ஷாலு மை வைஃப் -எஸ் எஸ்

 

‘ஷாலு என் வைப் ‘   என்று என் குடும்பத்தைப் பற்றி ஒரு நகைச்சுவைத் தொடராக சும்மா எழுதிக்கொண்டிருந்த எனக்கு இப்போது ஒரு சீரியஸ் திருப்பம் வந்திருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன். நான் இப்போது மிகப் பெரிய எலிப் பொறியில் மாட்டிக் கொண்டிருக்கிறேன்.

குவிகம்  ஆசிரியரின் குரல் என் காதில் மீண்டும்  மீண்டும் ஒலித்துக் கொண்டே இருந்தது.

” நகைச்சுவைத்  தொடர் என்று சொல்லிவிட்டு ஏதோ சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் பினாத்திக் கொண்டே போகிறீர்களே? தேவையில்லாமல் மோடிஜியை இழுத்திருக்கிறீர்கள். யோகாவையும் நமது கலாச்சாரத்தையும் கிண்டல் செய்கிறீர்கள். பெண்களை மிகவும் கேவலப்படுத்துகிறீர்கள். ஹிந்து மதத்தையும்  கோமாதா பூஜையையும்   பஜ்ரங் பலியையும்  தவறாகச் சித்தரித்திருக்கிறீர்கள். குழந்தைகள் மனதில் தீவிரவாத எண்ணத்தை விதைக்கிறீர்கள்.  ஆர்குமெண்ட் என்ற பெயரில் அராஜகம் செய்கிறீர்கள்.

இதனால்  சில அரசியல் கட்சிகள் குவிகத்தைத் தடை செய்யவேண்டும் என்று போராட்டம் நடத்தத்  திட்டமிட்டிருக்கிறார்கள். இந்தக் குற்றங்களுக்கு  அடுத்த மாதக் கதையில் சரியான பதில் சொல்லவில்லை என்றால் அத்துடன் கதை நிறுத்தப்படும். விட்டுப்போன செய்திகளை பொன்னியின் செல்வன் மாதிரி நாலைந்து கேள்வி-பதிலில் நானே முடித்து விடுவேன்”

மோடி, யோகா, பெண் சாமியாரிணி, கோமாதா அவற்றைப் பற்றி எழுதியதால்  நான் ஹிந்துத்துவத்துக்கு விரோதி என்று யாரோ ஒருவர் பேஸ்புக்கில் முத்திரை குத்த அதை ஒரு ஆயிரம் பேர் லைக் வேற போட பிரச்சினை பூதாகரமாக வளர்ந்து கொண்டே போயிற்று. மக்கள் எழுதிய கமெண்ட்களை எல்லாம் படித்த பிறகு எங்கே போய் என் முகத்தை வைத்துக் கொள்வதென்றே தெரியவில்லை. அந்தக் காலத்தில் பிடிக்காதவர் போஸ்டருக்கு சாணி அடிப்பது போல இப்போ கமெண்ட் என்ற பெயரில் நம்மைக் கிட்டத்தட்ட உரிச்ச கோழி ஆக்கிவிடுகிறார்கள்.

உதாரணம் சொல்லும் போது கூட ஜாக்கிரதையாய் இருக்க வேண்டியிருக்கு. சல்மான் கான் ஏதோ உளறப் போக  இப்போ கோர்ட் அது இதுன்னு பிரச்சினைக்கு மேல் பிரச்சினையா வந்திருக்கிற மாதிரி ஆகி விடக் கூடாது. இன்னும் கொஞ்சம் போனா ‘ இனிமே நான் கீ போர்டைத் தொட மாட்டேன். என் பிளாக்லே நானே வைரஸ் விட்டு அழிச்சுக்குவேன்’ அப்படின்னு  அறிக்கை கொடுக்க வேண்டியிருக்கும். கந்து  வட்டிக்காரங்களை விட இந்த கமெண்ட் போடற  மக்கள் ரொம்பவும் மோசம்.  ஆராய்ச்சி செய்து நம்ம ஜாதியைக் கண்டுபிடித்து அந்த ஜாதியைச் சொல்லித் திட்டத் தொடங்கிவிடுவார்கள்.

சரி, பொதுவான விஷயத்தைவிட்டு என் பிரச்சினைக்கு வருவோம். குவிகம் ஆசிரியர் காப்புரிமை ஆசிரியருக்கே என்று சொல்லி எல்லாவற்றிக்கும் நான் தான் காரணம், தனக்கும் அதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்கிற பாணியில் ஒரு அறிக்கை வெளியிட்டுவிட்டார்.  

அந்தக் காலத்தில்  குமுதம் ஆசிரியர்  எழுதிய ஒரு பிராக்டிகல் ஜோக்கிற்காக நீதிமன்ற வாசப்படியை அடிக்கடி மிதிக்க வேண்டி வந்ததை நினைத்து இப்போ இந்த ஆசிரியரும் ரொம்ப ஜாக்கிரதையா காரியம்  செய்கிறார் .

இறைவி படத்தில தயாரிப்பாளரைக் கேவலமாகச் சித்தரித்திருக்கிறார் என்று தயாரிப்பாளர் சங்கம் கார்த்திக் சுப்பராஜ் மேல வரிந்து கட்டிக் கொண்டு  சண்டைக்கு வரவில்லையா? அது மாதிரிதான்.

 அவரைச் சொல்லியும் குற்றமில்லை. ” பத்திரிகையைத் தடை செய்யவேண்டும் . எழுதிய எழுத்தாளரை குண்டா சட்டத்தில் உள்ளே போடவேண்டும் ” என்று சில நற்பணி மன்றங்கள் அவருக்கு  எச்சரிக்கைக்   கடிதங்கள் அனுப்பியிருக்கிறார்கள்.

மீடியாக்களும் இதை சும்மா விடவில்லை. ஊதி ஊதிப் பெரிதாக மாற்ற முயல்கிறார்கள்.  

ஓர்  அரசியல் தலைவர்  இது ‘ வலையில் வளரும் விஷக் களைகள்’ என்று கவித்துவமாகத் திட்டினார்.

இன்னொருவர் ‘இப்படி எழுதறவங்களோட விரலை முறிக்கணும்னு’  ஜாடையா சொன்னார்.

இன்னொரு கூட்டணித் தலைவரோ எனக்கு எதிராக இணைய தளத்தில் ப்ரவுஸ்   யாத்திரை போவதாகப் பயமுறுத்தியிருக்கிறார்.

மற்றொரு தேசிய மதச் சார்பற்ற கட்சியின் தலைவர்கள், மாறுபட்ட கருத்தைக் கூறியதால் அவர்கள் ஆதரிக்கிறார்களா எதிர்க்கிறார்களா என்பது யாருக்குமே புரியவில்லை.

ஆங்கில சேனலில் என் தொடரைப் பற்றிக் கூறி அரைமணிநேரம் கார சாரமாகக் கத்திக் கொண்டிருந்தார்கள்.

இன்னொரு கட்சிப் பத்திரிகை ‘ ஆப்பசைத்த குரங்கு’ என்று  என் படத்தைப் போட்டுக் கார்ட்டூன் போட்டது.  

இன்னொரு பெரிய மனிதரோ ‘  இவன்  தன்னை ஆர்.பி.ஐ. கவர்னர் என்று நினைத்துக் கொண்டு  எழுதுகிறான் ‘ என்று என்னை மரியாதையாகச் சாடினார்.

என் நண்பர்கள் எல்லாரும் கொஞ்ச காலம் என்னைத்  தலை மறைவாய்ப் போகும்படி வலியுறுத்தினார்கள்.  ஆபீஸில் என் பாஸ்,  இந்தப் பிரச்சினை முடியற வரைக்கும் ஆபீஸ் பக்கம் தலைவைத்துப் படுக்கவேண்டாம் என்று அன்போட எச்சரித்தார். மொத்தத்தில் என்னை -சாதாரணமா குடும்பக் கதை எழுதிய என்னை – ஒரு  மெட்ராஸ் ஐ  வந்தவன் மாதிரி -ஒரு தீவிரவாதி அளவில் மாற்றி விட்டார்கள். சில எழுத்தாளர் அமைப்புக்கள்  எனக்காக வரிந்துகட்டி ஆதரவாகப் பேச அது எரிகிற நெருப்பில் எண்ணை விடுவதைப்போல  ஆயிற்று.

‘ சரி,  சக எழுத்தாளர் நண்பர்களிடம் யோசனை கேட்கலாம்’  என்று போனால் அவர்கள் என்னை மேலும் குழப்பமடையச் செய்துவிட்டார்கள். மன்னிப்பு அறிக்கை எழுதுவதிலிருந்து ஜனாதிபதிக்குக் கருணை மனு போடும் வரையான அத்தனை யோசனைகளும் வந்தன.

சரி குவிகம் ஆசிரியர் குழுதான் இதற்கு ஒரு முடிவு சொல்ல வேண்டும் என்ற  தீர்மானத்துடன் குவிகம் அலுவலகத்திற்குச் சென்றேன். அங்கே ஆசிரியர், துணை ஆசிரியர், இணை ஆசிரியர் மற்றும் ஆலோசனைக் குழு  என்று எல்லோரும் எனக்காகக் காத்துக் கொண்டிருந்தனர். நான் உள்ளே நுழைந்ததும்  கதவு சாத்தப்பட்டது.  எல்லோரும் மிகுந்த யோசனையில் இருந்தார்கள். ‘இப்போ என்ன செய்வதாக உத்தேசம்?” என்று புதிதாக வந்த துணை ஆசிரியர் கேட்டார்.

” ஒரு வருஷத்துக்கு மேலா இந்தத் தொடரை நான் எழுதி வருகிறேன். இத்தனை  நாளும்  நீங்கள் அனைவரும் தான் இது நன்றாகப் போகிறது என்று சொல்லி என்னைத் தூண்டிவிட்டீர்கள். பேஸ்புக்கில் இதைப் பெரிதாக விளம்பரம் செய்து உங்கள் சர்குலேஷனை ஏற்றிக் கொண்டீர்கள். ‘ஷாலு  ரசிகர்கள் மன்றம்’ என்று ஒரு  வாசகர் வேறு பேஸ்புக் பக்கம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். அப்படி இருக்கும் போது இப்போ பிரச்சினை என்று வந்ததும் எல்லோரும் என் மீது பழியைப்  போட்டுவிட்டுத் தப்பிக்க முயலுகிறீர்கள். இது நியாமா?”

“பத்திரிகை தர்மம் என்று ஒன்று இருக்கிறதல்லவா? ” என்று கேட்டார் ஆசிரியர்.

” எது பத்திரிகை தர்மம்? எழுத்தாளரைக் காவு கொடுப்பது தான் பத்திரிகை தர்மமா?’ நானும்  சூடாகக் கேட்டேன்.

” இங்கே பாருங்க! இந்தப் பிரச்சினைக்கு நான் ஒரு வழி சொல்றேன். அதுபடி நீங்க செஞ்சீங்கன்னா நீங்களும் தப்பலாம் , நம்ம பத்திரிகையும் தப்பும்’ என்றார் குவிகம் ஆசிரியர்.

” என்ன ? என்ன  ? என்று எல்லோரும் ஒருமித்துக் கேட்டனர். நானும் கேட்டேன்.

” இந்தத் தொடரை எழுதியதற்காக உங்கள் கைப்பட எழுதிய மன்னிப்புக் கடிதத்தை அட்டையில் போட்டுவிடுவோம்.  ‘இந்தத் தொடர் இனி வராது’  என்று நாங்களும் முதல் பக்கத்தில் போட்டுவிடுகிறோம்.”

