ஷாலு மை வைஃப் – எஸ் எஸ்

pic8

ஷாலுவை நான் சந்திப்பதற்கு ஆஞ்சநேயர் உதவினார் என்று சொன்னேன் அல்லவா? அது எப்படித் தெரியுமா?

ஷாலுவை  நான் இன்டர்வியூ செய்த பிறகு அவளை ரெகமென்ட் செய்து வேலைக்கு எடுத்துக் கொள்ளும்படி  ரிபோர்ட்டை  மிஸ் ஒ எம் ஆருக்கு அனுப்பினேன். இன்னும் சிலநாட்களில் அவள் எங்கள் கம்பெனியில் சேர்ந்து விடுவாள். அதற்கப்புறம் .. என் கற்பனை .ரெக்கை கட்டிக்கொண்டு பறக்க ஆரம்பித்தது.

அதற்கு அடுத்த  இரண்டு நாளும் தேசிய விடுமுறை.  மகாபலிபுரத்துக்கு நானும் எங்கள் காலிக் கும்பல் ஐந்து பேரும் போவதாக முடிவு செய்திருந்தோம்.  ராம்ஸ் கார் எடுத்துக்கிட்டு வருவது  மகாபலிபுரம் அருகே உள்ள கெஸ்ட் ஹவுசில் தங்குவது. லைட் ஹவுஸ் வரைக்கும்  சைக்கிளில் போவது.  அங்கே  கொஞ்சம் வர்ற போற மக்களை வேடிக்கை பார்ப்பது –  மத்தியானம் லைட்டா பீர் அடிப்பது சாயங்காலம் இரவில் மறுபடியும் தண்ணி அடிப்பது காலையில் பத்து  கிலோமீட்டர்  ஜாகிங்  – சாயங்காலம் கிளம்பி  ஈ  சி ஆர் வழியாக வரும்போது திருவிடந்தை  கோவிலுக்கு வந்து சாமி கும்பிடுவது.சென்னை ரூமிற்கு வருவது – இது தான் எங்கள் பிளான்.

பசங்கள் எவனுக்கும் நல்ல கேர்ள் பிரண்டோ லவ்வோ செட் ஆகமாட்டேங்குது. அர்ச்சனை  செஞ்சுவிட்டு மாலையோட ஒன்பது முறை சுத்தி வந்தா கல்யாணமே நடத்தி வைக்கிற திருவிடந்தை பெருமாள் இந்த சின்னச் சின்ன ஆசைகளையெல்லாம் நிவர்த்தி செய்ய மாட்டாரா என்ன? அது மட்டுமல்லாமல் இப்போல்லாம் பொண்ணுகளைவிட பசங்களுக்குக் கல்யாணம் ஆகவில்லையே என்ற கவலை தான் அவனுகளுக்கும் அவனைப் பெற்ற அப்பா அம்மாக்களுக்கும் அதிகமா இருக்கு.  அமெரிக்காவில வேலை பார்க்கிற பசங்களுக்குக் கல்யாணம் ஈசியா இருபத்திரண்டு வயதிலேயே செட் ஆகி  விடுகிறது. நம்ம ஊர் பசங்களுக்கு முப்பத்திரண்டுக்கு மேலே தான் குருபலன் வருது. ஏதோ கேர்ல்பிரண்ட் கிடைக்குதோ பசங்க சமாளித்துக் கொண்டு காலம் கழிக்கிறாங்க. அது கிடைக்காத எங்க மாதிரி மனிதப் பிறவிகளுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் நரகம் தான்.

எங்க செட்டில குமாரசாமின்னு ஒருத்தன் இருக்கான். அவன் வயசைப் பத்திப் பேசினா அவனுக்குக் கோபம் வர்ற அளவுக்கு வயசு. கல்யாணம் இன்னும் தகையல . தலை ஏற்கனவே கொஞ்சம் ஏறிப்போய் ‘பால்ட்’ ஆகிவிட்டது. இப்ப எல்லாம் பெரும்பாலான  இடங்களிலே பொண்ணு பார்க்கிறது என்கிற சம்பிரதாயம் கிடையாது. அதிர்ஷ்டம் செஞ்ச சிலருக்குத் தான் அந்த மாதிரி பஜ்ஜி சொஜ்ஜி எல்லாம் கிடைக்கும்.

இப்போ முதல்லே மீட்டிங் பாயிண்ட் தான். பையனும் பொண்ணும் அவங்க அவங்க  சொந்தக்காரர்  (அப்பா அம்மா கண்டிப்பாகக் கூடாது) ரெண்டு மூணு பேரோட  ஒரு ஸ்டார் ஹோட்டல் லாபியில் சந்திக்கிறது. அரைமணிநேரம் நிலக்கரி ஊழல் முதல்  அம்மா உப்பு வரை பேசிட்டு அந்த ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குப் போயிடணம். கல்யாணத்தப் பத்தியோ  பாய் பிரண்ட் கேர்ள் பிரண்ட் பத்தியோ அந்த முதல் மீட்டிங் பாயின்ட்டில் பேசினா அடுத்த மீட்டிங் கிடையாது. செலவெல்லாம் பையனோடது தான். அடுத்த மீட்டிங்  காரில்  நடக்கும். பையன் காரை ஓட்டிக் கொண்டு போய் பொண்ணு வீட்டுக்குப் போய் அவளை அழைத்துக் கொண்டு எங்கேயாவது பீச்சுக்கோ கோவிலுக்கோ ( சாய்ஸ் பொண்ணோடது) போய்விட்டு வரணும். அப்பப்போ ரெண்டு  பேரும் தொட்டுக்கலாம். கன்னத்தில் முத்தமிடலாம். ரொம்ப உணர்ச்சிவசப்பட்டாக் காரியம் கெட்டுவிடும். பொண்ணு உணர்ச்சிவசப்பட்டாக் கூட பையன் அடக்கி வாசிக்கணும். தப்பித் தவறிக்கூட கல்யாணம் எப்போன்னு  கேக்கப்படாது. கேட்டா பிரேக் ஆயிடும். 

மூன்றாவது , இரண்டு பேரும் ரெண்டு நாளைக்கு மகாபலிபுரம், ஏற்காடு ,ஊட்டி, அப்படி போய்ட்டு வரணும். ஹோட்டல்ல தங்கணும். அங்கே என்ன நடந்ததுன்னு யாரும் கேட்கக் கூடாது. டூர் போயிட்டு வந்த உடனே  பொண்ணு அவ அப்பா அம்மா கிட்டே ஓகேன்னு சொல்லிட்டா ரெண்டு பேரும் கல்யாணத்துக்கு ரெடின்னு அர்த்தம். எப்போ வைச்சுக்கலாம் என்கிறதை பொண்ணும் பையனும் ஹோட்டல் ரூமில் முடிவு எடுத்திருப்பாங்க . அதுக்கு ஏத்த மாதிரி பெரியவங்களுக்கு ஆசையாயிருந்தா பஜ்ஜி சொஜ்ஜி பண்ணலாம். நிச்சயதார்த்தம் பண்ணலாம். 

இன்னொரு முக்கியமான தேவை என்னன்னா இந்த மூன்று பேஸ் நடக்கும் போது குறைந்தது ஆயிரம்  மெஸ்ஸெஜ் இரண்டு பேருக்கும் இடையே நடந்திருக்கவேண்டும். பகலில் போனில் பேசக்கூடாது. ராத்திரி பன்னிரண்டு மணி சுமாருக்கு ஒருமணி நேரம் பேசணும்.  அவள் அவனை வாடா போடா என்று தான் கூப்பிடுவாள். அவன் தவறிக்கூட வாடி என்று சொல்லக்கூடாது. 

இது தான் இந்தியன் டேட்டிங். 

இந்தக் குமாரசாமி ஃபர்ஸ்ட் பேஸில் பாஸ் செய்துவிடுவான். இரண்டாவது பேஸில்  ஓலா கேப் எடுத்துகிட்டுப் போனதால ஃபெயில் ஆகிவிடுவான்.  ஏன்னா அவனுக்குக் கார் ஓட்டத் தெரியாது. 

எனக்கு இந்த சமாசாரம் எல்லாம் சரிப்பட்டு வராது. நேற்றைக்கு  இண்டர்வியூ விற்கு வந்த ஷாலு என்னை ரொம்ப இம்பிரஸ் செய்துவிட்டாள் .  அவள்  எப்போது எங்கள் ஆபீஸில் சேருவாள்  என்று மனம் ஏங்க ஆரம்பித்துவிட்டது. 

அதற்காகத் தான் பசங்களுடன் மகாபலிபுரம் போகவும்  திருவிடந்தை போகவும் முடிவு செய்தேன்.  நான் தண்ணி அடிக்கிற கேஸ் இல்லை. இருந்தாலும் எங்க கும்பலுடன் போய் அவர்கள் தண்ணி அடிக்கும் போது அரட்டை அடிக்கப் பிடிக்கும்.  கடைசியிலே ‘”மாப்பிளே! நீயும் அடி மச்சி!” நாங்க தண்ணி  அடிக்கிறதனால  எங்களுக்கு ஒண்ணும் அமைய மாட்டேங்குது.  நீ தண்ணி அடிக்காததால உனக்கும் ஒண்ணும் அமைய மாட்டேங்குது” என்று புலம்பல் எல்லாம் வரும். 

இந்த ராம்ஸ் கடைசி நிமிடத்தில் இப்படிக்  காலை வாருவான் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை . கார் இல்லையாம். ஓசி கார் இல்லை என்றதும் காலிக் கும்பல் ஜகா வாங்கிவிட்டது. அங்கே போய் பீர் அடிக்கறதுக்கு இங்கேயே பாருக்குப் போய் ஹேப்பி அவரில் சீப்பா அடிக்கலாம் என்று தீர்மானித்து விட்டார்கள். எனக்கு பயங்கர கடுப்பு. ‘போங்கடா நீங்களும் உங்க பாருமாச்சு பீருமாச்சு ” என்று கத்திவிட்டு பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். ராம்ஸ் வந்து தொத்திக்கொண்டு “வா மச்சி, நானும் வர்றேன். நம்ம ரெண்டு பெரும்  திருவிடந்தை போயிட்டு  அப்படியே  மகாபலிபுரம் போகலாம் வா” என்றான்.

பைக்கைக் கிளப்பிவிட்டு இருவரும் புறப்பட்டோம்.

shalu 2

திருவிடந்தை பெருமாள் நல்ல சக்திவாய்ந்தவராக இருக்கவேண்டும். ஷாலு எனக்குக் கிடைக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டு மகாபலிபுரம் லைட் ஹவுஸ் பக்கம் போனோம்.  அங்கே புதுமையா ஒரு குரங்காட்டி குரங்கு கிட்டே லேப்டாப்பைக் கொடுத்து ஜோசியம் சொல்லிக் கொண்டிருந்தான். கிளி, முயல், அணில் எல்லாம் போய் இப்போ ஹை  டெக்கா குரங்கு வந்திருக்கு. அதைச் சுற்றி பயங்கர கூட்டம். ஒவ்வொருவரா குரங்காட்டி கிட்டே ஏதாவது கேள்வி கேட்கிறாங்க அவன் அதே கேள்வியை குரங்கு கிட்டே கேட்கிறான். குரங்கு கீ போர்டில  ஏதாவது விளையாடும் . சற்று நேரத்தில் கம்ப்யூட்டர் ஸ்க்ரீனில் ஏதாவது படம் வரும். அதைப் பார்த்து ஜோசியம் சொல்லுவான்.

