அட்டைப்படம் – அக்டோபர் 2022

General knowledge full forms list most used english words - Knowledge: क्या  आपको पता हैं SORRY और EAT जैसे शब्दों के फुल फॉर्म? जानिए यहां – News18  हिंदी

(தவிர்க்க முடியாத காரணங்களால்  இம்மாதம்  உலக இதிகாசங்கள், சரித்திரம் பேசுகிறது, வ வே சு வைக்  கேளுங்கள் மூன்று பகுதிகளும் இடம் பெறவில்லை.

சில நாட்களில் அவை வெளிவரும். 

வெளியிடும்போது அதற்கான அறிவிப்பை அறிவிக்கிறோம். நன்றி!)

பொன் குலேந்திரன் அவர்கள் அமரர் ஆனார் !

தன் அயராத உழைப்பால் எண்பது வயதிற்கு மேலாகியும் எழுத்துலக ஜாம்பவானாக  இருந்துவந்து, புலம் பெயர்ந்த மனிதர்களில் தாய் மண்ணீன்மீது மட்டில்லா பாசமும் நேசமும் கொண்ட பெரு மதிப்பிற்குரிய பொன் குலேந்திரன் அவர்கள் 11 அக்டோபர் அன்று கனடாவில் இயற்கை எய்தினார் என்பதைக் கேட்டதும் நமது குவிகம் நண்பர்கள் அனைவரும் மீளாத் துயரமடைந்தோம்!

துயரில் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நட்பு  வட்டங்களுக்கும்  குவிகம் சார்பில் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்!   

 

 

நண்பர் ராய செல்லப்பாவின் இறுதி அஞ்சலி: 

கனடாவில் வாழும் புலம்பெயர் இலங்கைத் தமிழரும், தமிழ்- ஆங்கில இருமொழி எழுத்தாளரும், எனது அருமை நண்பருமான திரு பொன். குலேந்திரன் ஐயா அவர்கள் இயற்கையெய்திவிட்டார்கள் என்ற தகவல் அறிந்து வருந்துகிறேன். 
He passed away on Oct 11, 2022 at Missisauga, Ontario, peacefully, surrounded by his family members. Public viewing will be on Oct 15, 2022 (5pm-9pm) at St.John’s Dixie Cemetery & Crematorium, 737, Dundas St E, Missisauga, ON LAY 2B 5.
அவருடைய முகநூல் பதிவில் 2018இல் அவர் எழுதிய “நீங்களும் எழுத்தாளராகலாம்-எப்படி?” என்ற பதிவை இங்கு பகிர்ந்துகொள்கிறேன். 
எப்படி நீங்களும் எழுத்தாளர் ஆகலாம்?
வாசிப்பது, சிந்திப்பது எழுதுவது , பகிர்வது , நிட்சயம் கவலைகளைப் போக்கும் . பல தேச நண்பர்களை உருவாக்கும். பல கலாச்சாரங்களை பற்றி அறியாலாம் . தொழில் நுட்பம் இதற்கு எமக்கு பெரிதும் உதவுகிறது :கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு” இதோ சில சிறு கதைகள் எழுத கவனிக்க வேண்டியவை .
1 கதைகள் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் முக்கியம்
2 தமிழை Unicode யில் எழுத Tamil. Google input tools பாவியுங்கள்
3 தமிழை bamini எழுத்துருவில் எழுதினால் Unicode யுக்கு மாற்றலாம் முக நூல், மின் அஞ்சல், மின் நூல் ஆக்கியவையில் எழுத Unicode அவசியம்
4 தினமும் நடப்பதை அவதானியுங்கள். செய்திகளை வாசியுங்கள். அதில் சிறு கதைக்கு நல்ல கரு கிடைக்கும்
5 கதை நடக்கும் சூழலை சுருக்கமாக ஆரம்பித்தில் விபரிதது வாசகர்களை அழைத்து அந்த இடத்துக்கு கூட்டிச் செல்லுங்கள்
6 கதையின் தலையங்கமம் . கவர்ச்சியாகவும் சுருக்கமாகவும் கதையின் கருவை எடுத்துச் சொல்வதாகவும் இருக்க வேண்டும் . உதாரணம் ( முடிவு, வேலி. மலடி, பெரியம்மா , ஆச்சி.. )
7 கதாப்பாத்திரங்களின் பெயர்கள் சுருக்கமாக இருப்பது நல்லது.
8 கதையில் வர்ணனைகள் அதிகம் இல்லாமல் விறுவிறுப்பபாக எழுத பழக வேண்டும். கதைக்கு எதிர்பாராத முடிவு அவசியம் . முடிந்தளவு யதார்த்தமான கதைகளை வாசகர் விரும்புவார்கள். உதாரணம் ஒரின சேர்க்கை, முதியவயதில் காதல், மதமாற்றம். அவர்கள் மனதில் கேள்விக் குறியைத் தூண்டி விடுங்கள்
9 வசனத்தில் மண்வாசனை வீசவேண்டும்
10 ஒரு வட்டத்துக்குள் கதைகள் இருக்கக் கூடாது . உதாரணம் யாழ் குடா நாடு. காதல் .
11 அப்பில் முதல் கடியில் சுவைத்த போது சுவையாக இருப்பின் முழு அப்பிலையும் சாப்பிட வேண்டும் போல் இருக்கும். அது போல் கதை இருக்க வேண்டும்.
12 எழுதி முடித்வுடன் குறைந்தது மூன்று நாட்களுக்கு ஒரு பக்கத்தில் வைத்து விடுங்கள். அதன் பின் திரும்பவும் எடுத்து வாசியுங்கள். மாற்றங்கள் மனதில் தோன்றும்
13 கதையில் நகைச்சுவையை சேருங்கள்
14 கதி வாசகர்களை பல தடவை வாசிக்க வையுங்கள். அதன் அர்த்தம் அவர்களுக்கு கதை பிடித்து கொண்டது என்பதாகும் . கதை உண்மையில் நடப்பது போல் இருக்க வேண்டும்.
15 இறுதியாக கதையின் முடிவு சமூகத்துக்கு ஒரு செய்தியை சொல்லவேண்டும்
16 மிக முக்கியமாக எழுத்து பிழைகள், இலக்கணப் பிழைகள் இல்லாமல் கதைகள் ; எழுத் வேண்டும், இதற்கு neechalkaran.com மென் பொருளை பாவிக்கலாம் . இன்னும் பல மென் பொருள்கள் உண்டு
17 இலக்கிய திருட்டை தவிர்கவும்
18 ஆஆங்கில வார்த்தைகளை முடிந்தளவு தவிர்க்கவும் .
19 நீங்கள் எழுத எழுத் கற்பனை வளம் வளரும். புதிய யுக்திகளை கையாளுவீர்கள்.

குதூகலம் தரும் குழந்தை பாடல்கள்-ஜி.பி.சதுர்புஜன்

                                        

  குவிகம் வாசகர்களுக்கு வணக்கம்.

  “குதூகலம் தரும் குழந்தை பாடல்கள்” என்ற பாடல் தொடரை உங்கள் வீட்டு குழந்தைகளுக்காக வழங்குகிறேன்.

  எளிய நடையில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு பாடலையும் அமைக்க முயற்சிக்கிறேன். ஒவ்வொரு குவிகம் மாத இதழிலும் ஒன்று, இரண்டு அல்லது மூன்று சிறிய பாடகள் இடம் பெறும். பாடல்களை செல்வி சாய் அனுஷா அழகாக தன கொஞ்சும் குரலில் பாடிய வீடியோக்களையும் இத்துடன் இணைத்துள்ளோம்.

  பார்த்து, கேட்டு மகிழுங்கள் !

 

இதுவரை இந்த பாடல் தொடரில் இடம் பெற்றவை:

 

  1. பிள்ளையார் பிள்ளையார் – ஜூலை 2020
  2. அம்மா அப்பா ! –  ஜூலை 2020
  3. ஹையா டீச்சர் ! – ஆகஸ்ட் 2020
  4. இயற்கை அன்னை ! – ஆகஸ்ட் 2020
  5. எனது நாடு – செப்டம்பர் 2020
  6. காக்கா ! காக்கா ! – செப்டம்பர் 2020
  7. செய்திடுவேன் ! – அக்டோபர் 2020
  8. மயிலே! மயிலே! மயிலே! – அக்டோபர் 2020
  9. நானும் செய்வேன் ! – நவம்பர் 2020
  10. அணிலே ! அணிலே ! –  நவம்பர் 2020
  11. எல்லையில் வீரர் ! – டிசம்பர் 2020
  12. பலூன் ! பலூன் ! பலூன் ! – டிசம்பர் 2020
  13. ஜன கண மன ! – ஜனவரி 2021
  14. ஊருக்குப் போகலாமா ? – ஜனவரி 2021
  15. எங்கள் வீட்டு மொட்டை மாடி ! – பிப்ரவரி 2021
  16. பட்டம் விடலாமா ? – பிப்ரவரி 2021
  17. சாமி என்னை காப்பாத்து ! – மார்ச் 2021
  18. கடற்கரை போகலாம் ! – மார்ச் 2021
  19. பிறந்த நாள் ! – ஏப்ரல் 2021
  20. வேப்ப மரம் !    – ஏப்ரல் 2021
  21. பஸ்ஸில் போகலாம்   – மே  2021   
  22. சிட்டுக் குருவி – மே   2021  
  23. ஆகாய விமானம் – ஜூன் 2021
  24. எங்கள் வீட்டுத் தென்னை மரம் – ஜூன் 2021
  25. பாட்டி – கதை சொல்லு – ஜூலை 2021
  26. வீட்டுக்கு வா ! – ஜூலை 2021
  27. தா தீ தோம் நம் !          – ஆகஸ்ட் 2021
  28. விளையாடலாம் !           – ஆகஸ்ட் 2021
  29. மழையே வா ! – செப்டம்பர் 2021
  30. பாரதிக்கு பாப்பா சொன்னது ! – செப்டம்பர் 2021
  31. தோட்டம் போடலாமா ?   – அக்டோபர் 2021
  32. வள்ளுவர் தாத்தா !   – அக்டோபர் 2021
  33. தமிழ் ! – நவம்பர் 2021
  34. பாப்பாவுக்கு பப்பாளி ! – நவம்பர் 2021
  35. கைக்கடிகாரம் ! – டிசம்பர் 2021
  36. ஓடுது பார் ! – டிசம்பர் 2021
  37. கவிஞன் ஆவேன் ! – ஜனவரி 2022
  38. என்ன செய்யப் போகிறாய் ? – ஜனவரி 2022
  39. பார் பார் மெட்ரோ பார் ! – பிப்ரவரி 2022
  40. நேதாஜி ! நேதாஜி ! – பிப்ரவரி 2022
  41. என்ன மரம் ! – மார்ச் 2022
  42. சைக்கிள் ! – மார்ச் 2022
  43. காந்தி தாத்தா – ஏப்ரல் 2022
  44. சிறகுகள் இருந்தால்…… – ஏப்ரல் 2022
  45. தோட்டத்தில் காய்கறி – மே 2022
  46. இந்தியாவும் தமிழ்நாடும் ! – மே 2022
  47. மழை வருது ! – ஜூன் 2022
  48. சுற்றிப் பார்க்கலாமா ? – ஜூன் 2022
  49. என் சித்திரம் ! – ஜூலை 2022
  50. தஞ்சாவூரு பொம்மை ! – ஜூலை 2022
  51. பூங்கா ! – ஆகஸ்ட் 2022
  52. பூரி வேணும் ! – ஆகஸ்ட் 2022
  53. பூனையாரே ! – செப்டம்பர் 2022
  54. எதைச் செய்தாலும் ! – செப்டம்பர் 2022

 

கடைக்குப் போகலாமா ?

சந்தியா'ஸ் குக் புக்: April 2020

அப்பா அப்பா நீயும் நானும் –
கடைக்குப் போகலாமா ?
கடைக்குப் போய் கடலை மிட்டாய் –
வாங்கித் தின்னலாமா ?

கடக் முடக்கென்று கடித்துக் கடித்து
இன்பம் பெறலாமா ?
கரும்பு ஒன்றும் கடித்துச் சுவைத்து
சாறும் குடிப்போமா ?

லட்டு ஜாங்கிரி கடையில் இருக்கும் –
எனக்கொன்று தருவாயா ?
வாழைப்பழமும் பிடிக்கும் எனக்கு –
வாங்கியே தருவாயா ?

முறுக்கு தட்டை எல்லாம் வாங்கி –
வீட்டுக்கு வரலாமா ?
காரா சேவும் கரகர மிக்சரும் –
வாங்கியே வரலாமா ?

அம்மாவுக்கு பரிசுப் பொருளொன்று –
எடுத்து வருவோமா ?
தம்பிப் பாப்பா கேட்ட பொம்மையை –
கொண்டே வரலாமா ?

அப்பா அப்பா நீயும் நானும் –
கடைக்குப் போகலாமா ?
கடைக்குப் போய் கடலை மிட்டாய் –
வாங்கித் தின்னலாமா ?

 

**************************************************************

 பூ ! பூ ! பூ !

Visiting the Outdoors Garden | Beautiful flowers garden, Most beautiful gardens, Beautiful nature

பூ பூ பூ ! பூ ! பூ பூ பூ !
பூ பூ பூ ! பூ ! பூ பூ பூ !

எனக்குப் பிடித்தது பூ பூ பூ !
இயற்கை தந்தது பூ பூ பூ !
எத்தனை விதமாய் பூ பூ பூ !
அழகாய் இருக்குது பூ பூ பூ !

பட்டு வண்ணத்தில் ரோஜாப்பூ !
மணக்கும் மதுரை மல்லிப்பூ !
மஞ்சள் நிறத்தில் சாமந்திப்பூ !
மனதை மயக்கும் தாமரைப்பூ !

குறுகுறுவென குண்டுமல்லிப்பூ !
உதிரி உதிரியாய் அரளிப்பூ !
பிள்ளையாருக்குப் பிடித்த எருக்கம்பூ !
வயலட் நிறத்தில் டிசம்பர் பூ !

கண்ணைப் பறிக்கும் கனகாம்பரப்பூ !
பூஜைக்கேற்ற பவள மல்லிப்பூ !
தோட்டத்தில் சிரிக்கும் நந்தியாவட்டைப்பூ !
ஒய்யாரக் கொண்டையில் செம்பருத்திப்பூ !

சிமிழ் சிமிழாக சங்குப்பூ !
வெள்ளை வெளேரென தும்பைப்பூ !
தலைக்கு வேணும் தாழம்பூ !
தீபாவளிக்கு மத்தாப்பூ !

 

 

 

 

 

 

“வளர்ந்தகால அனுபவங்களின் பிரதிபலிப்பு!” மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

 

வளரும் போது நம்மைச் செதுக்கி உருவாக்குவது பல அனுபவங்களும், ஒவ்வொரு நபரும்! மணந்து கொள்ள நிச்சயமான யாஸ்மீன் அப்துல் தம்பதியரின் வாழ்வில் இது எவ்வாறு பிரதிபலித்தது என்று இங்குப் பார்க்கலாம்.

முப்பது வயதான யாஸ்மீன் உதவியாளராக வேலை செய்து கொண்டு மாலையில் மேற்படிப்பு படித்து வந்தாள். அப்துல் இவளுடைய வயதே. பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலை செய்ய ஆரம்பித்து இருந்தான். எந்த வேலையிலும் சில மாதங்களுக்கு மேல் நீடிக்கவில்லை.

அப்துல் யாஸ்மீன் திருமணம் நிச்சயம் ஆயிற்று. நிச்சயதார்த்தம் முறைப்படி செய்யப்பட்டது. ஆறு மாதங்களுக்குப் பின்னர் கல்யாணம். ஆரம்பத்தில் மிக உற்சாகம் பொங்கி இருவரும் சந்தோஷமாக இருந்தார்கள். யாஸ்மீன் முதுகலைப் படிப்பு தொடங்கினாள்.

போகப் போக இருவர் மனதிலும் குழப்பங்கள் உண்டாயின. யாஸ்மீனுக்கு, அப்துல் பொறுப்பான கணவராக இருப்பானா? அப்துலுக்கு, யாஸ்மீன் தன்னையும் கவனித்துக் கொள்வாளா இல்லை வேலைக்குப் பிரதானம் தருவாளா?

இவையெல்லாம் சேர்ந்ததால், நண்பர்கள் பரிந்துரைத்ததை வைத்து என்னை ஆலோசிக்க முடிவு செய்தார்கள். என்னைச் சந்திக்கும் பொழுது அப்துல் வேலையில் இல்லை. யாஸ்மீன் சொன்னது, அவளுடைய ஆதங்கமே அப்துல் வேலை தேடாமல் இருப்பதே. அப்துல் தன்னை யாஸ்மீன் தனிமையில் விட்டு விட்டாள், முன் போலக் கவனிக்காமல் இருக்கிறாள் என எண்ணினான். இதைச் செய் அதைச் செய் என யாஸ்மீன் சொல்வதையும் துன்புறுத்தலாகப் பாவித்தான். அப்துலால் தன்னையே ஊக்குவிக்க முயலவும் இல்லை.

யாஸ்மீன் தன்னால் முடிந்த வரை கல்யாணத்திற்கு நிச்சயம் செய்த உறவைப் பலப்படுத்துவதாக எண்ணினாள். அப்துல் இதைக் கண்டு கொள்ளவில்லை என அவளுக்குத் தோன்றியது.

அவளுடைய பெற்றோருக்கு யாஸ்மீன் முதலில் பிறந்தவள். இவளுடைய பதினைந்தாவது வயதில் தந்தை தீ விபத்தில் இறந்தார். அன்றிலிருந்து தாயார் மன அழுத்தத்திலேயே இருந்ததாக இவளுக்கு ஞாபகம்.

தங்கை, தம்பிகளைப் பார்த்துக் கொள்வது, வீட்டுப் பொறுப்பு, அவர்கள் நடத்தி வந்த கடையைப் பார்த்துக் கொள்வது, என எல்லாவற்றையும் யாஸ்மீன் ஒற்றை ஆளாகச் செய்து வந்தாள். இதனுடன் தன் படிப்பில் முழு கவனத்தை செலுத்தினாள். படித்தால்தான் நல்ல வேலை, சம்பாத்தியம் கிடைக்கும் என்று.

அப்துலின் அம்மா தனி ஆளாக ஒரே மகனான அப்துலை வளர்த்தாள். ஏதோ ஒரு வாக்குவாதத்தில் அவன் அப்பா அவர்களை விட்டுச் சென்று விட்டதால்.

அம்மா தான் அப்துலின் உலகம். அம்மாவுக்கும் அப்படித்தான். அவனுக்குக் குறை ஏதும் இருக்கக்கூடாது என்று அம்மா இரு வேலை, பல மணிநேரம் உழைத்ததால் அவனே தன் தேவைகளைப் பார்த்துக் கொள்ள வேண்டியாயிற்று. சாப்பிடுவது, பாத்திரங்களைச் சுத்தப்படுத்தி வைப்பது, துணிகளை மடிப்பது, வெளியே அணிவதை இஸ்திரி போடுவது எனச் சகலத்தையும்.

என்னுடன் பல ஸெஷன்களில் இவையெல்லாம் வெளிவந்தபோது எனக்குத் தெளிவாயிற்று, இவர்களின் குழப்பங்கள் எல்லாவற்றின் மூல காரணம் அவரவர் வளர்ச்சிகால அனுபவங்களின் தாக்கம் என்று. இதை அவர்கள் உணரச் செய்வது எப்படி? எங்களது படிப்பு, பயிற்சியில் வருவோரின் உடல் – உளவியல் – சமூக ரீதி, அன்று-இன்று என்பதையும் முழு அளவில் ஆராய்ந்து, புரிந்து, புரிய வைப்பது ஓர் அங்கம். இதை எங்கள் பாஷையில், ஹோலிஸ்டிக், ஸிஸ்டமிக் அணுகுமுறை என்போம்.

அவர்களின் பகிர்தலை வைத்து ஆரம்பித்தேன். யாஸ்மீன் அப்துல் இருவரையும் அவர்களது கடந்த காலங்களை நினைவு கூர்ந்து கவனிக்கச் செய்ய பலவகையான வழிகளை அமைத்தேன். முக்கியமாக எவ்வாறு வளர்ந்து வந்த பருவம் இப்போதைய நிகழும் நிலையுடன் ஒத்துப் போகிறது என்ற பாதையை நினைவு கூறும் வகையில் அமைத்தேன். நிகழ்ந்த காலத்தைப் போல இப்போது நேர்கிறதோ என்று யோசிக்க, ஆராயத் தூண்டினேன். முதலில் இது அவர்கள் மனதிற்குப் பிடிக்கவில்லை. பல ஸெஷன்களுக்குப் பிறகே தங்களை அறியாமல் அப்படித்தான் நேர்கிறது என உணர்ந்தார்கள்.

யாஸ்மீன் பார்க்க ஆரம்பித்தாள். வளரும் போது நடந்ததைப் போல மறுபடி இப்போதும் பல விதமான சந்தர்ப்ப அழுத்தங்களின் சந்திப்பில் தான் நின்று கொண்டிருப்பதைப் போலத் தோன்றுகிறது என்றாள். அப்துலுடன் உறவை மேம்படுத்த வேண்டும், சம்பாதிக்க வேண்டும் எனப் பல்வேறு.

அன்று, அம்மாவின் மன அழுத்தத்தினால் அவர்களிடமோ மற்ற யாரிடமோ தன்னுடைய சங்கடங்களைப் பகிர்ந்து கொள்ளவில்லை. கூடப் பிறந்தவர்களை அரவணைத்துப் பாதுகாப்பாகப் பார்த்துக் கொள்வதில் கவனம் போனது. கண்ணீர் முட்டும், மனம் குமறும், எனினும் யாரிடமும் சொல்லவில்லை. இப்போது அப்துல் வேலை இல்லாமல், வேலை தேடாமல் இருப்பதனால் சோகம் ஏற்பட்ட போதிலும், பழக்க தோஷம் அந்த உணர்வைப் பகிரத் தடுத்தது.

அதனால் யாஸ்மீனுள் பயம் துளிர்த்து வந்தது. தான் வளர்ந்த போது சந்தித்த, அனுபவித்த ஏறத்தாழ அதே இன்னல்களைச் சந்திக்க நேரிடலாம் என. இவையெல்லாம் ஸெஷன்களில் உணர்ந்து அடையாளம் காண முடிந்தது.

யாஸ்மீன் இவற்றை மேலும் ஆழமாக ஆராய்ந்து பார்க்கையில் அடக்கி வைத்திருந்த வேதனையை வெளிப்படுத்தச் செய்தாள். ஸெஷன்களில் அப்துலும் இருந்ததால் அவனுக்கும் தெளிவாயிற்று, எதற்காகத் தன்னை மணப்பவள் தன்னைப் பற்றி இவ்வளவு வேதனை அடைகிறாள் என்று. அப்துல் தான் நடந்தது கொள்ளும் விதத்தினால் அவளுடைய நிகழ்காலத்தில் பயம் உருவாக்கி வருவதைப் புரிந்து கொண்டான்.

நேருக்கு நேராக, மனம்விட்டுப் பகிர்வதின் பயனாக இருவரின் உறவு நெருக்கமாகியது!

அடுத்தபடியாக, இருவரையும் அவர்கள் நிச்சயம் ஆனதிலிருந்து ஒருவரையொருவர் பற்றிக் கவனித்ததைப் பட்டியலிடப் பரிந்துரை செய்தேன். முதலில் மேலோட்டமாக எழுதினார்கள். அவற்றை ஸெஷனில் எடுத்துக் கொண்ட போது அதில் பயனில்லை எனப் புரிந்து கொண்டு, மேலும் ஆழ்ந்து பார்த்தார்கள். எழுதியதைப் பற்றி உரையாடுகையில், யாஸ்மீனின் முதுகலைப் படிப்பு தொடங்கியபோது அப்துலின் உணர்ச்சிகளில் மாற்றம் ஆரம்பித்தது எனத் தெளிவாயிற்று.

இப்போது, அப்துலுடன் ஸெஷன்களை அமைத்தேன். தன் நிலையை ஆராய்ந்தான். சிறுவயதில் அம்மா வேலைக்குப் போவதனால் தனியாக இருக்க நேர்ந்தது. யாஸ்மீனின் வேலையும் படிப்பதும் இப்போது தனக்குத் தனிமையை உருவாக்கிவிடுமோ என்ற கவலை. அதே போல மறுபடி நேர்கிறதே எனத் தவித்தான். எதிலும் நாட்டம் குறைந்தது.

வளரும் பருவத்தில் அவர்கள் நன்றாக வாழ்வதற்குத்தான் தாய் இத்தனை வேலை செய்ய வேண்டி இருக்கிறது என அறிந்திருந்தும், தன்னை விட்டுப் போகிறாள் என்ற கோபம் இருந்தது. அதே கோபம் இப்போது யாஸ்மீன் மீது. யாஸ்மீன் வேலை, வேலையில் முன்னேற்றம் என்றே இருந்து விடுவாள் என நினைத்து ஆத்திரம் அடைந்தான்.

அப்துலைப் பொறுத்தவரை யாஸ்மீன் தன்னைக் கேட்காமல் மேல்படிப்புக்கு முடிவு செய்தது பிடிக்கவில்லை. இதனால் அவர்கள் உறவில் நேரக்கூடிய சஞ்சலங்களை யாஸ்மீன் எப்படி யோசிக்கவில்லை என்ற ஆதங்கம்.

யாஸ்மீனிடம் விளக்கம் கேட்க அவளை அழைத்து வந்தான். அப்துல் தன் மனதில் உருவானதை விவரித்தான். யாஸ்மீன் பதிலளித்தாள். இதுவரையில் முடிவுகளைத் தானாக எடுத்து வந்ததால் இந்த முறையும் அவ்வாறே செய்தேன் என்றாள். அதனால்தான் அப்துலுடன் கலந்து ஆலோசிக்கத் தோன்றவில்லை. அவன் தரப்பைக் கேட்ட பிறகு அவன் உணருவதைப் புரிய ஆரம்பித்தது என்றாள். அதனின் பிரதிபலிப்பு அவனுடைய நடத்தையில் தெரிந்ததைக் கூறினாள்.

இப்படி உரையாடியதில், அப்துல் யாஸ்மீன் தன் வளர்ந்தகால அனுபவங்களின் தாக்கம் ஏற்படுவதைக் கண்டு கொண்டார்கள். இப்போது அதேபோல் நேரும்போது விடை காணத் தெரியாமல் தத்தளிக்கிறோம் என்று உணர்ந்தார்கள்.

எவ்வாறு பகிர்வது என்பது இப்போது புரியவர, உறவு மேலும் நெருக்கமாகியது. இருவரும் தங்களது நிலையை, உணர்வைப் பகிர்ந்து கொள்ள, புரிதல் அதிகரித்தது.

வித்தியாசங்கள், அபிப்ராயம் பேதம் வரச் செய்யும். சுமுகமாகப் பேசி, புரியப் புரிய, உறவு மேம்படும். இருவரும் உணர்ந்தார்கள், இதற்கு உறவுக்கும் நபர்களுக்கும் மதிப்புக் கொடுப்பது தேவை. இதன் அடிப்படையில் அதற்கான வழிமுறைகளை அமைக்க எண்ணினேன்.

அப்துல் யாஸ்மீன் தங்களது நடத்தை, செயல்பாடுகளில் எதைச் சுதாரித்துக் கொண்டால் உதவும் எனப் பகிர்ந்தார்கள். இருவருக்கும் ஒப்புதலானது, உறவுக்கு நேரம் அமைக்க வேண்டும் என. கூட இருந்து பொழுது போக்க, பல செயல்களைப் பற்றி விவரித்து, எவ்வாறு செய்ய வேண்டும் என விளக்கம் அளித்தார்கள். ஆர்வம் ததும்ப இவற்றைச் செயலாற்றி வந்தார்கள்.

அப்துல் உதவி கேட்க கூச்சப் பட்டான். இதை வெல்ல ஸெஷன்களில் பல ரோல் ப்ளே வகுத்துச் செய்தோம். ஒருசில செயல் தானே செய்வதாக இருந்தவற்றை “என்னுடன் செய்” என அழைத்துக் கொண்டார்கள். அப்துல் தன் வேலை தேடுவதற்கு இதைச் செய்தான்.

