குவிகம் குழுமம் – குவிகம் மின்னிதழ்

குவிகம் இலக்கியவாசல், அளவளாவல், பதிப்பகம், ஒலிச்சித்திரம் , குறும் புதினம் , ஆவணப்படம்

சிரிப்புக் கொத்துப் போட்டி

சிரிப்பு - கவிதை - கவிதைகள் கதைக்கலாம் - Quora👑திகழ் திரு அம்மா on X: "வெட்கம் கலந்த சிரிப்பு பளிச்செனக் கவர்ந்து ஆழமாக மனதில் பதியும் அது போன்றதொரு அழகான சிரிப்பு இது :) http://t.co/aIs6Gji6ef" / Xசிரிப்பு | Latest Tamil News Updates, Videos, Photos | Vikatanதேவதை சிரிப்பு |கவிதை|ச.குமரேசன் » இனியவை கற்றல் | பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ்

 

சிரிப்புக் கொத்துப் போட்டியில் கலந்து கொண்ட 51 பேருக்கும் நன்றி!

சுட்ட ஜோக்குகளையும் அனுப்பலாம் என்றதும் ஓரிருவரைத் தவிர எல்லோரும் நன்றாகச் சுட்ட ஜோக்குகளையே அனுப்பியுள்ளார்கள்.

மக்கள் கையில் கிடைத்த ஜோக்குகளை அனுப்பவதைவிட இன்னும் சிறப்பான சிரிப்புகளைத்  தேடியிருக்கவேண்டும் என்பது நடுவரின் கருத்து

பதுங்குகுழி மன்னர் ஜோக்ஸ், கணவன்-மனைவி திட்டுதல் , டாக்டர் ஜோக்ஸ், அரசியல் வாதி ஜோக்ஸ்  போன்றவற்றைத் தவிர வேறு புது மாதிரி யாரும் யோசிப்பதாகத் தெரியவில்லை.

நமக்கு வந்த ஜோக்குகள் அனைத்தும் இந்த மாதிரியே இருக்கின்றன. அவற்றுள் சில ஏற்கனவே பலமுறை படித்திருந்தாலும் மீண்டும் நம்மை கொஞ்சம் கிச்சு கிச்சு மூட்டுகிறது.

அதன்படி நடுவர் தேர்ந்தெடுத்த வெற்றியாளர்கள் பன்னிரண்டு பேர் ; அதில் பத்து பேரைத் தேர்ந்தெடுக்கக்  கூறினார்கள். பன்னிரண்டு பேருக்கும் ஆளுக்கு ரூபாய் 100 கொடுத்துவிடலாம் என்று முடிவு செய்தோம். 

இவர்களுக்கு நல்ல நகைச்சுவையை ரசிக்கும் எண்ணம் இருக்கிறது! வாழ்த்துக்கள் !! 

            1. மஞ்சுளா சுவாமிநாதன்
            2. தென்காசி கணேசன்
            3. ஹரிஹரன்
            4. வத்சலா
            5. திருப்பூர் வடிவேல்
            6. மு க  இப்ராஹீம் வேம்பார் 
            7. கலையரசி
            8.  இரஜகை நிலவன்
            9. பாலசுப்பிரமணியன்
            10. மாலதி சுவாமிநாதன் 
            11. சுரேஷ் ராஜகோபால்
            12. ரேவதி ராமச்சந்திரன்

இவர்களுக்கான பரிசுத்தொகை ( ரூபாய் 100) விரைவில் அனுப்பப்படும் 

சிரிப்புக் கொத்து

மஞ்சுளா சுவாமிநாதன்

😛,😛,😛,😛,

சார் சொன்னா புரிஞ்சுக்கோங்க… மன அழுத்தத்துக்கு மாத்திரை வேணும்னா டாக்டர் சீட்டு வேணும், இப்படி உங்க கல்யாண சர்டிபிகேட் எல்லாம் காட்ட கூடாது.

 

😛,😛,😛,😛,

“ஓய் வாரம் தவறினாலும், நீர் உம் சம்சாரத்துக்கு லெட்டர் எழுதற்து தவறாது போலிருக்கே! பரஸ்பரம் அவ்வளவு அன்பா உங்களுக்குள்ளே?”

அதில்லைங்காணும்! ஒரு வாரம் எழுதத் தவறினா உடனே புறப்பட்டு இங்கே வந்துடுவேன்னு                         சொல்லியிருக்கா! அதனாலேதான்!”

😛,😛,😛,😛,

பாட்டு வாத்தியார்: வாங்க… என்ன விசேஷம்?

காவல்காரர்: வேற ஒண்ணுமில்ல, தெருவிலே ஜனங்க சொல்லிகிட்டுப் போனாங்க, இந்த வூட்ல தியாகய்யரைக் கொலை பண்ணறாங்கன்னு. பார்துட்டு போலாமுன்னு வந்தேன்.

😛,😛,😛,😛

“எந்த தைரியத்தில் இரண்டாயிரம் ரூபா கடன் கேக்குற?”

“ வாக்காளர் பட்டியல்ல என் பெயர் இருக்குங்க!”

 

😛,😛,😛,😛

“என் வாளை வெளியே எடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டதா… என்ன சொல்கிறீர் அமைச்சரே…”

“சாணை பிடிக்கிறவன் வந்திருக்கிறான் மன்னா!”

 

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

தென்காசி கணேசன்

😛,😛,😛,😛

டாக்டர்: கவலைப்படாதீங்க, ஆபரேஷனுக்கு பிறகு உங்க சொந்தம் பந்தம் எல்லாரையும் பார்ப்பீங்க.

நோயாளி : என் சொந்தம் பந்தம் யாரும் இப்போ உயிரோட இல்ல டாக்டர்.

டாக்டர் : எனக்குத் தெரியும்.

😛,😛,😛,😛

மனைவி ‘ பக்கத்து வீட்டுக்காரி உங்களுக்கு சபல புத்தி இருக்குன்னு சொல்றா…..

கணவன் : இப்போ என்ன சொல்ற ?  நீ எனக்கு புத்தியே இல்லன்னு சொன்னியே!   இப்போ என்ன சொல்ற ?

😛,😛,😛,😛

நீதிபதி: கடைசியாக உங்கள் கணவர் என்ன சொன்னார்?

குற்றவாளி: குடிக்கத் தண்ணி கொண்டு வா ஜோதி என்றார்.

நீதிபதி: அதுக்காகவா அவரைக் கொன்றீர்கள்?

குற்றவாளி: என் பெயர் ராதிகா யுவர் ஆனர்.

நீதிபதி: !!!

😛,😛,😛,😛

பல் டாக்டரை பாக்கப் போனிங்களே, ஏன் வந்துட்டீங்க  ?

அங்க  போனா பெண் டாக்டர் இருந்தாங்க – நாம எந்தப் பொண்ணுட்டயும்          பல்லைக் காட்டினோம்நு பேர் வரக்கூடாது

😛,😛,😛,😛

என்னம்மா தனியா வந்திருக்க – மாப்பிள்ளை வரலியா

அவரோட சண்டை போட்டேன் – தனியாக வந்துட்டேன். சரிப்பா அம்மா எங்கே?

இப்பத்தான் அவ என்னோடு சண்டைபோட்டுண்டு, அவங்க வீட்டுக்கு    போயிருக்கா

😛,😛,😛,😛

கல்லூரிக்கு வந்த சிறப்பு விருந்தினர், மாணவர் தலைவனிடம்:

என்னப்பா இது CO-ED காலேஜ் தானே ! சுமாரா எத்தனைப் பொண்ணுங்க          இருக்காங்க ?

எல்லாப் பொண்ணுமே சுமார் தான் சார்

😛,😛,😛,😛

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

ஹரிஹரன் C R

😛,😛,😛,😛

ஆபரேஷன் முடிஞ்சா என்ன சாப்பிடலாம் டாக்டர்?

எமலோகத்துல என்ன சாப்பிடத் தருவாங்கன்னு எனக்குத் தெரியாதே!

😛,😛,😛,😛

ரவுடிகளையெல்லாம் போலீஸ் பிடிக்கப் போறாங்கன்னு கேட்டு ஏன் தலைவரே கவலையா இருக்கீங்க?

இனிமே நம்ம கட்சி இருக்குமோன்னு தான்யா!

😛,😛,😛,😛

போர்ஜரி பண்ணி மாட்டிக்கிட்ட தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது தப்பாப் போச்சு!

என்னாச்சு?

இப்ப சர்ஜரி பண்ணியும் மாட்டிகிட்டார்!

😛,😛,😛,😛

பிளஸ் டூ ரிசல்ட் என்ன ஆகுமோன்னு கவலையா இருக்கு!

யார் பரீட்சை எழுதியிருக்காங்க சிஸ்டர்?

நம்ம டாக்டர் தான்!

😛,😛,😛,😛

அரண்மனைக்கு ஒரு நிதி அமைச்சரை தேடிக்கொண்டு இருக்கிறேன்  மகாராணி!

இதுக்கு  முன்னால ஒரு நிதி அமைச்சர் இருந்தாரே மன்னா?

அவரையும் தேடிக்கொண்டு இருக்கேன் மகாராணி!

 

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

ஆர். வத்ஸலா

😛,😛,😛,😛

சர்வர்: சார், கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி உங்க எடத்திலெ ஒக்காந்து ஒருத்தர் மசால் தோசெக்கு ஆர்டர் கொடுத்தாரெ அவரெங்கே?

தாடி ஆசாமி: நான்தாம்பா அது.

சர்வர்: அவருக்கு தாடி இல்லே சை சார்.

தாடி ஆசாமி: தோசை  வர்றத்துக்குள்ள  வளந்துடுச்சுப்பா!

😛,😛,😛,😛

சர்வர் ஒரு ப்ளேட்டில் ஒரு ஸ்பூனும் ஒரு மிகச் சிறிய கிண்ணத்தில் சட்னியும் வைத்துவிட்டு போய் விட்டார். வெகு நேரம் காத்திருந்து பின் சர்வரை அழைத்த

கஸ்டமர்: இட்லி எப்பப்பா வரும்?

சர்வர் : ஸ்பூனெ தூக்கி பாருங்க சார், இருக்கு.

😛,😛,😛,😛

புக் ஃபேரில் ஒரு கடையில் ஒருவர் மயக்கம் போட்டு விழுந்துவிட்டார்.

அந்த கடைக்காரரிடம் அடுத்த கடைக்காரர்: அவருக்கு என்னாச்சுப்பா?

அவர்: ஒண்ணுமில்லெப்பா, அவர் எழுதின கவிதைப் புத்தகம் ஒண்ணு வித்து போச்சுப்பா.

😛,😛,😛,😛

‘எப்படியோ’ எம்.பி.பி.ஸ். பட்டம் பெற்று விட்ட டாக்டருடைய க்ளினிக் வாசலில் போர்டில் எழுதி இருந்தது:

”இங்கு ஒருவர் அப்பெண்டிக்ஸ் ஆபரேஷன் செய்துக் கொண்டால் அடுத்த முறை அவருக்கு இலவசமாக  அப்பெண்டிக்ஸ் ஆபரேஷன் செய்யப்படும்.”

😛,😛,😛,😛

 அப்பப்பா! என்ன வெக்கெ! வேர்த்து கொட்றது! இத்தனெக்கும் எனக்கு வேர்க்காதுன்னு பேரு!

 ஒங்க பேரு ராமசாமின்னு சொன்னாங்களெ யாரோ!

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

திருப்பூர் செ.ந.வடிவேல்.

😛,😛,😛,😛 

“சரக்கு வாங்கியிருக்கீங்க, “சைடு டிஷ்” ஏதும் வாங்கலையா?”

“வீட்ல கொலு” வைச்சிருக்காங்க, எப்படியும் “சுண்டல்” கிடைக்கும்!”

😛,😛,😛,😛

“மகாராஜா, தாங்கள் “பதுங்கு குழிகள்” தோண்டியதை தவறாக நினைத்துக் கொண்டு, மணல் சுரண்டுவதாக எதிரி உங்கள் மீது குற்றம் சுமத்தி உள்ளான்!”

😛,😛,😛,😛

“கள்ள நோட்டு அடிச்ச நம்ம தலைவர் போலீஸ்ல மாட்டிக்கிட்டாரா, எப்படி?”

“ஆர்வக் கோளாறுல தன்னுடைய போட்டோவையும் சேர்த்து ரூபாய் நோட்டில்  “பிரிண்ட்” பண்ணியிருக்கார்!”

😛,😛,😛,😛

“எனக்கு உடம்பு நல்லாயிருக்கும் போது, எதற்கு டாக்டர் ஆப்ரேசன் பண்னனும்னு சொல்றீங்க?”

“எனக்கு சர்வீஸ் முடியப் போகுது, அதனால கடைசியாக ஒரு தடவை ஆப்ரேசன் செய்திடலாம்னு இருக்கேன்!”

😛,😛,😛,😛

“பூரிக்கட்டை “வெயிட்”ங்கிறது கடையில் வாங்கும் போது தெரியல!”

“என்னடி சொல்ற?”

“என் புருசன், மண்டை உடையும் போது தான் தெரிஞ்சுது!”

திருப்பூர் – 641604

செல் : 9080259025

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

மு.க.இப்ராஹிம் வேம்பார்

😛,😛,😛,😛

“ஹலோ டியர் ..நைட் போன் போட்டேன். தொலைத் தொடர்புக்கு அப்பால் உள்ளாருன்னு வந்துச்சே எதுக்கு இளவரசி..?”

“மன்னர் கூட பதுங்கு குழிக்குள்ளே இருந்தேன் டார்லிங்..!”

😛,😛,😛,😛

மாப்பிள்ளைக்கு அரிசிக் கொம்பன்னு காட்டு யானையோட பேரை வச்சிருக்கீங்களே எதுக்கு..?”

“சோறு,கஞ்சியைப் பார்த்திட்டா, அவ்வளவு சீக்கிரம் டைனிங் டேபிளை விட்டு எழுந்திரிக்கமாட்டாரு..!”

😛,😛,😛,😛

“நம்ம கட்சியோட ஆலோசனைக் கூட்டத்துக்கு எவ்வளவு  சாப்பாடு  சொல்லிருக்கேய்யா.?”

“நீங்களும் நானும்தானே..ஒரே ஒரு பார்சல் சாப்பாடே போதுமின்னு நினைக்கிறேன் தலைவரே..!”

😛,😛,😛,😛

“தலைவரே..மதுரை..திருச்சி..சென்னை..!”

“நம்ம கட்சிக்கு ஒதுக்கின தொகுதிகளா..?”

“காமெடி பண்ணாதீங்க..அங்கெல்லாம் உங்களுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடக்காம் தலைவரே.!”

😛,😛,😛,😛

மன்னர் அரண்மனைக்கு வரும் பாதைக்கு ஹெல்த் வாக் சாலையின்னு பேரு வச்சிருக்கே…தினமும் வாக்கிங் போவாரா..?”

“ம்ஹும்..இடையூறு இல்லாமல் போர்க்களத்திலிருந்து புறமுதுகிட்டு ஓடி வரும் பாதையாம்..!”

 

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

கலையரசி முருகன் M 

 

(சொந்த ஜோக்) 

😛,😛,😛,😛

’மன்னரை அதிகாரிகள் எதுக்கு விசாரிக்கறாங்க..’’

‘’வீரத்துக்கு அதிகமா ஆயுதங்கள் சேர்த்து வெச்சிருந்தாராம்..’’

😛,😛,😛,😛

“தலைவரை வாழ்த்துகிற இந்த பேனரை சீனியர் சிட்டிசன்கள்தான்  வெச்சிருக்கணும்னு எப்படி சொல்ற..”

“வாழ்த்த வயதிருக்கு வாழ்த்துகிறோம்னு போட்டிருக்கே..”     

😛,😛,😛,😛

  ‘’வெற்றி அல்லது வீரமரணம் அமைச்சரே..’’

‘’மகாராணியோடு சதுரங்கம் ஆட போவதற்கெல்லாம் இந்த டயலாக் தேவையா மன்னா..’’

😛,😛,😛,😛

‘’படியில விழுந்து காலை உடைச்சிகிட்டதுக்கு எதுக்கு டாக்டர் நான் கார் வெச்சிருக்கேனா பைக் வெச்சிருக்கேனான்னு கேட்கறீங்க..’’

‘’பைக் வெச்சிருந்தா எக்ஸ்ரே எடுக்க சொல்வோம், கார் வெச்சிருந்தா ஸ்கேன் எடுக்க சொல்வோம்..’’

😛,😛,😛,😛

‘’தலைவர் ஜெயிச்சதும் தன்னை நம்பிய எல்லோருக்கும் கட்சியில பொறுப்பு 

கொடுக்கிறதா சொன்னாரே..’’

‘’அத்தனைப் பேருக்கும் உறுப்பினர் அட்டையைக் கொடுத்து ‘தொண்டர்’ங்கிற 

பொறுப்பு கொடுத்திருக்கிறதா சொல்லிட்டார்..’’

எம்.கலை,சேலம் 

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

இரஜகை நிலவன்

🎯 சிரிக்க மட்டும்  ~மஞ்ச கயிறு   எடுத்து கையில   கட்டுனா அது “காப்பு”..  அதுவே ஒரு   பொண்ணு கழுத்துல கட்டுனா  அது நமக்கு நாமே வச்சுக்குற “ஆப்பு”..!

🎯  மாமா பொண்ணும், உப்புமாவும் ஒன்னு!! வேற எதுவுமே கிடைக்காத பட்சத்துல நம்மளோட தலையில கட்டப்படும்!!

🎯  தப்பை மன்னிக்கிறவன் மனுஷன்.. தப்பே பண்ணாம மன்னிப்பு கேட்குறவன் புருஷன்

🎯  ~ஆட்டக்காரிக்கும் வீட்டுக்காரிக்கும் என்ன வித்தியாசம்..? ஒரு பாட்டுக்கு ஆடுனா அவ ஆட்டக்காரி.. அவபாட்டுக்கு ஆடுனா அவ வீட்டுக்காரி..!!

🎯  திருமண   மேடையில்   மணமகனுக்கு கொடுக்கப்படும்   கடைசி வார்னிங் “பொண்ண   கூப்பிடுங்க..  நல்ல நேரம் முடியப் போகுது”..

🎯  ~வாக்கிங் கூட்டிட்டு போகாத நாய்க்கும், ஷாப்பிங் கூட்டிட்டு போகாத பொண்டாட்டிக்கும் கண்டிப்பா ஒரு நாள் வெறி பிடிச்சுடும்.

🎯

அப்பா : என்னடா…உன் அம்மா காலைல இருந்து பேசாம இருக்கா?”

பையன்:அம்மா ‘lipstick’ எடுத்து தர சாென்னாங்க…நான் தெரியாம ‘fevistick’ எடுத்துக் காெடுத்துட்டேன்பா.”

 அப்பா:நீ என் மகன் இல்லடா என் குல சாமிடா…!” 💐💐💐💐💐

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

பாலசுப்பிரமணியன் 

💐💐💐💐💐

“தலைவர்களோட சிலைகளுக்குக் கீழே ‘தோற்றம், மறைவு’ன்னுத் தானே போட்டிருப்பாங்க!உங்க தலைவர் சிலைக்குக் கீழே மட்டும் ‘தோற்றம், தலைமறைவு’ன்னு போட்டிருக்கீங்களே?”

“எங்க தலைவர் கட்சிக்குக் கணிசமாகப் பணம் திரட்டியதும் எல்லாத்தையும் சுருட்டிட்டு தலைமறைவாயிட்டாரு…!”

💐💐💐💐💐

“சார்! ஒரு ஆயிரம் ரூபாய் கைமாத்தா தர முடியுமா?”

“நீங்க யாருன்னே எனக்குத் தெரியாதே சார்!  அதான் யோசிக்கறேன் கொடுக்கறதுக்கு.”

“ஏனக்குக் கூடத்தான் நீங்க யாருன்னே தெரியாது.  நான் யோசிச்சேனா கேட்கிறதுக்கு?!”

💐💐💐💐💐

“மனைவி காணாமல் போனதுக்கு பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்ததுக்கா போலீஸ் அவரைக் கைது செஞ்சிருக்கு?!”

“மணமகள் தேவைன்னுன்னா விளம்பரம் கொடுத்திருந்தாரு!”

💐💐💐💐💐

என் மருமகளை மாதிரி மோசமானவளை நீ பார்த்தே இருக்க முடியாது!”

“ஏன்?  என்ன செய்தாள்?”

“நேத்து ராத்திரி நம்ம லேடீஸ் கிளப்பின் டின்னருக்கு நான் போகறதா இருந்தேன். அதுக்கு முன்னாடி என் பல்செட்டை எடுத்து எங்கேயோ ஒளிச்சு வெச்சுட்டா!”

💐💐💐💐💐

“எங்க தாத்தா எங்க பாட்டியைக் கல்யாணம் செஞ்சுட்டப்ப அவருக்கு பதினாலு வயசு தானாம்!”

“அத்தனைச் சின்ன வயசுல அவர் ஏன் போயும், போயும் ஒரு பாட்டியைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டாரு?!”

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

மாலதி சுவாமிநாதன்

💐💐💐💐💐

அப்பா நீ எங்க பிறந்த?

 ஜெய்ப்பூர்

அம்மா எங்க பிறந்தாங்க?

ஹைதராபாத்

நான் எங்க பிறந்தேன்?

பாட்னா

அப்போ நான் நீ அம்மா எங்கே சந்திச்சோம்?

💐💐💐💐💐

இங்கு, யாரால் ப்ரெஞ்ச் படிக்கமுடியும்?

“என்னால் முடியும், அது ஆங்கில எழுத்துகள் வச்சுதான எழுதறாங்க.”

💐💐💐💐💐

சென்னை வாசி :  ஆஹா! எவ்வளவு மான்கள் அங்கே!!

காட்டு வழிகாட்டி:  132

சென்னை வாசி : அது எப்படி கரெக்டா எண்ண முடியறது உங்களால்?

காட்டு வழிகாட்டி: அதற்கென்ன? கால்களை எண்ணிட்டு, நாலாலே வகுக்க வேண்டியதுதானே!

💐💐💐💐💐

சிறுவன்: டாக்டர் மூக்குக் கண்ணாடி வேண்டும்.  என் டீச்சருக்கு

டாக்டர்: ஏன்?

சிறுவன்: பாவம் அவங்களுக்குக் கண் தெரியல ,  என்ன எப்போதும் கழுதைன்னு  கூப்பிடறாங்க

💐💐💐💐💐

அப்பா ட்ரம்ஸ் வாங்கிக்கொடு

 முடியாது. நாள் பூரா அடித்துக் கொண்டு தொந்தரவு பண்ணுவே

 பிராமிஸா மாட்டேன்‌. எல்லாரும் தூங்கின பிறகு ப்ரெக்டிஸ் செய்யறேன்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

 

சுரேஷ் ராஜகோபால்

💐💐💐💐💐

 ஒருத்தி: உங்கள் வீட்டுக்காரருக்கு மறதி இருக்கிறது நல்லதாப்போச்சு.

எதிர் வீட்டுக்காரி ;:ஏன் ?

ஒருத்தி : எங்க வீட்டுவாசலில் அடிக்கடி கோலம் போடறாரு…!

💐💐💐💐💐

 ரகு: இந்த டாகடர் அதி தீவிர சினிமா ரசிகர் போல இருக்கு…

சோமு : எப்படி சொல்லற?

ரகு : ஆபரேஷன் தியேட்டர் முன்னே, தினசரி மூன்று ஆபரேஷன், சனி ஞாயிறு மற்றும் திருவிழா நாட்களில் நான்கு அப்படியென்று போஸ்டர் வச்சிருக்காரு..!

💐💐💐💐💐

 அவன்: நாம போகும் போது குறுக்கே பூனை போனா என்ன அர்த்தம்?

இவன்: அதுவும் எங்கேயோ போகுதுன்னு அர்த்தம் !

💐💐💐💐💐

அவள்: என் பிறந்த நாள் அன்னைக்கு நிறைய கேக், ஐஸ் கிரீம், பெரிய சாக்லேட் எல்லாம் வந்தன…. ஆனால் என்னால்தான் சாப்பிட முடியலை

இவள் : ஏன் ?

அவள் : எல்லாம் வாட்சப் செய்தியா  வந்தன.

💐💐💐💐💐

 பெண் : ஏன் உன்னை முதலாளி திட்டிவிட்டுப் போறாரு?

சக தொழிலாளி : அவர் வீட்டு நாயை காணோம் அப்படியென்று விளம்பரம் கொடுக்கச் சொன்னார், “நான் முதலாளி நாயை காணோம்” அப்படிக் கொடுத்துவிட்டு இவர் படத்தையும் போட்டுவிட்டேன்… அதனால் தான்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

ரேவதி ராமச்சந்திரன் 

💐💐💐💐💐

ஒரு பாம்பு ரொம்ப நேரம் அழுதுகிட்டே இருந்துச்சாம்

ஏன்?

அது எடுத்த படம் பிளாப் ஆயிடுச்சாம்

💐💐💐💐💐

எல்லா லெட்டரும் வர மாதிரி ஒரு வேர்டு சொல்லுங்க

போஸ்ட் பாக்ஸ்

💐💐💐💐💐

தேர்வில் கேள்வி எல்லாமே ஈஸியா இருந்துச்சு பா

அப்புறம் எப்படி மார்க் கம்மியா ஆச்சு?

கேள்வி தானே ஈசியா இருந்துச்சு

💐💐💐💐💐

சூதாட்டம் ஆடக்கூடாது ஒரு நாள் ஜெயிப்ப ஒரு நாள் தோப்ப

அப்ப ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஆடலாமா?

💐💐💐💐💐

எது நடந்தாலும் நாம கவலைப்படுவது வீண்! ஏன்னா எது நடக்கிறதோ அதற்கு தானே கால் வலிக்கும்

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

இலக்கிய வாத்தி – பாரதன்

(ஒரு நகைச்சுவைக் கதை எழுதப் போய் ஜிகிர்தண்டாபோல மாட்டிக்கொண்டவன் நான்)  

தலைப்பை எப்போதும்    சரியாகப்  போட்டுக் கொண்டு  கதையோ கட்டுரையோ  எழுதுற  ஆண்ஜாதி நான். கதைத் தலைப்பைச் சொன்னேன். தலைப்பு சரியா இருந்தால்  முழு கதையையும் பேனா  தானா எழுதிவிடும் என்று நம்பும் சில  தீவிரவாதி இலக்கியவாதிகளின் கருத்துதான் என் கருத்தும். 

ஆனா இன்னிக்கு என்ன எழுதபோறேன்னு  எனக்கே தெரியாது . அவர் சொல்வாரு. அதை அப்படியே எழுதணும். அதுவும் கம்ப்யூடரில அடிக்கணும். இதுதான் எனக்குக் கிடைத்த உத்தரவு.  அவரு கிட்டே இந்த பேனா தானா எல்லாம் செல்லுபடியாகாதுன்னு தெரியும்.  இருந்தாலும் தலைப்பைப் போட்டுட்டு எழுதலாமேன்னு சொன்னேன். ” இங்க பாரு! பொடவை ரவிக்கை தலைப்பு எல்லாம் கதைக்குள்ளே வரட்டும்.  தலைப்பு  அப்பப்ப மாறும். மாறனும்.  இப்போதைக்கு என் பேரையே வைச்சுக்க !   

அப்படி முடிச்சுப் போட்டு வந்ததுதான்  இந்த இலக்கிய வாத்தி  தலைப்பு 

யார் இந்த இலக்கிய வாத்தி ?

அவர் ஒரு இலக்கியவாதி மற்றும் வாத்தியார். தமிழ் வாத்தியார் இல்லை. பி டி  மாஸ்டர்.  பி டி மாஸ்டர்ருக்கு எப்படி இலக்கியம் வரும் என்று யாரும் கேள்வி கேட்க முடியாது. அப்படிக் கேட்டா அவர் பேச மாட்டார் அவர் கையில் இருக்கிற பிரம்பு பேசும். பிரம்பு இல்லாத சமயங்களில் அவர் கதை எழுதுவார் . கவிதை எழுதுவார். வீதி நாடகம் போடுவார்.  டிராயிங் போடுவார் .சிலை செய்வார். மீன் பிடிப்பார். உழுவார். வரட்டி தட்டுவார்.  மலை ஏறுவார். எல்லா சமயங்களிலும் தண்ணி அடிப்பார் . பொண்ணுங்க விஷயத்தில பெரும்பாலும் நெருப்பா இருப்பார். சுருக்கமா சொல்லப்போனா ‘இளமை  இதோ ‘ என்று இளமையில் பாடின  கமல் மாதிரி சகலகலாவல்லவர் .

இப்ப புரிஞ்சிருக்கும் அவர்  சாதாரண இலக்கியவாதி இல்லே ! அழுத்தம் திருத்தமா செய்யக் கூடியவர் என்று.   அதனால அவர் இலக்கிய வாத்தி ஆயிட்டார். எப்பவும் அவர் பிடிச்ச முயலுக்கு மூணு கால்தான். முயல் என்று  என்று எழுதும்போது கூட ஒவ்வொரு எழுத்துக்கும் பக்கத்தில ஒரு காலைப் போடுவார். அவர்  கரும்பலகையில் எழுதின மூணுகால் முயல் இப்படித்தான் இருக்கும்.

 

கம்ப்யூடரில காலைப் போடறது கடலை போடறது எல்லாம்  ரொம்ப கஷ்டம்.

எழுத்தாளர் சுஜாதா இருந்தா இதை ரொம்ப   சுலபமா கம்ப்யூடரில எழுதிவிடுவார். அவர் ஒரு ஜீனியஸ் . அவர் மாதிரி எழுத யாரால முடியும்?  மாடிப்படியில் இறங்கினான்  என்பதை

     ற

         ங்

                கி

                      னா

                                   ன்

என்று அன்றே எழுதியிருக்கிறார் .

வாத்தி மாதிரி நான் எழுத முயல்கிறேன்.

மா யா லா . ஊகும் . மு -க்குப் பக்கத்தில காலு வர மாட்டேங்குது. 

இலக்கிய வாத்தி  போர்டில எழுதன  மாதிரி மூணு கால் உள்ள  முயலை 

மு (கால்) ய (கால்) ல் (கால்)    என்று யூனிகோடில் அடிக்க முடியவில்லை

ஒருவேளை அழகியின் விசைப் பலகை உபயோகித்தால்  கால் போடலாம் என்று கூகுளில் ஒரு பொதுநலவாதி கருத்து தெரிவித்திருக்கிறார். 

இயற்கை அறிவு இல்லாதவர்கள்  செயற்கை அறிவு     (A I ) உபயோகப் படுத்தாலாம் என்று சாட் பாட் ஒன்று துப்பி மொழிந்தது.

( பேசாம முயலுக்கு எழுத்தில மூணு கால்  எழுத முடியுமா என்று நம் கலை புதிது மக்களிடம் கேட்டால்  இரண்டாவது நிமிடம் நூறு பேர் நம்மைப் பாராட்டிவிடுவார்கள். சிலர் முயல் படம் வரைந்து அதன் ஒரு காலை ஓடித்தும் அனுப்பக் கூடும்.)

அப்படியும் முடியவில்லையா? இலக்கியவாத்தி போர்டில் எழுதியபடி கம்ப்யுடரில்  எழுதி அனுப்புபவர்களில் அதிர்ஷ்டசாலி நேயருக்கு குலுக்கல் முறையில் 100  ரூபாய் பரிசுகொடுக்கப்படும்  என்று குவிகத்தில் போட்டால் வந்துவிடும் என்று குவிகம் ஆசிரியர்  யோசனை கூறினார்.

இந்த மூணு கால் முக்கால் எல்லாத்துக்கும் மியூட் போட்டுட்டு கதைக்குப் போங்க சார்! என்று ஒருவர்  அன்பு மிரட்டல் விட்டார்.

போகிறேன்.

இலக்கிய வாத்தியின் உண்மைப்  பெயர் என்ன  என்று கேட்கிறீர்களா?  அவர் பேர் வைத்தி ! அந்தப் பேரைச் சொல்லிக் கூப்பிட  அவருடைய பள்ளித்  தலைமை ஆசியருக்கே தைரியம் இல்லை. எனக்கு எப்படி வரும். எல்லாரும் அவரை விளிப்பது –   மாஸ்டர் என்றுதான்.  அவருக்கும் அப்படி அழைத்தால் தான் பிடிக்கும்.  சும்மா கெத்தா வருவார். மாணவர்கள் வேண்டுமானால் அவரது பிரம்புக்குப் பயப்படலாம். அவரது  சக  ஆசிரியர்கள்  பயப்படுவது அவரது  பிரம்புக்கு அல்ல. கவிதைக்கு.

இந்தக் கதையை  அவர் சொல்லித் தான் நான் எழுதுகிறேன். இதில் ஏதாவது சொற்குற்றம் பொருள் குற்றம் இருக்கிறது என்று யாராவது நக்கீரன்  பாணியில் கிருஷ்ணகிரி கிளம்பினார் என்றால் நேரா இலக்கிய வாத்தி கிட்டே அனுப்பிவிடுவேன். அவர் கிட்டேயும் ஒரு ஆபீஸ் ரூம் இருக்கு.  ஏன்னா அவர் பி டி மாஸ்டர் மட்டுமில்லே . என் சி சி மாஸ்டரும் கூட.

“நிறுத்து நிறுத்து..”

“என்னது? யார் கதை நிறுத்தச் சொல்றது?”

“கதை ஆரம்பத்தில ஏன் ஜாதிப் பிரச்சினையை  ஏன் கிளப்பறே! அப்பரம் நக்கீரன் வீரப்பன் என்று சம்மந்தமில்லாமல் சொல்றியே   ?”

“அதில உங்களுக்கு என்ன ஆட்சேபம்? அதனால ஏதாவது தகராறு வருமுன்னு பயமா?  எனக்கு பயமே கிடையாது. யாராவது சண்டைக்கு வந்தா  இலக்கிய வாத்தி கிட்டே விட்டுடுவேன்.