“இது கோழைத்தனம். நாம் தைரியமாக இந்தத் தொடரைத் தொடர வேண்டும். இதனால் நாம் இழப்பது ஒன்றுமில்லை. எழுத்துரிமையைப் பறிக்க யாராலும் முடியாது. என்ன நடக்கிறது என்று பார்த்து விடுவோமே?’  என்று ஒரு ஆலோசகர் குழுவில் உள்ள இளைஞர் ஒருவர் கூறினார்.  அவர் மூட்டிய  தைரியம் மற்றவர்களையும் பற்றிக் கொண்டது – குவிகம் ஆசிரியரைத் தவிர.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் குவிகம் ஆசிரியர் மசிகிறவராகத்  தெரியவில்லை. மற்றவர்களை எப்படி  கன்வின்ஸ் செய்வது என்று ஆலோசித்துக் கொண்டிருந்தார்.

குவிகம் ஆசிரியருக்குப் புதிய யோசனை தோன்றியது. ” இதுவரை நீங்கள் ‘ஷாலு மை வைஃப் ‘ என்று எழுதிவந்தீர்கள். இப்போ ‘ என் ஹஸ்பெண்ட் என் எனிமி’ என்று ஷாலுவை எழுதச் சொல்வோமே?. பெண்ணீயமும்  திருப்தி அடைந்த மாதிரி இருக்கும். சபாஷ் சரியான போட்டி என்று மக்களும் ரசிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அப்புறம்  சில மாதங்கள் கழித்து – மக்கள் எல்லாரும் மறந்த பிறகு ‘ஷாலு மை வைஃபை ‘ நீங்கள் தொடரலாம். குமுதத்தில அந்தக் காலத்தில சுஜாதா ஒரு கதை எழுதினார். அதில சில பிரச்சினை வந்ததுன்னு அதை அப்படியே நிறுத்திவிட்டார் ஆசிரியர். கொஞ்ச நாள் கழிச்சு அதே கதையை வேற பெயரில்  சுஜாதாவே எழுதினார். மக்களும் ஏத்துக்கிட்டாங்க ‘  என்று வயா- மீடியாவுக்கு வந்தார்.

மற்ற ஆசிரியர்களும் இந்தப் புதுமைக்கு ஒப்புக் கொண்டார்கள்.

‘ஷாலுவையும் குருஜினியையும் கிண்டல் செய்து எழுதியதற்கு இந்தத் தண்டனை எனக்குத் தேவை தான்’ என்று நினைத்துக் கொண்டேன்.

” சரி ஷாலுவிடம் சொல்கிறேன்.” என்று சொல்லி விட்டுக் கிளம்பும் போதுதான் அந்த சம்மன் எஸ்‌எம்‌எஸ் . குருஜினியிடமிருந்து வந்தது.  கிட்டத்தட்ட வக்கீல் நோட்டீஸ் மாதிரி இருந்தது  அந்த எஸ் எம் எஸ். இது என்ன கிணறு வெட்ட தண்ணி வந்து அதிலேர்ந்து திமிங்கிலம் வந்த மாதிரி இருக்கே என்று பயந்து கொண்டே படித்தேன். 

என்னுடைய இந்தத் தொடரைப் படித்துவிட்டு ஷாலு என்னைப் பத்தி குருஜினியிடம் போட்டுக் கொடுத்துவிட்டாள் போலும்.   

” நீங்கள் என் சிஷ்யையிடம் தகாத முறையில் நடந்து கொண்டதற்காகவும்,    (அடிப்பாவி!) அவர்களின் கவுரவத்திற்குக் குந்தகம் ( குந்தகம் அப்படின்னா  என்னா   சார்)   விளைவித்ததற்காகவும் உங்கள் மீது குருஜினி நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்குடன்  ஒரு விசாரணைக் கமிஷன் வைத்திருக்கிறோம்.

ஜட்ஜ்  ‘என்னம்மா இப்படி பண்ணறீங்க’ புகழ் விஜயலக்ஷ்மி அம்மையார்.

அடுத்த ஜூலை மாதம் 15ஆம் தேதி நீங்கள் ஆஜராகவேண்டியது. உங்கள் சாட்சியங்கள் ஷிவானி , ஷ்யாம், ஷாலுவின் அப்பா , அம்மா மற்றும் பிளாட்டில்  இருக்கும் சில்க் ஸ்மிதா அவர்களுக்கும் சம்மன் அனுப்பியிருக்கிறது.  உங்களுக்குத் தேவையானால் ஒரு வக்கீலை நியமித்துக் கொள்ளலாம்.  “என்னையும் என் குழந்தைகளையும் கேவலப்படுத்துவதற்காகவே  இந்தத் தொடர் எழுதப்பட்டு வருகிறது . இதனை  உடனே தடை செய்யவேண்டும்  ” என்று  புகார் கொடுத்த ஷாலு தனக்குத் தானே வாதிடுவதாக அறிவிப்பு அனுப்பியிருக்கிறாள்.

எனக்குத் தலை சுற்றியது.  ‘குவிகம் பிரச்சினையை ஒருவாறு முடிக்கலாம் என்றாலும் குடும்பப் பிரச்சினை இப்போ எங்கேயோ போயிக்கிட்டிருக்கே.  இது ரொம்ப ரொம்ப முக்கியமான சமாசாரம். இதற்கு உடனே  முடிவு கட்டிவிட வேண்டும் ‘ ‘ என்று யோசித்துக் கொண்டே வீட்டுக்குப் போனேன்.

வீடு பூட்டியிருந்தது.

(அடுத்த இதழில்  முடியும்)   அனைவரும்: அப்பாடா!!! 

 

ஷாலு மை வைஃப் – எஸ் எஸ்

 

குருஜினியும் ஷாலுவும் பஜ்ரங்க்பலி ஷர்மாவும் சேர்ந்து கோமாதாவின் கோவிலுக்காக்கத்  தயார் செய்து கொண்டிருக்கும்போது  அவர்களின் எதிரணியின் பிரசார பீரங்கி பலமாக வேலை செய்தது.  எருமையும்தான் நமக்குப் பால் தருகிறது. சொல்லப்போனால் எருமைமாட்டுக் காபிதான் டிகிரி காபி மற்றவையெல்லாம் வெறும் பிளஸ் டூ தான். எமனுக்கு வாகனம் எருமை. எமன் தமிழன். காமதேனு – கோமாதா எல்லாம் ஆரிய மாயை என்று  அவர்கள் பிரசாரம் செய்யும் அளவிற்குப் போய்விட்டது.

தமிழ்நாட்டில் எப்பவும் எல்லாத்திலும் ரெண்டு கட்சி இரு
க்கும். அந்தக் காலத்தில தெருக்கூத்திலக்கூட எரிஞ்ச கட்சி எரியாத கட்சி என்று ரெண்டு இருக்குமாம். காப்பிக்கு டபரா டம்ளர் என்று இருப்பது போல. இட்டிலுக்கு சட்னி சாம்பார் என்று இருப்பது போல. 

முன்னாடி சோழன்-பாண்டியன் என்று அடிச்சுக்கிட்டோம். அப்புறம் சிவன்-.விஷ்ணு என்று அடிச்சுக்கிட்டோம். சினிமாவில   எம் ஜி ஆர் – சிவாஜி, கமல்-ரஜினி, அஜித்-விஜய், விஜய் சேதுபதி – சிவகார்த்திகேயன் என்று எப்பவும் நாம் ரெண்டு பிரிவா பிரிஞ்சே  நிப்போம்.  அரசியல்ல   திமுக – அதிமுக, கருணாநிதி – ஜெயலலிதா  இப்படி எல்லாத்திலேயும் ரெட்டை ரெட்டையா நாம பிரிஞ்சே இருப்போம். அது தான் இரண்டின் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையோ?

எங்க வீட்டிலேயே  எடுத்துக்கங்களேன்.ஷாலு ஆளுங்கட்சி. நான் எதிர்க்கட்சி. ஷிவானி, ஷ்யாம் இருவரையும்  சேர்த்துக்கொண்டு மக்கள் நலக்கூட்டணி அமைப்பேன். ஷிவானி,  ஷாலுகூட  எல்லாத்துக்கும் சண்டைபோடுவா. என்கூட இருப்பது போலத் தோன்றும். ஆனா எங்கட்சிக்கு வரமாட்டா. ஷ்யாம் சுயேச்சை எம் எல் ஏ ராஜ்யசபா தேர்தலில்  ஓட்டுப் போடுவதுபோல யாருக்குப் போடுகிறான் என்பது அவனுக்கே தெரியாது.  என் சைடுன்னு நினச்சுக்கிட்டிருப்பேன் ஆனா பல சமயம் சேம் சைடு கோல் போடுவான்.   ஒவ்வொரு முறையும் எனக்கு சாதகமா  ஓட்டுப் போட நான் காசு அல்லது மற்ற சமாசாரங்கள் கொடுக்கவேண்டியிருக்கும். ஷாலு அம்மாவாச்சே. குழந்தைகளுக்கு இலவசங்களைக் கொடுத்தே என்னைக் கவுத்திடுவா.

இதெல்லாம் படிக்கும் போது உங்களுக்கு ஷாலு ஒரு கொடுமைக்கார அரக்கி மாதிரி,  நம்ம சீரியல்களில்  வரும் வில்லிகள் மாதிரி தோன்றியிருக்கும்னா அதற்கு நான் பொறுப்பில்லை.   நானும் கொஞ்சம் சாதாரண நிகழ்ச்சிக்குக் கண்ணும்  காதும் வைத்து எழுதுவதுண்டு. ஷாலு இதைக் கண்டு கொள்வதில்லை என்பதால் என் தெனாவட்டு  பல மடங்கு அதிகரித்துவிட்டது.

ஆனால் இது எனக்கும் ஷாலுவுக்கும் இருக்கிற கல்யாண அக்ரிமெண்ட்டின் அடிவாரத்தையே ஆட்டிவிடும் என்பதைத் தெரிந்து திடுக்கிட்டுப்போனேன்.  அது என்ன அக்மெரிண்ட் என்கிறீர்களா?

நானும் ஷாலுவும் எப்படி லவ் பண்ணிக் கல்யாணம் செய்துகொண்டோம் என்று உங்களுக்கு விலாவாரியா சொன்னேன். கல்யாணத்துக்கு முன்னாடி எவ்வளவுக்கெவ்வளவு இன்னோசெண்ட் ஆக இருந்தாளோ அந்த அளவுக்கு இப்போ  இண்டெலிஜெண்டா  இருக்கா.  கல்யாணம் முடிஞ்சு முதல் இரவில ஷாலு என்கிட்டே சொன்னாள்:

“இங்கே பாருங்கோ! இப்போ உங்க கிட்டே சில முக்கியமான சமாசாரம் பேசப்போறேன். என்னன்னா   லவ் பண்ணும் போது நாம நிறைய பொய் சொல்லியிருப்போம். நிறைய சமாசாரங்களை மறைச்சிருப்போம். அதெல்லாம் காதல்  பண்ணும் போது ஓகே. ஆனால் கல்யாணம் ஆனப்புறம் நம்மகிட்டே எந்த விதமான ஒளிவுமறைவும் இருக்கக்கூடாது.

“கரெக்ட் ஷாலு , நம்மகிட்டே எந்த விதமான ஒளிவுமறைவும் இருக்கக்கூடாது. கிட்ட வா “

:”கொஞ்சம் இருங்கோ! நாம நிறைய பேசணும். எங்க தமிழ் டீச்சர் எங்களுக்கு இதைப்பத்தி கிளாஸ் எடுத்திருக்கா. நாம மனம் விட்டுப் பேசணும். அப்பறம்தான் மத்த எல்லாம். “

” தமிழ் டீச்சர் எல்லாம் அப்படித்தான் சொல்வாங்க. அவங்களுக்குத் தெரிஞ்சதெல்லாம் பேச்சுதான். எங்க என் சி சி  மாஸ்டர் கூட சொல்லிக் கொடுத்திருக்கிறார் ஸ்கூலில. பேச்சைக் கொறை  செயலில் இறங்குன்னு”

“நான் சீரியஸா பேசறேன். நீங்க ஜோக் அடிக்கிறீங்க. இந்த சமயத்திலதான் நாம ஒருத்தரை  ஒருத்தர் நல்லாப் புரிஞ்சுக்கணும்.