இருவரின் உறவில் மாற்றங்கள் ஏற்பட்டன. பேதங்களைச் சுமுகமாக பேசி முடிவு செய்து கொள்வதும் கூடியது. உறவை மேம்படுத்த அப்துல் யாஸ்மீனின் முயற்சிகள் இன்னும் தொடர்கிறது.
*******************************

திரை இசைக் கவிஞர் – கம்பதாசன் – முனைவர் தென்காசி கணேசன்

இம் மாதக் கவிஞர் – கம்பதாசன் 
சாலியவாகணன் மக்கள் இயக்கம் சாத்தூர் ஒன்றியம் on Twitter:  "#குலாலர்வரலாறுமீட்புபடை #ARKbrothers #குயவர்மகன் https://t.co/0VEXacHcG1"  / Twitter

திரை உலகில் மகாகவி என்று அழைக்கப்பட்டவர் கம்பதாசன். அற்புதமான கவிதைகள, பாடல்கள் தந்த கவிஞர்.  ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். சிறந்த பாடலாசிரியர், குரல் வளம் அமைந்தவர், வசனகர்த்தா,மற்றும் நடிகர். அந்தக் காலத்தில் திரைப்படப் பாடலுக்கு அதிக தொகை வாங்கிய ஒரே கவிஞர்.  

பம்மல் சம்பந்த முதலியார், ஆரணி குப்புசாமி முதலியார், பாரதிதாசன், சுரதா என அனைவராலும் பாராட்டப்பட்டவர். எழுத்தாளர வ ரா அவர்கள், கம்பதாசன் ஒரு பிறவிக் கவிஞர் என்பார். 

1961 ஆம் ஆண்டு ‘அக்பர்’ திரைப்படத்திற்கு, நவ்ஷத் இசையில் இவர் இயற்றிய பாடல் புகழ் பெற்றது. 

கனவு கண்ட காதல் கண்ணீராச்சே!

நிலா வீசும் வானில் மழை சூழலாச்சே!

மழை சூழலாச்சே!’   

முன்பே எண்ணிப் பாராமல் நெஞ்சம் ஈந்திட்டேனே
எந்தன் ஆசையே இன்று என்னைக் கொல்லலாச்சே
உந்தன் காதலின் கனவெல்லாம் கண்ணீராச்சே
ஆச்சே 

அகம் வாட்டும் காதல் தீ யார்க்கும் சொல்லாதே
மறைத்தே நான் வாழ்கின்ற மார்கம் கெடாதே
ஜெகம் வாழ்கிறேன் வாழ்க்கையே கண்ணீராச்சே
ஆச்சே 
கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே
நிலா வீசும் வானில் மழை சூழலாச்சே
மழை சூழலாச்சே

 காதலரின் பிரிவுத் துயரத்தை இதைவிடச் சிறப்பாக யாரால் கூற இயலும்? பாடலுக்குடல் அடிகள் திரும்பத் திரும்ப வந்து இதயத்தின் துயரத்தை மிகுதிப்படுத்திக் கொண்டேயிருக்கும்.

அகப்பாடல்கள் மட்டுமல்லாமல், சமுதாயப் பாடல்கள், இறையுணர்வுப் பாடல்கள் என எல்லாவற்றிலும் அவர் முத்திரை பதித்தார்.  1948ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஞானசௌந்தரி’ படத்தில் இவர் எழுதிய மேரி மாதாப் பாடல் கேட்டவர் செவிகளில் இன்னும் ஒலித்துக் கொண்டே யிருக்கிறது.

அருள் தாரும் தேவ மாதாவே

ஆதியே இன்ப ஜோதியே ஆதியே இன்ப ஜோதியே

ஜெதமீதிலே ஈடில்லா நிலையே என் கதியே

ஆதியே இன்ப ஜோதியே ஆதியே இன்ப ஜோதியே

திருவேதுணை நீயே திருவே துணை நீயே

தேவதாயே இனியா நினைத்தாய் கண் பாராய்

ஆதியே இன்ப ஜோதியே

ஆதிதேவதையே அருள் வாய் மதியே

தேனினும் மேலாம் பதனிச ஜீவாதாரமே நல்

ஆதியே இன்ப ஜோதியே

என்னும் இந்தப் பாடல், பி ஏ பெரியநாயகி குரலில் மிக அழகு,

கம்பதாசனைப் பற்றி கவிஞர் வாலி எழுதுவார் – 

“வில்லியம் வேர்டஸ்வொர்த் , கீட்ஸ் போன்ற மேல்நாட்டுக் கவிஞர்களுக்கு இணையான சிந்தனை வளம், கற்பனை நயம் கொண்டவர். சிவந்த மேனி – தீரககமான நாசி – தீட்சண்யமான கண்கள் – வேஷ்டி ஜிப்பாவில் ஒரு சிற்பம் நடந்து வருவது போலிருக்கும்.”

திரைஉலகில் முத்திரை பதித்தவரும், மூன்று காலத்திலும் அற்புதமாகப் பாடுபவருமான மதுரை மாரியப்ப சாமிகளுக்கு நெருங்கிய உறவினர். புகழ்பெற்ற மலையாளக் கவிஞர் வள்ளத்தோலின் மருமகன. ஆனால், அவரின் உணவே மதுவானதால், மதுவே அவர் உயிரை இளம் வயதில் எடுத்க்கொண்டது. அவன் என்ற திரைப் படத்தில் சங்கர் ஜெய்கிஷன் இசையில் வெளிவந்த கல்யாண ஊர்வலம் வரும் என்ற பாடலும், அவரின் அடையாளத்தைக் காட்டும். 

கல்யாண ஊர்வலம் வரும் உல்லாசமே தரும்
மகிழ்ந்து நான் ஆடிடுவேன் ஓ
மகிழ்ந்து நான் ஆடிடுவேன் (கல்யாண ஊர்வலம்)

மாப்பிள்ளை நுதலின் திலகம் போலே
மணமகள் எழில் சிந்தவே 
பார்த்திட எந்தன்
உள்ளத்தின் கனவே
பூர்த்தி பெறும் விரைவே

சிங்காரம் செய்வாள் சேடியே
மருதாணி சூடியே
மகிழ்ந்து நான் ஆடிடுவேன் 

கண் சிந்தும் காரின் மழைதான்
மென்மேலும் இருள்தான்
தன்னந்தனி ஆகிடுவேன் ஓ

கல்யாண ஊர்வலம் வரும்
உல்லாசமே தரும்
மகிழ்ந்து நான் ஆடிடுவேன் ஓ
மகிழ்ந்து நான் ஆடிடுவேன்

பி யூ சின்னப்பா நடித்த, மங்கயர்க்கரசி படத்தில் இடம் பெற்று புகழ் பெற்ற – காதல் கனி ரசமே பாடலில்,

பார்த்தால் பசி தீரும் 

பங்கஜ வதனத்தில் 

செங்கனி வாய்ச் சிரிப்பைப் 

பார்த்தால் பசிதீரும் 

என்று எழுதுவார். 

இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்களுள் பாரதி, பாரதிதாசனுக்குப் பிறகு  பன்முகப் பேராற்றல் படைத்த கம்பதாசனை தமிழ்கூறு நல்லுலகம் மறந்து விட்டதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

“நண்பர் கம்பதாசன் .  வாழ்வையும், கவிதையையும், காவியக் கனவையும் ஒன்றாக்கிய  அவரது உள்ளத்தின் கனிவு.  வறுமையூடும், செல்வத்தூடும் மனங்கலங்காது குலுங்காது அநாயாசமாகப் பறந்து செல்லும் வானம்பாடி அவர்…” என்று ச.து.சு. யோகியார் கூறியுள்ளார்.

அவரின் கவிதைகள் மிக அருமை – அழகு என்பார் பலர்.

நலமுறவே உழைப்பவர்க்கு உணவு வேண்டும்

நியாயமிது நியாயமிது நியாயமிதே!

அலவெனவே மறுப்பவர்கள் கடவுளேனும்

அடுத்தகணம் அவர்தலை எம் காலில் வீழும் – என்கிறார் க்ம்பதாசன்.

எழுத்தாளர் வல்லிக்கண்ணன் ‘கவிஞர் கம்பதாசன் வாழ்வும் பணியும்’ என்ற நூலுக்கு வழங்கிய முன்னுரையில் கம்பதாசனைப் பின்வருமாறு அறிமுகம் செய்வார்:

மகாகவி பாரதிக்குப் பின் தமிழகத்தில் தோன்றிக் கவிதையை வளம் செய்த ஆற்றல் மிகுந்த சிறந்த கவிஞர்களுள் கம்பதாசன் குறிப்பிடத் தகுந்தவர். கவிதை நயமும், கற்பனைச் சுவையும், உவமை அழகும், கருத்தாழமும் புதுமையும் மிளிரும் கவிதைகளையும் குறுங்காவியங்களையும் படைத்துள்ள அவர் திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதிப் பெயர் பெற்றிருந்தார். இசைப் பாடல்கள் எழுதும் திறம் பெற்றிருந்த அவர் நாட்டிய நாடகங்கள் ஆக்கியும் நாடகங்களில் நடித்தும் கலைப்பணி புரிந்தவர். ஏழை, எளியவர்கள், தொழிலாளர்கள் முதலியோரின் வாழ்க்கை நலனில் அக்கறை கொண்டிருந்த அவர் சோசலிஸ்ட் கவிஞராக இந்தியா முழுவதும் அறியப் பெற்றிருந்தார். .

“நித்தம் வறுமையில் நெஞ்சழிந்து – தன்னை

நேசனெனச் சொல்ல யாருமின்றி

பித்தன் இவனெனக் காட்சிதந்து – உயிர்

பிரிந்தபின் புகழைப் பெறுபவர் யார்?”

என்னும் இவர் கவிதை சிந்திக்கத்தக்கது.

வாழும் காலத்தில் வறுமையும், அன்பு பாராட்ட ஆட்கள் இல்லாத வெறுமையுமாய் வாழ்ந்தவனுக்கு மரணத்துக்குப் பின் கிடைக்கும் புகழால் பயன் என்ன என்று கவிஞர் கேட்கும் கேள்வி பொருள் பொதிந்தது.கவிஞரின் வறுமைக்குக் காரணம் அவரது திட்டமிடப்படாத வாழ்க்கை முறையேயாகும்.  

1934 ஆம் ஆண்டு வெளிவந்த ‘சீனிவாச கல்யாணம்’ என்னும் திரைப்படத்திற்கு முதல் பாடல் எழுதியதாக சிலோன் விஜயேந்திரன் குறிப்பிடுகிறார்.  1940இல் வெளிவந்த ‘வாமன அவதாரம்’ திரைப்படத்திற்கு இவர் எழுதிய பாடல்களே சான்றுகளாகக் கிடைக்கின்றன.

இதனைத் தொடர்ந்து வேணுகானம், ஆராய்ச்சி மணி, பூம்பாவை, உதயனின் ஞானசௌந்தரி, மங்கையர்க்கரசி, இதயகீதம், வனசுந்தரி ஆன அவன், தந்தை, வானரதம், அக்பர் ஆகிய ஏராளமான படங்களுக்கு கம்பதாசன் பாடல்களை இயற்றினார்.

1940ஆம் ஆண்டு தொடங்கிய அவரது பாடல் இயற்றும் பணி 1961 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது.  இப்படி பல ஆண்டுகள் திரையுலகில் புகழ்பெற்று விளங்கினார்.  அவர் சமதருமக் கொள்கையை வாழ்க்கையில் கடைபிடித்தவர். 

கம்பதாசன் மரணத்திற்குப் பிறகு அவரது புகழைப் பரப்பிய பெருமைக்குரியவர் சிலோன் விஜயேந்திரன்.  கம்பதாசனின் கவிதை மீது கொண்ட ஈடுபாட்டால் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து அவரது படைப்புகளைத் திரட்டி, வாழ்க்கைக் குறிப்புகளோடு பல தொகுதிகளாக வெளியிட்டார். கவிஞர் கம்பதாசன் வாழ்வும் பணியும், கம்பதாசன் கவிதைத் திரட்டு, கம்பதாசன் திரையிசைப் பாடல்கள், கம்பதாசன் காவியங்கள், கம்பதாசன் சிறுகதைகள், கம்பதாசன் நாடகங்கள் எனப் பல தொகுதிகள் வெளிவந்துள்ளன.  அவை அவரது பன்முக இலக்கிய வன்மையைப் பறைசாற்றிக் கொண்டேயிருக்கும்.

கம்பதாசனின் பிற இலக்கிய வடிவங்களை விட கவிதைத் துறையிலேயே அவரது முழு வீச்சை அறிய முடியும்.  அவரது கவிதைகளில் சொல்லழகும், பொருளழகும் தனித்தன்மையோடு விளங்கும்.

“உலகமே ஒரு சிறைச்சாலை – இங்கே

உற்ற உயிருக்கே உடல்சிறைச் சாலை (உலகமே)

ஐயிரண்டு திங்கள் அன்னை வயிறே சிறைச்சாலை

அணிபருவம் ஏழுக்கும் ஆசையே சிறைச்சாலை

வெய்யில் தரும் பகலுக்கு இரவே சிறைச்சாலை

விதிமுடிந்தால் இங்கே பிடிமண் சிறைச்சாலை”                                            

என்று இவர் பாடுவது மிக அழகு. 

கவிதைகள், திரைப்பாடல்கள் மட்டுமின்றி, காவியங்கள் பதின்மூன்று இயற்றியுள்ளார்.  கனவு, காணிக்கை, காதலும் கண்ணீரும், புத்தன் புனர் ஜென்மம், சாவுக்கு விருந்து, வேளை வந்தது, இரத்த ஓவியம், கல்லாத கலை, சொல்லாத சொல், கறிகனி, மொழி முத்தம், கம்பக் குயில் என்னும் இந்தக் காப்பியங்கள் அவரது கவித்துவத்தை வெளிப்படுத்தும்.

இவரது நூல்கள் பற்றிப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாராட்டியுள்ளார்: “கம்பதாசன் எழுதும் நூல்கள் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கின்றன.  அவை அவராலேயே இயற்றப்பட்டவை.  அவரின் நெஞ்சினின்று தங்கு தடையின்றி எழும் ஊற்று.  உண்மையில் கம்பதாசன் எண்ணம் நன்று.  கவிதை உள்ளம் நன்று.  நல்ல கற்பனையே புதுமையை வரவேற்கும் தன்மையே அதைப் போற்றும் ஆற்றலைக் காணுகின்றேன்” என்று கூறியுள்ளார்.

அறிஞர் வ.ரா. ‘புத்தர் புனர் ஜென்மம்’ காவியம் பற்றி பாராட்டியிருப்பது குறிப்பிடத் தக்கது “இது கம்பதாசன் கவிதையில் வரைந் திருக்கும் அற்புதச் சித்திரமாகும்.  தமது கவி தர்க்க சாஸ்திரத் திறமையினால் மறுபிறப்பில் நம்பிக்கை யில்லாத புத்தனைக்கூட புனர்ஜென்மம் எடுக்கும் படியாகக் கம்பதாசன் செய்திருப்பது விசித்திர மான வேலைப்பாடாகும்.”

நாடக நடிகராகத் தம் கலைப் பயணத்தைத் தொடங்கிய கம்பதாசன் தொடர்ந்து தமது இனிமையான குரல் வளத்தால் பின்பாட்டுக்காரராகவும் ஆர்மோனியம் வாசிக்கும் பக்கவாத்தியக்காரராகவும், நாடகங்களுக்குப் பாட்டெழுதும் கவிஞராகவும் வளர்ந்தார். 

1956ஆம் ஆண்டு வெளிவந்த ‘நன்னம்பிக்கை’ என்னும் திரைப்படத்திற்குத் தொழிலாளியைக் கடவுளுக்கு ஒப்பிட்டு ஒரு பாடல்:

“சூரியனும் ஒரு தொழிலாளி – தினம்

சுற்றும் உலகும் தொழிலாளி

வாரி அலையும் தொழிலாளி – எதிர்

வந்திடும் காற்றும் தொழிலாளி

மாரி நதியும் தொழிலாளி – இருள்

மலரும் உடுவும் தொழிலாளி

பாரை நடத்தும் தொழிலாளி – இன்

பரமனடா கலை பிரமனடா”

“கம்பதாசன் இக்கால யுவ எழுத்தாளர், புதுக் குரலின் தெளிந்த தொனிப்பு கேட்கிறது” என்று கம்பதாசனின் பாட்டுத் திறனைப் பற்றிய கவிஞர் ஹரிந்திரநாத் சட்டோபாத்தியாயா குறிப்பிட்டுள்ளார். இவர் கவிக்குயில் சரோஜினி நாயுடுவின் சகோதரர்.  இவரே இந்தித் திரைப்பட இசையமைப்பாளர் நௌஷாத்திடம் கம்பதாசனை அறிமுகம் செய்து வைத்தவர்.

கம்பதாசன் அந்த நாட்களில் அகில இந்தியாவும் அறியப்பட்ட தமிழ்க் கவிஞராக, பாடலாசிரி யராகத் திகழ்ந்தார்.  கவியரசர் கண்ணதாசன் மற்றும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியவர்களுக்கு இவரே முன்னோடியாக விளங்கினார்.  பம்பாய்க்காரர் படம் எடுத்தால், கூப்பிடு கம்பதாசனை என்பார்களாம்.

சந்திரிகா என்ற படத்தில்

நினைதிடல் உலகமே

நிழல் பொம்மலாட்டமே

நிஜம் என்பதெல்லாம்

நிராசை தாநாகுமே

என்ற வரிகள் காலத்தின் கூத்துகளை கூறும்.

கண்ணதாசன் எழுதுவார் – வசதி வாய்ந்த கவிஞராக வாழ்ந்தவர் மட்டுமல்ல – 1941, 1952, 1960 என பலமுறை தனது கவிதைத் தொகுப்புக்களை வெளியிட்டவர்.

கம்பதாசனின் பின்வரும் கவிதைத் தலைப்புகளே சொல்லும் அவரின் சமதர்மச் சிந்தனைகளை:

1. தொழிலாளி 2. செம்படவன் 3. கொல்லன் 4. ரிக்ஷாக்காரன் 5. மாடு மேய்க்கும் பையன் 6. கூடை முடைபவள் 7. ஒட்டன் 8. பிச்சைக்காரன் 9. பாணன் 10. குலாலன் 11. கையேந்திகள்.

             கம்பதாசன் படைப்பாளியாக வலம் வந்த காலக்கட்டம் – ஒரு பக்கம் காங்கிரஸ் பேரியக்கம், மறுபக்கம் திராவிட இயக்கம் இரண்டுக்கும் இடையில் தனிப்பெரும் சக்தியாக ஆளுமை நிறைந்த கவிஞராகக் கம்பதாசன் தம்மை உருவாக்கிக் கொண்டார். இதுவே அவரின் பலமும் பலவீனமும் ஆகும். 1960களுக்குப் பிறகு திரையுலகில் அவர் தனித்து விடப்பட்டதன் அரசியல் பின்னணி இதுவே. அவரின் மதுப் பழக்கமும் இணைந்தன. அவர் எழுதிய

மின்னல் போல் ஆடும் இந்த வாழ்க்கையே

வானவில் போலவே இளமை ஆனதே – துன்பக் கதை உனதே

என்ற வரிகள் அவருக்கே பொருந்தியது போல, 1973ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் நாள் ஓர் அனாதையைப்போல் மரணத்தைத் தழுவினார் என்பது , சற்றே அதிர்ச்சியான தகவல்.

தமிழ்த் திரையுலகிற்கு பாபநாசம் சிவன் பாடல்கள் ஆலயமணியானது.. கம்பதாசன், கண்ணதாசன் , அந்த இசைக்கு, நீர் ஊற்றியவர்கள் என்றால் மிகை ஆகாது.

குவிகம் குறுக்கெழுத்து அக்டோபர் 22 – சாய் கோவிந்தன்

குறுக்கெழுத்துப் போட்டி

இந்த மாத (அக்டோபர் ) குறுக்கெழுத்து விவரம் இதோ: 

விடை அனுப்ப கடைசி நாள் 17.10.22 

பரிசு ஒருவருக்கு குலுக்கல் முறையில்!

 

http://beta.puthirmayam.com/crossword/39E2F5D29F

 

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

 

குவிகம் குறும் புதினத்திற்காகத் தனி வாசகர் வட்டம் உருவாகுவது குறித்து மிக மிக மகிழ்ச்சி! 

குறுக்கெழுத்து தயாரிக்கும் சாய் அவர்களுக்குப் பாராட்டுதல்கள்!  

இந்த மாதம் 27 பேர் கலந்து கொண்டிருக்கிறார்கள்.  அனைவருக்கும் வாழ்த்துகள்!

இம்மாதம் தீபகற்பம் என்பதற்கு முதலில் தவறான எழுத்துக்களை  அறிவித்து, பின்னர் அதைச் சரிவரத் திருத்தினோம்.  அதனால ஏற்பட்ட சிரமங்களுக்கு  வருந்துகிறோம். பெரும்பாலான நண்பர்கள் இரண்டாவது முறையாக பதில் அனுப்பினர்.

கிட்டத்தட்ட  சரியாக எழுதியவர்களில்   தீவிரவாதம், தாம்பு  என்ற இரண்டில் தடுமாறியவர் பலர். 

மொத்தத்தில் சரியான விடை எழுதியவர்கள் 10 பேர் (10/28)

அவர்கள் : 

1. எம் ராமசாமி,

2. மனோகர்,

3. ஜெயா ஸ்ரீராம், 

4. குப்புஸ்வாமி ஆர் 

5. ராமமூர்த்தி 

6. வைத்யநாதன் 

7. ரேவதி ராமச்சந்திரன் 

8. ஜானகி 

9. ஆர்க்கே 

10. நாகேந்திரபாரதி 

அனைவருக்கும் குவிகத்தின் பாராட்டுதல்கள் !

அது சரி, குலுக்கல் முறையில் வெற்றி பெறுபவர் யார்? 

 

எண் 8 ஜானகி அவர்கள் ! பாராட்டுதல்கள் !!

 

 

 

 

டைனியின் பாட்டி – தமிழில் : தி.இரா.மீனா

 

உருதுமொழி சிறுகதை
டைனியின் பாட்டி
மூலம் : இஸ்மத் சுக்தாய் ( 1973 இல் கரம் ஹவா என்ற திரைப்படத்திக்காக சிறந்த கதாசிரியருக்கான தேசிய விருது பெற்றவர் )
ஆங்கிலம் : ரால்ஃப் ரஸ்ஸல்
தமிழில் : தி.இரா.மீனா

 

 

Tiny's Granny short story By_ Ismat Chughtai in hindi// full summary in  Hindi. - YouTube