அவன் கிட்டே டோக்கன் வாங்க செம கூட்டம் .  ராம்ஸ் ” மாப்பிளே !  நமக்கு ரெண்டு பேருக்கும் டோக்கன் போடு ! குரங்கு ஜோஷியமாவது பலிக்குதான்னு பாப்போம்” என்று கெஞ்சினான். சரி அவனைக் கலாய்க்காலாம் என்று யோசித்துக்கொண்டே டோக்கன் வாங்க அதற்கான கவுண்டரில் கையைவிட்டேன். என்கூட ஒரு பெண்ணின் கையும் உள்ளே நுழைந்தது. அதன் வளையல் ஒடிந்து என் கையைக் கீறி ரத்தம் வர ஆரம்பித்துவிட்டது.  யாரது என்று கோபத்துடன் பார்த்தால்  ரெட் வளையளுடன் ரெட்கலர் சாரியுடன் ஷாலு ! என் ஷாலு !!

(மற்றவை பிறகு )

 

ஷாலு மை வைஃப்

image

“என்னடா பண்ணிக்கிட்டிருக்கே ராமசிவா!”

“டேய் மாப்ளே ! என்னை ஸ்டைலா ராம்ஸ் அப்படின்னு கூப்பிடுன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன் ! நீயும் அந்த HR மேடம்  மாதிரி முழுப் பெயரைச் சொல்லிக் கூப்பிடறயே?

“டேய்! இப்போ அதுவாடா  முக்கியம்? இன்னிக்குக் காலையிலே நான் முழிச்ச மூஞ்சி சரியில்லை !

“யார்  மூஞ்சிலடா  முழிச்சே. தினமும் என் மூஞ்சில தானே முழிப்பே ! நேத்து ஒரு நாள் நான் என் மாமா வீட்டுக்குப் போனபோது என்ன பண்ணினே ?”

“எல்லாம் அந்த HR மேடம் மூஞ்சில  தான் முழிச்சேன்  !”

“டேய் மாப்ளே! என்னடா சொல்லற? அப்ப ராத்திரி அவ கூட தான் படுத்துகிட்டிருந்தியா?”

“அடசே ! ரூமில நாம என்னிக்காவது முழிச்சிருக்கோமாடா? அப்படியே கண்ணை மூடிக்கிட்டே பல்லைத் தேய்ச்சுட்டு ஆபீஸ் பஸ்ஸில தூங்கி ஆபீஸ் வந்துதும் முழிக்கிறோமே அது தானேடா ரியல் முழிப்பு !”

“நான் உன்கூட தானடா பஸ்ஸில வந்தேன். ஏன்  உன்னை எழுப்பலே?”

“லூசு! அது நான் கேட்க வேண்டிய கேள்வி ! அந்த மாங்கா – அவன் தாண்டா நம்ம பாஸ்,  யாருகிட்டேயோ போனில மாம்ஸ் அப்படின்னு பேசிக்கிட்டு இறங்கினான். நீ லூசு மாதிரி ராம்ஸுன்னு உன்னைக் கூப்பிடறதா நினைச்சுக்கிட்டு அவன் பின்னாடியே ‘யெஸ் பாஸ் யெஸ் பாஸ் ’ னு ஓடினியே ! அப்பத் தான்  அந்த   HR மாமி என்னைத் தட்டி எழுப்பி ’  நேத்திக்கு ஹேங்க் ஓவர் இன்னும் போகலையான்னு கேட்டுட்டுப் போறாடா?  ”

“எனக்கும் அந்த சந்தேகம் இருக்கு மச்சி!  நேத்து நான் இல்லாதபோது நிலவேம்பைக் குடிக்கிறேன்னு நினைச்சுக்கிட்டு நான் வைச்சிருந்த ‘அரிஸ்டோகிரெட்டை ’ ராவா அடிச்சிட்டியா?”

“போடா ! நேத்து ராத்திரி  தூக்கத்தில ஒரு கனவு கண்ணா!  ஒரு பொண்ணு என்னை டிஸ்டர்ப் பண்ணிட்டாடா?”

“தெரியும்! பேய்ப்படம் பாத்திருப்பே ! யாரு? மாயா நயன்தாரா தானே?”

“அதில்லேடா! ஒரு அழகான பொண்ணு ! என்னைப்  பாத்த முதல் பார்வையிலேயே ‘என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறயான்னு கேட்கிறா?”

image

“அப்ப இது பேய்க்கனவு தாண்டா !  அதுக தான் இப்படி அலையும் !”

“சே! சே! பேய் எல்லாம் இல்லடா ! நல்ல லட்சணமா ரெட் கலர் சாரி கட்டிட்டு வந்தா! ஆனா முகம் மட்டும் தெரியலைடா !”

“ அப்ப அது அந்த மிஸ் ஓ.எம்.ஆர். ஆக இருக்கும் !”

“யாருடா அந்த அழகு ராணி மிஸ்   ஓ.எம்.ஆர். ?

வேற யாரு உன்னோட HR குவீன் தான். அவ ஒரு தடவை ரெண்டு நாள் லீவு போட்டுட்டு ஊருக்குப் போனாளா? அப்ப அங்கேர்ந்து   கான்பிரன்ஸ் கால்ல கூப்பிட்டு ’ ஐ மிஸ்  ஓ.எம்.ஆர். !  ஐ மிஸ்  ஓ.எம்.ஆர்! அப்படின்னு நூறு தடவை சொன்னாளாம். அதிலிருந்து அவளுக்கு இன்னொரு பெயர்  மிஸ்  ஓ.எம்.ஆர்.”

“ஏண்டா ! எப்பப் பாத்தாலும் அவளைப் பத்தியே பேசறே ? என்னை டிஸ்டர்ப் பண்ணினது அவ இல்லேடா ! சாஃப்டா கேட்டாடா – என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறயான்னு”

“ அவளுக்குத் தான் உன் மேலே ஒரு சோடா. இல்லே ஷர்பத்.. இல்லே  அது என்னடா.. இம்.. கிரஷ் ”

“ வேணாம். இவ  அவ இல்லே!  இன்னொரு தடவை அவ இவன்னு சொன்னே எனக்குக் கெட்ட கோபம்  வரும் . இவ என்னை  ரொம்பவே டிஸ்டர்ப் பண்ணிட்டாடா? ”

“ நீ டிஸ்டர்ப் டிஸ்டர்ப் னு சொல்லி என்னை டிஸ்டர்ப் பண்ணிட் டியே மாப்ளே ? எவடா  அவ?  சாரி இவ?  

” முகம் தான் தெரியல . ஆனால் நேத்திக்கு அவளை ஆஃபிஸ்ல பாத்திருக்கேன்னு தோணுது.“

” எல்லாம் வழக்கமா  பாக்கிற  ‘ஃபேர் அண்ட் லவ்லி’ தானே மச்சி ?

“இல்லேடா..இம். ஒருவேளை நேத்திக்கு பிரெஷ்ஷர் ஏழெட்டு பேரை இன்டர்வியூ பண்ணினேன் . அதுல ஏதாவது ஒண்ணாயிருக்குமோ?”

“என்னது.. நீ லேடிஸை இன்டர்வியூ பண்ணினியா? எப்படி எனக்குத் தெரியாமப் போச்சு?  நான் தானே சீனியர். நான் தானே இன்டர்வியூ பண்ணணும்? ”

“என்னடா சீனியர்? நீயும் நானும் ஒரே நாளிலே தானே ஜாயின் பண்ணினோம்!”

“ஆனா உனக்கு முன்னாடி நான் ரெஜிஸ்ட்டர்ல கையெழுத்து போட்டிருக்கேன் தெரியுமா?”

“எப்படிப் போட்டே! என்னத்தான்  முதல்ல கூப்பிட்டாங்க ! நீ தான் மச்சி எனக்கு ரொம்ப முட்டுது. கையெழுத்தைப் போட்டுட்டு ஓடறேன்னு கெஞ்சினே ! அதனால நீ சீனியரா? ”

“சீனியர்! சீனியர் தான் ! எப்படி யிருந்தா என்ன? இந்த மிஸ் ஓ.எம்.ஆருக்கு என்ன தைரியம் இருந்தா என்னை விட்டுட்டு உன்னை இன்டர்வியூ பண்ணச்  சொல்லியிருப்பா?

” போன தடவை நீ வழிஞ்சதை அவ கண்ணால பாத்துட்டா. காபி குடிக்கும் போது அப்படியாடா ஜொள்ளு விடறது. காபியைத் துப்பி கேண்டிடெட் மேலெல்லாம் கொட்டி- அத்தோட விடாம அதைத் தொடைச்சு விடறேன்னு நீ கர்சீபை எடுத்துக்கிட்டு அந்த லேடி கிட்டப் போக , HR மாமிக்கு ஹார்ட் அட்டாக்கே வந்திடுச்சு.  இனிமே உன்னை ஜென்மத்துக்குக் கூப்பிடமாட்டா!“

” விடுடா! இண்டர்வியூவில வந்தவங்க லிஸ்ட் எல்லாம் இந்த சிஸ்டத்தில இருக்கு. அதுலே எந்தக் குட்டி உன்னை டிஸ்டர்ப் பண்ணினான்னு பாக்கலாமா? “

” குட்டி கிட்டின்னு சொன்னே எனக்குக் கெட்ட கோபம் வரும். அவ நல்ல லட்சணமா இருந்தாடா.“

“மூஞ்சி தெரியலைங்கிரே ! அப்புறம் என்னடா லட்சணத்தைக் கண்டுட்டே? ”

“ போடா! அந்த லிஸ்டை சிஸ்டத்தில பத்து தடவை பாத்துட்டேன். அதில  என்னை டிஸ்டர்ப் பண்ணினவ இல்லேடா”

“ ஏண்டா!  ஒருவேளை இந்த பார்க்காம காதல், பேசாம காதல்,கேக்காத காதல்  தொடாம காதல் இந்த மாதிரி ஏதாவது இண்டர்வியூவுக்கு வராத பொண்ணை லுக் விட்டிருப்பியோ?”

“ ஏய்! ரைட்டா! கையைக்கொடு! இண்டர்வியூவுக்கு வராத பொண்ணு தான் என் கனவில வந்திருந்தா! அவ தான் அந்த சிவப்பு சாரிக் காரி. ”

“ என்னடா உளர்ரே? ”

“ கண்ணா!  நேத்திக்கு என்கிட்டே கொடுத்த லிஸ்டில மொத்தம் ஒன்பது பேர் இருந்தாங்க! நான் சிஸ்டத்தில ஒன்பது பேரைப் பாத்தேன். அதில ஒண்ணு தான் அந்த சிவப்பு சாரி. ஆனா இண்டர்வியூவுக்கு எட்டு பேர் தான் வந்தாங்க !. இவ மட்டும் வரலை”

“ இவ தான் ஓம்பதா?”

“ அடி வாங்கியே சாகப் போறே! அவ போட்டோ ஏண்டா சிஸ்டத்தில இல்லே? ”

“பிரதர், வராதவங்க டீடைல்ஸ் எல்லாம் HR கிட்டே தான் இருக்கும். நீ வேணுன்னா  நம்ம மிஸ் ஒ.எம்.ஆர். கிட்டே போய் வாங்கிக்கோ! டேய்! என்ன சொன்னே ! ரெட் சாரியா? டேய் நானும் நேத்திக்கு அந்தப் பொண்ணை HR ரூமில பாத்தேண்டா ! ஒருவேளை உன் மூஞ்சியைப் பாத்துட்டு இந்தக் கம்பெனியே வேண்டாமுன்னு போயிட்டாளோ  என்னவோ? ”

“ நீ அவ முகத்தைப் பாத்தியாடா? எப்படி இருந்தா? ”

“ சாரி மச்சி! எனக்கும் முதுகு தான் தெரிஞ்சுது. முதுகு ஓகே! முகத்தைப் பாக்கலாமுன்னு  மிஸ் ஒ.எம்.ஆர். கிட்டே போனேன். என் போராத நேரம் , அப்பவும் என் கையிலே காபி கப் இருந்தது.  மிஸ் ஒ.எம்.ஆர். கிட்டேயே வராதேன்னு கண்ணாலேயே மிரட்டினா! நேரா திரும்பிட்டேன்.”

