எமபுரிப்பட்டணம் -எஸ் எஸ்

விஸ்வகர்மா அவர்களே!

என் மனைவியர் எனக்குக் கொடுத்த சாபத்தைப்பற்றிச்  சொல்வதற்கு முன்னால் இந்தப் புவி உலகில் உயிரினம் தோன்ற எப்படி  கிரகங்களாகிய நாங்கள் உதவுகிறோம் என்பதை உங்களுக்குக் கோடிட்டுக் காட்டவேண்டும்.  இதன் தத்துவார்த்தம் நீங்கள் அறியாததல்ல, இருந்தாலும் முதலில் பொதுப்பயனைக் கூறிவிட்டுப் பிறகு சிறப்புப் பயனைக் கூறுவதுதானே முறை ?

பூலோகத்தில் பிறக்கும் ஒவ்வொரு உயிரும்  கிரகங்களாகிய   எங்களுடன் பின்னிப் பிணைந்திருக்கின்றன என்பது சிறு குழந்தைகளுக்கும் தெரியும். ஆனால் பிறப்புக்கு முன்னும், இறப்புக்குப் பின்னும் மனித ஜாதிகளுக்கு நாங்கள்தான்  காரணகர்த்தாவாக இருந்து வருகிறோம் என்பது சிலருக்குமட்டுமே தெரியும்.

இந்த பூமிக்கு மட்டுமல்ல, அனைத்து உலகிற்கும் நாங்களே அதிபதிகள்.  நவகிரகங்களான நாங்கள்தான் உண்மையில் அனைத்து உயிர்களையும் நிர்ணயிக்கிறோம்.

விஸ்வகர்மா அவர்களே!

நீங்களே சொல்லுங்கள்!  உலகில் ஒவ்வொரு உயிரும் ஜனிக்க யார் காரணம்?  பிரும்மர்  என்றுதான் எல்லோரும் சொல்வார்கள். அது ஒரளவுக்கு உண்மை.  பிரும்மர்தான் பிறக்கும் எல்லா உயிர்களுக்கும்  பொறுப்பு என்பதில் சந்தேகமில்லை. அதாவது அவர் படைக்கிறார், அதன்மூலம் ஒரு உயிருக்குப்  பிறக்கும் உரிமையைத் தருகிறார்.  அதாவது உயிரைத் தருகிறார். அந்த உயிர் எப்படி எங்கு யார்யாரிடம் எப்போது பிறக்கவேண்டும் என்று தீர்மானிப்பது அவரல்ல, கிரகங்களான நாங்கள்தான்.

அவற்றுள்ளும்,  நானும் கேதுவும் மிகமிக முக்கியப் பங்கு வகிக்கிறோம் என்று சொன்னால் அது மிகை இல்லை. கேதுவிற்கும் எனக்கும் ஓருயிர் ஈருடல். அவன்வேறு நான்வேறு இல்லை.  காலத்தின் கோலத்தால் நாங்கள் இரண்டாகப் பிரிக்கப்பட்டுப் பாம்பால் இணைக்கப்பட்டுள்ளோம்.  எனக்கோ மனிதத்தலை பாம்பின் உடல். கேதுவிற்கோ பாம்புத்தலை மனித உடல். நான் வடக்கே என்றால் அவன்  தெற்கே இருப்பான். நான் முடிந்தால் அவன் தொடங்குவான். அதனாலேயே நாங்கள் சாயா கிரகங்கள் என்று அழைக்கப்படுகிறோம்.   நாங்கள்தான் உயிர்கள் உலகில் தோன்றுவதற்குக் காராணமாயிருக்கிறோம்.

அதெப்படி, மற்ற முழு கிரகங்களைவிடச் சாயா கிரகமான எனக்கு அவ்வளவு முக்கியம் என்று ஆச்சரியப்படுகிறீர்களா?  விளக்கமாகவே சொல்கிறேன் கேளுங்கள்.

முதலில் சூரியனை எடுத்துக் கொள்ளுங்கள்!  உங்கள் மருகன், என்னுடைய முதல் எதிரி.  அவர் உயிரினங்களுக்கு ஆன்மா என்னும் உயிர்ப்புள்ளி. பிறப்பிற்கு  அது போதுமா? நிச்சயம் போதாது.

அடுத்தது சந்திரன், எனது இரண்டாம் எதிரி, அவன் மனம் மற்றும் உடல் சார்ந்தவன்.

அடுத்தது செவ்வாய், அவன் மனித உடலில் ஓடும் ரத்தம்.