IsmatChughtaiPic.jpg
அவள் பெயர் என்னவென்று கடவுளுக்குத்தான் தெரியும்.யாரும் அவளை பெயர் சொல்லிக் கூப்பிட்டதில்லை.சிறுமியாக இருந்து ,சந்துகளில் மூக்கு ஒழுக அவள் சுற்றிக் கொண்டிருந்தபோது அவளை ’பதான் குழந்தை’ என்றுழைத்தனர் ஜனங்கள்.பிறகு ’பஷீராவின் மருமகள்’ என்றும், ’பிஸ் மில்லாவின் தாய்’ என்றும், பிஸ்மில்லா பிரசவத்தின் போது குழந்தை டைனியை பெற்று விட்டு இறந்து போனதற்குப் பிறகு அவள் ’டைனியின் பாட்டி ’ஆனாள். அதுவே நிலைத்து விட்டது.
தன் வாழ்க்கையில் டைனியின் பாட்டி செய்யாத வேலை என்றுவுமில்லை தனது உணவிற்காகவும், உடைகளுக்காவும் விவரம் அறிந்த நாளிலிருந்தே சின்னச்சின்ன கூலி வேலைகளை அவள் செய்யத் தொடங்கி விட்டாள் கூலி வேலை என்றால் மற்ற குழந்தைகளுடன் ஆடிப்பாடி விளையாட வேண்டிய வயதில் விளையாட விடாமல் அவர்களை வேலைக்கு வைத்துக் கொள்வதாகும்.கூலிவேலை என்பதில் சுவாரஸ்யமற்ற தொட்டில் ஆட்டுதல் தொடங்கி எஜமானருக்குத் தலையைப் பிடித்து விடுவது வரை எல்லாமும் அடக்கம். அவள் வளரத் தொடங்கிய பிறகு சிறிது சமைக்கக் கற்றுக் கொண்டாள். சிலவருடங்கள் சமையல்காரியாகவும் வாழ்ந்தாள். கண்பார்வை சிறிது மங்கத் தொடங்க ஈக்களையும்,பூச்சிகளையும் போட்டுச் சமைக்க வேண்டிய நிலை வந்தபோது அதிலிருந்து ஓய்வு பெற வேண்டி யதாயிற்று. அதன்பிறகு அவள் வம்பு பேசி கோள்சொல்லியானாள்..ஆனால் அதுவும் ஓரளவுக்கு மட்டுமே ஆதாயம் தரும் வேலை..ஒவ்வொரு தெருவிலும் ஏதாவது சண்டை வந்தபடிதானிருக்கும்.யாரொருவர் அந்த விவரத்தை எதிரிகளுக்கு சென்று சொல்கிறாரோ அவர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.ஆனால் அது நீண்ட நாள் தொடராது.அதில் அப்படி ஒன்றும் பெரிதாகக் கிடைத்துவிடவில்லை என்பதால்,அவள் மெருகேறிய திறமையான பிச்சைக்காரியாக உருவாகி விட்டாள்.
சாப்பாட்டு நேரங்களில்,பாட்டி எந்த வீட்டில் என்ன சமையல் என்பதை அதன் மணத்தால் அறிந்து அங்கு போய்விடுவாள்.
“பெண்ணே, இறைச்சியோடு சேனைக்கிழங்கு சேர்த்து சமைக்கிறாயா?” என்று சாதாரணமாகப் பேசுவது போலக் கேட்பாள்.
“இல்லை,பாட்டி.இப்போது கிடைக்கும் சேனையொன்றும் நன்றாக இல்லை. அதனால் நான் உருளைக்கிழங்கு சேர்த்து சமைக்கிறேன்”.
“உருளைக்கிழங்கு!என்ன அருமையான வாசனை! பிஸ்மில்லாவின் தந்தைக்கு உருளைக்கிழங்கும்,கறியும் சேர்த்துச் சமைத்தால் மிகவும் பிடிக்கும்.எல்லா நாளும் வீட்டில் அதுதான்;சரி, நாம் உருளைக்கிழங்கையும் இறைச்சியையும் சேர்ப்போம் [லேசாகப் பெருமூச்சு விடுவாள்]நான் கறியையும்,உருளைகிழங்கையும் பார்த்தே பல மாதங்களாகிவிட்டன” என்பாள். பிறகு திடீரென “அதில் கொத்தமல்லித் தழை சேர்த்தாயோ பெண்ணே?” என்பாள்.
“இல்லை ,பாட்டி.எல்லாத் தழையும் அழுகிப் போய்விட்டது.தண்ணீர் கொண்டு வருபவனின் நாய் தோட்டத்திற்குள் போய் நாசம் செய்து விட்டது.”
“ஐயோ! சிறிது கொத்தமல்லியைக் கறியோடுசேர்த்தால் அதன் சுவையே அலாதிதான், ஹக்கீம் தோட்டத்திலிருக்கும்.”
“வேண்டாம் பாட்டி,நேற்று அவர் மகன் ஷபானின் பட்டக் கயிறை அறுத்து விட்டான்.நான் அவனை இந்தப் பக்கம் தலைகாட்டக் கூடாதென்று சொல்லி விட்டேன்.”
“நான் உனக்காகப் பறிக்கிறேன் என்று சொல்லமாட்டேன” சொல்லிவிட்டு தன் புர்காவை இழுத்து விட்டுக்கொண்டு செருப்புத் தேய ஹக்கீமின் தோட்டத்திற்குப் போவாள்.வெயிலில் சிறிதுநேரம் உட்கார வந்தாகச் சொல்லி மெல்லச் செடியருகே போவாள். தழையைச் சிறிது கிள்ளி கையில் தேய்த்து முகர்வாள்.ஹக்கீமின் மருமகள் அந்தப் பக்கம் திரும்பியவுடன் பாட்டி கொத்தாகப் பறித்து விடுவாள்.கொத்தல்லித் தழையை கொண்டு வந்து தந்த பிறகு சாப்பாடு போட மறுக்கமுடியாது.
பாட்டியின் சாதுர்யம் அவளை அப்பகுதியில் பிரபலமாக்கியது.அவள் அருகிலிருக்கும் போது யாரும் அவளை விட்டு சாப்பிடவோ ,குடிக்கவோ முடியாது.குழந்தைக்காகப் பாத்திரத்தில் வைத்திருக்கும் பாலை அவள் நேரடியாக எடுத்துக் குடித்து விடுவாள்;இரண்டு மடக்குதான்.காலியாகி விடும்.உள்ளங்கையில் சிறிது சர்க்கரையை வைத்து வாயில் போட்டுக் கொள்வாள். அல்லது வெல்லக் கட்டியை நாக்கில் ஒதுக்கிக் கொண்டு சூரிய ஒளியில் உட்கார்ந்து நிதானமாக சப்பிக் கொண்டிருப்பாள்.
தன் இடுப்பில் பாக்கு அல்லது சில சப்பாத்தித் துண்டுகள் ஆகியவற்றை சேர்த்துக் கட்டியிருப்பாள்.அவள் நீண்ட ஆடை அது பார்வையில் படாதபடி மறைத்திருக்கும். அதை மென்று கொண்டும், வழக்கம்போல முனகிக் கொண்டுமிருப்பாள். எல்லோருக்கும் இது தெரிந்திருந்தாலும் யாருக்கும் இதைப் பற்றி எதுவும் சொல்லத் தைரியமில்லை; முதலாவதாக அவள் கைகள் மின்னல் வேகத்தில் வேலை செய்யும், சந்தர்ப்பத்திற்கு ஏற்றபடி வாயிலிருப்பது முழுவதையும் விழுங்கியும் விடுவாள்; இரண்டாவதாக யாரும் அவளை லேசாகச் சந்தேகப் பட்டாலும் எதற்கு அப்படிச் செய்தோம் என்று நினைக்குமளவிற்கு ஆர்ப்பாட்டம் செய்துவிடுவாள்.தான் அப்பாவியென்றும் குர் ஆனின் மீது சத்தியம் செய்யவும் தயார் என்றும் பயமுறுத்துவாள்.பொய் சொல்லும் ஒருவரை குர் ஆனின் மீது சத்தியம் செய்யச் சொல்லி யார் தன்னை இழிவுபடுத்திக் கொள்வார்கள்?
பாட்டி கோள்சொல்லி, ஏமாற்றுக்காரி மட்டுமில்லை சிறந்த பொய் சொல்லியும்தான்.அவள் எப்போதும் அணியும் புர்கா அவளுடைய பெரிய பொய். முன்பு அதில் முகத்திரையிருந்தது.அந்தப் பகுதியில் வாழ்ந்த முதியவர்கள் ஒருவர் பின் ஒருவராக இறந்த பிறகு,அல்லது அவர்களின் பார்வை மங்கிய பிறகு அவள் தன் முகத்திரைக்கு விடை கொடுத்து விட்டாள்.ஆனால் புர்காவின் மேலிருக்கும் தொப்பியின்றி அவளைப் பார்க்கமுடியாது.மிக நாகரிகமான முறையில் தலையைச் சுற்றியிருக்கும் படி அதை அணிந்திருப்பாள்,அது மண்டையோடு சேர்ந்திருப்பது போல இருந்தாலும் முகப்பகுதி திறந்திருக்கும்.அது அரசனின் அங்கி போல பின்னால் தொங்கிக் கொண்டிருக்கும். இந்த புர்கா அவள் தலையை பணிவோடு மறைப்பற்காக மட்டுமில்லை.அதைச் சாத்தியம்,சாத்தியமற்றது என்று எல்லா வழிகளிலும் பயன்படுத்தினாள்.அது படுக்கை, ஆடை, தலையணை,சில சமயங்களில் துண்டு என்று பலவகைகளிலும் பயன் பட்டது.ஐந்து தடவைகளிலான அவள் தொழுகையில் அது பாயாகவும் பயன்படும். தெருநாய்கள் அவளைத் தாக்க வரும் போது அது பாதுகாப்பு கவசமாகவுமிருக்கும்.நாய் அவள் மேல் பாய்ந்து கடிக்க வரும் போது அதிலுள்ள பல மடிப்புகள்தான் அதன் முகத்தில்படும்.அந்த புர்காவின் மேல் பாட்டிக்குத் தனிக் காதலுண்டு.ஓய்வுநேரங்களில் அது மிகவும் பழைய தாகிவிட்டதை எண்ணிப் புலம்புவாள்.அது கிழியும்போது கிடைக்கிற எந்தத் துணியையும் வைத்து தைத்து சரிசெய்வாள். அது இல்லாமல் போய்விடும் நாளை நினைத்துப் பார்ப்பது அவளுக்கு நடுக்கம் தருவதாக இருந்தது. புதியது தைக்க எட்டு முழம் வெள்ளைத் துணி வேண்டும் .அவள் எங்கே போவாள்? இறந்தபிறகு அவளுக்குத் தேவையான அளவு சவத்துணி கிடைத்தால் அவள் அதிர்ஷ்டசாலிதான்.
அவளுக்கென்று நிரந்தர வாசஸ்தலமில்லை.ஒரு சிப்பாயைப் போல எப்போதும் அணிவகுப்பில்—இன்று ஒருவரின் வராந்தாவில்,நாளை மற்றொருவரின் கொல்லைப்புறத்தில்.எது தனக்கு வசதியானது என்று நினைக்கிறாளோ அங்கு முகாமிட்டு விடுவாள்.பாதி புர்கா அவளைச் சுற்றியும் மீதிப்பாதி அவள் கீழுமிருக்க வசதியாகப் படுத்திருப்பாள்.
தன் புர்காவைப் பற்றி கவலைப்படுவதைவிட அவளுக்கு தன் ஒரே பேத்தி டைனி பற்றிய கவலை அதிகமாக இருந்தது.அடைகாக்கும் வயதான கோழி போல எப்போதும் அவளைத் தன் கண்பார்வையில் பத்திரமாக வைத்திருக்கிறாள். அந்தப் பகுதி மக்கள் பாட்டியின் சாதுர்யத்திற்கு நன்கு பழகிப் போனதால் அவள் செருப்புச் சத்தம் கேட்டு ஜாக்கிரதையாக தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர்;அவளுடைய ஜாடைகள் விழுவது அவர்களின் செவிட்டுக் காதுகளில்தான்.அதனால் பாட்டியால் ஒன்றும் செய்ய முடியவில்லை தன் பரம்பரை வழக்கப்படி டைனியை வீடுகளில் கூலிவேலை செய்ய வைக்கத்தான் முடிந்தது.நீண்ட யோசனைக்குப் பிறகு உதவி அதிகாரி வீட்டில் வேலை வாங்க முடிந்தது. சாப்பாடு, உடை, ஒரு மாதத்திற்கு இரண்டு ஷில்லாங் சம்பளம்.அவள் ஒருபோதும் டைனியை விட்டு வெகு தொலைவில் இல்லை.அருகில் நிழல் போலவேயிருந்தாள். டைனி கண்பார்வையிலிருந்து மறைந்து விட்டால் அக்கப்போர்தான்.
ஆனால் ஒரு ஜோடி வயதான கைகளால் ஒரு மனிதனின் எழுதப்பட்ட விதியை மாற்றிவிடமுடியாது.அது ஒரு மதியப் பொழுது. அதிகாரியின் மனைவி தன் மகள் திருமண விஷயமாக சகோதரனைச் சந்திக்கப் போயி ருந்தாள்.மரநிழலில் பாட்டி உட்கார்ந்தபடியே கண்ணயர்ந்தாள்.அருகில் இருந்த அறையில் அதிகாரி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.சீலிங் பேனை கயிற்றால் தொடர்ந்து இழுத்துக் கொண்டிருக்க வேண்டிய டைனி கண்ணயர்ந்து விட்டாள்.பேன் நின்றுவிட்டது, கண்விழித்த அதிகாரிக்கு உணர்ச்சிகள் எழ,டைனியின் விதி நிர்ணயிக்கப் பட்டுவிட்டது.
தங்கள் முதுமை காரணமாக ஹக்கிம்களும் ,வைத்தியர்களும் தாங்கள் கொடுக்கும் மருந்துகள் பலனளிக்காத போது தோல்வியை விரட்ட கோழி ரசத்தை பரிந்துரைப்பார்கள்.—ஒன்பது வயதான டைனி தானே கோழி ரசமாகிவிட்டாள். பாட்டி எழுந்தபோது டைனியைக் காணவில்லை. அவள் அந்தப் பகுதி முழுவதும் தேடியும் டைனியைக் கண்டு பிடிக்க முடிய வில்லை.எல்லா இடங்களிலும் பார்த்து விட்டு தன்னிடத்திகுத் திரும்பிய போது அங்கு டைனி சுவறோடு ஒட்டியவளாக காயப்பட்ட பறவையைப் போல உட்கார்ந்திருந்தாள்.அவளைப் பார்த்ததும் பாட்டிக்கு பேசமுடிய வில்லை.சோர்வு ஆட்கொண்டது.சிறிதுநேரத்திற்குப் பின்பு,“எங்கே போனாய்? எல்லா இடங்களிலும் உன்னைத் தேடி கண்கள் பூத்துவிட்டன. நான் அதிகாரியிடம் சொல்லி உன்னை நையப் புடைக்கிறேன் பார்.இனி நீ அவ்வளவுதான்!” என்றாள்.
ஆனால் தனக்கு என்ன நேர்ந்தது என்பதை பாட்டியிடம் மறைக்க டைனியால் முடியவில்லை.பாட்டி கண்டுபிடித்து விட்டாள். அடுத்த வீட்டுப் பெண்மணி எல்லாவற்றையும் சொல்ல, பயத்தில் தலையைப் பிய்த்துக் கொண்டாள்.அதிகாரியின் மகன் அப்படிச் செய்திருந்தால் ஏதாவது சொல்லமுடியும்.ஆனால் அந்தப் பகுதியில் அவர் மிகப் பிரபலமான மனிதர், மூன்று பேரக் குழந்தைகளின் தாத்தா,மதச்சார்புள்ள ஒரு மனிதன் நாளில் ஐந்துமுறை தொழுகை செய்பவர் அங்குள்ள மசூதிக்கு பாய்களும்,தண்ணீர் குடங்களும் கொடுத்தவர் –இப்படிப்பட்டவருக்கு எதிராக யாரால் குரலெழுப்ப முடியும்?
அதனால் மற்றவர்களின் தயவில் வாழவேண்டிய பாட்டி தன் சோகத்தை மறைத்துக் கொண்டு டைனிக்கு ஒத்தடம் கொடுத்து, இனிப்புகள் தந்து முடிந்தவரை அவளைச் சமாதானப் படுத்தினாள்.ஓரிருநாட்கள் ஓய்விற்குப் பிறகு டைனி சரியாகி இது எல்லாவற்றையும் மறந்து விட்டாள்.
அப்பகுதியிலிருந்த பெண்கள் அது போல மறக்கவில்லை. அவளை அழைத்து எல்லாவற்றையும் கேட்பார்கள்.
“இல்லை.. பாட்டி கொன்றுவிடுவாள்..”அந்த இடத்திலிருந்து போய்விட டைனி முயற்சிப்பாள்.
“இந்த வளையல்கள் உனக்குத்தான். பாட்டிக்கு இதைப் பற்றியெல்லாம் தெரியாது” அந்தப் பெண்கள் இனிமையாகப் பேசிச் சம்மதிக்க வைப்பார்கள்.
“என்ன நடந்தது?எப்படி நடந்தது ? ”எல்லாவற்றையும் விசாரிப்பார்கள். அவர்கள் நோக்கத்தைப் புரிந்து கொள்ளாத சிறியவளான ,அப்பாவியான டைனி தன்னால் முடிந்தவரை சொல்ல அவர்கள் தங்கள் முகத்தை மூடிக்கொண்டு சிரிப்பார்கள்.
டைனி மறந்துவிடலாம். ஆனால் இயற்கை. மொட்டைப் பறித்து அது தயாராவதற்கு முன்பே அதை மலரச்செய்தால் அதன் இதழ்கள் உதிர்ந்து தண்டு மட்டும் நிற்கும்.எத்தனை அப்பாவி இதழ்களை டைனியின் முகம் உதிர்க்க வேண்டியிருந்தது என்று யாருக்குத் தெரியும்?டைனி குழந்தை, சிறுமியாகாமல் ஒரே பாய்ச்சலில் பெண்ணாகிவிட்டாள்,இயற்கையான ரீதியில் அனுபவமான நிலையில் இல்லாமல்.. குயவன் களிமண் பொம்மையைச் செய்யும் போது அது உறுதியாவதற்கு முன்னால் தடித்து வீங்கியிருப்பது போல.
ஒரு துணி அழுக்காகவும், எண்ணெய்ப்பசையோடும் இருக்கும் போது யாராவது அதை வீணாக்கினால் அதுபற்றி யாரும் கவலைப்படுவதில்லை. தெருவில் பையன்கள் அவளைக் கிள்ளி இனிப்பு தருவார்கள்.டைனியின் கண்கள் கூத்தாடும்… இப்போது பாட்டி அவளை இனிப்புகள் தருவதி்ல்லை. அதற்கு பதிலாக அவளை அடித்து நொறுக்குகிறாள்.ஆனால் எண்ணெய்த் துணியில் ஒட்டிக்கொண்ட தூசியை உதறமுடியாது.டைனி ரப்பர்பந்து; தாக்கினால் உங்களை நோக்கி பதிலுக்கு எம்பும்.
சிலவருடங்களுக்குள் டைனியின் ஒழுக்கமின்மை அப்பகுதியில் அவளை பீடையாக்கி விட்டது.அதிகாரியும்,அவர் மகனும் அவளுக்காக சண்டை போட்டுக் கொண்டதாக வதந்தியும்…அதற்குப் பிறகு ராஜ்வா- பல்லக்கு தூக்குபவர் சித்திக்கின் மருமகன் -மல்யுத்தக்காரன் என்று தொடர்ந்தது. ஒழுக்கம் கெட்டு நடக்கும் பெண்களின் மூக்கை அரியும் தண்டனைக்கு அருகேயும் அவள் வந்துவிட்டாள்.[ ஒழுக்கம் கெட்ட பெண்களின் மூக்கை அரிவது பாரம்பர்ய தண்டனை ]
அந்தப் பகுதி முழுஎதிர்ப்பான இடமாகிவிட்டது. அவள் பத்திரமாக அங்கு தங்குவதற்கு இடமில்லை.டைனி ,சித்திக்கின் மருமகன் தொல்லை அங்கிருப்பவர்களுக்கு பொறுக்கமுடியாமல் போனது.பம்பாய்,டில்லி போன்ற நகரங்களில் இது போன்ற பண்டங்களுக்கு வரவேற்புண்டு என்று அவர்கள் பேசிக் கொண்டனர்.அநேகமாக அவர்களிருவரும் அங்கு போயிருக்க வேண்டும்.
டைனி வீட்டை விட்டு வெளியேறிய தினத்தில் பாட்டிக்கு லேசான சந்தேகம் கூட வரவில்லை.வழக்கத்தை மீறி சில நாட்களாகவே டைனி மிக அமைதி யாக இருந்தாள். பாட்டியிடம் அதிக வம்பில்லை.ஆனால் தன்னிடத்தில் உட்கார்ந்து வெகுநேரம் வானத்தை வெறித்தபடி இருந்தாள்.
“சாப்பிட வா ,டைனி.” பாட்டி சொல்வாள்
“எனக்குப் பசியில்லை ,பாட்டி”
“நேரமாகிறது டைனி.படுக்கப் போ”
“எனக்கு தூக்கம் வரவில்லை ,பாட்டி.”
அன்றிரவு அவள் பாட்டியின் கால்களைப் பிடித்துவிட்டாள்.” பாட்டி… பாட்டி நான் ’சுபானஹல்லா ஹம்மா ’வை சரியாகச் சொல்கிறேனா பார்” என்றாள் [ ஐந்து முறை நடக்கும் தொழுகையின் போது சொல்லும் வார்த்தைகள் ]
கேட்டுவிட்டு பாட்டி டைனியை முதுகில் தட்டிக்கொடுத்தாள்.
“போதும் கண்ணே,வெகு நேரமாகிவிட்டது .போய்ப் படுத்துக் கொள்” சொல்லி விட்டு பாட்டி திரும்பிப் படுத்துக்கொண்டாள்.
சிறிது நேரத்திற்குப் பிறகு டைனி முற்றத்தில் நடப்பது தெரிந்தது.”என்ன செய்கிறாள் இவள்?”என்று முணுமுணுத்தாள்.இப்போது என்ன பிரச்னையைக் கொண்டு வந்திருக்கிறாளோ? ஆனால் கொல்லைப்புறம் போக பாட்டி எழுந்தபோது வியப்பிலாழ்ந்தாள்.டைனி ஈஷா வழிபாட்டைச் சொல்லிக் கொண்டிருந்தாள்.அடுத்த நாள் காலை அவள் போய்விட்டாள்.
பயணத்திலிருந்து திரும்பிவருபவர்கள் அவளைப் பற்றிய செய்திகளைக் கொண்டு வருவார்கள்.அவள் ஒருவரின் வைப்பாட்டியாக மிக நல்ல நாகரிகமாக வசதியாக வாழ்வதாக ஒருவர் சொன்னார்.வேறொருவர் அவளை ’டயமண்ட் மார்க்கெட்டில்’பார்த்ததாகச் சொன்னார். இன்னும் சிலர் பராசாலையில் பார்த்ததாகச் சொன்னார்கள்.
ஆனால் பாட்டியின் விளக்கம் டைனிக்கு திடீரென காலரா வந்து யாருக்கும் தெரிவதற்குள்ளாக இறந்துவிட்டாள் என்றுதான்.
பேத்தியின் சாவிற்காக சில காலம் துக்கத்திலிருந்துவிட்டு பாட்டி திரும்பவும் வழக்கம் போல சுற்றத் தொடங்கி விட்டாள்.அவளைக் கடந்து செல்பவர்கள் பலவிதமாக அவளைக் கேலி செய்தனர்.“பாட்டி ,நீ ஏன் திருமணம் செய்து கொள்ளக் கூடாது”? என் சகோதரி சொல்வாள்.
“யாரைத் திருமணம் செய்து கொள்வது .உன் கணவனையா?”பாட்டி வெறுப்பாகக் கேட்பாள்.
“ஏன் அந்த அந்த முல்லாவை திருமணம் செய்து கொள்ளக்கூடாது? அவருக்கு உன்னை மிகவும் பிடிக்கும்”.
பாட்டி பொறுக்க முடியாத வகையில் வசைபொழிய ஆரம்பிப்பாள்.
“அவனா! கையில் கிடைத்தால் பிய்த்து விடுவேன்.அப்படிச் செய்யாவிட்டால் என் பெயரை மாற்றிக் கொள்கிறேன்” என்பாள்.
ஆனால் நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும் அவள் முல்லாவை எப்போது பார்க்க நேர்ந்தாலும் வெட்கமடைவாள்.
அங்குள்ள சிறுபிள்ளைகள் தவிர, பாட்டியின் ஆயுட்கால எதிரிகள் குரங்குகள் தான்,குழம்ப வைக்கும் குரங்குகள்.அவை பலதலைமுறைகளாக அந்தப் பகுதியிலிருப்பதால் அங்கிருக்கும் ஒவ்வொருவரைப் பற்றியும் அவைகளுக்குத் தெரியும்.ஆண்கள் அபாயமானவர்கள்,குழந்தைகள் போக்கிரிகள்,ஆனால் பெண்கள்தான் தமக்கு பயப்படுவார்கள் என்று தெரிந்துகொண்டவை. ஆனால் பாட்டியும் அவைகளோடு பலகாலம் இருந்தவள்.குழந்தையின் கவட்டையைக்காட்டி அவைகளைப் பயமுறுத்து வாள்.காயம் இருக்கும்போது புர்காவை டர்பன் போல தலையில் சுற்றிக்கொண்டு அதன்மேல் கவட்டையை வைத்துக்கொள்வாள். குரங்குகள் ஒரு நிமிடம் பயந்து போய்,பின்பு அவளிடம் தம் வேலையைக் காட்டும்.
பாட்டியிடமிருக்கும் மிச்சமீதி உணவுக்காக நாள் முழுவதும் குரங்குகள் அவளோடு சண்டைபோடும்.அப்பகுதியில் திருமணம், சாவு, குழந்தையின் நாற்பது நாள் விழா நடைபெறுகிறதோ அப்போது மிச்சமிருக்கும் உணவை கான்ட்ராக்ட் எடுத்தது போல பாட்டி அங்கிருப்பாள். இலவச உணவு வழங்கப்படும் போது நான்கு தடவை வந்து தன் பங்கைப் பெற்றுக் கொள்வாள்.இப்படியாக உணவைக் குவித்து அதை வருத்தத்தோடு பார்த்துக் கொண்டிருப்பாள். கடவுள் தனக்கு ஒட்டகத்தைப் போல வயிற்றைக் கொடுத்திருந்தால் நான்குநாள் உணவு ஒரேதடவையில் உள்ளே போய்விடும் ஏன் அப்படி கொடுக்கக் கூடாது?அவளுக்கான உணவு ஏடாகூடமாக இருக்க வேண்டும் என்று கடவுள் விதித்து விட்டார். ஒரே நேரத்தில் இரண்டு வேளை உணவுண்ணும் சக்தியை கடவுள் அவளுக்கு ஏன் தரக் கூடாது?அதனால் அவள் என்ன செய்வாளென்றால் அந்த உணவை பரப்பிக் காயவைத்து துண்டுகளாக்கி ஒரு குடத்தில் வைத்து விடுவாள்.பசிக்கும்போது குடத்திலிருந்து சிறிய அளவு எடுத்து பொடி யாக்கித் தண்ணீர் விட்டு உப்பு,பச்சை மிளகாய் சேர்த்து சாப்பிடுவாள். ஆனால் கோடை, மழைக் காலங்களில் இது கடுமையான வயிற்றுப் போக்கை ஏற்படுத்திவிடும்.அதனால் இந்த வகையான தன் உணவு கெட்டு விடும்போது,அதை அவள் ஆடுகள்,நாய்கள் வைத்திருப்பவர்களுக்கு விற்றுவிடுவாள். பொதுவாக ஆடுகள்,நாய்கள் ஆகியவற்றின் வயிறு பாட்டியின் வயிற்றை விடச் சக்தியானது என்பதால் அதை வாங்கிக் கொள்ளும் மனிதர்கள் பாட்டி தரும் பரிசாக அதை ஏற்காமல் காசுகொடுத்து வாங்கிக் கொள்வார்கள். துண்டுகளும் ,துணுக்குகளுமான இந்த உணவு பாட்டிக்கு வாழ்க்கையை விடப் பெரிய வரப்பிரசாதம்..பலவித வசைகள்,சாபங்களுக்கிடையே பெற்று ,காய வைத்து எதிரியான குரங்குகளிடமிருந்து பாதுகாத்து வைப்பது ஒரு போர் தான்.அவள் உணவைப் பரப்பும்போது வயர்லெஸ் மூலமாகச் செய்தி போவது போல குரங்குகளுக்குத் தெரிநதுவிடும்.அவைகள் கூட்டமாக வந்து சுவர் அல்லது அங்குள்ள கற்களில் உட்கார்ந்து அந்த வழியில் போகிறவர்களைப் பார்த்து உறுமிக் கொண்டிருக்கும். பாட்டி அவைகளுக்கு எதிராகப் போராடுவாள். புர்காவைத் தலையில் சுற்றிக் கொண்டு,கையில் கவட்டையை வைத்துக் கொண்டு அவள் நிற்பாள்.திரும்பத் ,திரும்ப அவைகளை விரட்டிக்கொண்டு இந்தப் போர் நாள் முழுவதும் தொடரும். மாலையில் அவற்றின் கொள்ளையிலிருந்து தப்பியதை எடுத்துக் கொண்டு அடிமனதிலிருந்து அவைகளுக்கு சாபம் தந்துவிட்டு தன் இடத்திற்குத் தூங்க வந்துவிடுவாள்.
குரங்குகளுக்கும் பாட்டியிடம் தனிப்பட்ட பகையிருக்க வேண்டும்.உலகம் தங்களுக்குத் தரும் எல்லாவற்றையும் புறக்கணித்து விட்டு பாட்டியின் உணவுத் துண்டுகளையே குறிவைக்கும்.அவற்றின் தாக்குதலை என்னவென்று சொல்ல முடியும்?தன் வாழ்க்கையை விட அவள் பெரியதாக நினைத்த தலையணையைப் பறித்துக் கொண்டோடிய அந்தப் பெரிய குரங்கின் செயலை எப்படி விளக்க முடியும்?டைனி போனபிறகு பாட்டிக்கு உலகில் மிக நெருக்கமான தாக இருப்பது இந்தத் தலையணை தான்.தன் புர்காவைப் பற்றிக் கவலைப் படுவது போல அவள் இதற்கும் கவலைப்பட்டாள்.பெரிய தையல்களால் அதை எப்போதும் சரி செய்து கொண்டிருப்பாள்.ஒரு சிறு குழந்தை தன் பொம்மையோடு விளையாடு வதைப் போல அவள் தலையணையோடு நேரம் கிடைக்கும் போதெல்லாம் விளையாடுவாள்.இந்த்த் தலையணையைத் தவிர அவளுக்கு தன் கவலைகளைப் பகிர்ந்து கொள்ள வேறு யாருமில்லை.அது அவள் சுமையைக் குறைதிருக்கிறது.பெரிய தையல் போட்டு அதன் மடிப்புகளை வலிமையாக்குவது அவளுக்கு மிகவும் பிடித்தது.
விதி இப்போது அவளிடம் எப்படி விளையாடுகிறது பாருங்கள்.அவள் புர்கா உடலைச் சுற்றியிருக்க ,கைப்பிடிச் சுவரில் சாய்ந்து உட்கார்ந்தபடி இடுப்புக் கயிற்றில் இருந்த பேனை எடுத்துக் கொண்டிருந்த போது திடீரென ஒரு குரங்கு அவள் தலையணையைத் தட்டிப் பறித்துக் கொண்டு ஓடிவிட்டது யாரோ பாட்டியின் மார்பிலிருந்து அவள் நெஞ்சைப் பிய்த்து விட்டார்கள் என்று நீங்கள் நினைத்திருக்கலாம். அவள் கத்தி அழுதது அப்பகுதி மக்கள் எல்லாம் கூட்டமாக ஓடி வரும்படி செய்தது.
குரங்குகள் எப்படிப்பட்டவை என்று உங்களுக்குத் தெரியும்.யாரும் பார்க்காத நேரத்திற்காகக் காத்திருந்து ஒரு டம்ளரையோ அல்லது உலோகப் பாத்திரத் தையோ இரண்டு கைகளாலும் எடுத்துக் கொண்டு ஓடி கட்டைச் சுவற்றில் உட்கார்ந்து அதைச் தேய்க்கும்.அந்தப் பொருளுக்குச் சொந்தமானவர் கையில் ரொட்டித் துண்டு அல்லது வெங்காயத்துடன் அதைப் பார்த்து கெஞ்சிக் கொண் டிருப்பார்;ஆனால் குரங்கு வேடிக்கையாக அதைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு தனக்குத் தோன்றும் போது அதைத் தூக்கிப் போட்டுவிட்டு தன்பாட்டிற்குப் போய்விடும்.பாட்டி தன் குடத்திலுள்ள முழுவதையும் கொட்டினாலும் அந்தக் குரங்கு தலையணையின் மீதுதான் கண் வைத்திருந்தது. தன்னால் முடிந்த வரை பாட்டி அதனிடம் கெஞ்சிப் பார்த்தாள். ஆனால் அதன் மனம் உருகவில்லை.அது வெங்காயத்தின் தோலை வெற்றிகரமாக உறிப்பது போல –பாட்டி ஒன்றன் மேல் ஒன்றாக தைத்து வைத்திருந்த மடிப்புகளை உரித்து எறிந்தது.பாட்டி கீழே விழும் அவற்றை ஒன்றொன்றாகப் பிடித்துக் கொண்டிருந்தாள்.ஒவ்வொரு உறையும் வரவர அவள் குரல் பெரிதாகி அலறலாக வெளிப்பட்டது.இப்போது கடைசி உறையைத் துண்டு துண்டாக பிய்த்து பொருட்களை ஒவ்வொன்றாக எறிந்தது-அதில் பஞ்சு மட்டுமில்லை.பல பொருட்கள்.. ஷப்பானின் ஜாக்கெட்,..பன்னு–தண்ணீர் தருபவனின் இடுப்புத் துணி,ஹசீனாவின் பாடி ,குட்டி முன்னாவின் பொம்மையிலிருந்த சிறிய டவுசர்..ரகமத்தின் சிறிய துப்பட்டா.. கைராதியின் நிக்கர் கைராதியின் மகனுடைய பொம்மைத் துப்பாக்கி.. முன்ஷியின் தொப்பி..இப்ராகிமுடைய சட்டையின் கைப்பகுதி அமீனாவின் பாட்டில், பதாபன்னின் மைடப்பா.. சகினாவின் ஜிகினாகிளிப் பெட்டி.. முல்லாவின் ஜெபமாலை மணிகள்…பகீரின் வழிபாட்டுப் பலகை.. பிஸ்மில்லாவின் தொப்புள்கயிறு, டைனியின் முதலாண்டு பிறந்த நாள் விழாவின்போது பயன்படுத்தப்பட்ட மஞ்சள் பொட்டலம் ..ஒரு வகை அதிர்ஷ்ட புல்,ஒரு வெள்ளி மோதிரம்,போரிலிருந்து வெற்றிகரமாக மீண்ட பஷீர்கானுக்கு அரசு கொடுத்த தங்கமுலாம் பூசப்பட்ட பதக்கம்.
“திருடி!,,மோசக்காரி.. கிழவி!… கிழச் சாத்தான் வெளியேற வேண்டும்… அவளைப் போலீசிடம் ஒப்படைக்க வேண்டும்! அவள் படுக்கை… அதில் பல பொருட்களை நீங்கள் பார்க்கலாம்!” சுருக்கமாகச் சொன்னால் அவர்கள் நேரடியாக இவையனைத்தையும் ,தாங்கள் நினைத்ததையெல்லாம் சொன்னார்கள்
பாட்டியின் கூக்குரல் திடீரென்று நின்றுவிட்டது.கண்ணீர் வற்றி விட்டது.தலை தொங்கிய நிலையில் பேச்சிழந்து அதிர்ச்சியோடு நின்றாள். கைகள் முழங் காலை கட்டியிருக்க அவள் அன்றிரவு முழுவதும் உட்கார்ந்தே கழித்தாள். தொடர்ந்த விம்மலால் அவள் உடல் நடுங்கியது. தன் பெற்றோர், கணவன் மகள் பிஸ்மில்லா ,பேத்தி டைனி ஆகியோரின் பெயர்களைச் சொல்லி அழுதாள். இடையிடையே சிறு தூக்கத்தில் ஆழ்ந்து, பின் விழித்து புண்ணில் எறும்புகள் கடித்தது போல அழுதாள். சில சமயங்களில் சிரித்தும், சிலசமயங்களில் அழுதும்,தனக்குள் பேசிக் கொண்டும் ,காரணமின்றிச் சிரித்துக் கொண்டுமிருப்பாள்.இரவுநேரத்தில் அவளுக்குப் பழைய ஞாபகங்கள் வர சீக்கான நாய் போல ஊளையிடுவாள். தன் அழுகுரலால் அப்பகுதி மக்களை எழுப்பி விட்டு விடுவாள்.இரண்டு நாட்கள் இப்படிக் கழிய,அப்பகுதி மக்கள் தாங்கள் நடந்து கொண்ட விதத்திற்காக வருந்தினர்.இந்தப் பொருட்களில் எதுவும் யாருக்கும் தேவையில்லை. அவை தொலைந்து பல வருடங்களாகி விட்டன. அதற்காகச் சில காலம் கவலைப்பட்டுவிட்டு அதை மறந்து விட்டனர். அவர்களில் யாரும் கோடீஸ்வரரில்லை.அந்த மாதிரி சில சமயங்களில் சாதாரண வைக்கோல் கூடத் தூண் போல உங்களைச் செயல்பட வைக்கும்.ஆனால் இந்த இழப்புகள் எல்லாம் அவர்களைக் கொன்று விடவில்லை.ஷப்பானின் ஜாக்கெட் தொலைந்து பலநாட்களாகி விட்டன.அது தொலைந்ததால் அவன் குளிருக்கு பயந்தவனாகவோ, அது வருவதற்காகக் காத்திருந்து, வளர்ந்து விடாமலில்லை.ஹசீனா பாடி அணியும் பருவத்தைக் கடந்துவிட்டாள்.முன்னியின் பொம்மை டிரவுசரால் என்ன பயன்?அவள் இப்போது பொம்மை விளையாட்டைக் கடந்து பொம்மை சமையல் பருவத்திற்கு வந்துவிட்டாள்.அப்பகுதியில் உள்ள எவரும் பாட்டியின் இரத்தத்தைக் குடிக்கும் ரகமில்லை.
பழைய காலத்தில் ஒரு ராட்சஸன் இருந்தான். அவன் உயிர் ஒரு பெரிய தேனீயிடமிருந்தது.ஏழுகடல்களுக்கு அப்பால் ஒரு குகையில் ஒரு பெரிய பேழை ,அதற்குள் மற்றொரு பேழை .அதனுள் ஒரு சிறிய பெட்டி அதற்குள் அந்தப் பெரிய தேனீ இருந்தது.வலிமையான இளவரசன் ஒருவன் முதலில் தேனீயின் ஒரு காலைக் கிழித்தான் .அதனால் ராட்சஸனின் கால்கள் உடைந்தன. பிறகு அவன் இன்னொரு காலைக் கிழிக்க ராட்சஸனின் இன்னொரு கால் உடைந்தது.பிறகு அவன் தேனீயை நசுக்க ராட்சஸனின் உயிர் பிரிந்தது.
பாட்டியின் வாழ்க்கை அந்தத் தலையணையிலிருந்தது.குரங்கு தன் பற்களால் அதைக் கிழித்து ,பாட்டியின் நெஞ்சில் பழுக்கக்காய்ச்சிய கம்பியைத் திணித்து விட்டது.
விதியால் இந்த உலகில் பாட்டி படாத துயரமில்லை, அவமானமில்லை, வெட்கக் கேடில்லை. அவள் கணவன் இறந்த பிறகு அவள் வளையல்கள் நொறுக்கப்பட்டன, தான் அதிக நாட்கள் வாழமாட்டோமென்று பாட்டி நினைத்தாள்;பிஸ்மில்லா அவளுக்குப் பிறந்த போது ஒட்டகத்தின் மேல் வைக்கப் படும் கடைசி வைக்கோல் என்று உறுதியாக நம்பினாள். டைனி அவளுக்கு பெரிய அவமானத்தைத் தந்து விட்டு ஓடிய போது இது மரண அடி என்று நினைத்தாள்.
பிறப்பு தொடங்கியே ஒவ்வொரு நோயும் அவளைத் தாக்கியது.சின்னம்மை முகத்தில் வடுக்களைப் பதித்து விட்டுப் போனது.ஒவ்வொரு ஆண்டும் பண்டிகையின் போது தவறாமல் கடும் காலராவால் பாதிக்கப் படுவாள்.
அவள் விரல்கள் தேய்ந்து, கைகளரித்துப் போகும் வரை பல காலம் மற்ற வர்களின் கழிவுகளைச் சுத்தம் செய்தவள் ;பாத்திரம் பண்டங்களைத் தேய்த்து கைகளில் வடுக்களும் பள்ளங்களுமாய் இருப்பவள். சிலசமயங்களில் இருட்டில் படிகளில் விழுந்து ,தானே தன் உடலை இழுத்து இறங்கிவந்து ,படுக்கையில் இரண்டு மூன்று நாட்கள் கிடப்பாள்.போன பிறவியில் அவள் நாயுண்ணியாக இருந்திருக்க வேண்டும்; அதனால்தான் சுலபமாகச் சாகமுடியவில்லை.. எப்போதும் இடையீடில்லா நிலையைக் மரணம் அவளுக்குக் கொடுத்திருக்கிறது போலும்.தன் கந்தல்ஆடைகளோடு அவள் அலைவாளே தவிர, ,இறந்து போனவர்களின் ஆடைகளை ஏற்றுக் கொண்டதோ,அவர்கள் தன்னிடம் நெருங்கி வருவதையோ ஒருபோதும் அனுமதித்ததில்லை.செத்துப் போனவன் அந்த மடிப்பில் மறைந்திருந்து பாட்டியை இழுத்துக் கொண்டு விடலாம். கடைசியில் குரங்குகள்தான் பாட்டியின் கணக்கை முடிக்கும் என்று யார் எதிர் பார்த்திருப்பார்கள்.? விடியற்காலையில் தண்ணீர் எடுக்கும் பையன் வந்த போது படியில் பாட்டி சாய்ந்திருந்தாள்.அவள் வாய் திறந்திருக்க, அரையாக மூடியிருந்த கண்களின் மேல் ஈக்கள் ஊர்ந்து கொண்டிருந்தன. ஜனங்கள் பாட்டி அடிக்கடி அப்படி தூங்குவதைப் பார்த்து இறந்து போய்விட்டாளோ என்று பயந்திருக்கின்றனர்.ஆனால் பாட்டி எழுந்து தொண்டையைச் செருமிக் கொண்டு,தன்னைத் தொல்லைக்குள்ளாகியவருக்கு வசவுகள் பாடிவிட்டுப் புறப்பட்டு விடுவாள்.. ஆனால் அன்று அவள் சாய்ந்தபடியே உட்கார்ந்திருந்தாள். உலகின் மேல் தனக்கிருக்கும் வெறுப்பை தொடர்ந்து காட்டியவள் .தன் வாழ்நாள் முழுவதிலும், அவள் ஒரு சந்தர்ப்பத்தில் கூட நிம்மதியாக இருந்த தில்லை.அவள் எங்கிருந்தபோதும் முட்களிருந்தன.எப்போதும் சாய்ந்து உட்கார்ந்திருப்பதைப் போலவே பாட்டி இருந்தாள்.அவள் உடலை இழுப்பது, கட்டுவது என்று எதுவுமே சிரமமாக இருக்கவில்லை.
தீர்ப்பு நாளில் தாரை முழங்கியது. ,இலவச உணவு வழங்கப்படுவதைக் காது கேட்டது போல பாட்டி இருமியபடி எழுந்து,தொண்டையைச் செருமி. பிச்சை யெடுக்க கிளம்பினாள்… தேவதைகளைச் சாபமிட்டபடி எப்படியோ தன்னை இழுத்துக் கொண்டு,தான் இருமடங்காகி, சிராத் பாலத்தைக் கடந்து சக்தி.. கருணை ..வடிவான கடவுளின் முன்னிலையில் அவள் …கடவுள் ,மனித இனத்தின் இழிவுநிலைக்காக வருந்தித் தலைகுனிந்து இரத்தக் கண்ணீர் வடித்தார். அந்த தெய்வீக இரத்தக் கண்ணீர் பாட்டியின் கடினமான ஈமக்குழியில் விழ ,பிரகாசமான சிவப்பு மலர்கள் காற்றில் நடனமிட்டன.
————————–
.[சிராத் இசுலாம் நம்பிக்கைப்படி சொர்க்கத்தை அடைய வேண்டுமெனில் முடியை விட மெல்லியதாகவும், வாளை விடக் கூர்மையானதாகவும் இருக்கிற ஒரு பாலத்தைக் கடப்பதாகும்]
நன்றி: Contemporary Indian Short Stories –Series 1, Sahitya Akademi