“ சரி, நீ இங்கேயே இரு. நான்  மிஸ் ஒ.எம்.ஆர். கிட்டே போய் அவளைப் பத்திய  தகவலைப் பிடிச்சிட்டு வர்றேன்”

“ அவளைப் பத்தியா ? இவளைப் பத்தியா?  அப்போ இவள்ன்னு சொன்னே ! இப்போ அவள்ன்னு சொல்லிக் கன்பியூஸ் பண்ணறியே? ”

“ சும்மா இருடா!”

“ ஏண்டா!  ரைட் அபௌட் டர்ன் அடிச்சு உடனே  வர்ரே! எனக்குப் புரிஞ்சுது!  நீ போய் அவ கிட்டே ரெட் சாரி வேணும்னு கேட்டிருப்பே ! அவ இன்னிக்கு ரெட் சாரி .கட்டியிருக்கா! பளார்னு  அறைஞ்சு அனுப்பியிருப்பா? சரியா? ”

“ போடா! இடியட் ! மிஸ் ஒ.எம்.ஆர். சீட்டில காணோம். வர இன்னும் ஒன்றரை மணிக்கூர்  ஆகும்னு அந்த மலையாள  அசிஸ்டெண்ட் பறஞ்சுது. ”

“ ஒ! ஓமனக்குட்டியா ?  தப்பா நெனைச்சுக்காதே! பேரே அப்படித் தான். அட! புரிஞ்சு போச்சு! நம்ம  மிஸ் ஒ.எம்.ஆர். எங்கே போயிருக்குன்னு எனக்குத் தெரியும். இன்னிக்கு என்ன கிழமை?

” அதுக்கும் கிழமைக்கும் என்னடா சம்பந்தம்? “

” இன்னிக்கி செவ்வாய்க் கிழமை. சாயங்காலம் மூணு முதல நாலரை   வரை ராகு கால பூஜை பக்கத்தில இருக்கிற துர்க்கை கோயில்ல நடக்கும். கல்யாணம்  ஆகணுமுன்னு வேண்டிக்க நிறைய பெண்கள் அங்கே போவாங்க!. மிஸ் ஒ.எம்.ஆர்.  சிவப்புப் புடவை -ராகு காலம் – ஒண்ணும் அரையும் ஒண்ணரை.“

” உனக்கு எப்படிடா இதெல்லாம் தெரியும்? “  

“நானும் அங்கே போயிருக்கேன். முறைக்காதே! அங்கே வந்திருக்கறதில ஏதாவது நமக்குத் தோதாகுமான்னு  பாக்க!நம்ம  மிஸ் ஒ.எம்.ஆர். வர்ரதைப் பாத்தப்புறம் அந்தப் பக்கமே போகிறதில்லே!”

“இந்த ரெட் சாரியை விடுடா? நம்ம ரெட் சாரி மேட்டருக்கு வாடா? ”

“என்ன என் ரெட் சாரியைப்  பத்தி ஏதாவது காமெண்டா?” என்று கேட்டுக் கொண்டே  மிஸ் ஒ.எம்.ஆர்.  என் கிட்டே வந்தாள். இவன் சாரின்னு இடத்தை விட்டே ஓடிட்டான்.

“ என்னது? சாரியா? இது வேற சாரி மேடம்! இவன் இன்னைக்கும் காபியை என் டேபிள்ள கொட்டிட்டானாம். அதுக்குத் தான் சாரி கேட்டுட்டுப் போறான். ”  

“  நீங்க அவசரமா இன்டர்வியூ ரூமுக்கு வரணும். நேத்திக்கு இன்டர்வியூ அட்டென்ட் பண்ணமுடியாத கேண்டிடெட் இன்னிக்கு வந்திருக்காங்க . நீங்க ஃப்ரியா ?”

“ யார் ? அந்த ரெட் சாரி கேண்டிடெட் தானே? ”

“ எப்படித் தெரியும்? ஒ! நேத்திக்கு அவ வந்து என் கிட்டே பர்மிஷன் கேட்ட போது பாத்தீங்களா? ”

“ சிஸ்டத்தில புரபைலில் பாத்தது தான்”

“ எனக்கு ஒரு அர்ஜண்டான வேலை இருக்கு. முடிச்சுட்டு வர்ரதுக்கு ஒண்ணரை  மணி நேரம் ஆகும். அதனால நீங்களே சோலாவா இண்டர்வியூவை முடிச்சுட்டு ரிபோர்ட் அனுப்பிடறீங்களா? ”

“ஓகே மேடம்!”

“என்னை  மிஸ் ஒ.எம்.ஆர்.என்றே கூப்பிடலாம் . அது எனக்குப் பிடிச்ச பட்டப் பெயர் தான்.” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்.

நானும் வழிந்து கொண்டே  என்னை டிஸ்டர்ப் செய்த பெண்ணை இன்டர்வியூ செய்ய   ஆவலுடன் சென்றேன்!

இன்றைக்கும் அவள் சிவப்பு சாரியில் தான் வந்திருந்தாள். ‘சிவப்பு தான் இவளுக்குப் பிடிச்ச கலரோ?’ இல்லே இருப்பது ஒரே ஒரு சிவப்பு கலர் சாரி தானா என்று நினைத்துக் கொண்டே கேட்டேன்.

உங்கள் பெயர்?

“ஷாலு” என்றாள்.

(வளரும்)

ஷாலு மை வைஃப்

image


ஷாலுவை கல்பாக்கத்தில்  பார்த்த ஞாபகம் என் கண்ணில் அப்படியே நிற்கிறது. 

கல்பாக்கத்தில் ஒரு  சிறிய எளிமையான அழகிய வீடு. அங்கே பெண் பார்க்கும் படலம் அரங்கேறிக்கொண்டிருந்தது. நான், என் நண்பன், அவன் பெற்றோர்கள் நால்வரும்  அப்போது தான் பஜ்ஜி சொஜ்ஜி எல்லாம் தின்று முடித்தோம். அவள் பட்டுப்புடவையைத் தழையத் தழையக் கட்டிக்கொண்டு  கையில் காபி  ட்ரேயுடன் தயங்கித் தயங்கி வந்தாள். வைத்த கண் மாறாமல் நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்குத் தான் முதலில்  காபி கிடைத்தது. காபி குடிக்கவேண்டும் என்பதே தெரியாமல் அவள் மற்றவர்களுக்குத் தரும் அழகையே ரசித்துக் கொண்டிருந்தேன். பக்கத்தில் இருக்கும் என் நண்பன் காபியைக் குடித்துக் கொண்டே மெதுவாக என் காதில் கேட்கும் அளவில்  ‘எனக்குப் பிடிக்கலை’ என்றான். 

அப்போது தான் நான் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டேன். 

அதற்குள் அவள் அப்பா ’ பொண்ணுக்கு சங்கீதம் கத்துக் கொடுத்திருக்கிறோம். ஒரு பாட்டுப் பாடம்மா ’ என்றார்.  அவள் கொஞ்சமும் சங்கோஜமில்லாமல் ஜமக்காளத்தில் உட்கார்ந்து கொண்டு தொண்டையைக் கனைத்துக் கொண்டு பாட ஆரம்பித்தாள். கர்நாடக சங்கீதம் வரும் என்று எதிபார்த்துக் கொண்டிருந்த அனைவருக்கும் ஆச்சரியம். “ சின்னஞ் சிறு வயதினிலே சித்திரம் தோணுதடி ’ என்ற ’ மீண்டும் கோகிலா’ ஸ்ரீதேவி பாட்டைப் பாடினாள். நான் அசந்து போய்விட்டேன். அதுவும் ஸ்ரீதேவி, மேலே வரிகள் ஞாபகமில்லாமல் தடுமாறிய இடத்தைப்   பாடும்போது அப்படியே ஓரிரு  வினாடி தடுமாறிவிட்டு நிமிர்ந்து எங்களைப் பார்த்து ஒரு சிறு புன்னகை செய்துவிட்டு கமல் பாடும் ‘கள்ளத்தனம் என்னடி’ என்ற வரிகளையும் அவளே தொடர்ந்து பாடினாள். நான் பிரமிப்பில் திகைத்து மனதுக்குள் ‘சபாஷ்’ என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது என் நண்பன் மீண்டும் காதில் கிசுகிசுத்தான். "எனக்குப் பிடிக்கலை’ என்று.

‘எங்கள் எல்லாருக்கும் பிடிச்சிருக்கு ஊருக்குப் போய் பெரியவாளைக் கலந்து ஆலோசிச்சிட்டு முடிவைச் சொல்லுகிறோம்’ என்று  சம்பிரதாயமாகப் பேசிவிட்டு எல்லாரும் கிளம்பினோம். 

கார் கிளம்பி அவர்கள் வீட்டைக் கூடத் தாண்டவில்லை. என் நண்பன் மறுபடியும் என் காதில்  ‘எனக்குப் பிடிக்கலை’ என்றான். 

இது காரில் இருந்த மற்றவர்களுக்கும் கேட்டு விட்டது. ‘என்ன சொல்றான் இவன்? 

அப்போது தான் நானும் சுதாரித்துக் கொண்டேன். நாங்கள் வந்திருப்பது அவனுக்குப் பெண் பார்க்கத் தான்’ என்ற உணர்வு உறைக்கத் தொடங்கியது. அதற்கு மேல் என்னால் பொறுக்க முடியவில்லை. பட்டென்று போட்டு உடைத்து விட்டேன். ” சார்! இதைக்  கேளுங்க! இவனுக்கு இந்தப் பெண் இல்லே எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் பிடிக்காது. ஏன்னா இவன் ஒரு பெண்ணைக் காதலிக்கிறான்.“ "டேய்..டேய்..” என்று அவன் கத்துவதைப் பொருட்படுத்தாமல் நான் மேலே சொல்லத் தொடங்கினேன். அவர்களும் காரை ஓரமாக நிறுத்திவிட்டு

அதிர்ச்சியுடன்

கேட்டார் கள். “என்னப்பா சொல்றே?”                                

 "ஆமாம் சார்!  இவன்  எங்க ஆபீஸில் இருக்கும் ஒரு பொண்ணைக்   காதலிக்கிறான்.“ 

அவர்களுக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. இப்படிப் படால் என்று சொல்லுவேன் என்று எதிர்பார்க்காத என் நண்பனும் என்ன சொல்லுவது என்று தெரியாமல் முழித்தான். 

"எல்லாம் அவள் சொன்னது தான் சார்.’ நீ உங்க அப்பா அம்மா சொல்ற பொண்ணைப்  பாரு. அவளையே கல்யாணம் பண்ணிக்கிட்டு சௌக்கியமா இரு’ என்றாள்." 

"யாரு சொன்னா?”

“ஸ்டெல்லா புருஷோத்துமன்”

“யாரு புருஷோத்துமன்? ”

“அவளோட அப்பா!”

“அப்ப ஸ்டெல்லா கிறிஸ்டியனா?”

“இல்லே தெலுங்கு பிராமின் கிறிஸ்டியன்" 

"அவ அம்மா கிறிஸ்டியனாக்கும்!

"அவ அப்பா தெலுங்கு பிராமின்" 

"பாஷை தெலுங்கு வேறயா?”