இன்னொரு ரகசியம். இந்த இலக்கிய வாத்தி கதையில  பிரச்சினைகள் தகராறுகள்   அடிதடி வருவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கு. இதைப்பத்தி  வாத்தியார் கிட்டே கேட்டேன். அதுக்கு அவர்  ”  வரட்டுமே? அப்படி வந்தாதான் நல்லது. இந்த கதையை  உன்னை எழுதச் சொன்னதுக்குக் காரணமே கொஞ்சம்  அடாவடி செய்வோமே என்கிற நல்ல எண்ணத்திலதான். நல்ல இலக்கியம் வரணும்னா நாலு கழுதைகள் கத்தத்தான் செய்யும். அப்புறம் ரைட்டர் ( என்னை அப்படித்தான் கூப்பிடுவார்! நான் எழுதறவன் தானாம். எழுத்தாளன் இல்லை என்பது அவரது தீர்மானம்), அதை எழுதக் கூடாது, இதை எழுதக் கூடாது அப்படீன்னு சில டாபூ – விலக்கு இருக்கும். அந்த விலக்க விலக்கப்போற – கட்டுடைக்கப் போற மாதிரி நான் சொல்வேன்! நீ அப்படியே எழுதணும். ஏதாவது மாத்தி எழுதினே உன்னை தேமா புளிமா மாதிரி  கைமா பண்ணிடுவேன்.

இவ்வளவு பெரிய இலக்கிய வாத்திகிட்டே நான் எப்படி மாட்டிகிட்டேன்னு கேக்கறீங்களா ?  

இப்ப என்னப்பத்தி சொன்னாத்தான் உண்டு. பின்னாடி சொல்ல முடியுமோ தெரியலை. இந்தியாவில சென்னையில அஞ்சாங்கிளாஸ் வரை படிச்சு, அப்புறாம் அப்பா அம்மா கூட சிங்கப்பூர் போய் பத்தாவது வரைக்கும் படிச்சு ( அங்கதான் என் முதல் வெண்பா எழுதினேன்) இலக்கியப் பைத்தியமா திரிஞ்சு அப்புறம் சாட் – (SAT )எழுதி அமெரிக்கா போய்  ஸ்கூல் படிப்பு படிச்சு   சிகாகோ யுனிவர்சிடியில் டிகிரி முடிச்சிட்டு   இப்ப  டீச் இந்தியா திட்டத்தில இந்த ஓணாம்பாளையம் பள்ளியில் சம்பளம் வாங்காத வாத்தியாராக இரண்டு வருஷம் இருக்க முடிவு செஞ்சு வந்திருக்கிறேன். இது என்னோட ரிசர்ச் பிராஜக்டும் கூட. வந்து மூணு மாசம்தான் ஆச்சு. ஆசிரியர்கள், மாணவர்கள் , மதிய உணவு ஆயா , இலக்கிய வாத்தி எல்லாரையும் எனக்குப் பிடிச்சிருக்கு. எல்லோருக்கும் என்னையும்  பிடிச்சிருக்கு. அதில் இலக்கிய வாத்தியின் பெண் வைஜயந்தியும் சேர்த்தி. அவளைப் பத்தி இப்ப வேண்டாமே பிளீஸ் !

சும்மா சொல்லக்கூடாது ! இந்த இலக்கிய வாத்தி  பாக்கறதுக்கு கொஞ்சம்  ஜெயகாந்தன் ,பவா செல்லத்துரை , கி ராஜநாராயணன் ஆகிய மூவரின் கலவை போல இருப்பார். அவர் படிக்காத புத்தகம் கிடையாது. பாக்காத எழுத்தாளர் கிடையாது. போகாத இலக்கியக் கூட்டம் கிடையாது.  கைக்காசு செலவழிச்சு சென்னைக்குப் போய் இலக்கிய மேதைகளைஎல்லாம் சந்திச்சுப் பேசிட்டு வருவார். கோயமுத்தூரில  வளர்ந்தவர். ஆனா சொந்த ஊரு    நாகர்கோவில். வர்ற காசெல்லாம் இலக்கியத்துக்கு செலவழிக்கிற ஒரே வாத்தி அவர்தான். 

அவருக்கு ஒரே ஒரு மிகப் பெரிய ஆசை.  தன் இலக்கிய வாழ்க்கையைப் பத்தி ஒரு பயாகிரபி யாரவது எழுதனும்னு அவர் கொஞ்ச காலமா மனசிலேயே போட்டு  உழன்று கொண்டிருந்தவர் என்னிடம் அதைப் பத்திச் சொன்னார். புத்தகம் என்ன ஒரு பயாபிக் குறும்படமே எடுக்கலாம் என்று நான் அவரிடம் சொன்ன போது வைஜயந்திக்காக என்று நினைக்கலாம். அனால் அவளைப் பார்ப்பதற்கு முன்பே நான் அவருக்கு வாக்குக் கொடுத்து விட்டேன் என்பதுதான்  உண்மையான உண்மை. 

அவருடைய வாழ்வில் இலக்கியப் பயணம் என்பது பரந்து விரிந்து இருக்கிறது என்பதை அவரிடம் பேசின சில நாட்களிலேயே தெரிந்து கொண்டேன்.   

அவருக்கும் சென்னையில் இருக்கிற குவிகம் அமைப்புக்கும்  குவிகம் ஆரம்பித்த காலத்திலிருந்தே தொடர்பு உண்டு. சுந்தரராஜன், கிருபானந்தன், கௌரி கிருபாநந்தன், வ வே சு ,  திருப்பூர் கிருஷ்ணன் , வைதீஸ்வரன், அழகியசிங்கர், ராய செல்லப்பா, டாக்டர் பாஸ்கரன், சதுர்புஜன், பானுமதி , நாணு, சுரேஷ், ஆர்கே, முத்து சந்திரசேகர் , தில்லை வேந்தன், இரா முருகன்,  நாகேந்திர பாரதி, மந்திரமூர்த்தி , மீனாட்சி பால கணேஷ் , என் செல்வராசு, மியுசிக் கண்ணன், ராஜாமணி, ராமமூர்த்தி எஸ் வி வேணுகோபால் சாய் கோவிந்தன், சாந்தி ரசவாதி, சிறகு ரவி, ஹரிஹரன் தென்காசி கணேசன் ,வளவதுரையன், லதா ரகுநாதன் , விஜயலட்சுமி, கேள்விக்காரன்   இன்னும் எத்தனையோ பேரை நேரிலும் ஜூமிலும் சந்தித்து பர்சனலாக அனைவரையும் அறிந்தவர். குவிகம் மின்னிதழ் 2013  இல் துவங்கியபோது அதன் முதல் வாசகர் அவர்தான். அதிலிருந்து குவிகம் இல்லம், குவிகம் புத்தகப் பரிமாற்றம், குறும் புதினம், பதிப்பகம் முதல் சமீபத்திய அளவளாவல் நேர்காணல் , ஒலிச்சித்திரம் வரை  அனைத்தையும் கேட்டு ரசித்து தன் ஆணித்தரமான கருத்தைக் கூறும் முதல் வாசகர் நம்ம வாத்தியார்.  ஆவணப்படத்தில் இவர்களுடன் தமிழகத்தில் உள்ள அனைத்து எழுத்தாளர்களைப் பற்றி வரவேண்டும் என்ற தணியாத ஆசை அவருக்கு. 

ஆகிய, குவிகம் நண்பர்களுக்கு ஒரு நற்செய்தி ! நீங்கள் அனைவரும் இந்தக் கதையில் வரும் கதை மாந்தர்கள். உங்களைப் பற்றி இலக்கிய வாத்தி நல்லதும் சொல்வார். நல்லது அல்லாததும்  சொல்வார். அவர் சொன்னதை வைத்து நான் எழுதும் குறிப்புகளை குவிகம் இதழில் தொடராக வெளியிட சுந்தரராஜன் ஒப்புக்கொண்டிருக்கிறார். 

எனக்கு அவரே ஒரு புனை பெயர் ( புனைப் பெயர் என்று எழுதுவது தவறு- இ வா) கொடுத்துள்ளார். அதுதான் பாரதன். என் உண்மையான பெயர் பரதன். 

(இ. வாத்தி சொல்ல சொல்ல வளரும்)

 

மாருதிய காப்பாத்தின கபாலி – எஸ் எல் நாணு

( நாணு அவர்கள் நான் வைத்திருந்த  20 வருட பழைய  காரைப் பற்றி  நான் சொல்லாமலேயே எழுதியிருக்கிறாரே ..என் ஆஸ்தான டிரைவர் கூட அதைக்  குழந்தை மாதிரி என்றுதான் சொல்வார் . என்ன,  என்னுடையது ஆல்டோ . இதில மாருதி 800 –  குவிகம் சுந்தரராஜன் )  

Maruti 800 AC - Type III - 20 Years Old But Still Mint | Faisal Khan -  YouTube

காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு,,

அதே மாதிரி பாச்சாவுக்கு அவனோட மாருதி 800 தான் உலகத்திலேயே மிகச் சிறந்த கார்..

பாச்சாவோட அப்பா ஆராவமுது ஏ.ஜி.எஸ் ஆபீசுலேர்ந்து ரிடையரான போது கையில வந்த கணிசமான செட்டில்மெண்ட் பணத்துல ஒரு அல்வாத்துண்டு பகுதியை பாச்சா ஆசைப் பட்டானேன்னு கார் வாங்க ஒதுக்கினார்.. ஆனா அந்த கொசுரு பட்ஜெட் ஒதுக்கீட்டுல இரண்டாவது கை (அதான் சார் செகண்ட்-ஹாண்ட்) காரைத் தான் பாச்சாவால குறி வெக்க முடிஞ்சுது..

ஆபீஸ் தோழன் கார்மேகத்துக்கு கார் விஷயத்துல நல்ல அனுபவம்..

“கார் வாங்க.. விக்க.. எங்கிட்ட வாங்க” அப்படின்னு பழைய ரமேஷ் கார் விளம்பரம் போல எப்பவும் கையை விரிச்சிண்டு காத்திண்டிருப்பான்.. சொல்லப் போனா கார் வியாபாரம்தான் அவனுக்கு பிரதான தொழில்.. பேங்க் வேலை உப தொழில்.. அவன் கார் வாங்கி விக்கற வேகத்தைப் பார்த்து எல்லாரும் அவனை கார்மேகத்துக்குப் பதிலா கார்வேகம்னுதான் கூப்பிடுவா..

“கவலைப் படாதே மச்சான்.. யார் யாருக்கோப் பண்ணறேன்.. உனக்குப் பண்ண மாட்டேனா?”

சொன்ன மாதிரியே ஒரே வாரத்துல ஒரு மாருதி 800 காரை பாச்சா கண்ணு முன்னால நிறுத்தினான் கார்மேகம்..

கார் பார்க்க ஓரளவு நன்னாத்தான் இருந்தது.. எட்டு வருஷ பழசு.. இருபதாயிரம் கிலோமீட்டர்தான் ஓட்டம்.. புதுசுல இல்லைன்னாலும் அப்புறம் சேர்க்கப்பட்ட ஏ.ஸி.. அந்தக் காலத்து அஹூஜா ஸ்டிரியோ சிஸ்டம்..

பாச்சாவுக்குப் பிடிச்சுதோ இல்லையோ.. காரைப் பார்த்த உடனே அவப்பா ஆராவமுதுவுக்கு ரொம்பவே பிடிச்சுப் போச்சு.. அதுக்குக் காரணம் காரோட கரு நீல கலர்..

“அந்த கிருஷ்ணனே நம்மாத்துக்கு வந்த மாதிரி இருக்குடா”

அது மட்டுமில்லை.. காரோட டேஷ் போர்டுல சின்னதா திருப்பதி பெருமாள் விக்ரஹம்..

“டேய்.. பெருமாள் ஆசிர்வாதத்தோட வந்திருக்கு.. பத்து இருபது அதிகமானாலும் இந்தக் காரை வாங்கிடு”

ஆராவமுதுவோட இந்த ஆர்வக் கோளாரை கார்மேகம் நன்னாவே உபயோகப் படுத்திண்டான்..

“நீங்க சொல்றது ரொம்ப சரி.. இதோட ஓனர் கிட்டப் பேசிட்டிருந்த போது சொன்னார்.. இந்தக் கார் கிட்டத்தட்ட ஏழு தடவை திருப்பதி போயிட்டு வந்திருக்காம்.. மூணு தடவை ஸ்ரீரங்கம் போயிட்டு வந்திருக்காம்.. கணக்கில்லாம காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்குப் போயிட்டு வந்திருக்காம்..”

கார்மேகம் வேகமா அடுக்கிண்டே போக ஆராவமுது கண்ணுலேர்ந்து தாரை தாரையா கண்ணீர்.. கொஞ்சம் விட்டா தெருன்னு கூடப் பார்க்காம  சாஷ்டாங்கமா விழுந்து அந்தக் காரை நமஸ்காரம் பண்ணியிருவாரோன்னு பாச்சாவுக்கு பயம் பிடிச்சுருத்து.. ஆனா நல்லவேளையா அப்படிப் பண்ணாம பயபக்தியோட தன் கையால காரைத் தொட்டு கண்ணுல வெச்சுண்டு சேவிச்சுண்டார்..

ஆக.. அந்த கார்வண்ணன் மாருதி800ஐ ஆராவமுது குடும்பத்துல பாச்சாவுக்குத் தம்பியா சேர்ந்து இதோட ஏழு வருஷங்களாச்சு..

பாச்சா குடும்பம் இருந்த அந்த நடுத் தெரு வீட்டுல கார் நிறுத்த கராஜ்லாம் கிடையாது.. வீட்டுக்கு முன்னால தெருவுல நிறுத்த வேண்டியதுதான்.. இதனாலயே அந்தத் தெருவுல நிறையபேர் வசதி இருந்தும் கார் வாங்கத் தயங்கினா..

ஆனா பாச்சாவுக்கு நிஜமாவே ரொம்ப அதிருஷ்டம்.. ஏன்னா மாருதி 800 அவன் வீட்டு வாசல்ல கச்சிதமா அடங்கிருத்து.. ஒரு இஞ்ச் கூட பக்கத்து வீட்டு எல்லையைத் தொடலை.. அது இந்தியா பாகிஸ்தான்.. (இப்ப சைனா) எல்லை மாதிரி.. ஒரு இஞ்ச் தாண்டினாக் கூட பக்கத்து வீட்டு சொந்தக் காரன் எதிராஜுலு தன் சொத்தையே அபகரிச்ச மாதிரி ஊரைக் கூட்டிக் கலாட்டா பண்ணிருவான்..

தினம் காலைல எழுந்து சந்தியாவந்தனம் பண்ணி காப்பி குடிச்ச கையோட பாச்சா மாடிலேர்ந்து கீழ வந்துருவான்.. ஏதோ புதுசாப் பொறந்த குழந்தையைப் பார்க்கிற மாதிரி தினம் அவனோட மாருதியை வெவ்வேறு ஆங்கிள்ளேர்ந்து பார்த்துப் பார்த்து ரசிப்பான்.. அப்புறம் குழந்தைக்கு வலிக்காம அழுக்கு துடைச்சு விடற மாதிரி பழைய பனியன் துணியால காரைத் துடைப்பான் (மத்த துணியெல்லாம் கரடு முரடா இருக்கும்.. காருக்கு வலிக்கும்..). அப்புறம் ஒரு தாய் குழந்தை தலைல மெதுவா தண்ணி விட்டுக் குளிப்பாட்டற மாதிரி பக்கெட் தண்ணியை மெதுவா மொண்டு விடுவான்.. மறுபடியும் பனியன் துணியால ஒத்தி ஒத்தி ஈரத்தை எடுப்பான்..

டேஷ் போர்டுல மூலாதாரமா வெங்கடேசப் பெருமாள் இருந்தாலும் பாச்சா அவனுக்குப் பிடிச்ச கபாலீஸ்வரரையும் கூடவே பிரதிஷ்டை பண்ணிட்டான்.. அதனால தினம்  வீட்டுக்கு முன்னால படர்ந்திருந்த செடிலேர்ந்து கணிப்பூ மாதிரி இருக்கற மஞ்சள் பூவையும்.. செம்பருத்தியையும் பறிச்சு பெருமாளுக்கும் கபாலீஸ்வரருக்கும் சாத்துவான்.. இப்படிப் பண்ணினா கோவில் கர்பக்கிரகத்துல இருக்கிற கபாலீஸ்வரருக்கே ஆராதனை பண்ணற திருப்தி அவனுக்கு..

ராமன் ஏக பத்தினி விரதன்.. அதே மாதிரி அந்தக் காரைப் பொறுத்தவரை பாச்சா ஏக பார்த்தன் (ஓட்டுநர்) விரதன்.. வேற யாரையும் ஸ்டியரிங்கைத் தொட அனுமக்திக்க மாட்டான்.. (கார் சர்வீஸ் பண்ணற ஆளுங்களைத் தவிற). எங்க போறதா இருந்தாலும் அவனே தான் ஓட்டிண்டு போவான்.. அவன் கியர் மாத்தற அழகே தனி.. ஏதோ குழந்தையோட கன்னத்தை செல்லமாத் தொட்டுக் கொஞ்சற மாதிரி இருக்கும்.. ஹார்ன் கூட யாருக்கும் கேட்காத மாதிரி அமைதியா அடிப்பான்.. ரொம்ப அழுத்தினா காருக்கு தொண்டை கட்டிக்கும்..

என்னிக்குமே பாச்சா நாற்பதைத் தாண்டி வேகமா(?) போக மாட்டான்.. நாம அதிகமா உடம்பை வருத்திண்டு வேலை பண்ணினா உடம்பு விண் விண்ணுன்னு வலிக்குமே.. அதே மாதிரி காரை ரொம்ப வேகமா ஓட்டினா அதை வருத்தர மாதிரி.. அதுக்கும் உடம்பு வலிக்குங்கறது அவனோட சித்தாந்தம்..

குழந்தை கைல ஒரே பொம்மை இருந்தா கொஞ்ச நாளுல அதுக்கு போர் அடிச்சுப் போய் அதைத் தூக்கிப் போட்டுரும்.. புதுசா வேற பொம்மையைத் தேட ஆரம்பிச்சுரும்.. அதே மாதிரி தான்.. அப்பப்ப புதுசு புதுசா பொம்மையை வாங்கி காருக்குள்ள தொங்க விடுவான் பாச்சா.. பழைய பொம்மையைத் தூக்கிப் போட்டுருவான்.. அப்பத்தான் காருக்கு போர் அடிக்காதாம்..

சில நாள் கனவுல பாச்சா முகம் தெரியாத ஹீரோயினோட அவனோட காரை ஓட்டிண்டே டூயட் பாடுவான்.. ஒரு நாள் “மேரே சப்புனோ கி ராணி கப் ஆயே கீ தூ” அப்படின்னு ராஜேஷ்கன்னா ஜீப்புலேர்ந்து ஷர்மிலா டாகூரைப் பார்த்துப்  பாடினதை பாச்சா அவனோட மாருதிலேர்ந்து முகம் தெரியாத ஹீரோயினைப் பார்த்துண்டே பாடினான்..

இப்படி நாளுக்கொரு கனவும்.. பொழுத்துக்கொரு கற்பனையுமா ஓடிண்டிருக்கிற போதுதான் ஆராவமுது அந்தக் குண்டைத் தூக்கிப் போட்டார்..

“பாச்சா.. நம்ம காருக்கு வயசு பதினஞ்சு.. இந்த ஜூலை மாசத்துக்குள்ள பிட்னஸ் சர்ட்டிபிகேட் வாங்கணும்.. இல்லைன்னா காரை எடுக்க முடியாது”

பிட்னஸ் சர்ட்டிபிகேட் வாங்கணம்னா காரைப் பக்காவா தயார் பண்ணணும்னு தெரிஞ்சுண்ட பாச்சா உடனே காரை சர்வீஸ் செண்டருக்கு எடுத்துண்டு போனான்.. வழக்கமா அவன் சர்வீஸ் செண்டர்ல தான் காரை சர்வீசுக்குக் கொடுப்பான்.. சாதாரண மெக்கானிக் கிட்டலாம் அவனுக்கு நம்பிக்கை கிடையாது..

“சாதாரண சர்வீஸ்னா மூவாயிரம் நாலாயிரத்துல முடிச்சுரலாம்.. பிட்னஸ் சர்ட்டிபிகேட் சர்வீஸ்னா.. ம்.. பம்பர்லேர்ந்து எல்லாம் மாத்தணும்.. கிட்டத்தட்ட ஒண்ணே முக்கால்லேர்ந்து ரெண்டு லட்சம் வரை ஆகும்.. பழைய மாடல்.. இதுக்குப் பேசாம நீங்க இதைக் கொடுத்துட்டு புது கார் வாங்கிரலாம்.. இதை ஒரு இருபதாயிரத்துக்கு பை பேக் எடுத்துப்பாங்க”

சர்வீஸ் செண்டரில் சொன்னதை பாச்சாவால ஜீரணிக்க முடியலை..

“காரை மாத்தறதா? உகும்.. இது என் செல்லக் குழந்தை.. இதை எப்படிக் கொடுக்க முடியும்? அதுவும் இருபதாயிரம் ரூபாய் தான் இதுக்கு மதிப்பா? சே.. எப்படி நாக்குல நரம்பில்லாமச் சொல்றான் அந்த ஆளு”

வீட்டுல இதை வெச்சு ஒரு மாநாடே நடந்தது.

ஆராவமுது தீர்மானமா சொன்னார்..

“அவா சொல்றது நியாயம் தானே.. பழைய காருக்கு இவ்வளவு செலவு பண்றதுக்கு பதிலா புது காரே வாங்கிடலாமே”

ஜானகி பாட்டியும் ஆர்வமா குரல் கொடுத்தா..

“ஆமாண்டா பாச்சா. காரை மாத்திடு.. இந்தக் காருல பின்னாடி உட்கார்ந்தா காலை இடிக்கறது.. வாங்கறதுதான் வாங்கறே.. இப்ப ஏதோ வந்திருக்காமே.. ஆண்டி கார்.. அதையே வாங்கிடு”

“ஐயோ பாட்டி.. அது ஆண்டி கார் இல்லை.. ஆடி கார்”

“அது ஆடியோ ஆவணியோ.. பேரா முக்கியம்.. அது ரொம்ப வசதியா இருக்குமாம்.. விஸ்தாரமா கால் நீட்டிக்கலாம்னு நாலாம் நம்பர் ஜெயஸ்ரீ பொண்ணு சொல்லித்து..”

இந்த விஷயம்லாம் பாட்டி எப்போ டிஸ்கஸ் பண்ணறான்னு பாச்சாவுக்கு ஆச்சர்யமா இருந்தது.. ஆடி காரைப் பத்திச் சொன்ன நாலாம் நம்பர் ஜெயஸ்ரீ அதோட விலையை பாட்டி கிட்டச் சொல்லியிருந்தா பாட்டி ஆடிப் போயிருப்பாங்கறது வேற விஷயம்..

ஒரு வாரம் இந்தக் குழப்பத்துலயே ஓடித்து.. இந்தக் காரைக் கொடுக்கறதுல பாச்சாவுக்கு இஷ்டம் இல்லை.. அதே சமயத்துல ரெண்டு லட்சம் செலவு பண்ணவும் தயக்கமா இருந்தது..

என்ன பண்ணலாம்னு யோசிச்சிண்டிருக்கிற போது போன் அடிச்சுது..

“கோதை டார்லிங் காலிங்”

பாச்சா கல்யாணம் பண்ணிக்கப்போற பொண்ணு. திருச்சில இருக்கா.

உடனே போனை எடுத்து “ஹலோ” அப்படின்னான்..

கோதை தெளிவாப் பேசினா..

“இப்பத்தான் பாட்டியோட பேசிண்டிருந்தேன்.. புது கார் வாங்கப் போறேளாமே.. வாங்கறது தான் வாங்கறேள். எஸ்.யு.வி. மாதிரி கொஞ்சம் பெரிய காராவே வாங்கிடுங்கோ.. அப்பத் தான் கல்யாணத்துக்கு அப்புறம் நாம அடிக்கடி சென்னைலேர்ந்து திருச்சி போயிட்டு வர வசதியா இருக்கும்”

பாச்சாவுக்கு சிரிக்கறதா இல்லை அழறதான்னு தெரியலை.. தினம் காலம்பர காரைப் பார்த்து சுத்தம் செய்யற போதுலாம் அவன் மனசு கிடந்து அடிச்சிண்டது..

“ஐயோ.. என்னை விட்டுப் போயிடப் போறயா? வேண்டாமே.. நீயே இருந்துறேன்.. எனக்கு நீ போறுமே.. பெரிய கார்லாம் வேண்டாம்.. எனக்கு நீ தான் பாந்தமா இருக்கே..”

இப்படி நினைக்கிறவனுக்கு திடீர்னு கோபம் வரும்.

“உனக்கு சரியாத்தான் பேர் வெச்சிருக்கா.. மாருதின்னு.. மொதல்ல யார் கிட்டயோ இருந்தே.. அங்கேர்ந்து எங்கிட்டத் தாவி வந்தே.. இப்ப எங்கிட்டேர்ந்து வேற எங்கயோ தாவப் போறயா.. மொதல்ல உன் பேரை மாத்தணும்”

கோவில்ல கபாலீஸ்வரர் முன்னால நின்னுண்டு தன்னோட டிரேட் மார்க் “ஓம் நம: ஷிவாய” மந்திரத்தைச் சொல்லிட்டு மனசார வேண்டிண்டான் பாச்சா..

“கபாலீஸ்வரரே.. நான் என்ன உங்க கிட்ட அது வேணும் இது வேணும்னா கேட்கறேன்.. இருக்கறதை எடுத்துக்காதேங்கோன்னு சொல்றேன்.. இருக்கறதை தக்க வெக்க ஏதாவது வழி சொல்லுங்கோன்னு சொல்றேன்.. இப்படிக் காதுலயே போட்டுக்காம கம்னு இருந்தா எப்படி? இதப் பாருங்கோ.. உங்களுக்கு ரெண்டு நாள் டைம் தரேன்.. அதுக்குள்ள இந்தப் பிரச்சனைக்கு ஏதாவது வழி சொல்லணும்.. இல்லை.. எனக்கு வேற வழி தெரியலை.. உங்க கோவில் முன்னால உட்கார்ந்து சத்தியாகிரகம் பண்ணப் போறேன்”

பேங்க்குல சீரியஸா வௌச்சர் பார்த்திண்டிருந்தான் பாச்சா..

“மச்சான் எப்படி இருக்கே?”

குரல் கேட்டு நிமிர்ந்தான்..

கார்மேகம்.. இப்ப தொண்டையார் பேட்டை பிராஞ்சுல இருக்கான்..

“மச்சான்.. இந்தப் பக்கமா ஒரு வேலையா வந்தேன்.. அப்படியே உன்னையும் பார்த்திட்டுப் போகலாம்னு வந்தேன்..”

உடனே பாச்சா கார்மேகத்தை வெளில கூட்டிண்டு வந்து ஒரு டீ வாங்கிக் கொடுத்து மாருதி விவகாரத்தைச் சொன்னான்.

“ஃப்பூ.. இவ்வளவு தானே? இதுக்கா டென்ஷன் படறே? நான் பார்த்துக்கறேன்.. உனக்கு வாட்ஸ் ஆப்புல ஒரு அட்ரஸ் அனுப்பறேன்.. வீனஸ் ஆட்டோ ரிப்பேர்ஸ்.. நான் சொல்லிடறேன்.. நாளைக்குக் காரை எடுத்திட்டு அங்க போ.. எல்லாம் அவன் பார்த்துப்பான்”

இதைக் கேட்ட உடனே சந்தோஷத்துல பாச்சாவுக்கு கார்மேகத்தைக் கட்டிப் பிடிச்சிக்கணும் போல இருந்தது.. ஆனா இப்ப ஊர்ல நிலமை சரியில்லை.. பார்க்கறவா “ஓ அவனா இவன்” அப்படின்னு நினைச்சுடக் கூடாதேங்கற தயக்கம்.. அதனால வாய் நிறைய திரும்பத் திரும்ப “தேங்ஸ்” சொன்னான்..

மறுநாளைக்கு ஆபீசுக்கு லீவு சொல்லிட்டு காரை எடுத்துண்டு கார்மேகம் சொன்ன வீனஸ் ஆட்டோ ரிப்பேர்ஸ் கடைக்குப் போனான் பாச்சா.. சேத்துப்பட்டுல ஒரு சின்ன சந்துக்குள்ள பெட்ரோல்/க்ரீஸ் வாடையோட இருந்தது..

வீனஸ் ஆட்டோ ரிப்பேர்ஸ் முதலாளி காரை ஸ்டார்ட் பண்ணிப் பார்த்தான்.. உள்ளயும் வெளிலயும் தட்டிக் கொட்டிப் பார்த்தான்.. ஏதோ வேண்டுதல் மாதிரி ரெண்டு மூணு தடவை காரை பிரதட்சணம் வந்தான்..

“ம்.. எஞ்சின், பாடிலாம் நல்லாதான் கீது.. அங்க இங்க டிங்கரிங் பண்ணி பெயிண்ட் பூசிட்டாப் போதும்.. கவலைப் படாதேம்மா.. காரை ஷோ ரூம் பீஸ் கணக்கா ஆக்கிடறேன்.. இத்தக் கண்ட உடனே இன்ஸ்பெக்டரு எப்.சி. கொடுத்துருவாரு”

பாச்சாவுக்கு ஒரே சந்தோஷம்..

“ரொம்ப தேங்ஸ்.. ஆமா இதுக்கு எவ்வளவு செலவு ஆகும்?”

“என்னா பெரீசா ஆவப் போவுது? அல்லாம் சேர்த்து ஒரு பத்து ரூபாக்குள்ள தான்..”

“பத்து ரூபான்னா?”

பாச்சா புரியாமக் கேட்டான்.

“பத்தாயிரம்பா..”

இதைக் கேட்டு பாச்சாவுக்கு அவனுக்குப் பிடிச்ச பாதுஷாவை டப்பாவோட விழுங்கின மாதிரி சந்தோஷம்..

“ரொம்ப தேங்ஸ்.. ரொம்ப தேங்க்ஸ்”

“வண்டிய விட்டுட்டுப் போ.. ஒரு வாரத்துல கூப்பிடறேன்.. வந்து எடுத்துக்கினு போவலாம்.. இப்ப அட்வான்சா ஒரு அஞ்சு ரூபா கொடுத்திட்டுப் போ.. அஞ்சுன்னா.. அஞ்சாயிரம்”

பணத்தை எண்ணிக் கொடுத்துட்டுக் கிளம்பின பாச்சா திடீர்னு ஞாபகம் வந்து கேட்டான்..

“ஆமா.. உங்க பேர் என்ன?”

அவன் சிரிச்சிண்டே சொன்னான்..

“கபாலி”

 

 

“அமெரிக்க மாப்பிள்ளை”  – சூடாமணி சடகோபன் 

அமெரிக்காவில், “பாஸ்டன்” நகரில் வசிக்கும் பட்டு மாமியின் மாப்பிள்ளை  “அமுது” என்று செல்லமாக அழைக்கப்படும் “ஆராவமுதன்,” சென்னையில் ஒரு “ப்ளாட்” (வீட்டு மனை) வாங்க ஆசைப்பட்டார். அது அவருக்காக அல்ல, அந்த “ப்ளாட்” யாருக்காக என்பது தான் இந்த கதையின் “கருவே…”

இரண்டொரு  மாதங்களில் சென்னைக்கு வந்து அந்த “ப்ளாட்” டை ரிஜிஸ்டர் செய்து விடலாம் என்று கூறி விட்டு  அமெரிக்காவுக்கே ஓட்டம் பிடித்தார் மாப்பிள்ளை.

சென்னை  நகர் முழுவதும் “ப்ளாட்”  தேடும்  படலத்தில் முழு மனத்துடன் இறங்கினார்.

 

பட்டு மாமி  சென்னையில்  ரியல் எஸ்டேட் சூடு பிடிக்க ஆரம்பிப்பதற்கு முன்பே “அறுபதுக்கு நாப்பது” ,  “வடக்கு வாசல் பார்த்தது”, “தெருக் குத்து” இல்லாமல் இருக்கும் ஒரு பிளாட்டை, ஒரு புரோகர் மூலமாகத், தேடி, அலசி ஆராய்ந்து,  கடைசியில்   தன்னுடைய எல்லா எதிர்ப்பார்ப்புகளுக்கும் ஏற்றார்ப்போல, மேற்கு தாம்பரத்தில் ஒரு “வீட்டு மனை” யை வாங்கிப் போட்டார்.

பட்டுமாமியின் வைரத்தோடு, எட்டுக்கல் பேசரி மூக்குத்தி, கழுத்துல ரெட்ட வடத்துல ஒரு செயின், கையில ரெண்டு வளையல்  தவிர,  மற்ற அனைத்து  நகைகளும், சரி அப்படி என்ன அதிகப்படியான நகைகள் மாமிகிட்ட இருக்கப் போகிறதென்று கேட்கிறீர்களா,  தன் மாமியாரிடமிருந்து, தனக்கு சீதனமாக வந்த தங்க ஒட்டியானத்தை தான்,  வங்கியில் அடமானம் வைத்து, அந்தப் பணத்தில் வாங்கப் பட்டது தான் அந்த மேற்கு  தாம்பரம் மனை.

அநேகமாக நடுத்தர வர்க்கத்தில் தங்க ஒட்டியானத்தை வைத்திருக்கிற கடைசி குடும்பமாக இருப்பது பட்டு மாமியின் குடும்பமாகத்தான் இருக்கும். அதுவும் அவளது பெண்ணின் கல்யாணத்திற்குப் பிறகு கண்டிப்பாக காணாமல் போய்விடும்.அதில் சந்தேகமேயில்லை.