 

 

சிவசங்கரி – குவிகம் சிறுகதைத் தேர்வு 2022-23 அக்டோபர் 2022 – லதா ரகுநாதன்

எழுத்தாளர் சிவசங்கரி பற்றிய தகவல்களை தரமுடியுமா? - Quora

 

இம்மாத சிறந்த சிறுகதை  :

ஒத்திகைக்கான இடம் – ஜிஃப்ரி ஹாசன்      சொல்வனம்   11.09.2022

———————————————————————————————————————–

கசம்-  தெரிசை சிவா                சொல்வனம் செப்ட் 25

வட்டார பேச்சு முறையில் பின்னப்பட்ட அற்புத சித்தரிப்பு. விவரிப்பான கதை. கடவுள் நம்பிக்கையையும் விட்டு வைக்கவில்லை. எதிர்பார்க்காத தளம் எதிர்பார்க்காத முடிவு.

கல்யாணக் கணக்கு – அசோக் ராஜ் ஆனந்த விகடன் செப்ட் 28

அவள் ஓர் தொடர்கதை பாணி கதை. கதைக் கரு மிகவும் பழையது. ஆனால் கூறப்பட்டுள்ள விதம் சற்றே வித்யாசப்படுகிறது. எங்கோ நம்முள் ஒரு சோகத்தை அது தூண்டி விடுகிறது.

அவள் வாசம் -சி. சி முருகபாரதி      –  ஆனந்தவிகடன் செப்ட். 21

திரைப்பட தொழிலில் முன்னணிக்கு வராதவர் படும் அவஸ்தைகளை மிக அழகாகக் காட்சிப் படுத்தப்பட்டிருக்கிறது.கதை உரையாடல் பாணியில் கூறப்படாமல் விவரிப்புக்களால் கூறப் பட்டுள்ளது. இந்தத்துறையில் சாதித்துக்காட்டவேண்டும் எனும் கட்டாயத்தோடு வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் பலர். அதில் கதையின் நாயகனும் ஒருவர். திரைப்படத்துக்காரர்களுக்கு ஏற்படும் பல அசெளகர்யங்களில் வீடு வாடகைக்குக் கிடைக்காமல் போவது. இதற்காக நாயகன் சொல்லும் ஒரு பொய் தான் கதையின் முக்கியமான அம்சம். எதிர்பாராத முடிவு கதையை அழகுபடுத்துகிறது.

நல்ல துப்பாக்கி – அ.முத்து லிங்கம்                               காலச்சுவடு  செப்ட் 2022

அவ்வளவாக நாம் அறிந்திராத களத்தில் கதை நகர்வது சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறது. சற்றே நடந்த சரித்திரத்தையும் உள்ளடக்கிக் கதை சொல்லப்பட்டிருக்கிறது. கதை செல்லும் போக்கு தாலிபான் இயக்கத்தின் அடாவடி நடவடிக்கையில் சென்று முடியும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்த, முடிவு தடக்கென்று எங்கோ சென்று நிற்கிறது. விவரிப்புக்கள் மிகத் தெளிவு, சுவாரஸ்யம்.

திருநடம் – ஆதித்ய ஸ்ரீநிவாஸ்    சொல்வனம் செப்ட். 11

வட்டார வழக்கு முறைகள் வட்டார பேச்சில் அழகாகக் கூறப்பட்டிருக்கிறது. சென்னை மழைக்கால சோகங்களை அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. இந்தக்கதையில் மழைதான் கதாநாயகன். சற்றே வளர்ச்சி அடையாத கிராமம் ஒன்றில் இந்த மழையால் மக்கள் படும் அவஸ்தைகள் தான் கரு.இந்த அவஸ்தைகள் வழியே வெளியிடப்படும் தன்னலம், பெருந்தன்மை, உண்மை, கற்பனை என்ற கலவையான உணர்ச்சிகள். இவை மிக நேர்த்தியாகக் கோர்க்கப்பட்ட விதம் கதாசிரியருக்கு ஒரு ஷொட்டை பெற்றுத்தருகிறது. கதையின் முடிவு உலகம் உருண்டை…. ஆரம்பித்த இடத்திலேயே வந்து முடியும் என்பது போல் முடிக்கப்பட்டுள்ளது.

 

அவ்வையார் பள்ளி – ஆயிஷா இரா நடராசன்.   குங்குமம் செப்ட் 30

ஒரு அக்மார்க் சயன்ஸ் ஃபிக்க்ஷன் கதை. அழகாகச் சொல்லப் பட்டிருக்கிறது. டைம் ட்ராவல் தான் கரு. சாதாரணமாக இவ்வாறான கதைகள் சந்தோஷமாகவே முடிக்கப்படும். ஆனால் முடிவு ஒரு கேள்விக்குறியோடு நம் சிந்தனைக்குத் திறந்து விடப்பட்டிருக்கிறது. மிக நல்ல முயற்சி. ஆனால் அவ்வளவு சிறிய பள்ளிக்கூடத்தில், தொழில்நுட்ப உதவிகள் ஏதுமில்லாமல் டைம் மெஷின் கண்டுபிடித்தாக சொல்லப்படுவது சற்றே சிரிப்பை வரவழைக்கிறது. ஒரு வேளை இதைப்போன்ற கேள்விகள் எழக்கூடாது எனும் எண்ணத்தில் தான் தமிழாசிரியர், அவ்வையார் என்று திசைதிருப்புதல் இருக்கிறதோ?

வானோர்கள் – ரகுராமன்            சொல்வனம் செப்ட் 25

மற்றும் ஒரு விஞ்ஞானம் தொழில்நுட்பத்தை அடிப்படையாக வைத்துக் கதை. ஸ்டார் கேசிங் அதாவது மேகத்தில் நீந்தி வரும் பலபல கோள்களையும் நட்சத்திரங்களையும்  பார்ப்பது. பலர் தற்போது இதைப்போன்ற அற்புதங்களைக் காண ப்ளானடோரியத்திர்க்கு குழந்தைகளை அழைத்துச் செல்கிறார்கள். ஆனால் இந்த வசதி இல்லாத ஒரு காலகட்டத்தில் தன் மொட்டை மாடியை நட்சத்திரங்களைப் பார்க்கும் தளமாக மாற்றிய சிறுவன் மற்றும்.  நண்பனைப்பற்றிய கதை. SLV3 விண்ணில் செலுத்தப்பட்ட காலகட்டத்தைத் தொட்டுச்செல்கிறது. கதை கூறப்படும் விதம் மிகச் சுவாரஸ்யம். ஆனால் முடிவு.. அனைவரும் சராசரி மக்களே…. பணமும். பதவியும் தான் இவர்களுக்குப் பிரதானம் என்று ஒரு நெகடிவ் டோனுடன் முடிகிறது.

ஒத்திகைக்கான இடம் – ஜிஃப்ரி ஹாசன்      சொல்வனம்   11.09.2022

குழந்தைகள் ஆசைப்படுவதற்கும் பெற்றோர்களின் ஆசைகளுக்கும் ஏற்படும் முரண்பாடு, அதனால் ஏற்படும் சோகம் என்று எந்தக்காலகட்டத்திலும் யாவருக்கும் பொருந்தக்கூடிய கதைக் களம். கூடுதலாக இஸ்லாமியர்களின் பழக்க வழக்கங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.கதை முழுவதும் சோகமாக ஏதோ ஒன்று நடக்க இருக்கிறது எனும் எண்ணத்தை ஏற்படுத்தும் விதமான வார்த்தைகள். ஏதோ ஒரு காரணத்தைக்காட்டி சாஹிபு மதரசாவில் இருந்து தப்பி வரும் ஒவ்வொரு முறையும் பாவம் இந்தக்குழந்தை இந்த முறையேனும் நினைத்தவாறு இருக்கட்டும் என்று வேண்டத் தோன்றுகிறது. முடிவு, குழந்தைகளை நிர்பந்தப்படித்தினால் வேதனை பெற்றோருக்கும் என்று பொருள்படும்படியாக இருக்கிறது. படித்து முடித்தபின்னரும் மனதில் சோகம் தங்கித்தான் போகிறது.

முதலிடம் –   ஒத்திகைக்கான இடம்.

                                       தேர்வாளர் :-  லதா ரகுநாதன்

சிவமால்

குட்டீஸ் லூட்டீஸ்:

அழகிய தமிழ் மகன் படத்தில் நடித்த குட்டி குழந்தையா இது ..? அடேங்கப்பா எப்படி வளந்திட்டாங்க என்று பாருங்க.. இதோ வை ரலாகும் புகைப்படம் ...

அப்படித்தான் இருக்குமோ..!

காலை வேளை.. ஹாலில் பேப்பர் படித்துக் கொண்டிருந்தேன். மகள் மிதிலாவும் உடன் இருந்தாள்.

‘அப்பா.. ‘ஆமாம்’ங்கறதுக்கு இங்க்லீஷ்லே ‘எஸ்’ன்னுசொல்றோம். ஆனா அந்த ‘எஸ்’ங்கறதுக்கு ஸிம்பிளா ‘எஸ்’ங்கற ஒரு எழுத்து ஸ்பெல்லிங்க் வைக்கறதுக்கு பதிலா ஏன் ‘வை-ஈ-எஸ்’ன்னு மூணு எழுத்து ஸ்பெல்லிங் வச்சிருக்காங்க?’ என்றாள் திடீரென்று.

பேப்பரிலிருந்து பார்வையை விலக்கி அவளைப் பார்த்தேன். என் பதிலுக்காக புன்னகையோடு காத்திருந்தாள்.

சில நிமிடங்கள் யோசித்து என் மூளையில் ஒன்றும் பிடிபடாமல், ‘அத அந்த இங்கிலீஷ்காரன்கிட்டேதான் கேட்கணும். உனக்குத் தெரிந்தால் நீயே சொல்லு..’ என்றேன் சிரித்துக் கொண்டே.

அவள் சிறிது மமதை கலந்த வெற்றிப் புன்னகையோடு, ‘யார் எதைச் சொன்னாலும் ‘எஸ்’ஸ¤ன்னு காரணம் காரியம் தெரியாம செய்யக் கூடாது. அது ‘ஏன்’, ‘எதுக்கு’ ‘எப்படி’அதாவது ‘why ன்னு கேட்டுத் தெரிஞ்சு செய்யணும். அதுக்-
குத்தான், ‘வை’ ன்னு முதல் எழுத்து கொடுத்து, அதையும் ‘எஸ்’ என்ற எழுத்தையும் இணைக்க இடைச் செருகலா ‘ஈ’ என்ற வவ்வலையும் கொடுத்திருக்காங்க. அதனால்தான் அதன் ஸ்பெல்லிங் ‘வை-ஈ-எஸ்” என்று சொன்னாளே
பார்க்கலாம்.

‘ஒருகால் உண்மையில் அதுதான் காரணமாக இருக்குமோ’ என்று யோசிக்க ஆரம்பித்தேன்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

கொஞ்சம் சிரித்து வையுங்க பாஸ்:

கண்ணாடிலே படலே!

‘ஆமா.. நார்மலா ப்ரூ·ப் படிச்சிட்டு கண்ணுலே ஒரு
தப்பும் படலே’ன்னு சொல்வாங்க… ஆனா ஏன் அந்த
ப்ரூ·ப் ரீடர் ‘கண்ணாடிலே ஒண்ணும் படலே’ன்னு
சொல்றார்..!?’

‘ஓ அதுவா.. அவர் மூக்குக் கண்ணாடி வழியா ப்ரூ·ப்
பார்த்தார் இல்லையா… அதுதான்…!’

 

 

 

சதுரங்கம் – ந பானுமதி

 

ராஜாகண்ணு(80) மற்றும் அவரது மனைவி வசந்தா (75

(யார் இவர்கள்?  கதையின் கடைசியில் பாருங்கள் ) 

“அப்பா, தப்பாட்டம் ஆட்றாம்ப்பா! ரெண்டுக் கட்டத்தைத் தாண்டி ஏறி வந்து பழம் எடுக்கறாம்ப்பா.”

‘நீ மட்டும் ஒழுங்கோ? தாயம் விழாமலே நொழஞ்சவன் தான நீ?’

அம்மா சிரித்தாள். ‘அப்ப, அண்ணன் தம்பி ரெண்டு பேரும் ஃப்ராடு. அந்தச் சொக்கட்டான்ல பெரியப்பா புள்ள, சித்தப்பா புள்ள சண்ட போட்டாங்க. ஒரு வயித்துப் புள்ள நீங்க. எதுக்கெடுத்தாலும் அடிச்சுங்கிறீங்க; சந்தி சிரிக்கப் போகுது குடும்பம்.’

இரண்டு பேரும் விருட்டென்று காய்களைக் கலைத்துவிட்டு முறைத்துக் கொண்டு நின்றனர். அவர்களின் ஆங்காரம் தணிய ஐந்து நாட்களாகியது.

அவள் சொன்னது எவ்வளவு சரியாக இருக்கிறது. ஆம், சந்தி சிரிக்க வைத்துவிட்டார்கள். சக்கர நாற்காலியில் அமர்ந்து வருகையில், இதைத் தள்ளும் கைகள் தங்கள் மகனுடையதாக இருக்கக்கூடாதா என்ற ஏக்கம் அவருள் எழாமலில்லை. மேடும், பள்ளமுமான அந்தச் சாலையில் அவரால் சக்கர வண்டியை இயக்க முடியவில்லை. அது மிகப் பழைய மாடல். தன்னிடம் காசிருந்தால் அவர் புதிதாக மோட்டார் பொருத்தப்பட்ட ஒன்றை வாங்கி இருப்பார். இது அவர்கள் தங்கியிருக்கும் முதியோர் இல்லத்தில் அவர்கள் கொடுத்துள்ள இலவசம். இதற்கு மேல் அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. உதவி செய்ய கூட வந்துள்ள பையன் தாறுமாறாகத் தள்ளுகிறான். இடுப்பில் பொருத்தப்பட்டுள்ள செயற்கை எலும்பு நடு நடுங்குகிறது. இவனை ஏதாவது சொல்லிவிட்டால் நாளைக்கு வரமாட்டான்.

எதிரே குழந்தையை ‘ப்ராமில்’ தள்ளிக் கொண்டு வந்த பெண் சற்று ஒதுங்கி வழி விட்டாள். அது குறுகலான பாதை. மிகக் கவனத்துடன் குழந்தையைக் கையில் எடுத்துக் கொண்டு அவள் குழந்தையின் தள்ளுவண்டியை ஒதுக்கினாள். தன்னை அறியாமல் அவருக்குக் கண்களில் நீர் திரண்டது. எத்தனை முறை அவரும், அவளும் தங்கள் மகன்களை இப்படியெல்லாம் அழைத்துச் சென்றிருப்பார்கள்! இரு தோள்களிலும் இருவரையும் ஏற்றிக்கொண்டு வானத்தையும், மரங்களின் மேற் கிளையிலுள்ள பூக்களையும், பழங்களையும், பறவைகளையும், நிலவையும், நட்சத்திரங்களையும், கறுக்கும் மேகங்களையும் காட்டுவார். பள்ளி, கல்லூரி கட்டணங்களைத் தவிர, பியானோ, வயலின் என்று எவ்வளவு கட்டண வகுப்புகளுக்கு அவர்களுக்காகச் செலவிட்டார். அவர் பணி செய்த அலுவலகம் மற்றொருவர் கைகளுக்கு மாறிய பின்னர், இந்தப் பிள்ளைகளுக்காக அவர் தன் தகுதிக்கேற்ற வேலையில்லை என்ற போதிலும் கிடைத்த வேலையில் தொற்றிக் கொண்டாரே.

தானும், அவளும் எத்தனையைக் குறைத்துக் கொண்டோம், இந்தப் பையன்களுக்காக. சின்னவனுக்கு டிப்தீரியா வந்த அந்த வாரம் முழுதும் மருத்துவ மனையை விட்டு அவள் ஒரு இஞ்ச் கூட நகரவில்லை. எண்ணெய் புட்டியும், கையுமாக அவனையும் தூக்கிக் கொண்டு பேருந்தில் பயணித்து கடற்கரை காலை இளஞ்சூட்டு மணலில் எண்ணெய் தடவி அவன் கால்களை மணலில் புதைத்து, உருவி உருவி ஒரு மாதம் போராடி அவனை இயல்பாக நடக்க வைத்தாள் அவள். அதற்குள், அவர் கடையில் இட்டிலி வாங்கி வந்து பெரியவனுக்கு ஊட்டி பள்ளிக்குக் கொண்டுவிட்டுவிட்டு, தான் குளித்து இரண்டு இட்டிலியை வறட்வறட்டென்று தின்றுவிட்டு அலுவலகத்திற்கு ஓடுவார். சினிமா, இசை வகுப்புகள், பிக்னிக், பிறந்தநாள் கொண்டாட்டம் எதையும் பையன்களுக்கு மறுத்ததில்லை. முன்னர் பணி செய்த அலுவலகத்தில் ஈட்டிய பணத்தில் வாங்கிய வீடும், ஐம்பது பவுன் நகைகளில் 20 பவுன் நகைகள் மட்டுமே ஒரு காலத்தில் மீந்தன. இப்போதோ சொந்த வீட்டிலிருந்து மூத்தவன் விரட்டிவிட்டு விட்டான். இளையவன் ஐந்து பவுன் நகைகளை வாங்கிக் கொண்டு போனவன்தான்; அவருக்கு இரு அறுவை சிகிச்சை நடந்தபோது கூட இருவரும் எட்டிப் பார்கவில்லை.உதவி செய்யவில்லை.