“அவளுக்குத் தமிழ் டைப்ரைட்டிங்க் நல்லா தெரியம். ஹையர்  பாஸ் பண்ணியிருக்கா”

“நாம வேலைக்கா ஆள் எடுக்கிறோம்?” என் நண்பன் கத்தினான். 

இங்கே பாருப்பா! இந்த வயசுக்கப்பறம் நாங்க தெலுங்கு , சர்ச் எல்லாம் கத்துக்க முடியாது. பேசாம அவளை மறந்துட்டு, அவ சொன்னபடியே இந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லு" 

“அவளும் இதைத் தான் சொல்றா?”

“எவ?”

“ஸ்டெல்லா!”

“ என்னப்பா குழப்பறே ?”

“சார்! இவன் தான் ஸ்டெல்லாவை உயிருக்கு உயிராக் காதலிக்கிறான். ஆனால் அவ இவனைக் காதலிக்கலை. ஒரு தலைக் காதல் ”

“இந்தக் கண்றாவி வேறையா?”

“ சார்! அவளும் மனசுக்குள் இவனை லவ் பண்ணறா!  ! உங்களுக்காகத் தான் அவள் தயங்கறா! நீங்க ஒத்துக்கிட்டா தான் கல்யாணம் என்று உறுதியா இருக்கா . அது இவனுக்கே தெரியாது. நேத்துத் தான் என்கிட்டே சொன்னாள். ?" 

"அப்படியாடா?”

“பின்னே எதுக்கு இந்தப் பொண்ணைப் பார்க்க ஒத்துக்கிட்டானாம்?”

“அதை அப்பறம் சொல்றேன்! இப்ப மகாபலிபுரம் பீச்  கிட்டே போய் ஒரு  நிமிஷம் அந்த பிட்ஃஜா கடைக்குப் பக்கத்தில நிறுத்துங்க”  என்றேன்.

கார் நின்றது! 

நான் அவசர அவசரமா இறங்கி அவளை அழைத்து வந்தேன்.

“ டேய்! ஸ்டெல்லா இங்கே  எப்படிடா?”

“ சார்! இவ தான் ஸ்டெல்லா ! நான் தான் இவளை இங்கே காத்திருக்கச் சொன்னேன்.”

“ இவளை எனக்குத் தெரியுமே?” என்றாள் என் நண்பனின் அம்மா. 

“ என்னம்மா சொல்றே?”

“ஆமாண்டா! சாய் பஜனிலே  நாலைந்து தடவை பார்த்திருக்கிறேன். அழகா பஜன் பாடுவா! ”

“அவ உங்களை இம்ப்ரஸ் பண்ண அங்கே வந்தது உண்மை தான். ஆனா அவளுக்கு பஜன் பண்ணவும் பிடிக்கும். சர்ச்சிலே காயர் பாடவும் பிடிக்கும். அருமையான  குரல் இவளுக்கு ”

“ ஏங்க! எனக்கு இவளை ரொம்பப் பிடிச்சிருக்கு! நம்ம பையனைக் கல்யாணம் செஞ்சிக்க இவ ஒத்துப்பாளோ?”

“என்னம்மா இப்படிக் கேக்கறீங்க?”

‘ஏதோ ஒருதலை இருதலை அப்படின்னு சொல்றானே இந்தத் தறுதலை"

“ அய்யோ !அம்மா! இதுக்காகத் தான் நான் காத்துக்கிட்டிருக்கேன்!” என்றாள் ஸ்டெல்லா!

“ இவ்வளவு நல்ல பொண்ணைப்  பத்தி முதலிலேயே சொல்லியிருக்க வேண்டியது தானே ! ஏன் இந்த விபரீத பொண்ணு  பார்க்கிற விளையாட்டு ?. அவங்க என்ன நினைச்சுப்பாங்க?  

” அதை நானே சொல்றேன் அப்பா! இவனும் அந்த ஷாலுவும் ஏற்கனவே லவ் பண்றாங்க" 

“ இதென்னடா புதுக் கூத்து?" 

” இந்த மகாபலிபுரம் லைட் ஹவுஸ் கிட்டே தான் இவனுக்கும் ஷாலுவுக்கும் காதல் பிறந்தது" 

“எங்கே! அந்தக் குரங்குகள் எல்லாம் ஒடுதே அங்கேயா?”

“ஆமாம்பா! அந்த அனுமார் சீதையையும் ராமரையும் மட்டும் சேர்த்து வைக்கலை ! இவனையும் ஷாலுவையும் சேர்த்து வைத்ததே அவர் தான்." 

“ அப்ப நீ தான் அந்த அனுமாரா?” என்று கேட்ட அவன் தந்தை  "சரி ஸ்டெல்லா நீயும் காரில் ஏறிக்கொள். நாம் எல்லாரும் அந்த  ஷாலு வீட்டுக்குப் போய்  மன்னிப்புக் கேட்போம். அதோட இவனுக்காவும் பொண்ணும் கேட்போம்.“ 

” அப்பா! நீங்க கிரேட்! இவனுக்கு நம்மை விட்டா வேறு யாரு இருக்கா பொண்ணு கேட்க! அதனால் தான் இந்த நாடகம்" 

image

அங்கே ஷாலு வீட்டில் ஆளாளுக்குப் பேசிக் கொண்டிருந்தனர் ….

“ என்னடி சொல்றே? இந்த மாப்பிள்ளைப் பையன் வேண்டாமா? அவன் கூட வந்த சினேகிதனைத் தான் கட்டிப்பியா? ”

“ நீ முதல்லே அவன் கிட்டே காபி கொடுக்கும் போதே நினைச்சேன்" 

"அந்த மாப்பிள்ளைப் பையன் காபி குடிச்சுட்டு ஏதோ விளக்கெண்ணை குடிச்சா மாதிரி இருந்தானே?  அப்பவே எனக்கு ஏதோ சந்தேகம்”

“ஐயோ நான் புது அத்திம்பேர் மூஞ்சியைச் சரியா பாக்கலையே?”

“நான் இன்னும் அவனை ஒகேயே பண்ணலை , அதுக்குள்ளே அத்திம்பேர்  உறவா? ”

“அப்பா! இது உல்டா மணிரத்னம் படம் மாதிரி. இல்லே ! தங்கச்சியைக்  கட்டிப்பேன்னு அரவிந்த்சாமி ரோஜாவில சொல்லலே?" 

“சரி! ஷாலு! உனக்கு ஓகே தானா? ”

“என்னப்பா! விடிய விடிய கதை கேட்டுட்டு சீதைக்கு அனுமார் அத்திம்பேர்   என்கிற மாதிரி கேட்குரே?”

“அது சரிடி! அவரை எங்கே பார்த்தே? ”

அது ஒரு  தனி கதைம்மா! அனுமார் சீதையும் ராமரையும் மட்டும் சேர்த்து வைக்கலை !“

"வேறென்ன பண்ணினார்? 

” எங்களையும் மகாபலிபுரம் லைட் ஹவுஸ் கிட்டே அவர்  தான்  சேர்த்து வைச்சார்!“

"அதென்னடி புதுக்கதை?”

ஷாலு சொல்ல ஆரம்பிக்குமுன் வாசலில் கார் வந்து நின்றது. 

ஷாலு மை வைஃப்

image

‘ஹய்யா! இன்னிக்கி அம்மா வரப் போறாளே!  இன்னிக்கி அம்மா வரப் போறாளே ’ காலையில்  ஷிவானி அரைத் தூக்கத்தில் – தூங்கி முழிச்சதும் சொன்ன முதல் வார்த்தை  இது தான்.

 நான் பத்து நாள் செய்ததற்குக் கிடைத்த  பரிசு! 

ஷிவானி சும்மா சொல்லவில்லை பக்கத்தில் படுத்திருந்த ஷியாமைக் காலால் உதைத்துவிட்டுச் சொன்னாள். ஷ்யாம் ஒரு  தூங்கும் புலி.  நல்ல வேளை  அவன் அதை சீரியஸாக எடுத்துக்கலை . ‘ஆமாண்டி மம்மி ரிடர்ன்ஸ். ஏன் தூங்க  விடாம கத்தறேன்னு’ கத்திவிட்டு பூனைக்குட்டி மாதிரி சுருண்டு படுத்துக் கொண்டான் . அவனுக்கு கிரிக்கெட் எக்ஸ்பாக்ஸ் அம்மா அப்பா எல்லாம் தூக்கத்துக்கு அப்பறம் தான்.

image

ஒருதடவை வெள்ளிக்கிழமை ராத்திரி கமலோட ‘தூங்காதே தம்பி தூங்காதே’ படத்தை கே டிவியிலோ வேற எந்த சானலிலோ பார்த்துட்டு ’ சே ! சனியன்! என்ன படம், என்ன பேரு’ என்று கத்திவிட்டு ஷாலு பண்ணின ரவா உப்புமாவை சாப்பிட்டுவிட்டுத் தூங்கினான்.

சனிக்கிழமை காலையில ஷாலுவும் ஷிவானியும் அவளோட குருஜினி வீட்டில நடக்கிற பூஜைக்குப் போகக் கிளம்பினார்கள்.

“சாயங்காலம் தான் வருவோம்.  எல்லாம் சமைச்சு வைச்சிருக்கேன் வேளா  வேளைக்குச் சாப்பிடுங்கோ.   (எனக்கு என்னவோ கொட்டிக்குங்கோ என்று காதில் விழுந்தது. சே! சே! ஷாலு அப்படியெல்லாம் சொல்லமாட்டாள். )

அந்தக் குட்டிக் கும்பகர்ணனை எழுப்பி சாப்பிடவைச்சு ஹோம் வொர்க் எல்லாம் முடிக்கச் சொல்லுங்கோ.

இந்தப் பேப்பர்காரன் வந்தான்னா  போனமாசம் சினேகிதியோட இலவச இணைப்பு வரலைன்னு சொல்லிக் கொண்டுவரச் சொல்லுங்கோ.

பால்காரப் பையன் கிட்டே நேத்திக்குப் பால் கெட்டுப்போச்சுன்னு சொல்லி வேற பாக்கெட் வாங்குங்கோ.

மேல்வீட்டுக்குப்  புதிசா  வந்த பாட்டி வெளக்கமாறு ஒசி வாங்கிட்டுப் போயிருக்கா .திருப்பிக் கொடுத்தா பத்திரமா வாங்கி வையுங்கோ!

இந்தக் கேபிள்காரத் தடியன் வந்தான்னா ‘நீயா நானா’ பாக்கறச்சே மட்டும் பிக்சர் எகிறி எகிறிக் குதிக்குது ஏன்னு  கேட்டுட்டு இந்த மாசக் காசைக் கொடுங்கோ!

உங்க சித்தி பொண்ணு இன்னிக்கு சாயங்காலம் வர்ரேன்னு சொல்லியிருக்கா! மறக்காம போன் பண்ணி இன்னிக்கு நான் பூஜைக்குப் போயிருக்கிறேன். அடுத்த வாரம் வான்னு சொல்லுங்கோ!

இப்படி எத்தனையோ ‘கோ’ .

அப்பறம் பழைய பேப்பர்காரன் , கத்திக்குச் சாணை பிடிக்கிறது, வேலைக்காரிக்குப் பாத்திரம் ஒழிச்சுப் போடறது, வாஷிங் மெஷின்ல துணியைப் போடறது, அயர்ன்கரன் கிட்டே நேத்திக்கு போட்டத் துணியை வாங்கி போனவாரம் அவன் தரவேண்டிய மூணு ரூபாயைப் பிடிச்சுட்டு பைசா கொடுக்கிறது  எக்ஸெட்ரா ….