“நானும் அதையேதான் சொல்றேன்- நாம ஒருத்தரை  ஒருத்தர் நல்லாப் புரிஞ்சுக்கணும்”

“கொஞ்சம் கேளுங்க! நான் உங்ககிட்டே மறச்சதை  முதல்ல சொல்லிடறேன். அப்பத்தான் நான் எந்தவித குற்ற மனப்பான்மையும் இல்லாம உங்க கூட இருக்கமுடியும். அதுக்கப்பறம்  நீங்க உங்களைப் பத்தின எனக்குத் தெரியாத  உண்மையெல்லாம் சொல்லணும். “

“ஷாலு, உன்னைப்பத்தின எந்த உண்மையையும் என்னால ஏத்துக்கமுடியும். பழசு ஏதாயிருந்தாலும் அதை மறந்துட்டு நம்ம வாழ்க்கையைத் தொடங்குவோம். நேரமாகுது.”

“நீங்க பழசு வேண்டாமுன்னு சொல்றதைப் பாத்தா எனக்கு சந்தேகமாயிருக்கு”

“நீ பழசைச் சொல்லத் துடிக்கிறதப் பாத்தா எனக்கு பயமாயிருக்கு”

” நான் சொல்லவேண்டியதை  சொல்லிவிடறேன். நீங்க பெருந்தன்மையோட அதை ஏத்துப்பீங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு”

” ஷாலு, இதெல்லாம் சினிமாவிலேயும் கதையிலும் தான் வரலாம்.  நிஜ வாழ்க்கையில முதல் இரவில் யாரும் இப்படிப் பேசிக்கிட்டிருக்க மாட்டாங்க.”

” ப்ளீஸ், நான் சொல்ல வந்ததைச் சொல்லவிடுங்க! நான் உங்களை லவ் பண்ணறதுக்கு முன்னாடியே…….

முன்னாடியே?

சொன்னாள்.

என் தலை வெடித்தது. காலேஜ் படிப்பு  முடிஞ்சப்புறம்  ஒரு வருஷமா அவள்  லவ் பண்ணியிருக்காளா? அவ அம்மா அப்பாவுக்கும் தெரியாமலா? மகாபலிபுரம் லைட் ஹவுஸ் ஜோசியன் இதைப் பற்றி ஒண்ணும் சொல்லவில்லையே?  எத்தனை  நாள் நானும் இவளும் மணிக்கணக்கா பேசிக்கொண்டிருந்தோமே ? அப்பல்லாம் சொல்லலையே? வெறும் லவ் தானா? அதுக்கும் மேல உண்டா?

“அந்த வயசில தெரியாம வந்த ஆசை.  அதில ஒரு கிக். மொள்ள அம்மா அப்பாகிட்டே சொன்னேன்.  எனக்கு வந்த கடிதங்களையெல்லாம் காட்டினேன். அவர்கள் ஒத்துக்கவேயில்லை.  எல்லாவற்றையும் கிழித்து எறிந்தார்கள். அதற்குப் பிறகு என்னை சென்னைக்கு அனுப்பி வைத்தார்கள்.”

இதை  நான் எதிர்பார்க்கவில்லை.

“விடு ஷாலு,  கீதா சொன்னாளே?” என்று ஏதோ பேசவேண்டும் என்று உளறினேன்.

“யார் கீதா?”  – அவள் குரல் உயர்ந்தது.

“கீதா .. பகவத் கீதா .. நடந்தது ஓடட்டும் . நடப்பவை நடக்கட்டும்.  அது சரி..”   கொடேஷன் சரியா சொல்லத் தெரியாமல் தடுமாறினேன்.

“இப்ப தான் எனக்கு நிம்மதியாச்சு. உங்களுக்கு அதில ஒண்ணும் வருத்தமில்லையே?”

விஷத்தைக் கொடுத்துவிட்டு அதில் சர்க்கரை போதுமோ என்பது போலல்லவோ  கேட்கிறாள் என்று நினைத்தேன்.

“இந்தாங்கோ! இந்தப் பாலைக் குடிச்சுட்டு உங்க கதையைச் சொல்லுங்கோ!” என்றாள்.

“ஷாலு,  ஒரே ஒரு கேள்வி உன்னுடைய பழைய சமாசாரத்தைப் பத்தி. நீ லவ்  பண்ணிணியே அவன் பேர் என்ன? “

“வாட். லவ்வா?”  அலறினாள் ஷாலு.  :யாரு சொன்னா நான் லவ் பண்ணினேன்னு ? நான் லா பண்ணினேன்னு   சொன்னது உங்களுக்குக் காதில விழலையா?  சட்டம். பி ஜி எல். கரெஸ்பாண்டில் பண்ணினேன். உங்களுக்கு லவ்வுன்னா விழுந்தது?”

“அப்பாடா,  என் வயத்தில கூஜா நிறைய பாலை வார்த்தாள்.  நீ  ‘லா’ பண்ணினேன்னு சொல்லணுமா என்ன? உன் ரத்தத்திலேயே ஆர்குமெண்ட் ஊறியிருக்கு.”

இந்தக் களேபரத்தில என்னோட பழய கதையைக் கேட்க மறந்துட்டா. நல்லதாப் போச்சு!

“நீங்க எப்படியிருந்தாலும் நான் உங்களை மனசார ஏத்துக்கறதா அன்னிக்கு ஆஞ்சநேயர் ஸ்வாமி கிட்டே  வாக்குக் கொடுத்துட்டேன். சரி, நம்ம அக்ரிமெண்டுக்கு வருவோமா?”

“அதென்ன அக்ரிமெண்ட்? ஓஹோ ! கல்யாணத்துக்கு முன்னாடி லா(வ் ) பண்ணின குசும்பா?”

“உங்களை நான் மகாபலிபுரத்தில  பாத்த அன்னிக்கு எனக்குத் தூக்கமே வரலை. கனவில நம்ம ரெண்டு பேருக்கும் அன்னைக்கே கல்யாணம் ஆயிடுச்சு. நடு ராத்திரி எழுந்திருச்சு  உங்க  பேரை மேஜை மேலேயிருந்த பேப்பரில் எழுதினேன். அப்போதான் தெரிஞ்சுது அது ஒரு ஸ்டாம்ப் பேப்பர் என்று.   அதில நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆனபிறகு நடக்கப்போற ஒரு அக்ரீமெண்டைக் கற்பனையா எழுதினேன். இது தான் அது”  என்று காட்டினாள்.

அதை நான் சத்தமாகப் படிக்கப் படிக்க ஷாலு வெட்கத்தில் நெளிந்தாள். அதில் எழுதியிருந்ததைப்  படிக்கும்போது  எனக்கே சந்தோஷமாக இருந்தது.  இந்த மாதிரி அக்ரிமெண்ட் போட்டா எந்தக் கல்யாணத்திலும் பிரச்சினை வராது. “இவ்வளவு ஆசையாடா  ஷாலுக்குட்டி” என்று கேட்டுவிட்டு அவளை இறுக்கப் பிடித்தேன்.

அந்த அக்ரிமெண்டில் என்ன எழுதியிருந்தது என்று தெரிந்துகொள்ள ஆசையாய் இருக்கிறதா?  சாரி! லேடீஸ் மற்றும்  ஜெண்டில்மென். அதெல்லாம் கண்டிப்பா பர்சனல்.  உங்க ஆசையைத் தூண்டிவிட்டதற்காக ஒரே ஒரு ஐட்டம் மட்டும் சொல்லுகிறேன்.

கண்டிஷன் நம்பர் 7: என்ன தகராறு வந்தாலும் ராத்திரி பத்து மணிக்குக் கட்டிலில் கட்டிப் பிடித்துக் கொண்டு ‘மன்னிக்க வேண்டுகிறேன்’ என்ற பழைய பாடலின் முதல் வரியை மூன்று முறை பாடவேண்டும்.

ஆனால் குவிகத்தில் எழுதிவரும்  இந்தத் தொடர்  எனக்கும் ஷாலுவுக்கும் இருக்கிற கல்யாண அக்ரிமெண்ட்டின்  அடிவாரத்தையே அசைத்துவிடும் போலிருக்கிறதே !

அப்போது போன் அடித்தது. குவிகம் ஆசிரியர்தான். கசாமுசான்னு கத்தினார்.

” நகைச்சுவைத்  தொடர் என்று சொல்லிவிட்டு ஏதோ சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் பினாத்திக் கொண்டே போகிறீர்களே? தேவையில்லாமல் மோடிஜியை இழுத்திருக்கிறீர்கள். யோகாவையும் நமது கலாச்சாரத்தையும் கிண்டல் செய்கிறீர்கள். பெண்களை மிகவும் கேவலப்படுத்துகிறீர்கள். ஹிந்து மதத்தையும்  கோமாதா பூஜையையும்   பஜ்ரங் பலியையும்  தவறாகச் சித்தரித்திருக்கிறீர்கள். குழந்தைகள் மனதில் தீவிரவாத எண்ணத்தை விதைக்கிறீர்கள்.  ஆர்குமெண்ட் என்ற பெயரில் அராஜகம் செய்கிறீர்கள். இதனால்  சில அரசியல் கட்சிகள் குவிகத்தைத் தடை செய்யவேண்டும் என்று போராட்டம் நடத்தத்  திட்டமிட்டிருக்கிறார்கள். இந்தக் குற்றங்களுக்கு  அடுத்த மாதக் கதையில் சரியான பதில் சொல்லவில்லை என்றால் அத்துடன் கதை நிறுத்தப்படும். விட்டுப்போன செய்திகளை பொன்னியின் செல்வன் மாதிரி நாலைந்து கேள்வி-பதிலில் நானே முடித்து விடுவேன்”  என்று ஒரே மூச்சில் சொன்னார்.

அதைதொடர்ந்து ஒரு சம்மன் எஸ்‌எம்‌எஸ் . குருஜினியிடமிருந்து வந்தது

என்னுடைய இந்தத் தொடரைப் படித்துவிட்டு ஷாலு என்னைப் பத்தி குருஜினியிடம் போட்டுக் கொடுத்துவிட்டாள்.   கிட்டத்தட்ட வக்கீல் நோட்டீஸ் மாதிரி இருந்தது  அந்த எஸ் எம் எஸ்.   ” நீங்கள் என் சிஷ்யையிடம் தகாத முறையில் நடந்துகொண்டதற்காகவும், (அடிப்பாவி!) அவர்களின் கவுரவத்திற்குக் குந்தகம் ( குந்தகம் அப்படின்னா  என்னா   சார்)   விளைவித்ததற்காகவும் உங்கள் மீது குருஜினி நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்குடன்  ஒரு விசாரணைக் கமிஷன் வைத்திருக்கிறோம்.

ஜட்ஜ்  ‘என்னம்மா இப்படி பண்ணறீங்க’ புகழ் விஜயலக்ஷ்மி அம்மையார்.

அடுத்த ஜூலை மாதம் 15ஆம் தேதி நீங்கள் ஆஜராகவேண்டியது. உங்கள் சாட்சியங்கள் ஷிவானி , ஷ்யாம், ஷாலுவின் அப்பா , அம்மா மற்றும் பிளாட்டில்  இருக்கும் சில்க் ஸ்மிதா அவர்களுக்கும் சம்மன் அனுப்பியிருக்கிறது.  உங்களுக்குத் தேவையானால் ஒரு வக்கீலை நியமித்துக் கொள்ளலாம்.  “என்னையும் என் குழந்தைகளையும் கேவலப்படுத்துவதற்காகவே  இந்தத் தொடர் எழுதப்பட்டு வருகிறது . இதனை  உடனே தடை செய்யவேண்டும்  ” என்று  புகார் கொடுத்த ஷாலு தனக்குத் தானே வாதிடுவதாக அறிவிப்பு அனுப்பியிருக்கிறாள்.