புதன், உயிர்களின் அறிவுமற்றும் தோல்.

வியாழன், மனிதர்களின்  மூளை.

சும்மா சொல்லக்கூடாது,  புத்திர பாக்கியத்துக்குச் சுக்கிரனின் பங்கு மற்ற கிரகங்களைவிடச் சற்று அதிகமாயிருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆணின் சுக்கிலமும் பெண்ணின் சுரோணிதமும் உண்டாவதற்குக் காரணமானவர் சுக்கிரன்.

சனி கிரகத்திற்குப் புதிய அதிபதி வரவேண்டும் . இருந்தாலும் அந்த கிரகத்தின் பலன் முன் ஜென்ம வினைகளின் அடிப்படையில் மனிதர்களை இயக்குவதுதான்.

ஆக இந்த கிரகங்களும், சூரியனும், பிரும்மரும் தர இயலாத இரண்டு அம்சங்கள் – பிறப்பிற்கு மிக முக்கியமானதை நானும் கேதுவும் தருகிறோம்.

பிறவி உருவாகக்  காதல்மட்டும் போதாது. காமமும் வேண்டும், அந்தக் காமத்தின் அடிப்படை ஆண் மற்றும் பெண் இருவரது ஜனன உறுப்புகள்.

இந்த உறுப்புகளில் பெண்ணின் ஜனன உறுப்பு ராகுவாகிய  நான்.   ஆணின் ஜனன உறுப்பு  கேது.

இந்த இரண்டும் இணையும்போது, உயிர்  என்கிற பிறப்பு எடுக்கிறது.

இந்த இணைவுக்குப் பின்தான் மற்ற கிரகங்களின் மூலம் உடல் வடிவம் உண்டாகிறது.

இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்… பிறப்பு என்பது யாரால் ஏற்படுகிறது என்று!

இந்த உலகின் அத்தனை ஆசைக்கும், இன்பத்திற்கும் , இச்சைக்கும் அதிபதி நானும் கேதுவும்.

இதனால்  உண்டாகும் துன்பம், துயரம், விரக்தி என அனைத்தும் என்னால் உருவாகின்றன.

இப்படிப்பட்ட காதலுக்கும் அதனுடன் இழைந்த காமத்திற்கும்  முக்கியக் காரணி  நான். என் தீட்சண்யப் பார்வைபட்டால் சாதாரனண மனிதன் காமுகனாகி விடுவான். முனிவருக்கும் காதல் அரும்பும்.  அப்படிப்பட்ட என் பார்வை சில காமுகர்மீது பட்டால் அவர்கள் வெறியர்கள் ஆகிவிடுகிறார்கள்.  சூரியனுக்கும் ஸந்த்யாவிற்கும் ஆழமான காதல் வந்தது என் பார்வைபட்ட பலந்தான் என்பது எனக்கு மட்டும் தெரியும்.

இப்படி என் பார்வைக்குக் காமம் வந்ததற்கு  என் மனைவிகள் நாகவல்லியும் நாக கன்னியும் சேர்ந்து கொடுத்த சாபம்தான் காரணம்.

நான் கிரகபதவியை வேண்டி, சிவபிரானுக்காகத் தவம் செய்துகொண்டிருக்கும்போது அவ்வழியே நாகலோக  இளவரசிகளான  நாகவல்லியும் நாககன்னியும் வந்தார்கள்.  மனித முகமும் பாம்பு உடலும் கொண்ட என்மீது ஏனோஅந்த நாகலோகப் பெண்களுக்கு அளவில்லாத ஆசைவந்தது. நானோ அவர்களை என் தவத்தைக் குலைக்க வந்தவர்கள் என்றே எண்ணினேன். அதனால்  அவர்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. என் பார்வை   அவர்கள்மீது  பட்டாலும் எனக்கு என்னவோ காதல் என்ற  உணர்வு  வரவேயில்லை.