“ஐயா, பெரியவரே, கூப்ட கூப்டத் தூங்குறீங்களே? ஆமா, நா சொகுசா தள்ளிட்டு வாரேன்; காத்து இதமா வீசுது. ஏன் கண்ணயற மாட்டீஹ? இப்ப எங்கன போவோணும்- ஆசுபத்திரியா, கோர்ட்டா?”

‘மன்னிச்சுக்கப்பா, கோர்ட்டுக்கே போ. நேரத்துக்கு இல்லனாக்க வக்கீலு வேற பாடுவாரு.’

“பொறவு, கீழ்க் கோர்ட்ல ஆடினீரு. இப்ப இங்க ஆடுதீரு.”

‘வாய மூடுடா’ எனக் கத்தத் தோன்றியதை அடக்கிக் கொண்டார். என் விதி பாரு, கண்டவங்கிட்ட பேச்சுக் கேக்க வேண்டியிருக்கு என்று தன்னையே நொந்து கொள்கையில் சுய இரக்கத்தில் கண்களில் நீர் திரள்வதை உணர்ந்து அவசர அவசரமாகத் துடைத்துக் கொண்டார்.

அவருக்கு பசி வயிற்றைக் கிள்ளியது. நேற்றிரவு அவளை மருத்துவமனையில் பார்த்தபோது அவள் அங்கு தனக்களித்த உணவினை மீத்து இரகசியமாக அவருக்குத் தந்தாள். எத்தனை விதவிதமாக சமைத்த கைகள் அவளுடையவை. ‘ஏதோ இரசவாதம் உன்னிடத்தில்’ என்று அவர் சொல்கையில் ஒரு கணம் பூரித்து நிற்கும் அவள் முகம். பெரியவன் ஒரு நாளிரவு ‘இப்போதே வட வேணும்னு’ அடம்பிடித்து அழுத போது, கைப்பிடி உளுந்தை அம்மியில் அரைத்து உடனே வடை செய்து தந்தாளே- அது கூடவா அவனுக்கு நினைவிலில்லை? திடீர் திடீரென்று அவர்களின் நண்பர்கள் வரும் போதெல்லாம் ஏதாவது செய்து தராமல் அவள் இருந்ததேயில்லை. அவள் கையில் காமதேனு இருந்திருக்கிறாள். வறுமையே தெரியாத வளமையைக் காட்டினாள் குழந்தைகளுக்கு. அது தவறோ? அம்மாவும், அப்பாவும் நல்ல நாள்கிழமைகளில் கூட மிகக் குறைந்த விலையுள்ள ஆடைகளைத் தங்களுக்கென்றும், அந்தந்த சீசனில் எது சிறப்போ, எது பையன்களுக்குப் பிடித்தமானதோ அதை விலையைப் பார்க்காமல் வாங்கித் தந்து மகிழ்ந்ததையும் அவர்கள் பார்த்துக் கொண்டுதானே இருந்தார்கள்?

‘போதும், இதெல்லாம் போதும். நா அப்பவே சொன்னேன், நீங்க கேக்கல. மூத்தவன் விரிச்ச வலயில விழுந்தீங்க. ஆயுசு முழுக்க அனுபவ பாத்யத, இந்த வீட்ல வாடக இல்லாம தங்கிக்கோங்க. இப்ப நாலு லக்ஷம் தாரேன். எனக்கு ‘செட்டில்மென்ட்’ பத்ரம் எழுதிக் கொடுத்திருங்க. சதீஷிக்கு ஐந்து பவுன் நகை கொடுங்க. அவன் ஒன்னும் செய்யலேல்ல.’ நம்பினீங்க- நா வேணாம்னு சொல்லச் சொல்ல கேக்கல. ஆறு மாசத்ல வாடக கேக்க ஆரம்பிச்சான்; உங்களால நஷ்டமாகுது, வெளியாருக்கு வாடகைக்கு விட்டா, உங்ககிட்ட கொடுத்த நாலு லக்ஷத்த மூணே வருஷத்ல சம்பாரிச்சுடுவேன் அப்படின்னு கழுத்தல கத்திய வச்சான்.’

‘சரி, அதெல்லாம் இப்ப எதுக்கு? உனக்கு உடம்பு சரியாகட்டம். நா அவங்கள உண்டு இல்லன்னு பண்ணிடறேன்.’

“இப்பயாச்சும் நா சொல்றதக் கேளுங்க. அப்ப நகய வித்து அவன் பணத்த விட்டெறிங்கன்னு சொன்னேன்- அது வொறவ முறிச்சுடும்னு என் வாய அடச்சீங்க. சின்னவன் சதீஷ், ‘அவனுக்குத்தான வீட்டக் கொடுத்தீங்க. உங்க அஞ்சு பவுனு கமலா பிரசவத்துக்கே போயிடுத்து. எங்க வீட்ல எங்களுக்கே இடம் பத்தல. பேசாம இங்க இருங்க. மகேஷ் உங்கள் எப்படி விரட்றான்னு நானும் பாக்கறேன்’ அப்படீன்னு ஓடிட்டான். உங்களுக்கு இடுப்புல ஆபரேஷன், அப்றம், கண்ல க்ளுகோமா. ஐம்பது பவுனு இருவதாக் கொறைஞ்சுது. நானாவது தெம்பாயிருந்தேன்- இப்ப படுத்தாச்சு. கோர்ட்டுக்குப் போங்க. செட்டில்மென்ட்டை ரத்து செய்யுங்க, அது மட்டுமில்ல, மாசாமாசம் அவனுங்க ரெண்டு பேரும் தலா பத்தாயிரம் தரணும்னு மனு போடுங்க.”

‘உளறாத. ‘செட்டில்மென்ட்டை’ எப்படி ரத்து செய்ய முடியும்?

“எல்லாம் முடியும். சட்டம்னா அது தர்மத்தோடதா இருக்கும், இருக்கணும். நாம யாசகமா கேக்கறோம்? நம்மள வீட்ட விட்டு தொரத்தினாங்க இல்ல, அதுக்கான ந்யாயம் கேக்குறோம். எத்தன அவங்களுக்காக விட்டுக் கொடுத்தோம், பட்டினி கிடந்தோம், அதுக்கான ஈடு அவங்களா தரலேன்னா, நாமா கேட்டு வாங்கணுங்க.”

‘அவங்க நம்ம விட்டு எப்போதைக்குமா பிரிஞ்சுடுவாங்க’

அவள் சிரித்தாள்- ‘இப்போ என்னவோ நம்மப் பிரியாத மாரி’

புன்னகை பூத்துக் கொண்டு காந்தி நீதிபதியின் இருக்கையின் மேலே தொங்கிக் கொண்டிருந்தார். மனித இனத்தின் நல்லியல்புகளின் மேல் தளராத நம்பிக்கை கொண்ட மாமனிதர்- அவனை அறவழியில் பகைமை இன்றி சீர் திருத்த முடியும் என்று நம்பிய உத்தமர். இந்த வழக்கு மன்றத்தில் அலைமோதும் இந்தக் கூட்டத்தைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருப்பார்? பேசித் தீர்க்க முடியாத பிரசனைகள் அரங்கிற்கு வருகின்றன என்றா? தத்தமது கோரிக்கைகளை நிறைவேற்றத் தகுதியான உறவோ, நட்போ, பெரியவர்களோ இல்லை என்றா?

பெரியவனும், சின்னவனும் அருகருகே அமர்ந்திருந்தார்கள். இவரைப் பார்த்து அவர்கள் எழுந்து வரவுமில்லை, அம்மாவை அவருடன் தேடவுமில்லை.

‘மனிதனுக்கும், விலங்கிற்கும் என்ன வித்தியாசம்?’ என்று பையன்களைப் பார்த்து கேட்டார் நீதிபதி. ‘சிறகு முளைத்து பறக்கத் தெரிந்த பிறகு அவைகளுக்கு தாய் தந்தை உறவில்லை. அது மீச்சிறு காலம். அவைகளின் வாழ்வு என்பது பிறத்தல், சாப்பிடுதல், இனப்பெருக்கம், மரணம் அவ்வளவுதான்.

மனிதன்? அவன் படிக்கிறான், இசைக்கிறான், புதியன கண்டுபிடிக்கிறான், உற்பத்தி செய்கிறான், சமூகமாக இருக்கிறான், நாணயமாக நடக்க வேண்டிய சூழலை உருவாக்குகிறான். தப்பைத்  தட்டிக் கேட்கிறான், ஈதல், தான் அறியாதவர்களுக்கும் கூட தர வேண்டும் என்று அனைத்து மதங்களும் சொல்கின்றன. அப்படியிருக்கையில், பெற்றவர்களை இப்படி அனாதையாக விட்டுவிட்ட மகன்களை இந்த நீதி மன்றம் வன்மையாகக்  கண்டிக்கிறது. ஒரு உழவன் தன் பசிக்காக மட்டுமே உற்பத்தி செய்தால், ஒரு நெசவாளர் தன் மானத்தை மறைக்க தனக்கு மட்டுமே ஆடை நெய்தால்… மனித இனத்தின் கதியென்ன? உங்களை அன்பாக இருக்கச் சொல்லவில்லை- பண்போடு நடந்து கொள்ளுங்கள் என்றுதான் இந்த நீதிமன்றம் கேட்டுக் கொள்கிறது.

அந்த ‘செட்டில்மென்ட் டீட்’ எந்த விதத்திலும் செல்லுபடியாகாது அது ‘வாய்ட் அப் இனிஷியோ’ அதற்காகத் தந்த பணத்தை மகேஷ் உரிமை கோர முடியாது; அதைப் போல சதீஷ் பெற்ற ஐந்து பவுனை நகையாகவோ அல்லது அதற்கு ஈடான இன்றைய தொகையாகவோ அவர் பெற்றோரிடம் தர வேண்டும், மேலும், மாதா மாதம் குறைந்த பட்சம் தலா ரூபாய் பத்தாயிரத்தை அவர்களது வங்கிக் கணக்கிற்கு அனுப்ப வேண்டும். இதை மீறினால், மூன்று வருட சிறை தண்டனை. சக்கர நாற்காலியில் ஒடுங்கி அமர்ந்திருக்கும் உங்கள் தந்தையைப் பாருங்கள்- தனியாக மருத்துவ மனையில் படுத்திருக்கும் உங்கள் அன்னையைப் பாருங்கள். உங்கள் வாழ்க்கை அவர்கள் போட்ட பிச்சை. கவனமாக இருங்கள்.’

அவள் சொன்னாள்- ‘நம் காலத்திற்குப் பிறகு நாம் இதுவரை இருந்த ஹோமிற்கு இதைக் கொடுத்துவிடலாம்.’ அவர் பனித்த கண்களுடன் அவளைப் பார்த்தார்.

 

( Ref : https://www.bbc.com/tamil/india-53779918

வேலூர்: மகன் தவிக்க விட்டதால் புகார் கொடுத்து சொத்தை மீட்ட முதியவர்கள்)

இருள் சூழ்ந்த பௌர்ணமி! – கிருஷ்ணபிரியா

Motorcycle holidays in Trentino: an adventure on the most beautiful roads of the Dolomites

அன்று புத்தாண்டு, அலுவலகத்தில் ஆரவார கொண்டாட்டம். புத்தாடைகள், கனிகள், பலகாரம் என கோலாகலமாக இருந்தது அந்த காலைப்பொழுது.
பரிமாற்றங்களுக்கு இடையில் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொண்டனர் உங்களது இப்புதுவருட குறிக்கோள் என்னவென்று.

அப்போது பெரிதாக அல்லது உறுதியாக எதையும் கூறிய ஞாபகம் இல்லை அவர்களுக்கு. மதிய உணவு இடைவெளிக்கு பின்பு அலுவலகம் அடைக்கப்பட்டது.

அந்த இளம்காதலர்கள், சிறு மோதலுக்கு பின் முடிவெடுத்தனர் இருசக்கரவாகனத்தில் ஒரு சிறு தூர பயணம் செல்ல.

பயணத்தில் மகிழ்ச்சி, புதிதாக செல்லும் பாதையென்பதால் சாலை ஒர காட்சியில் ஓர் ஈர்ப்பு, அலுவலுக வேலை பதற்றமின்றி இருவருக்குமாக கிடைத்த அந்த இனிய மாலைப்பொழுது என்பதால் ஒரு களிப்பு.
அவனது ஆர்வம் தனது ஸ்ப்ளெண்டர் வாகனத்தை அவள் இயக்க வேண்டும் என்று. ஏற்கனவே இருந்த பயிற்சியின் நம்பிக்கையில் அவள் வாகனத்தை இயக்க கம்பீரமாக அவன் பின் சீட்டில்.

சீண்டலாக சொன்னான், பின் சீட்டில் அமர்ந்து பிரயாணம் செய்வதும் ஒரு சுகம்தான் என்று.

காடுவெளியில் இருசக்கரவாகனம் சிறிது வேகம் குறைவாகவே சென்றது.
முழுவதும் காட்டுப்பாதை என்பதால் தங்களையே மறந்து ரசனையில் ஆழ்ந்திருந்தது அவர்களது பயணம்.

ஒரு நீண்ட வேளைக்கு பிறகு கோடிலிங்கேஸ்வரர் கோவிலை அடைந்தனர். அதுவே அவர்களது பயணத்தின் இலக்காக இருந்தது.

கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டம். இங்கு தான் 108 அடி உயரமான சிவலிங்கம் இருக்கிறது.

அதன் அழகும் பிரமிப்பும் அவர்களை மெய்மறக்கச்செய்தது.
அவர்கள் சுற்றி பார்த்துக்கொண்டிருந்த வேளையில் ஆங்காங்கே மின்விளக்குகள் ஏற்றப்படுவதை உணர்ந்தார்கள்.  அந்த கணத்தில்தான் மனதில் ஒரு திடுக்கிடும் பயம் வந்தது.

அதுவரை மறந்து போன காலம், தூரம், பாதுகாப்பு என அனைத்தும் அக்கணம் பூதாகரமாக காட்சிகொண்டது.
அந்த கிராமம் பெங்களூரில் இருந்து சுமார் 70 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் இருக்கும்.

அப்பொழுது மணி இரவு 7.
எப்படியும் திரும்பி சென்றாகவேண்டும் என்ற கட்டாயம், வேறுவழியும் தென்படவில்லை.

அதுவரை இருந்த அந்த ரசனை உணர்வு அடையாளமின்றி சிதறிப்போனது அவர்களிடம்.

ஒரு சிறு அதிர்ஷடம், அன்று பௌர்ணமியாக இருந்தது.

வேகமாக வண்டியை இயக்கதொடங்கினார்கள்.

அற்புதமாக  தெரிந்த அந்த இயற்கை அழகு இப்பொழுது ஒரு அடர்ந்த பயம்கொள்ளும் காடாக தென்பட்டது.

வரும்வேளையில், காதலிலும் ரசனையிலும் மறைந்துபோன தூரம் இப்போது எதோ ஒரு இனம்தெரியாத உருவம் அவர்களை துரத்துவதுபோல் பயமூட்டியது.

நிலவின் வெளிச்சத்தை தவிர எந்த ஒரு மின்விளக்கின் வெளிச்சமும் கண்ணெட்டும் தூரம் வரை தென்படவில்லை.

வழிநெடுவிலும் மரங்களும் அந்த காதலர்களும் தவிர எந்த ஒரு மனிதரின் நடமாட்டமும் இல்லை.

எப்படியோ ஒரு பகுதி தூரத்தை வந்தடைந்தனர். ஆனால் வண்டி நின்றது நான்கு ரோட்டின் நடுவில் அப்பொழுதுதான் அச்சம் உச்சமடைந்து.
அந்த நான்கு வழியில் எந்த வழி பெங்களூர் செல்லும் என்று தெரியவில்லை, வழிகேட்கவும் ஆளில்லை.  

அன்று கூகுல் மேப்பும் வழக்கத்திற்கு வராத காலம்.

சுற்றிலும் மிகப்பெரிய மரங்கள், போகும் வழியின் பாதை புலப்படவில்லை, திரும்பி போகவும் மனமில்லை

அதுவரை இருந்த தைரியத்தில் ஒரு சிறு நடுக்கம்.

கடவுளின் மேல் நம்பிக்கை கொண்டு ஒரு பாதையை தேர்வு கொண்டனர்  
சிறிது தூரம் வந்த பொழுது, எதேர்சையாக ஒரு இருசக்கர வாகனம் அவர்கள் எதிரே வந்தது

அதில் இரு ஆண்கள், பார்வையில் கிராமத்தைச் சேர்ந்தாற்போல் தென்பட்டனர்.

ஒருநிமிடம் வண்டியின் விளக்கை அணைத்துவிட்டு ஒதுங்கி நிற்கலாமா, இல்லை அவர்களை வேகமாக கடந்து சென்று விடலாமா, இல்லை நம்பிக்கையோடு நின்று வழிகேட்போமா என்று மனதில் திணறலும் நடுக்கமும்.

ஆளில்லாத அந்த நடுக்காட்டில், இரவுவேளை காதலியோடு நின்று, அடையாளம் தெரியாதவர்களிடம் வழிகேட்க யாருக்கும் பயம்தானே.  
ஆனால் செல்லும் வழி சரிதான் என்ற நம்பிக்கையும்  இல்லை.
குருட்டு தைரியம் என்று சொல்வதுபோல், அந்த ஆண்களை நிறுத்தி அவர்களது பாதை சரிதானா என்று வினவினர். அவர்கள் எந்தவொரு சலனமுமின்றி எதார்த்தமாக வழியைக்கூறிவிட்டு பயணத்தை தொடர்ந்தர்.
ஆழ்ந்த நன்றியை தெரிவித்தனர்.

நேரம் இரவு 8 யை கடந்து விட்டது.

மீண்டும் சோதனை, மறுபடியும் ஒரு முச்சந்தியில் வந்து சேர்ந்தனர்.
இப்பொழுது அந்த ஆளில்லாத காட்டில் ஒரு ஆட்டோ மட்டும் நின்று கொண்டிருந்தது

பீதியின் உச்சத்திற்கு சென்றனர் அவர்கள்.

அந்த ஆட்டோ ஓட்டுனரை அணுக மனது தடைகொண்டது.
அங்கு ஒரு சிறிய குடிசை பார்வையில் பட்டது, வெளிச்சம் இருப்பதை அறிந்தனர்.

வேறு வழியின்றி ஆட்டோ ஓட்டுனரிடம் வழி கேட்டனர்.  
அவன் பிதற்றிக்கொண்டே வழி சொன்னான். புரிந்து கொண்டார்கள் அவன் குடி போதையில் இருப்பதை. அங்கு அவனை தவிர வேறு யாரும் இல்லை.
அந்த குடிசையை பார்த்தனர், எந்த சப்தமும் கேட்கவில்லை. ஆனால் கண்டிப்பாக யாராவது இந்த ஆட்டோவில் வந்திருப்பார்கள், அவர்கள் அந்த குடிசையில்தான் இருக்கக்கூடும்.

அவர்களும் சுற்றும்முற்றி பார்த்தனர். யாருமில்லாத இந்த இடத்தில எதற்காக இந்த ஆட்டோ.

யார் அவர்கள், அங்கே என்ன செய்து கொண்டிருப்பார்கள்,  மனதில் அச்சம் பெருகியது.

இருமனத்தோடும் குழப்பத்தோடும் அவன் கூறிய பாதையில் சென்றார்கள்  
அது பிரதான சாலையில் இருந்து உள்ளே செல்லும் ஒரு ஒற்றை சாலையாக இருந்தது

செல்வதா வேண்டாமா என்ற தடுமாற்றம், ஆனால் நேரம் கடந்து கொண்டே இருக்கிறது

மீண்டும் ஒரு தைரியத்தில் அந்த ஒற்றைச்சாலையில் பயணித்தனர்

அப்போது அங்கு தென்பட்டது ஒரு காட்சி…
நீர்நிறைந்த பெரிய அகலமான குளம், அதன் அக்கறைமுழுவதும் உயர்ந்த மரங்கள் அடர்த்தியாக நிற்கிறது, பௌர்ணமி நிலவின் வெளிச்சம் நீரின் மீது படர்ந்து கிடந்தது. சலனமின்றி வெள்ளி தட்டுபோல் நிலவின் பிம்பம் நீரில். அதற்கு மீண்டும் அழகுசேர்ப்பதுபோல் அந்த மௌனமான இரவுவேளை.

ஏதோ படத்தில் காட்சிகொள்ளும் காதல் பாட்டின் சூழலைபோல் பிரமிப்பூட்டியது.

கண்கொள்ளா அந்த அழகும்! கரைபுரண்டு ஓடும் பீதியும்!
ஒரே காட்சியில், ஒரே கணத்தில், ஒரே சூழலில். அவர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

எதனால் இந்த பீதி.

அவர்கள் மாலையில் செல்லும்போது, வழியில் எந்த ஒரு குளமும் இருக்கவில்லை.  உறுதியானது! தாங்கள் தவரான பாதையில் வந்துசேர்த்துள்ளோம் என்று.

அந்த பௌர்ணமி வெளிச்சம் அவர்களுக்கு மட்டும் இருளாக இருந்தது.
இதயம்  மிகவேகமாக துடிக்க தொடங்கியது

எதற்கு அந்த குடிபோதையில் இருக்கும் ஆட்டோ ஓட்டுநர் இந்த ஒற்றை சாலையை கைகாட்டினான்.

அது அவன் நமக்கு போட்ட சதியோ?  
எப்படி பார்த்தாலும், மீண்டும் அவர்கள் அந்த ஒற்றை பாதையில்தான் திரும்பி வரவேண்டும்

வரும் நேரம் அவன் அவனது கூட்டாளிகளோடு காத்திருப்பானோ?
இல்லை அவர்கள் நம்மை பின் தொடர்ந்து வந்திருப்பார்களோ?

அங்கேயே நிற்கவும் மனமில்லை மீண்டும் அந்த பாதையில் வெளியேறவும் நடுக்கம்

மெதுவாக வண்டியை இயக்கி ஒருவழியாக பிரதான சாலையை அடைந்தனர்.

வேறு பாதையில்லை,  அதே ஆட்டோ ஓட்டுனரை கடந்தே அடுத்த பாதையை அடையவேண்டும்

இருக்க பிடித்து கொண்டு வேகமாக அந்த முச்சந்தியை கடந்து சரியான பாதையில் வந்து சேர்ந்தனர்  
இன்னும் தூரமும் பயமும் துரத்திக்கொண்டே வந்தது அவர்களை.

Biker Couple Images – Browse 19,484 Stock Photos, Vectors, and Video |  Adobe Stockஒவ்வொரு சாலை சந்திப்பிலும், செல்லும்  வழி எதுவென்று தங்களை தாங்களே கேட்டு கொண்டும், தாங்கள் வந்தபோது கண்ட காட்சிகளை நினைவு கொண்டும் பாதைகளை தேர்வு செய்து முன்னேறினர்.
முழுமையான காட்டுப்பகுதி என்பதால் விலங்குகள் வழியில் தென்படுவதற்கான சூழலும் எதிர்பார்க்கப்பட்டதே.

புதர்களில் ஏற்படும் அசைவு, கருமையாக காணும் உருவ பிம்பங்கள் அனைத்தும் அவர்களுக்கு எச்சரிக்கை கொடுத்துக்கொண்டே இருந்தது. ஏதோ காட்டு  விலங்கு அவர்களது வழியில் குறிக்கிடுவதுபோன்று.
அவள் மெல்லிய குரலில் கேட்டால், ஏதேனும் விலங்கு நம்மை எதிர்கொண்டால் என்ன செய்வது என்று, அவனுக்கு மௌனத்தைத்தவிர எந்த பதிலையும் அளிக்க முடியவில்லை.

அவனது கண்கள் வாகனத்தின் எரிபொருளின் அளவை காட்டும் கருவியை நோக்கியது. முறையான பாதையென்றால் நிற்காமல் சென்று விடலாம், மிகவும் சுற்றி அலைந்தால் பின்பு வண்டியை இயக்குவதற்கான எரிபொருளும் தீர்ந்துவிடும் என்ற அச்சம். ஆனால் அவளிடம் அதை தெரியப்படுத்தவில்லை .

அவனது பார்வை, வழியின் நீண்ட தூரத்தை கண்காணித்துக்கொண்டு சென்றது. அவளோ தனது பின்பக்கமாக யாராவது தங்கள் பின்னால் வருகிறார்களா என்று உறுதிப்பார்த்துக்கொண்டிருந்தது.
அவர்களது மவுனத்தில் எண்ணற்ற வார்த்தைகள் ஒன்றோடு ஓன்று மோதிக்கொண்டன.

எப்படியோ இரவு 9 மணியளவில் வந்து அடைந்தனர் சின்ன திருப்பதியை.
அப்போதுதான் மூச்சு காற்றில் சிறிது சூடு தளர்ந்தது.

பயத்தில் களைத்துப்போன அவர்கள் கையில் தாகத்தை தீர்க்க தண்ணீர் குப்பியில்லாததால் அருகே இருந்த சிறு கடையில் நின்று வாங்கினர்.
எதார்த்தமாக அந்த கடைக்காரர் இந்த நேரத்தில் இங்கு இருக்குறீர்களே எங்கே பெங்களூர் செல்கிறீர்களா என்று கேட்டார்.

இல்லை என்று சொல்வதற்கான வாய்ப்பும்  இல்லை. அங்கிருந்து செல்வதற்கான அடுத்த இடம் அது மட்டும்தான்.

இரவுகளைப்பு கொள்ள எதேர்ச்சியாக சில இளைஞர்கள் அங்கு அமர்ந்திருந்தனர்.

அவர்களது நாட்டுப்புற தோற்றமும், பார்வையில் இருந்த பாவனையும் இவர்களுக்கு சிறிது வேதனையோடு சேர்ந்த பயதை ஏற்படுத்தியது.

அந்த கடைக்கார முதியவர் அனைத்தையும் புரிந்தாற்போல் அவர்களை நோக்கி பயம்கொள்ளாமல் பாதுகாப்பாக செல்லுங்கள் என்றார்.

ஒரு நிமிடம்! என்று கூறி, அந்த பெண் அணிந்திருக்கும் நகைகளை கழட்டி கைப்பையில் வைத்துச்செல்லுமாறு கூறினார்.

அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே அங்கிருந்த இளைஞர்களில் இருவர் அவர்களது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு பெங்களூர் பாதையில் புறப்பட்டு சென்றனர்.

அவர்கள் சென்றபோது , இவர்களுக்கு பெரியதொரு பயத்தை உண்டாக்கியது. அவர்கள் தங்களது யாத்திரையை அறிந்து கொண்டுதான், நாம் செல்லுமுன்னே அதே பாதையில் செல்கிறீர்களா என்று.
தைரியத்தையும் நம்பிக்கையும் வளர்த்துக்கொண்டு சிறிது வேகமாக வண்டியை ஓட்ட துவங்கினர்.

அவர்களுக்கு நன்றாக தெரிந்தது அவர்களுக்கு பின்னால் இன்னொரு இரு சக்கர வாகனமும்  பின் தொடர்ந்து வந்து கொண்டிருப்பது.

ஒரு சிறு தூரத்திற்கு பின்பு ஒரு பாதை சந்திப்பு இருப்பது புலப்பட்டது. அவர்களுக்கு முன்பாக சென்ற அந்த இளைஞர்கள் தங்களது வாகனத்தை நிறுத்தி இருந்தனர். வாகனத்தின் மின்விளக்கு எரிந்து கொண்டிருந்தது .
பின்னால் வந்துகொண்டிருக்கும் வாகனத்தின் இரைச்சலும் மிக அருகாமையில் கேட்கத்துவங்கியது.

அவளுக்கு அப்படியே கத்தி கூச்சல் இட வேண்டும் என்பதுபோல் இருந்தது. வேர்வையில் உடல் நனைத்தது.

அவனுக்கோ செய்வதறியாது திகைத்தான். வண்டியின் வேகத்தை குறைத்தான்.

படங்களில் வரும் நாயகனைப்போல் அந்த இளைஞர்களை சண்டையிட்டு வெல்லும் அளவிற்கான தெம்பு  தன்னிடம் இல்லை என்று நன்றாக தெறியும். தன்  காதலிக்கு ஏதாவது நேர்ந்திடுமோ என்று நினைக்கின்ற கணம், அவனது உடல்  ஆட்டம்கொண்டது.