இந்தக் கதை இப்போது நீதி மன்றத்தின் பார்வையில் உள்ளது.  இடைக்காலத் தடை இல்லையென்றால்  கதை தொடரலாம்.

(வாய்தா ஏதும் இல்லையென்றால் அடுத்த மாதம் முடியலாம்)

ஷாலு மை வைஃப் -எஸ்எஸ்

ஷாலு முதலில்  மோடிஜியைப் பார்த்ததைப் பத்திக் கொஞ்சம் பிகு பண்ணிக்கொண்டு சஸ்பென்சில் என்னை நிறுத்தி வேணுமென்னே என்னை டீஸ் செய்து, பிறகு  கொஞ்சம் கொஞ்சமாக மெகா சீரியல் மாதிரி நடுநடுவே கமர்சியல் பிரேக்குடன் சொன்னாள்.  என்ன இருந்தாலும் நம்ம நாட்டுப் பிரதமரை வெளிநாட்டிலே பார்த்து, அவரோட பேசி, அவர் கொடுத்த டீயைக்  குடித்த அனுபவம்  யாருக்குக் கிடைத்தாலும்  அவர்கள் தலைகால் புரியாமல் ஆடுவதில் கொஞ்சமும் தப்பில்லை. ஷாலு ஆனாலும் ரொம்பவே அடக்கி வாசிக்கிறாள் . ஒருவேளை குருஜினியோட … Continue reading

ஷாலு மை வைஃப் (எஸ் எஸ் )

 

South Indian parents and children operating laptop MR748S 748T 748U 748V

ஷாலு சொன்னதைக் கேட்டு அதை என் மனசில் உள்வாங்கி நான் அதைப் புரிந்து கொள்ளக் கொஞ்சம் நேரம்  பிடித்தது. அப்படியும் சரியாகப் புரியவில்லை.

இதற்கு ஷாலு அடிக்கடி சொல்லும் வார்த்தை – “இந்த ஆம்பிளைங்களே இப்படித்தான். பொண்டாட்டி   சொன்னா  அதைப் புரிஞ்சிக்க முயற்சியே செய்ய மாட்டாங்க” இதற்குப் பதில் எப்பவும் என் மனசில் ஓடும் ‘ ஏம்மா, தாயிங்களா! புருஷன் காரன் புரிஞ்சிக்கிற மாதிரி என்னிக்காவது சொல்லியிருக்கீங்களா?” ஆனால் அதைச் சொல்லிவிட்டு அதனால் விளையும் பக்க விளைவுகளை  நன்றாகப் புரிந்துகொண்டதால் அந்தப் பதில் மண்டையில் உருவாகி தொண்டையிலேயே நின்றுவிடும் .

அதுக்கு மேலே  போய் “உங்களுக்கெல்லால் எதையும் ரெண்டாந்தரம் சொன்னாத் தான் புரியும். ஏன்னா முதல் தரம் எதைச் சொன்னாலும் நீங்க அதைக் காது கொடுத்துக் கேட்க மாட்டீங்க! ”  இந்த டயலாக்கை எப்போ கேட்டாலும்  எனக்கு ரெண்டாம் தாரம் – முதல் தாரம் அப்படின்னு காதில் விழுந்து நமுட்டுச் சிரிப்பு வரும். அதைப் பாத்தா ஷாலுவுக்குப் பத்திக்கிட்டு வரும்.

சமீபத்தில வாட்ஸ் அப்பில  ஒரு ஜோக் வந்திருந்தது. மனைவிக்கும் கேர்ள் பிரண்டுக்கும்  என்ன  வித்தியாசம் என்று விலாவாரியா சொல்லியிருந்தாங்க.

மனைவி இருக்கா.ளே  அவ டி வி மாதிரி. கேர்ல்பிரண்ட் மொபைல் மாதிரி.

வீட்டிலே டி‌வி பாப்போம். ஆனால் வெளியே போகும் போது மொபைலத் தான் எடுத்துக்கிட்டு போவோம்.

சிலசமயம் டி‌வி ஐப் பார்த்து ரசிப்போம். அதுவும் புதுசா வந்த போது. ஆனால் மொபைலோடத் தான்  எப்பவும் விளையாடிக் கிட்டே இருப்போம்.

டிவி ஆயுசுக்கும் ப்ரீ. ஆனால் மொபைலுக்கு நீங்க சரியா பணம் போடலைன்னா கனெக்ஷன்  துண்டாயிடும்

டிவி எப்பவும் பெருசா குண்டா இருக்கும். சிலது ஒல்லியா குச்சி மாதிரியும் இருக்கும். ஆனால் எல்லாம் பழசு. மொபைல் கவர்ச்சியா வளைவும் சுழியுமா கைக்கு அடக்கமா இருக்கும்.

என்ன, டிவிக்கு செலவு கொஞ்சம் கம்மி தான். ஆனால் மொபைல் உபயோகத்துக்கு தகுந்த மாதிரி செலவும் எகிறிக் கிட்டே  போகும்.

மொபைல்ல இன்னொரு  சவுகரியம். அதுக்கு ரிமோட் கிடையாது.

முக்கியமான சமாசாரம். மொபைல்ல கேட்கவும் செய்யலாம். பேசவும் செய்யலாம். ஆனால் டிவி , அது மட்டும் தான் பேசிக்கிட்டே இருக்கும். பிடிச்சாலும் பிடிக்காட்டியும் கேட்டுத்தான் ஆகணும்.

டிவியை கொஞ்சம் தள்ளி நின்னு பார்த்தா தான் நமக்கு நல்லது. மொபைல் அப்படி இல்லே. நெருக்கமா பாக்கெட்டில வைச்சுக்கலாம்.

இதை ஷாலு கிட்டே படிச்சுக் காட்டினேன். ” ஆனாலும் இந்த ஆம்பிளைங்களுக்கு ஏன் புத்தி இவ்வளவு சீப்பா போகிறது? நாங்களும் தான் மொபைல் வச்சுக்கிறோம். எப்பவாவது அதை பாய் பிரண்டு . புருஷன்காரனை  குத்துக்கல்லு, கிரிக்கெட் பாக்கிற மிஷின், தின்னுட்டு தூங்கற  ஜடம்,  கம்ப்யூட்டர் பைத்தியம், பக்கத்து வீட்டை எட்டிப் பாக்கிற  ஆந்தை, ஜொள்ளு பைப் அப்படின்னு அடிக்கடி சொல்றோமா?” என்று அடி மேல் அடி போட்டுத் தாக்கினாள்.

சும்மா ஒரு ஜோக் சொன்னா இப்படிக்  கோவிச்சுக்கிறியே?

பெண்கள்னா  உங்களுக்கு எப்பவுமே இளக்காரம்.   நானும் ஆம்பளைங்களைப் பத்திச் சொல்லுறேன் கேட்டுக்கோங்கோ ! நாங்க நாலு பெண்கள் சந்திச்சா பேரைச் சொல்லிக் கூப்பிட்டுக்குவோம் ! ஆனா நீங்க தடியா, மாமு, லூசுன்னு அப்படன்னு தானே கூப்பிடறீங்க?

அது சரி, நாங்க எங்களுக்குத் தேவையானா  பத்து ரூபாய் பெருமான சாமானை 20 ரூபாய் கொடுத்து வாங்குவோம். ஆனா நீங்க 20 ரூபாய் சாமானை 10 ரூபாய்க்கு உங்களுக்குத் தேவையில்லாட்டி கூட    தள்ளூபடின்னா  வாங்குவீங்க!

இதுக்கு ஒண்ணும் கொறைச்சல் இல்லே! நாங்க  ஏன் உங்க மாதிரி ஆட்களைக் கல்யாணம்  பண்ணிக்கறோம்னு தெரியுமா? அதுக்கக்கப்பறமாவது நீங்க திருந்துவீங்கன்னு தான். ஆனா நீங்க மாறறதேயில்லை.

நாங்க ஏன் உங்களைக் கல்யாணாமா செஞ்சுகறோம்னு தெரியுமா? நீங்க முன்னாடி இருந்த மாதிரி தேவதையா எப்பவும் மாறாம இருப்பீங்கன்னு நினைச்சு தான். ஆனா நீங்க கல்யாணம்  ஆன உடனே பத்ரகாளியா மாறிடறீங்க!

அதுக்கு என்ன காரணம்  தெரியுமா?   நாங்க கல்யாணம் ஆகிற வரைக்கும் எப்பவும் எங்க எதிர்கால நிலமையை நினைச்சு பயந்துகிட்டிருப்போம்.

ஆனா , எங்களுக்கு எங்க எதிர்காலத்தைப் பத்திய கவலையே கல்யாணத்துக்கு அப்புறம் தான்   வருது.

அது எப்படியோ போகட்டும்! நாங்க எப்பவும் எவ்வளவு டீஸண்டா  டிரஸ் பண்ணிக்கறோம். நீங்க எப்பவும் லுங்கி -கிழிசல் பனியன் தான்.   கொஞ்சம் கூட விவஸ்தையே கிடையாது.

அதெல்லாம்  விடு, நீங்க எத்தனை தடவை டிரஸ் மாத்துவீங்க ? காலையில எந்திரிச்சதும்,, குளிச்சிட்டு வந்ததும். கோவிலுக்கு போகும்  போது , குப்பையைக் கொட்டும் போது , புஸ்தகம் படிக்கும் போது, செடிக்கு தண்ணி ஊத்தும் போது – இப்படி ஒவ்வொரு வேளைக்கு ஒவ்வொரு டிரஸ். தேவை தானா? நாங்க கல்யாணத்துக்கோ எழவுக்கோ போனா தான் டிரஸ்சே மாத்திக்கறோம்.

நிறுத்துங்க ! உங்களுக்கு நம்ம ஷாSouth Indian parents and children MR748S 748T 748U 748Vலினி ,ஷ்யாம் அவங்களைப் பத்தி என்ன தெரியும்? போன காப்பரிக்ஷையில  ரெண்டு பேரும் என்ன ரேங்க் வாங்கினாங்கன்னு சொல்லுங்க பாப்போம்.

ரேங்க் கார்டை என்  கண்ணிலே  காட்டவே இல்லையே ?

உங்களை மாதிரி ஆளுங்களை எல்லாம் திருத்தவே முடியாது. இதைப் பத்தி தான் போன மாசம் எங்க மகிளா சபாவிலே .. “

இத நான் நூறு தடவை கேட்டுட்டேன். அதுக்கு மேல கேக்கிற பொறுமை எனக்கு அப்போ இல்லை.

அதெல்லாம் விடு, ஷாலு,  உன்னோட புது போஸ்ட் பத்தி நீ சொன்னது உண்மையா? நீ தமிழகக் கோமாதா-காமதேனு முன்னேற்றக்   கழகத்தின் கொ.ப.செ யா? GKMK பேரு நல்லா இருக்கு.

“சே! எவ்வளவு பெரிய  கான்செப்ட். அதைப் போய் இப்படிக் கழகம், கொ.பா.செ ஈனு கொச்சையா சொல்றீங்களே? பை த பை , அதென்ன கொ.ப.செ. கேட்டு ரொம்ப நாளாச்சு?

கொள்கை பரப்புச் செயலாளர். அம்மாவுக்கு  அந்தக் காலத்தில எம்.ஜி.ஆர் இருந்த போது கிடைச்ச போஸ்ட். அது என்ன கோமாதா? காமதேனு?           நீ கொஞ்சம் விவரமா சொன்னாத் தானே புரியும்?     என்று சொல்லி நாக்கைக் கடித்துக் கொண்டேன். இனிமே அரை  மணிக்கு ஷாலுவை யாரும் நிறுத்தமுடியாது.

டி வி ஆரம்பமாகிவிட்டது.

உங்களுக்குப் புரியற  மாதிரி விளக்கமா சொல்றேன். நடுவில குறுக்க பேசக்கூடாது.

