்டிருந்தனர் மேரியும் ஜானும் – ஒன்றே ஒன்றைத் தவிர. ஒரு வருடம் ஆன பிறகு  ஜான் அடி வயிற்றில் ஏதோ ரத்தப் போக்கு என்று ஆஸ்பத்ரிக்குப் போனான். ரத்தப் போக்கு அதிகமாகி அதிலேயே  அவன் திடீரென்று  இறந்து  போனான். சொல்லிக் கொள்ள, அழ, விடை பெற எதற்கும் அவனுக்கு நேரமில்லை.

அது இரண்டு வருடம் முன்பு. ஊருக்கு வந்து முழுவதுமாக ஒரு வருடம் கூட ஆகவில்லை அந்த சமயம். அதை நினைக்கும் பொழுது மேரியின் உள்ளம் சுக்கு நூறாக

வெடித்தது. தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டாள் . ‘எனது சொந்தக் கவலைபற்றி நினைக்க இப்போது நேரமில்லை.

திங்கட்கிழமையில்  ஆபீசில் ஏராளமான வேலை இன்னும் பாக்கி இருக்கிறது’.   

(தொடரும்)