முப்பது வருடங்களுக்கு முன்பு பெய்த அடை மழையில், ஆறு மாதங்கள் வரை வடியாமல் காத்திருந்து, வேறு வழி தெரியாமல், வந்த விலைக்கே விற்று விட்டு, மழை வெள்ளத்திலிருந்து தப்பித்தால் போதும் என்று, மனையை விற்று விட்ட பிறகும், வடியாத மழைத் தண்ணீரிலேயே,  படகின் மூலம் மேற்கு தாம்பரத்தில் இருந்து மேற்கு மாம்பலத்துக்கு ஜாகை பெயர்ந்தார் பட்டு மாமி.

பட்டுமாமிக்கும் மேற்கு மாம்பலத்துக்கும் ஒரு அன்னியோன்னியம். கொசுவுக்குப் புகழ் பெற்ற காலத்திலேயே, மாமி, மேற்கு மாம்பலத்தில் காலடி எடுத்து வைத்து விட்ட பெண் வீராங்கனை!

பட்டு மாமி  இப்பொழுது மிகவும் சந்தோஷமாக இருக்கிறாள்., அந்தக் கொசுக்கள் எல்லாம் இப்போ எங்கே என்று கேட்குமளவுக்கு, “குட் பை” சொல்லியாச்சு”  என்று சொல்லி மேற்கு மாம்பலத்தைப் பற்றி பெருமையாகப் பேச ஆரம்பிப்பாள் பட்டு மாமி..

“ஒன்னே ஒன்னு, கண்ணே கண்ணு” என்று பட்டு மாமிக்கு ஒரே ஒரு பொண்ணு தான்!  சென்னை “வெஸ்ட்  மாம்பலம்” பகுதியில், பிரபல  மண்டபத்து  பக்கத்துத் தெருவில்  இருக்கும் அந்த “டூ பெட்ரூம்”  அடுக்கு மாடி குடியிருப்பு மாமியின்  விருப்பத்தின் பேரில் , ஆசையாசையாக வாங்கிய “அடுக்குமாடி” குடியிருப்பு ஆகும்.  அதை அடுக்குமாடி குடியிருப்பு என்று சொல்வதா அல்லது பெரிய வீடு என்று சொல்வதா என்று தெரியவில்லை.  அதில் தரை தளம் மற்றும் முதல் தளம் என்று இரண்டு தளங்களே உள்ளன

திருவல்லிக்கேணியின் ஒண்டுக்குடித்தனங்கள், குடியிருப்புகள் ரூபத்தில் மேற்கு மாம்பலத்துக்கு  இடம் பெயர்ந்து  விட்டனவோ என்று சந்தேகம் உங்களுக்கு ஏற்படலாம். ஏனென்றால், “ஒரு கிரௌன்ட்” மனையில் பன்னிரண்டு ‘ஃப்ளாட்”கள். தரை தளம் மற்றும் முதல் மாடி மட்டுமே கொண்ட பழைய அடுக்குமாடி குடியிருப்பு அது. அதைக் கட்டியவன் மிகத் திறமைசாலி  அந்த மண்டபத்து வாசலிலேயே ஒரு  “ஸ்டால்” போட்டு பன்னிரண்டு குயிருப்புகளையும்  ஒரே நாலில் விற்று விட்டான்.  அவனது  வலையில் வீழ்ந்த முதல்  “விக்கட்”  நம்ம பட்டு மாமி தான்.

அந்தக் காலத்தில், அந்த மண்டபத்தில்  நடக்கும் விசேஷங்களுக்கு தவறாமல் சென்று ஆஜராகி, மண்டபத்தை கலகலப்பாகி விடுவாள் பட்டு மாமி.

மாம்பலத்துக், கொசுக்கடிகளையும் மறந்து, பாகவதர்களின் ஆலாபனைகளுக்கு, தன்  தொடையில் தாளம் போட்டுப் போட்டே, மாம்பலம் கொசுக்களை விரட்டியடித்து, அவற்றைக் கொன்று குவிப்பாள்

பட்டுமாமி தாளம் போடுவதைப் பார்ப்பவர்களுக்கு இந்த சூட்சுமம் தெரியாது.  பட்டுமாமியைக் கண்டாலே, கொசுக்கள் அவர் பக்கம் வராது.  “யூ டர்ன்” எடுத்து அப்படியே வேறு வரிசைக்குச்சென்று விடும். அதனால், பட்டு மாமியின் பக்கத்தில் உட்காருவதற்கு பலரும் போட்டி போடுவார்கள்.

மாமியைப் பார்ப்பவர்கள்,, “பட்டு மாமி கர்நாடக சங்கீதத்தில் ஒரு வித்தகி” என்று நினைப்பர். ஆனால், பட்டுமாமி, ஆரோகனத்துக்கும் தொடையில் தாளம் தட்டுவார். அவரோகனத்துக்கும் தொடையில் தாளம் தட்டுவார்.  தாளம் தப்பாமல், இரண்டுக்கும் ஒரே வேகம் தான்.  தாளங்களில் பட்டுமாமிக்கு பேதமில்லை.  அனைத்து சங்கதிகளுக்கும் , துக்கடாக்களுக்கும் ஒரே தாளம் தான். பாகவதரின் பக்கத்தில் உட்கார வைத்தால், மிருதங்கமே வேண்டாம். அவ்வளவு பலமாகத் தட்டுவார்,

ஆனால் பாவம், பாகவதர் தான், தாளம் தப்பி,  விழி பிதுங்கிப் போவார்.

 

பட்டுமாமிக்கு முதல் வரிசையில் உட்காருவதற்கு பயம். ஒரு முறை, முன் வரிசையில் உட்கார்ந்த பொழுது, பாகவதர் ஒரு துண்டு சீட்டில் எழுதி, மண்டபம் செகரட்டரியிடம் கொடுத்து, பட்டு மாமியைக் கடைசி வரிசையில் உட்காரச் செய்துவிட்டார் பாகவதர் ,சப்தம் போடாமல்….

அதே போல், தப்புத்தாளம் போடுகையில், பாகவதரே ஒரு நிமிடம், பட்டுமாமியின் தாளத்துக்கேற்றவாறு தன் பல்லவியை மாற்றி அவஸ்தைப் பட்ட நிகழ்ச்சிகளும் பல முறை நடந்தேரின.

பட்டு மாமி, பக்க வாத்தியக்கார்களுக்குக் குறிப்பாக கைதட்டி, அவர்களை மிகவும் உற்சாகப்படுத்துவார். மாமிக்கு அவ்வளவு  பரந்த மனசு.. ”புதியதாக பாட வந்தவர்கள் மனம் கோனக்கூடாது”  என்று  நினைத்து அவர்களது அனைத்து சங்கதிகளுக்கும் தாராளமாக தலையை ஆட்டி, தொடையில் தாளம் போட்டு, அவர்களுக்கு உற்சாகம் தந்து கொண்டிருப்பார்..

மாமி கொஞ்சம் குள்ளமாக இருப்பாள். மழை காலத்தில் அவள் கையில் குடை வைத்துக்கொண்டு மண்டபத்துக்குள் நுழையும் பொழுது, பகவானே சாட்சாத் வாமன ஸ்வரூபியாக  கையும் குடையுமாக வந்திருக்கிறார்” என்று  மண்டபத்தில்  ஏற்கனவே  வந்தமர்ந்து இருக்கும் ஒரு சில சீனியர் மாமாக்கள் மாமியைப் பார்த்து நையாண்டி  செய்வார்கள்.

அப்படிப்பட்ட மண்டபத்தில் தான், தன் மாப்பிள்ளையைத் தேடிப் பிடித்தார் பட்டு மாமி. மண்டபத்தில்,  சாய் சங்கராவின் ஜாதகப்பரிவர்த்தனை நடக்கும் பொழுது, பட்டு மாமி ஒரு நாள் முன்னதாகவே, மண்டபத்தில் பக்தியோடு அஜாராகி விடுவார். அங்கிருக்கும் அனுமார் சன்னதியை நூற்றியெட்டு முறை சுற்றி, நல்ல மாப்பிள்ளை கிடைக்க வேண்டுமென்று  வேண்டிக்கொள்வாள்..

அப்படி கிடைத்தவர்தான்  இந்த அமெரிக்க மாப்பிள்ளையின் ஜாதகம்.

“ஆச்சு, கல்யாணமும் நல்ல முறையில் நடந்தேறியது! பெண்ணும் மாப்பிள்ளையும் அமெரிக்கா கிளம்பிச்சென்றனர்,

“ இரண்டு வருடங்கள் கழித்து மனைவியுடன் மாமியார் வீட்டில் தங்கி,  அவர்களைத் திருப்திப் படுத்தலாம், அப்படியே, “வொர்க் ஃப்ரம் ஹோம்”  பண்ணி, “லீவையும்” மிச்சம் பண்ணலாம்னு, ஆசையாசையாக விமான,ம் ஏறி வந்தால், ஏரிக்குள் இறங்கியது போல   மேற்கு மாம்பலத்தில் மூன்று அடி தண்ணீரில் கால், மன்னிக்கவும் ,இடுப்பை வைக்க வேண்டியதாயிற்று”

பார்த்தார் மாப்பிள்ளை. உடனே தன் மாமியாருக்கு  சென்னையில் ஒரு நல்ல இடத்தில் ஒரு வீட்டு மனையை வாங்கித்தர முடிவெடுத்தார்.

ஜாதகப் பரிவர்த்தனையில் பத்து பொருத்தங்களும் இருக்கவேண்டுமென்பதைப் போல, ஒரு பத்து “கன்டிஷன்களை”ப் போட்டு விட்டு விமானம் ஏறினார் மாப்பிள்ளை.

அந்த வருட  அமெரிக்க மாப்பிள்ளையின்  இந்திய விஜயம் முழுவதும், மேற்கு மாம்பலத்திலுள்ள தன்  மாமியார் வீட்டில் புகுந்து  ரகளை செய்த மழை நீரை வெளி யேற்றுவதிலேயே கழித்தன.

அமெரிக்காவில்   அழகான “பாத் டப்” பில் நின்று கொண்டே,  குளித்துப் பழக்கப்பட்ட  அவருக்கு, மாமியார் வீடு முழுவதும்  “ஸ்விம்மிங் பூல்” போல  மாறியதை அவர் சற்றும் எதிர்ப் பார்க்கவில்லை.

பட்டுமாமிக்கு மழையின் பேரில் ஏகப்பட்ட கோபம். “வராத மாப்பிள்ளை வந்திருக் கிறார். வெள்ளம்னா வெள்ளம், அப்படிப்பட்ட வெள்ளம். மனுஷாளை எங்கயும் நகர விடாமல் செய்து விட்டது. கார்ப்பரேஷன் காரா எதுக்கு இருக்காள்னு  தெரியலேனு” என்று கண்ணில் படுபவர்களிடமெல்லாம் அவளும் மாப்பிள்ளையைப் போலவே புலம்பித்தீர்க்க ஆரம்பித்தாள்.

“சரி பரவாயில்லை, வயசானவங்க பாவம்!” என்று  தன் மாமியாருடன் “அட்ஜஸ்ட்” செய்து கொண்டு  விட்டார், அமெரிக்க மாப்பிள்ளையான  ஆராவமுதன்.

பட்டு மாமியின் மாப்பிள்ளை சென்னையிலுள்ள தன் மாமியார் வீட்டிற்கு வருவது இது இரண்டாவது முறையாகும்.  சென்ற  வருடத்தைப் போலவே,  இந்த வருடமும் மாப்பிள்ளைக்கு  வேறு தொல்லை.!

மாப்பிள்ளை சென்னைக்கு வந்திருந்த பொழுது, மாமியின் கஷ்டத்தைப் பார்த்து, மனம் பொறுக்காமல்   மாப்பிள்ளை முறுக்கு பண்ணாமல், மாமியாரின் கஷ்டங்களை மறக்க, மிகுத்த சோகத்துடன் தண்ணி அடிக்க ஆரம்பித்தது வேறு கதை..

நீங்கள் யாரும்  பட்டுமாமியின் மாப்பிள்ளையைத் தவறாக எண்ண வேண்டாம், அவர் மிகவும் நல்லவர்! பரம சாது!, ஒரு தப்பு தண்டாவுக்கும் போக மாட்டார்.  வருடத்தில் முன்னூத்தி அறுபத் தைந்து நாட்களும்” பாஸ்டன்” கடுங்குளிரிலும்,  திறந்த மார்போடு சந்தியாவந்தனம் செய்யும் பழக்கம் உள்ளவர் தான்  பட்டு மாமியின் மாப்பிள்ளை “ஆராவமுதன்”

மாப்பிள்ளை தீர்மானித்தார், “இனியும் என் ,மாமியார் இந்த மேற்கு மாம்பலத்தில் தங்கவே கூடாது…. ஒவ்வொரு முறையும் நான் இங்கு வரும் பொழுது, ஒன்னு, தண்ணியே இருக்காது. இல்லேன்னா, வீட்டைச்சுத்தியும் அஞ்சடிக்கு மழைத் தண்ணி  தேங்கிண்டே இருக்கும். என்னால  நீச்சலும் தெரியாது. பம்படிச்சு பம்படிச்சு, தோள்பட்டையே எறங்கிப் போயிடுச்சு!”

பட்டு மாமியும் சென்னை நகரில் ஒரு நல்ல  வீட்டு மனை  இன்னமும் தேடிக் கொண்டிருக்கிறாள்.  நான்கு வருடங்களாகத் தேடியும் ஒரு நல்ல வீட்டு மனை அவளுக்குக் கிடைக்க வில்லை.

உங்களுக்குத் தெரிந்தால், பட்டுமாமி மேற்கு தாம்பரத்திலும், மேற்கு மாம்பலத்திலும் அவஸ்தைப் பட்டதைப் போல அல்லாமல், மழை நீர் தேங்காமல், வீட்டிற்குள் மழை நீர் புகாமல் சென்னையில் எந்த பகுதியில் இருந்தாலும் பரவாயில்லை, ஒரு நல்ல  வீட்டுமனையைத்  தேடிக் கொடுப்பீர்களா?”

*****

 

அஞ்சலியும் அலங்கார ஹோட்டலும் = ரேவதி ராமச்சந்திரன், ஜான்சி

    வீட்டு வேலைக்காரி மீது மானநஷ்ட வழக்கு தொடருவேன்: நடிகை சுருதி | Actress  Shruti To File Criminal Case Against Maid Servant - Tamil Filmibeat    

புவனா வீட்டில் வேலை செய்யும் அஞ்சலிக்கு வீட்டில் நுழைந்தவுடன் மற்ற எங்கே எவ்வளவு காபி, டீ குடித்து இருந்தாலும் புவனா வீட்டு பில்டர் காபி மிகவும் பிடிக்கும். உள்ளே நுழைந்தவுடன் காபி சாப்பிட்ட பிறகு அதுவரை அடக்கி வைத்திருந்த வம்புகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வரும். அப்படி வாய் வேலை செய்யும் போது அவளுடைய கையும் வேலை செய்யும். நன்கு வேலை செய்வதாலும், நம்பிக்கையானவளாக இருப்பதாலும் அவளது அட்டகாசங்களை புவனா வீட்டார்  பொறுத்துக் கொண்டிருந்தனர். இது போதாது என்று அவ்வப்போது தான் ஆசைப்படும் பொருளை சொல்லி புவனாவை செய்து தரச் சொல்லுவாள்.

அக்காரவடிசலும்  அடைதோசையும் செய்து கொடு என்று ஒரு நாள், மற்றொரு நாள் கல் தோசை பால் கொழுக்கட்டை. ஒரு நாள் ‘அம்மா எல்லாரும் பிச்சை  சாப்பிடுகிறார்கள், எனக்கும் சாப்பிட ஆசையா  இருக்கிறது’ என்றாள்.

‘என்னடி நீ என்ன பிச்சை கேட்கிறாய்’ என்று முதலில் சொன்னாலும் அவளுக்குப் புரிந்து விட்டது இவள் பீட்சாதான் கேட்கிறாள் என்று.

‘பீட்சா, பர்கர், பாஸ்தா என்று வாங்கிக் கொடுத்து அவளை மேலைநாட்டுக்காரி ஆக்கி விடாதே’ என்று அவள் கணவரும் புவனாவை கேலி செய்வார்.

 மற்றும் ஒருநாள் ‘அம்மா என் வீட்டுக்காரர் ஒரு தடவை என்னை ஹோட்டலுக்கு இட்டுக்குனு போய் இட்லி வாங்கிக் கொடுத்தார், எனக்கு மறுபடியும் ஹோட்டலுக்கு போய் தோசை சாப்பிட ஆசையா இருக்கு’  என்று சொன்னாள்.

சின்னக் குழந்தை மாதிரி அப்பப்ப தன்னோட ஆசைகளை எடுத்துச் சொல்லும் அஞ்சலியை ரசித்துக்கொண்டு ‘அதற்கென்ன ஒரு நாள் எல்லாரும் போய்விடலாம், உனக்கும் சமையல் வேலையில் இருந்து விடுதலை கிடைக்கும், எங்களுக்கும் நல்ல சாப்பாடு கிடைக்கும்’ என்று கேலியாகவும் பரிவோடும் சொன்னாள் புவனா.  

இரண்டு மூன்று நாட்கள் கழித்து கல்கத்தாவில் இருக்கும் பெண் விடுமுறைக்கு வந்த பொழுது எல்லோரும் ஹோட்டலுக்குப் போகலாம் என்று முடிவாயிற்று. நாள், நட்சத்திரம், கிழமை எல்லாம் பார்த்து ஒரு வியாழனன்று அடையாரில் பிரசித்தி பெற்ற ‘மத்ஸ்யா’க்குப் போவதாக முடிவு செய்தார்கள். அஞ்சலிக்கு ஒரே குஷி.

சின்னக் குழந்தை மாதிரி கைதட்டி ஆர்ப்பரித்துக் கொண்டு ‘நான் மசால் தோசை, மினி குஷ்பூ இட்லி எல்லாம் சாப்பிடப் போகிறேன்’ என்று சந்தோஷமாக எல்லோருக்கும் சொல்லிக் கொண்டிருந்த அஞ்சலியைப்  பார்த்து எல்லோரும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.

வியாழனன்று முகத்தில் நிறைய பவுடர், கண்களில் மை, அழுத்தமான கலரில் லிப்ஸ்டிக், தலை நிறைய கதம்பம், கையில் யாரோ கொடுத்த ஒரு சின்ன ஹேண்ட் பேக் (அதனுள் ஒன்றும் இல்லை என்பது வேறு விஷயம்) வந்து நின்ற அஞ்சலியைப் பார்த்து இவள் ஓட்டலுக்கு வருகிறாளா, இல்லை பேஷன் பரேடுக்குப் போகப் போகிறாளா என்று புரியாமல் திகைத்தனர்.

அது மட்டுமில்லாமல் புவனாவையும் ‘இந்தப் புடவை கட்டிக் கொள், அந்த வளையலைப் போட்டுக் கொள்’ என்றும், எப்பொழுதும் எளிமையாக இருக்கும் கவிதாவிடம் சென்று ‘கண்மை தீட்டிக் கொள், லிப்ஸ்டிக் போட்டுக் கொள்’ என்று சொல்லவும் கவிதாவுக்கு வேடிக்கையாக இருந்தது. கடைசியில் ‘இந்தப் பூ வைத்துக் கொள்’ என்று சொல்லவும் கவிதாவிற்கு கோபம் வந்தது. இருந்தாலும் அஞ்சலியின் மீது உள்ள அபிமானத்தால் ஒன்றும் சொல்லாமல் இருந்தாள்.

 காரிலும் அஞ்சலி வழிநெடுக யாரையோப் பார்த்து கையாட்டிக்  கொண்டே வந்தாள். தெருவில் நடந்து போய்க்கொண்டிருந்த தனது தோழி சரசுவைப் பார்த்துவிட்டு ‘முந்தானை முடிச்சு’ ஊர்வசி மாதிரி ‘அக்கா நான் ஹோட்டலுக்குப் போகிறேன்’ என்று கத்திக் கொண்டிருந்தாள்.

 அவளை அடக்கி சீட்டில் உட்கார வைக்க பிரம்மபிரயத்தனம் செய்ய வேண்டியிருந்தது. அவ்வளவு பெரிய ஹோட்டலைப் பார்த்து மலைத்து ‘இது அம்பானி வீடா!’ என்று தனக்குத் தெரிந்த தற்போதைய செய்தியையும் எடுத்து விட்டாள்.

 வாயிலில் நின்றிருந்த பெண் தலை குனிந்து இவளை வரவேற்றுபோது இவளும் நின்று நிதானமாக அவளுக்குக் குனிந்து பதில் கூறியது வேடிக்கையாக இருந்தது. உள்ளே நுழைந்தவுடன் சர்வர் வரவேற்று நாற்காலியை இழுத்து இவர்களுக்கு உட்கார வசதி செய்து கொடுத்த பொழுது அஞ்சலி கவனியாமல் விழுந்து விட்டாள்.

சர்வர் ‘ஆர்டர் ப்ளீஸ்’ என்று கேட்ட பொழுது கை அலம்பச் சென்றிருந்த பையனும் வந்து விடட்டும் என்று ‘ஆர்டர் லேட்டர்’ என்று சொல்வதை காதில் வாங்கி அஞ்சலி மெதுவாக ‘அக்கா எனக்கு லேட்டர் வேண்டாம், தோசை தான் வேண்டும்’ என்றாள்.

 முதலில் சூப், அதனுடன் பிரட் ஸ்டிக்ஸ் என்றதற்கு ‘சாம்பாருக்குப் பிறகு தானே ரசம் சாப்பிடுவார்கள், ஏன் முதலிலேயே ரசத்தைக் கொடுக்கிறார்கள்!’ என்று சூப்பை உறிஞ்சிக்  கொண்டே அஞ்சலி கேட்டாள்.

அவளுக்கு முதலில் இது பசியைத் தூண்டும் என்று புரிய வைத்து சாப்பிட வைத்தோம். பிறகு எல்லோரும் தங்களுக்கு விருப்பமான உணவைச் சொல்ல மறுபடியும் அஞ்சலி ‘எனக்கு ஒரு தோசை’ என்றாள்.

  சர்வரும் ‘என்ன தோசை வேண்டும், ரோஸ்ட், கீ ரோஸ்ட், பேப்பர் ரோஸ்ட், ஃபேமிலி ரோஸ்ட், ஊத்தப்பம், தோசை, செட் தோசை. கோன் தோசை, மசாலா தோசை, ரவா தோசை, ஆனியன் ரவா தோசை, ஆனியன் மசாலா ரவா தோசை என்று அடுக்கிக் கொண்டே போக, ‘அக்கா இங்கு தோசை இல்லையா?’ என்று அப்பாவியாகக் கேட்டாள்.

‘அட இத்தனை விதமான தோசைகள் உள்ளன, உனக்கு வேண்டியது சொல்’ என்று சொல்லவும் ‘எனக்கு இதெல்லாம் என்னன்னே தெரியாது, நீயே யோசிச்சு எது நல்லா இருக்குமோ அதையே சொல்’ என்று தன் நிலையை வெளிப்படுத்தவும், அவள் ஆசைக்காக ஒரு பேப்பர் ரோஸ்ட் சொல்லப்பட்டது.

 கூம்பு வடிவத்தில் இருந்த தோசையைப் பார்த்து இந்த தோசையை செய்வதற்கு எந்த கல்லை உபயோகப்படுத்தி இருப்பார்கள், அதை எப்படி சுத்தம் செய்வது என்று புவனா காதைக் கடித்தாள். பிறகு தோசையைப்  படுக்க வைத்து பிரம்மா மாதிரி அதன் அடி, நுனி தேட ஆரம்பித்தாள். அந்தப் பெரிய தோசை பக்கத்து தட்டிலும் சிறிது விழ, ‘அக்கா முழு தோசை எனக்குத் தானே, ஏன் உன் தட்டில் பாதி விழுது?’ என்று குழந்தைத்தனமாகக் கேட்டாள். தோசையை விட தோசைக்குத் தொட்டுக்கொள்ள கொடுக்கப்பட்ட தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, மிளகாய் சட்னி, மிளகாய்ப்பொடி, சாம்பார் என்று அந்த குட்டி குட்டி கிண்ணங்களை ஒன்றொன்றாக ஆராய்ந்தாள். அரிசி, உளுந்தும் எந்த அளவில் போட்டிருப்பார்கள் என்று யோசித்துக் கொண்டே தோசையை மிகவும் விரும்பி சாப்பிட்டாள்.

ஒரு காபியும் குடித்துவிட்டு ‘என்ன இருந்தாலும் அக்கா கை காபிக்கு  கீடாகாது’ என்று நொட்டை விட்டாள்.

 கடைசியாக கை  கழுவ எழுந்த பொழுது, சர்வர் ஒரு கிண்ணத்தில் எலுமிச்சைப்பழம் போட்ட சுடு தண்ணீர் கொடுத்தவுடன் பழத்தை தண்ணீரில் பிழிந்து பக்கத்தில் இருந்த கிண்ணத்தில் இருந்து சர்க்கரையும் எடுத்துப் போட்டு குடிக்க ஆரம்பித்தாள். அவளது அறியாமை அழகாக இருந்தது.

 கடைசியில் பில் வந்தது. ‘தோசை விலை என்ன?’ என்று கேட்டால், ‘நீ கொடுக்கப் போறியா?’ என்று எதிர் கேள்வி போட ‘இல்லைக்கா எங்க வீட்டு பக்கத்தில் இருக்கிற ஹோட்டலில் 30 ரூபாய்’ என்று சொல்லவும், அவளிடம் எப்படி செல்வது என்று தயங்கினால், ‘சும்மா சொல்லுக்கா, நான் ஒன்னும் பைசா கொடுக்கப்படுவதில்லை’ என்றாள். பில்லை அவளிடம் காட்டிய போது ‘என்னக்கா, எனக்கு என்ன படிக்கவா தெரியும், சொல்லுக்கா, என் பசங்களுக்கு எப்பவாவது வாங்கித் தரலாம் இல்ல?’ அப்படின்னு கேட்டதுக்கு ‘உண்மையான விலையைச் சொல்லணுமா, இல்ல பொய்யான விலையைச் சொல்லணுமா? சரி 250’ என்று சொன்னவுடன் இந்த விலையில நான் ஒரு மாசத்துக்கு என குடும்பத்தை ஓட்டியிருப்பேனே!’ என்று இந்திய பொருளாராதத்தை அலசினாள் அழகி அஞ்சலை!

 

                                      

 

 

ப்ரோக்கோலியால் பிரிந்த குடும்பம்! – ரேவதி பாலு

Brunette Woman Looking At Camera Near Ripe Free Stock Photo and Image  467579254மாதத்தில் ஒரு முறையேனும் தன் கல்லூரி நண்பன் சுரேஷை சந்திக்க இராயப்பேட்டை போய் விடுவான் குமார். அவன் வீடு மீர்சாஹிப் பேட் மார்க்கெட் அருகில் இருக்கிறது. ஒரு முறை அந்த மார்க்கெட்டிலிருந்து நல்ல வயலெட் கலரில் முட்டைகோஸ் வாங்கி வந்தான்.

“அம்மா! அம்மா!” என்று உற்சாகமாகக் கூப்பிட்டுக் கொண்டே வந்த குமார் ரொம்பப் பெருமையாக அந்த வயலெட் கலர் கோஸை அம்மாவிடம் காண்பித்தான்.

“நீ ஒரு தடவை அந்த மார்க்கெட்டுக்கு வாம்மா! எப்படி கலர் கலரா காயெல்லாம் விக்கிறாங்க தெரியுமா?'” என்றான்.

“நீ குடமிளகாய் வெறும் பச்சை கலர்ல தானே வாங்குவே? அங்க வந்து பார்க்கணும். நல்ல சிகப்பு கலர், மஞ்சள் கலர்னு வித விதமா குடமொளகாய் பார்க்கறதுக்கே ரம்யமா இருக்கும்! காயெல்லாம் கலர் கலரா சாப்பிட்டா அவ்வளவு சத்தாம்!”

சற்றுத் தொலைவிலிருந்தே அந்த கோஸைப் பார்த்த கிருஷ்ணன் “இந்த கண்ராவியெல்லாம் சமைச்சு கிமைச்சு வச்சுராதே! என்னால சாப்பிட முடியாது!” என்று தீர்மானமாக சொல்லி விட்டுப் போனார்.

அவரை மாதிரி அப்பட்டமாகச் சொல்லி தன் மகனின் உற்சாகத்தைக் கெடுக்க விரும்பாத ரமா, “அதை அங்கே வை குமார்! பார்க்கலாம்!” என்றாள்.

வழக்கமாகக் கீரை கொண்டு வரும் கீரைக்கார அம்மா ஒரு நாள், “செவப்பு மொளைக்கீரை வந்திருக்கும்மா! நல்லா சத்தானது. ஒரு தடவை வாங்கிப் பார்த்தியான்னா விடவே மாட்டே!” என்று சொல்லி வற்புறுத்தி ஒரு கட்டு கொடுத்து விட்டுப் போனாள். கணவனுக்கும், மகனுக்கும் தேடித் தேடி சத்தாக சமைத்து போடும் ரமா ரொம்ப சந்தோஷமாக அதை வாங்கி வைத்தாள்.

கீரையை மசித்த பிறகு பார்த்தால் ஒரு கண்ராவியான சிகப்புக் கலரில் பார்க்கவே பயமாக இருந்தது. ‘இதை எப்படி பரிமாறுவது? இன்னிப் போதுக்கு வேற காய் கூட வாங்கலியே? வத்தக் குழம்புக்கு மொளைக்கீரை மசியல் நல்ல ஜோடியா இருக்குமேன்னு தானே வாங்கினேன்?’ என்று ரமாவுக்கு அச்சமே வந்து விட்டது.

எதிர்பார்த்த மாதிரியே கீரையை கிருஷ்ணன் தட்டில் பரிமாறியதும், ஒரு கோடாக தட்டு முழுவதும் சிகப்பு கலர் திரவம் துள்ளி ஓட, கோபத்தோடு முகத்தை சுளித்துக் கொண்டு, “இந்த கண்ராவியை மொதல்ல கொட்டி விட்டு தட்டை கழுவிக் கொண்டு வா!” என்றார்.

“கீரைக்காரம்மா சொன்னாளாம். இவ வாங்கி சமைச்சாளாம்! மனுஷன் தின்பானா இந்த கர்மத்தையெல்லாம்?” என்று அர்ச்சனை தொடர்ந்து கொண்டே இருந்தது. பிறகு ஒரு அப்பளத்தை சுட்டுக் கொண்டு வந்து வத்தக்குழம்பு சாதத்திற்கு தொட்டுக் கொள்ளப் போட்டதும் ஓரளவுக்கு அமைதியாக அன்றைய பொழுது போனது. குமார் அன்று ஊரில் இல்லாததால் சிவப்பு மொளைக்கீரை மசியல் சாப்பிடும் பாக்கியம் அவனுக்கு கிடைக்காமல் போனது. ரமா கண்ணை மூடிக்கொண்டு கலரைப் பற்றியெல்லாம் நினைக்காமல் அந்தக் கீரையை சிரமப்பட்டு சிறிதளவு சாப்பிட்டாள். மனதில் அருவருப்பு இருந்ததால் குமட்டிக் கொண்டு வருவது போலிருக்கவே, மீதி கீரையை வாசலில் பசு மாட்டிற்காகக் கட்டப்பட்டிருக்கும் தொட்டியில் போட்டு விட்டாள். வழக்கமாக அங்கே வரும் பசுமாடு கீரையை ஒட்ட நக்கி நக்கி சாப்பிட்டது. மத்தியானமெல்லாம் மாடுகள் அந்தத் தெருவில் சுற்றித் திரியும். பொழுது சாயும் வேளை மாட்டுக்கு உரிமையாளன் ஒரு பைக்கில் வந்து கையில் குச்சியுடன் மாடுகளை ஓட்டிக் கொண்டு போவான்.

வெகுளியான ரமாவிற்கு அதைப் பார்த்ததும் வேற மாதிரி பயம் வந்து விட்டது. ‘சமைச்சதும் அந்த கீரை ரொம்ப செக்கச்செவேல்னு இருந்ததே! அந்த மாடு ஒரு வேளை செவப்பு கலரில் பால் கறந்தால் மாட்டுக்கு உரிமையாளன் நம்மை சண்டை பிடித்தால் என்ன செய்வது?’ என்று. அன்று முழுவதும் அவள் முதல் மாடியிலிருக்கும் தன் வீட்டிலிருந்து கீழே தலை காட்டவே இல்லை.

குமார் வாங்கி வந்த கோஸை கொஞ்சமாக நறுக்கி வேக வைத்து கறி செய்து குமாருக்கு மட்டும் போட்டாள். வெந்த பிறகு அந்த வயலெட் கலர் பார்ப்பதற்கு மேலும் டார்க்காக பார்க்கவே பயமாக இருந்தது.

பொதுவாக பாரம்பரியமான சமையல் கத்தரிக்காய், வெண்டைக்காய், கொத்தவரங்காய் கறி வகைகள் என்று சாதாரணமாக எல்லோர் வீட்டிலும் சமைப்பது போலத் தான் தினமும் சமைப்பாள் ரமா. குமாருக்கோ எல்லாமே வெளியில் சாப்பிடுவது போல டிஷஸ் தான் பிடிக்கும்.

“உனக்கு வேணும்னா வெளியில நல்ல ஓட்டலா பார்த்து சாப்பிட்டுக்கோடா. என்னை விட்டு விடு!” என்று அவனைப் பார்த்து கை கூப்புவாள்.

குமார் விட்டால் தானே? “நீ கத்துக்கோம்மா! எல்லாம் ஈஸி தாம்மா! சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ள பனீர் பட்டர் மசாலா செய் மா!” என்பான். ரமாவுக்கு குளிர் ஜுரம் வருவது போல இருக்கும். ஏதோ கூட்டு, டால் இல்லாவிட்டால் தக்காளி தொக்கு என்று தெரிந்ததை பண்ண விடாமல் இப்படியெல்லாம் கேட்டால் என்ன செய்வது?