நாங்க  சிங்கப்பூர் போறதுக்கு முன்னாடி வீட்டிலே ஆபூஜை பண்ணினோமே  ஞாபகம் இருக்கா?

எனக்கு ஆயுத பூஜை தான் சட்டென்று ஞாபகம் வந்தது. அப்பறம் தான் குருஜினியும் இவளும் சேர்ந்து கோமாதா பூஜை செய்தது ஞாபகம் வந்தது.  அதிலிருந்து அவ ஆரம்பிச்சா இன்னும் மூணு மணிநேரம் பழைய சரஸ்வதி சபதம் மாதிரி ‘கோமாதா வண்ணக் குல மாதா’ அப்படின்னு ஈஸ்ட்மேன் கலரில் ஆரம்பிச்சிடுவா. அதனாலே பேச்சை மாற்றி ,   “அதில்லை. ஷாலு, சிங்கப்பூர் ஏர்போர்ட்டில் மோடிஜியை பாத்ததிலிருந்து சொல்லு.”

ஒரு பத்துப் பதினைஞ்சு நாளை பாஸ்ட் பார்வேர்ட் செய்ய முயற்சித்தேன்.

உங்களுக்கு நல்லா புரியனும்னா அந்த பூஜையிலிருந்து தான் ஆரம்பிக்கணும்.

விதி வலிது தான். சும்மாவா சொன்னாங்க ‘மனைவியோட ஆர்கியூ பண்ணற போது கடைசி ஆர்குமெண்ட் அவளோடது தான். அதுக்கப்பறம் கணவன் பேசறதெல்லாம் அடுத்த ஆர்கியூமெண்டுக்கு  ஆரம்பம்’ என்று. ஷாலு அப்படித்தான். ஏதோ ஒரு படம் வந்ததே. அது என்னா ஸ்பீட் இல்லே அன்ஸ்டாப்பபிள் . ஒரு ரயில் நிக்காமே ஓடிக்கிட்டிருக்குமே. அது தான் ஷாலு.

” சும்மா இருங்க! நம்ம குருஜினி நம்ம வீட்டிலே ஆபூஜை செஞ்ச நியூஸ் டெல்லி வரைக்கும் போயிடுச்சு. அதனால தான் குருஜினியை சென்னை ஏர்போர்ட்டிலே உலக யோக தினத்தில யோகா எல்லாம் செய்யச்சொன்னாங்க.   நாங்க சிங்கப்பூர் போற அன்னிக்கு அதைச் செஞ்சதில மோடிஜி  ரொம்ப  குஷி ஆயிட்டாராம்.  அதனால எங்களை சிங்கப்பூரிலேயே பாக்கணும்னு திட்டம் போட்டாராம். ஆனா அவர் வந்து சேர்ர  அன்னைக்குத் தான் நாங்க அங்கிருந்து கிளம்பற நாள்.  அன்னிக்கு சிங்கப்பூரில அவர் எக்கச்சக்கமான ஒப்பந்ததிலே கையெழுத்து வேற போடணுமாம்.

சரி, அடுத்த நாளைக்கு நான் பிரயாணத்தைச் சேஞ்ச் பண்ணிக்கலாம்னு பாத்தா எங்க விசா அன்னிக்கோடா முடிஞ்சு போகுது. அதனால ஏர்போர்ட்டில  சந்திக்க முடிவு செஞ்சோம். டெல்லி பஜ்ரங்க்பலி அங்கிள் தான் போனிலே குருஜினியோட பேசி எல்லா ஏற்பாடும் செஞ்சார்.

சிங்கப்பூர் ஏர்போர்ட்டிலே நானும் குருஜினியும் வி ஐ பி லவுஞ்சில் உக்காந்திருக்கோம். சுத்திலும் செக்யூரிட்டி. எனக்கு ஹார்ட் படபடன்னு அடிச்சுக்கிட்டிருந்தது. குருஜினியோ அலட்டிக்காம தைரியமா இருந்தாங்க. அப்போ தான் சொன்னாங்க. “எனக்கு மோடிஜியை ரொம்ப வருஷமா தெரியும். அவர் காந்திநகரில முதன் முதலா முதல் அமைச்சரா ஆன போது வாழ்த்து சொன்ன முதல் ஆள் நான் தான். அப்போ  அவர் வீட்டுக்கு எதுத்தாப்போல இருந்த ‘க பார்க்கில’  கோமாதா பூஜை செஞ்சுகிட்டிருந்தேன். ( ஷாலுவின் எக்ஸ்ட்ரா நியூஸ்: அந்த ஊரில ரோட்டுக்கு சர்க்கிளுக்குப் பேர் எல்லாம் க, கா, கி, கீ ,  என்று இருக்குமாம்.)

நடுவில நான் ஒரு கேள்வி மடத் தனமா கேட்டதில குருஜினிக்குக் கெட்ட கோபம் வந்திடிச்சு தெரியுமா?

எனக்கெப்படித் தெரியும்? நீ வழக்கமா கேக்கற மாதிரி கேட்டிருப்பே?

கதை சொல்ற ஜோரில் என்னோட கிண்டலை அவ கவனிக்கவில்லை.  அதனால நான் தப்பிச்சேன் 

“மோடிஜி எப்ப அடையார் காந்திநகரில் இருந்தார்னு கேட்டேன்”

இப்படிக்  கேட்டா குருஜினிக்கென்ன, எனக்கே கோபம் வரும். குஜராத்தின் கேபிடல் காந்திநகர்னு தெரியாதா? ஜியாக்கிரபி கிளாசில அதைச் சாய்ஸில  விட்டிட்டியா? இனிமே ஷிவானிக்கு வேற டீச்சர் பாக்க வேண்டியது தான்.

“எல்லாம் தெரிஞ்சவங்க நீங்களே இனிமே ஷிவானிக்கும் ஷியாமுக்கும் பாடம் சொல்லிக் குடுங்க. இனிமே எனக்கு எக்கச்சக்க வேலை இருக்கு”

இப்போ நான் ஜகா வாங்கவேண்டிய நேரம்.

” அத்தை விடு ஷாலும்மா,  நீ மோடிஜியை மீட் பண்ணினதைப் பத்தி இன்னும் சொல்லவே இல்லையே?

அந்த கோமாதா பூஜை பிரசாதத்தை  குருஜினி  மோடிஜி  கிட்டே கொடுத்த  அன்னிக்கு தான் அவர் சி எம் ஆகிட்டாராம். அதே மாதிரி 2014இல் குருஜினி டெல்லியில கோமாதா பூஜை செஞ்சு  மோடிஜி கிட்டே பிரசாதம் குடுத்த அன்னிக்கு தான் அவர் பி எம் என்ற நியூஸ் வந்ததாம். இதைப் பத்தி என்ன சொல்றீங்க? ரெண்டு தடவையும் பஜ்ரங்கி அங்கிள் தான் கூடவே இருந்திருக்காராம்.

என்ன சொல்வது? காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதைன்னு ஷாலுக்கிட்டே அப்போ சொல்ற தைரியம் எனக்கில்லே .

அப்படி நாங்க பேசிக்கிட்டிருக்கும் போது மோடிஜி அந்த ல
வுஞ்சுக்கு வந்தார். எனக்கு அப்படியே “36 வயதினிலே ” ஜோதிகா மாதிரி மயக்கம் போட்டு விழுந்திடுவேனோன்னு பயம் வந்திடுச்சு. தலை சுத்தற மாதிரி இருந்தது.

கொஞ்சம் இருங்கோ ஷிவானி கூப்பிடற மாதிரி இருக்கு.” என்று என்னை சஸ்பென்ஸ் லவுஞ்சில் நிறுத்தி விட்டு ஷாலு பறந்துவிட்டாள்.

எப்பவும் அவ இப்படித்தான். நல்ல மூடிலே இருக்கும்
 போது ‘ போன் அடிக்கிற மாதிரி இருக்கு . எங்க அப்பாவாத் தான் இருக்கும் ‘ னு ஓடிப் போய் விடுவாள்,

“காத்திருந்தேன்.. காத்திருந்தேன்.. “

 

ஷாலு மை வைஃப் (எஸ் எஸ் )

swami1

 

“நேனு  பேரு  அருண் ஷர்மா. டெல்லி பஜ்ரங்கபலி ஹெட்டு . என்ன  இப்படி சொஸ்த்தமா  சென்னைத் தமில்லே  பேசரான்னு  உனக்கு   வொண்டரா இருக்குடா? நான் பச்சாவா இருந்த அன்னிக்கு மெட்ராசிலே மூணு கிளாஸ் பாஸ் பண்ணியிருக்கான்.”

வி ஐ பி லவுஞ்ச்சில் அந்த சிவப்புக் குர்தாக் காரரோட சட்டை, வேஷ்டி குங்குமப்பொட்டு,  பம்ப்ளிமாஸ் முகம்,  தொப்பி, பான் போட்ட வாய் , அவரோட நடவடிக்கை  எல்லாமே ஆச்சரியமா இருக்கும் போது அவருடைய சென்னைத் தமிழ்  மட்டும் பெரிசா எனக்கு ஆச்சரியமா இல்லை.

அவர் சொன்ன பிறகு  தான் தெரிஞ்சுது அவர் தமிழ்லே பேசிக் கிட்டிருக்கார்னு. ஏதோ தெலுங்கு, மலையாளம், கன்னடம் எல்லாம் கலந்த திராவிட மொழியை ஹிந்தியில் தொட்டுக்கிட்டு பேசற மாதிரி இருந்தது. சௌகார்பேட்  சேட் மாதிரி நம்பிள்கி நிம்பிள்கி  அப்படீன்னு பேசாம இருந்தவரைக்கும் சரி.அவர் ஏன் பேசறார்னே புரியலை. அப்பறம் தானே அவர் என்ன பேசறார்னு புரியறதுக்கு.ஷியாமும், ஷிவானியும் அவரை ஏதோ வித்தை காட்றவர் மாதிரி பார்த்துக்கிட்டு கெக்கே பிக்கேன்னு சிரிச்சுக்கிட்டிருந்தாங்க. நல்ல வேளை பயந்துக்கலை.

“சிங்கப்பூர் ஏர்போர்ட் மேலே மோடிஜி கூட மாதாஜியும் மேடமும் மீட் செஞ்சு  டீ கொடுத்துச்சே,தெலுசா? “

இதுக்கு மேலே அவரைத் தமிழ் பேச விட்டா எனக்குத் தமிழ் சுத்தமா மறந்து போயிடும். அதனால நான் ஹிந்தியில் பேச ஆரம்பித்தேன். நானும் கான்பூரில நாலு வருஷம் குப்பைகொட்டியிருக்கேன். ஷர்மாஜி ரொம்ப குஷியாயிட்டார்.

ஷாலுவோட குருஜினி தமிழ் நாட்டுக்கு வர்ரதுக்கு முன்னாடி குஜராத்தில காந்திநகர்லே இருந்தாங்களாம்.  அப்போ அங்கே மோடிஜி  தான் குஜராத்துக்கு முதலமைச்சர் .காந்திநகர் தானே குஜராத்தோட தலைநகரம்.  குருஜினியை  மோடிஜிக்கு நல்லா தெரியுமாம். காந்திswamiநகரில் குருஜினியின் கோமாதா பூஜைக்கு மோடிஜி கூட வந்திருக்காராம்.

அதுக்குள்ளே சர்மாவின் போன் அடித்தது. “கொஞ்சம் இருங்கோ அமிட்ஜி கூப்பிடறது.” என்று சொல்லி ஹிந்திக்கு எண்   ஏதோ ஒன்றை அழுத்தினார். ” யாரு, அமிதாப் பச்சனா ? ” என்று நான் கேட்க,  நஹி ! அமித் ஷா ” என்று சொல்லிவிட்டு லவுஞ்சின் ஓரத்துக்குப் போனார்.