"பாக்கி ஏதாவது விட்டுப் போச்சுன்னா .குருஜினி வீட்டிலேர்ந்து  ‘வாட்ஸப்’ அனுப்பறேன்.”

செய்யவேண்டிய வேலைகளை எல்லாம்  சொல்லிமுடிக்கவே அரை நாள்  ஆயிருக்குன்னா அதையெல்லாம் செய்ய எத்தனை நாளாகும் ?  போகிறபோக்கில்     ’ மறக்காம ஷேவ் பண்ணித் தொலைங்கோ! டைபாய்டில விழுந்தவன் மாதிரி இருக்கு! ( போன வாரம் ராப்பிச்சைக்காரன்). இத்தனை  வேலைகளைக் கொடுத்துவிட்டுக் காலை ஏழு மணிக்கே பறக்கப் பறக்கப் போய் விட்டாள். இதில ஏதாவது நாலைஞ்சு செஞ்சாக் கூடப் போறும். ஷாலு கிட்டே நல்ல பேர் வாங்கிடலாம்.

ஆனா ஷாலுவை நினைச்சா எனக்குப் பெருமையா இருக்கு. இவ்வளவு வேலையையும் அவள் எப்போதும் ஒண்டியா செய்வாள். நாங்க மூணு பெரும் அவளுக்குக் ஹெல்ப் பண்ணறோம்னு போனா தெனாலி  படத்தில சொல்ற மாதிரி அது கிறுக்குத்தனமாத் தான் முடியும்.

அரைச்ச மாவை எடுத்து வைக்கிறேன்னு ஷ்யாம் வருவான். மாவுல அவனோட கிரிக்கெட் பந்து விழுந்து எல்லா மாவும் கோவிந்தா!

அவள் ‘என் கணவன் என் தோழன்’ சீரியல் பாத்துக்கிட்டு இருக்கும் போது ‘பாவம் அவளுக்கு வேர்க்குமே’ன்னு ஏ‌சியை ஆன் பண்ணுவேன். கரெண்ட் டிரிப் ஆகி அவளை சீரியல் பாக்க விடாம செஞ்சுடும்.

’ ஷிவானி இந்த கிளாசை கிச்ச’னில்  வையேன்’  என்று   நான் சொல்லி முடிக்கறதுக்குள்ளே  அந்த கிளாஸ் தரையில் விழுந்து சுக்கு ஐநூறா உடையும். 

‘நீங்களும் உங்க ஹெல்ப்பும் . உபகாரம் பண்ணாட்டிக் கூடப் பரவாயில்லை உபத்ரவம் செய்யாமல் இருந்தாப் போதும்’. என்று அவள் அத்தைப்பாட்டியோட  டயலாக்கை அடிக்கடி எடுத்து விடுவாள். அதையே சாக்கா வைச்சுக்கிட்டு நாங்க மூணு பேரும் சனி ஞாயிறு எல்லாம் சோம்பேறி மூடுக்குப் போயிடுவோம்.

இதிலே என்ன வேடிக்கைன்னா, சில சமயம் ஷாலுவோட அரட்டை பிரண்டஸ்  எல்லாம் வரும்போது  ஒட்டடைக் குச்சியோட முகமூடிக் கொள்ளைக்காரன் மாதிரி வருவேன். ‘பாரு! ஷாலுவோட ஹஸ்பெண்ட்! வீட்டு வேலையெல்லாம் எவ்வளவு இண்டிரஸ்டோட செய்யறாருன்னு’ பேரு கிடைக்கும். ஷாலுவால ஒத்துக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது. அவங்களெல்லாம் போனபிறகு ஷியாமுக்கு செம டோஸ்  கிடைக்கும். அது எனக்கான டோஸ் என்று தெரிந்து கொண்டு மனதுக்குள் சிரித்துக் கொள்வேன்.

ஆனா ஷாலு  காலையிலே  காப்பி பில்டரை வேகமா டங் டங் என்று மூணு தடவை தட்டும் போதே எங்களுக்குத் தெரிந்து விடும் . ‘அம்மா ஆங்க்ரி பேர்ட்’ என்று ஷ்யாம்   சிக்னல் வேறு  கொடுப்பான். நான் ஜாக்கிரதை ஆயிடுவேன். அன்னிக்கு நான் எதுக்கும் வாயைக் கொடுக்க மாட்டேன். ஹிண்டு பேப்பரைக் கூடப் படிக்க மாட்டேன்.  சட்னியில உப்பு இல்லேன்னாக்  கூட சொல்ல மாட்டேன். முடிஞ்சா ஆபீசில பாஸ் வரார்னு சொல்லி லஞ்ச் கூட எடுத்துக்காம  சீக்கிரம் ஓடிப் போயிடுவேன். ஏன்னா எதால அவ டிரிகர் ஆவான்னு சொல்லமுடியாது.  ஆனா ஒண்ணு. காலையில ஆங்கிரி பேர்ட் மூடில்  இருந்தா சாயங்காலம் ஷாலு பயங்கர  ஜாலி பேர்ட் ஆயிடுவா. அவ கோபம் ஆத்திரம் எல்லாம் கொஞ்ச நேரம் தான். சாயங்காலம் அவ கோபத்தைப்  பத்தி பயங்கரமா கலாய்ப்போம் . அப்போ அவளுக்குக் கொஞ்சம் கூட கோபம் வராது. அவ செம மூடில் இருப்பா!

image

எதை  எதையோ பேசி சொன்ன விஷயத்தை விட்டுட்டேனே! அந்த சனிக்கிழமை ஷாலு ஷிவானியோடஏழு மணிக்குக்  கிளம்பிப் போனபிறகு காப்பியைக் குடிச்சுட்டு நானும்  ஷ்யாம் கிட்டே படுத்துட்டுத் தூங்கிப்போயிட்டேன். ‘அது என் போர்வைப்பா உன் போர்வையை எடுத்துக்கோ" ஷ்யாம் கத்தக் கத்தத் தூங்கிட்டேன். ஆனா  கொஞ்ச நேரத்துக்கெல்லாம் யாரோ கதவைத் தட்டற  சத்தம் கேட்டது. மணி பாத்தா ஏழே கால். ஷாலுவும் ஷாலினியும் வாசலில். . ‘என்னாச்சு? பூஜைக்குப் போகலியா? என்று கேட்டுக் கொண்டே  கதவைத் திறந்தேன்.

அப்பறம் தான் எனக்கே புரிந்தது. நானும் ஷியாமும்  சாயங்காலம் ஏழேகால் வரை தூங்கியிருக்கோம் என்று. ஏதோ ஒரு ராமநாராயண் படத்தில ரோஜா பச்சைக் கலர் காளியா வந்து கையில சூலத்தோட டான்ஸ் ஆடுவாளே  அந்த மாதிரி ஷாலு ஆடப் போகிறா என்று நினைக்கும் போது ‘ஹாய் அண்ணா!’ என்று என் சித்தி பொண்ணு அவ பசங்களோட வந்தா! அவளை ஆபத்பாந்தகின்னு சொல்லறதா இல்லை நிலநடுக்கத்தைக் காட்டும்  ரிக்டர் ஸ்கேல் என்று சொல்லுவதா என்று தெரியலை.

அன்னிக்கு ஷாலு ஆங்க்ரி பேர்ட் இல்லை. ஆங்க்ரி டயனோசார்.

ஆனா ஷாலு ஜாங்கிரி பேர்டா இருந்தபோதே எனக்குத் தெரியும்.

இவ்வளவு நாள் நான் சொல்ற கதையைப் படிச்சுட்டு எனக்கும் ஷாலுக்கும் அம்மா அப்பா பாத்து, ஜோசியம் பார்த்து, பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட்டு பொண்ணைப்  பாத்துட்டு ஊருக்குப் போய் இன்லெண்ட் லெட்டர் போட்ட கேசுன்னு தானே நீங்க நினைச்சிங்க! 

நாங்க லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணிக்கிட்டவங்கன்னு சொன்னா நம்புவீங்களா? ஆனால் அது தான் உண்மை. நான் அவளை முதன் முதலா பாத்தது  ……………………………………

image
image

பக்கம் ………………………. 3 

ஷாலு மை வைஃப்

image

ஷாலுவை ஸ்வாமினியுடன் சிங்கப்பூருக்கு பிளைட் ஏற்றிவிட்டு வந்த
எனக்கு “ஏர்போர்ட்டில் பரபரப்பு என்ற செய்தியைக் கேட்டதும் டென்ஷன்
ஆகிவிட்டது. அது என்னவென்று தெரிந்து கொள்ளுமுன் கரெண்ட் கட்டாகி டிவி , இன்டெர்நெட் எல்லாம் ஆப் ஆகிவிட்டது. 

மறுபடி ஷாலுவின் அப்பாவிடமிருந்து போன்.” மாப்பிள்ளை !
ஷாலுவைப் பாத்தேளா? “ அதற்குள் போன் கட்டாகி என்
டென்ஷனை ஏற்றிக் கொண்டிருந்தது. இன்வர்ட்டரும் ஓடவில்லை. ஓர் நிமிடம் தலையைச்
சுற்றியது. 

ஷாலு  பிளைட் பிடித்திருக்க மாட்டாள்.  இன்னும் ஒரு மணிநேரம் இருக்கிறது. டிங். ஷாலுவிடமிருந்து
.மெஸேஜ் வந்தது. ‘டி வி பாருங்கோ ’ என்ற
சிம்பிள் வார்த்தை. முடியாதைத் தான் எப்பவும் ஷாலு சொல்வாள். 

இன்னிக்கு ஆபிசிலிருந்து சீக்கிரம் வந்துடுங்கோ’ என்பாள். அன்றைக்குன்னு பார்த்து ஒரு மீட்டிங்
இருக்கும். சாயங்காலம் வரும்போது கொத்தமல்லி கருவேப்பிலை வாங்கிட்டு வாங்கோ ன்னு
சொல்லுவாள். சரி, வீட்டுக்குப் பக்கத்தில இருக்கிற கடையில
வாங்கிக்கலாம்னு வருவேன். அன்னிக்குன்னு பார்த்து ‘ரெண்டும்
பழசாயிடுச்சு சார்! நாளைக்கு தர்ரேனே’ என்று பாசத்தோடு
சொல்லுவான் கடைக்காரன். திரும்ப ஆபீஸ் பக்கத்தில இருக்கற கடைக்குப் போக
சோம்பேறித்தனம். சரி பார்த்துக்கலாம்னு வீட்டுக்கு போனா கருவேப்பிலை கூட வாங்கத்
தெரியாதவன்னு ஒரு லுக் விடுவாள் ஷாலு. அது போதும் நாலைந்து நாளைக்கு எதையும்
மறக்கத் தோணாது. 

மெஸேஜ் வந்ததினாலே ஒரு திருப்தி. மேஜர் பிராப்ளம் ஏதும் இல்லை.
மொபைலில் 3ஜி இருக்கான்னு பார்த்தா நெட்வொர்க்கே
இல்லை. மாசத்தில மூணு நாளைக்கு  எங்க காலனி மொபைல் எல்லாம் அஞ்ஞான வனவாசம் போயிடும். வீட்டுக்குள்ளே நெட்வொர்க் வராது. போன் லேசா அடிச்சா அவனவன் அவசர அவசரமா போனை எடுத்திக்கிட்டு வாசலுக்கு ஓடுவாங்க. டமால் டுமீல் என்று கதவு திறந்து மூடும் சத்தம் கேட்கும். அந்த சமயத்தில எங்க காலனியில
எந்தவித ரகசியமும் இருக்காது. 