விரைந்து செல்லலாம் என்றால் எதிரே நிற்கும் இளைஞர்கள் சாலையை மறித்தவாரு வாகனத்தை நிறுத்தி இருந்தனர். அவர்களது பார்வையும் இவர்களது வழிநோக்கியே இருந்தது.

இவை அனைத்தும் அவர்களது மிச்சம் இருந்த நம்பிக்கையை உடைத்துக்கொண்டிருந்த போதே , பின்னால் விரைந்து வந்து கொண்டிருந்த அந்த வாகனம் அவர்களது வாகனத்தோடு மிக அருகில் சேர்ந்தார் போல் வந்து நின்றது.

அவள் ஒரு கணம் அவனது முதுகோடு இறுக்கமாக அனைத்துக்கொண்டு கண்களை மூடினாள். அவளது நீர்த்துளி கழுத்தை வந்தடைந்திருந்தது.

அவன் சிறிது சுதாரித்துக்கொண்டு அவளது கைகளை தட்டி தைரியமாக இரு என்று முனங்கினான்.

இங்கே பார் என்றான், அவள் மெதுவாக தலையை நிமிர்த்தி பார்த்தபோது அவளது நடுக்கம் கொஞ்சம் தளர்ந்தது.

அந்த வாகனத்தில் வந்தவர்கள் தாங்கள் எதிர்பார்த்த அந்த இளைஞர்கள் அல்ல, ஒரு நடுத்தர வயது இளைஞன் மற்றும் அவரது தந்தையும்  என்று உருவம்கொண்டு புரிந்தாள்.

அந்த முதியவர் தனிவான குரலில் கேட்டார், நீங்கள் பெங்களூர்தானே செல்குறீர்கள், நாங்களும் அங்கேதான் செல்கிறோம் வாருங்கள் செல்லலாம் என்றார்.

சில நேரம் கடவுளை மனிதன் உருவத்தில் பார்ப்போம் என்பார்களே, அதுபோல் அவர்கள் அன்று கடவுளாக தென்பட்டனர்.

இப்பொழுது அந்த எதிர்நின்று கொண்டிருந்தவர்கள் மீது பயமின்றி கடந்தனர். கடந்த பின்பு மீண்டும் திரும்பிப்பார்த்தால் , அந்த இளைஞர்கள் இப்பொழுதும் அதேபோல் தான் நின்றுகொண்டிருந்தார்கள்.

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்களே…

ஒரு வழியாக பெங்களூர் தெரு விளக்குகளின் வெளிச்சம் கண்ணில் தென்பட்டது. அந்த முதியவரின் வாகனம்  வேறு ஒரு சிறு பாதையில் பயணித்து சென்றது….

 

 

இந்நேரத்திலும் ஒருவன்- கவி கோ பிரியதர்ஷினி

மரணம் நிகழ போகிறது என சிவ புராணத்தில் கூறப்பட்டிருக்கும் 11 அறிகுறிகள்! |  Signals Of Death From 'Shiv Puraan' By Shiva - Tamil BoldSky

பார்த்திருக்க கூடுமோ
இரவினை கவ்வி ஓடி
ஒருவன் வேண்டியபடி
ஒருவனுக்கு மரணத்தை பரிசளிப்பதை

இரட்டை குதிரை பூட்டி
அழுத்தி நகர்த்தும் அத்தேரில்
நூறாயிரம் கொலையாளிகள்

ஈம விளக்கின் ஔியில்
வரும்படியாகவோ
செல்லும்படியாகவோ
சக்கரங்களை பழுதுபார்த்தபடி
அறுபட்ட முண்டங்களும் துண்டங்களும்

காதல் தோல்வி பெயரிலோ
தனித்து விட்டதின் பெயரிலோ
விரக்தியின் பெயரிலோ
பித்தின் பெயரிலோ
மரிக்கும் எல்லாமரின்
சுயகொலைகளின் ஆப்ஷனாகி விடுகிறததுவே

நூற்றவரை இழுத்து வருபவனுக்கு
எதிரே நிற்கும்
அவ்வொருவன் மீதேன் போகிறது இரக்கமற்று
பழுதடைந்து பாதியிலேயே நின்றிட கூடாதேன் நகர்வற்று

அச்சிறு நிமிடங்களில் ஈம விளக்கில்
கரைகிறது சுயத்தின் ஆன்மா

வழக்குகள் தொடுக்கவியலா
கொலைகளை வழங்கியபடி
கொன்று குவித்த சடலத்தில்
சுகித்து கிடக்க முடியுமோ
அச்சடலத்தின் மீதேறி

எப்படி கடந்தேகியிருப்பான்
அவ்விரவை
மனைவியிடமோ பிள்ளைகளிடமோ
கபாலம் பிளந்து கதறி அழுது முடிக்கிறான்
இரவு அவனை மெல்ல மூடுகிறது

அம்மா..ர்ர்ர்….கீங்ங்ங்
துவங்கிறது கதறல்

ஒன்றுமில்லை
அடுத்த நாள்
அதே ரயில்
அதே கொலையாளிகள்
எதிர்பாராதபடி ஒரு மரணன்
இந்நேரத்திலும் ஒருவன்

 

நடுப்பக்கம் – சந்திரமோகன் – பௌத்தம், சமணம், ஆசீவகம், வைதீகம்-3

No photo description available.

உண்மை சுட்டாலும்,செய்தி தவறாக தோன்றினாலும் சரித்திர ஆசிரியர்களே பொறுப்பு.

சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் பண்டைத் தமிழனின் தேவை உண்ண உணவு. மழைக்கு ஒதுங்கவும் உறங்கவும் ஒரு மேற்கூரை. குகைகளில் வாழத் துவங்கியவன் இனப் பெருக்கம் காரணமாக வெளி வந்தான்.
மலை சார்ந்த குறிஞ்சி நிலத்தை குறி வைத்தவர்கள் சீயோன் என்ற முருகனை தம் கடவுளாக்கி தேன், தினை, பழங்களை உண்டு மலை வாழ் மிருகங்களோடு போட்டியிட்டு ஓடிக் கொண்டிருந்தார்கள்.
முல்லை என்று நாம் கூறும் காடும் காட்டைச் சார்ந்த நிலங்களை தமதாக்கிக் கொண்டவர் ஆடு, மாடு, நாய் இவைகளைப் பழக்கி மால் என்ற பெருமாளை தன் தெய்வமாக்கி வழி பட்டனர். திருமாலே கிருஷ்ணனாய் மாடுகளை மேய்த்தார். ஆநிறைகள் அதிகம் கொண்டவனும், அவற்றை கவரும் திறமை பெற்றவனும் தலைவன் ஆனான்.

வயல் சார்ந்த மருதம் நிலத்திற்கு தெய்வம் சிலர் வேந்தன் என்கின்றனர், பலர் இந்திரன் என்கின்றனர்.

அதுபோல கடல் சார்ந்த பகுதி மக்களுக்கு தெய்வம் வருணன் என்கின்றனர். வருண வழி பாடு இங்கு இருந்ததா என்று தெரியவில்லை.

பண்டைத் தமிழன் முருகனையும், பெருமாளையும் தனக்கு தெரிந்த வழிகளில் ஆடிப் பாடி, படைத்து கொண்டாடினான். பின்னர் காவல் தெய்வங்களையும், குல தெய்வங்களையும் கடவுளாய் வழி பட்டான். தனி மனித வாழ்க்கையை சமூக வாழ்க்கையாக்கியது தெய்வ வழிபாடு.

தமிழனின் திணை வாழ்வியல் காலப்போக்கில் பல் வேறு கடவுள்களை ஏற்று பல பிரிவுகளானது.

குறிப்பாக சிவனைக் கடவுளாக கொண்டது சைவம்
திருமாலைக்  கடவுளாக்கியது வைணவம்
சக்தி மட்டுமே தெய்வம் என்று சாதித்தது சாக்தம்
இல்லை உலகிற்கு ஒளி தரும் சூரியனே கடவுள் என்றது சவுரம்
முருகனைத் தவிர வேறு தெய்வமில்லை என்றது கவுமாரம்
இல்லை இல்லை விநாயகரே முழு முதல் கடவுள் என்றது காணபாத்யம்.
இது போல ஐம்பதுக்கும் மேற் பட்ட பிரிவுகளாக வேறு வேலை வெட்டி அதிகம் இல்லாததால் கடவுளரை பங்கு போட்டு தமக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.
இவர்களை எல்லாம் ஒன்றாக்கி ஒன்றே கடவுள், ரூபங்கள்தான் வேறு வேறு என ஆதிசங்கரர் அத்வைதம் பேச வருவதற்குள் சத்தம் போடாமல் நுழைந்தவைதான் பௌத்தமும் சமணமும்.

செய்திகளை சைககளாலும் ஓசைகளாலும் பரிமாறிக் கொண்ட மக்கள் சிறு சிறு எழுத்துக்களை உருவாக்கிக் கொண்டனர். இவை ‘வடவேங்கிடம் தென் குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம்’ கண்ட வாழ்க்கை நெறி.

வேங்கடத்திற்கும் வடக்கே என்ன நடந்தது.

அக்னி வழி பாடு அமோகமாக நடைபெற்றது. அக்னியில் ஆடு மாடு குதிரை என தம்மால் தூக்க முடிந்த விலங்குகள் அனைத்தையும் பலியாக்கி கடவுளை நெருங்கினதாக காட்டிக்கொண்டனர் சமயப் பெரியோர்கள். அவர்களுக்கு வேண்டிய அனைத்தையும் தேடிக் கொடுத்து சற்று தள்ளி நின்று பயத்தோடு ஆசி வேண்டி நின்றனர் பாமர மக்கள்.

குருவின் வசீகரத்திற்கேற்ப சிஷ்யர்களும் பக்தர்களும் கூடினர். ஒவ்வொரு குருவும் தனக்கு தோன்றியதை மத கொள்கைகளாகப்  போதித்தனர். எழுதா மறையான வேதம் அடிப்படையானது. அதை செவி வழி கற்பிக்கவும் கற்கவும் ஒரு சாராருக்கு உரிமை கிடைத்தது. வருணாசரம் கொள்கையை அனைவரும் மதித்தனர்.

வெவ்வேறு குழுக்களாக சண்டையிட்டுக் கொண்டாலும் அனைவரையும் இணைத்தது வேதம்.
வேறு மறையில்லா நேரத்தில் ஓங்கி வளர்ந்திருந்து ‘ வைதீக மதம்/ பிராமண மதம்’ என்ற அழைக்கப்பட்டு ஆள வந்தவர்களால் இந்து மதம் என பெயரிடப்பட்ட மதம்.
கிரந்த எழுத்துக்களை உருவாக்கி பின்னர் சமஷ்கிருத எழுத்துக்களை தமதாக்கினர்.

சமயக்குருக்களிடம் ஒற்றுமையில்லை, தவி்ர போட்டியும் பொறாமையும் கொடி கட்டிப் பறந்தன. வேறு மாற்று இல்லாததால் வைதீக சமய வழிபாடு நாடெங்கும் பரவி தமிழகத்திலும் 5000 ஆண்டுகளுக்கு முன் கால் பதித்தது.
ஆரம்பத்தில் புரியாத மொழியில் வேதம் வாசிக்க தள்ளி நின்று கேட்டு தெய்வத்தை நெருங்கக் கூடாத தூரத்தில் நின்று வணங்கினான் தமிழன். அக்னியில் உயிர்ப் பலி கொடுப்பதையும் வேதம் உரைப்போரே அசைவம் புசிப்பதையும் பயந்து நின்று பார்த்தான்.

தானும் ஒரு அங்கமாக ஒட்ட முடியவில்லை.

வடக்கே செல்வோம்.

ஆரம்ப நாட்களில் வைதீக மதத்திற்கு மாற்று இல்லை. மத குருக்களிடம் ஒற்றுமையில்லை. போதித்த கொள்கைகளிலும் தடுமாற்றம். இந்தச் சூழலில்தான் வைதீக/ பிராமண மதத்திற்கு மாற்றாக வடக்கே தோன்றியவை சமண, பௌத்த, ஆசீவக மதங்கள்.
வைதீக மத கொள்கைகளில் சலிப்படைந்தவர்க்கு வைதீக மதக் கொள்கைகளுக்கு சற்று மெருகேற்றி புதிதாக கடை போட்டு தங்களை
பிராமண மதத்திற்கு மாற்றாக காட்டிக் கொண்டனர் சமணர்களும் பௌத்தர்களும்.

வைதீக மதத்தின் கொள்கைகளில் மக்களுக்கு உடன் படாத சிலவற்றை தவிர்த்து தம் கொள்கைகளாக காற்றில் மிதக்க விட்டன புதிதாக தோன்றிய மதங்கள்.

முக்கியமாக கொல்லாமை, உயிர்ப் பலி கொடாமை, கள்ளுண்னாமை போன்ற சில கொள்கைகள் மக்களை கவர்ந்தன.

கட்டுப் பாடுகளுடன் கூடிய அமைப்பும், தலை முதல் வால் வரை கடைப்பிடிக்கப் பட்ட ஒழுக்கமும் புதிதாக தோன்றிய மதங்களின் பால் மக்களின் ஈடுபாட்டை வளர்த்தன.

சமணர்களின் விகாரைகளும், பௌத்தர்களின் சங்கங்களும் அம்மதங்களின் மேல் நம்பிக்கையை ஏற்படுத்தியது. மாமன்னர்களையும், குறு நில அரசர்களையும் கவர்ந்த புதிய மதங்கள் பாமரனை சென்றடைய கஷ்டப்பட வில்லை.

புத்தர் வைதீக மதத்திலே தோன்றி வைதீக மதத்தினராகத்தான் வளர்ந்தார்.
வைதீக மதத்திலிருந்து சற்று மாறுபட்ட கருத்துக்களும், ஒழுங்கு படுத்தப்பட்ட சங்கமும், மதத்தை பரப்ப அசோக சக்ரவர்த்தி போன்ற மாமன்னரும் ஒருங்கே பௌத்த மதம் உலகெங்கும் பரவ வழி வகுத்தன. தமிழ் இந்தியா தவிர இந்திய நாடு முழுதும், இலங்கை மற்றும் பல ஆசிய நாடுகளிலும் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னரே பௌத்தம் ஓங்கி வளர்ந்தது. சமணத்தோடும் , வைதீக மதத்தோடும் போட்டி போட்டு முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது.

பௌத்த மத்த்தில் மக்களை ஈர்த்த கொள்கைகளில் முன்பே கூறிய படி பிராமண/ வைதீக மத்த்தில் மக்களுக்கு ஒவ்வாதனவற்றை மட்டும் விலக்கி பஞ்ச சீலம், அஷ்ட சீலம், தஸசீலம் என்ற கொள்கைகள் உருவாகின.
சீலம் என்றால் விலக்கியவற்றை ஒழித்து விதித்தவற்றையே செய்தல் என்பர்.
இல்லறத்தார்க்கு உரிய பஞ்ச சீலம்! கொல்லாமை, திருடாமை, பெண் ஒழுக்கம், பொய் கூறாமை, கள்ளுண்ணாமை. இவையனைத்தும் பெரும்பான்மையான மக்கள் விரும்புபவைதானே. எனவே பௌத்தம் அவர்களை கவர்ந்தது.
அஷ்ட சீலம் எனும் மேற் கூறிய ஐந்துடன் 8 ஒழுக்கங்கள் இல்லறத்தில் சற்று உயர்ந்த குடிகளுக்கும் தஸ சீலம் மேலும் இரண்டு கூட்டி பத்து ஒழுக்கங்கள் துறவிகளுக்கும் உரியனவாக கடைப் பிடிக்கப் பட்டன.

கோபத்தை அன்பினால் வெல்க,
தீமையை நன்மையால் வெல்க
கருமியை தானத்தால் வெல்க
பொய்யை மெய்யினால் வெல்க 

போன்ற போதனைகள் மக்களை கவர்ந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

பௌத்த துறவிகள் கூட்டத்திற்கு சங்கம் என்று பெயர். இந்த சங்கமே கட்டுப்பாடுகளுடன் நாடெங்கும் தோன்றி பௌத்த மதம் உலகில் நிலை பெற காரணமாயின.

பதிவு நீண்டு கொண்டே போகிறது புத்தரைப் பற்றி பேச இன்னும் உள்ளது.
அடுத்த பதிவில்  பார்ப்போம்.

அறை-S.L. நாணு

தொழிற்சாலைகளை மிரட்டும் ரவுடிகள்; இடம் மாற ஆலோசிக்கும் 2ம் நிலை நிறுவனங்கள் | Dinamalar Tamil News

 

அலாரம் அடித்தவுடன் சட்டென்று எழுந்து பல் விளக்கி குளித்து சீருடை அணிந்து கண்ணாடியில் முகம் பார்த்து தலை சீவிக் கொண்டே சமையலறையை நோட்டமிட்டான் ஜனா..

தலையில் கை வைத்து தரையில் வெற்றுப் பார்வையுடன் புவனா..

“நேரமாச்சு.. பஸ் வந்துரும்.. காப்பி கொடு”

நிமிர்ந்து அவனைப் பார்த்தவள்..

“பொடி இல்லை..”

ஜனாவுக்கு சலிப்பு..

“பக்கத்து வீட்டுல கேட்க வேண்டியது தானே?”

“நிறைய கேட்டு வாங்கியாச்சு.. பேச்சும் கேட்டாச்சு.. இனிமே முடியாது”

ஜனாவுக்கு சுர்ரேன்று ஏறியது..

“வாங்கற சம்பளத்துக்குள்ள குடும்பம் நடத்தத் துப்பில்லை”

“குடும்பம் நடத்தற மாதிரி நீ சம்பாதிச்சுக் கொடு.. அப்புறம் பேசு.. கொடுக்கற சல்லிக் காசு மாசத்துல நாலு நாளைக்கே தாங்க மாட்டேங்குது”

“ஏய்.. ரொம்பப் பேசறே.. இப்பக் காப்பி கொடுக்கப் போறயா இல்லையா?”

“இனிமே என்னால பக்கத்து வீடு எதிர்த்த வீடுன்னு போய் பிச்சை எடுக்க முடியாது.. இல்லைன்னா இல்லை.. அவ்வளவு தான்”

புவனாவின் குரலில் தீர்மானம் தொனித்தது.

இயலாமை ஆத்திரத்தில் கையிலிருந்த சீப்பை அவள் மீது வீசி எறிந்த ஜனா  வெளியே விரைந்தான்..

ஷாப் புளோரில் எல்லோரும் வேலையில் மூழ்கியிருக்க லேத்தை இயக்கிக் கொண்டிருந்த ஜனாவுக்கு மனது சஞ்சலித்தது..

“குடும்பம் நடத்தற மாதிரி நீ சம்பாதிச்சுக் கொடு.. அப்புறம் பேசு”

புவனாவின் குரல் எதிரொலித்து அவனை தொந்தரவு செய்தது..

“இனிமே என்னால பக்கத்து வீடு எதிர்த்த வீடுன்னு போய் பிச்சை எடுக்க முடியாது”

உடன் இருந்த சரவணனிடம் பார்த்துக் கொள்ளும்படி பணித்து ஷாப் புளோர் வாசலுக்கு வந்து சிகரெட் பற்ற வைத்தான்..

புவனா சொல்வது நியாயம் தான்.. சம்பளத்தில் பாதியை தங்கையின் கல்யாணத்துக்கு வாங்கின கடனுக்கு தாரை வார்த்து விட்டு மீதியில் அவன் செலவு போக சொச்சத்தை அவளிடம் கொடுப்பான்.. அதில் அவள் வீட்டு வாடகை கொடுப்பாளா.. மளிகை வாங்குவாளா.. குழந்தைக்கு வைத்தியம் பார்ப்பாளா.. புரிந்தாலும் அவனால் எதுவும் பண்ண முடியவில்லை.. இந்த வேலையை விட்டால் வேறு வேலை கிடைப்பது குதிரைக் கொம்பு தான்.. அப்படியேக் கிடைத்தாலும் இப்போது வாங்கும் சம்பளம் நிச்சயம் கிடைக்காது.. அவனுடைய இந்த இயலாமை தான் வீட்டில் ஆத்திரமாகவும் கோபமாகவும் வெளிப்படும்.. சில சமயம் அது எல்லை மீறி புவனாவின் மீது கை ஓங்குவதிலும் முடியும்..

ஒரு முறை தாக்குதல் காட்டுமிராண்டித்தனமாக மாற.. மறுநாளே தொழிற்சாலை பொது மேலாளரை பிரயத்தனப் பட்டு சந்தித்து கண்ணீருடனும் இடுப்பில் குழந்தையுடனும் புகார் செய்தாள் புவனா.. பொது மேலாளரும் ஜனாவைக் கூப்பிட்டு விசாரித்தார்.. உடன் பொது மேலாளரின் பி.ஏ. ஷாலினியும் இருந்தாள்.. அது தான் சாக்கென்று தன் இயலாமையை எடுத்துச் சொல்லி சம்பள உயர்வு கேட்டான் ஜனா.. ஆனால் அதற்கெல்லாம் ரூல்ஸ் இடம் கொடுக்காதென்று மறுத்த பொது மேலாளர் அவனுக்கு உபதேசம் செய்து இருவரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தார்.. ஜனாவை தான் கவனித்துக் கொள்வதாக புவனாவுக்கு தைரியம் சொன்னார்..

சொன்னது போலவே சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ஜனாவை தனியாக அழைத்து பொது மேலாளர் விசாரித்தார்.. அவர் கூடவே இருக்கும் ஷாலினியும்..

”ஜனா”

ஷாப் புளோர் சூப்பர்வைசர் குமாரின் அதட்டல் குரல்..

“வேலை நேரத்துல இங்க என்ன பண்ணிட்டிருக்கே?”

“இல்லை சார்..”

“என்ன இல்லை சார்.. நானும் கவனிச்சிட்டு தான் இருக்கேன்.. வர வர நீ வேலைல கவனமாவே இருக்க மாட்டேங்கறே.. நேத்து உன் அஜாக்ருதைனால நூறு பீஸ் கேஸ்கட் ஸ்பெசிபிகேஷன் மாறி விழுந்திருக்கு.. நான் மேலிடத்துக்கு ரிபோர்ட் பண்ணிட்டேன்..”

“என்ன சார்.. அது என் தப்பு இல்லை.. கூட சரவணன்..”

“சரவணன் அப்ப அங்க இல்லை.. நான் சொல்லி ஸ்டோருக்குப் போயிருந்தான்..”

“வந்து சார்..”

“என்ன வந்து போயி.. எதுவும் நடக்காது.. மேலிடம் உன்னைக் கூப்பிட்டு விசாரிக்கத் தான் போகுது.. அநேகமா அந்த நூறு பீசோட விலையை உன்னைக் கட்டச் சொல்லுவாங்க.. இல்லை மாசா மாசம் உன் சம்பளத்துல பிடிக்க உத்தரவு போடுவாங்க”

இதைக் கேட்டு ஜனாவுக்குப் பதட்டம்..

ஏற்கனவே வீட்டில் அநியாய பற்றாக் குறை.. இதில் சம்பளத்தில் கேஸ்கட் விலையைப் பிடித்தால்.. சில மாதங்களுக்கு கையில் எதுவுமே வராதே..

“சார்.. ஏதோ தப்பு நடந்து போச்சு.. இதை எதுக்கு சார் மேலிடத்துக்கு ரிபோர்ட் பண்ணீங்க?”

“ரிபோர்ட் பண்ணாம? அந்த நஷ்டத்தை யாரு ஈடுகட்டறது? நான் தானே பதில் சொல்லணும்.. இதப் பாரு.. தப்பு எங்க நடந்தாலும் உடனே ரிபோர்ட் பண்ணிருவேன்.. நீன்னு இல்லை.. அது யாரா இருந்தாலும் சரி”

“என்ன சார் பெரிய தப்பு? நான் என்ன திருடிட்டேனா? இல்லை வேலை நேரத்துல தண்ணி அடிச்சிட்டு வந்து கலாட்டா பண்ணினேனா? ஏதோ.. ஒரு தடவை வேலைல சின்ன தப்பு நடந்து போச்சு.. அதைப் போய் பெரிசு பண்ணறீங்க?”

“எது சின்ன தப்பு? நூறு கேஸ்கட் உனக்கு சின்ன தப்பா? ஒரு கேஸ்கட்டோட புரொடக்‌ஷன் விலை என்ன தெரியுமா உனக்கு? இது என்ன வீட்டுல குக்கர்ல மாட்டற சாதாரண கேஸ்கட்டா? இண்டஸ்ட்ரியல் கேஸ்கட்.. இதைப் போய் சின்ன தப்புன்னு சொல்றே.. நோ.. நோ.. என்னால இதை அனுமதிக்க முடியாது.. அதோட இப்ப வேலை நேரத்துல இங்க நின்னு சிகரெட் பிடிச்சிட்டிருக்கே.. இதோ.. ஷாப் புளோர்ல இருக்கிற அத்தனை பணியாளர்களும் சாட்சி.. இதையும் மேலிடத்துக்கு ரிபோர்ட் பண்ணப் போறேன்.. நிச்சயமா உன் சீட்டு கிழிஞ்ச மாதிரி தான்”

இதைக் கேட்டு ஜனாவுக்கு முணுக்கென்று கோபம் இமாலயத்தைத் தொட்டது..

“பண்ணுங்க சார்.. ரிபோர்ட் பண்ணுங்க.. அப்புறம் நீங்க எப்படி நிம்மதியா இருக்கீங்கன்னு நானும் பார்க்கறேன்”

“ஏய்.. என்ன மிரட்டறயா? யாரு கிட்டப் பேசிட்டிருக்கே தெரியுமா?”

“போடா.. உன்னைப் பத்தி எனக்குத் தெரியாது.. மத்தவங்களை வேவு பார்த்து போட்டுக் கொடுக்கறது தானே உன் பிழைப்பே.. சாவு கிராக்கி”

“என்னது சாவு கிராக்கியா? என்ன லேங்குவேஜ் இது.. நான் இதையும்..”

குமார் முடிப்பதற்குள் அவருடைய வலது கன்னத்தில் ஜனவின் கை இடியாக இறங்கியது..

குமார் நிலை தடுமாறி கீழே விழுந்தார்..

இதை கவனித்த சக ஊழியர்களுக்கு அதிர்ச்சி.. ஷாப் புளோரே ஒரு கணம் ஸ்தம்பித்தது..

விஷயம் வைரலாக.. புரொடக்‌ஷன் மேனேஜர், பர்சனல் மேனேஜர் என்று சகலரும் அங்கு ஆஜர் ஆகி விட்டனர்..

என்ன செய்வதென்று புரியாத சூழ்நிலை..

அந்த சமயம் பொது மேலாளர் எதேச்சையாக அங்கு வந்தார்..

“என்ன.. எனி பிராப்ளம்?”

குமாரை ஜனா அறைந்த விவரத்தை பர்சனல் மேனேஜர் மெதுவாக விளக்க..

பொது மேலாளர் முகத்தில் கோபம்..

“ஜனா.. இங்க வா..?”

ஜனா பவ்யமாக அவர் முன் வந்தான்.

“சூப்பர்வைஸர் குமாரை நீ அடிச்சியா?”

ஜனா எதுவும் பேசாமல் தலை குனிந்தான்..

“சொல்லு.. குமாரை நீ அடிச்சியா?”

“வந்து.. ஆமா”

”அட்ராஷியஸ்.. ஏன் அடிச்சே?”

ஜனா கண நேரம் யோசித்தான்..

“சார்.. சூப்பர்வைஸர் என் குடும்பத்தைப் பத்தி தப்பாப் பேசினார்.. உடனே கோபம் வந்து..”

அவன் முடிப்பதற்குள் குமார் பதட்டமானார்..

“சார்.. பொய் சொல்லறான்.. நான் இவன் குடும்பத்தைப் பத்தி எதுவும் பேசலை.. இவன் வேலைல பண்ணின தப்பைப் பத்தித் தான் பேசினேன்”

“இல்லை சார்.. என் பொண்டாட்டியைக் கேவலமாப் பேசினார்..”

“ஐயோ இல்லை சார்”

பொது மேலாளர் பொறுமை இழந்தார்..

“ஸ்டாப் இட்”

குமாரின் கண்களை நேரிடையாகப் பார்த்தார். அதில் கலப்படமில்லாத பதட்டம் தெரிந்தது.. கொஞ்சம் விட்டால் அழுது விடுவார் போல் இருந்தது..