” யாருப்பா இவர்? ராமாயண் சீரியல்ல வர்ற அனுமார் மாதிரி இருக்கார்? – ஷிவானிக்குக் கொழுப்பு கொஞ்ச நஞ்சமில்லை.

‘டீ லூசு ! அவருக்குக் கேட்டிருந்தா உன்னை பே  ஆப் பெங்கால்ல தூக்கிப் போட்டிடுவாரு”ஷ்யாம் மிரட்டினான்.

நான் குறுக்கே புகுந்தேன். “ஷ்யாம்! நீ சொல்றது தான் தப்பு. அவர் ஷிவானி சொன்னதைக் கேட்டா அப்படியே குஷி ஆயிடுவார். ஏன்னா அவர் பஜ்ரங்கபலி தலைவர்”

“பஜ்ரங்க்பலின்னா என்னப்பா பாகுபலியோட பிரதரா ?” ஷிவானி  கேட்டாள்.

“ஆஞ்சநேயருக்கு இன்னொரு பேரு, பஜ்ரங்கி  பாயிஜான் ‘ படம் டிவியில பாக்கலே? “

“கரெக்ட். அப்பா! இவரைப் பாத்தா சல்மான்கான் மாதிரி தான் இருக்கு.” என்றான் ஷ்யாம்.

” ஷ்யாம், இதுக்கு வேணுமுன்னா அவர் கோவிச்சுக்கலாம். “

“ஏம்ப்பா, இன்னும் அம்மாவைக் காணோம்?. நாம ஏன் இங்கே உக்காந்திருக்கிறோம்? பிளேன் வர்ற இடத்துக்கே போலாம்  ” ஷிவானி சிணுங்க ஆரம்பித்துவிட்டாள்.

” ஏன் குழந்தை அழுறாங்க?  ஏதோ பஜ்ரஞ்கின்னு பேச்சு கேட்டுதூ? ” என்று  அமித் ஷா வோடு பேச்சை முடித்துவிட்டு வந்த சர்மா கேட்டார்.

இந்த அரைகுறை தமிழ் பேசறவங்க எப்பவும் கார் ரயில் அதையெல்லாம் வர்ராருன்னு சொல்வாங்க,  மனுஷங்களை அதுவும் குறிப்பா பெரியவங்களை வருது போகுது இல்லாட்டி வர்ரான்னு  சொல்வாங்க. திருத்தவே முடியாது. நாமளும் அப்படித்தான் ஹிந்தியில ஆண்பால் பெண்பால் எல்லாத்தையும் உல்டாவா சொல்வோம்.

ஒண்ணுமில்லே ஷர்மாஜி ! உங்களைப் பாத்தா அப்படியே ஹனுமார்ஜி மாதிரியே இருக்குதாம் ” என்று நான் ஹிந்தியில் சமாளிபிகேஷன் செய்ய அவர் புல்லரித்துப்போய் ஷிவானியைத் தூக்கித் தோள் மேல் வைத்துக் கொண்டார். விட்டா அப்படியே ஸ்ரீலங்கா ஏர்வேய்ஸ்சுக்குப் போட்டியா பறந்தே போயிடுவார் மாதிரித் தோன்றியது.

South Indian woman smiling : Stock Photo

அதற்குள் டிராலியில் பொட்டிகளைத் தள்ளிக் கொண்டு குருஜினியும் ஷாலுவும் அந்த லவுஞ்சுக்குள் பிரவேசித்தார்கள். ‘மாதாஜி’ என்று இவர் கத்த ஷர்மாஜி என்று குருஜினி கத்த – இந்த இரண்டு கத்தலுக்குப் பிறகு அந்த ஏர்போர்ட் வளாகத்தில் இருந்த  இரண்டு கண்ணாடிகள் விழுந்து நொறுங்கின.

( அடுத்த நாள் ஏர்போர்ட்டில் கண்ணாடி 59,60 வது தடவையாக முறையே விழுந்தன என்று    எல்லா பத்திரிகைகளும் பிரசுரித்தன.ஆனால் அதற்கான காரணத்தை யாரும் சொல்லவில்லை)

‘கண்டேன் சீதையை ‘ என்ற பாணியில் ஷர்மாஜி குஷியாகி மாதாஜி காலில் விழுந்தார். அது தான் சாக்கு என்று ஷிவானி ஓடிப்போய் ஷாலுவைக்  கட்டிக் கொண்டாள்.ஷியாமும் ஓடிப்போய் அம்மாவுடைய ஹேன்ட்பேகை வாங்கி அங்கேயே திறந்து பார்க்க ஆரம்பித்தான். யாரும் இல்லையென்றால் அவன் முதுகில் என் கை பாய்ந்திருக்கும்.  குருஜினியும் ஷர்மாஜியும் குஜராத்தியில் பேசிக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். அவர்கள் சத்தமா பேசினாலும் எனக்கு சுத்தமா ஒண்ணும் புரியலை.

ஷாலு  அவர்கள் இருவரும் பேசுவதையே மாறி மாறி ஏதோ புரிவது போல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

பிரகாஷ் ராஜ் பாணியில், ” இங்கே என்ன நடக்குது? ” ன்னு கத்தணும் போல இருந்தது எனக்கு.

ஷர்மாஜி ஷாலுவிடம்,  நீங்க உங்க வீட்டுக்குப் போய் விஷயத்தை உங்க ஹஸ்பெண்டிடம் சொல்லுங்க. அவர் உதவியோட நீங்க வெற்றிப் பாதையில் போகலாம்’ என்று  ஹிந்தியில் சொல்ல ஷாலு ஹிந்தி புரியாமல் முழி முழியென்று முழித்தாள். அப்போது தான் அவள் ஹிந்தியில் விஷாரத் எழுதியிருக்கிறாள் என்று அவள் அப்பா கல்யாணத்துக்கு முன் சொன்னது பொய்யின்னு எனக்குத் தெரிஞ்சுது.       ஆளாளுக்குப் பேசிக்கிட்டேபோறீங்க. என்னன்னு  சொல்லுங்களேன். சஸ்பென்ஸ் தாங்கலே” என்று கோபமா சொல்ல முயற்சி செய்தேன். ஆனால் அது காமெடி பீஸ் மாதிரி தான் வெளிவந்தது.

“மாதாஜியை நானே வீட்டிலே கொண்டு போய் விட்டிடறேன். ஷாலு மேடம், நீங்க நிதானமா யோசிச்சு வையுங்க. நாளைக்கு மத்தியானம் உங்க வீட்டுக்கு லஞ்சுக்கு நானும் மாதாஜியும் வர்ரோம்” என்று அழகான ஆங்கிலத்தில் அவர் சொன்னது, என்னடா, அவர் வீட்டுக்கு சாப்பிட வாங்கண்ணு கூப்பிடறமாதிரி  சொல்றாரேன்னு தோணிச்சு.

ஷாலு நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டே என் பின்னாடி வந்தாள். நான் என் பொண்டாட்டியையும்  குழந்தைகளையும் பொட்டிகளையும் இழுத்துக் கொண்டு காருக்கு வந்தேன்.

” பத்து நாளிலே நீங்க மூணு பேரும் இளைச்சுப் போயிட்டீங்க ” என்று ஷாலு சொன்னாள். ” நீயும் தான் இளைச்சுப் போயிட்டே ” ன்னு சொன்னதும் தான் அவளுக்கு நிம்மதியாச்சு. உண்மையில எல்லாரும் ஒரு கிலோ எடை கூடித் தான் போயிருக்கோம். ஷாலுவும் வெயிட் போட்டிருக்கிறாள் என்பதை அவள் ஜாக்கெட்டே சொல்லுது.

“அப்பா பிளீஸ், நாங்க மூணு பேரும் பின் சீட்டில உக்கார்ந்துக்கிறோம்” என்று சொல்லி விட்டு பொட்டிகளை டிக்கியில் வைத்துவிட்டு அவர்கள் பின் சீட்டில் ஏறிக் கொண்டார்கள். நான் காரை ஸ்டார்ட் செய்துவிட்டு உடனே ஆப் பண்னினேன்.

” ஷாலு ! ” சிங்கப்பூர் – ஏர்போர்ட்- மோடி – ஷர்மா- குருஜினி- குஜராத்தி இதெல்லாம் என்ன ? எனக்கு ஒண்ணும் புரியலை. என்னன்னு சொல்லு அதுக்கப்பறம்  காரை ஸ்டார்ட் பண்றேன்” என்றேன்.

” சுருக்கமா  சொல்றேன். கேட்டுக்கோங்கோ!  என்று ஷாலு சொல்ல ஆரம்பிக்கும் போது என் போன் அடித்தது. வேற யாரும் இல்லை. என் அருமை மாமனார் தான்.

” மாப்ளே! ஷாலு வந்துட்டாளா? நான் கேள்விப்பட்டதெல்லாம் உண்மையா? எனக்கு தலையெல்லாம் சுத்துது மாப்ளே!” என்று சொன்னார்.

‘அவராவது ஏதோ கேள்விப் பட்டிருக்கிறார். நான் எதுவும் இன்னும் கேக்கவேயில்லை’  எனக்குக் கெட்ட கோபம் வந்தது. ” உங்க பொண்ணு கிட்டேயே பேசுங்கோ ” என்று சொன்ன என்னை மறிச்சு ” வேண்டாம் மாப்ளே! வேண்டாம்! அவ ஏற்கனவே சொல்லிட்டா! இரண்டு குழந்தை பெத்தபிறகு இனிமே டிரவுசர் எல்லாம் போட்டுகிட்டு, வேண்டாம் மாப்ளே வேண்டாம். அவ அம்மாவுக்கும் இது சுத்தமா பிடிக்காது’ என்று சொல்லி வாயை மூடுவதற்குள்  அவர் போன் பிடுங்கப்பட்டு ஷாலுவின் அம்மா – என் மாமியார் பேசினார். ” மாப்பிள்ளை, தப்பா நினைச்சுக்காதீங்கோ, ஷாலு செய்றது தான் கரெக்ட். இந்த மனுஷனுக்கு விவஸ்தையே போறாது. நேத்திக்கு பக்ஷி ஜோசியம் பாத்தேன்,   ஷாலு ஓஹோன்னு வருவா அப்படின்னு அவன் சூசகமா சொன்னான். ” என்று கூறினாள் என் மாமியார்.

 சரி, விஷயம் தலைக்கு மேலே போயிடுச்சு . நமக்கு ஒண்ணும் புரியலை. வீட்டுக்குப் போய் நிதானமாக் கேட்டுக்கலாம் ” என்று  முடிவு செய்து காரைக் கிளப்பினேன்.

வீட்டுக்குப் போகும் போதே குழந்தைகள் தூக்கம் பிடித்துவிட்டன. பிளைட்டில் அவள் சாப்பிடாமல் பையில் போட்டுக் கொண்டு வந்த சாப்பாட்டு ஐட்டங்களைக் குழந்தைகளுக்குக் கொடுத்தாள் ஷாலு. ஐஸ்கிரீம், சாக்லேட், பிஸ்கட், கட்லட், ஜூஸ் , குழந்தைகளுக்கு இதுவே போதும் என்று சொல்ற அளவுக்கு சந்தோஷம்.  “ஹப்பா உதக்கு பிஸ்கத்து” பாதி சாப்பிட்டுக் கொண்டே பேசியதில் ஷிவானிக்கு வார்த்தை குளறியது. ஷ்யாம் பையைத் திறப்பதிலேயே குறியா இருந்தான்.