“ஒண்ணும் பிரமாதமில்லை அம்மா! ரொம்ப சிம்ப்பிள் தாம்மா!” என்று குமார் கூகுளில் பார்த்து அம்மாவுக்கு ஸ்டெப் பை ஸ்டெப் பனீர் பட்டர் மசாலா செய்யக் கற்றுக் கொடுத்தான். ரமா பெருங்காயப் பொடி டப்பாவை எடுக்க, அதைப் பிடுங்காத குறையாக குமார் வாங்கி வைத்தான்.

“அம்மா! உனக்கு எத்தனை தடவை சொல்வது? இந்த டிஷஸ்கெல்லாம் புளி, பெருங்காயம், கருவேப்பிலை எல்லாம் போடக்கூடாதுன்னு. கசூரி மேத்தி தான் போடணும்! “

ரமாவுக்கு அதெல்லாம் போடாமல் எப்படி ஒரு டிஷ் செய்வது என்று பிரமிப்பா இருக்கும். ஒரு பிடி கருகப்பிலை இருந்தால் நிமிடத்தில் நிம்மதியாக கருகப்பிலைக் குழம்பு ருசியாக வைத்து விட்டு போய் விடலாம். இந்த கண்ராவி கச்சா முச்சா என்னவோ பேர் சொன்னானே..அதென்ன….பேர் கஸ்தூரி …மோதியா.. மனசிலேயே நிக்கலியே!

கிருஷ்ணனுக்கு பாலக்காட்டுப் பக்கம் என்பதால் அவருக்கு தேங்காய் அரைத்துக் கரைத்து செய்யப்படும் சமையல் மிகவும் இஷ்டம்.

“கிருஷ்ணனுக்கு மொளகூட்டலும் புளி இஞ்சியும் வைத்தால் போதும். நாள் முழுவதும் சாப்பிட்டுக் கொண்டிருப்பான்” என்று கிருஷ்ணனின் பிரத்யேக சாப்பாட்டு ரசனைகளை ரமாவிற்கு அறிமுகம் செய்து வைத்தது அவள் மாமியார் தான். இப்போது கிருஷ்ணனின் அண்ணா வீட்டில் தாம்பரத்தில் இருக்கிறாள். அண்ணா பெண்ணிற்கு பிரசவ நேரம் என்பதால் உதவிக்கு அங்கே போயிருக்கிறாள்.

அந்த ஞாயிற்றுக்கிழமை குமார் எங்கேயோ வெளியே போய் விட்டு வந்தபோது ஒரே உற்சாகமாக வந்தான்.

“ரொம்ப நாளா தேடிண்டிருந்தேம்மா. கடைசியில நம்ம முத்து காய்கறிக்கடையிலேயே கெடச்சது. இதோ பார்த்தியா, ப்ரோக்கோலி?” என்று கவரிலிருந்து ஒரு வஸ்துவை எடுத்து ரமாவின் முகத்திற்கெதிரே நீட்டினான்.

“எவ்வளவு சத்தான காய் தெரியுமா? இன்னிக்கி ஞாயிற்றுக்கிழமை தானே. அவசர சமையல் இல்லையே? அப்போ இன்னிக்கு ப்ரோக்கோலியில ஏதாவது டிஷ் பண்ணிடலாம்!”

ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சின்ன வெங்காய சாம்பார், பூண்டு ரசம், உருளை ரோஸ்ட் என்று பிரமாதமாக சமையல் ஏற்பாடு ஆகிக் கொண்டிருக்கும் நேரத்தில் பச்சைப் பசேலென்று கடல் பாசி கலரில் இந்த கண்றாவியை என்ன செய்வது? ரமாவுக்கு கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. குமார் பார்க்காவண்ணம் வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள். பெருங்காயப்பொடி, புளி எதுவும் போடக்கூடாது என்று வேறு சொல்கிறான். என்ன தான் செய்வது? எப்படி தான் செய்வது?

அவள் முகத்தைத் திருப்பிக் கொள்வதை கவனித்த குமார், “ஒண்ணும் பிரமாதமான விஷயமில்ல அம்மா! காலி ப்ளவரை கறி செய்வே இல்லே? அந்த மாதிரி கூட சும்மா ஒரு ஆரம்பத்திற்கு ட்ரை பண்ணலாம்மா” என்றான்.

‘இது ஆரம்பம் என்றால் தொடர்ந்து ப்ரோக்கோலி வீட்டுக்குள் வந்து கொண்டே இருக்குமோ?’ ரமா மனதிற்குள் எண்ணம் ஓட உடம்பு அச்சத்தில் சிலிர்த்தது.
ஹாலில் நடப்பதை நோட்டமிட்ட கிருஷ்ணன்,

“ரமா! அம்மா என்னைக் கூப்பிட்டுண்டே இருக்கா. ஒரு லீவு நாளாவது சாப்பிட வரக்கூடாதான்னு. நா கௌம்பறேன்! அப்படியே அங்கேயிருந்தே நாளைக்கு ஆபீஸ் போயிட்டு சாயந்தரமா வரேன்!”

அவர் எஸ்கேப் ஆகிறார் என்று புரிந்து கொண்ட ரமா, தன் பங்கிற்கு, “குமார்! நா எங்கம்மாவைப் பார்த்து ரொம்ப நாளாச்சுடா! அம்மாவுக்கு உடம்பு சரியில்லேன்னு உன் மாமா சொன்னான். ஒரு நடை ஐயனாவரம் போயிட்டு வந்துடட்டா?” என்று நைசாகக் கேட்டாள்.

அவர்கள் இருவரையும் பார்த்த குமார் முகம் ஜிவுஜிவு என்று கோபத்தில் சிவந்தது.

“அம்மா, தாயே! நீ எங்கேயும் போக வேண்டாம். அவரையும் கூப்பிட்டு இங்கேயே சம்பிரம்மமாக வெங்காய சாம்பார் உருளைக்கிழங்கு கறி சமைத்துப்போட்டு சாப்பிடச் சொல்! ப்ரோக்கோலி வாங்கி வந்து குடும்பத்தை பிரிச்சேங்கிற கெட்டப் பெயர் எனக்கு வேண்டாம்!” என்று கோபமாக அந்த ப்ரோக்கோலியை கவரில் போட்டு எடுத்துக் கொண்டான்.

“நா இதை கடையிலேயே திருப்பிக் கொடுத்துடறேன்.” என்றவன் “இதை இங்கேயே வச்சா இதை நீ பசுமாட்டுத் தொட்டியில போட்டாலும், போட்டுடுவே” என்றான்.

“ஐயையோ! மாட்டேண்டா! அப்புறம் அது கரும்பச்சை கலர்ல பால் கொடுத்தா என்ன செய்யறது?” என்று வெகுளியான ரமா பதைபதைத்தாள்.

 

இது எம்மாத்திரம்?! – இந்திரநீலன் சுரேஷ்

 

சிரிக்க.....ரசிக்க ..... - நண்பேண்டா!!!!!!!!!

உடம்பைப் பேணுதல் மிகவும் முக்கியம்!

இந்த வரிகளைப் படித்த மறு கணமே இது ஒரு மருத்துவ அட்வைஸ்ப் பதிவு என எண்ணி, அவசரமாக அடுத்த பக்கத்துக்குத் தாவும் அன்பர்களே நிற்க..!

இது வேற விஷயம்;

‘ஊன், உடம்பு ஆலயம்’ என்ற திருமூலரின் கூற்றுப்படி காலையில் எழுந்தவுடன் ஜாகிங் பின்பு, கனிவு கொடுக்கும் நல்ல யோகா, மாலையில் பஜ்ஜி, பக்கோடா போன்ற வாசனைப் பொருட்கள் இல்லாத இடத்தில் நடைப் பயிற்சி என உடம்பின் மேல் நான் கொண்ட அக்கறைக்கான முக்கிய காரணத்தை தங்களுக்குச் சொல்ல விழைகிறேன்.

நமக்குத் தலைவலி, காய்ச்சல் என்று டாக்டரைப் பார்த்தால், என்ன கொடுப்பார் ?

பட்டை, பட்டையாய் ‘மாத்திரை..’

என் பிரச்சினையே அதுதான். அதாவது ‘மாத்திரையை முழுங்குவது..’

நான், அந்த வெள்ளை நிற வட்ட அல்லது ஓவல் வடிவ வஸ்துவை வைத்துக்கொண்டு, அதை உள்ளே தள்ள முயற்சிப்பதைக் கண்டு களிக்க மொத்த குடும்பமுமே சுற்றி நிற்கும்!

பார்த்திருப்பீர்களே, சில கால்சியம் மாத்திரைகள், பழைய சூடமிட்டாய்..யுடன் போட்டிப் போடும் சைஸில் இருக்கும்.

நான் சின்னக் குழந்தையாகவிருந்த போது என் அம்மா (என்னை இன்றும் அப்படித்தான் பார்க்கிறாள் என்பது வேறு விஷயம்) ஒரு பேப்பரை எட்டாக மடித்து மாத்திரையை அதில் வைத்து, சிறு அம்மிக் குழவியால் பொடி செய்து கொடுப்பாள். இப்போது, அப்படிச் சாப்பிட ‘தன்மானம்’ தடுக்கிறது..

நானும் மாத்திரையைக் கூடியவரை, எவ்வளவு ஆழம் விரல் செல்லுமோ, அந்த அளவிற்கு விட்டு, அதை ஒரு பதுமை போல ஜாக்கிரதையாக வைத்து, பிறகு குறைந்த பட்சம் ஒரு லிட்டர் தண்ணீர் எடுத்து, ஹோஸ் பைப்பில் நீர் பாய்ச்சுவது போல் இறக்குவேன். தண்ணீர் முழுவதும் தீர்ந்தவுடன் பார்த்தால், மாத்திரை சிறிதும் சிந்தாமல் சிதறாமல் அப்படியே அடி நாக்கில் நிற்கும்.

வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் குழந்தைகளும், பெரியோர்களும், ‘வாயை அகலமாகத் திற.., மூக்கைப் பிடித்தால் முழுங்கிவிடலாம், தலையை சீலிங் நோக்கிப் பார்..’ இப்படிப் பல வித உபாயங்களும், உவமேயங்களும் கூறுவார்கள்.

அதிலும் என் சித்தப்பா ஒருவர், இங்கே பாருடா என்று, படத்தில் ரஜினி, அலட்சியமாக சிகரெட்..ஐ தூக்கிப் போட்டுப் பிடிப்பதைப் போல மாத்திரையை அரை மீட்டர் தொலைவில் கையை வைத்து வீசி தண்ணீர் இல்லாமல் விழுங்கிக் காண்பித்து கை தட்டல் வாங்குவார்.

இதில் கொடுமை என்னவென்றால், காப்சூல் முழுங்குதல். வழுக்கிக் கொண்டு உள்ளே போய்விடும் என்று நினைத்தால் அது,

‘நீரோடும் வைகையிலே, நின்றாடும் மீன்’ போல் ஆடும். சிலசமயங்களில் அதன் இனிப்பு தடவிய மூடி கலைந்து, பொடி கரைந்து, ‘நில வேம்பு ‘கரைசல் போல் கசந்து ஓடும்..!

இப்படித்தான் ஒரு முறை மாத்திரையை ஒருவாறு நாவை விட்டு உள்ளிறக்கிய போது, அது தொண்டையில் போய் செட்டில் ஆகிவிட்டது. எத்தனை முறை நீர் அருந்தினாலும், இடத்தை விட்டு அகலகில்லேன் எனப் படுத்திக் கொண்டிருந்தது.
அந்த சமயம் பார்த்து என் நண்பன் கிச்சா போன் செய்தான்.

என் தொனியைக் கேட்டதும் “உன் லைன் கர..கர..ங்கறது, ஏதோ பிரச்சினை போல இருக்கு “

நான், “Saridon” – என்றேன் திணறலுடன்

“இதுக்கெல்லாம் எதுக்குடா சாரி சொல்லற..? அது சர்வீஸ் ப்ரொவைடரோட ப்ராபளம் ஆச்சே…..”

நான், தலையில் அடித்துக் கொண்டேன் (மாத்திரை உள்ளே போய்விட்டது)

இந்த சம்பவத்திற்குப் பிறகு, நான் மாத்திரை சாப்பிடும் போதெல்லாம் குடும்பம் என் தலை தட்ட’க் காத்திருக்கும்!

“பேசாம, இவருக்கு ஊசியே போட்டு.டுங்க டாக்டர்” – என மனைவியின் ரெகமெண்டஷனைப் பார்த்துச் சிரிப்பார், எங்கள் அப்பா காலத்துக் குடும்ப டாக்டர். அசப்பில் நம்ப பூர்ணம் விஸ்வநாதன் போல இருப்பார்.

“ஏன்டா, உனக்கு இந்த ‘ப்ராப்ளம் ‘ இருக்குன்னு கல்யாணத்திற்கு முன்னாலேயே சொல்லலையா..?” – என்பார், என்னவோ நான் பெரிய ரகசியத்தை மறைச்சுக் கல்யாணம் செய்தது போல. அப்போது அரைகுறையாய் காதில் கேட்டபடி ஊசி எடுத்துக் கொண்டு உள்ளே நுழையும் நர்ஸ், என்னை நோக்கி நமுட்டு சிரிப்பு சிரித்து விட்டுப் போவார்.

தற்காலத்தில், வைட்டமின் மாத்திரைகள் ‘ஜுஜிப்ஸ்’ (Gummies) வடிவில் வந்து விட்டதோ, பிழைத்தேன்.

“நல்ல வேளை, கோவிட் வாக்ஸின் ஊசியாகத்தான் போட்டாங்க. மாத்திரை என்றால் உங்க அப்பாவோட நிலைமையை யோசிச்சுப் பாரு” என்கிற மனைவியின் கிண்டல் எப்பவும் என் வீட்டில் உலவும் பேச்சு..!!

மாத்திரைக்கோர் மாற்றுரைப்போம் என்று ஏதாவது மருத்துவர் சபதம் ஏற்பது ஒன்றே இனி வரும் காலங்களில் நான் தப்பிக்க வழி!

ஆயிரம் பிரச்சனை  – எஸ் வி வேணுகோபாலன் 

Old men sitting on a bench in a park laughing Stock Photo - Alamy

மிகப் பழைய நண்பர் ஒருவரைப் பார்த்துவிட வேண்டும் என்று திடீர் என்று ஏனோ தோன்றிவிட்டது குமாருக்கு. அதற்குக் காரணம் அந்த மருத்துவர் தான். பல நாட்கள் தூக்கம் வராமல் அவஸ்தைப்பட்டவனுக்கு அவர் கொடுத்த மருத்து தான் காரணம். கவனப் பிசகால், மருந்து எழுதிய சீட்டை மேசை மீது வைத்துவிட்டு, அது பறக்காமல் இருக்க மருத்துவர் வைத்திருந்த ஒரு பெரிய புத்தகத்தை எடுத்துக் கொண்டு வந்துவிட்டார் குமார்.

அன்றிரவு, அந்தப் புத்தகத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்ததும் தூங்கிவிட்டார்.  அந்தத் தூக்கத்தில் பழைய நண்பர் ராமநாதன்  வந்துவிட்டார். வந்தது மட்டுமின்றி கல்லூரியில் படிக்கும்போது கடனாக வாங்கிய பத்து ரூபாயை இன்னும் திருப்பித் தரவில்லையே நீ எல்லாம் ஒரு நண்பனா என்று கண்டமேனிக்குத்   திட்டித் தீர்த்துவிட்டார். இப்படியான கெட்ட கனா வந்ததும் முழிப்பு தட்டிவிட்டது. எழுந்து உட்கார்ந்து என்ன செய்வது என்று முழி முழி என்று முழித்தார். 

இப்படியெல்லாம் நடக்கும் என்று ஏற்கெனவே அவருக்குத் தெரியும். அதனால் அந்தக் காலத்தில் கடன் வாங்கிய அதே பத்து ரூபாய்த் தாளை அப்படியே ஒரு டிரங்க் பெட்டியில் செலவு செய்யாது பத்திரமாக வைத்திருந்தார். அந்த நண்பரின் முகவரி எழுதிய உறைக்குள் அந்தப் பத்து ரூபாய், ‘எப்போது வேளை வரும், எப்போது உரியவரிடம் போய்ச் சேரலாம்’ என்று காத்திருந்தது. 

குமார் எடுத்துக் கொண்டார். ஓர் உறை அல்ல, மொத்தம் ஏழு உறைகள். அத்தனை பேருக்கு அவர் கடன் பட்டிருந்தார் தனது வாழ்க்கையில்!  மூக்குக் கண்ணாடி முதல் நாள் உடைந்து போயிருக்கவே, இப்போது அவரால் எந்த உறை இந்தக் குறிப்பிட்ட நண்பருக்கானது என்று கண்டுபிடிக்க முடியாது. எனவே ஏழு உறைகளையும் எடுத்து வைத்துக் கொண்டார். முதல் வேலையாக மூக்குக் கண்ணாடியை சரி செய்துகொண்டு உறை மீதிருக்கும் முகவரியைப் படிக்க வேண்டும். தனது வேலையை வேறு ஒருவரிடம் ஒப்படைக்க அவருக்குப் பிடிக்காது. வீட்டை விட்டு வெளியே வந்தார். 

அவருக்குத் தெரிந்த மூக்குக் கண்ணாடிக் கடை இரண்டு மைல்  தொலைவில் தான் இருந்தது. ஆனால் பேருந்து ஏறிப்போக முடியாது. பேருந்து வழித்தட எண் இப்போது கண்ணில் தெரியாது. அதற்காக யாரையாவது கேட்டு ஏறிப்போய் விடமுடியுமா, குமாரா கொக்கா? நடந்தே போவது என்று முடிவெடுத்துப் போய்க் கொண்டிருந்தார். 

பழைய நண்பர் ராமநாதன் மிகவும் பயந்த சுபாவம் உள்ளவர். யாரிடமும் இரைந்து கூடப் பேசமாட்டார். அவருக்கே இப்படி கோபம் வந்துவிட்டதே என்று தான் புறப்பட்டு விட்டார் குமார். அது தனது கனவில் தான் என்றாலும், உண்மையின் பிரதிபலிப்பு தான் கனவு என்று எப்போதோ எங்கோ படித்த நினைவு குமாருக்கு. முழு வரிகளும் படிக்குமுன் அன்றும் தூங்கி விட்டிருந்ததால் அதற்கு மேல் அந்தக் குறிப்பு என்ன சொல்லிச் சென்றது என்றெல்லாம் கூட அவர் தொடர்ந்து வாசித்தது இல்லை. 

ஏழு உறைகளில் ஒன்று ராமநாதனுக்கானது. இரண்டாவது முன் கோபக்காரர் முனுசாமி. அவரிடம் குமார் பணம் எதுவும் பெற்றுக் கொண்டதில்லை. அவரிடம் சேர்க்கவேண்டிய சீட்டு ஒன்றை முனுசாமியின் உறவினர் ஒருவர் கொடுத்துவிட்டுப் போனது. எப்படியோ கொடுக்க விடுபட்டுப் போனது. இப்போது கொண்டு கொடுத்தால் எப்படி தன்மீது பாய்ந்து பிடுங்குவாரோ என்று அஞ்சியே பெட்டிக்குள் பெட்டிப் பாம்பாக இருந்து வந்தது உறை. மூன்றாவது உறை, மதுரை மீனாட்சி கோயில் விபூதி குங்குமம். குமார் மதுரைக்குப் போகும்போது நண்பர் பழனிச்சாமி கேட்டுக் கொண்டபடி ஞாபகமாக வாங்கி வந்தது, மறந்தே போயிற்று அவரிடம் கொண்டு சேர்க்க. 

நான்காவது உறை, இவர் பெயரிலேயே இருந்த வேறு ஒருவருக்கு வந்த கடிதம் தவறுதலாக அலுவலக உதவியாளர் இவர் மேசையில் வைத்துவிட்டுப் போனது, அந்த வேறொரு குமார் பல நாட்கள் அலுவலகம் வராமல், வேறு இடத்திற்கு மாற்றலிலும் சென்றுவிட்டார். அதை அவரிடம் இன்னும் சேர்க்க நேரம் வரவில்லை. ஐந்தாவது உறை, புது மண தம்பதியினருக்கு அன்பளிப்பு எழுதி வைத்து எடுத்துச் செல்ல மறந்தது, அவர்களது குழந்தைக்கு எதிர்காலத்தில் திருமணம் நடக்க இருக்கும்போது  சேர்த்துவிடலாம் என்று வைத்திருப்பது. 

ஆறாவது உறை , வீட்டு வாடகை ஏற்றியதற்கு எதிராக நகராட்சிக்கு எழுதிய விண்ணப்பம். நேரமே இல்லாததால் கொண்டு கொடுக்கவில்லை. அதற்குப்பிறகு நகராட்சி மேலும் 3 முறை ஏற்றி விட்டிருந்தனர், இருந்தாலும், முறைப்படி முதல் கடிதம் கொடுக்காமல் அடுத்த கடிதம் கொடுக்கக்கூடாது என்று இன்னும் வைத்திருக்கிறார் குமார்.

ஏழாவது கடிதம், இவரது ஞாபக மறதிக்கு மருத்துவர் எழுதிக் கொடுத்த மருந்து சீட்டு, மறந்துவிடக் கூடாது என்று பத்திரமாக உறையில் போட்டு வைத்திருந்தது. இப்படியாக ஒரே மாதிரி இருக்கும் ஏழு வெள்ளை உறைகளை எடுத்துக் கொண்டு நடந்ததில் மூக்குக் கண்ணாடிக் கடை வந்துவிட்டது.  குமார் அந்தக் கடையை ஞாபகம் வைத்திருந்தது அவரது மறதியை அவரே தோற்கடித்திருந்த பெருஞ்சாதனை. நேரே கடைக்குள் சென்று கண்ணாடியை சரி செய்து கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார். ஆனால், கண்ணாடியைக் கையோடு கொண்டுவர மறந்து விட்டார். கடைக்காரரிடம் தலையை சொரிந்தார். 

ஆனால், கடைக்காரர் சிரித்துக் கொண்டே சட்டென்று கண்ணாடியை எடுத்து நீட்டினார். 

“என்ன சார், நேற்று தானே கொண்டு வந்து ரிப்பேர் செய்யக் கேட்டிருந்தீர்கள்…அப்புறம் உங்க கிட்டயே தேடினா எப்படி கிடைக்கும்..இது தான் உங்க கண்ணாடி..போட்டுப் பாருங்க, நல்லாத் தெரியுதான்னு..” என்று சிரித்தவாறே கண்ணாடியை நீட்டினார்.

முதலில் உறைகளை எல்லாம் எடுத்து வாசிக்க ஆரம்பித்தார் குமார்.  ராமநாதன் பெயருள்ள உறையை எடுத்தார். 

“இந்த அட்ரஸ் எங்கே வரும் சொல்லுங்க”  என்று கடைக்காரரிடமே சீட்டை நீட்டினார்.

அவரோ அதை வாசித்து அதிர்ந்துபோய், “சார்…இது எப்போது எழுதிய முகவரி…அந்தத் தெருவே இப்போது இல்லை…” என்றார்.

குமார் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு, “சுனாமியில் அடித்துக் கொண்டுபோய் விட்டதோ…ராமநாதன் என்ன ஆகியிருப்பான் ?” என்றார்.

கடைக்காரர் எரிச்சலோடு, “சார்…வாயைக் கழுவுங்க…நம்மூர்ல ஒரு ஆறு கூடக் கிடையாது…கடலா இருந்தது சுனாமி வந்து அடிச்சுட்டுப் போறதுக்கு…” என்றவர் தொடர்ந்து, “நீங்க எழுதி வச்சிருக்கறது ஒரு சாதி பெயரில் இருந்த தெரு. அப்புறம் தான் சாதியெல்லாம் பலகையில் எடுத்துட்டாங்களே…வெறும் தெருன்னு தான் நீங்க தேடணும். அதுகூடப் பரவாயில்லை…வீட்டு நம்பர் எழுதாம, பேங்க் எதிரில்னு எழுதி வச்சிருக்கீங்க”

“ஆமா..அது அருமையான அடையாளம் ஆச்சே…”

“என்ன அருமையான அடையாளம்…அந்த பேங்க் அதே தெருவிலேயே இருக்குமா…அந்த பேங்க் வேறு ஒரு தெருவுக்கு மாறி பதினஞ்சு வருசமாச்சு…”

“அய்யய்யோ…”

“இன்னொரு அய்யய்யோ சொல்லுங்க…அந்த பேங்க் இப்போ இல்லவே இல்ல…வேற ஒரு பேங்க் கூட அதை இணைச்சு அஞ்சு வருசமாச்சு…”

“வேப்ப மரம் அருகில்னு போட்டிருக்கேனே…”

“சார்..விளையாடாதீங்க…நம்ம ஏரியாவுல எந்த மரத்த யாரு விட்டு வச்சிருக்காங்க….எல்லாம் வெட்டிப் போட்டாச்சு ” என்று அலுத்துக் கொண்டார்.

“வாட் அபவுட் ஃபோன் நம்பர்?” என்று ஆங்கிலத்தில் ஸ்டைலாகக் கேட்டார் குமார்.

ஓங்கி மண்டையில ஒண்ணு வச்சேன்னா..என்று கேட்பதுபோல் பார்த்த கடைக்காரர், “அஞ்சு டிஜிட்ல குப்தர் காலத்து நம்பர் எழுதி வச்சிருக்கீங்க சார்…அதெல்லாம் மாறி எத்தனையோ காலமாயிருச்சு…நம்ம ஊர்ல லேண்ட்லைன் வச்சிருக்கற ஆளு விரல் விட்டு எண்ணிறலாம்” என்றார். 

“அப்போ இன்னிக்கு ராத்திரி எனக்கு திரும்பவும் தூக்கம் வராது…” என்று அழுவது போல் முகத்தை வைத்துக் கொண்டு சொன்னார் குமார்.

“இதுக்கும் தூக்கத்திற்கும் என்ன சார் சம்பந்தம்?” என்று கடைக்காரர் கேட்க,”தூங்கினா, கனவுல ராமநாதன் இன்னிக்கும் வந்து திட்ட ஆரம்பிச்சான்னா எங்கதி என்னாகும்?” என்று அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டு கேட்டார்.

கடைக்காரர் குமாரின் கண்ணாடியை ரிப்பேர் செய்திருக்க வேண்டாமோ என்று இப்போது யோசிக்கலானார்.

“சார்…என் கஸ்டமர் ஒருத்தர் ராமநாதன்னு இருக்கார்…அவரா உங்க நண்பருன்னு பார்க்கறேன்” என்று அலைபேசியை எடுத்து டயல் செய்து பேச ஆரம்பிக்க, அவர் முகத்தில் உற்சாகமும் மகிழ்ச்சியும் பரவ ஆரம்பித்தது. 

“குமார் சார்…சரியாப் போச்சு…உங்க பக்கத்துத் தெரு தான் ராமநாதன் இருக்கறது…கேட்டுட்டேன்…உங்க நண்பர் தான் அவரு…சரியான முகவரி எழுதித் தரேன்..கண்ணாடி போட்டுக்கிட்டு பஸ் ஏறி ஒழுங்காப் போய்ச் சேருங்க” என்றார். 

குமாருக்கு அப்பாடா என்று இருந்தது.  

பேருந்து பிடித்து அவர் வீட்டருகே நினைவாக இறங்கி, ராமநாதன் வீட்டை சரியாகக் கண்டுபிடித்துப் போய் காலிங் பெல் அடித்தார்.

“வாடா…வா…குமார்..இப்போது தான் வர வழி தெரிந்ததா?” என்று வரவேற்றார் ராமநாதன். 

“ஏன் நீ வந்திருக்கலாமில்ல, பக்கத்துல தானே என் வீடு?” என்று கேட்டார் குமார். 

“டேய்…நான் ஊர்லயே இருக்கறது இல்ல…என் பெரிய பெண் கனடாவுல இருக்கா….அங்கே ஆறு மாசம் போய் இருப்போம். அடுத்தவ ஆஸ்திரேலியா…அங்கே ஒரு ஆறு மாசம். பையன் சிங்கப்பூர்…”

“ஓ…அடுத்தது நேரே சிங்கப்பூர் போயிருவீங்களாக்கும்…”

“இல்ல..இல்ல…அவனோட கொஞ்சம் மனஸ்தாபம்…அவன் கூப்பிட்டுக்கிட்டுத் தான் இருக்கான்..நாங்க போறதில்ல…” என்றார் ராமநாதன். 

“சரி, விஷயத்துக்கு வர்றேன்…நமக்குள்ள ஒரு கொடுக்கல் வாங்கல்…ரொம்ப நாளா தள்ளிப் போயிட்டே இருக்கு ” என்று ஆரம்பித்தார் குமார்.

அப்போது ராமநாதன் முகம் ஒரு மாதிரியாக ஆனது.  

“ஏம்ப்பா…பழைய பாக்கிய எல்லாம் இவ்ளோ சீரியஸா நீ மனசுல வச்சிருப்பன்னு எதிர்பார்க்கல …கோவிச்சுக்காதே” என்றார்.

“நீ தான் கோபமா வந்து கேக்கற…நான் இல்ல உங்கிட்ட கோபப்படாதேன்னு கேக்கணும்” என்று குமார் சொல்ல, ராமநாதன் மேலும் குழம்பிப் போனார்.

குமார் மெல்ல ராமநாதனிடம் அவர் தனது கனவில் வந்து கொடுத்த காசு எப்போ தருவேன்னு கேட்டதை மென்று விழுங்கி ஒருவழியாகச் சொல்லி முடிக்கவும், வீடே அதிர்கிற மாதிரி ஒரு சிரிப்பு சிரித்தார் ராமநாதன். 

“ஆக்சுவலி, நீ என்கிட்ட எதுவும் கடன் பட்டிருக்கல …. ” என்று ராமநாதன் ஒரு குண்டு எடுத்துப் போட்டார்.

உடனே, குமார் அந்த உறையை எடுத்து நீட்டினார்.

“:அய்யோ இது கே பி ராமநாதன்…அவர் அடுத்த உலகம் போய் அஞ்சு வருஷம் ஆச்சு…நான் ஜேபி ராமநாதன்” என்றார். 

“அப்போ. அவருக்காக நீ என் கனவில் வந்து குடைச்சல் கொடுத்தியா, இதெல்லாம் நியாயமா?” என்று கேட்டார் குமார். இப்போது அவர் முகம் இரட்டிப்பு அப்பாவியாக மாறிப் போயிருந்தது. 

“இந்தக் கனவு சமாச்சாரம் எல்லாம் என் டிபார்ட்மென்ட் இல்லப்பா…நான் உன் கனவுல ஏன் வரப்போறேன்…நீ என்னிக்காவது நேர்ல வந்து நிக்கப்போறியோன்னு நான் பயந்துட்டு இருக்கேன்” என்றார்.   இது ராமநாதன் போட்ட அடுத்த குண்டு. 

குமார் இல்லாத தலை முடியை எல்லாம் பிய்த்துக் கொண்டார். 

“கொஞ்சம் இரு வர்றேன்..அதுக்குள்ளே காபியைக் குடி” என்று மனைவி கொண்டுவந்த கொடுத்த டபரா தம்ளரை குமாரிடம் கொடுத்துவிட்டு உள்ளே சென்றார்.

அறைக்குள் இருந்து வெளிப்படும்போது அவர் கையில் ஓர் உறை இருந்தது. 

“என் பையன் படிப்புக்காக அவசர கைமாத்தா ஆயிரம் ரூபாய் வாங்கி இருந்தேன்…அவனுக்கே இப்போ கல்யாணம் முடிஞ்சு சிங்கப்பூர்ல இருக்கான். இருந்தாலும், அந்தப் பணத்தை நான் செலவு பண்ணத் தேவை ஏற்படல, ஸ்காலர்ஷிப் கிடைச்சுது, அட்ஜஸ்ட் ஆயிருச்சு…உன் கிட்ட வாங்கின பணத்தை அப்பவே ஒரு கவர்ல போட்டு உன் பேரை எழுதி என்னிக்கு உன்னைப் பார்த்தாலும் கொடுக்கணும்னு வச்சிருந்தேன்…அதுக்கு இன்னிக்கு தான் வாய்த்தது” என்று சொல்லி அந்த உறையை நீட்டினார்.

குமார், மிகுந்த பரவசம் அடைந்தார். ‘பத்து ரூபாய் கையை விட்டுப் போகும்னு வந்தால் ஆயிரம் ரூபாய் நமக்கு வருதா.!’ என்று ஒரு நிமிஷம் சிலிர்த்துக் கொண்டார். எழுந்து நின்று அந்த உறையை வாங்கிக் கொண்டார். மெல்லப் பிரித்து எடுத்தார். ஒரே ஒரு ஒற்றை காகிதம். ஆயிரம் ரூபாய் நோட்டு. அதாவது அரசாங்கம் செல்லாது என்று எட்டு வருஷத்திற்கு முன்பே அறிவித்த ஆயிரம் ரூபாய் நோட்டு. 

மயக்கம் போட்டு சோபாவில் விழுந்தார் குமார். 

விகடன் ஆசிரியரை சிறையில் தள்ளிய ஜோக்

 

நன்றி: விகடகவி  (https://www.vikatakavi.in/magazines/102/3657/)

 

 

1987 ல் ஆனந்த விகடன் அட்டைப்படத்தில் வெளியான ஜோக் ஒன்றைக் காரணம் காட்டி விகடன் ஆசிரியரைச் சிறைவாசம் அனுபவிக்க வைத்த சம்பவம் தமிழகத்தையே கொந்தளிக்கச் செய்துவிட்டது!..

29-3-1987 விகடன் அட்டைப்பட ஜோக் அது.

இரண்டு அரசியல்வாதிகள் பொதுக்கூட்ட மேடையின் முன்வரிசையில் அமர்ந்திருக்கிறார்கள். பார்வையாளர்களான பொது ஜனங்களில் ஒருவர், ‘‘மேடையில் இருக்கிற இரண்டு பேர்ல, யாரு எம்.எல்.ஏ., யாரு மந்திரி?’’ என்று கேட்க, மற்றவர், ‘‘ஜேப்படித் திருடன் மாதிரி இருக்கிறவர் எம்.எல்.ஏ., முகமூடிக் கொள்ளைக்காரன் மாதிரி இருக்கறவர்தான் மந்திரி..!’’