“குமார்.. கொஞ்சம் என் கேபினுக்கு வாங்க.. ஜனா நான் சொல்ற வரை நீ ஷாப் புளோருக்குள்ள காலெடுத்து வைக்கக் கூடாது.. போங்க.. போய் எல்லாரும் வேலையைப் பாருங்க”

கோபத்தோடு அங்கிருந்து நகர்ந்தார்..

மற்றவர்களும் கலைந்தார்கள்..

பொது மேலாளர் அறைக்குள் குமார் தயங்கியபடி நுழைந்தார்..

அங்கே ஏற்கனவே பர்சனல் மேனேஜரும் ஷாலினியும் இருந்தார்கள்.

“வாங்க.. உட்காருங்க”

குமாருக்கு அது உரைக்கவில்லை..

“சார்.. என் பொண்டாட்டி குழந்தைங்க மேல சத்தியமாச் சொல்றேன்.. நான் ஜனாவோட குடும்பத்தைப் பத்தி எதுவும் பேசலை.”

அவர் கண்களில் கார் கால தாமிரபரணி..

பொது மேலாளர் அவரை அமைதியாகப் பார்த்து..

“குமார்.. ரிலாக்ஸ்.. என்ன நடந்திருக்கும்னு என்னால நல்லாவே யூகிக்க முடியுது.. உங்களைப் பத்தி எனக்குத் தெரியும்.. பண்ணின தப்பை மறைக்க ஜனா பொய் சொல்றான்.. நடந்ததை ஒரு கம்ப்ளெய்ண்டா எழுதி ஷாலினி கிட்டக் கொடுங்க.. பர்சனல் மேனேஜர் கிட்ட பேசிட்டேன்.. உடனே ஜனாவுக்கு சஸ்பென்ஷன் ஆர்டர் கொடுத்து விசாரணை பண்ணிரலாம்.. எப்படியாவது வேலையை விட்டுத் தூக்கிரலாம்.. இது போல ஆளு தொடர்ந்து வேலைல இருந்தா மத்த வொர்க்கர்ஸையும் கெடுத்துருவான்”

“ரொம்ப தேங்க்ஸ் சார்”

“கவலைப் படாதீங்க.. உங்களை மாதிரி சின்ஸியர் எம்ப்ளாயி தான் இந்த கம்பெனிக்கே முதுகெலும்பு.. உங்களுக்கு எப்பவும் என் முழு ஆதரவு உண்டு.. வேலைல உங்க அவுட்புட் இஸ் வெரி குட்.. கீப் இட் அப்”

“ஓக்கே சார்”

“அடுத்த பிரமோஷன் லிஸ்டுல கண்டிப்பா உங்க பேர் இருக்கும்”

“ரொம்ப தேங்ஸ் சார்”

பொது மேலாளர் குமாரிடம் சொன்னது போலவே ஜனா சஸ்பெண்ட் செய்யப் பட்டான்..

சாதாரணமாகவே யூனியனுக்கும் அவனுக்கும் ஒத்து வராது. அதனால் இந்த விஷயத்தில் தலையிட யூனியன் ஆர்வம் காட்டவில்லை..

விசாரணையும் நடந்தது..

ஜனாவுக்கு எதிராக அவனைப் பிடிக்காத சில சக பணியாளர்களே சாட்சி சொன்னார்கள்..

ஜனாவின் பதில்கள் ஏற்கப் படாமல் அவன் டிஸ்மிஸ் செய்யப் பட்டான்..

குன்னூர் அருகே ஒரு காப்பி எஸ்டேட்..

ப்ரிட்ஜ், டிவி என்று சகல வசதிகளுடன் ஒரு வீடு..

அதில் கையில் குழந்தையுடன் மலர்ச்சியான  புவனா..

அருகில் கொஞ்சம் தெளிவான ஜனா..

“என்னங்க.. எதுவும் புரியலை.. ஒரு வேலை போச்சு.. உடனே அதை விட இந்த நல்ல வேலை கிடைச்சுது.. நல்ல வாழ்க்கையும் கிடைச்சுது.. எப்படி ஏதுன்னு கேட்டா எதுவுமே சொல்ல மாட்டேங்கறீங்க.. தயவு செய்து சொல்லுங்க.. உண்மைல இது யாரோட எஸ்டேட்?”

”அவசியம் தெரியணுமா? எங்க பொது மேலாளரோட குடும்ப எஸ்டேட்”

“அவர் தானே உங்களை வேலையை விட்டுத் தூக்கினார்”

“அவர் தான் இங்க மேனேஜர் வேலையும் கொடுத்தார்”

”அதான் ஏன்?”

“நான் நல்லபடியா நாடகம் நடிச்சதுக்காக”

“நாடகமா? என்ன சொல்றீங்க?”

“சூப்பர்வைஸர் குமாரை கன்னத்துல அறைஞ்ச நாடகம்”

புவனாவுக்குப் புரியவில்லை..

“எதுக்கு?”

ஜனா அவளைப் புதிராகப் பார்த்தான்..

“பி.ஏ.வோட நெருக்கமா இருக்கணும்னா அது பேக்டரி சூப்பர்வைஸர் கண்ணுல படாம இருக்கணும்.. அப்படி அவர் கண்ணுல பட்டா இப்படித் தான் நாடகமாடி அவர் வாயை அடைக்க முடியும்.. பொது மேலாளர் தன் பி.ஏ.வோட உல்லாசம்னு புகார் கொடுக்க நினைச்ச சூப்பர்வைஸர் குமார்..  அவர் தன்னைப் பத்தி எல்லார் முன்னாலயும் பெருமையாப் பேசினதுனாலயும்.. பிரமோஷன் லிஸ்டுல அவர் பேர் இருக்கப் போறதை நினைச்சும்.. இப்ப அதே குமார் பொது மேலாளரோட தாசானு தாசன்”

நதி – ✍️கவிமாமணி இரஜகை நிலவன்

A Tool Doctors Use Every Day Can Perpetuate Medical Racism - Scientific  American

டாக்டர் அருணா நாற்காலியில் அமர்ந்து மேஜையில் சாய்ந்து படுத்திருந்தாள். அவள் கண்களில் வழிந்தோடிக் கொண்டிருக்க, துடைக்கக் கூட விருப்பம் இல்லாமல் விம்மிக்கொண்டுந்தாள்.

அந்த அறைக்குள் வந்த கம்பவுண்டர் ஜேம்ஸ் “டாக்டர் அருணா உங்களை பெரிய டாக்டர் கூப்பிடுகிறார்” என்று சொல்லி விட்டுப் போனான்.

உடனடியாக எழுந்த அருணா முகத்தைத் துடைத்துக் கொண்டு கண்ணாடியில் பார்த்தாள். திருப்தி வராமல் முகத்தைக் கழுவிக் கொண்டு வந்து பெரிய டாக்டரை பார்க்கக் கிளம்பினாள்.

“என்ன அப்பா கூப்பிட்டீங்களாமே?” என்று பெரிய டாக்டர் பாலசேகரன் அறையினுள் நுழைந்தாள் அருணா.

“அருணா உனக்கு எத்தனை முறை ஆஸ்பத்திரியில் இருக்கும்போது என்னை அப்பா என்று கூப்பிடாதே, என்று சொல்லியிருக்கிறேன். சரி, போகட்டும் வா, வந்து உட்கார்.நீ இன்று மதியம் போக வேண்டிய ரவுண்ட்ஸ் போக வில்லையாமே? தலைமை நர்ஸ் விஜயா வந்து சொல்லி விட்டுப் போனாள்” என்று சொல்லி விட்டு மேஜை மேல் இருந்த தண்ணீரை எடுத்து குடித்தார் பால சேகரன்.

“டாக்டர் அது வந்து” என்று சொல்ல முடியாமல் தத்தளித்தவாறு அவருக்கு எதிர் நாற்காலியில் வந்து அமர்ந்தாள்.

“என்ன.. வந்து.. போய்ய்.. டியுட்டி இஸ் பர்ஸ்ட்  என்று எத்தனை முறை சொல்லியிருக்கிறேன்.உடம்புக்கு சரியில்லை என்றால் சொல்லி விட்டு வீட்டிற்குக் கிளம்ப வேண்டியதுதானே. வேறு டாக்டரையாவது நோயாளியைப் பார்க்க கிளம்பியிருப்பார். . ஒன்று மட்டும் நினைவில் வைத்துக்கொள் விஜயா நாம் நன்றாக கவனிப்போம் என்ற நம்பிக்கையில்தான் நம்முடைய இந்த ‘ராஜேஸ்வரி ரெஜினா மருத்துவ மனைக்குநோயாளிகள் வருகிறார்கள். அவர்களை நீ நன்றாக கவனிக்காத போது  மறுமுறை சுகமில்லாமலிருந்தால் நம்மைத் தேடி வருவார்களா?”

“ஸாரி டாக்டர் நான் உடனடியாக நோயாளிகளைப் பார்க்க கிளம்புகிறேன்.” என்று எழுந்தாள் அருணா.

“வெரிகுட்  தட் இஸ் த ஸ்பிரிட் அது சரி, என்னவோ ஒரு மாதிரி இருக்கிறாய் எதாவது பிரச்சினையா?’’

“ஒன்றுமில்லை டாக்டர்”

“சரி, அப்புறம் அந்தக் கிரிகெட் வீரர் ஸ்ரீராம் நாளைக்கு டிஸ்சார்ஜ் ஆகிறாரில்லை. அவருக்கு மைனஸ் டெஸ்ட் பாடி டெஸ்ட் எல்லாம் முடிந்து விட்டதா?  நான் பில்லிங் டிப்பார்ட்மெண்டிலே சொல்லி அவருடைய அவருடைய பில்லை தயார் செய்யச் சொல்ல வேண்டும்”

“அப்பா..” என்று அருணா திரும்பவும் ஆரம்பிப்பதற்குள் “டாக்டர் என்று சொல். எதாவது சொந்த விஷயம் என்றால் வீட்டிலே வைத்துப் பேசிக் கொள்ளலாம். இங்கு இந்த மருத்துவமனையை சார்ந்த விஷயங்களை மட்டும்தான் நாம் பேசிக் கொள்ள வேண்டும்.

        “இது சொந்த விஷயம் என்றாலும் கொஞ்சம் அவசரமாக முடிவு எடுக்க வேண்டிய விஷய்ம் அப்பா. அதனால்தான் ஆஸ்பத்திரியிலேயே உங்களோடு பேச வேண்டிய நிர்ப்பந்தம் ஆகிவிட்டது.”

“என்ன.. என்ன விஷயம். எனக்கு ஆபரேசனுக்கு வேற நேரமாகி விட்டது.” என்று டாக்டர் பாலசேகரன் சொல்வதற்குள் போன் ஒலிக்க, எடுத்து “ஹலோ பால்சேகர் ஹியர்” என்றார்.

“டாக்டர் ஆப்ரேஷனுக்கு எல்லாம் தயாராகி விட்டது. நோயாளியை ஆப்ரேஷன் தியேட்டருக்கு கொண்டு வந்து விட்டோம். நீங்கள் வந்து விட்டால் ஆப்ரேஷனை ஆரம்பிக்கலாம்” என்றது எதிர் முனை பெண் குரல்.

“சரி நான் உடனே வருகிறேன்” என்று போனை வைத்த டாக்டர் அருணா எனக்கு ஆப்ரேஷனுக்கு போக வேண்டியதிருக்கிறது. என்ன பண்றே நீ முதலிலே ஒரு ரவுண்ட் போய் நோயாளிகளை பார்த்து விட்டு வந்து விடு. நானும் ஆப்ரேஷனை முடித்து விட்டு வந்து விடுகிறேன். அப்புறம் நிதானமாக பேசலாம்.” என்று எழுந்தார் டாக்டர் பாலசேகரன்.

“ஓகே டாக்டர்” என்றவாறு எழுந்த அருணா நோயாளிகளைப் பார்க்கப் புறப்பட்டாள்.

இரண்டு ஹெட் நர்ஸ்கள் ஒரு கம்பவுண்டர் இரண்டு நர்ஸ்கள், ஒரு புது டிரெய்னி டாக்டர் என்ற பட்டாளத்துடன் நோயாளிகளை ஒவ்வொரு அறையாக சந்தித்து விட்டு வந்த போது கிரிக்கெட் வீரர் ஸ்ரீராம் அறைக்கு வந்து அவனுக்கு நாடி பார்த்தாள்.

“இப்போது உடம்புக்கு எப்படி இருக்கிறது மிஸ்டர் ஸ்ரீராம்”.

ஐ யாம் கெய்ட்… ஆல் ரைட் டாக்டர்” என்றான் ஸ்ரீராம் சிரித்துக்கொண்டே.

“வெரி குட் இன்னும் திட உணவு உண்ண ஆரம்பிக்காததால் உடல் பலம் ஏறவில்லை. இன்றைக்கு சாயங்கலம் எளிதில்  செமிக்கக் கூடிய இட்லி, வாழைப்பாழம் சாப்பிட ஆரம்பிய்யுங்கள். என்று சொல்லி விட்டு நர்ஸிடம் இவருக்கு இன்னொரு குளுக்கோச் பாட்டில் ஏற்றுங்கள் என்று சொன்னாள். கூட வந்த புது ட்ரெயினிங் டாக்டர் தேவியிடம் ஸ்ரீராமுக்கு என்னென்ன மருந்து கொடுக்கணும் என்று சிரித்துக் கொண்டு கிளம்பினாள்.

“ஒரு நிமிடம் டாக்டர்” என்று எழுந்து அருகில் வந்தான் ஸ்ரீராம். மற்றவர்களெல்லாம் முன்னால் கிளம்பிப் போய் விட தனித்து நின்ற அருணா “என்ன?” என்று திரும்பிப் பார்த்து” நான் சொன்ன விஷயத்தை… நீங்கள் இன்னும் முடிவு சொல்ல வில்லை”

“கொஞ்சம் பொறுங்கள் அப்பாவிடம் நேற்று விஷயத்தை ஆரம்பித்த போது கோபத்தில் துள்ளிக் குதிக்க ஆரம்பித்து விட்டார். இன்று அவரோடு பேசி முடிவெடுக்கப் போகிறேன்.”

“நல்ல முடிவாக இருக்கும் என்று நம்புகிறேன்.” என்று சிரித்தான் ஸ்ரீராம்.

“எனக்கு விருப்பம் எனும் போது நல்ல முடிவாகத் தானே இருக்க வேண்டும்.” என்று சொல்லி விட்டு மற்ற நோயாள்களைப் பார்க்க கிளம்பினார்.

“உள்ளே வரலாமா டாக்டர்” என்று சொல்லிக் கொண்டே வேகமாக வந்து டாக்டர் பாலசேகரனின் முன்னால் கிடந்த நாற்காலியில் அமர்ந்தாள் அருணா.

“வா என்ன விஷயம்” சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்துப் புகையை ஊதினார்.

“நாம் நேற்று வீட்டில் பேசிக் கொண்ட விஷயம் அப்பா… “

“ஓ! திரும்பவும் வேதாளம் முருங்கை மரம் ஏறுகிறதா? அது சரி…. இப்போது என்ன கேட்க வந்தாய்?”

“அப்பா ஸ்ரீராம் நாளை எப்படியும் டிஸ்சார்ஜ் ஆகி விடுவார். நானும் அவரை ஏற்கனெவே விரும்ப ஆரம்பித்து விட்டதால் தான் நான் உங்களிடம் கேட்டேன். நீங்கள் விரும்பினால் நாங்கள் திருமணம் செய்து கொள்வதில் எந்த பிரச்சினையும் இருக்காது என்று நினைக்கிறேன்”

“அருணா, ஸ்ரீராம் உன்னைத் திருமணம் செய்து கொண்டால் நீயும் அவனோடு திருச்சிக்குப் போக வேண்டியது இருக்கும்.”

“ஆமாம் அப்பா”

“அப்படியானால் இந்த ஆஸ்பத்திரியை எனக்குப் பிறகு யார் கவனித்துக் கொள்வது….?

“அது… வந்து..?”

‘நான் நேற்று சொன்னதைத்தான் இன்றும் குறிப்பெடுக்கிறேன்.” அருணா இந்த ஆஸ்பத்திரி, ஒரு நதி மாதிரி டிக்கன்ஸ் குறிப்பிட்ட  மாதிரி மனிதர்கள் வருவார்கள் போவார்கள். ஆனால் நான் ஓடிக்கொண்டே இருப்பேன்” என்று  நதி குறிப்பிடுவது போல சொல்வார்.

இது சஞ்சலப்படக் கூடிய நம் காதலும் வயதுதான் நான் மறுக்க வில்லை. நீயாக முடிவெடுத்துக் கொள். நான் ஒரேயடியாக தடுத்து நிறுத்தினால் நாளையே நீ அவனோடு புறப்பட்டு போக முடியும். நான் அப்படி உன்னை அணை கட்டி நிறுத்த விரும்ப விரும்பவில்லை. நதியில் மனிதர்கள் வருவார்கள் குளிப்பார்கள் போவார்கள். அதற்காக நதியே அவர்களோடு போவதில்லை. அது அதன் வழியே ஓடிக் கொண்டு இருக்கும், மற்றவை உன் விருப்பம் என்று எழுந்தார். மறுநாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீராம் டிஸ்சார்ஜ ஆகிக் கிளம்பும்போது டாக்டர் அருணாவை தனியாக அழைத்துக் கேட்டான் “என்ன முடிவு செய்தீர்கள்?”

“ஐயாம் ஸாரி ஸ்ரீராம், என்னால்  உங்களைத் திருமணம் செய்து கொள்ள முடியாது.” என்று தீர்க்கமாய் சொல்லி விட்டுக் கிளம்பினாள் அருணா.

அப்படியே திகைத்துப்போய் நின்றான் ஸ்ரீராம்.

 

 

                        

 

திரைக் கவிதை – பாகவதரின் “மன்மத லீலையை வென்றார் உண்டோ?”

 

 

மூன்று வருட சாதனை - MK.தியாகராஜ பாகவதர் | Karur News - YouTube 

முந்தைய தலைமுறையிரிடையே பிரபலமான திரைப்படப் பாடல்! 

காந்தா .. ஸ்வாமி .. 

இன்றும் பல மெல்லிசை நிகழ்ச்சிகளில் ஆரவாரத்துடன் ஒலிக்கும் பாடல்! 

பாலச்சந்தரின் மன்மத லீலை படத்தின் துவக்கமும் இந்தப் பாடலில்தான் !  

“மன்மத லீலையை வென்றார் உண்டோ?”

இந்தப் பாடல் சாருகேசி எனும் பாரம்பரிய இசையில் பாடப்பட்டது. அந்த பாடலுக்குப்பிறகே பிரபல  கர்நாடக இசை வித்துவான்கள் சாருகேசி (26 வது மூலராகம்-(மேளகர்த்தா))  இசையை கச்சேரியில் பயன்படுத்த ஆரம்பித்தனர். இதை பிரபல கர்நாடக இசை விமர்சகர் சுப்புடு “சாருகேசியை பிரபலமாக அறிமுகப்படுத்தியவர்” என்று தியாகராஜ பாகவதரை வர்ணிக்கின்றார்!

எம்.கே.டியின் குரலை அந்தக்காலத்தில் ‘கோல்டன் வாய்ஸ்’ என்பர்.  பெண்மையும் ஆண்மையும் கலந்த அவருடைய குரலுக்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை. அவர் பாடல்களில் 4.5  கட்டை (குரல் தடிமன்) சுருதியில் (சுதி) பாடக்கூடியவர். சுருதியின் உச்ச நிலையிலையிருந்து உடனே கீழே இறங்கிப்பாடும் வல்லமை பெற்றவர். வார்த்தைகளை உடைத்து உடைத்துப் பாடுவதில் வல்லவர். அவரது பாடல்கள், பாமரர்களும் ரசிக்கும் விதமாக இருந்தன.

இவர் தமிழத்திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் !

 

பாடலாசிரியர் : பாபநாசம் சிவன்
பாடியவர் : எம்.கே. தியாகராஜ பாகவதர்
திரைப்படம் : ஹரிதாஸ்
இசை : ஜி  ராமநாதன் 

மன்மத லீலையை வென்றார் உண்டோ?
என் மேல் உனக்கேனோ பாராமுகம்?

நின்மதி வதனமும் நீள் விழியும் கண்டு
என்மதி மயங்கினேன் நான்
என்மதி மயங்கினேன் மூன்று உலகிலும்

என்னுடனே நீ பேசினால் வாய்முத்துதிர்ந்து விடுமோ? – உனை
எந்நேரமும் நினைந்துருகும் என்னிடம் வந்தால் மெனக்கெடுமோ? – உனை
எந்நேரமும் நினைந்துருகும் என்னிடம் வந்தால் மெனக்கெடுமோ?

உன்னை நயந்து நான் வேண்டிய ஓர் முத்தம் தந்தால் குறைந்திடுமோ?
ஒருபிழை அறியா என்மனம் மலர்க்கணை பாய்ந்து அல்லல் படுமோ?
ஒருபிழை அறியா என்மனம் மலர்க்கணை பாய்ந்து அல்லல் படுமோ?–மனம் கவர்

மன்மத லீலையை வென்றார் உண்டோ?
என் மேல் உனக்கேனோ பாராமுகம்?

 

ஜே கே

” நேரடியாக பதில் சொல்லுங்கள்! கடவுள் இருக்கின்றாரா ? இல்லையா?  ஆம் இல்லை இரண்டில் ஒன்று சொல்லுங்கள்! ஆம் என்றால் அவரை இந்த வாழ்வில் எப்படி உணர்வது? ” 

Kindly give a straight reply! Does God exist or not?  Yes or No . If Yes,  how best to  realise Him in this life? 

பிரபல தத்துவ ஞானி ஜே  கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் கேட்ட கேள்விக்கு அவர் என்ன பதில் சொன்னார்?

இந்தப் பிரத்யேகக் காணொளியைக்  கேளுங்கள் !

உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள் ! 

 

கண்ணன் கதையமுது -12 -தில்லை வேந்தன்

(குழந்தைக் கண்ணனைக் கொல்லக் கோகுலம் வந்த சகடாசுரன், வண்டிச் சக்கரத்துள் புகுந்து மறைந்து கொண்டு காத்திருந்தான்)

நான்காயிரம் அமுதத் திரட்டு: பெரியாழ்வார் திருமொழி 1 - 2 - 11

சகடாசுரன் காத்திருத்தல்

உள்ளும் புறமும் உறைவானை
   உலகம் எல்லாம் நிறைவானை
அள்ளும் அமுதம் அனையானை
   ஆற்றும் மூன்று வினையானை
வெள்ளத் தரவில் கிடப்பானை
   வேதம் நான்கும் கடப்பானைக்
கள்ளத் தனமாய்க் கொல்வதற்குக்
   காலின் உள்ளே காத்திருந்தான்.

(மூன்று வினை – ஆக்கல், காத்தல், அழித்தல்)
( காலின் உள்ளே – சக்கரத்தின் உள்ளே)

 

குழந்தை அழுதல்

பாலை விரும்பிக் கேட்பதைப்போல்
   பச்சைக் குழந்தைக் கண்ணனவன்
ஓலம் இட்டுக் குரலெழுப்பி
   உரக்க அழுதும் பயனில்லை
மேலும் வீட்டில் எழுகின்ற
   விருந்தின் ஓசை அதையடக்கக்
காலை உதைத்து மிகவீசிக்
   கதையை முடிக்க முடிவெடுத்தான்.

குழந்தை, காலால் உதைக்க வண்டி உடைந்து சக்கரம் நொறுங்குதல்

கிடுகிடு கிடுவெனப் பதத்தினைக்
   கிளர்வுறு மதலையும் பதிக்கவே
விடுவிடு விடுவென முடிக்கவே
   விரைந்திடும் விதத்தினில் உதைக்கவே
படபட படவென முறிந்ததே
    படியினி லடுதுயர் இரிந்ததே
இடியென ஒலிமிக வெடித்ததே
   இயங்கிடும் சகடமும் பொடித்ததே

(படியினில் – பூமியில்)
( இரிந்ததே- விலகியதே)

 

சகடாசுரன் இறந்து வைகுந்தம் சேர்தல்

அஞ்சி வந்த ஆயர்கள்
    அங்கே உடைந்த வண்டிகண்டார்.
கொஞ்சும் சதங்கை மணியொலிக்கக்
   குழந்தைக் கண்ணன் மலர்போன்ற
பிஞ்சுப் பாத உதைபட்டுப்
   பிரிந்த அரக்கன் உயிர்சென்று
தஞ்சம் என்று வைகுந்தன்
   தாளைப் பற்றி உய்ந்ததம்மா

கம்சன் திருணாவர்த்தனை அனுப்புதல்

Om Namo Narayanaya: கண்ணன் கதைகள் (52 ...

தோற்றான் தொலைந்தான் சகடனென்று
   துன்பம் அடைந்த கொடுங்கம்சன்
சீற்றம் கொண்ட பேரரக்கன்
   திருணா வர்த்தப் போரரக்கன்
காற்றாய் வந்து கலங்கடித்துக்
   கடிதில் கொல்லும் ஒரரக்கன்
கூற்றாய் மாறிக் கொன்றுவரக்
   கூறி விடுத்தான் வென்றுவர.

நண்பன் சகடாசுரன் மறைவுக்குப் பழி தீர்க்கக் கூறுதல்

தோழமை உனக்குப் பூண்டான்
   தோள்வலி சகடன், காட்டு
வேழமாய் ஆற்றல் கொண்டான்
   வீழ்ந்ததை அறியாய் கொல்லோ?
வாழுநாள் வீணே அன்றோ,
   வன்பழி தீர்க்க விட்டால்?
சூழுமோர் சூறைக் காற்றாய்ச்
   சூரனே, செல்வாய், கொல்வாய்!

திருணாவர்த்தனைக் கண்ட கண்ணன் தன் எடையைக் கூடச் செய்தல்

கொல்லவே எண்ணம் கொண்டு
   கோகுலம் அரக்கன் சென்றான்
அல்லெனும் மனத்தான் காற்றாய்
   அலைவதைக் கண்ட கண்ணன்
மெல்லவே சிரித்துச் சின்ன
   மேனியின் எடையைக் கூட்டி
நல்லவள் வருந்தித் தூக்க
   நாடகம் ஆடி னானே!

(அல்லெனும் மனத்தான் – இருள்/ தீய மனத்தான்)
( நல்லவள்,– யசோதை)

எடை அதிகரித்த கண்ணனை யசோதை கீழே விட்டதும் புயலாய் வந்த அரக்கன் தூக்கிச் செல்லுதல்

குழந்தையை மடியில் வைத்துக்
   கொஞ்சிய அன்னை, யாக்கை
அழுந்தவே, எடையும் கூட
   அஞ்சியே தரையில் விட்டாள்.
எழுந்ததே பேரி ரைச்சல்,
   ஈட்டியாய் அரக்கன் பாய்ந்து,
கொழுந்தினைத் தூக்கிக் கொண்டு
   கொடும்புயல் உருவில் சென்றான்!

(யாக்கை– உடல்)

 

திருணாவர்த்தன் கொடுஞ்செயல்கள்

 

புழுதியை இறைத்தான் வாரி
   பூமியில் மரங்கள் சாய்த்தான்
விழுதுடன் வேரும் பேர்த்தான்
   வெறியுடன் ஓங்கி ஆர்த்தான்
கழுதென வீசும் காற்றால்
   கலங்கவே வைத்துத் தீர்த்தான்
பொழுதுமே இரவு போன்று
   போகவே இருளைச் சேர்த்தான்.

(கழுது – பேய்)

திக்குகள் இருளச் செய்தான்
   சேரவே மண்ணைப் பெய்தான்
பக்கமாய் மலைகள் ஆடப்
   பார்வையும் மண்ணால் மூட
ஒக்கலும் நட்பும் கூடி
   ஒருவரை ஒருவர் தேடச்
சிக்கியே சூறைக் காற்றில்
  சிதறவே வைத்தான் ஊரை

(ஒக்கல் – உறவினர்)

பறந்தன கற்கள் எங்கும்
    பார்த்தவர் உடல்ந டுங்கும்
அறுந்துபோய்க் கொடிகள் தொங்கும்
   அழுகுரல் ஊரில் தங்கும்
கறந்தபால் குடங்கள் யாவும்
   காற்றினில் மேலே தாவும்
அறந்தனைக் காக்கும் அண்ணல்
   அருளினால் அமைதி திண்ணம்.