வீட்டுக்கு வந்ததும் வாட்ச்மேன் உதவியால் பெட்டிகளையும் குழந்தைகளையும்  எடுத்துக் கொண்டு    உள்ளே நுழைந்தோம்.” இருப்பா வாட்ச்மேன் , இந்தா நீ கேட்டது ” என்று சொல்லி அவனுக்கு ஒரு வாட்ச் கொடுத்தாள்.  “ஜாக்கிரதையா வைச்சுக்கோ, சிங்கப்பூர் வாட்ச் இது” என்று சொன்னாள். “அம்மா! அம்மா தான். போன தடவை ஐயா டெல்லிக்குப் போகும் போதே சொன்னேன் வாங்கி வரலே. அது நல்லதாப்  போச்சு, இப்ப சிங்கபூர் வாட்சே  கிடைச்சிருச்சு, ஐயாவுக்குத் தான் தேங்க்ஸ் சொல்லணும்” என்று போகிற போக்கில் என்னைக்  குத்திவிட்டுப் போனான்.  அவனுக்கென்ன ஒரு விலையிலா வாட்ச் கிடைச்சுது.

” பரவாயில்லை . பத்து நாளிலே வீட்டைக் குட்டிச்சுவர் பண்ணாம நல்லாவே வைச்சிருக்கீங்க ” என்று எஃப் ஐ ஆர் போட்டாள் ஷாலு. இதுக்காக இன்னிக்கு காலைலிருந்து நானும் பசங்களும் எவ்வளவு மெனக்கிட்டிருக்கிறோம்? வசிஷ்டர் வாயாலே பிரும்ம ரிஷின்னு பட்டம் கிடைச்சா மாதிரி இருந்தது. ” ஆனாலும் குப்பையெல்லாம் கட்டிலுக்கு அடியில் போட்டிருக்கக் கூடாது” என்று அடுத்த பாலில் ஒரு சிக்ஸர் அடித்தாள். இப்போ  வசிஷ்டர்  வாயாலே பிரும்ம ராக்ஷஷன்னு பட்டம் கிடைச்சா மாதிரி இருந்தது.

ஷாலு,!  சிங்கப்பூர் போய்ட்டு வந்தப்பறம் உன்கிட்டே ஒரு ஒரு கிக் ஜாஸ்தியாயிருக்கு ” என்று சொல்லி அவளை மெல்ல என் பக்கம் இழுத்தேன். “ஐயோ ஷிவானி வந்துடுவா  ” என்று வழக்கமா சொல்ற பாட்டைப் பாடினாள்.  பிறகு லைட்டையும்  அவளையும் மெல்ல அணைத்தேன். என்னருகே படுத்துக் கொண்டாள். “என்னாச்சு வழக்கமா லைட்டை அணைச்சதும் நீங்க சொல்ற ஜோக்கைச் சொல்லலே . இருட்டிலே நான் ரொம்ப அழகாயிருக்கேன்னு.”

” ஷாலும்மா .. உண்மையிலேயே நீ இன்னிக்கு ரொம்ப  ரொம்ப அழகா  இருக்கே”

“அது சரி, சிங்கப்பூர் ஏர்போர்ட்டிலே என்ன நடந்ததுன்னு இப்போ சொல்லட்டுமா? என்று என் காதருகே கொஞ்சினாள்.

“அதெல்லாம் நாளைக்குப் பார்த்துக்கொள்ளலாம் ” என்றேன்.

அடுத்த நாள் அது என்னவென்று எனக்குத் தெரிந்த போது தூக்கிவாரிப்போட்டது ! 

(பிறகு)

ஷாலு மை வைஃப்

ஷாலு இன்னும் கொஞ்ச நேரத்தில் வரப்போகிறாள். எனக்கே ரொம்ப சந்தோஷமாயிருக்கு. குழந்தைகளுக்கு எப்படி இருக்கும்? அவர்களையும் அழைத்துக் கொண்டு ஏர்போர்ட்டுக்கு வந்தேன்.

pic8

சிங்கப்பூரிலிருந்து கிளம்பறதுக்கு முன்னாடி  ஷாலு போன் பண்ணி ச்  சொன்னாள் – சிங்கப்பூர் ஏர்போர்ட்டில  ஒரு வி‌ஐ‌பி இருக்காராம். குருஜினியும் அவளும் அவரைப்பார்த்துப் பேசிவிட்டுக் கிளம்பி வருவோம் என்று சொன்னாள்.

“யார் அந்த வி‌ஐ‌பி ” என்று கேட்டதுக்கு “அதை யார் கிட்டேயும் சொல்லக் கூடாதுன்னு  சொல்லியிருக்காங்க ” என்றாள்.

“சரி யார் கிட்டேயும் சொல்லல , நீ சொல்லு”  என்றேன்.

“அட, குறிப்பா உங்க கிட்டேயும் குழந்தைகள் கிட்டேயும் சொல்லக்கூடாதுன்னு சொன்னாங்க” என்றாள்.

” சரி, ஷிவானி கிட்டே கொடுக்கறேன். அவ தான் லாயக்கு. உங்கிட்டேயிருந்து உண்மையை வரவழைக்க” என்றேன்.

” ப்ளீஸ் அவ கிட்டே இதை சொல்லிடாதீங்கோ , அவ ஏதாவது கேட்டா நான் உளறிடுவேன் அப்பறம் பிரச்சினையா போயிடும்.”

“ஓகே , சொல்லல, ஒரு சின்ன க்ளூ கொடேன். “

” ப்ளீஸ், நான் நேரில வந்து எல்லாத்தையும் சொல்றேன். அப்புறம் சிங்கப்பூரிலிருந்து உங்களுக்குப் பிடிச்ச சென்ட் வாங்கி வைச்சிருக்கேன்”

” நீ போட்டுக்கற சென்ட் தானே? உனக்குப் பிடிச்ச சென்ட்டுன்னு  சொல்லு”

” நீங்க தானே அதையே போட்டுக்கோன்னு சொல்வீங்க! அப்பறம் பசங்களுக்குக் கேட்டதெல்லாம் வாங்கிட்டேன்.”

“எனக்கு என்ன வாங்கிட்டு வர்ரே? “

” நீங்க தான் ஒண்ணும் வேணாம். எல்லாம் சென்னையிலேயே கிடைக்குதுன்னு சொன்னீங்களே?”

“அடிப்பாவி, எங்க மேனேஜர் ஒரு லேப்டாப் கேட்டாரே வாங்கிட்டியா ?  “

“சாரி, எலெக்ட்ரானிக்ஸ் சாமான் எல்லாம்  வாங்கிட்டு வந்தா சிக்கல் வருமுன்னு குருஜினி சொன்னாங்க. அதனால் அதை வாங்கலை . அதுக்குப் பதிலா எனக்கு ஒரு ஜோடி வளையல் வாங்கிக்கிட்டேன். பின்னாடி ஷிவானி கல்யாணத்துக்கு உதவும்”  .

” நல்லதாப் போச்சு, நானே வேண்டாமுன்னு சொல்லலாம்னு நினைச்சேன். மறந்து போயிட்டேன். அந்த மேனேஜர் சாவு கிராக்கி போன வாரம்  வேலையை ரிசைன் பண்ணிட்டு ஓடிட்டான்.”

” அடப் பாவமே! என்ன பண்ணப்போறார்? “

” புதுசா ஒரு ஸ்டார்டப் ஆரம்பிக்கப் போறாராம். காபி கிளப்!  கும்பகோணம் டிகிரி காபி !  வேணுமுன்னா சிங்கப்பூரிலிருந்து அவருக்கு ஒரு காபி பில்டர் வாங்கிக் கொடுக்கலாம்”

” அவர் காபிக் கடை  வைச்சா என்ன ? டீ கடை  வைச்சா என்னா?  நான் மோடியைப் பாக்கப் போறேன்னு யாரு கிட்டேயும் சொல்லிடாதீங்க! ஐயையோ ! உங்க கிட்டே சொல்லிட்டேனே!”

“அடடா, பேரு சரியா காதிலே விழலையே ! எந்த லேடியப் பாக்கப் போறே?”

” சும்மா நடிக்காதீங்கோ, உங்களுக்குப் பாம்புச்செவின்னு எனக்கு நல்லாவே தெரியும்! “

“பாம்புக்குக் காதே  இல்லையாம்”

” சரி சரி,  உங்க கிட்டே சொல்லவும் முடியலை சொல்லாம இருக்கவும் முடியலை”

“சரி, சொல்ல வந்ததை முழுசா சொல்லிடு, இல்லாட்டி உனக்குக் கையும் ஓடாது காலும் ஓடாது. அப்புறம் சென்னை பிளைட்டுக்குப் பதிலா டெல்லி பிளைட் பிடிச்சுப் போயிடுவே”

” சரி, மனசில வைச்சுக்குங்கோ, யாரு கிட்டேயும் சொல்லக்கூடாது “

“பைத்தியமே, மனசில வைச்சுக்குங்கோன்னு  மனசுக்குள்ளேயே பேசினா எனக்கு எப்படிக் கேட்கும்? சொல்லறதுன்னா சொல்லு,  இல்லாட்டி விட்டுடு. “

“அட, நீங்க வேற,  யாரோ நான் பேசறதை ஒட்டுக்  கேட்கிற மாதிரி இருந்தது. “

” .ஓகே ஷாலு, ஒரு விஐபின்னு நீ சொன்னதும், ரஜினிகாந்த் தான் கபாலி ஷூட்டிங் முடிச்சு சிங்கப்பூர் ஏர்போர்ட்டுக்கு வறார்னு நினைச்சேன். நீ சொல்றதைப் பார்த்தா இது ரொம்ப ரகசிய மிஷன் மாதிரி இருக்கு. நேரில வந்தப்பறமே சொல்லு”

” சொல்றதை முழுசாக் கேளுங்கோ!  நானும் குருஜியும் சென்னை ஏர்போர்ட்டில செஞ்ச யோகா பயிற்சியைப் பாராட்டி வி ஐ பி லவுஞ்சில எங்களுக்கு டீ கொடுக்கப் போறார். “

” ஹை ! அவர் கையாலே டீயா? நீ ரொம்ப லக்கி கேர்ள். அவரும் உங்க கூட தான் சென்னைக்கு வர்ராரா? வந்தா  இவர் தான் என் ஹஸ்பெண்டுன்னு அறிமுகப் படுத்துவியா? “”

” அவர் வேற பிளைட் பிடிச்சு டெல்லி போறாராம்”

” அவ்வளவு தானா? வெறும் டீ யோட மீட்டிங் ஓவரா? “

இன்னொரு சமாசாரமும் இருக்கு , அதை சென்னை வந்த பிறகு சொல்றேன்”

” ஷாலு, உனக்கும் சஸ்பென்சுக்கும் ஆகாதுன்னு உனக்குத் தெரியுமில்லே? பின்னே ஏன் முயற்சி பண்றே? “”

” அப்படியா சொல்றீங்க? மற்றவை நேரில் தான் ” அப்படின்னு  போனை வைத்து விட்டாள்.

என்னவா இருந்தாலும் சரி, நேரிலேயே சொல்லட்டும். இன்னும் விலாவாரியா சொல்லுவா! அவ கதை சொல்றதைக்  கேட்கிறது ரொம்ப நல்லா இருக்கும். நடுவில நான் ஏதாவது ஏடா கூடமா பேசினா  அவளுக்கு வருமே ஒரு கோபம். காது சிவந்து போய், கண் பெரிசா விரிஞ்சு உதடு துடிக்கும்.இந்த ஷிவானியும் அப்படியே அவ அம்மா  தான். அவளுக்கும் ஷாலு மாதிரியே கோபம் வரும். அப்படியே பிஞ்சுக் கையாலே நெஞ்சிலே  குத்துவா.

pic6

“அப்பா , நாங்க ரெடின்னு ”  ஷியாமும், ஷிவானியும் வந்தார்கள். கார் ஏர்போர்ட்டை நோக்கிப் பறந்தது. பார்க் செய்யும் போதே  மொபைல் அடித்தது. “

” நீங்க தானே ஷாலு மேடத்தின் ஹஸ்பெண்ட்? ” என்ற அதிகாரக் குரல் கேட்டது.

“ஆமாம், நீங்க யாரு ? ‘  என்று கேட்டேன்.