மாடி வீட்டு சேஷனோட  மாட்டுப்பொண் குளிக்காம இருக்கறதிலிருந்து, 

கீழ் வீட்டு சரோஜா மாமியின் ஓர்ப்படி கஜானாவில வளையல் வாங்கின
சேதியும், 

பக்கத்து வீட்டு லைலா அவ  பிரண்டு
( பாயோ கர்லோ ) கூட ஓகே கண்மணி படத்துக்குப் போற சேதியும்  

லக்ஷ்மி மாமி நாராயணீயம் கிளாசுக்குப் போறாள் என்ற சேதியும் 

எங்க ஆபீஸ் எம்‌டி வத்தக்கொழம்பும் சுட்ட அப்பளாமும் சாப்பிட
வீட்டுக்கு வர்ரார் என்ற சேதியும் 

நரசிம்மன் பென்ஷனுக்கு லைவ் சர்டிபிகேட் கொடுக்க மறந்துட்டார்
என்பதுவும் 

காலனி முழுதும் எல்லாருக்கும் தெரிஞ்சுடும். 

மாமனார் எப்படி பேசினார் என்று யோசித்தால் அவர் லேண்ட் லைனில்
பேசியிருக்கிறார். 

மறுபடி ஷாலு கிட்டேயிருந்து  மெஸேஜ் ” பாத்தீங்களா?“  என்று. 

மூன்று மெஸேஜுக்குப் பதில் போடவில்லை என்றால் ஷாலு அவள் அவளாகவே
இருக்க மாட்டாள். அந்தக் கோபத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கும். விளைவுகளுக்கு
அவள் ஜவாப்தாரி ஆக மாட்டாள். இப்படித்தான் போன மாதம் நான் ஆபீஸில் கொஞ்சம் பிஸியாக
இருந்த போது மூணு தடவை அவளோட போனை எடுக்கலை. நேரா எங்க மேனேஜருக்கே போன்
செஞ்சுட்டாள். அவ்ர் கிட்டே என்ன சொன்னாளோ தெரியலை அவர் அஞ்சாவது நிமிஷத்தில ஆபீஸ்
காரைக் கொடுத்து வீட்டுக்கு அனுப்பிச்சு வைச்சார்னா பாத்துக்கங்களேன். 

பிராப்ளம் ஒண்ணும் இல்லையே என்று திருப்பி மெஸேஜ் அனுப்பினேன்.
பதில் ஒன்றும் இல்லை. வராது என்பதுவும் எனக்குத் தெரியும். 

டிவி பார்க்க என்ன வழி என்று தீவிரமா யோசிக்கும் போது கரண்ட்
வந்தது. ஆஹா என்று சுடச்சுட செய்திகளை சன் டிவி தானே தரும் என்று அதைப் போட்டேன்.
தமிழ் நாட்டில் எந்த மூலையில் கொலை கொள்ளை கற்பழிப்பு என்று விளக்கமாகச்
சொன்னார்களே தவிர ஏர்போர்ட் சமாசாரம் ஒண்ணும் வரவில்லை. .சானலைத் திருப்பிக்
கொண்டே வந்தேன்.பொதிகை வந்ததும் இன்று சென்னை ஏர்போர்ட்டில் நடைபெற்ற பரபரப்பான
சம்பவத்தை விளம்பர இடைவேளைக்குப் பிறகு காணலாம் என்று சொன்னார்கள். நானும்
நகத்தைக் கடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். 

image

விளம்பரம் முடிந்தது. ஆஹா ! என்ன இது ? ஷாலு டிவியில் வருகிறாளே ! மெயின் போகஸ் குருஜினி
தான். இன்று உலக யோகா தினம். ராத்திரி பன்னிரண்டுக்கு மேல் ஆரம்பமாகி விட்டது. அதைக் கொண்டாடும் வகையில் குருஜினி யோகா பயிற்சியை  ஏர்போர்ட்டில் காத்துக் கொண்டிருக்கும் பயணிகள் அனைவரையும் செய்யச் சொல்லிக் கொண்டிருந்தார். எப்படி சரியாகச்
செய்யவேண்டும் என்பதற்கு ஷாலு தான்   டெமோ கொடுத்து வந்தாள். இதெல்லாம் அன்று சென்னையிலிருந்து துபாய் செல்ல வந்த பி ஜே பி எம்.பி ஒருவர் மற்றும் அவரது பரிவாரங்கள் எல்லாம் பார்த்தன.  அவரை பேட்டி காண வந்த பிரஸ் மக்களை உள்ளே அழைத்து அவர்கள் முன்னிலையில் அவரும் அந்த யோகா உத்சவத்தில் கலந்து கொண்டு ’ மோடி ஜிந்தாபாத்! யோகா ஜிந்தாபாத்’ என்று குரல் எழுப்பிக் கொண்டு இருந்தார். குருஜினிக்கு அவர் முன்பே
தெரிந்தவராக இருக்கும் என்று எனக்குத் தோன்றியது.

 இது திடீரென்று நடந்ததா
அல்லது திட்டமிடப் பட்டதா என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ஷாலுவுக்குத்
தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு. மத்தியானம் கூட குழந்தைகளுக்கெல்லாம் யோகா சொல்லிக்
கொடுக்கணும் என்று சொன்னாள். அப்பாவையும் சிரசாசனம் – யோகா எல்லாம்  பண்ணச்
சொல்லணும். அவரோட முழங்கால் வலி குறையும்  என்று சொன்னாள். அவருடைய மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும்
ஏன்  முடிச்சு போடுகிறாய் என்று நான்
ஜோக்காய்க் கேட்டேன். (அவள் அதை ரசிக்கவில்லை என்பது, அவள் உதட்டைக் கடித்துக் கொண்டு  பாத்திரம்
தேய்க்கிற ஸ்டைலிலேயே தெரிந்தது.).   அதற்குப் பிறகு யோகாவைப் பற்றிப்
பேசவில்லை. அதனால தான் அவளுக்கு முன்னாடியே தெரிஞ்சிருக்க வாய்ப்பிருக்கும்னு
எனக்குத் தோன்றியது.

குழந்தைகளை எழுப்பி அம்மா டி வி யில வந்திருக்கான்னு சொல்லலாம்னு
நினைச்சேன். இப்ப தான் ரெண்டும் தூங்கப்போச்சு. இப்ப எழுப்பினா அம்மா திரும்பி
வந்துட்டாளான்னு நினைச்சு ஏடா கூடாமா ரியாக்ட் செய்யுங்கள். சரி, நாளைக்கு
இதை மறுபடியும் மறு ஓளிபரப்பு வைப்பாங்க என்கிற நம்பிக்கை எனக்கு இருந்தது.

ஷாலுவை டிவியில் பாத்தா ரெண்டு குழந்தைக்கு அம்மா மாதிரி தோணலை. கொஞ்ச  நேரம் வேடிக்கை பார்த்துக் கொண்டே
இருந்துவிட்டேன். இந்த களேபரத்தில ஷாலுவுக்கு மெஸேஜ் கொடுக்க மறந்து விட்டேன். லேண்ட்
லைனையும் சரியாக வைக்காததால் அதுவும் ஆஃப் ஆகிக் கிடந்தது. அவளிடமிருந்து மூணாவது மெஸேஜ் வந்து நான்கு நிமிஷம் ஆகிவிட்டது. நான் பரபரப்போடு அவளைப் போனில் பிடிக்க
முயற்சி செய்யும் போது பார்த்தால் என் போனில் சார்ஜ் தீர்ந்து போயிருக்கிறது. அதைச்
சார்ஜில்  போட்டு விட்டு ஷாலுவின்
நம்பருக்கு போன் செய்ய முயலும் போது என் வீட்டு காலிங் பெல் அடித்தது. ஷாலு தான்
வந்துவிட்டாளோ  என்று பார்த்தால் பக்கத்து
வீட்டு சில்க் ஸ்மிதாவின் கணவன் நிற்கிறான். அவன் தெலுங்கையும் தமிழையும்
இங்கிலீஷையும் கலந்த ஒரு திராவிட பாஷையில ஏதோ சொன்னான். எனக்குப் புரிஞ்சுடிச்சு.
ஷாலு தான் சில்க்குக்கு போன் பண்ணியிருக்கணும். “ரொம்ப தேங்க்ஸ், நானே பாத்துக்கிறேன்” என்று சொல்லி அவனை அனுப்பி
வைத்தேன்.

அதற்குள் ஷாலுவிடமிருந்து எனக்கே நேரடியாக லேண்ட் லைனில் போன்
வந்தது.

“ஹாய் ஷாலு கங்கிராட்ஸ்”

“கங்கிராட்ஸ் எல்லாம் அப்பறம் பாத்துக்கலாம். என்னாச்சு உங்க
போனுக்கு?

“ வழக்கம் போல சார்ஜ் இல்லே. அத்தே விடு.  சூப்பரா இருந்தது யோகா எல்லாம். நீயும் உங்க குருஜினியும்
கலக்கிட்டீங்க” என்றேன்.

“ நான் போன் பண்ணினது எதுக்குத் தெரியுமா? கிளம்பற அவசரத்தில பாலை உரைகுத்த மறந்துட்டேன்.
மறக்காம பண்ணிடுங்கோ. இல்லேன்னா நாளைக்கு குழந்தைகளுக்குத் தயிர் சாதம் இல்லாம
போயிடும்”

காரில் வரும் போதே “அப்பா
நாளைக்கு தயிர் சாதம் வேண்டாம். பேசாம சரவண பவனிலிருந்து வெஜ் பிரியாணியும்
பன்னீர் பட்டர் மசாலாவும் வாங்கித் தாப்பா” என்று கெஞ்சினார்கள். நானும் உசேன்
பாய் மாதிரி வாக்குக் கொடுத்திட்டேன்.  

“டோன்ட் வொரி ஷாலும்மா! இப்பவே உரை குத்திடறேன். வேற ஏதாவது
மறந்திட்டியா “ என்று சாதாரணமாகத் தான் கேட்டேன்.

“ ஏன் நீங்க இப்படி குத்திக் காட்டிப் பேசறீங்க” என்று ஷாலு
பிடிச்சுட்டா.

“ பிளைட் என்னாச்சு ஷாலும்மா? டிலேயா
என்று கேட்டேன்.

“ யோகா டெமோவெல்லாம் முடிச்சுட்டுத் தான் நாங்க செக்யூரிட்டி
செக்குக்கே போகப்போகிறோம்” என்றாள்.

என் நாக்கில் சனி.

“அது சரி. இது நீங்க முதலிலேயே பிளான் பண்ணினது தானே “ என்று
கேட்டுவிட்டேன்.

“நீங்களும் அந்தப் பத்திரிகை நிருபர்களும் ஒரே மாதிரி தான்
கேட்கறீங்க. குருஜினிக்கு மோடி கிட்டேருந்து நேரடியா மெஸேஜ் வந்தது. ‘உலக யோகா தினத்தைச் சிறப்பா கொண்டாடுங்கோ’ என்று. அதனால தான்  ஏர்போர்ட்டில்
12 மணியிலிருந்து 12.15  வரை யோகா டெமோ பண்ணினோம்.

பிரைம் மினிஸ்டர் ஆபீசிலிருந்து இந்த மாதிரி மெஸேஜ்
எல்லாருக்கும் வரும் என்பது  அவளுக்குத்
தெரியவில்லை. எனக்கும் வந்திருந்தது.

“என்ன பேச்சே இல்லை! தூக்கம் வருதா?”