என்று பதில் கூறுவதாக ஜோக் பிரசுரமாகியிருந்தது.

ஜோக்கை படுதலம் சுகுமாரன் என்பவர் எழுதி அனுப்பியிருந்தார்.

தமிழக அமைச்சர்களையும் சட்டமன்ற உறுப்பினர்களையும் கீழ்த்தரமாகச் சித்திரிக்கிறது இந்த வார விகடன் அட்டை!’’ என்று என்.எஸ்.வி. சித்தன் கேள்வி எழுப்ப, சபாநாயகர் பி.எச்.பாண்டியன் ஆனந்த விகடனுக்கு விளக்கம் தரக்கூட ஒரு சந்தர்ப்பம் அளிக்காமல், விகடனைக் குற்றவாளி என்று தீர்மானித்து தீர்ப்பு அளித்து விட்டார். அதாவது, ‘‘இப்படிப்பட்ட செய்கை சட்டமன்ற உரிமையை மீறுகிறது. வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதற்காக அடுத்த வார ஆனந்த விகடனின் முதல் பக்கத்திலேயே வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் உரிமைக் கமிட்டி விசாரணை இல்லாமலேயே, இந்தச் சபை தண்டனையைத் தீர்மானிக்கும்’’ என்று கூறினார் சபாநாயகர்.

அதற்கு 5-4-87 இதழ் தலையங்கம் மூலம் ஆசிரியர் பதில் சொன்னார். ‘‘… உரிமை மீறல் பிரச்னையில் மக்கள் சபைதான் தீர்ப்பளிக்க வேண்டும்! அதாவது, அவை முன்னவர் குற்றம் சாட்டி, அது சபை அங்கத்தினர்களால் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு, அதன்மீது சபாநாயகர் தீர்ப்பு அளிக்க வேண்டும்! சபாநாயகர் தன்னிச்சையாக தீர்ப்பு வழங்கக் கூடாது…

அது ஒரு சாதாரண, குற்றமற்ற ஜோக்! எந்த ஒருவரையும் மனத்தில் கொண்டோ, புண்படுத்தும் எண்ணத்தைக் கொண்டோ வரையப்பட்ட ஜோக் அல்ல. அதைத் தமாஷாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த ஜோக்கில் இடம் பெற்ற மந்திரியும் எம்.எல்.ஏ.வும் தமிழ்நாட்டை மட்டுமல்ல – எந்த ஒரு மாநிலத்தைச் சேர்ந்தவர்களாகவும் குறிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ‘வக்கீல் ஜோக்… டாக்டர் ஜோக்… நடிகை ஜோக்’ – என்பதைப் போல இது அரசியல்வாதி ஜோக்! உலகிலுள்ள எந்த நாட்டுக்கும் பொருந்தக்கூடிய, இந்த நகைச்சுவைத் துணுக்கு, ஜனநாயகத்தை பயன்படுத்தி பதவிக்கு வந்து மக்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைக்கும் அரசியல்வாதியைப் பற்றியது.’’

விகடன் அட்டைப்பட ஜோக் தொடர்பாக, தமிழக சட்டசபை 4-4-87 மதியம் 12 மணிக்கு விகடன் ஆசிரியருக்கு மூன்று மாத கடுங்காவல் தண்டனை அறிவித்தது. அன்று மாலை 5-30 மணிக்கு ஆசிரியர் எஸ். பாலசுப்ரமணியன் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

திங்கட்கிழமையன்று சட்டசபை கூடியவுடன், ‘விகடன் ஆசிரியருக்குத் தண்டனை வழங்கிய தீர்மானத்தை மறு பரிசீலனை செய்து சபை தந்த முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும்’ என்று சபாநாயகர் மூலம் முதல்வர் எம்.ஜி.ஆர். கேட்டுக் கொண்டார். இதையடுத்து விகடன் ஆசிரியரை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிடுவதாக சபாநாயகர் அறிவித்தார். திங்கட்கிழமை பிற்பகல் 12-45 மணிக்கு ஆசிரியர் விடுதலை ஆனார்.

திங்களன்று சட்டசபை நிகழ்ச்சிகளை பத்திரிகை நிருபர்கள் புறக்கணித்தார்கள். ஆசிரியரின் மூன்று மாதக் கடுங்காவல் தண்டனை குறித்துப் பத்திரிகைகள் கொதித்தெழுந்து கண்டனக் குரல் கொடுத்தன. ‘உலகில் வேறு எங்கும் இப்படி நடந்ததேயில்லை!’ என்று இங்கிலாந்து பி.பி.சி. அறிவித்தது.

மூன்று மாதக் கடுங்காவல் விதிக்கப்பட்டு இரண்டே நாளில் விடுவிக்கப்பட்டாலும் ‘‘என்னைச் சிறையில் தள்ளிய விதம் முறையற்றது. எனவே, அரசு எனக்கு ஒரு அடையாள நஷ்ட ஈடு அளிக்க வேண்டும்!’’என்று கோரி விகடன் ஆசிரியர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஏழு ஆண்டுகள் கழித்து இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. “பிரச்னையை உரிமைக் குழுவுக்கு அனுப்பாமல், விளக்கம் அளிக்க ஆசிரியருக்கு வாய்ப்பும் தராமல், சபாநாயகர் தண்டனையை அறிவித்தது சட்டவிரோதமானது. தனிமனித அடிப்படை உரிமையைப் பாதித்துள்ள இந்தப் பிரச்னையில் இயற்கை நியதி, கொள்கைகளும், சட்டங்களும், கடுமையாக மீறப்பட்டுள்ளன. சபையின் முழு நடவடிக்கையுமே எதேச்சாதிகாரத்தின் வெளிப்பாடுகளாகவும் ஒடுக்குமுறைகளாகவுமே உள்ளன!’’ – இப்படித் தெளிவாகத் தங்கள் தீர்ப்பில் கருத்து கூறிய உயர்நீதிமன்ற நீதிபதிகள், விகடன் ஆசிரியருக்கு அடையாள நஷ்ட ஈடாக ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட்டனர்.

இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுகள் பிரேம் செய்யப்பட்டு ஜூ.வி. நிறுவனத் தலைவர் எஸ். பாலசுப்ரமணியன் அவர்களின் அலுவலக அறையில் பத்திரிகை அடக்குமுறைக்கு எதிரான வெற்றியைப் பறைசாற்றியபடி இன்றும் காட்சியளிக்கின்றன.

 

 

கார்ட்டூன் – மதன் ஜோக்ஸ்

மதன் ஜோக்ஸ் – ரெட்டை வால் ரங்குடு, முன் ஜாக்கிரதை முத்தண்ணா, சிரிப்புத் திருடன் சிங்காரவேலு | Snap Judgment

மதன் ஜோக்ஸ் - ஏழாம் சுவை😆 - Quora

மதன் ஜோக்ஸ் – சிலிகான் ஷெல்ஃப்

ரெட்டை வால் ரெங்குடு: மதன்: ஆனந்த விகடன் | Snap Judgment

 

 

madhan_jokes_kaccheri

பாஸ்டன் பாலாவின் தளத்தில் பார்த்த பழைய பதிவுகளிலிருந்து (பதிவு 1பதிவு 2). வசதிக்காக இங்கே ஜோக்குகளை கட்-பேஸ்ட் செய்திருக்கிறேன்.

madhan_jokes_rettai_vaal_rengudu_1

madhan_jokes_rettai_vaal_rengudu_2

madhan_jokes_rettai_vaal_rengudu_3

madhan_jokes_rettai_vaal_rengudu_4

madhan_jokes_rettai_vaal_rengudu_5

madhan_jokes_rettai_vaal_rengudu_6

madhan_jokes_rettai_vaal_rengudu_7

madhan_jokes_rettai_vaal_rengudu_8

madhan_jokes_siripputh_thirudan_singaravelu

madhan_jokes_munjakkirathai_mutthana

madhan_jokes_politics_1

madhan_jokes_politics_2

madhan_jokes_politics_3

madhan_jokes_politics_4

madhan_jokes_politics_5

madhan_jokes_politics_6

madhan_jokes_kaccheri

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

திருக்குறளில் நகைச்சுவை – சொ.வினைதீர்த்தான்

திருக்குறளில் நகைச்சுவை.

திருக்குறளில் நகைச்சுவை - YouTube

1. முட்டாள்களோடு நட்புக்கொள்ளுதல் மிகவும் இனிமையானதாம். ஏனென்றால் அந்த முட்டாள்கள்  நம்மை விட்டுப்  பிரிந்து சென்றால் நமக்கு வருத்தம் ஏற்படாததல்லவா?

பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்

பீழை தருவதொன் றில். (குறள்: 839)

2. கயவரும் தேவரும் ஒத்தவராம். தேவர்களைப்போல கயவரும் மனம் போன போக்கில் தாம் விரும்பினதை செய்வதால்.

தேவர் அனையர் கயவர் அவருந்தாம்

மேவன செய்தொழுக லான். (குறள்: 1073)

3. அறிஞரை விட கயவர் திருவுடையவராம். அறிஞருக்கு கவலை இருக்க வாய்ப்பு உண்டு. கயவருக்குத்தான் நெஞ்சத்தில் கவலையில்லையே!

நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்

நெஞ்சத்து அவலம் இலர்.  (குறள் 1072)

4. ஒருத்தி சொன்னாளாம் நான் கண்ணுக்கு மை தீட்டமாட்டேனென்று; கண்ணிலே இருக்கின்ற காதலனுக்கு உறுத்தி துன்பம் தந்துவிடுமாம்!

கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்

எழுதேம் கரப்பாக்கு அறிந்து. (குறள்: 1127)

5. மற்றொருத்தி கூறினாளாம் சூடா எதையும் குடிக்க மாட்டேன்னு; நெஞ்சத்திலே இருக்கிற காதலரை அது சுட்டுடுமாம்.

நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்

அஞ்சுதும் வேபாக்கு அறிந்து. (குறள்: 1128)

6. பூவை தலையிலே வச்சாளாம் ஒருத்தி. அதன் கனம் தாங்க முடியாம இடுப்பு ஒடிஞ்சு செத்துட்டாளாம். பூவைக் கட்டிய பாவி பூவின் காம்பை எடுக்காம தொடுட்டுட்டாளாம். 

 அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு

 நல்ல படாஅ பறை.  (குறள்: 1115)

7. நட்சத்திரங்கள்  எல்லாம் தலை கால் புரியாமல் அந்தப்பக்கமும் இந்தப்பக்கமும் ஒரு நிலையில் இல்லாமல் கலங்கினவாம். தலைவியின் முகத்திற்கும் சந்திரனுக்கும் வித்தியாசம் புரியாமல் தான்!

மதியும் மடந்தை முகனும் அறியாப்

பதியிற் கலங்கிய மீன்.  (குறள்: 1116)

8. தலைவியை பார்த்துவிட்டு குவளை பூ படக்குன்னு தலையை தொங்கப்போட்டுச்சாம்; அவளுடைய கண்ணுக்கு இணையாக மாட்டோம் என்று வெக்கத்தினால் !.

காணிற் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்

மாணிழை கண்ணொவ்வேம் என்று.  (குறள்: 1114)

9. ஒருத்தன் தன் கண்ணின் பாவையை போகச்சொன்னானாம்; அவன் காதலியை அமரவைக்க இடம் வேணும்ல!

கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்

திருநுதற்கு இல்லை இடம்.  (குறள்: 1123)

10. உன்னை நினைச்சேன் என்றானாம்; மறந்தியான்னு அழுதாளாம்.

உள்ளினேன் என்றேன்மற்று என்மறந்தீர் என்றென்னைப்

புல்லாள் புலத்தக் கனள்.  (குறள்: 1316)

11. இந்தப்பிறவியில் பிரியமாட்டேன் என்றானாம். அடுத்து பிறப்பில் பிரிவு நேருமோன்னு கண் கலங்கினாளாம்.

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்

கண்ணிறை நீர்கொண் டனள்.  (குறள்: 1315) . 

12. பக்கத்தில் இருந்த காதலன் தும்மினான். அவ்வளவுதான். அவள் ஆழ ஆரம்பித்துவிட்டாளாம்.

நான்தான் பக்கத்தில் இருக்கேனே !  எந்தச்  செருக்கி நினைச்சு நீ தும்முறே ? என்று   

வழுத்தினாள் தும்மினேனாக அழித்தழுதாள்

யாருள்ளித் தும்மினீர் என்று.  (குறள்: 1317)       

13. கிளைகளில் மலர்ந்த மலர்களைச் சூடினாலும், நீர் இந்த அழகை யாரோ ஒருத்திக்கு காட்டுவதற்காகச் சூடினீர் என்று சினம் கொள்வாள். 

கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று. ( 1313)

14. நான் அவரோடு ஊடிப் பேசாமல் இருந்தேன்; நீடு வாழ்க, என்று சொல்லி அவரோடு பேசுவேன். என்று எண்ணி, வேண்டும் என்றே தும்மினார்! நானா பேசுவேன்? (ஆனாலும் வாழ்த்தினாள்) 

ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து. ( 1312)

15.   தும்மினா கோவிச்சுக்கிறாளேன்னு தும்மலை அடக்கினான் நம்ம ஆளு. அதுக்கும் ரகளை !

தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று. ( 1318)

16. காதலர் எவரைக் காட்டிலும் நாம் மிகுந்த காதல் உடையவர்கள் என்றேன்; அதற்கு அவள் நான் பலரையும் காதலிப்பதாகவும், அவர்களுள் இவள்மீது அதிகக் காதல் உடையவன் என்று சொன்னதாகவும் எண்ணி, எவளைக் காட்டிலும் எவளைக் காட்டிலும் என் மீது காதல் உடையீர் என்று ஊடினாள். 

யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று. ( 1314)

17.  வருவது போலிருந்து வராமல் நின்று விடுகிறதே தும்மல்; அதுபோலவே என் காதலரும் என்னை நினைப்பது போலிருந்து, நினைக்காது விடுகின்றாரோ? – அப்படி வருத்தப்படரா ஒருத்தி 

நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும். ( 1203)

18. கல்லாதவரும் மிகவும் நல்லவர்.  எதுவரை? கற்றறிந்தர்  முன்னிலையில் பேசாது அமைதியாக இருக்கும்வரையாம்.

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்

சொல்லா திருக்கப் பெறின். (குறள்: 403)

 

ஜோக்ஸ் -1

Image result for ஜோக்ஸ் படங்கள்
உலகத்தையே ஒரு கலக்கு கலக்கணும்னு ஆசை
ஆனா
அந்த கரண்டிதான் எங்க இருக்குன்னு   தெரியல்ல

 

 

”டேய்..ஓடாதே..
நில்ரா.. எதுக்குடா  இவளை தூக்கிட்டு ஓடறே ?”

”நீங்கதானே சார் சொன்னீங்க.

விளையாட்டு விழா ஆரம்பிக்கறதுக்கு முன்னால , ஜோதியைத் தூக்கிட்டு ஓடணும்னு ” 🏃🏻

 

“(என்ன இவ! இன்னக்கி இட்லில இவ்ளோ ஓட்ட போட்டு வச்சுருக்கா)”

“என்னங்க இடியாப்பம் எப்டி இருக்கு”

“(ஆத்தி இடியாப்பமா இது) சூப்பர் செல்லம்”

Image result for ஜோக்ஸ் படங்கள்

சார்! நீங்க எந்தக் கடவுளைக் கும்புடுவீங்க …..?

கல்யாணத்துக்கு முன்னாடியா, பின்னாடியா…..?

கல்யாணத்துக்கு முன்னாடிதான் சொல்லுங்களேன்…..

கல்யாணத்துக்கு முன்னாடி, எனக்கு முருகனைத்தான்
ரொம்பப் பிடிக்கும் …..

அப்போ பின்னாடி…..?

அட, அதை ஏன் கேக்குறீங்க, கல்யாணத்துக்கு அப்புறம்
நான் வேண்டாத தெய்வமே  இல்லை…..!!!

Image result for ஜோக்ஸ் படங்கள்

 

சத்தியவான் சாவித்திரி …..
தன் கணவனை…..
எமதர்ம ராஜாவிடமிருந்து
தன் தந்திர வரங்களால்
கடுமையாகப் போராடி மீட்டாள்…..

கதையின் கருத்து :–
ஒரு புருஷன…
பொண்டாட்டிகிட்ட இருந்து …..
எமதர்மனால கூட
காப்பாத்த முடியாது…..!!!

 

மனைவி:
ஏங்க! உங்களைக்
கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு
என் புத்தியை
செருப்பாலத்தான்
அடிச்சுக்கோணும்…..!

கணவன்:
செருப்பு இந்தா இருக்கு…..!
புத்திக்கு எங்கே போவ!!??

Image result for கணவன் மனைவி ஜோக்ஸ்

 

கணவன்:
“என்ன சமைச்சிருக்கே …?
சாணி வரட்டி மாதிரி இருக்கு…
நல்லாவேயில்லை”….

மனைவி:
“கடவுளே! ….. இந்த மனுஷன்
இன்னும் என்னவெல்லாம் சாப்பிட்டுப் பார்த்திருக்காரோ…..? தெரியலையே…

ஏ…ஏ… ஏ…..” !

மனைவி என்பவள் திருக்குறள் போன்றவள்…..

அடேங்ங்ங்ங்ங்ங்ங்கப்பா! எவ்வளவு அதிகாரங்கள்.

Related image

 

நிம்மதியாக இருக்கும் வயதில் மனைவியைத் தேடுவதும்,

மனைவி வந்தபின் நிம்மதியைத் தேடுவதுமே.. ஆண்களின் வாழ்க்கை தேடல்..

 

 

 

Image result for கணவன் மனைவி ஜோக்ஸ்மனைவி : என்னங்க பக்கத்து வீட்டில பெரிய சண்டை நடக்குது. போய் ஒரு தடவை என்னன்னு பார்த்துட்டு வாங்களேன்.

கணவன் : ஏற்கனவே ஒரு தடவை போனதுக்குத்தான் சண்டையே நடக்குது

 

Related image

பர்ஸ்ல உள்ள காசு எல்லாம் புடுங்கிட்டு

ஒரு புது காலி பர்ஸ் கொடுப்பான் பாரு…

அவன் தான் நகை கடைக்காரன்

 

ஜோக்ஸ் -2

Husband and Wife Kadi Jokes In Tamil | கடி ஜோக்ஸ் | தமிழ் ஜோக்ஸ்பாவி மனுசா.!இவதான் உன் சின்ன வீடு செட்டப்பா? கணவன், மனைவி ஜோக்ஸ் - husband and wife tamil jokes - Samayam Tamil

Smile Please weekend jokes

 

 

 

 

 

 

  ஒரு பட்டுப்புடவை செலக்ட் பண்ண பத்துகடை ஏறி இறங்கறீயே,ஞாயமா?

ஒரு பெண்டாட்டியை செலக்ட் பண்ண நீங்க மட்டும் முப்பது வீடு ஏறி இறங்கினேன்னு பீத்திக்கலை!

வெ. சீதாராமன்.

😍  என்ன சார்! நீங்க கூட பொம்பளை மாதிரி சீரியல் பார்த்து அழுவுறீங்க!
நல்லாப்பாருங்க! இது சீரியல் இல்லை! என் கல்யாண சி.டி ஓடுது!

எஸ். எஸ். பூங்கதிர்.

😍  உங்க கடை இட்லி மல்லிப் பூ மாதிரி இருக்கு!
அவ்ளோ மெத்துன்னு இருக்கா?
சைஸை சொன்னேன்!.. கொஞ்சம் பெரிசா போட்டுத் தொலைங்க!

கே. அனந்தன்.

😍  உங்க நாய் ஏன் என்னை அமைதியா பார்க்குது?
குரைக்கிற நாய் கடிக்காதுனு அது காது பட சொல்லிட்டேன்!
அம்பை தேவா.

😍  கடைக்காரன் நல்லா ஏமாத்திட்டான்! தரைச்சக்கரம் சுத்தமாட்டேங்குது!

முதல்லே கண்ணாடியை மாட்டுங்க! அது கொசுவர்த்தி சுருளு!

தஞ்சை தாமு.

😍  தீபாவளிக்கு நீங்களே பலகாரம் செய்யப்போறதா உங்க ஹஸ்பெண்ட் கிட்ட சொன்னீங்களா?
ஆமா டாக்டர் அதனாலே என்ன?
அதிர்ச்சியான செய்தி எதுவும் அவர்கிட்டே சொல்லக்கூடாதுன்னு சொல்லியிருக்கேனா இல்லையா?
எஸ்.எஸ் பூங்கதிர்.

😍  புலவரே! இவ்வளவு புகழ்ச்சிக்கு நான் தகுதியானவன் இல்லை!

கொடுக்க காசு இல்லைங்கறதை நாசூக்கா சொல்றீங்களா மன்னா!

வசந்தி வள்ளுவன்.

😍 இது ரயில்வே வேலைக்கான தேர்வுதானே சார்?
சரிதாம்ப்பா.. அதுக்காக இப்பவே ஒரு மணி நேரம் தாமதமா வர்ற உன்னை பரிட்சை எழுத அனுமதிக்க முடியாது!
வசந்தி வள்ளுவன்.

😍 என்ன டாக்டர் ஆபரேஷனை பண்ணிட்டு இன்னும் தையல் போடாம போறீங்க?

அடப்பாவி! இன்னும் நீ உயிரோடத்தான் இருக்கியா?
அறந்தாங்கி. ஷக்தி ஷரவணன்.

😍 என் தலைவர் டென்சனா இருக்காரு ?

பின்னே ! பட்டி  மன்றத்தில  தேர்தலுக்குப்  பிறகு தலைவர் புகழ் பெறுவாரா  புழல் பெறுவாரா அப்பிடின்னு தலைப்பு வைச்சா  அவர் என்ன பண்ணுவார்?

பர்வீன் ஈரோடு

😍 ஆஸ்பத்திரி வாசல்ல குடை ராட்டினம் நிறுத்தி வைச்சிருக்கீங்களே! எதுக்கு டாக்டர்?

திடீர்னு மயக்க மருந்து தீர்ந்துட்டா பேஷண்டை அதுல உட்கார வைச்சு சுத்திவிடத்தான்!

 ஜெயா பிரியன்

😍 மச்சான் ! ரெண்டாவது பக்கத்தில ஒரு பத்து மார்க் கேள்வியை விட்டுட்டேன்

என்னது கேள்வித்தாள்ல இரண்டாவது பக்கம் இருந்துதா?

😍 இந்தக் கூட்டணியில் இருந்த நமக்கு ஓட்டே கிடைக்காது தலைவரே! பேசாம அந்தக் கூட்டணிக்கு தாவி வாங்க!

அட போய்யா ! நாம தாவினோம்னா அமலாக்கத் துறை நம்ம வீட்டு காம்பவுன்ட தாண்டி வரும்.

😍 பிரண்டை துவையல் செஞ்சு சாப்பிடா நல்லதுன்னு சொல்றாங்கபாய் பிரண்டா கேர்ல் பிரண்டான்னு சொல்லலை

😍 நாம இந்த அஞ்சு வருஷமா என்ன்ன சாதிச்சோம்னு பட்டியல் போட்டு பிரஸ்சுக்கு அனுப்பினோமே ! சரியா போட்டாங்களா?

மிகச் சிறந்த தமாஷ்னு பத்து ரூபாய் மணி ஆர்டர் அனுப்பிட்டாங்க தலைவரே !

😍 குருஜி ! என் வியாதி குணமாக கந்த சஷ்டிக் கவசம் படிக்கச் சொன்னிங்க இல்லையா?

அதைப் படிச்சப்பறம் அதில சொல்லியிருக்கிற அத்தனை வியாதியும் எனக்கு இருப்பதுபோல தோணுது குருஜி!

😍மச்சான் ! ரெண்டாவது பக்கத்தில ஒரு பத்து மார்க் கேள்வியை விட்டுட்டேன்

என்னது கேள்வித்தாள்ல இரண்டாவது பக்கம் இருந்துதா?

😍 இந்தக் கூட்டணியில் இருந்த நமக்கு ஓட்டே கிடைக்காது தலைவரே! பேசாம அந்தக் கூட்டணிக்கு தாவி வாங்க!

அட போய்யா ! நாம தாவினோம்னா அமலாக்கத் துறை நம்ம வீட்டு காம்பவுன்ட தாண்டி வரும்.

😍 பிரண்டை துவையல் செஞ்சு சாப்பிடா நல்லதுன்னு சொல்றாங்க! பாய் பிரண்டா கேர்ல் பிரண்டான்னு சொல்லலை

😍 நாம இந்த அஞ்சு வருஷமா என்ன்ன சாதிச்சோம்னு பட்டியல் போட்டு பிரஸ்சுக்கு அனுப்பினோமே ! சரியா போட்டாங்களா?

மிகச் சிறந்த தமாஷ்னு பத்து ரூபாய் மணி ஆர்டர் அனுப்பிட்டாங்க தலைவரே !

😍 குருஜி ! என் வியாதி குணமாக கந்த சஷ்டிக் கவசம் படிக்கச் சொன்னிங்க இல்லையா?  அதைப் படிச்சப்பறம் அதில சொல்லியிருக்கிற அத்தனை வியாதியும் எனக்கு இருப்பதுபோல தோணுது குருஜி!

😍 😍 😍 

1933 ஆம் ஆண்டு பெளதிக நோபல் பெற்ற பிரிடிஷ் விஞ்ஞானி பால் டிராக் (Paul Dirac). அணுவியல் துறையில் க்வாண்டம் கோட்பாடிற்காக மிகவும் அறிவார்ந்த முயற்சியாளர்களில் இவரும் ஒருவர். இவருக்கு மதம், கவிதை யாவுமே வீண் உதவாக்கரை சமாச்சாரம். அதுவும் இவருக்கு

நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி பால் டிராக்க்கு  (Paul Dirac) கவிதை என்றாலே மிகவும் கிண்டல். இவரின் கவிதை பற்றிய கருத்து மிகவும் பிரபலமானது.

“இதுவரை யாருக்குமே புரியாத புதிய விஷயத்தை விளக்கி எல்லோருக்கும் தெளிவாக புரியும்படி செய்வது விஞ்ஞானம். இதுவரை எல்லோருக்குமே புரிந்த விஷயத்தை குழப்பி எவருக்குமே புரியாதபடி செய்வது கவிதை”.😍 😍 😍 😍 😍 😍 😍 

சினிமாவில் நகைச்சுவை

பிரபல நகைச்சுவை நடிகர்கள் | TAMIL COMEDY ACTORS | TAMIL CINEMA COMEDY  ACTORS - YouTube

சந்தானம் ஜோக்ஸ் :

 

இவங்க வீணை வாசிச்சு நீ பார்க்கலையே? அப்படியே சரோஜா தேவி மாதிரியே வாசிப்பாங்க.

டேய். அது சரஸ்வதிடா..

 

இந்தாங்க , ஒண்ணும் பயப்பட வேண்டாம். விமானம் ஆக்சிடெண்ட் ஆகிட்டா பாரசூட் இருக்கு..

சாக போற நேரத்துல தேங்கா எண்ணெய் கொடுத்தா நாங்க என்னா பண்றது, தலைக்கா தேச்சிக்கறது?”

 

இந்த அடர்த்தியான காட்டுக்குள்ள புரோகிராம் பண்ற டிஸ்கவரி சேனல்ஸ் கூட இப்போ எல்லாம் தமிழ்ல தான் பேசறாங்க.. நீங்க ஏண்டா இங்கிலீஷ்ல பேசறீங்க..

 

ஹலோ .. எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்டர் .. அஞ்சு ஈ (5E) பஸ் வருமா..?.

அழுகிப்போன பழம் மாதிரி மூஞ்ச வச்சிருந்தா,அஞ்சி ஈ இல்ல பத்து ஈ ,பதினஞ்சு கொசு, இருபது வண்டு கூட வரும்.

 

ஏன் இந்த காவி டிரஸ்?

காதல்ல தோத்தவன் காவி டிரஸ் போடாம, பின்ன நேவி டிரஸ்ஸா  போடுவான்?

 

உன் பொண்டாட்டிக்குப்பக்கத்துல அர்னால்டே நின்னாலும் அனிரூத் மாதிரி தான் தெரியும்

 

ஆர்த்தி , ஏம்மா , நீ என்ன ஓணத்துக்கு சிங்காரிச்ச  யானை மாதிரி  இருக்கே?

 

கடப்பாக்கல்லு மாதிரி  இருந்துட்டு  கரீனா கபூர் கேட்குதா?

 

புயல் காத்துல எவனாவது பொரி சாப்பிட்டுட்டு இருப்பான்.. அவன் கிட்டே போய் இந்தக்கதை எல்லாம் அவுத்து விடு..

&&&&&&&&&&&&&&&&&&&&&&

என் எஸ் கே

தோஷம்” என்கிற வார்த்தைக்கும், சந்தோஷம்என்கிற வார்த்தைக்கும் என்ன வித்தியாசம்?சொல்லுங்கபார்க்கலாம்!” என்றாள் மனைவி .

ஒரு நிமிஷம் யோசித்தார் என்.எஸ்.கே. “”அடியேஉன்னை நானாகக் கிணற்றிலே பிடிச்சுத் தள்ளினால் அது “தோஷம்“! 

நீயாக விழுந்துவிட்டாலோ எனக்கு “சந்தோஷம்“! சரிதானா?” என்றார். 

 

இன்னும் நிறைய படங்களில்  நகைச்சுவை பஞ்ச் : ( யார் சொன்னது என்று கண்டு பிடியுங்கள்)

 

பத்தவைச்சுட்டியே பரட்டே

இது எப்படி இருக்கு

செல்லம் செல்லம் ..

நன்பே ண்டா

நீங்க எங்கேயோ போயிட்டீங்க

நீங்களும் குக்கூ உங்க கிராமமும் குக்கா

என்ன நல்லவன்னு சொல்லிட்டாங்கடா

மாப்பு வைச்சுடடாண்டா ஆப்பு

என்னை வைச்சு காமெடி கீமெடி பண்ணலையே

அது போன மாசம்

ஆணிய பிடுங்க வேண்டாம்

பெட்ரோமாக்ஸ் லைட் தான் வேணுமா

வரும் ஆனா வராது

வட போச்சே

பில்டிங் ஸ்டராங்க் பேஸ்மெண்ட் வீக்

என்ன சின்னப்புள்ளத்தனமா இருக்குது

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

என்ன கொடுமை சரவணன்

ஒரு ரூபாய்க்கு எத்தனை வாழப்பழம்

மாப்பிள்ளை அவருதான் அவர் போட்டிருக்கிற சட்டை எண்ணுது

நாசமா நீ போனியா

“அடப்பாவி.. 750 ஸ்பேர் பார்ட்ஸ்ல ஓடாத வண்டி, ஒரு எலும்மிச்சம் பழத்தால் ஓட போகுதா”

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்

விவேகானந்தர் குறுக்குத் தெரு துபாய்

தெய்வமே நீங்க எங்கேயோ போயிட்டீங்க

மாப்பிள்ளை போண்டா திணனுக்கிட்டு இருக்காரு

சினிமா எடுக்கறேன்னு சொல்லி என் பொன்னை ஒரு போட்டாவாவது எடுத்தியா ?

ஒரு பொண்ணு அவளுக்கு ஒரே ஒரு கண்ணு;

நான் ஒரு முட்டாளுங்க

 

இலக்கியத்தில் நகைச்சுவை

Ilakkiyathil Nagaichuvai - Album by Thirumuruga Kirubananda Variyar Swamigal - Apple Music

ஒருவர் மத்தளம் வாசித்ததை ஒரு புலவர் பாடிக் கிண்டலடிக்கிறார். திடீரென்று தெருவில் பெண்கள் பட்டாளமே காலிக் கூடைகள் தூக்கிக் கொண்டு ஓடி வருவதைப் பார்த்தாராம். என்ன என்று கேட்டதில் யாரோ சாணி தட்டுகிற ஓசை கேட்கிறது; வரட்டி வாங்கி வரலாம் என்று பெண்கள் எல்லாம் கூடையுடன் படையெடுத்து வந்தார்களாம்! அவர்களைத் தொடர்ந்து போய் பார்த்தால் கடைசியில் ஒருவர் மிருதங்கம் வாசித்துக் கொண்டிருந்தாராம்!

என்ன கிண்டல் பாருங்கள்! பாடல் இதோ:

எங்கமுத்து சாமிமன்னா இங்கே ஒருவன்ம்ரு
தங்கமதை ஓயாமல் தட்டினான் – அங்கங்கே
கூடிநின்ற பெண்கள்எருக் கொள்வதற்குக் கூடைஎடுத்து
ஓடிவந்தார் நீபார்த்தா யோ!

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

இது நந்திக் கலம்பகத்தில் வருகிறது. தலைவன் ஒருவன் தலைவியை விட்டுப் பிரிந்து பரத்தை வீட்டில் தங்கி விடுகிறான். தலைவியின் நினைவு வந்து மனம் திருந்துகிறான். தலைவிக்குத் தூது விட ஒரு பாணனை அனுப்புகிறான். அவன் தலைவியின் வீட்டிற்கு முன் நின்று இரவெல்லாம் பாடி தூதுச் செய்தியை இசையால் தெரிவித்தான்.

காலையில் எழுந்து வந்து பார்த்த தலைவி சொன்னாளாம்:

“ஓ! பாணனே ! நீ யார் அனுப்பி வந்து இரவெல்லாம் என் வீட்டருகில் வந்து பாடினாய் என்று நானறிவேன். ஆனால் யார் பாடுவது என்று எம் வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரியாது. சத்தம் கேட்டு எழுந்த என்னை, “படு! காட்டில் ஏதோ ஓர் பேய் கூக்குரல் இட்டு அழுகிறது என்றாள் அன்னை! என் தோழி இல்லையம்மா! ஏதோ நரி ஊளை இடுகிறது என்று என்னை சமாதானப் படுத்தினாள். இல்லை, இல்லை! இது ஏதோ ஒரு நாய் தான்! என்றாள் இன்னொரு தோழி. நான் தான் சரியாகக் கண்டுபிடித்தேன், அவையெல்லாம் அல்ல, அது நீ என்று! காலையில் பார்த்தால் நீ நிற்கிறாய் என்றாளாம் தலைவி!