தன் எடையைக் கூட்டிக் கண்ணன் அவனைக் கொல்லுதல்

தூக்கிய குழந்தை மண்ணில்
   துச்சமாய்க் கீழே போட்டுத்
தாக்கியே கொல்ல எண்ணிச்
   சற்றவன் முயன்றான், ஆனால்
காக்குமக் கடவுள் மேனிக்
   கனமது மலைபோல் ஆக,
ஏக்கமும் நலிவும் கொண்டான்
   ஏறிடும் எடையைக் கண்டான்.

பொய்யரின் துயரைப் போலப்
   புண்ணியர் புகழைப் போல,
வெய்யவர், சூதும் கொண்டார்,
   வீழ்ச்சியைப் போல, வாழ்வில்
மெய்யுடன் அறத்தில் நிற்பார்
   மேவிடும் நன்மை போல,
ஐயகோ எடையும் கூட
   அரக்கனும் உடல்ந லிந்தான்..

தப்பினால் போதும் என்று
    தவித்தனன் திருணா வர்த்தன்
ஒப்பிலாக் குழந்தை மேனி
   ஓங்கிய எடையும் சேர,
இப்புவி மலைகள் யாவும்
   ஏறிய சுமைபோல் மாறக்
குப்புறக் கீழே சாய்ந்தான்.
   குரல்வளை கண்ணன் பற்ற

 

காற்றென வந்தான் மூச்சுக்

      காற்றினை இழந்து வீழ்ந்தான்

ஆற்றலின் ஆண வத்தால்

      அழிவினைத் தேடிக் கொண்டான்

கூற்றெனக் கொல்ல வந்தான்

     குலைந்துபோய் நொந்து மாண்டான்.

போற்றிய அன்னை, அன்புப்

புதல்வனை அணைத்துக் கொண்டாள்!

( தொடரும்)

 

 

எங்கே அனுப்புவது?   – வளவ. துரையன்

உயிர்களை படைப்பது மட்டும்தான் பிரம்மன் வேலையா?... அவர் உண்மையிலே யார்? |  Lord Brahma – The God Of Creation In Hinduism - Tamil BoldSky

பிரம்மா தலைநிமிர்ந்தார்

எதிரே ஒருவன்
எப்படி வந்தான் இவன்
முழுதாய் முடிப்பதற்குள்
முளைத்து விட்டானே!

அவனே கேட்டான்
என்னை எங்கே
அனுப்பப் போகிறீர்?

அதோ அவள் தன்
அசுரப் பசியைத்
தீர்க்க முடியாமல்
அல்லல் படுகிறாளே அவளிடமா?

அதிகமாகத் தின்று
உடல் கொழுத்து
அதை இளைக்கச் செய்ய
அலைகிறாளே அவளிடமா?

இல்லாத காரணங்களை
இங்கென்று காட்டி
இனம்பிரித்து சண்டையிடும்
இவர்களிடமா?

பிரம்மா சிந்தித்தார்.
சிந்தினார் புன்சிரிப்பை

எமனை அழைத்தார்.

 

 

 

 

பொன்னியின் செல்வன் -1 விமர்சனம்

Ponniyin Selvan - Part 1 Stills - Pictures | nowrunningPonniyin Selvan - Part 1 Stills - Pictures | nowrunningPonniyin Selvan - Part 1 Stills - Pictures | nowrunning

Ponniyin Selvan - Part 1 Stills - Pictures | nowrunningPonniyin Selvan - Part 1 Stills - Pictures | nowrunning

 

Ponniyin Selvan Movie Stills, Photos And HD Posters - Kerala9.com

Ponniyin Selvan - Part 1 Stills - Pictures | nowrunningPonniyin Selvan - Part 1 tamil Movie - Overview

 

விக்ரம், (ஆதித்ய கரிகாலன்)  கார்த்தி (வந்தியத்தேவன்  ) , ஜெயம் ரவி (பொன்னியின் செல்வன்)  , ஜெயராமன்,(ஆழ்வார்க்கடியான்)  பிரகாஷ் ராஜ்,(சுந்தரசோழர்)  கிஷோர்,(ரவிதாசன்)  சரத்குமார் (பெரிய பழுவேட்டரையர்), பார்த்திபன், (சின்ன பழுவேட்டரையர்)  பிரபு (பெரிய வேளார்) , நிழல்கள் ரவி,(சம்புவரையர்)  விக்ரம் பிரபு ,(பார்த்திபேந்திரன்), ரியாஸ்கான் (சோமன் சாம்பவன்) , லால்(மலையமான்), ரகுமான்(மதுராந்தகர்) ,அஷ்வின்(சேந்தன் அமுதன்), நாசர் (வீரபாண்டியன்) , மோகன் ராமன் ( அநிருத்த பிரும்மராயர்)

ஐஸ்வர்யா ராய்,(நந்தி)   திரிஷா(குந்தவை)  , ஐஸ்வர்யா லக்ஷ்மி,(பூங்குழலி)  சோபிதா துலிபாலா,(வானதி) , ஜெயசித்ரா (செம்பியன் மாதேவி) , சாரா (நந்தினி -இளம் வயது)

இசை: ஏ ஆர் ரகுமான்

திரைக்கதை – மணிரத்னம் , ஜெயமோகன், குமரவேல்

வசனம் : ஜெயமோகன்

இயக்கம்  : மணிரத்னம்

——————————————————————————————————–

பொன்னியின் செல்வன்  திரை விமர்சனம்:

 

பத்து வருடத்திற்கு முன் நான் கூறியது அப்படியே நனவாகியிருக்கிறது!

மணிரத்னம் அவர்கள் பொன்னியின் செல்வனை  எடுக்க முயற்சிப்பதாகத் தகவல் வந்ததும் நான் யூ டியூபில்  போட்ட கற்பனை விமர்சனம் ! கிட்டத்தட்ட அப்படியே பலித்திருக்கிறது ! நடிகர்கள் தேர்வைத் தவிர! 

இந்தப்படம் தமிழ் பேசும் மக்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது. உலக அளவில் பேசப்படும் படமாக ஆகிவிட்டது.  வசூலில் சாதனை! 167 நிமிடப்படம் எந்த இடத்திலும் போராடிக்கவில்லை. இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பை அழகாகக் கூட்டியுள்ளார்கள் ! அதிக கிராபிக்ஸ் கலக்காமல் யதார்த்தமாகக் கொண்டு போகும் பாங்கு சிறப்பு!  கல்கியின் வரிகளும் ஜெயமோகனின் வரிகளும் அளவோடு  இருக்கின்றன. 

திரைக்கதை மூலக் கதையோடு ஒத்துப் போனாலும் சில இடங்களில் வித்தியாசமாக மாறுபடுகிறது. அதுவும் ஒரு புது ரசனையாக மிளிர்கிறது. (ராஷ்டிரக்கூடப் போர், இலங்கை மன்னன் தர்பார், குந்தவை பழுவேட்டரையர் குளத்தில் கல்  எறிவது, கடல் போர் இப்படி எத்தனையோ )  

பாடல்கள் அத்தனையும்  ரஹ்மான் மந்திரம்  பொன்னி நதி பாடல் துள்ளல் ! அலைகடல்  பாடல் மயக்கம்,  ராட்சச மாமனே – கிறக்கம், சோழா சோழா – மறம் !  குரவைக்கூத்து – பயங்கரம்!  சொல் சொல் பாடல் இல்லையே என்ற வருத்தம்  

நடிகர் தேர்வில் இன்றைக்கு மணிரத்னம் செய்தது போல கச்சிதமாக யாரும் செய்திருக்கமுடியாது. அனைவரும்  பாத்திரங்களாகவே மாறிவிட்டனர். நந்தினி- குந்தவை பனிப்போர் அழகான மலர் விரிவதைப்போல் விரிகிறது. கார்த்தி –  திரிஷாவைவிட  வந்தியத்தேவன்-குந்தவை  பாத்திரத்திற்கு இவ்வளவு அழகாக வேறு யாரும்  உயிர் கொடுத்திருக்க முடியாது. முதல் சந்திப்பில் அவர்கள் பேசிக்கொள்ளும் காட்சி   ரவிவர்மா ஓவியம் போல மின்னுகிறது ! பொன்னியின் செல்வனின் கம்பீரம் ஜெயம் ரவியிடம் உடல் மொழியில் குடிகொண்டிருக்கிறது.  நந்தினியின் மோகனாஸ்திரம் படத்திற்கு பெரும் அளவில் உதவும்.( வைரச் சுரங்கம்)  பூங்குழலியின் அழகு ,வானதியின் நடனம் எல்லாம் படத்தை  எங்கோ கொண்டுபோய்ச் சேர்க்கின்றன.  பெரிய பழுவேட்டரையரின் சாமர்த்தியம் ,  சின்னப் பழுவேட்டரையரின் கோபம், ரவிதாசனின் வெறி, சோமன் சாம்பவனின் ஆத்திரம். சிற்றரசர்களின் ஆசை, இலங்கை மன்னனின் துடிப்பு , ராஷ்ட்டிரகூட மன்னனின் வெறுப்பு   அத்தனையையும் நறுக்கென முதல் காட்சியிலேயே புலப்படுத்துகிறார் இயக்குனர். 

ஒரு தமிழ்ப்படத்திற்கு அதிக  அளவில் வாசகர்கள் விமர்சனம்  எழுதியது இந்தப்படத்திற்குத் தான் இருக்கும்.

அவர்களை  இந்த ஆறு வகைகளில் சேர்க்கலாம். 

  1. நாவலைப் பலமுறை படித்து கதையோடு  உயிரெனக் கலந்துபோன கல்கி பக்தர்கள்
  2.  நாவலை நாவலாகப்  படித்தவர்கள்
  3.  புத்தகம் படிக்காத ஆனால் கதையை மற்றவர் மூலம்  கேள்விப்பட்டவர்கள்
  4.  சுத்தமாகப் படிக்காதவர்கள் – இன்றைய பெருவாரியான இளைஞர் கூட்டம் 
  5.  மணிரத்னத்தின் தீவிர ரசிகர்கள் 
  6.  மணிரத்னத்தின் தீவிர எதிர்ப்பாளர்கள்   

இந்தப்படம் மைசூர்பா(க்)  மாதிரி. 1,2 ,3 வகை மனிதர்களுக்கு அந்தக் காலத்து செங்கல் போன்ற கரகரப்பான  மைசூர்பாக்தான் பிடிக்கும் .             

 4, 5 வகையினருக்கு கிருஷ்ணா மைசூர்பா (வாயில் போட்டதும் கரையுமே ) அதுதான் பிடிக்கும்.

முதல் குரூப் இப்போது மைசூர்பா சாப்பிட்டு அதையும் ரசிக்கத் தொடங்கிவிட்டனர்.

6 வது வகையினர் சுகர் வியாதினால் அவதிப்படுபவர் . எதுவும் பிடிக்காது.  

அதனால் ஒட்டுமொத்தமாக உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு  மணிரத்னம் குழுவினரின்  படம் மிகவும் பிடித்திருக்கிறது.  அதிலும் முதலில் குறை கூற ஆரம்பித்த அனைத்து மக்களும் (1-5)  இரண்டாம் தடவை பார்த்ததும் மணிரத்னத்தைப் பாராட்ட ஆரம்பிக்கிறார்கள். இதில் நானும் அடக்கம். 

மணிரத்னம் சார்! எங்கள் கனவை  நனவாக்கிய உங்களுக்கு  500 கோடி  வந்தனங்கள் ! பொன் தனங்களும் கூட!  

அதிசய உலகம் -2 – அறிவுஜீவி

 

அதிசய உலகம் -2  

‘நடுவயது நம்பி’

இந்த நடுவயது நம்பியின் பாதி ஆயுள் முடிந்தது.
உடல் எரிய, எரிய, அவன் வாழ்க்கை தொடர்கிறது.

இன்னும் வாழும் நாட்களும் எரிந்து கொண்டு தான் வாழவேண்டும்.

யாரைச் சொல்கிறோம்?

அட, நம்ப சூரியனைத் தான்.

சூரியனுக்குப் பத்து பில்லியன் வருட ஆயுள்.

ஐந்து பில்லியன் கழிந்துவிட்டது.

ஹைட்ரஜன் தான் அவனது சாப்பாடு.

அதை பிசைந்து சாப்பிட்டு,

அந்த வெப்பத்தில் அவன் ஜொலிக்கிறான்.
பூமி அவனது வெப்பத்தில் உயிர் வாழ்கிறது.

ஆனாலும், அமாவாசைச் சாப்பாடு என்றும் கிடைக்குமா?

ஹைட்ரஜன் என்ன, எடுக்க எடுக்கக் குறையாத அமுதகலசமா?

இன்னும் ஐந்தே பில்லியன் வருடம் தான் சரக்கு.
அப்புறம் ஹைட்ரஜன் சாப்பாடு காலி.

அந்நாளில்,

சூரியன், வாழ்க்கையின் ஓரத்துக்கு வருகிறான்.
பசி.

சூரியப்பசி.

தன்னிடமிருந்து பத்து பில்லியன் வருடமுன் பிரிந்து சென்ற கோளங்களை நினைத்துப்பார்க்கிறான்.

வியாழன், சனி அனைத்தும் கையிலடங்காத தூரம் போய்விட்டது. மெர்குரி, வீனஸ், பூமி மட்டும் கையெட்டும் தூரத்தில் இருக்கிறது.

ஏ பூமியே!

எத்தனை காலம் உனக்கு உயிர் கொடுத்தேன்!

இன்று உணவுக்காக ஏங்குகிறேன்!

உயிருக்காகத் தவிக்கிறேன்!

என் தனி ஒருவனுக்கு உணவு இல்லையென்றால்,

ஜகத்தினை அழிப்பது தானே முறை!

நான் போனால், நீயும் போகவேண்டியது தான்.
உயிரே.. உயிரே.. இன்று என்னோடு கலந்துவிடு.

அணையப்போக்கும் விளக்கு பிரகாசிக்குமாமே!

நாம் மீண்டும் சேரும் போது எனது உடல் பன்மடங்கு ஒளியில் பிரகாசிக்கும்.
சேர்ந்தே பிறந்தோம்.

சேர்ந்தே மறைவோம்.
உன்னுடன் வாழ்ந்து மறைந்த உயிரினங்கள் எண்ணிலடங்கா!

அவர்கள் ஆத்மா என்னுடன் சேரட்டும்.

இன்று உன்னிடம் வாழும் உயிர்களுக்கு மறுபிறப்பு கிடையாது!

அவர்கள் பிறவிப்பெருங்கடல் கடந்தவர்கள்!

வா..  அருகில் வா!

தா..  உயிரைத் தா!

   
[

வானியல் ஆராய்ச்சி சொல்வது:
பத்து பில்லியன் வருட முடிவில்,

சாகும் நேரத்தில், சூரியன் –  மெர்குரி, வீனஸ், பூமி கிரகங்களை விழுங்கி ஏப்பம் விட்டு, பேரொளியைச் சிந்திவிட்டு, சிவப்புக் கோளமாக மாறுமாம்.
https://www.indiatoday.in/amp/science/story/sun-solar-system-inner-planets-venus-mercury-earth-geomagnetic-storm-cme-1990904-2022-08-22

]

 

கழுகரசன் – எஸ் எஸ்

Eagle ripping off Snake apart - YouTube

வட்டமிட்டுப் பறக்கும்போதே நோட்டமிட்ட கழுகரசனுக்கு  சட்டை உரித்த பாம்பின் பிறந்தமேனி பார்வையில்தெரிந்தது

அலகில் நீர் வழிய சட்டென்று கீழே இறங்கி கால் விரல்களில் பாம்பைப்பற்றி மேலே பறந்து சென்றது.

வயதாகியும். எப்படி இரையைப் பிடித்தோம்  என்ற கர்வத்தில் உயரே உயரே பறந்தது.

தன் சகாக்கள் தன்னைப் பார்க்கவேண்டும்  என்று ஒருமுறைக்கு இருமுறை காலில் பாம்புடன் வானில்வட்டமிட்டது!

கழுகின் போறாத காலமோ பாம்பின் நல்ல காலமோ கழுகின் பிடியிலிருந்து பாம்பு நழுவித் தரையை நோக்கிவிழுந்தது.

தன் திறமையின்மையை சகாக்கள் பார்த்துவிட்டனவோ என்று ஓரப்பார்வையால் பார்த்தது

கழுகு அரசனுக்குப் பக்கத்தில் இருந்த இளம் கழுகு  விஷமச் சிரிப்புடன் சட்டென்று தாழ்ந்து பறந்துவிழுந்த பாம்பை அலகால் பிடித்தது.

அந்தக்கணத்தில் கழுகரசன் புரிந்துகொண்டது தன் அரச பதவி காலாவதியாகிவிட்டது என்று!

கூட்டத்தைவிட்டுப் பறந்துபோய் மலையின் உச்சியில் அமர்ந்து தன் சிறகுகளை ஒவ்வொன்றாக பிய்த்துக்கொண்டு உயிரை விட்டது!

நடந்ததை அறியாத தன் கோழிக்குஞ்சு கழுகின் பார்வையிலும் பாம்பின் பல்லிலும் தப்பியதே என்ற மகிழ்ச்சியில் தன் சிறகால் குஞ்சை மூடி அழைத்துச் சென்றது தாய்க்கோழி !

 

 


அனுகூல் – சத்யஜித் ரே எழுதிய கதை குறும் பட வடிவில்

2017 இல்  சத்யஜித் ராய் அவர்களின் அனுகூல் என்ற மிகச் சிறப்பான விஞ்ஞான சிறுகதையை 21 நிமிட குறும் படமாக மாற்றியிருக்கிறார்கள்.

யூ டியூபில் வெளியிட்ட ஒரே நாளில் ஒரு லட்சம் வாசகர்கள் பார்த்துப் பாராட்டியிருக்கிறார்கள்

இந்தியாவில் சிறந்த விமர்சகர்கள் இதனைக்  கொண்டாடியிருக்கிறார்கள்.

அமிதாப் பச்சன் அவர்கள் இதனை மிகவும் பாராட்டியிருக்கிறார். 

இந்தக் கதை விரைவில் உண்மையாக நடக்கக்கூடும். அப்படி நடந்தால் அதன் விளைவுகள் எந்த அளவு பயங்கரமாக இருக்கும் என்பதை எண்ணும் போது  ஒரு திகில் – ஓர் அச்சம் நம்மிடம் உருவெடுக்கிறது. .

கதையில் வரும் முக்கிய  கதாபாத்திரங்கள் இருவரும் கதைக்குத் தேவையான அளவு கச்சிதமாக நடித்திருக்கிறார்கள். 

கிளைமாக்ஸ் ஆக வரும்  முடிவு,    தற்செயலாக நடந்த விளைவா   அல்லது கண நேரத்தில் திட்டமிட்ட  செயலா ?

ஆராய்ந்து பார்க்க வைக்கும் குறும் படம். 

ரே ரே தான் !

பார்த்துவிட்டு  உங்கள் கருத்துகளை எழுதுங்கள் !

 

குவிகம் கடைசிப் பக்கம் -டாக்டர் ஜெ.பாஸ்கரன்.     

என் வீட்டுக் கதவில் ஒரு கடிதப் பெட்டி!
என் வீட்டில் வாட்ச்மேன் இல்லை. இருந்தவன் என்ன ஆனான் என்பது வேறு கதை.

கடிதம் எழுதும் பழக்கம் அறவே தொலைந்துவிட்டது. ஆனாலும் வீட்டுக்கு வரும் தபால்கள் (கவனம், கடிதங்கள் அல்ல!) குறையவில்லை! அப்பா கைப்பட, மகனுக்கு, ‘நாங்கள் செளக்கியம். நீங்கள் செளக்கியமா? இந்த மாதம் பணம் அனுப்பவில்லையா?’, விடுதியில் தங்கிப் படிக்கும் பிள்ளை, அப்பாவுக்கு, ‘அன்புள்ள அப்பா, நான் நலமாக இருக்கிறேன். ஃபீஸ், கைச்செலவுக்கு மற்றும் டூருக்கு பணம் அனுப்பவும்’ ரகக் கடிதங்கள் வருவதற்கு வாய்ப்புகளே இல்லை! இன்னும் சொல்லப் போனால், கடிதங்கள் வரும் வாய்ப்பே இல்லை! எல்லாம் எலக்ரானிக் மயம் – வாட்ஸ் ஆப், மெயில், மெயில் டிரான்ஸ்ஃபர். அன்பு பொங்கும் கடிதங்களை மீண்டும் மீண்டும் வாசித்து மகிழ்வதும், கோபக் கனல் வீசும் கடிதங்களை வாசித்துப் பொங்குவதும் வழக்கொழிந்து விட்டன. 

சில எல் ஐ சி பாலிசி அறிவிப்புகள், கார்ப்பொரேஷன் அனுப்பும் குடிநீர் மற்றும் கழிவுநீர் வரிகள் (குடிநீர் வருவதற்கும், கழிவு நீர் போவதற்கும் இந்த வரிகளுக்கும் யாதொரு சம்பந்தமும் இருப்பதில்லை!), பண்டிகைக் காலத் தள்ளுபடி விளம்பரங்கள் (அழகான நடிகை, கவர்ச்சியாகச் சிரித்தபடி 

இருந்தால், அது உங்களுக்கு போனஸ் தபால்!), சுவிசேஷக் கூட்ட அறிவிப்புகள், இலவச வாரப் பத்திரிகைகள் (இவற்றுக்கும், தபால் ஆபீசுக்கும் ஸ்நானப் பிராப்தி கூட கிடையாது), ரீடர்ஸ் டைஜஸ்ட் போன்ற சஞ்சிகைகள், எப்போதாவது புத்தகப் பார்சல்கள் இவைதான் இப்போது தபாலில் அல்லது பிரைவேட் டெலிவரியில் வருகின்றன! ஜெய்சங்கர் படத்தில் வரும் ‘ஒருவர் மனதை ஒருவர் அறிய, உதவும் தேவை இது..’ என்ற பாடல் சொல்லும் கடிதங்கள் மட்டும் வருவதில்லை! கொரியர் சர்வீஸ் இதில் சேர்த்தி இல்லை, அதற்கு, பார்சலைக் கொடுத்து கையெழுத்து வாங்கும் தலையெழுத்து உள்ளது!

வாட்ச்மேன் இருந்த வரையில் எல்லாக் குப்பைகளையும் ஒழுங்காக வாங்கி, அவரவர் வீட்டில் – ஃப்ளாட்டில் – பிரித்துப் போட்டுவிடுவார்! இப்போது, தினமும் வருகின்ற குப்பைகளை கார் பார்க்கில் வீசிவிட்டுப் போகின்றார்கள். பொறுக்கி, எடுத்துக்கொள்ள வேண்டும்! 

இந்த விளம்பரக் குப்பைகளைக் – அதில் 5 முதல் 10 சதவீதம் வரை தள்ளுபடிக் கூப்பன்கள் இருந்தாலும் – கிழித்துப்போடும்போது ஒவ்வொருமுறையும் ஏதோ ஒரு மரம் காகிதத்திற்காக வெட்டப்படும் ஓசை கேட்கிறது! 

மாத சஞ்சிகை ஒன்று, இரண்டு மூன்று நாட்கள் கழித்து தபாலில் வந்து சேர்ந்தது! கூடவே சிதம்பரம் நடராஜா பிரசாதம், பாண்டிச்சேரி அன்னை பிரசாதக் கவர், ரீடர்ஸ் டைஜஸ்ட் இன்னும் சில அறிவிப்புகள் எல்லாம் ஒரு கத்தையாக மாடிப்படிகளின் கீழே, கிடந்தன. அப்போதுதான் தோன்றியது, ‘லெட்டர் பாக்ஸ்’ ஒன்றை வைத்தால் என்ன என்று!

பொது மக்கள் தாங்கள் அனுப்பும் தபால்களைப் போடுவதற்கானவை ‘போஸ்ட் பாக்ஸ்’ – தெருக்களிலோ, நகரின் முக்கியமான இடங்களிலோ நின்றபடி காத்திருக்கும் தபால் பெட்டிகள்! ஆரம்ப நாட்களில் அவை பச்சை நிறமுடன் இருந்ததாகவும், பின்னர் 19 ஆம் நூற்றாண்டில், பிரிட்டிஷ் சிவப்பு நிறத்திற்கு மாற்றியதாயும் ஒரு வரலாறு உண்டு. இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில், பிரிட்டிஷ் ஆட்சியிலேயே சிவப்பு நிற தபால் பெட்டிகள் வந்திருக்க வேண்டும்! 

நான் சொல்ல வரும் ‘லெட்டர் பாக்ஸ்’ தனியாக வீட்டு வாசல்களில், கேட் அல்லது வாசற்சுவற்றில் தொங்கவிடப் படுபவை! சிவப்பு நிறம் அவசியமில்லை! பல வண்ணங்களில், பல வடிவங்களில், பூட்டி வைக்கும் வசதிகளுடன் லெட்டர் பாக்ஸ் இப்போது கிடைக்கின்றன. வரும் கடிதங்கள், விளம்பரங்கள், சிறிய பார்சல்கள் போன்றவற்றை தபால்காரர் அந்தப் பெட்டிக்குள் போட்டு விடலாம். நிறைய குடியிருப்புகள் உள்ள அடுக்கு மாடிக் கட்டடங்களில், ஃப்ளாட்டுக்கொரு லெட்டர் பாக்ஸ், தரை தளத்திலேயே, சொந்தக்காரர் பெயருடனோ அல்லது  ஃப்ளாட் நம்பருடனோ இருப்பதுண்டு. இவை ‘க்ளஸ்டர் மெயில் பாக்ஸ்’ எனப்படுகின்றன.

தனி வீடுகளில், சுவற்றில் ஒரு இஞ்ச் அகலத்தில், ஒரு அடி நீளத்தில் ஒரு ‘பிளவு’ விட்டிருப்பார்கள் – அதில் போடப்படும் (சில பெரிய சைஸ் தபால்கள் மடித்தும், பாதி உள்ளேயும், பாதி வெளியேயுமாய் சொருகப் படுவதும் உண்டு!) தபால்கள், சுவற்றுக்குப் பின்னுள்ள பெட்டியிலோ, துணிப்பையிலோ விழுந்து விடும்!

சில நேரங்களில், வாசலில் காலைக் கவர்பாலுக்காகத் தொங்க விடப்பட்டுள்ள பையில் தபால்கள் போடப்பட்டு, எட்டிப்பார்ப்பதுவும் உண்டு!

நாள்பட்ட லெட்டர் பாக்ஸ், கொக்கி உடைந்து, வாய் திறந்து, வளைந்து கோணலாய் தொங்க, குருவிகளின் கூடுகளாய் ஆவதும் உண்டு. 

அமெரிக்காவில், பெரிய பெண்ணின் வீட்டு வாசலிலேயே, சுமார் நான்கு அல்லது ஐந்தடி உயர் ஸ்டீல் கம்பத்தின் மேல் பெரிய பிரட் ‘லோஃப்’ சைசில், அழகான புறாக் கூண்டு போன்ற மெயில் பாக்ஸ் உண்டு. ரகசிய நம்பர்களை ஒத்தித் திறந்தால், உள்ளே…. அங்கேயும் அதே குப்பைதான்! உடன் அரசின் முக்கிய தபால்களும் உண்டு.

கனடாவில் சின்னப் பெண்ணின் மெயில் பாக்ஸ், ஒரு தெரு தள்ளி திருப்பத்தில் உள்ளது. இருபதுக்கும் மேலான மெயில் பாக்ஸ் வரிசையாக லாக்கர் போல உள்ளன. இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை, சென்று, திறந்து பார்த்து தபால்களை… அதே குப்பைகள்தான்… எடுத்து வர வேண்டும். 

‘ஆளே இல்ல, எதுக்கு பெல்லு?’ என்பது போல ‘தபாலே இல்ல, எதுக்கு வீட்டில் தபால் பெட்டி?’ – சஞ்சிகைகள், அரசு அறிவிப்புகள், பில்கள் இவற்றுக்காகவேனும், அவசியமிருப்பதாகப் படுகிது. 

யார் கண்டது, பழைய எல் பி, ஈபி பாடல் ரெகார்டுகள் இப்போது மீண்டும் வருவதைப் போல, லெட்டர் பாக்ஸைப் பார்த்து, பரிதாபப் பட்டு, மீண்டும் போஸ்ட் கார்டோ, இன்லண்ட் லெட்டரோ அனுப்ப யாராவது முன்வரலாம்! அதுவரை, வீட்டு வாசலில், ஓர் அடையாளமாகவேனும் ‘லெட்டர் பாக்ஸ்’ தொங்கவிடலாம் என்றே தோன்றுகின்றது!