“அதெல்லாம் ஒண்ணுமில்லை. நாளைக்கு நீங்கள் சிங்கப்பூர் போய் எப்படி
கலக்கப் போறீங்கன்னு நினைச்சுப் பார்த்தேன். அது சரி ஷாலு! சிங்கப்பூரில் உங்க
புரோகிராம் என்ன? ”

“அதெல்லாம் அங்கே போய் சொல்லறேன். இப்போ போர்டிங் கால்
கொடுத்துட்டாங்க! குழந்தைகளை ஜாக்கிரதையாய்ப் பாத்துக்கங்க! நீங்களும் கண்ட கண்ட
இடத்தில சாப்பிடாதீங்க! பன்னீர் பட்டர் மசாலா பக்கமே போகாதீங்க. வயத்துக்கு ரொம்ப
கெடுதலாம் குருஜினி சொல்லியிருக்கார் ” என்று சொல்லி போனை வைத்தாள்.

image

ஷாலு! உன்னோட பொஸ்ஸஸிவ்
இண்டெல்லிஜன்ஸ் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என்று மனதுக்குள் சொல்லிக்
கொண்டே படுக்கப்போனேன். ஏனோ அந்த சமயம் ஃபர்ஸ்ட் நைட்டில அவள் பேசின பேச்சு ஞாபகம்
வந்தது. “ ஐ லவ் யு ஷாலு’ என்று சொல்லிக் கொண்டே தூங்கிப்
போனேன்.

ஷாலு மை வைஃப்

ஒரு வழியாக ஷாலுவையும் அவள் குருஜினியையும் சிங்கப்பூர் விமானத்தில் ஏற்றிவிட்டு ஷ்யாம் ஷிவானியுடன் காரில் வந்துகொண்டிருந்தேன். 


image

அவ்வளவு அழகா ஆர்கியு பண்ணின ஷிவானி ஷாலு கிளம்பியதும் அழ ஆரம்பித்துவிட்டாள். அது தான் .குழந்தை  – அது தான் தாய்ப்பாசம்.ஷ்யாம் அழவில்லை ஆனால் உர்ரென்று இருந்தான்.எனக்கும் கொஞ்சம் சங்கடமாகத் தான் இருந்தது. 

திடீரென்று போன் அலறியது. என்னுடைய பாஸ்.ராத்திரி பதினொரு மணிக்கு போன் பண்றாரே என்று தடுமாறி எடுத்தால் ஸ்பீக்கர் வேறு ஆன் ஆகிவிட்டது. “ பெண்டாட்டி   ஊருக்குப் போயிட்டாளா? தங்கமணி … என்ஜாய்..” என்று ஜனகராஜ் பாணியில் சொல்லிவிட்டு வைத்து விட்டார். தேவை தானா? 

மறுபடியும் போன். இந்த தடவை ஷாலு.  இமிகிரேஷன்,செக்கப் கஸ்டம்ஸ் எல்லாம் முடித்துவிட்டாளாம்.  செக்யூரிட்டி செக் முடியர வரைக்கும் குழந்தைகள் கூட பேசலாம்னு போன் பண்ணினாளாம். ஷ்யாம் முதல்லே போனைப் பிடுங்கினான். ஆனால் எதுவும் பேசவில்லை. அவள் நிறைய கேள்விகள் கேட்கிறாள் போல இருக்கு. அவன் எல்லாத்துக்கும்  ஒரு  வார்த்தையிலே பதில் சொல்லிக் கொண்டிருந்தான். 

சரி.  

இம்ம்  

ஓகே .. 

சரி சரி.. 

ஓகே ஓகே . 

முடியாது. 

வேண்டாம். 

சரி சரி. 

அம்மா பிளீஸ்.. 


image

இதுக்கு மேல் ஷிவானிக்குப் பொறுமை போய் விட்டது. ’ என்கிட்டே கொடு அண்ணா ’ என்று போனைப் பிடுங்கிக் கொண்டாள். 

அதற்குப் பிறகு நடந்தது ஒரு பாசப் போராட்டம். ஷிவானி தேம்பித் தேம்பி அழ  ஆரம்பித்துவிட்டாள். கடவுளே! பத்து நிமிடம் கூட ஆகலை. இன்னும் பத்து நாளை எப்படி சமாளிப்பது?ஆனால் அந்த அழுகைக்கு மத்தியில என் ஆபீஸ் பாஸ் ‘பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா.. என்ஜாய்!“ என்று சொன்னதை ஷாலுவிடம் போட்டுக் கொடுக்க மறக்கவில்லை. அது தான் ஷிவானி! 

அப்பா! அம்மா உன்கூட பேசணுமாம்!

என்னாச்சு உங்க பையனுக்கு?

என்னாச்சு?

எதைச் சொன்னாலும் அப்படியான்கிற மாதிரி பேசரான்!

அப்படியா?

இதே தான் ! உங்களை மாதிரி ஒத்தை வார்த்தையில் பதில் சொல்றான்?

ஓஹோ!

அப்படியே உங்களைக் கொண்டிருக்கான்! கல்லுளிமங்கன்!

நானா அவனா ? 

ரெண்டு பெரும் தான். 

அப்போ ஷிவானி?

அவளுக்கு என்னை மாதிரி  பூஞ்சை மனசு! ஏன் இப்படி அழறா? 

இப்போ நீ எதுக்கு அழறே? அதே மாதிரி தான் அவளும்.அவ அப்படியே உன்னைக் கொண்டிருக்கா?

ரொம்ப சரி! நீங்க உங்க பாஸ்சொன்னமாதிரி என்ஜாய் பண்ணுங்கோ!

ஷாலு! கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணிக்கோ! நீயாத்தானே சிங்கப்பூர் போகணும்னு ஆசைப்பட்டே! பாக்கிறவா எல்லாம் நான் கொடுமைப் படுத்தி உன்னைப் பிறந்த வீட்டுக்கு அனுப்பறேன்னு நினைச்சுப்பா!

ஆமா! என் பொறந்த வீடு என்ன சிங்கப்பூரா? பிளேன்ல  போறதுக்கு? 

உங்க ஊர் கோனேரிராஜகீழ்ப்பாக்கத்துக்கு உன்னைப் பொண்ணு பாக்க வந்த போதே  ஒத்தை மாட்டு வண்டியில தானே வந்தேன்!

இப்போ இது ரொம்ப அவசியமா? செத்தே இருங்கோ! குருஜினி ஏதோ சொல்கிறார். உங்களோட தத்துப்பித்துப்  பேச்சைக் கேட்க இப்ப நேரமில்லை. நீங்க வீட்டுக்குப்  போங்கோ! அப்பறம் கூப்பிடறேன்!

பாத்து ஷாலு! டேக் கேர்!

போன் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்தது. 

வீட்டுக்குப் போய்ச் சேரும் போதே ராத்திரி பன்னிரண்டு மணி ஆகிவிட்டது. குழந்தைகள் இரண்டும் துவண்டு  போய் தூக்கம் பிடித்து விட்டார்கள். எனக்கு வீட்டில் ஷாலு இல்லாதது என்னவோ போலிருந்தது. தூக்கமே வரவில்லை. ஷாலு பிளைட் கிளம்ப  இன்னும்  ஒன்றரை மணி நேரம் இருக்கு. கண்டிப்பா போன் பண்ணுவா. அதுவரைக்கும் டி வி ஏதாவது பாக்கலாம்னு ரிமோட்டை எடுத்து வழக்கம் போல் ஒவ்வொரு சானலா மாற்றிக் கொண்டிருந்தேன். என் பாஷையில் டி வி பிரவுஸ் செய்துகொண்டிருந்தேன். 

ஒரு சானலைக்  கூட ஒழுங்கா பாக்க மாட்டீங்க! ! தானும் பாக்காம மத்தவங்களையும் பாக்கவிடாம அப்படியென்ன உங்க மனசில ஒரு சேடிசம்?  – ஷாலு ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையிலும் நான் டி வி ரிமோட்டைத் தொட்டதும் பாடும்  முதல் பல்லவி இது! அதுக்கப்பறம் அவ அனுபல்லவி பாடுவா! நான் சரணம் என்று ரிமோட்டைக் கொடுத்துட்டு ( அப்படி தூக்கி எறியாதீங்கோ! உடைஞ்சா உங்களுக்கென்ன? என் சீரியல் தான் அம்போ ஆயிடும்) கம்ப்யூட்டர்  மவுசை எடுத்துக் கொண்டு விடுவேன். ( எப்பப் பாத்தாலும் கம்ப்யூட்டர்  

கம்ப்யூட்டர்  ! வீட்ல நாலு மனுஷா இருக்காளே அவா கூட கொஞ்சமாவது பேசணும்னு உங்களுக்குத் தோணவே தோணாதா ? – வீட்டிலே நாம மூணு பேர் தானே இருக்கோம். உன் கசின் சிஸ்டர் வந்திருக்கான்னு சொல்லவே இல்லையே! )  இந்த மொக்கை ஜோக்குக்கெல்லாம் அவள் மசிய மாட்டாள்.

அப்போது தான் நியூஸ் 7 சானலில் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு என்ற சேதி முக்கிய செய்தியாக வந்துகொண்டிருந்தது. எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. என்ன என்று பார்க்க முயலும் போது திடீரென்று கரண்ட் கட்டாகி டி‌வி ஆப் ஆகிவிட்டது. இன்வர்ட்டரை சரி  பண்ணுங்கோன்னு ரெண்டு வாரமா ஷாலு சொல்லிக் கொண்டே இருந்தா. நான் தான் அசால்ட்டா இப்பெல்லாம் அம்மா கரண்ட் போறதேயில்லை தெரியுமோ? என்று சொல்லிக் கொண்டிருந்தேன். 

ஷாலுவுக்குப் போன் செய்தேன். ரிங் அடித்துக் கொண்டே இருந்தது. அவள் எடுக்கவில்லை. எனக்குப் பயத்தில் வேர்த்தது.  

image

 சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு  

 சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு  

 சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

அந்த செய்தியே என் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது. 

சட்டென்று வீட்டுக்கு வெளியே  வந்து பார்த்தேன். இன்னிக்கென்று எந்த வீட்டிலும் லைட்டே இல்லை. யார் தூங்கிட்டா இல்லே யார் முழிச்சிட்டு உட்கார்ந்திருக்கானு தெரியலை. கரண்ட் கட் ஆனாலும் இன்வார்ட்டர் கரன்ட்டில் ராத்திரி பூரா டி வி பார்க்கும் நாலாம் மாடி சில்க் ஸ்மிதா…

( அப்படி சொல்லாதீங்கோ! அவ காதிலே விழப் போகிறது! அப்பறம் அவ ஊர் கடப்பா கல்லால  தான் அர்ச்சனை  நடக்கும் –

அவ கணவனுக்கு எப்போதும்  நைட் டியூட்டி அவ என்ன பண்ணுவா?  

)

சில்க் ஸ்மிதா…

வீடு கூட இருளடைந்திருந்தது. இன்னிக்கு அந்த தாடிக்கார தெலுங்கானா பாபுவுக்கு ஆபீஸில் நைட் டியூட்டி இல்லை போலிருக்கு. 

யார் வீட்டுக் கதவைத் தட்டலாம்னு யோசிக்கும் போது மொபைல் அலறியது.  

கோனேரிராஜகீழ்ப்பாக்கத்திலிருந்து அவள் அப்பா! "மாப்பிள்ளை ! ஷாலு சௌகரியமா பிளேன் ஏறிட்டாளா?”  அவ சகட  ராசிக்காரி.எப்பவும் துருதுருன்னு இருப்பா.! என்ன!  பதிலே சொல்ல மாட்டேங்கிரேள்?  சித்தே இருங்கோ! ஏதோ டிவியில ஏதோ சொல்றான்.. மொபைல் கட்டாகிவிட்டது. ஷாலுவிற்கு ஏழெட்டு முறை போன் செய்தேன். ரிங் போகிறது. “இந்த இணைப்பாளர் உங்களுடன் பேசப் பிரியப் படவில்லை” என்ற  அர்த்தத்தில் தமிழ், ஹிந்தி, இங்கிலீஷ் பாஷையில் கைபேசி அலறியது. 