எப்படிஇருக்கிறது அவள் கிண்டல்?

ஈட்டு புகழ்நந்தி பாண!நீ எங்கையர்தம்
வீட்டிருந்து பாட விடியளவும் – காட்டிலழும்
பேயென்றாள் அன்னை பிறர்நரியென் றார்தோழி
நாயென்றாள் நீஎன்றேன் நான்

&&&&&&&&&&&&&&&&&&&&&&&

நகைச்சுவையில் காளமேகம் முதல் இடம் வகிக்கிறார். சிலேடை, கிண்டல் எல்லாம் அவருக்கு கைவந்த கலை.
ஒரு முறை அவர் ஒரு ஆயர் பெண்ணிடம் மோர் கேட்டார். அந்த மோரில், மோரை விட தண்ணீர் அதிகம் இருந்தது. அந்தக் காலத்திலேயே கலப்படம் அவ்வளவு இருந்திருக்கிறது !
அந்த மோரை பார்த்து பாடுகிறார்…
“வானத்தில் இருக்கும் போது மேகம் என்று பெயர் பெற்றாய்,
மண்ணில் வந்த பின் நீர் என்று பேர் பெற்றாய்,
ஆய்ச்சியர் கையில் வந்த பின், மோர் என்று பெயர் பெற்றாய்
இப்படி மூன்று பெயர் உனக்கு”
என்று தண்ணியான அந்த மோரை பற்றிப் பாடுகிறார்.
கார் என்று பேர் பெற்றாய் ககனத்தே உறும்போது
நீர் என்று பேர் பெற்றாய்! நீணிலத்தில் வந்ததன் பின்
வார் என்றும் மென் கொங்கை ஆய்ச்சியர்கை வந்ததன் பின்
மோர் என்று பேர் பெற்றாய்! முப்பேரும் பெற்றாயே!

ஒளவையார் பாடலில் பழிகரப்பு அங்கதம்: கம்பருக்கும் ஔவைக்கும் இடையே போட்டி மனப்பான்மையும், தங்கள் புலமையின் மீது பெருமிதமும் இருந்தது.  ஒளவையாரை இழிவுபடுத்த எண்ணிய கம்பர் சான்றோர் பலர் குழுமியிருந்த அவையில் தன் விளையாட்டைத் துவக்கினார். ஒரு தண்டின் மேல் நான்கு இலைகளை உடையதாக விளங்கும் ஆரைக்கீரை குறித்துப் பாடுவது போல பாடலைத்  தொடங்கி, ஒளவையாரை நோக்கி இருபொருள் பட, சிலேடையாக, ‘ஒரு காலடீ நாலிலைப் பந்தலடீ’ என்ற தொடரை முன்வைத்து எஞ்சிய பாடலை பாடி முடிக்குமாறு ஒளவையாரைக் கேட்டுக் கொண்டார். கம்பரின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு பதிலுக்குத் தானும் அதே பாணியில் பாடலில் பதில் அளித்தார் ஒளவையார்.

எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே – முட்டமேற்
கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னா யடா? (பாடல் – 18)

“அவலட்சணமே! எமனின் வாகனமான எருமையே! அளவு கடந்த மூதேவியின் வாகனமான கழுதையே! முழுவதும் மேற்கூரை இல்லாது போன வீடாகிய குட்டிச்சுவரே! குலதிலகனான ராமனின் தூதனாகிய அனுமனின் இனமே! அடே! ஆரைக் கீரையைச் சொன்னாயாடா!” என்பது பாடலின் பொருள். மரியாதைக் குறைவான அடி என்பதைக் கவனித்த ஒளவையார் அடா போட்டு ‘யாரையடா சொன்னாய்?’ என்பது போல பதில் தாக்குதல் செய்தார்.  அத்துடன் அவலட்சணமே, எருமையே, கழுதையே, குட்டிச்சுவரே, குரங்கே என்றெல்லாம் கூட குறிப்பாக அறியக் கூடிய வசைகள்  நிறைந்துள்ளது  இப்பாடலில்.

கொலை கொலையா ஜோக்கா !

1,000+ Best Emoji Images & Free HD Stock Photos - Pixabay

தொல்காப்பியம் சூத்திரம் . 253 : 

எள்ளல் இளமை பேதைமை மடனென்று

உள்ளப் பட்ட நகைநான் கென்ப

1. எள்ளலாவது  –    இகழ்தல்  

2. இளமை  – இளம் பருவ இயல்பு 

3, பேதமை  – கேட்டதை அப்படியே நம்பிவிடுதல் 

4. மடன்  –   தப்பாகப் புரிந்துகொள்ளுதல் 

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஏ கே   47 வைத்து சுட்ட ஜோக்குகள் : ( சும்மா சொல்லக் கூடாது ; நிறைய ஜோக்குகள் சிரீக்கா வைக்கின்றன – சிரிப்பு வந்தால் நல்ல ஜோக் – இல்லையென்றால் கடி ஜோக் –   சொன்னவர் யாரோ )  

 

😍😍மியூசியத்திலிருந்து  அக்பரோட அந்தக் கால காலெண்டரைத் திருடினானே அவனுக்கு என்ன கிடைச்சுது?

12 மாசம்

 

😍😍பணத்தால மனிதன் சந்தோஷமாயிருக்க முடியாது என்ற உங்கள் வாதத்தை நம்ப எனக்கு  ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள் !

 

😍😍என்னது பஸ்சில  ஒரு வயசன கிழவிக்கு உன்னோட சீட் கொடுத்ததுக்காகவா உனக்கு தண்டனை கொடுத்தாங்க?

ஆமாம். அப்போ நான் பஸ் டிரைவரா இருந்தேன்.

 

😍😍பல பேருடைய யோசனைகளை திருடினால் அதுக்குப் பேர் என்ன?

ஆராய்ச்சி

 

😍😍புதுசா வேலைக்கு வர்றவாங்க கிட்டே சொல்வேன் “ என்னை உங்களுடைய முதலாளியா பாக்காதீங்க! இனிமே இங்கே வராதேடா வெளியே போடா நாயேன்னு சொல்ற நண்பனா பாருங்க

 

😍😍ஒரு கூட்டத்தில என் முதலாளி ஒரு ஜோக்கோட பேச்சை ஆரம்பிக்கச் சொன்னார். நான்  என் சம்பளத்தைப் பத்தி சொன்னேன். எல்லாரும் சிரிச்சாங்க

 

😍😍சனி ஞாயிறு லீவுக்கப்பறம் அடுத்த வர்ற அஞ்சு நாள்தான் ரொம்ப கஷ்டமான நாளுங்கடா  மச்சி

 

😍😍என்னது 20 பேரை 200 தடவை வணக்கம் சொல்லவைச்சியா? எப்படி?

ஜூம் மீடிங் ஆரம்பிச்சு வணக்கம் சொல்லுங்கண்ணு சொன்னேன்

 

😍😍 மனைவி : இந்தாங்க இந்த பாரசிட்டமோல் மாத்திரையை போட்டுக்கோங்க. மேல் வலிக்கு நல்லது.

கணவன் : எனக்கு மேல்வலியே இல்லியே. இதெல்லாம் வேண்டாம்.

மனைவி : அப்போ இந்த டைஜீன் மாத்திரையாவது போடுங்க.

கணவன் : உனக்கு என்னாச்சு. எனக்கு எந்தவிதமான வயிற்று பிரச்சினையும் இல்லை.

மனைவி : சரி, இந்த ஹார்லிக்ஸ் கலந்த பாலையாவது குடிங்க. உடம்பு தெம்பாக இருக்கும்.

கணவன் : I am all ok. எனக்கு ஒன்னும் வேண்டாம். I am perfectly all right.

மனைவி : ரொம்ப சந்தோஷம். இந்தாங்க விளக்குமாறு. பொங்கலுக்கு வீட்டை சுத்தம் பண்ண ஆள் கிடைக்கல. வேலைய தொடங்குங்க.

 

😍😍என்னது தமிழ்நாட்டில பேக்வேர்ட் யாரும் இல்லையா? எல்லாரும் பார்வார்ட் ஆயிட்டாங்களா?

ஆமாம் . வாட்ஸ் அப்பில  வர்றதை எல்லாரும் பார்வேர்ட் தானே பண்ணறாங்க

 

😍😍 என்னது வாட்சப்பில பார்வேர்ட்  பிளாக்கா?

அட நீ வேற! பார்வேர்ட் பிளாக் கட்சி மக்கள் புதுசா ஒரு வாட்ஸ் அப் குழு ஆரம்பிச்சிருக்காங்களாம்

 

😍😍மனைவி திருக்குறளை விட பெரியவ

எப்படி சொல்ற?

திருக்குறளில 133 அதிகாரம்தான் இருக்காம்.

 

😱😍 மனைவி : என்னங்க பக்கத்து வீட்டில பெரிய சண்டை நடக்குது. போய் ஒரு தடவை என்னன்னு பார்த்துட்டு வாங்களேன்.

 கணவன் : ஏற்கனவே ஒரு தடவை போனதுக்குத்தான் சண்டையே நடக்குது 😍

 

😍😍 ரவி : ரொம்ப நாள் கழிச்சு உன் வீட்டுக்கு வந்திருக்கேன்.
வெறும் டீ மட்டும் தானா மச்சீ? கடிக்க ஏதாவது?

கொஞ்சம் இரு நாயை அவித்துவிடச் சொல்றேன்.

 

👻 ஜோதிடர் : உங்கள் வலது கையில் உள்ள இந்த மச்சத்தால் உங்களுக்கு ஒரு நல்ல மனைவி அமைவாள்.
.கோபு : யோவ் அது மச்சம் இல்லய்யா ‘சூடுய்யா” – அதை வச்சதே என் மனைவி 😉😉😉

 

😍😍சன்யாசிக்கும் சம்சாரிக்கும் என்ன வித்தியாசம்?

புலித்தோலில் தூங்குபவர் சன்யாசி.

புலியுடனேயே தூங்குபவார் சம்சாரி.🤪😀

 

😍😍 ஒண்ணு  அவனுக்கு கெடச்ச மனைவி “வரமா” இருக்கனும்😍

இல்ல ஊருக்கு போன மனைவி “வராம” இருக்கனும் 😂😂

 

கண😍😍 வன் : எதை பார்த்தாலும் உன் முகம்தான் தெரியுது டார்லிங்,

மனைவி : அப்படியா எங்க இருக்கிங்க..?

கணவன் : “Zoo”ல இருக்கேன்..ma

 

😍😍 மழை, மனைவி – இரண்டிற்கும் என்ன ஒற்றுமை???

ரெண்டுமே இல்லாதப்போ எப்ப வரும்ன்னு ஏங்குவோம்..

வந்தா ஏண்டா வந்ததுதுன்னு புலம்புவோம்.

 

😂😂😂  கணவன்:உன்னைக் கட்டினதுக்குப் பதிலா ஒரு எருமை மாடைக் கட்டியிருக்கலாம்.

மனைவி:ஆனா…அதுக்கு எருமை மாடு சம்மதிக்கணுமே?

 

😍😍டேய் என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்.

இப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு???????

 

😍😍அப்பா: “அடப்பாவி, அஞ்சு சப்ஜெக்ட்லேயுமா ஃபெயில்? இனிமே என்னை அப்பானு கூப்பிடாதடா”

மகன்: “சரிடா மச்சான், ரேங்க் காரடில கையெழுத்து போடு”

 

😍😍“பையனுக்கு என்ன சார் பேர் வெச்சிருக்கீங்க?”

“லோராண்டி ன்னு வச்சிருக்கோம்”

“என்னய்யா பேர் இது. கேள்விப்பட்டதே இல்லையே”

“என்ன இப்படி சொல்லிட்டீங்க. சித்தர் பாடல்கள்ளே இடம் பெற்ற பேர் சார் இது”

“அது என்ன பாடல்?”

“நந்தவனத்தி லோராண்டி”

 

😍😍மாணவன் சார், டீ மாஸ்டர்டீ போடறாரு,

பரோட்டா மாஸ்டர் பரோட்டா போடறாரு,

மேக்ஸ் மாஸ்டர்மேக்ஸ் போடறாரு,

நீங்க ஹெட்மாஸ்டர் தானே

ஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?…

 

😍😍 உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.

நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும்.

 

😍😍”கோர்ட்டுல என்ன டமால்னு சத்தம்?”

“சாட்சி பல்ட்டி அடிச்சிட்டாராம்”

 

😍😍உன் கணவரை எதுக்கு எடக்கு மடக்கா திட்டினே ?

நான் போன் பண்ணினா நாய் குரைக்கிற மாதிரி செல்போன்ல ரிங்டோன் செட் பண்ணி வெச்சிருக்கார் ஆதுதான் .

😍😍செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்? மனிதனுக்கு கால் இல்லன்னா பேலன்ஸ் பண்ண முடியாது.செல்போனில் பேலன்ஸ் இல்லன்னா கால் பண்ண முடியாது.

 

😍😍”நேற்று பெண் பார்க்கப் போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்டா…!”

“பெண் அவ்வளவு அழகா?” “இல்லடா… விஷயம் தெரிஞ்சு என் மனைவியும் அங்கே வந்துட்டா…!”

 

😍😍பாய்: இன்னிக்கு நைட் நாம ஊர விட்டு ஓடிப் பொய் விடலாம்…

கேர்ள்: எனக்கு தனியா வர பயமா இருக்கு….

பாய்: அப்ப உன் தங்கச்சியையும் கூட்டிட்டு வா…

 

😍😍நண்பர் – 1: தொட்டதக்கெல்லாம் என் மனைவி கோவிச்சுகுரா…

நண்பர் – 2: அப்படி நீ என்னத்த தொட்ட?

நண்பர் – 1: அவளோட தங்கச்சியைத்தான்….

 

😍😍கணவர்: இது மாதிரி என்கிட்டே தொடர்ந்து சண்டை போட்டுக்கிட்டே இருந்தால், ஒரு நாள் மிருகமா மாறப் போறேன். ஜாக்கிரதை.

மனைவி: நான் எலியைப் பார்த்தெல்லாம் பயப்பட மாட்டேன்!

 

😍😍பிச்சைக்காரர்: “அம்மா தாயே… பிச்சை போடுங்க,

நான் வாய் பேச முடியாத ஊமை.”

வீட்டுக்காரம்மா: ” பக்கத்து வீட்டுல போய் கேளுப்பா…

எனக்கு காது கேட்காது.”

 

😍😍எல்லா பிகர்’யும் பாக்க நினைப்பது பாய்ஸ் மென்டாலிட்டி..

ஆனா எல்லா பாய்ஸ்’ம் தன்ன மட்டுமே பாக்கனும்னு நினைப்பது கேர்ள்’ஸ் மென்டாலிட்டி..

 

😍😍ஹார்ட் அட்டாக்’னா என்ன?

பஸ் ஸ்டாப்’ல ஒரு சூப்பர் பிகர் உன்னையே லுக் விடும்… உனக்கு படபடப்பா இருக்கும்.. அது உன்ன பார்த்து சிரிக்கும்.. உனக்கு கை கால் லேசா நடுங்கும்… அது உன் பக்கத்துல வரும்… உனக்கு வியர்த்து கொட்டும்… அவ தன்னோட அழகான லிப்ஸ்’ஐ ஓபன் பண்ணி ”இந்த லவ் லெட்டர்’ஐ உங்க நண்பர் (நான்தான்!) கிட்ட கொடுத்துடுங்க”ன்னு சொல்லும்போது உங்க இதயத்துல டொம்முன்னு ஒரு சத்தம் கேக்கும் பாரு…

அது தான் மச்சி ஹார்ட் அட்டாக்…….

 

😍😍 ஃபுட் வோர்ல்டில்,

நபர் : என்னுடைய மனைவியை ரொம்ப நேரமாத் தேடிக்கிட்டுயிருக்கேன். என்கூட கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருக்க முடியுமா?

பெண் : அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?

நபர் : நான் வேறு பெண்கள்கிட்ட பேசினாலே என் மனைவி எங்கயிருந்தாலும் வந்துடுவா.

 

😍😍நான் நல்லவன்னு சொல்லி ஊரை ஏமாத்த நான் ஒன்னும் கெட்டவன் இல்ல…

நான் கெட்டவன்னு உண்மையை ஒத்துக்க நான் ஒன்னும் நல்லவன் இல்ல…

 

😍😍 காதலன்: ஒரே ஒரு முத்தம் கொடு….

காதலி: கல்யாணத்துக்கு அப்புறம்தான் நீங்க என்னத் தொட முடியும்…

காதலன்: சரி… கல்யாணம் முடிந்ததும் மறக்காம எனக்கு சொல்லி அனுப்பு….

 

😍😍ஒண்டே மேட்ச் டெஸ்ட் மேட்ச் என்ன வித்தியாசம்?

முதலிரவு-ஹனிமூன் டூர்.

 

😍😍தூக்க மாத்திரையையும் பேதி மாத்திரையையும் ஒரே சமயத்தில் சாப்பிடாதேன்னு சொன்னா கேட்கணும்

 

😍😍தக்காளி என்பது பழம் இது பொது அறிவு. ஆனா தக்காளியை பிரூட் சாலட்டில சேர்க்கக்கூடாது – இது உண்மையான அறிவு.

 

😍😍நான் சாமிக்கிட்டே கார் வேணும்னு கேட்டேன் அவர் தரவே இல்லை!

  சாமிக்கிட்ட இப்படிக் கேட்டா கிடைக்காது. 

  எப்படிக்கேட்டா கிடைக்கும் ?

  காரைத் திருடிட்டு சாமி கிட்டே மன்னிப்பு கேட்டா கிடைக்கும்

 

😍😍எங்க அப்பா என்னிக்கு சொன்னது சரின்னு இன்னிக்கு எனக்குப் படுதுன்னு

  சொல்லும் போது ‘நீ சொல்றது தப்பு’ ன்னு என் பையன் என் கிட்டே சொல்றது காதில கேட்குது. 

 

😍😍நான் கடவுள் கிட்டே பேசினா அதை வழிபாடு என்று சொல்கிறார்கள். அவர் என்கிட்டே பேசினாரனு சொன்னா ‘போடா லூசு’ என்கிறார்களே ஏன் ?

 

😍😍 தப்பு நடக்கும் போது ஒருத்தன் சிரிச்சான்னா யார் மேல அந்தப் பழியைப் போடலாம்னு கண்டு பிடிச்ச்சுட்டான்நு அர்த்தம்.

😍😍இந்த மிக்சர் பாக்கெட் எவ்வளவு?

  நூறு ரூபாய்

  லூசுன்னா எவ்வளவு?

  எல்லாத்துக்கும் ஒரே விலைதான்

 

😍😍உங்க காருக்கு எப்படி ஆக்ஸிடண்ட் ஆச்சு?

  அதோ  ஒரு மரம் இருக்கே தெரியுதா?

  ஆமாம் நல்லாத் தெரியுது.

  அது எனக்கு நேத்து தெரியலை

 

நாடகச் சிரிப்பலைகள் – நாணு

நான் நடிச்சதுல 20-30% படங்களுக்குத்தான் சம்பளம் வாங்கியிருக்கேன். மீதி..." - `காத்தாடி' ராமமூர்த்தி | Kathadi Ramamurthy talks about his personal life and acting career - Vikatan

 

குவிகம் மின்னிதழ் நகைச்சுவை சிறப்பிதழுக்கு எங்கள் “ஸ்டேஜ் க்ரியேஷன்ஸ்” நாடகங்களிலிருந்து சில சிரிப்பலைகளை வழங்குகிறேன். முடிந்தால் சிரித்து விடுங்கள்.. முடியாவிட்டால்.. பரவாயில்லை.. போனால் போகிறதென்று ஒரு புன்சிரிப்பு சிரிப்பதுபோல் நடித்து விடுங்கள்..

1. மூர்த்தி : சித்தப்பா.. நீங்க இந்த வீட்டுக்கு வந்து எத்தனை வருஷமாவுது. சும்மா தண்டச்சோறு சாப்டிட்டு உட்கார்ந்திருக்கீங்க..

சித்தப்பா: டேய்.. என்னடா அப்படிச் சொல்லிட்டே.. இந்த வீட்டுக்கு வந்த அப்புறம் நான் எப்படி இளைச்சுப் போயிட்டேன் தெரியுமா?

மூர்த்தி : நீங்களா? இளைச்சுப்போயிட்டீங்களா? யாரு சொன்னா?

சித்தப்பா: நான் தான் சொல்றேன்.. பாரு என் வேட்டி எவ்வளவு லூசாப் போயிருச்சு.

2. சித்தப்பா : டேய் மூர்த்தி.. நான் ஊருக்குக் கிளம்பறேன்.. இப்பவே என் கைப்பையை செக் பண்ணிக்க.. அப்புறம் சித்தப்பன் அதை எடுத்திட்டுப் போயிட்டான் இதை எடுத்திட்டுப் போயிட்டான்னு என் மேல பழி சொல்லாதே..

மூர்த்தி : என்ன சித்தப்பா.. உங்க மேல பழி சொல்லுவேனா? இருந்தாலும் செக் பண்ணிப் பார்க்கறது நல்லது தான்.. (சித்தப்பாவின் பைக்குள் கை விட்டுத் துழாவி).. ஆ.. நினைச்சேன்.. மாட்டிக்கிட்டீங்களா? (என்று ஒரு டம்ளரை எடுத்து) எவர்சில்வர் டம்ளர்.. மாட்டிக்கிட்டீங்களா?

சித்தப்பா: டேய் அந்த டம்ளர் என்னுது..

மூர்த்தி: எப்படிச் சொல்றீங்க?

சித்தப்பா: இதப்பார்.. டம்ளர்ல போட்டிருக்கு.. ஓட்டல் ராமபவனில் திருடியது..

3. கைலாசம் : டேய்.. ஏண்டா இப்படி சிகரெட் பிடிக்கறே?

ரகுபதி : இப்படித்தான் சிகரெட் பிடிக்கணும்.. திருப்பி வெச்சுப் பிடிச்சா சுட்டுரும்..

கைலாசம் : அடேய்.. சிகரெட் பிடிச்சா கேன்சர் வரும்..

ரகுபதி: மடையா.. எனக்குத் தெரிஞ்சு சிகரெட் பிடிச்சா புகைதான் வரும்..

4. ரகுபதி : ஐயங்கார்.. இன்னிக்கு என்ன சமையல்?

ஐயங்கார் : புடலங்காய் சாம்பார்.. ரசம்..

ரகுபதி: ஐயங்கார்.. சாம்பார்ல வெங்காயத்தை முழுசு முழுசாப் போட்டா எனக்குப் பிடிக்கும்னு நான் சொன்னதென்னவோ வாஸ்தவம்தான்.. அதுக்காக நீங்க அதே ப்ரின்சிபலை எல்லாக் காய்க்கும் உபயோகப்படுட்தக் கூடாது..

ஐயங்கார்: என்ன சொல்றீங்க?

ரகுபதி: இப்படித்தான் போன வாரம் லஞ்சுக்கு புடலங்கா சாம்பார் கொடுத்து அனுப்பிச்சீங்க.. நான் கேரியர்லேர்ந்து புடலங்காயை எடுக்கறேன்.. அது திரௌபதி வஸ்த்ரஹரணம் மாதிரி வந்துண்டே இருந்தது.. எனக்கு ஆபீஸ்ல லஞ்ச் அவர் அரை மணிநேரம்.. இதுல புடலங்காயை இழுக்கவே நான் கால் மணிநேரம் செலவு பண்ணிட்டா அப்புறம் எப்ப சாப்பிடறது?

ஐயங்கார் : அது எங்காத்துத் தோட்டத்துல காய்ச்சுது.. உமக்குப் பிடிக்குமேன்னு பறிச்சிண்டு வந்தேன்..

ரகுபதி : புடலங்கா காய்க்கும்போது முழுதுசாத்தான் காய்க்கும்.. அது சுவபாவம் அப்படி. நாம சாம்பார்ல போடும்போது நறுக்கி நறுக்கி போடலாமே.. சரி.. ஆபீஸ்ல லஞ்ச் கொடுத்துட்டு அப்படி திரும்பி வர வழில டெய்லர் பாவா ராவ்கிட்ட ஒரு பேண்ட் ஆல்டர் பண்ணக் கொடுத்திருக்கேன்.. வாங்கிண்டு வாரும்.

கைலாசம்: யாரு? நம்ம டெய்லர் பாவா ராவா? அவன் டைட்ஸ்லாம் ரொம்ப நல்லாத் தெப்பானே..

ரகுபதி: அவன் சாதாரண பேண்டையே டைட்டாத்தான் தெப்பான்.. ஒரு பேண்டை ரொம்ப டைட்டாத் தெச்சுட்டான்.. ஒரு லூசு வெச்சுக் கொடுடான்னு சொன்னேன்.. பயங்கர லூசு வெச்சுட்டான்.. அன்னிக்கு அந்த பேண்டைப் போட்டுண்டு ஹோட்டலுக்குப் போய் டிபன் சாப்டுட்டு நான் எழுந்திருக்கறேன்.. நான் எழுந்துண்டுட்டேன்.. பேண்ட் சீட்டுலயே இருக்கு..

5. ரமணி: செட்டியார்.. என்ன லேட்டு?

செட்டியார் : அதையேன் கேட்கறீங்க? என் மவன் பேனாவை விழுங்கிட்டான்.

ரமணி : ஐயையோ.. பேர் என்ன?

செட்டியார் : பார்கருங்க..

ரமணி : பேனா பேர் இல்லை.. உங்க மகன் பேரு..

செட்டியார் : ராமுங்க.. எட்டு வயசாவுது..

ரமணி : என்னது.. எட்டு வயசு மகன் பேனாவைப் விழுங்கிட்டானா?

செட்டியார் : இதென்னங்க பிரமாதம்.. அவன் பிறந்த உடனே அவம்மாவையே விழுங்கிட்டானே..

6. ரகோத்தமன் : என்ன.. உன் பிரெண்டோட Small Scale Industryல நீ பார்ட்னரா சேரப் போறயா? ஆமா என்ன பிராடக்ட்?

ரமணி : Small Scale.. இப்ப பள்ளிக்கூடப் பசங்களுக்கு அரையடி ஸ்கேல் பண்ணிண்டிருக்கான்.. நான் போய் பார்ட்னரா சேர்ந்த உடனே முழு அடி ஸ்கேல் பண்ணப் போறான்..

7. குணா : என்னது.. அவனுக்குக் காதுல பலமா அடிபட்டு பெரிசா கட்டு போட்ட உடனே கண்ணு தெரியலையா? எப்படி?

மாரி : அவன் தான் சோடாபுட்டி கண்ணாடியாச்சே.. காதுல கண்ணாடியை மாட்ட முடியாம அவனுக்கு எதுவுமே தெரியலை..

– எஸ்.எல். நாணு

நகைச்சுவைக் குட்டிக்கதைகள்

Professor teaching class
புரபஸர்  வகுப்பில் போர்டில் எழுதத் திரும்பினார். 
 
அப்போது அங்கு ஒரு விஸில் சபதம் கேட்டது. 
 
யார் விசிலடித்தத்து என்று பலமுறை கேட்டார். யாரும் பதில் சொல்லவில்லை. 
 
“சரி! இன்றைக்கு இதற்கு மேல் இந்தப் பாடத்தை நான் நடத்தப் போவதில்லை 
ஆனால் உங்களுக்கு மீதமுள்ள நேரத்தைப் போக்க நான் ஒரு கதை சொல்கிறேன். கேளுங்கள் !” என்றார். 
 
எல்லாரும் ஆவலோடு கேட்க ஆரம்பித்தார்கள். 
 
“நான் நேற்று இரவு படம் பார்த்துவிட்டு காரில் வரும் போது ஒரு அழகான பெண் அப்போதுதான் ஒரு பார்ட்டி முடிந்து திரும்பி வந்துகொண்டிருந்தாள். மழை சிலு சிலு என்று பெய்ய ஆரம்பித்தது.
அவளுக்கு லிப்ட் கொடுக்கலாம் என்று கூப்பிட்டேன் . அவளும் மகிழ்ச்சியோடு வந்தாள். நானும் அவளும் பல விஷயங்களைப் பேசிக் கொண்டே வந்தோம். நல்ல புத்திசாலிப் பெண்ணாகவும் இருந்தாள்.  அந்தச் சில நிமிடங்களில் எங்கள் இருவருக்கும் இடையே ஒரு அன்பு உருவாவதை இருவரும் உணர்ந்தோம்.    
 
அவள் வீட்டிற்கு அருகே அவளை இறக்கிவிட்டேன் .
 
அவள் தன்னைப் பற்றிச் சொன்னாள். நானும் இந்தக் கல்லூரியில்  ஆசிரியராக இருக்கிறேன் என்றேன்.  
 
“ஓ அப்படியா? இப்போது நாம் நல்ல நண்பர்களாகிவிட்டோம் போல தோன்றுகிறது. எனக்கு ஒரு சிறு உதவி செய்யமுடியுமா? என்று கேட்டாள். 
 
“கண்டிப்பாக ” என்றேன். 
 
“என் கஸீன் இந்தக் கல்லூரியில்தான் படிக்கிறான். அவன் படிப்பில் கொஞ்சம் வீக். அவன்  நீநன்றாகப் படிக்க நீங்கள் உதவமுடியுமா ? ” என்று கேட்டாள்.  
 
நானும் மகிழ்ச்சியோடு சரி என்று சொல்லிவிட்டு அவன் பெயர் வகுப்பைக் கேட்டேன். 
 
அதற்கு அவள் சிரித்துக்கொண்டே, ” நீங்கள் பேராசிரியராயிற்றே !  அதை நீங்களே கண்டுபிடிக்கவேண்டும். ஒரே ஒரு  க்ளூ  அவன் வகுப்பில் நன்றாக விசிலிடிப்பான்” என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டாள். 
 
வகுப்பிலிருந்த  அத்தனை  பேரின் கண்களும்   அங்கே விசிலடித்த பையனையே பார்த்தன. 
  
அவர் அந்தப் பையனைப் பார்த்து, ”  நான் சைக்காலஜியில் பட்டம் காசு கொடுத்து வாங்கவில்லை. படித்துவிட்டு வாங்கியிருக்கிறேன். ” என்று  புன்னகையுடன் கூறினார். . 
 
( ஆங்கில நகைச்சுவையின் தமிழ் வடிவம்)
 
 
 
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
 
 

கல்லூரியில் சரியாகக் கற்றுக்கொள்ளாத சில விதிகள் 

  •  உங்கள் இரு கையிலும் களிமண்ணை எடுத்து பொம்மை செய்யப் போகும்போதுதான் மூக்கு அரிக்கும். 
  • உங்கள் கையிலிருந்து கீழே விழுந்த  ஸ்கிரூ டிரைவர்  பீரோவிற்கு அடியில் எடுக்க முடியாத இடத்திற்குப் போகும். 
  • நீங்கள்  தவறுதலாக தப்பான எண்ணிற்கு போன் அடித்தால்  அதில் எங்கேஜ்மென்ட்  டோன் வந்ததாகச் சரித்திரம் கிடையாது.   
  • பள்ளியில் ஆசிரியரிடம் ‘நேற்று வயிற்று வலி; அதனால் வரவில்லை ” என்று சொன்னால் அடுத்த நாள் நிஜமாகவே வயித்து  வலி வரும் 
  •  நீங்கள் எப்போது ஒரு க்யுவிலிருந்து அடுத்த கியூவிற்குப் போனாலும் முதல் கியூ விரைவாக நகரும். 
  • நீங்கள் குளிக்கலாம் என்று ஷவரைத் திறந்தவுடன் உங்கள் டெலிபோன் அடிக்கும். 
  • யாரைப்  பார்க்கக்கூடாது என்று நினைத்துப் போனால் அவரைக் கட்டாயம் பார்ப்பீர்கள். அதைவிட அவரும் உங்களைப் பார்த்துவிடுவார். 
  • உங்கள் பையன் பிஸ்கட் சாப்பிடமாட்டான் என்று நண்பர் வீட்டில் சொன்ன பொது அவன் ஒரே நேரத்தில் பத்து பிஸ்கட் சாப்பிடுவான். 
  • உங்கள் முதுகில்  கைக்கு எட்டாத தூரத்தில்  எப்போதும் பெரிதாக அரிக்கும். 
  •  பிளேனில் நீங்கள்  முதல் இருக்கையில் இருந்தால் ஜன்னலுக்குப் பக்கம் சீட் பெற்ற  நபர் எப்போதும் லேட்டாகவே வருவார். நீங்கள் எழுந்து இடம் கொடுக்கவேண்டும்.
  • நீங்கள் சூடான  டீ குடிக்கவேண்டும் என்று ஆபீஸில் ஆரம்பிக்கும்போதுதான் பாஸ் அவசர அவசரமாக கூப்பிடுவார். நீங்கள் வருவதற்குள் டீ ஆறிப் போய்விடும்.

 

       ஏன் இவை எல்லாருக்கும் சொல்லி வைத்தாற்போல் நடக்கின்றன ? 

 

 

 

குவிகம் குறுக்கெழுத்துப் போட்டி -ஏப்ரல் 2024

குறுக்கெழுத்துப் போட்டி: 353

ஏப்ரல் மாதத்திற்கான  குவிகம் குறுக்கெழுத்துப் போட்டிக்கான லிங்க் இதோ:  

https://beta.puthirmayam.com/crossword/4F0C8C9FCA

சரியான விடை எழுதியவர்களில்  அதிர்ஷ்டசாலி ஒருவருக்குக் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்த ஒருவருக்கு ரூபாய் 100 வழங்கப்படும். 