” நான் டெல்லி பஜ்ரங்க்பலி சேனா தலைவர் ! உங்க கூட கொஞ்சம் தனியா பேசணும்”

” என்  கூட என் குழந்தைகள் வந்திருக்காங்க. நீங்க யாரு? உங்களுக்கு என்ன வேணும் ? “

pic7

” பயப்படாதீங்க !  நீங்க ஏர்போர்ட்டுக்கு உள்ளே போக டிக்கட் எடுக்க வேண்டாம்.  உங்க கூட  உங்க குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வாங்க . ஷாலு மேடம் வர்ற வரைக்கும் வி ஐ பி லவுஞ்சில் உட்கார்ந்து பேசலாம் . நான் ரெண்டாம் நம்பர் கேட் வாசலில் சிவப்பு குர்தா போட்டுக்கொண்டு உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன் ”  என்றார்.

எனக்குக் கொஞ்சம் தலை சுற்றியது.

மற்றவை பிறகு

 

ஷாலு மை வைஃப்

 

ஆஞ்சநேயர் ஜோதிடத்துக்கு டோக்கன் வாங்கும் இடத்தில் ஷாலுவைப் பார்ப்பேன் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இன்றைக்கும் அவள் ரெட் கலர் தான். ஆனால் சிவப்புக் கலர் சல்வார்  துப்பட்டா அணிந்திருந்தாள்.  அவள் என்னைப் பார்த்துவிட்டு ஆச்சரியப் படுவாள் என்று எதிர்பார்த்தேன். அதுமட்டுமல்லாமல் அவள் கைவளையல் என் கையில் பட்டுக் கீறி இரத்தம் வரவழைத்தற்காக வருந்துவாள் என்றும் எதிபார்த்தேன்.

ஆனால் அவள் முகத்தில் என்னைப் பார்த்ததும் அப்படி ஒரு கோபம் வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. வளையல் உடைந்ததுக்காக சென்டிமெட்டலா கோபித்துக் கொண்டாள் என்று தான் முதலில் நினைத்தேன் . அவள் காசு கொடுத்து வாங்கின பேப்பர் டோக்கனை கிழித்து எறிந்துவிட்டு என்னைப் பார்த்து ‘ஹும்’ என்று உறுமிவிட்டு மேலே நடக்க முற்பட்டாள்.

“ஷாலு என்னைத்  தெரியலையா ? நான் தான் நேற்று உன்னை இன்டர்வியூ பண்ணினேனே , ஞாபகம் இல்லையா ?” என்று  பழைய ஸ்ரீதர் படம் ஜெமினிகணேசன்  மாதிரி கேட்டேன்.

” உங்க கம்பெனிக்கு மட்டும்   இவ்வளவு பாஸ்ட்டான கூரியர் எப்படிக் கிடைச்சான். நேத்திக்கு சாயங்காலம் தான் இன்டர்வியூ    நடந்தது. இன்னிக்குக் காலையிலேயே  ரிசல்ட் வந்து நிக்கறது”

” அதுக்கு நீ எனக்குத் தான் தேங்க்ஸ் சொல்லணும். நான் தான் உன்னை ஸ்ட்ராங்கா ரெகமென்ட் பண்ணினேன்.” என்றேன்.

” அப்படியா ! உங்களுக்கு உங்க கம்பெனியில அவ்வளவு தான் மதிப்போ? ” என்று கேட்டாள்.

” நீ என்ன சொல்லற?”

” இங்கே பாருங்கோ” என்று சொல்லி அவளுடைய ஹேன்ட் பேகிலிருந்து லெட்டரை எடுத்து என் மூஞ்சிக்கு நேரே நீட்டினாள். படித்தேன். பக் என்றிருந்தது. ‘உங்களுக்கு இந்த வேலையைத் தர இயலாமைக்கு வருந்துகிறோம்’ என்று எழுதியிருந்தது.  கீழே மிஸ்.  ஓ எம் ஆர் கையெழுத்துப் போட்டிருந்தாள்.                          ‘ பழிவாங்கி விட்டாளே ‘ என்று நொந்துகொண்டு, ‘ சாரி, ஷாலு, எங்கேயோ தப்பு நடந்திருக்கு.  நாளான்னக்கி ஆபீஸில்  இதை சரி  பண்ணிடறேன்.”

வேண்டாம் சார். நீங்க இன்டர்வியூ முடிஞ்சதும்  ‘ நீ செலக்டட்’ என்று சொன்னதை நம்பி நேத்து என் பிரண்ட்ஸ்களுக்கெல்லாம்  பார்ட்டி வேறே கொடுத்திட்டேன். இன்னிக்கு காலைல இந்த மாதிரி லட்டர் வருது. எனக்கு உங்க கம்பெனியே வேண்டாம்  “

அப்படிச் சொல்லிவிட்டு ” வாடி போகலாம்” என்று பக்கத்தில் இருந்த ஒரு குட்டிப் பொண்ணை இழுத்துக் கொண்டு போகப் புறப்பட்டாள்.  ஷாலுவின் ஜாடை அப்படியே இருந்தது.  என் பிற்கால மச்சினியாக இருக்கக்கூடும்.

” ஒரு நிமிஷம்.  நான் சொன்னதை நீ நம்பலை இல்லையா ? இதோ இந்த ராம்ஸ் கிட்டே கேட்டுக்கோ”  என்று  சொல்லித் திரும்பிப் பார்த்தா ராம்ஸைக் காணோம்.

குரங்கு ஒரு கையில்  கம்ப்யூட்டரில் விளையாடிக் கொண்டே இன்னொரு கையில் ஒவ்வொரு கடலையை  ஸ்டைலா எடுத்து வாயிலே போட்டுக் கொள்ளும் அழகை ராம்ஸ் ரொம்பப் பக்கத்தில் நின்று  ரசித்துக் கொண்டிருந்தான்.  ” ராம்ஸ், இங்கே வாயேன்” என்று நான் கத்தியதைக் கேட்டு அவசர அவசரமாகத் திரும்பியவன் குரங்குக்குப் பக்கத்தில் வைத்திருந்த கடலையைத் தட்டிவிட்டான். குரங்குக்கு வந்ததே கோபம். கம்புட்டரை விட்டுவிட்டு  அவனைத்  துரத்த ஆரம்பித்தது. அவன் ஓடி வந்து எனக்கும் ஷாலுவுக்கும் நடுவில்  நின்றான். கிட்டே வந்த குரங்கு ஷாலுவின் துப்பட்டாவைப் பறித்துக் கொண்டு பக்கத்தில் இருந்த மரத்தின் மேலே ஏறியது. துப்பட்டாவைத் தனது கைகளில் சுற்றிச் சுற்றி விளையாட ஆரம்பித்தது. ஷாலு  திக்பிரமையில் அப்படியே சிலை மாதிரி நின்றுவிட்டாள். ரொம்ப கஷ்டமாப்  போச்சு.

கும்பல் எல்லாம் அந்த மரத்தைச் சுற்றி வந்தது. கம்ப்யுட்டர் ஜோசியக்காரனுக்குக் கெட்ட கோபம். பின்னே,  அது அவன் வருமானப்   பிரச்சினை இல்லையா?

அப்போ நான் என் பாக்கெட்டில இருந்த கடலைப் பொட்டலத்தைக் குரங்குக்குத் தூக்கிப் போட்டேன். அது மறுபடியும் ஸ்டைலா கடலைப் பாக்கெட்டை ஒரு கையால் பிடித்து இன்னொரு கையிலிருந்த  துப்பட்டாவைத் தூக்கிப் போட்டது. அது நேரா  என் கழுத்தில் மாலையா விழுந்தது. ஆஹா என்ன சுகம் என்று சில வினாடி அதன் வாசனையை அனுபவித்து உடனே சுய நினைவு வந்து அதை எடுத்து அவளிடம் நீட்டினேன். அவள் திக்பிரமையில் இருந்ததால் நானே அவளுக்கு அதை மாலையா மாட்டிவிட்டேன்.

பாரதிராஜா பக்கத்தில் இருந்திருந்தா உடனே ஏழு குட்டிப்  பொண்ணுகளுக்கு தேவதை டிரஸ் போட்டு எனக்குப் பின்னாடி ஆட விட்டிருப்பார்.

கூட்டத்தில் இருந்த மக்கள் எல்லோரும்  கை தட்டி விசில் அடித்தார்கள்.

ஷாலுவும் நினைவுக்கு வந்தாள். வெட்கத்தில் நெளிந்தாள். என்னைப் பார்த்து லேசாகச் சிரித்தாள்.

குரங்குக்காரனும் ” வா ராஜா வா” என்று கெஞ்ச அதுவும் கடலையை அப்படியே ஒரே வாயில் போட்டுக் கொண்டு தாவிக் குதித்து கம்ப்யூட்டர் முன்னால்  வந்து பழையபடி தொழிலைப் பார்க்க ஆரம்பித்தது.

“முதல்ல இந்த அம்மாவுக்கும் சாருக்கும் ஜோசியம் பாத்துட்டுத் தான் மத்தவங்களுக்கெல்லாம் ” என்று ஜோசியக்காரன் சொல்லக் கூட்டம் ஆமோதித் துக் கையைத் தட்டியது.

ஷாலு வெட்கத்தோட என் கூட வந்தாள். ” கண்ணா இந்த அம்மாவுக்கு என்ன வேணும் ?  இந்த ஐயா ஆசைப்பட்டது கிடைக்குமா ?  என்று சொல்லிக் குரங்கை டியூன் பண்ணினான் அந்த ஜோசியக்காரன். குரங்கு எங்கள் இருவர் முகத்தையும் சில வினாடிகள் மாறி மாறிப் பார்த்தது.  நானும் என் பாக்கெட்டிலிருந்த இன்னொரு கடலைப் பொட்டலத்தை எடுத்து நீட்டினேன். “லஞ்சம்” லஞ்சம்” என்று பின் பக்கத்திலிருந்து ஒரு பொடியன்  வாய்ஸ்   கொடுத்தான்.

குரங்கு எதையுமே லட்சியம் பண்ணாம கொடுத்த கடலையை வாங்கி  சாப்பிடாமல் அப்படியே அருகிலிருந்த டேபிளில் வைத்துவிட்டு கீ போர்டில் ஏதோ அடித்தது. கம்யூட்டர்  கருப்பு ஸ்கிரீன் எங்களைப் பார்த்து இருந்தது. திடீரென்று அதில் நானும் ஷாலுவும் தெரிந்தோம். கூட்டத்தில் விசில் பறந்தது. குரங்கு வெப்கேமை  ஆன் செய்திருக்கு. மறுபடியும் கி போர்டில் குரங்கு கட கட . இப்போது ஸ்கிரீனில் ராமர் சீதைக்கு மாலை போடும் காட்சி  தெரிந்தது.  அந்த மாலை சிவப்பு கலரில்   இருந்தது. சீதையும் சிவப்பு கலரில் புடவை உடுத்தியிருந்தாள். எனக்கு ஜிவ்வென்று இருந்தது.

இதுக்கு மேல நான் விளக்கம் ஏதாவது சொல்லவேண்டுமா? என்று கேட்டான் ஜோசியக்காரன். கூட்டத்தில் சிரிப்பு அலை மோதியது. ஷாலுவின் முகம் வெட்கத்தில் அவள் சல்வார் கலரில் மாறியது. அவள் சட்டென்று எழுந்து போக ஆரம்பித்தாள். நான் ஒரு நூறு ரூபாயை ஜோசியக்காரனுக்குக் கொடுத்து விட்டு  அவள் பின்னால் நடந்தேன். ராம்ஸும் என் பிற்கால மச்சினியும் கூட வந்தார்கள்.

அடுத்த வாரம் ஷாலுவும்  ஸ்டெல்லாவும் எங்கள் கம்பெனியில்  சேர்ந்தார்கள்.  எங்களை மாதிரியே ராம்ஸுக்கும் ஸ்டெல்லாவுக்கும் செட் ஆகியது. அது ஒரு தனிக் கதை !

 

(அப்புறம்?)