எனக்கு டென்ஷன் ஏறத் தொடங்கியது. 

ஷாலு மை  வைஃப்

image

“ஷாலு உன்னுடைய தீர்மானத்தில் மாற்றமில்லையா? ”

என் கணவன் என் தோழன் “ சீரியலில் சூர்யா,  சந்தியா கிட்டே  கெஞ்சுவது போல் கேட்டுக் கொண்டிருந்தேன் . 

"குருஜினிக்கு ஆயிரம் சிஷ்ய கேடிகள் சாரி கோடிகள்  இருக்கும் போது சிங்கப்பூர் போக உன்னை ஏன்  தேர்ந்தெடுக்கணும்? ”

 இந்தக் கேள்வியை நான் ஆக்டிவ்  வாய்ஸில பாசிவ்  

வாய்ஸில மற்றும் பல

வாய்ஸில கேட்டும் ஷாலுவிடமிருந்து சிறு புன்னகைக் கீற்றைத் தவிர எந்த மறுமொழியும் வரவில்லை. நான் நவராத்திரி சிவாஜி மாதிரி நவ ரசத்தையும் பிழிஞ்சது தான் மிச்சம். 

திடீரென்று ஞாபகம் வந்தது. இதுக்கு சரியான ஆள் ஷிவானி தான். அவள் அடம் பிடிச்சா யாரும் அவ கிட்டே குறுக்கப் பேச முடியாது. அவளிடம் நன்றாகப் புரியும்படி பத்து நிமிஷம் சொல்லி அவளை ஷாலுவிடம் அனுப்பி வைத்தேன். ‘அப்பா சொன்னேன்னு மட்டும் சொல்லிடாதே !’ என்று நன்றாக எச்சரித்து அனுப்பினேன். 

“கவலைப் படாதே அப்பா ! அம்மா நம்மளை அம்போன்னு விட்டுட்டு சிங்கப்பூர் போக மாட்டா’ என்று துர்கா படத்தில் பேபி ஷாலினி            ( அவங்களே தான் ! நாளைய டாப் டக்கர் ஹீரோயின் !  அஜீத் மச்சினி – குமுதம் அட்டைப் படம் பாக்கலையா? ) சட்டை போட்ட குரங்குகிட்டே  பேசுவது போல் அபயக் குரல் கொடுத்தாள். அதுக்கு மேல ‘ஷிவானி இருக்க பயமேன்’ என்ற டான்ஸ் போஸ் வேற ! 

எனக்கு வேணும் என்று நொந்துகொண்டு அவளை பேசச்சொன்னேன் ! அடுத்த அறையில் உட்கார்ந்து கொண்டு அவர்கள் இருவரும் பேசுவதை ஒட்டுக் கேட்டேன் ! அவர்கள் நிறைய டெசிபலில் பேசியதால் ஒட்டுக் கேட்க வேண்டிய அவசியமில்லாமல் அதுவாகவே என் செவிப்பறையைத் தாக்கியது! 


image

அம்மா ! நான் உன்கூடக் கொஞ்சம் பேசணும் !

பேசிக்கிட்டுத் தானம்மா இருக்கே !

அதில்லே! நான் கொஞ்சம் சீரியஸா பேசணும் !

உங்க அப்பா உன்கிட்டே இதைச் சொல்லச் சொன்னாரா ? 

 ஏன் அப்பா சொல்லித் தான் நான் பேசுவேன்னு நீ நினைக்கிறே ? 

நீ கேட்க வந்த தோரணையே உன்னைக் காட்டிக் கொடுத்திடுச்சு !

என்னன்னு ?

நீ அப்பாவுக்கு சப்போர்ட்டா பேச வந்திருக்கேன்னு புரியுது !

நான் உனக்கு சப்போர்ட்டா பேச வந்திருக்கேன் !

புரியலையே !

உனக்குப் புரியாதுன்னு தான் நான் விளக்கமா சொல்ல வந்திருக்கேன் !

எதைப் பத்தி ? 

எதைப் பத்தி நான் பேசப் போகிறேன்னு தெரியாம நீ ஏன் அப்பாவை நம்ம பேச்சில இழுக்கிறே ? 

நிச்சயமா இந்த மாதிரி எல்லாம் பேச உங்க அப்பாவுக்கு மட்டும் தான் தெரியும் !

நான் என்ன பேச வந்திருக்கேன்னு தெரியாம நீ ஏன் விஷயத்தை விட்டு வெளியே போற ?

ஏன்னா நீ விஷயத்தைச் சொல்லாமல்  மென்னு முழுங்குரே ! 

நீ தான் விஷயத்தைச் சொல்ல விடாமல் என்னைத் தடுக்கப் பாக்கிறே ! 

நீ சொல்ல வேண்டியதை நேரா சொல்ல வேண்டியது தானே ?

நீ சொல்ல விட்டால் தானே ?

நீ இப்பிடித் தப்பா  சொல்வேன்னு எனக்குத் தெரியும் ! 

நீ இப்பிடித் தான் சொல்வேன்கிறது எனக்கும் புரியும். 

அட! அட! ராம் ஜேத்மலானியும் பராசரன் அவர்களும்  பேசுவது போல் இருந்தது ! ஒட்டுக்  கேட்ட என் காது ஓட்டை ஆயிடும் போல இருந்தது. அம்மாவுக்கு ஏத்த பொண்ணு என்று அவளை மனசில் பாராட்டினேன். 

அம்மா ! நீ குறுக்க குறுக்கப் பேசாதே  ! நான் ஸ்ட்ரைட்டா விஷயத்துக்கு வர்றேன் !

அது தான் ..

உஸ்ஸ்.  நான் சொல்றதைக் கேளு ! நீ சிங்கப்பூர் போறது நம்ம வீட்டில ஒருத்தருக்குப் பிடிக்கலை !

இது தான் ஊர் அறிஞ்ச விஷயம் ஆச்சே! உங்க அப்பா மட்டும் தான் ஆரம்பத்திலேர்ந்து இதுக்கு முட்டுக் கட்டை போடறார். 

அம்மா ! மறுபடியும் நீ தப்பா பேசறே !

முதல்லே நான் என்ன தப்பா சொன்னேன் ? 

நான் தப்பா சொல்வேன்னு நீ சொன்னியே அது தான் உன் முதல் தப்பு !

ரெண்டாவது தப்பு ?

அப்பா மட்டும் தான் இதை எதிர்க்கிறார்னு நீ சொன்னது !

வேற யாருக்குப் பிடிக்கலை? உனக்கா? 

இல்லை ! நான் உன் கட்சி ! 

எனக்குத் தூக்கி வாரிப் போட்டது !  பப்ளிக் பிராசிக்யூட்டர்  சேம் சைட் கோல் போடற மாதிரி இல்ல இருக்கு !

ஷாலுவும் கொஞ்சம் ஆடிப் போய்விட்டாள் என்று தான் தோன்றியது ! 

வேற யாருடி இதை வேண்டாங்கிறது ?

ஷ்யாம்  அண்ணா ! 

‘இதென்ன புது குண்டா இருக்கு’ என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன். 

சும்மா உளறாதேடி!அவன் அன்னிக்கே ஒத்துக்கிட்டான். 

அது அன்னிக்கு! 

இன்னிக்கு மாறிடுச்சா?

ஆமாம்!

எப்படி?

அன்னிக்கு அவன் கிட்டே ஐ பேட் வாங்கித் தர்ரேன்னு  சொன்னே ! அதனால ஒத்துக்கிட்டான்.

ஆமாம். அதுக்கென்ன? 

இன்னிக்கு அவன் மைண்ட் மாறிடுச்சு ! கிரிக்கெட் பேட் தான் வேணுமாம் ! 

அதனால என்ன !  கிரிக்கெட் பேட் வாங்கித் தர்றேன் !

சாரி ஷாலும்மா ! நீ லேட்! அப்பா அவனுக்கு நேத்திக்கே பேட் வாங்கிக் கொடுத்திட்டார் !

அதனால கட்சி மாறிட்டானா?  

அதுமட்டுமல்ல. 

வேற என்னவாம்? 

நீ சிங்கப்பூரில் இருக்கப்போற பத்து நாளைக்கு அப்பா தான் சமைக்கப் போறேன்னு வேற சொல்லி அவனைப் பயமுறுத்தியிருக்கிறார் ! 

அதுமட்டுமல்ல !

எல்லாத்தையும் சேத்துச் சொல்லுடி!

அப்பா அவனுக்கு டெய்லி ஹிந்தி சொல்லித் தரப் போறாராம். கிரிக்கெட் கோச்சிங் வேற கட்டாம். இன்னும் ஒண்ணும் சொன்னாரே!

யார் ?

அதைச் சொல்ல மாட்டேன் ! ம்.  ஞாபகம் வந்திடிச்சு! “ All is fair in love and war” லவ்வுன்னா என்னாம்மா?

செவுள்ளே அறைஞ்சா காது ஜிவ்வுன்னு கேக்கும்! லவ்வாம் லவ்வு. எங்கேடி உங்க அப்பா ? 

ஐயோ ! அம்மா அப்பாவை அறையப் போரான்னு கத்திக் கொண்டே ஓடிப் போய் விட்டாள் ஷிவானி.

ஷாலு நேரா நான் இருக்கிற ரூமுக்கு வந்தாள். 

” என்ன இது! குழந்தையை இப்படிப் பேசப் பழக்கியிருக்கேள்? “

வேணுமுன்னா பாரேன் ! ஷிவானியை வக்கீலுக்குத் தான் படிக்க வைக்கப் போகிறேன் ! என்னமா ஆர்கியு பண்றா?

எனக்கும் ஷிவானிக்கும் நடந்தது ஆர்கியுமெண்ட் இல்லே ! சும்மா டிஸ்கஷன் தான் ! 

ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்?

யார்  கரெக்ட்டுன்னு  பாக்கிறது  

ஆர்கியுமெண்ட்,  எது  

கரெக்ட்டுன்னு பாக்கிறது டிஸ்கஷன் !

எங்கே 

கரெக்ட்டுன்னு பார்க்கிறது தான் அறிவு !

விளையாடாதீங்க ! உண்மையா சொல்லுங்க ! நான் சிங்கப்பூர் போறது உங்களுக்குப் பிடிக்கலைன்னா சொல்லுங்க நான் குருஜினி கிட்டே சொல்லி கேன்சல் பண்ணிடறேன் !

ஷாலு ! இந்தா ! உனக்கும்  உங்க குருஜினிக்கும் சிங்கப்பூர் விசா ! எங்க சிங்கப்பூர் ஆபிசில சொல்லி உடனே வாங்கிட்டு வந்தேன் !

ஷாலுவுக்குக் குஷி தாங்கல ! அப்படியே என்னைக் கட்டிப் பிடிச்சிட்டு ஒரு கிஸ் கொடுத்தாள். 

பின்னே ஏன் 

ஆர்கியுமெண்ட், டிஸ்கஷன் எல்லாம் !

இதுக்குத் தான்! 


image

அம்மா ! அப்பா ! ஷ்யாம்  அண்ணாவைக்  கன்வின்ஸ் பண்ணிட்டேன் ! அவனுக்கு இப்போ  ஓகேயாம். ஷிவானி  வர இருவரும் பிரிந்தோம் ! 

இது நீ பண்ணின மூணாவது தப்பு ! – ஷாலினி குரலில் சொன்னேன்!