 

சென்ற மாதம் சரியாக விடை எழுதிய நண்பர்கள்:

  1. கோமதி
  2. சங்கரன்
  3. பூ சுப்பிரமணியன்
  4. பா மதிவாணன்
  5.  கதிர் கண்மணி
  6. தாமோதரன்
  7. ரேவதி ராமச்சந்திரன்
  8. இந்திரா ராமநாதன்
  9. சரண் குமார்
  10. உஷா ராம சுந்தர்
  11. சுபாஷினி
  12. ரேவதி பாலு
  13.  வைத்யநாதன்
  14. ராமமூர்த்தி
  15. கல்யாணராமன்
  16. மகேஷ் மனோகர்
  17. ஜானகி
  18. தாமோதரன்
  19. நடராஜன் பாலா
  20. கமலா முரளி

 

இவர்களுள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிர்ஷ்டசாலி : சங்கரன் 

அவருக்குப் பாராட்டுதல்கள். மற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் !

 

 

 

உலக இதிகாசங்கள் – ஓடிஸி – எஸ் எஸ்

நாங்கள் அயோலியா தீவை அடைந்தபோது அங்கே அயோலாஸ் என்ற மன்னர் எங்களுக்கு வேண்டிய உதவிகளை செய்தார். மேற்கொண்டு  எங்கள் பயணத்திற்குத் தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார்.  புயல் காற்றையும்  சுழல் காற்றையும் மற்ற எல்லா விதமான காற்றுகளையும் கட்டுப்படுத்தி  விடுதலை செய்வதற்குமான அதிகாரத்தை கடவுளர்கள் அவருக்கு கொடுத்திருந்தார்கள். அதனால் புயல் காற்றுகளை ஒரு பைக்குள் திணித்து  காற்று கொஞ்சம் கூட வெளியேறாதபடி வாயை கம்பியால் பிணைத்து இருந்தார்.  அதை நாங்கள் ஊருக்குச் சென்ற பிறகு பிரித்துவிட வேண்டும் என்று என்னிடம் ரகசியமாக கூறினார். கப்பலை சரியான திசையில் செலுத்துவதற்காக மேல் திசை காற்றை  மட்டும் சுதந்திரமாக விட்டு வைத்தார்.

இப்படி ஒன்பது நாட்கள் நாங்கள் பயணித்து கிட்டத்தட்ட சொந்த ஊருக்கு வந்து விட்டோம்.  அப்பொழுது நான் கடலின் நடுவே ஒரு தீவைக்  கண்டேன்.  சற்று சோர்வு அடைந்தத நான்  கொஞ்சம்  கண்ணயர்ந்து விட்டேன் அந்த நேரம் பார்த்து என்னுடைய மாலுமிகள் அந்தப் பையில் விலையுயர்ந்த கற்கள் தங்கம் வெள்ளி இருக்கும் என்று தவறாக நினைத்து அந்தப் பையைத்  திறந்ததும் புயற்காற்று அதிலிருந்து விசையுடன் வெளியேறியது. அதனால்  கப்பல்கள் எங்கள் கட்டுப்பாட்டிலிருந்து விலகிப்  புயலின் வசத்தில் சென்றன.   கடலுக்குள் வெகுதூரம் சென்றுவிதிடவோம். கப்பல்களை பிறகு நாங்கள் துடுப்பு போட்டுக் கொண்டு லாமோஸ் என்ற நகரை அடைந்தோம்.

அந்த நகரில் இருந்த மக்கள் மனிதர்களை சாப்பிடும் அரக்கர்கள்.  எங்களில் சிலரை அவர்கள் கண்ட துண்டமாக வெட்டி எங்கள் கண் முன்னாடியே சாப்பிட ஆரம்பித்தனர்.  பாறைகளை வீசி எங்கள் கப்பல்களை அழிக்கவும் தொடங்கினர்.  நாங்கள் அனைவரும் பயந்து பாய்மரக் கப்பல்களை விரித்துக் கொண்டு அங்கிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று புறப்பட்டோம்.

 

பிறகு அங்கிருந்து ஏயியா என்ற தீவை அடைந்தோம் அங்கே அழகும் பயங்கரமும் நிறைந்த  தேவதையான சார்சி வசித்துக் கொண்டிருந்தாள் .  கொலை செய்வதைக்  கலைத்தன்மை மிகுந்த ஒரு செயலாக ஏற்றுக் கொண்டிருந்தவள்  அவள். நாங்கள்  சத்தம் இல்லாமல் நாங்கள் கப்பலை துறைமுகத்திற்கு கொண்டு சென்றோம்.  எந்த விதமான உணவும் குடிநீரும்  இல்லாததால் அவற்றை அந்த நகரிலிருந்து பெற்றுச் செல்லவே அங்கு சென்றோம். கடற்கரையில் இருந்த ஒரு மானைக்  கொன்று அதை அதன் இறைச்சியைச்  சாப்பிட்ட பிறகுதான் எங்களுக்கு சென்ற உயிர் திரும்ப வந்தது.  பிறகு அந்த தீவுக்குள் சென்று மலையடிவாரத்தில் சார்சியின் வீட்டைக்  கண்டுபிடித்தோம்

Circe as "a dreadful goddess with lovely hair and human speech . Circe turns Odysseus men into pigs . She falls in love with Odysseus. They live happily for an year

என்னுடைய ஆட்கள் சார்சியின் உபசரிப்பில் மயங்கி அவள் கொடுத்த ரொட்டி மது வகைகளை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது அவள் தனது மந்திரப் பிரம்பினால் அவர்களது தலையை தடவினாள் .   கண்மூடி திறப்பதற்குள் அவர்கள் பன்றிகளாக மாறிவிட்டனர் உடனே அவர்களைத்  தன் கூண்டுக்குள் போட்டு அடைத்து வைத்தாள். இதைப்  பார்த்துப்  பொங்கிய நான் என்னுடைய வாளையும் வில்லையும் எடுத்துக் கொண்டு  சார்சியை அழித்து என் வீரர்களைக் காப்பற்ற சென்றேன்.

அப்போது  எனது இஷ்ட தேவதை ஹெர்மிஸ் வழியில் என்னைச் சந்தித்து  நான் சார்சியிடமிருந்து தப்பிப்பதற்காக எனக்கு ஒரு தாயத்து ஒன்றையும் தந்தார்.  பிறகு சார்சியின் மாயாஜால மந்திரங்கள் பற்றியும் என்னிடம் விவரமாக எடுத்துரைத்தார்.  சார்சியின் வீட்டுக்குள் சென்றதும் அவள் வழக்கம் போல புன் சிரிப்புடன் என்னை வரவேற்று சிம்மாசனம் ஒன்றில்  உட்கார வைத்தாள்.  தேனில் விஷம் மருந்தைக்  கலந்து கொடுத்து என்னை குடிக்கச்  செய்தாள்.  ஆனால் என் கையில் இருந்து தாயத்தின் சக்தியால் அது எனக்கு எந்த விதமானப்  பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.  பிறகு அவள் தனது மந்திரம் பிரம்பால்  என் உடலை வருடினாள் . உடனே நான் ஹெர்மிஸ் குறிப்பிட்டபடி வாளுடன் அவள் மீது பாய்ந்தேன்.  நான் அவளை மீறியவன் என்று தெரிந்ததும் அவள் என் காலில் விழுந்து மன்றாடத் தொடங்கினாள்

அவளுக்கு என் மீது மயக்கமும் ஆசையும் ஏற்பட்டது.  நாம் இருவரும் இந்தத் தீவில் மகிழ்ச்சியுடன் இருப்போம் என்று என்னைத்  தன் படுக்கை அறைக்கு அழைத்துச் சென்றாள்.  அவள் என் வலிமையை குன்றச் செய்து என்னையும் ஒரு மிருகமாக மாற்றி விடுவாளோ என்று பயந்தேன்.   ஆனால் அவள் என்னிடம் சத்தியம் செய்து என்னுடைய பழைய வீரர்களை யும் திரும்ப வரவழைத்துத் தந்தாள்.

Circe as "a dreadful goddess with lovely hair and human speech . Circe turns Odysseus men into pigs . She falls in love with Odysseus. They live happily for an year அதன்பிறகு நானும் அவளது சல்லாபத்தில் மனதைப் பறிகொடுத்து  சுமார் ஒரு வருட காலம் நான் அங்கேயிருந்தேன் என் வீரருடைய வேண்டுகோளை ஒட்டி நாங்கள் எங்கள்  நாட்டிற்குப்  பயணம் செய்ய திட்டமிட்டோம் .  சார்சியும்  எங்களுக்கு உதவ முன் வந்தாள் .  ஆனால் நாங்கள் எங்கள் நாட்டிற்குச் செல்லுமுன் அருகில் உள்ள மற்றொரு தீவில் ஒரு கண் தெரியாத குறி சொல்லும் பெண் ஒருத்தியைச் சந்தித்த பின்னரே செல்லவேண்டும் என்று உறுதியாகக் கூறினாள் . அவளைச்  சந்தித்தால்  என்  எதிர்காலத்தைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்  என்றும் அதன் பின்னரே  பயணத்தை தொடர வேண்டும் என்றாள். அங்கு போவதற்கான வழிமுறைகளையும் சொல்லித் தந்தாள்.  தேவையான ஆடுகளையும் எங்கள் கப்பலில் ஏற்றி விட்டாள்.  எங்கள் பயணத்திற்கு உதவியாக  காற்றையும் அனுப்பி வைத்தாள்.

நாங்கள் சென்ற இடம் பாதாள உலகம் என்பதை அங்கு போனபின்புதான் புரிந்துகொண்டேன்.   அங்கே இறந்து போன ஆத்மாக்கள் ஒன்றன்பின் ஒன்றாக வரத் தொடங்கின  அந்த ஆத்மாக்களுக்கு திருப்தி அளிக்க  எங்களுடன் வந்த ஆடுகள் ஒவ்வொன்றாகப்  பலி கொடுத்தோம்.

கடைசியாக சார்சி குறிப்பிட்டுச் சொன்ன  அந்த குறி சொல்லும் ஆத்மா எங்கள் கண் முன் வந்து நின்றது.  அதற்கு தேவையான பலிகளைக்  கொடுத்தவுடன் அது திருப்தி அடைந்து என்னிடம் பேசத் தொடங்கிகினாள்.

பொசைடனின்  மகனின்  கண்ணை நான் சிதைத்து விட்டதால் பொசைடோன் என் மீது கடும் கோபத்துடன் இருக்கிறான்  என்றும் பயணம் செல்லும் பாதை முழுக்க நாங்கள் கடுமையான துயரங்களை அனுபவிக்க வேண்டி இருக்கும் என்றும்  முன்னறிவிப்பு செய்தாள் . மற்றும் ஹீலியூஸ் என்ற சூரிய தேவனின் ஆடு மாடுகளை பார்க்க நேரும்போது அவற்றுக்குத்  தொல்லை கொடுக்காமல்  இருந்தால் நாங்கள் பத்திரமாக தாய்நாடு போய் சேர்வோம் என்றும் கூறினாள் .   மாறாக அந்த ஆடுகளுக்குத் தொல்லைப்படுத்தினால் மாலுமிகள் ஒட்டுமொத்தமாக அழிக்கப்படுவார்கள்.  நான் ஒருவன் மட்டும் மீதமானாலும் கூட ஏராளமான கஷ்டங்களை அனுபவித்த பிறகுதான் சொந்த நாட்டை  அடைய முடியும்  என்றாள் . என் சொந்த நாட்டிலும்  ஏராளமான துன்பங்கள் காத்திருக்கின்றன என்றும்    என் மனைவியை  ஊர்க்கார பிரபுக்கள் தங்களை கணவனாக ஏற்றுக் கொள்ளுமாறு மிரட்டிக் கொண்டும் இருக்கின்றார்கள்  என்றும் கூறினாள். இந்த அவமானத்திற்குரிய காட்சிகளைத் தான் நீ பார்க்க வேண்டி இருக்கும்  என்றது அந்த ஆத்மா தேவதை. உன் நாட்டில் உள்ள தீய எண்ணம் கொண்ட பிரபுக்க்களை  நீ அடக்கி ஒடுக்கிய பிறகு பொசைடன்  தேவனுக்கு தேவையான பலிகளையும் கொடுத்து அவர் திருப்தி அடையும்படி செய்ய வேண்டும். அப்போதுதான் நீ நிம்மதியாக இருக்கமுடியும் என்று கூறினாள்.  அதற்குப்  பிறகு என் மரணம் எப்பொழுது நிகழும் என்பதை பற்றித் தெரிவித்தாள்.  முதுமையின் போது மிகவும் இயல்பாக அமைதியாக மரணம் நிகழும் என்றும் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முன்னிலையில் கடலில் தான் மரண நிகழும் என்ற அந்த குரல் எனக்கு நிம்மதியை வரவழைத்தது.

அந்தப் பாதாள உலகத்தில் என் அன்னையின் ஆத்மாவையும் பார்த்தேன் நான் சொந்த நாட்டிற்கு திரும்பி வராததால்  துயரத்திலேயே அவள் இறந்து விட்டதாக தெரிவித்தாள் .  என் மகன் என்னை  எதிர்பார்த்துக் கொண்டு நாட்டில் காத்துக் கொண்டிருப்பதாகக்  கூறினாள் .

 எனது நண்பர்கள்  பவரை அங்கே  ஆவி வடிவில் அந்த பாதாள உலகத்தில் சந்தித்தேன். 

எங்கள் கிரேக்கப்படையின் தலைவர் அகெம்ணன் தான் எப்படி வஞ்சனையால்  தனது மனைவியின் மூலமாக கொலை செய்யப்பட்ட  கதையை  என்னிடம் விவரித்தார்.  அதற்குப் பிறகு அக்கிலிஸ்  பெட்ரோகிலிஸ் போன்ற எனது படை நண்பர்கள் ஆவி வடிவத்தில் வந்தார்கள். அக்கிலிஸ்  அந்த கூட்டத்திற்கும்  தலைவராக இருந்தார்.  அவர் என்னை பார்த்துவிட்டுப்  பெருமிதத்துடன்  கடந்து சென்றார்.  இன்னும் எண்ணற்ற எனது பழைய நண்பர்களை அங்கு சந்தித்தேன் அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் செய்த பாவத்தின் அளவையொட்டி தண்டனை அனுபவித்துக் கொண்டிருப்பதையும் என்னால் பார்க்க முடிந்தது. 

அதற்குப் பிறகு நான் அந்த பாதாள உலகத்தை விட்டு வெகு வேகமாக வந்துவிட்டேன்

திரும்பவும் நாங்கள்   சார்சி இருந்த  தீவிற்கு மறுபடியும் வந்தோம் . அவள் நான் சொந்த ஊருக்கு எப்படி செல்ல வேண்டும் என்பதைப் பற்றியும் அதில் வரும் ஆபத்துகளிலிருந்து நான் எப்படி தப்ப வேண்டும் எள் . பதையும் விளக்கமாக எடுத்துக் கூறினாள் . 

போகும் வழியில்  பாட்டுப்  பாடும் தேவர்கள் வருவார்கள். தங்கள் பாட்டின் திறத்தால் மனிதர்களை மயக்கி தங்களுடன்  இருக்கச்  செய்து விடுவார்கள்.  காதுகளில் மெழுகை ஊற்றிக் கொண்டு , அந்தப்  பாடல்களைக்  கேட்காமல் நீங்கள் தப்பிக்க வேண்டும் .

அங்கிருந்து  தப்பித்து விட்டால் பிறகு இரண்டு வழிகள் உள்ளன.  அதில் எதைத்  தேர்ந்தெடுப்பது என்பது உங்கள் புத்திசாலித்தனத்தை வைத்து நீங்களே தீர்மானிக்க வேண்டும் .    அலைகளுக்கும் ஆபத்து நிறைந்த பாறைக்  கூட்டங்களுக்கும் நடுவே பயணம் செய்யும்போது எப்படித்  தப்பிக்கலாம் என்பதற்கான வழியையும் சார்சி சொல்லிக் கொடுத்தாள். 

அதன் பிறகு நீங்கள் அந்த ஹீலியுசின் கால்நடைகள் வைத்திருக்கும் தீவை அடைவீர்கள்.  அவற்றிற்கு எந்த விதமான தொல்லையும் செய்யாமல் இருந்தால் நீங்கள் சீக்கிரமாகவே உங்கள் சொந்த ஊரான இதாகாக்குப்  போய்ச் சேர முடியும்.  மாறாக அவற்றுக்கு ஏதாவது தீங்கு விளைவித்தால் நீங்கள் உங்கள் கப்பலைகளையும் ஆட்களையும் இழந்து விடுவீர்கள் . அதன் பிறகு பல வருடங்களுக்கு பிறகு தான் நீங்கள் உங்கள் தாய் நாட்டை அடைய முடியும் என்றாள் .

இவ்வளவு உதவி செய்த அந்த அழகுத் தேவதை சார்சிக்கு மனமார நன்றி கூறிவிட்டு என் பயணத்தைத் தொடர்ந்தேன். 

 

(ஓடிஸியின் பயணங்கள் தொடரும்)

“வெறுப்பினால் துன்புறுத்தல்” -மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

முப்பது வருடத்திற்குப் பிறகு பள்ளியில் ஒன்றாகப் படித்திருந்த சுதீப், ரந்தீர், ஜமுனா, அமுதா, அஹ்மத், ஜெயலட்சுமி அனைவரும் தற்செயலாக அதே வட்டாரத்தில் வீடு வாங்கி குடியேறினார்கள். சுமார் நாற்பத்து ஐந்து வயதுடையவர்கள்.  நெருங்கிய நண்பர்கள்.

முப்பது வருடத்திற்குப் பிறகு பள்ளியில் ஒன்றாகப் படித்திருந்த சுதீப், ரந்தீர், ஜமுனா, அமுதா, அஹ்மத், ஜெயலட்சுமி அனைவரும் தற்செயலாக அதே வட்டாரத்தில் வீடு வாங்கி குடியேறினார்கள். சுமார் நாற்பத்து ஐந்து வயதுடையவர்கள். ஜெயலட்சுமியைத் தவிர மற்றவர்கள் நெருங்கிய நண்பர்கள்.

இந்தத் தகவல்களை நான் அஹ்மத் மூலமாக அறிந்தேன். அஹ்மத்தின் எச். ஆர் பிரிவினருக்குப் பல வாரங்களாக மனநலத்தின் பல்வேறு அம்சங்களைக் குறித்து பயிற்சி அளித்துக் கொண்டிருந்தேன். தன் பள்ளித் தோழி ஜமுனா பற்றிய சஞ்சலத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புவதாகக் கூறி காவல்நிலையத்தில் உள்ள எங்களுடைய மனநல ஆலோசனை அறையில் சுதீப், ரந்தீர், ஜமுனா, அமுதாவுடன் சந்தித்தார் அஹ்மத்.‌

அழைத்து வந்ததால், தன் பொறுப்பென எடுத்துக் கொண்டு விவரிக்க ஆரம்பித்தார். அடிபட்டிருக்கும் ஜமுனாவின் முழங்கையைக் காட்டி அவளைப் பற்றி நால்வரும் சங்கடப் படுவதாகக் கூறியதும் மற்றவர்கள் ஒப்புதல் தெரிவித்தார்கள். ரந்தீர் சொன்னார், திறமையானவள் ஜமுனா, இப்போதெல்லாம் மந்தமாக ஏதோ இழந்ததைப் போல் தோற்றமளிப்பது மனதை வருடுகிறதென்றார்.

ஜமுனா கண்ணீர் மல்கிய கண்களால் என்னையே பார்த்திருந்தாள். நண்பர்கள் சமாதானம் கூறினார்கள். திடீரென வேரொரு பெண்மணி முறைக்கு மாறாகக் கதவைத் திறந்து அனுமதியின்றி உள்ளே நுழைந்தாள். அவளைப் பார்த்ததுமே ஜமுனா சடெக்கென எழுந்தாள். அஹ்மத் “இவள், ஜெயலட்சுமி, எங்கள் வகுப்பிலிருந்தாள்” என்று சொன்னதும், அவள் ஜமுனாவிடம் அதட்டின குரலில் முறைத்து, “பைலைத் தேடி வந்தேன்” என்று சாக்கு சொன்னாள்.  கேட்டதுமே ஜமுனா உறைந்தாள். ஜெயலட்சுமி சிரித்தபடி வெளியேறத் தொடங்கினாள்.

ஜெயலட்சுமியைப் பெயரிட்டு அழைத்து, வந்த ஐவரை வெளியே காக்கப் பரிந்துரைத்தேன். ஜெயலட்சுமியை உட்காரச் சொல்லிவிட்டு அவள் செய்வதின் பொருள் புரிகிறதா என்று கேட்டதற்கு, கண்கள் சிவந்து முறைத்தாள்.

ஒருவரைத் துரத்துவதும் மிரட்டுவதும் உணர்வு ரகமான வன்முறையின் அடையாளம் என்று சுட்டிக் காட்டினேன். வன்முறையைத் தடுப்பது எங்களது நிர்வாகத்தின் குறிக்கோள், அதற்காகவே காவல்நிலையத்தில் இருப்பதும் என்றேன். வன்முறைச் செயல்பாட்டை உபயோகித்து அடிமைப் படுத்துவோரை அதிலிருந்து விடுவிப்பதும் அடங்கும் என்றேன். ஜெயலட்சுமி தன்னுடைய இந்த நிலையை மாற்றிக் கொள்ள விரும்பினால் எங்களை அணுகலாம் என்றதுமே விருட்டென்று வெளியேறினாள்.

ஐவரும் உள்ளே வந்தனர், “பேசு ஜெம்” என்று ஊக்குவித்து நண்பர்கள் வெளியேறினார்கள்.

ஜமுனா எதுவும் கூறாமல் விசும்பினாள். இதுவும் தேவை எனக் காத்திருந்தேன்!

அவளும் ஜெயலட்சுமியும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்வதாகக் கூறினாள். ஜெயலட்சுமி ஜமுனாவைப் பார்த்த போதெல்லாம் கோபித்து வந்தாள். அவள் அவதூறாகப் பேசும்போது எதையும் கூற பயப்பட்டாள் ஜமுனா. வர்ணிக்கும் போதே நடுங்கினாள். இது வன்முறையைச் சகித்துக் கொண்டிருப்பதின் பிரதிபலிப்பாகும்.

இது ஒரு விதத்தில் வன்முறைக்கு உடந்தையாகிறது, செய்வோரை ஊக்குவிக்கும் என விளக்கினேன். இங்குப் பகிர்வது எப்படியாவது ஜெயலட்சுமிக்கு தெரிந்து விடுமா என்ற அவலத்திற்கு, இங்குப் பகிர்ந்து கொள்ளப்படும் எவையும் எவரிடமும் சொல்லப்படாது என்பது எங்கள் தொழில் தர்மம் என்று விளக்கினேன்.

ஒரு வாரத்திற்குப் பிறகு கணவன் சுனிலுடன் வந்தாள். ஜெயலட்சுமி வேலையைக் காரணம் காட்டி வீட்டிற்கு வந்து சத்தம் போடுவது, துச்சமாகப் பேசுவது, பயமுறுத்தி விடுவது இவை இருவரையும் வெலவெலத்து விடுகிறது என்றார்கள்.  ஏதேனும் சொன்னால் ஜெயலட்சுமி மேலும் தொந்தரவு தருவாளோ என அஞ்சி அமைதியாக இருந்து விடுவார்களாம். ஸெஷன்களில் ஆராய்ந்த பின்னரே இவ்வகைச் செயல்பாட்டு வன்முறையை வளர்த்தது எனப் புரிந்து கொண்டார்கள்.

வேலையிடத்தில், ஜமுனா ஜெயலட்சுமியின் மேலதிகாரி. ஜமுனா பரிச்சயமானவளே எனக் காண்பிப்பதற்காக ஜெயலட்சுமி எல்லோர் முன்னாலும் இடிப்பாள், சாப்பிடும் போது உணவை எச்சில் செய்வாள். எதற்கெடுத்தாலும், குரலை எழுப்பி, “உன்னை என்ன பண்றேன் பார்” என்று அதட்டுவாள். செய்தே விடுவாள் என நம்பி, துன்புறுத்தலைப் பகிரவோ, புகார் செய்யவோ தயங்கினார்கள்.

ஜமுனா அனுபவங்களை வர்ணிக்க, வன்முறையின் வகைகளை அடையாளம் கண்டாள். ஜெயலட்சுமி முக்கியமான தாள்களை மறைத்து வைத்திருந்தது, மற்றவர்கள் முன் புறக்கணிப்பது இதுவும் வன்முறை எனப் புரிந்துகொண்டாள். புரிதலிருந்தே செயல்பாடு துவங்கும்.

சுனில் தொடர்ந்து விவரித்தார். இங்கு ஜாகை மாறுவதற்கு முன்பு ஜமுனா மிகத் தைரியமாகவும் மனதிடம் உள்ளவளாகவும் இருந்தாள். ஜமுனா ஆமோதித்தாள். இதை மையமாக வைத்து மாற்றத்தின் சரித்திரத்தைக் காலக்கோடாக எடுத்துப் பல ஸெஷன்களுக்கு ஆராய்ந்த பின்னர் விவரங்கள் வெளியானது.

ஜெயலட்சுமியின் தந்தை சிவா அரசு நிறுவனத்தில் ஜமுனாவின் தந்தை மாதவனின் கீழே பணியாற்றினார். ஜமுனாவின் பெற்றோர் தாராளமாக தானம் தர்மம் செய்வார்கள். யாரைப் பற்றியும் வீண் பேச்சு பேசுவதையும் குறைகூறுவதையும் தவிர்க்க வேண்டும் என்றதால் அவ்வாறே ஜமுனா வளர்ந்தாள். சிவாவிற்கு மாதவனை எல்லோரும் பாராட்டிப் பேசுவது பிடிக்கவில்லை. வீட்டில் சிவாவின் குமுறல்களைக் கேட்கும் ஜெயலட்சுமி, பள்ளியில் ஜமுனா மீது பழி தீர்த்துக் கொள்வாள். சிவாவோ, சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ஜமுனாவை அதட்டுவார். தன் மகளைப் பற்றி யாரிடமாவது பேசினால் நடப்பது வேறு என்ற சொல்லுக்குப் பயந்து ஜெயலட்சுமி செய்வதைப் பொறுத்துக் கொண்டாள். வகுப்பில், விளையாட்டு மைதானத்தில் தள்ளி விடுவது, காயத்தில் கூழாங்கற்களைத் திணிப்பது, இதைப்பற்றி யாரிடமும்  சொல்லவில்லை. பெற்றோர் பார்த்துக் கேட்டால் விழுந்துவிட்டேன் என்பாள்.

வருட இறுதியில், ஜெயலட்சுமி ஊர் மாறிச் சென்றாள். மெதுவாகத் தைரியம் கூடிய ஜமுனா, இப்போது தான் ஜெயலட்சுமியை மீண்டும் சந்தித்தாள். வன்முறையை எதிர்கொள்ள வழி கற்றுக்கொள்ளாததில் மீண்டும் பயம், ரணங்கள்.

ஜமுனாவைத் தேடி வந்த ஜெயலட்சுமியிடம் சவாலாக இது, ஏக்கமா, கோபமா, பொறாமையா என விளக்கம் அளிக்க அழைத்தேன்.

சிறுவயதிலிருந்தே எந்தவொரு நிலையிலும் ஜமுனாவின் மென்மையான குணத்தால் எல்லோரும் அவளிடமே தோழமையுடன் இருப்பதை ஜெயலட்சுமி கோழைத்தனம் என்றாள். இப்படி ஒருவருக்குக் குவியும் பாராட்டும் புகழும் தேவையற்றது என நம்பினாள். தன்னுடைய தந்தைக்கு மாதவன் மீது அவமதிப்பு, வெறுப்பு. ஆனாலும் உதவி கேட்டு அங்குதான் ஓடுவார்கள். மேலும், சிவா கையும் களவுமாகப் பிடிபட்டு தண்டனையாகப் பதவி இறக்கமும் ஊர் மாற்றமும் ஏற்பட்டதும் மாதவனால்தான் என்றாள். ஜமுனா, அவளுடைய பெற்றோர் மீது வெறுப்பு பலமடங்கானது என்றாள்.

ஜமுனா கோழை என நிரூபிக்கவே அவளுக்குத் தொல்லைகள் தருவாள். அதைப் பொறுத்துக்கொண்டதால் மறுபடியும் அதே யுக்தியை உபயோகித்து ஜமுனாவைத் தன் கைப்பிடியில் வைத்திருப்பது தந்தைக்காகப் பழி வாங்குவதாகக் கர்வத்துடன் சொல்லிச் சென்றாள்.

இதை, ஐவர் நண்பர்களிடமும் ஜெயலட்சுமி பெருமையாகச் சொன்னாள். கண்டித்தார்கள்.‌ நண்பர்களை உதறிவிட்டாள்.

ஜமுனா தன் குறைபாட்டினால் வன்முறைக்கு ஆளாகிறோம் என்பதை உணர்ந்தாள். மாற முடிவு செய்த ஜமுனா, இதிலிருந்து விடுபட, வன்முறை நேரும் போதெல்லாம் ஏன், என்ன என்பதைக் கவனித்து, இரவு தூங்குவதற்கு முன் அன்றைய வன்முறைச் சம்பவத்தில் தாம் என்ன செய்திருக்கலாம், என்ன செய்யவில்லை, ஏன் நேர்ந்தது என்பதை எழுதினாள். ஸெஷன்களில் ஆராய்ந்தோம்.

ஒவ்வொரு முறையும் தன் சுய மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. ஜெயலட்சுமியின் சொல், செயலுக்குத் தான் முக்கியத்துவம் தருவதால் மனம் புண்படுவதும், தன்னுடைய தன்மை மாறி வருவதும் உணர்ந்தாள். மாறி எப்படி நடந்து கொள்வது என்பதைப் பயின்றோம், செயலிட்டாள். 

நண்பர்கள் வந்தார்கள். பழைய ஜமுனா தென்படுவதாகக் கூறினார்கள். இந்த நிலையில் ஜமுனாவிடம் பார்ப்பதை வர்ணிக்கச் சொன்னேன்.‌ சுதீப், ஜமுனாவின் வித்தியாசமாகச் சிந்தனை செய்யும் திறன் திரும்புவதை, ரந்தீர் அவளுடைய உடல் மொழி நல்ல மாற்றங்கள் காட்டுவதை, அமுதா ஜமுனா முன் போல் பாட்டு முணுமுணுப்பதைச் சொன்னார்கள். அடுத்த சில ஸெஷன்களுக்கு ஜமுனா இந்த ஐவருடன் செஷனை அமைத்தேன். ஏனெனில் குழு அமைப்பில் பலம் உண்டு!

இதிலிருந்து பல நுணுக்கங்கள் வெளிப்பட்டன. உதாரணத்திற்கு,

ஜெயலட்சுமியின் தந்தையின் வார்த்தைகள் இன்றும் தடுப்பதை நினைவு கூறினாள். அஹ்மத், ஜெயலட்சுமியின் சொல், செயலால் மற்றவர்களும் பாதிக்கப்படுகிறார்களா என்று கேள்வி எழுப்பினார். பலர் உள்ளனரே, அதிகாரியான ஜமுனா இதை இவ்வாறு விடலாமா என்ற கேள்வியைக் குழு எழுப்பியது.

நீண்ட கால தூக்கத்திலிருந்து எழுந்தது போல ஜமுனா தென்பட்டாள். வன்முறையை வளர்த்து விடாமல் அப்போதே இதுபோன்ற உதவி எடுத்துக் கொள்ளாததைச் சொல்லி வருந்தினாள். இரு வாரத்திற்குப் பிறகு சுனிலுடன் ஜமுனா வந்தாள். ஜமுனா முன் போல இருப்பதாகக் கூறினார்.

ஜெயலட்சுமியின் அட்டூழியங்கள் பற்றிய தகவல்கள் பலர் சேகரித்திருந்தார்கள். தனக்கு மட்டுமின்றி இவர்களுக்கும் பயன்பட ஜமுனா சிந்திக்க ஆரம்பித்தாள்.‌ அஹ்மதுடன் கலந்து உரையாடியதில் செயல்முறைகளைப் புரிந்து கொண்டாள். எங்களின் வன்முறையை எதிர்கொள்ளும் பயிற்சியில் பங்கேற்றுத் தெளிவானாள்.

மேலதிகாரிகளிடம் வன்முறையைப் பற்றிய புகார்களைத் தந்தாள். மற்றவர்களையும் ஜெயலட்சுமியால் சந்திக்கும் வன்முறைப் புகார்கள் தருவதற்கு ஊக்குவித்தாள். இவற்றை ஆராய்ந்த மேலதிகாரிகள் ஜெயலட்சுமி உடலளவில், உணர்வளவில், சமூக வன்முறையைச் செய்துவிட்டு, சிறிதும் வருந்தாததால் அபராதத் தொகை, ஒரு வருடத்திற்குச் சமூக சேவை என்று தண்டனை விதித்தார்கள். மேலும் புகார்கள் வந்தால் வேலையிலிருந்து நீக்கி விடுவோம் என்றார்கள். ஜெயலட்சுமி வருந்தவில்லை. அவள் சார்பில் அவளுடைய கணவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

தன்னைத் திடப்படுத்த ஜமுனா தன் குறைபாடுகளைச் சுதாரித்துக் கொள்வதைத் தொடர்ந்தாள். வன்முறையால் அழுந்தி இருக்கும் மற்ற ஊழியருக்கும் எங்கள் நிர்வாகம் உதவ முன் வந்தோம்!

******************************************

சரித்திரம் பேசுகிறது! – யாரோ

விக்கிரமசோழன்- தொடர்ச்சி

 

விக்ரமசோழன் வரலாறு | VikramaChola History | வரலாற்று தோழன் | சோழர்களின்  வரலாற்று பகுதி 23 | - YouTube“இவனது ஒப்பற்ற செங்கோல், எட்டுத்திசையையும் அளக்கிறது. இவனுடைய வெண்கொற்றக்குடை, எட்டுத் திசைகளுக்கும் நிழல் செய்கின்றது. வேற்றரசர்கள், தங்கள் மகுடங்களை இறக்கி வைத்து இவன் பாதங்களைப் பணிகின்றனர்.”

