IMG_0898 (1)
IMG_0961

 

இரவு  நேர  பூபாளம் Displaying 2016-07-06 09.39.44.png

 

pic2

கால் பதித்து ஏறுகையிலேயே
காணாமல் போகும் மாயப்படிகள்
அண்ணாந்து பார்த்து வியந்து கொண்டு இருக்கையிலேயே
கவிழ்ந்து விழும் விமானங்கள்
சூரியனாய் மாறிய நட்சத்திரங்கள்
தீபாராதனை காண்கையிலேயே கால் கை அசைக்கும் கடவுள்கள்
படித்துக்கொண்டு இருக்கும்போதே பறிபோகும் பக்கங்கள்
ஆசையுடன் விழுங்கப் போகையில் அருவமான அன்னம்
கால்கள் தரையில் பதியாமல் பறக்கிற நடை,
கீழே நழுவும் மலையும் வயலும் கடலும் காடும்
குழந்தைகளாய் வளைய வரும் வளர்ந்த பிள்ளைகள்
முடிவில்லா பாதைகளும் ,மூடிய நுழைவுகளும்
எத்தனையோ வருடம்  கழித்து சந்தித்த தோழி
அருகே போனதும் அன்னியமாய்ப் போனது
அலுவலகம் செல்லும் வழியிலேயே அவிழ்ந்து விழும் உடைகள்
தேடி அவலமாய்த் தவிக்கும் பொழுதுகள்
சிரித்தபடி குசலம் கேட்டு உறவாடும் மரித்த உறவுகள் என
வண்ண வண்ணக் கனவுகளில் தோய்ந்த என் பின்னிரவுகளும்
அதிகாலைகளும்
என் இருப்பை நிறைப்பவை !