-ஒட்டக்கூத்தர் சொல்கிறார்.

இம்மன்னன் பெருமைக்காக முடி சூட்டிக்கொள்ளவில்லை. இவ்வுலகைக் காக்கவே முடிசூட்டி ஆட்சி புரிந்தான் எனும் கருத்தையும் ஒட்டக்கூட்டர் வைக்கிறார்.

விக்கிரமசோழன் ஆட்சியில், நாட்டு நடப்பைப் பார்ப்போம்:

ஆட்சியின் ஆறாம் ஆண்டு (1125): தொண்டை நாட்டிலும், நடுநாட்டிலும் பெருவெள்ளம் ஏற்பட்டது. அதனால் கொடிய பஞ்சம் விளைந்தது. ஆறு வருடங்கழித்து சோழநாட்டிலும் பெரும் பஞ்சம் வாய்த்தது. வட ஆர்க்காடு, தென் ஆர்க்காடு கோட்டங்களிற் பெரும்பகுதி ஆற்று வெள்ளத்திற்கு இரையானது. இதனால் சில இடங்களில் ஊர்ப் பொது நிலங்களை விற்று அரசாங்க வரி இறுக்கப்பட்டது. ‘காலம் பொல்லாதாய், நம்மூர் அழிந்து, குடி ஒடிப்போய்க் கிடந்தமையால்’ என்கிறது கல்வெட்டு. அரசன், மற்றும் செல்வம் மிகுந்தவர்கள், தமது பெருங்கொடையால், மக்களை இயன்றவரைக் காத்தனர். கோவிலதிகாரிகள் மக்களுக்கு கடன் கொடுத்து உதவி செய்தனர்.

இந்த நன்னடத்தைக்காக விக்கிரம சோழனை “தியாகசமுத்திரன்” என அன்போடு விருது கொடுத்து அழைத்தனர்.

அவனது பத்தாண்டு ஆட்சி நிறைவு நாள். பிற அரசர்கள் அனுப்பிய திறைப்பொருள் மலை போலக் குவிந்தது. பத்தரை மாற்றுத்தங்கமாக கப்பம் கட்டிக் குவித்தார்கள். தங்க இலையில், நவரத்தினங்களால் பின் வரும் சொற்கள் பொறிக்கப்பட்டிருந்தது. “அரசன் நீண்ட நாள் வாழ்ந்து இந்த மண்ணைப் பாதுகாக்கட்டும்”. விக்கிரம சோழன் தீவிர சிவபக்தனாக விளங்கினான். வந்த திறைப்பணத்தை வைத்து, தில்லையில் அம்பலவாணரது கோவிலுக்கு திருப்பணி செய்தான். கோபுரவாசல், கூடசாலை, பலிபீடம் அனைத்தும் பொன்னால் வேயப்பட்டது. சிதம்பரம் தில்லைநாதன் கோவிலுக்குப் பொற்கூரை வேய்ந்தான். தன்‌ பிறந்த நாளான உத்திரட்டாதி நாளில்‌ நடைபெறும்‌ பெருவிழாவில்‌, இறைவன்‌ எழுந்தருளும்‌ திருத்தேரையும்‌ பொன்‌ வேய்ந்து அதற்கு முத்துவடங்கள்‌ அளித்துத்‌ திருப்பணிகள்‌ செய்தான். ஒரு வருடம் (1128 இல்)  சோழ சாம்ராஜ்யத்தின் வருமானம் முழுவதையும் சிதம்பரம் கோயில் கைங்கர்யத்துக்கும், விரிவாக்கத்துக்கும் கொடுத்து விட்டான்.

‘சிவகாமி அம்மன், அவன் எழுப்பிய கோயிலின் அமைப்பையும் எழிலையும் கண்டு மனம் மகிழ்ந்தாளாம். அதனால், தான் பிறந்த இமயமலைப் பகுதியை இனி நினைப்பதில்லை என்று முடிவு செய்துவிட்டாளாம்’ – புலவர் ஒட்டக்கூத்தரின் கற்பனை சற்று ஓவர் தான்!

தில்லையில், விக்கிரமசோழன் செய்த திருப்பணிகளைப் பட்டியலிட்டால், அது எண்ணில் அடங்காது. எழுத்திலும் அடங்காது.

அவன் ஆட்சியில், கங்கைகொண்டசோழபுரம் தலைநகராகத் திகழ்ந்தது. பழையாறை, இரண்டாம் தலைநகராக இருந்தது. தில்லை மாநகர்‌ (சிதம்பரம்‌), காட்டுமன்னார்‌ கோயில்‌ போன்ற இடங்களில்‌ அரண்‌மனைகள்‌ இருந்தன.

முக்கியமான சமாசாரம். இவன் ஆட்சியில் பெரும் போர்கள் இல்லை. போர்களில்லாமல், சரித்திரத்தில் இடம் பெற்ற மன்னர்களில் விக்கிரமசோழன் ஒருவன். தன் தந்தையின் காலத்தில் பல போர்களில் பங்கெடுத்த விக்கிரமன், தனது ஆட்சிக் காலத்தில் மிக குறைந்தப் போர்களிலேயே ஈடுபட்டான். சேரநாடும், பாண்டியநாடும் இவனுக்கு பணிந்தே இருந்தது. அமைதிக்குப் பெயர் தான் விக்கிரமன் போலும். நாடு முழுதும் அடிக்கடி சுற்றுப்பயணம் செய்து மக்களைச் சந்தித்து நலம் புரிந்தான். நல்ல அரசியல்வாதி!

விக்கிரமசோழனுக்கு, முக்கோக்கிழானடி, தியாகபதாகை, நேரியன்மா தேவியார்‌ என மூன்று மனைவியர்‌ இருந்துள்ளனர்‌. அவர்களில்‌ முக்கோக்கிழானடி இறந்தபின்,‌ தியாகபதாகை பெருந்தேவியாக விளங்கினாள்‌.

ஒட்டக்கூத்தர் சொல்கிறார்: ‘சங்கரனின்‌ மனைவியாக உமையைப்போல்‌ முக்கோக்‌கிழானடியும்‌, கங்கை போன்று தெரிவையர்‌ திலகம்‌ தியாக பதாகையும்‌, திருமாலின்‌ மார்பைவிட்டு அகலாத திருமகள்‌ போல புனித குணவனிதை திருபுவன முழுதுடையாளும்‌ (நேரியன்‌ மாதேவி) விளங்கினார்‌’.

இப்படி அரசியாரகளைப்  புகழ்ந்து பாடிய ஒட்டக்கூத்தருக்கு அரசன் பல பரிசுகள் கொடுத்துச் சிறப்பித்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லையே!

‘விக்கிரம சோழன் உலா’ ஒட்டக்கூத்தர் பாடியது. அதைப்பற்றிச் சற்றேனும் சொல்லாவிட்டால் சரித்திரம் நம்மை மன்னிக்காது.

மன்னவன்,‌ தன்னுடைய வெற்றியைக்‌ கொண்டாடும்‌ முகமாகவோ அல்லது விழாக்‌ காலங்களில்‌ வீதி உலா வருவதைக்‌ காரணமாக வைத்தோ புலவர்களால்‌ பாடப்படும்‌ நூலே உலா எனப்படும்‌. புலவர்‌ பெருமக்கள்‌ தாம் வணங்கும்‌ இறைவனையோ, தங்களை ஆதரித்த மன்னர்கள்‌, சிற்றரசர்கள்‌, செல்வந்தர்கள்‌ ஆகியோரையோ பாட்டுடைத்‌ தலைவனாகக் கொண்டு பாடுவது உலா இலக்கியமாகும்‌.

விக்கிரம சோழனின்‌ அவைக்களப்‌ புலவராகத்‌ திகழ்ந்த ஒட்டக்கூத்தர்,‌ சிற்றிலக்கிய வகைகளில்‌ ஒன்றான உலா இலக்கியத்தினை அம்மன்னனின்‌ பெயரில்‌ விக்கிரமசோழன்‌ உலா என்ற பெயரில்‌ படைத்தார்‌. பாட்டுடைத்‌ தலைவனான விக்கிரம சோழனின்‌ அழகினையும்‌, வீரப்பெருமைகளையும்‌ உணர்ந்த அவனது நாட்டில்‌ உள்ள பெண்கள்‌ அம்மன்னன்‌ உலா வருகின்றபோது, அவனது அழகினைக்‌ கண்டு மகிழ்வதாகவும்‌, அவ்‌ வேளையில்‌ எழுவகையான பருவப்பெண்களும்‌ அவன்‌ மீது காதல்‌ வயப்பட்டு காம மயக்கத்தில்‌ மூழ்குவதாகவும்‌ சொல்லி, இந்த உலா இலக்கியத்தினைப்‌ படைத்துள்ளார்‌.

எழுவகைப்‌ பருவ மங்கைகளும்‌ தங்களது பருவத்துக்‌குரிய வயதில்‌ மன்னன்‌ மீது காதல்‌ வயப்படுவதாக குறிப்பிடுகின்றார்‌. இவ்வகையில்‌ பேசப்படுகின்ற பெண்கள்‌ பற்றிய செய்தி உலா இலக்கியத்தில்‌ “பின்னெழு நிலை” என்று பேசப்படுகின்றது. எழுவகைப்‌ பெண்களான, பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண்‌ என வகைப்படுத்தி அவர்களின்‌ செயல்‌களால்‌ மன்னன்‌ மீது கொண்டுள்ள ஈடுபாட்டினை‌ எடுத்து இயம்புகின்றனர்‌. இலக்கிய ஆர்வலர்கள், இந்த உலாவைப் படித்து இன்புறவேண்டும்.

விக்கிரமன், கி.பி.1118ஆம்‌ ஆண்டு, இளவரசுப்‌ பட்டமேற்று சுமார்‌ 17 ஆண்டுகள்‌ சிறப்புடன்‌ ஆட்சி செய்தான். கி.பி.1133 இல்‌ தம்‌ புதல்வனான இரண்டாம்‌ குலோத்துங்கசோழனுக்கு இராஜகேசரி என்ற பட்டத்துடன்‌ சோழநாட்டின்‌ பேரரசன்‌ ஆக்கினான்‌. சிதம்பரம் அருகே தனக்கு ஒரு மாளிகையும் கட்டிக் கொண்டு அங்கே தன் ஆட்சியின் இறுதி ஆண்டுகளைக் கழித்தான்.

சரி, விக்கிரமசோழன் கதையை முடித்து விட்டு, அடுத்த சோழனைப் பற்றிக் கதைக்கலாம்.

அவை விரைவில்..

குறிப்பு: ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி ஓட்டக்கூத்தராமே ! இதில் எவ்வளவு உண்மை என்பது தெரியவில்லை !  படியுங்கள்  லிங்க் கீழே : 

https://senguntharmudaliarhistory.blogspot.com/2020/10/Ottakoothar%20mudaliyar%20kaikolar.html

 

 

 

 

பிரபா ராஜன் சிறுகதைப் போட்டி – 3 ம் பரிசு வாங்கிய கதை – சூடா ஒரு கப் காபி – ஜி ஏ பிரபா

ஆடம்பரம்! - சிறுகதைகள்

என் பொண்ணு இறந்துட்டா.

இப்பதான் சில நிமிஷம் முன்னாடி. இன்னும் உடல் சூடு கூட அடங்கலை.

மனசுக்குள் இனம் புரியாத வேதனையுடன், லேசாய் ஒரு நிம்மதியும் எழுந்தது. அப்பாடாங்கற நிம்மதி. அவளின் தொல்லைகள், அவள் மூலம் மற்றவர்களின் தொல்லைகள் என்று அனைத்துக்கும் ஒரு விடுதலை.

சாருமதி இறந்துட்டா என்ற வார்த்தை, ஒவ்வொருவரின் மனதிலும் நிச்சயம் ஒரு ரிலாக்சை உண்டு பண்ணும்.

எனக்கு நல்லா தெரியும். நானே நினைச்சேனே.

“ஒரு தாயா நான் நினைக்கலாமா?

“கூடாது தான். ஆனா என் குழந்தை சிரமப்படக் கூடாதுன்னு நினைக்கற தாய் நான்.”

நான் சொல்றது யாருக்கும் புரியாது. ஒரு வட்டம் போட்டு அதுக்குள்ளே நில்லுன்னு பொண்ணை வற்புறுத்தற உலகம் தானே. நீ அம்மா. தியாகம் செய். அழு. குழந்தை போச்சு. உலகை வெறுத்து வாழுன்னு உபதேசம் செய்யும். மாறி நடந்தா, அவ திமிர் பிடிச்சவ. பெத்த பொண்ணை பறி கொடுத்துட்டு எப்படி ஜாலியா வாழறா பாருன்னு தூற்றும். என் மனசுல இருக்கிற கொதிப்பை யாரால் அறிய முடியும்?

அதுசரி. மனசுல ஓடற எண்ணங்களை எல்லாம் வெளிப்படுத்த முடியுமா? சரியான வார்த்தைகள்தான் உண்டா? உங்க வலி வேற, என் வலி வேற. வார்த்தைகள் மூலம் எல்லாவற்றையும் மிகச் சரியாக வெளிப்படுத்தறதுங்கறது ஊமை, குருடன் கிட்ட விளக்கற விஷயம் மாதிரிதான்.

ஆனா நம்ம மனசுக்குள் இருந்து பகவான் தானே பாக்கறார். இந்த உணர்வுகள் கூட அவர் தந்தது தானே! இந்தக் குழந்தையும் அவர் தந்ததுதான்.

“அம்மாடி உன் கர்ம வினை தீர நீ இந்த மாதிரி ஜென்மம் எடுக்கணும். உன்னை பத்திரமா பாத்துக்க சரோஜாவால் தான் முடியும். போன்னு சொல்லி அனுப்பி விட்டுட்டார்.

வந்து என் வயித்துல மூத்த குழந்தையா பொறந்துட்டா. ஆச்சு. இருபத்தெட்டு வயசு வரைக்கும் இருந்துட்டு, சட்டுன்னு இந்த உடல் பந்தங்களை உதறிட்டுப் போய்ட்டா.

எப்பவும் என் மேல் காலை போட்டுண்டுதான் தூங்குவா.

நேத்து ராத்திரி அப்படி படுத்தவ என் மேலயே மூத்திரம் போய் வச்சிருந்தா.

“என்னடி குழந்தே இப்படிப் பண்றே?”- நான் கேட்டுண்டே அவளை நகர்த்தி, அவ துணி, என் துணி எல்லாத்தையும் மாத்தி, வேற ஜமுக்காளம் போட்டு அதுல இழுத்து விட்டா அப்படியே துணியா கிடந்தப்பவே புரிஞ்சு போச்சு.

என் குழந்தை பயணம் கிளம்பிட்டா.

என் பிரார்த்தனை பலிச்சுடுத்து.

என்ன அப்படிப் பாக்கறீங்க? பெத்த குழந்தை சாகணும்னு ஒரு தாய் நினைப்பாளா?

“நான் நினைச்சேனே. எனக்கு முன்னாடி என் குழந்தை செத்துடணும்னு.

ஏன்னா என் குழந்தை ஒரு ஸ்பெஷல் சைல்ட்.

அதுக்கு என்ன அர்த்தம்? எனக்குத் தெரியாது. நான் எட்டாம் கிளாஸ் தாண்டலை. ஆனா ஆளாளுக்கு, என் பொண்ணு ஆட்டிசம், மூளை, வளர்ச்சி இல்லை. மெண்டலி ரிடார்டர்டு, பைத்தியம்னு. ஆனா நான் சொல்றேன், அது பரப்பிரம்மம், தெய்வக் குழந்தை. அது புரியாம அவளைப் பார்த்துச் சிரித்து, ஏளனம் செஞ்சவங்க தான் பைத்தியம்.

அமைதியா உட்காந்துண்டு இருக்கும். பேச்சு வரலை. சாப்பாடு தந்தா சாப்பிடும். இல்லைன்னா அப்படியே உட்கார்ந்துண்டு, இருக்கிற இடத்துலேயே மூத்திரம், மலம் கழிச்சிண்டு கெடக்கும். நானா பாத்து சரி செஞ்சா உண்டு. யாரும் கண்டுக்க மாட்டா.

வேற யாரு இங்க இருக்கா? சாருவோட அப்பா, அப்புறம் நான்தான். ஒரு புள்ளை இருக்கான். அவன் ஜெர்மனியில் இருக்கான். அவன் பொண்டாட்டி நல்லவதான். என்னைச் ’ச்சீ’ன்னு சொல்லாம இருக்காளே, அதுவே என் அதிர்ஷ்டம். ஆனா சாருவை ’ச்சீ’ன்னு சொல்லிட்டா.

அவ வந்திருந்தப்போ, மலம் கழிச்சி சாரு அதைக் கழுவாம அப்படியே போய் அவளைக் கட்டிண்டா. நாட்டுப் பொண்ணுக்கு அருவருப்பா இருக்கும்ல? ’ச்சீ’ன்னு தள்ளி விட்டுட்டா.

நான் கிச்சன்ல வேலையா இருந்தேன்.

பிள்ளை வேகமா வந்தான் என்கிட்ட.

“அம்மா இவளை இனி வீட்டுல வச்சுக்காதே. இந்த மாதிரி ஆளுங்களுக்குன்னு ஹோம் இருக்கு. அங்க விட்டுடலாம்னான். மனசு பொங்கித்து. அன்னைக்குத்தான் கடவுள் கிட்ட வேண்டிகிட்டேன். நான் சாகறதுக்கு முன்னாடி என் குழந்தை போயிடணும்னு.

என் பிள்ளை கிட்ட சொன்னா சந்தோஷப்படுவான்.

அடடா, நான் சாரு அப்பா கிட்டயே இன்னும் சொல்லலையே.

குழந்தையை காலை இறக்கி விட்டேன். வெளியில் வந்தேன்.

இவர் பூப்பறிச்சி தட்டுல வச்சிருந்தார். செம்பருத்தி, நந்தியா வட்டை, ரோஸ் எல்லாம் இருக்கும். சாரு எந்நேரமும் அது பக்கத்துலதான் நின்னுண்டு இருப்பா. மணிக்கணக்குல.

“சாரு எழுந்துட்டாளா? பால் வாங்கிண்டு வந்துட்டேன்.”

“உடனே உங்களுக்கு காபி வேணுமா?”

“சாருவுக்கு தரணும்ல?”

“வேண்டாம்.”

“ஏன்?”

“அவ செத்துட்டா.”

“என்னது?” அவர் அலறினார். என்னதான் இருந்தாலும் பெத்த குழந்தை இல்லையா?

“உளறாதே. மயக்கமா இருக்கப் போறா.”- அவர் வேகமாக உள்ளே ஓடினார். பக்கத்து வீடுகள் வந்தது. எதிர் வீட்டில் ஒரு டாக்டர் இருந்தார். அவர் வந்து ’சாரு இறந்துட்டா’ என்று உறுதிப்படுத்தினார். இவர் இடிந்து உட்கார்ந்தார். மேல் வீட்டில் குடி இருக்கும் கேஷியர் தானாக வந்து பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார். தெரு முழுக்க விஷயம் பரவ, இவரின் தங்கை பையன் பாலு வந்து விட்டான். அவன்தான் எங்களுக்கு ஆதரவு. அடிக்கடி வந்து பார்ப்பான்.

இங்க வீட்டில் யாருக்கானும் உடல்நலம் சரியில்லை என்றால் அவன்தான் எல்லாம் செய்வான். இவருக்கு ஹார்ட் அட்டாக் வந்த போது, சாரு கீழே விழுந்து கால் உடைந்த போது, எனக்கு கருப்பை எடுத்த போது பாலு தான்.

என் பிள்ளை உடனே கிளம்பி வர முடியாது. இதற்கெல்லாம் அவன் அடிச்சுப் பிடிச்சு வர முடியுமா? பணம் அனுப்பிடுவான். பாலு தான் சகலமும் பாத்துண்டான்.

கடவுள் யாரையும் நிர்கதியாய் விடறதில்லை. எதோ ஒரு மனுஷா ஆதரவைக் காண்பிப்பார்.

இப்பவும் அவன் தான் நின்னான்.

“நீங்க உட்காருங்கோ மாமா” என்று சொல்லி, அவரிடம் கேட்டு ஒவ்வொன்னையும் செய்ய ஆரம்பித்தான். அந்த மனசு எப்படி கொந்தளிக்கும்னு எனக்குத் தெரியும்.

சாரு பொறந்து நாலு வயசு வரைக்கும் நல்லாத்தான் இருந்தா. ஒண்ணாங் கிளாஸ் கூடப் போனாளே. அப்புறம்தான் செயல்ல மாற்றம் தெரிஞ்சு டாக்டர்கிட்ட காட்டி, அவர் கண்டுபிடிச்சு இவ ஸ்பெஷல் சைல்டுன்னு சொல்லி…!

அந்த நாட்களை நினைக்கவே முடியாது. கொடுமையான நரக வேதனை நாட்கள். இவர் இடிஞ்சு உட்காந்துட்டார்.

என்னவோ சொல்றோம் ஆண்கள்னு. ஆனா ரொம்பப் பூஞ்சை மனசு இவங்களுக்கு. பொண்களோட தைரியத்துல தான் இவங்க செயல் படறதே. நான்தான் தெளிந்தேன்.

“இதோ பாருங்க. பகவான் நம்பளை நம்பி இந்தக் குழந்தையை அனுப்பி இருக்கார். எப்படி இருந்தாலும் இவ நம்ம குழந்தை. பாத்துக்கலாம்.”

“நம்ம காலத்துக்குப் பிறகு இவளை யார் பாத்துப்பா?”

“அது பத்தி நமக்கு என்ன கவலை. பகவான் கவலை அது.”

நான் அப்படித்தான் நினைச்சேன். எனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பு சாரு. அவளை நான் பத்திரமா பாத்துகிட்டேன். அவ வளர, வளர என் பொறுப்புகளும் அதிகரிச்சுது. அவ பரப்பிரும்மம் என்றாலும், அந்தந்த வயசுக் குழந்தைகளுக்கு உண்டான உணர்வுகள் இல்லாமையா இருக்கும்.

குழந்தைல அழகழகா கவுன், அப்புறம் பாவாடை சட்டை, பிறகு புடவை. காலைல எனக்கு எத்தனை வேலை இருந்தாலும், அவளை குளிக்க வச்சு, அலங்காரம் செஞ்சு ஹால்ல உட்கார வச்சுடுவேன். அப்போ என் மாமியார் இருந்ததால அவங்க பார்வைல உட்கார வச்சுட்டு என் வேலைகளைப் பார்ப்பேன்.

ஆனா அவங்க, என் நாத்தனார், என் பையன் பாலாஜி எல்லாரும் சாருவை பைத்தியம்னு சொல்றப்போ, மனசு துடிக்கும். அதுவும் பாலாஜி ’என் பிரண்ட்ஸ் வரப்போ இவளை வெளில விடாதே’ங்கறப்போ மனசு கொதிக்கும்.

அவன் கல்லூரி நண்பனும், என் மாமா ஒருத்தரும் இந்தக் குழந்தை கிட்ட தப்பா நடந்துக்கப் பார்த்தப்போ, அவங்களை செருப்பால அடிச்சு விரட்டினேன். அப்பவும் எல்லோரும் என்னைத்தான் குற்றம் சாட்டினாங்க.

“நீ இருக்கிற வரைக்கும் அவளைக் காப்பாத்துவே. உனக்குப் பிறகு?”- பாலாஜி கேள்வி கேட்டான்.

“நீ பாத்துக்கறியா?”

“எனக்கென்ன தலைவிதி?”

“அப்போ உன் வேலையைப் பார்த்துண்டு போ.”

அவனே தான் லவ் பண்ணி கல்யாணம் செஞ்சுண்டான். நான் போகலை. இவர் மட்டும் போய்ட்டு வந்தார். சாரு மாதிரி இவர் இன்னொரு பரப்பிரம்மம். நான் சாருவுக்கு என்னென்ன கேக்கறேனோ, எல்லாம் வாங்கித் தருவார். அமைதியா பாத்துட்டு போயிடுவார்.

நகைக்கடை, பட்டுப் புடவை விளம்பரத்துல வர பெண்கள் மாதிரி அழகா அலங்காரம் செய்வேன். மாதா மாதம் மருதாணி வச்சு, தலையை எண்ணெய் தேச்சு தண்ணி விட்டு, ஒரு பியூடிஷியனை வரச் சொல்லி அழகு சிகிச்சை செய்து அற்புதமா வச்சிருப்பேன்.

தங்க விக்கிரகம் மாதிரி இருப்பா தெரியுமா? தகதகன்னு ஒரு நிறம். அதுவும் வயசுக்கு வந்த பெறகு அப்படி ஒரு மினுமினுப்பு. எதுக்கு பகவான் அப்படி ஒரு அழகைக் கொடுத்தார்னு தெரியலை.

அவ அழகுன்னுதான் பார்த்தாங்களே தவிர, மன வளர்ச்சி இல்லாத குழந்தைன்னு யாருக்கும் தெரியலை. அவளை விட்டு நான் விலக மாட்டேன். ஒரு நிமிஷம் அந்தப் பக்கம், இங்கன்னு விலகினது இல்லை. கண் கொத்திப் பாம்பா காத்திருந்தும் ஒரு மிருகம் அவகிட்ட அத்து மீறிடுச்சு. அதுக்கும் கருணை காட்டினா சாரு.

என் மாமியார் இறந்தப்போ நான் ஒரு நாள், நாலு தெரு தள்ளி இருந்த என் மச்சினர் வீட்டுக்குப் போயிட்டேன். அங்கதான் அவங்க காரியம் நடந்தது. மாடியில குடியிருந்த பெண்ணுகிட்ட பாத்துக்கச் சொல்லிட்டுதான் போனேன். அவ ரேஷன் கடைக்குப் போகணும்னு அவ மாமனார் கிட்ட சாருவை ஒப்படைச்சிட்டுப் போயிருக்கா. அந்த மிருகம் பெண் அப்படின்னு தானே பார்த்தது.

என் குழந்தைக்கு தொடுதல் பற்றி சொல்லிக் கொடுத்திருக்கேன். அவன் தொட்டதும் கத்தியிருக்கா. அந்த மிருகம் அவளை அடிச்சிருக்கு. சாரு அவனை எட்டி உதைச்சு, கையைக் கடிச்சு வெளில ஒடி வந்திருக்கா. அதுக்குள்ளே அவனுக்கு அதிர்ச்சியில ஸ்ட்ரோக் வந்துருக்கு. சாரு போட்ட கூப்பாடுல, அக்கம் பக்கம் ஓடி வந்து நிலைமையைப் புரிஞ்சுகிட்டு, அவனை ஹாஸ்பிடல் கொண்டு போனது.

அந்தப் பொண்ணு ஆயிரம் தரம் மன்னிப்பு கேட்டுது.

என் சாரு அவனை மன்னிச்சா போதும்னேன்.

அவன் வந்தான். கை, கால் விளங்கலை. கண்ணீர் மட்டும் வழிஞ்சது. அவன் கண்ணீரைத் துடைத்து, தண்ணீர் கொடுத்தா என் தெய்வம். கதறி அழுதது அந்தக் குடும்பம்.

பாலாஜி கூட நெகிழ்ந்து போயிட்டான்.

“இந்த புத்திக்கு இது கூடத் தெரியுதா?”

“அவ புத்திக்கு என்னடா குறை. சொல்லப் போனா அவதான் முழுமையான மனுஷி. நீங்கதான் மன வளர்ச்சி இல்லாதவங்க.”

“…”

ஆனா பாலாஜியும் அவளை ரொம்ப வெறுத்தான். கல்யாணத்தப்போ அவளைக் கூட்டிண்டு வரக் கூடாதுன்னு சண்டை. அப்படின்னா நானும் வரலைன்னு சொல்லிட்டேன்.

“என் அக்கான்னு சொல்ல ரொம்ப அவமானமா இருக்கு.”

“எல்லாம் நல்லா இருந்தாத்தான் உறவுன்னு இல்லை. எதுவும் சரியா இல்லாதப்பவும் அன்பா இருக்கறதுதான் அக்கறையான உறவு. உனக்கு அவமானம்னா நீ இனி மேல இங்க வராதேன்னு சொல்லிட்டேன்.”

“நான் தான் உனக்குக் கொள்ளி போடணும்.”

“தேவையில்லை. உடம்பு நாறிச்சின்னா, முனிசிபாலிடியில தூக்கிப் போட்டுடுவான்”

என் பதிலில் கோபம் வந்து போனவன் தான் பாலாஜி. அஞ்சு வருஷம் ஆச்சு.

வராட்டிப் போறான்.

செத்த பிறகு அழுது பிரயோஜனம் இல்லை. இருக்கற வரை அவங்ககிட்ட அன்பா அனுசரணையா இருக்கணும். புத்தி உள்ளவங்களோ, இல்லாதவங்களோ, அதைப் பத்தி கவலை இல்லை. தன்னைப் போலவே ஒரு மனித உயிர். நேசிப்பும், பரிவும் இருந்தா எந்த வன்முறையும் இல்லையே.

சாரு எல்லார் கிட்டயும் எவ்வளவு அன்பா இருப்பா தெரியுமா?

யாரானும் வந்தா நான் சொல்லாமலேயே தண்ணீர் கொண்டு வந்து தருவா. அவங்க பக்கத்துல சிரித்தபடி நிப்பா. பாலாஜின்னா உயிர். ஆனா அவன் அக்காவை வெறுத்தான்.

அவ்வளவுதான் மனிதர்கள். அவ்வளவுதான் மனித வாழ்க்கை. மரணம் தலைக்கு மேல நின்னுகிட்டே இருக்கு. அதை உணர்ந்து நடக்கணும். மனித வாழ்க்கை பாறை மாதிரி.

எப்பவும் பாறைகள் மேல் அலைகள் மோதிகிட்டே தான் இருக்கும். அதனால் ரெண்டும் சலிச்சிக்கறது இல்லை. அதது வேலையை அதது செஞ்சுகிட்டேதான் இருக்கும்.

நல்லதோ கேட்டதோ வாழ்க்கை நகர்ந்து கொண்டே தான் இருக்கும். சலித்துக் கொள்ளலாம், ரசிக்கலாம். வளைந்து, வளைந்து. அன்பையும், கருணையையும் அள்ளி வழங்கலாம்.

என் சாரு வழங்கினாள். மேல் வீட்டுப் பெண்ணோட மாமியார் தன் கணவனின் செய்கைக்காக வந்து நின்னு அழுதா. அப்போ சாரு செஞ்சது எதிர்பாராமல் செய்த செயல்.

அந்த அம்மாவின் கண்ணைத் துடைத்து விட்டாள். தத்தித் தத்தி நடந்து போய் தன் பட்டுப் புடவை ஒன்றைக் கொண்டு வந்து அவளிடம் நீட்டினாள். கதறி அழுதாள் அந்த அம்மா.

என்னையும் கலங்க வைத்தாள் என் சாரு.

அதன் பிறகு சாருவுக்கு நான் சேர்த்த எட்டு பவுன் நகையை இரண்டு ஏழைக் குழந்தைகளின் கல்யாணத்துக்குக் கொடுத்தேன். அநாதை இல்லக் குழந்தைகளின் படிப்புக்கு சில நகைகளை, பட்டுப் புடவையை விற்று, அவள் கையால் பணத்தைக் கொடுத்தேன்.

பாலாஜி கத்தினான்.

“அவளையே வேண்டாம்னா பிறகு அவ நகைகள் உனக்கெதுக்கு?”

அவனால் பதில் சொல்ல முடியவில்லை.

“பாலாஜிக்குச் சொல்லணும்ல?” என் தங்கை கணவர்.

விஷயம் தெரிஞ்சு எல்லோரும் வர ஆரம்பிச்சிட்டா. துக்கம் விசாரிக்கறேன்னு ஆளாளுக்கு கிளற ஆரம்பிச்சாங்க.

“இதோ பாருங்க. அது நல்ல ஆத்மா. யாருக்கும் தொந்தரவு தராம போயிட்டா. அவ மரணம் அவளுக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் ஒரு விடுதலை. என் காலத்துக்கு அப்புறம் அவ நிலை என்னங்கற கவலைக்கு தீர்வு சொல்லிட்டா. எல்லோருக்கும் உள்ளுக்குள் மகிழ்ச்சின்னு எனக்குத் தெரியும். ஆக வேண்டியதைப் பாருங்க.”

“உனக்கு வருத்தமே இல்லையா சரோஜா?” – அண்ணா

“நான் ஏன் வருந்தணும்.? ஒரு பரப்பிரும்மம் என் வயத்துல வந்து பொறந்திருக்கு. எந்த ஒரு கல்மிஷமும் இல்லாம, மனசுல எந்த தீய உணர்வுகளும் இல்லாம தெய்வம் என் வயித்துல வந்து பொறந்திருக்கு. என்னை நம்பி பகவான் தந்த ஒரு உயிரை பத்திரமா பாதுகாத்து, அவர்கிட்ட திரும்பவும் ஒப்படைச்சிட்டேன். எவ்வளவு பெரிய கொடுப்பினை இது. நன்றி இறைவா.”

நான் நிதானமா, அழுத்தமா பேசினேன்.

“அதனால் தான் நான் அழலை. அற்புதமான ஒரு காரியத்தை செஞ்சுட்டு அழுதா, நான் அந்தக் குழந்தைக்கு துரோகம் செஞ்சவளாவேன். போங்க, போய் அவளுடைய இறுதி யாத்திரைக்கு ரெடி செய்யுங்க.”

என் கணவர் அருகில் வந்து என் கையை இறுகப் பிடித்துக் கொண்டார்.

முதுகைத் தட்டிக் கொடுத்தார்.

“நான் பாலாஜிக்கு தகவல் சொல்லிட்டு வரேன்.” எழுந்து போனார்.

மனசு பதற்றம் தணிந்து அமைதியா இருந்தது எனக்கு.

நான் உள்ள திரும்பி குரல் கொடுத்தேன்.

“யாரானும் சூடா ஒரு கப் காபி கொடுங்களேன்.”