அதனால் கோபம்கொண்ட அவர்கள் ‘என் பார்வை நேராக யார்மீது பட்டாலும் அவர்களுக்கு அதீத காதல் வரக்கடவது’ என்று சபித்தார்கள்.  அந்த சாபம் பலிக்கிறதா என்று பார்க்க என் முகத்தின் அருகேவந்து என் இரு கன்னத்திலும்  அந்த இரு இளவரசிகள் முத்தமிட்டுக்கொண்டே தங்கள் அழகான கண்களினால் என் கண்ணைப் பார்த்துக்கொண்டேயிருந்தார்கள். அவர்களின் நான்கு விழிகளிலும்  என்  கண்ணின்  பிம்பம் எனக்குத் தெரிந்தது.  என் கண்களை நானே நான்கு கோணத்தில் பார்த்ததும் எனக்கு அவர்கள்மீது அளவில்லாத  காதல் வந்தது.  என் காமம் நான்கு மடங்கு அளவிற்கு வெறியாக மாறியது. அவர்கள் இருவரும் என் பிடியில் தவித்தார்கள்.  என்னிடமிருந்து தப்பிக்கப் பாம்பு வடிவம் எடுத்து ஓடஆரம்பித்தார்கள்.  நான் வெறியில் நிலைகுலைந்து இருந்தேன்.  நானும் பாம்பு வடிவம் எடுத்து அவர்கள் இருவ்ரையும் என்னுடைய உடலால் முறுக்கி இன்பம் அனுபவித்தேன்.  நானே நான்கு உருவில் நின்று என்னையே பார்ப்பதாக ஒரு பிரமை.  இன்பம் அனுபவிப்பதில் தீவிரமாக இருந்ததில் அவர்கள் இருவரும் கிட்டத்தட்ட இறக்கும் அளவிற்கு வந்துவிட்டார்கள் என்பது  முதலில் புரியவில்லை.  உயிர் வேதனையில்  நாகவல்லி தன் வாலைச் சுழற்றி அடிக்க அருகில் பூஜைக்காகக் கலயத்தில் வைத்திருந்த பால் அப்படியே என் முகத்தில் கொட்டியது.  பால் அப்படியே நீல நிறமாக மாறி என் கண்னை மறைத்தது.  என் பிரமையும் மறைந்தது. வெறியும், Image result for ஆயிரக்கணக்கான பாம்புகள் அறைக்குள்காமமும் கலைந்தது.  காதல் மட்டும் மாறாமல் அப்படியே இருந்தது.  என் நடத்தைக்காக வெட்கப்பட்டு அவர்களின் மன்னிப்பைக் கோரினேன்.  அவர்களும் தங்களுடைய சாபத்தினால் விளைந்ததுதான் இந்த விபரீதம் என்று கூறி என் மன்னிப்பை வேண்டினர்.  தங்களை மணம் புரிந்துகொள்ளும்படியும் வேண்டினர்.  அது மட்டுமல்லாமல் எனக்கு எந்த ஆபத்து வந்தாலும் உதவிபுரிய வருவதாகவும் சொன்னார்கள்.

இங்கு உங்கள் அறையில் தங்கள் துனைவியரால் எனக்கு வந்த ஆபத்து அவர்களுக்குத் தெரிந்துவிட்டது.  என் உதவிக்கு அவர்கள் வருகிறார்கள் பாருங்கள்” என்று ராகு சொன்னதும்  விஷ்வகர்மா திடுக்கிட்டார்.

கதை சொல்லி நேரத்தைக் கடத்தி ராகு ஏதோ செய்யப்போகிறான் என்று அவர் உணர்வதற்கு முன்னாலேயே விபரீதங்களின் அறிகுறி தோன்றியது. 

ஆயிரக்கணக்கான பாம்புகள் அந்த அறைக்குள் வந்துகொண்டிருந்தன.

 

(தொடரும்)

இரண்டாம் பகுதி

Image result for a p nagarajan's saraswathi sabatham stills

நந்தி ஒரு ரதத்தை இழுத்துக்கொண்டு வந்தது. பார்வதி, லக்ஷ்மி, சரஸ்வதி  மூவரும் அதில் ஏறிக்கொள்ள நந்தி அவர்களை அழைத்துக்கொண்டு எமனின் இல்லம் நோக்கிப் புறப்பட்டது.  நாரதன் கண்டிப்பாக அவர்களுடன் வரவேண்டும் என்று அம்மா சரஸ்வதி திட்டவட்டமாகக் கூறிவிட்டாள்.  நாரதரால் மறுக்கமுடியவில்லை.

“சரி சரி, நான் கண்டிப்பாக வருகிறேன்.  நீங்கள் வண்டியில் செல்லுங்கள்.  நான் குறுக்காக வானவில்லில் நடந்து  சீக்கிரம்  வந்து சேர்ந்துகொள்கிறேன்” என்றார்.

” என்ன பிள்ளையோ?”  என்று சரஸ்வதி தலையில் அடித்துக்கொண்டாள்.

” நாரதனுக்கு என்ன குறைச்சல்?  இந்தச் சின்ன வயசில தேவரிஷின்னு பட்டமெல்லாம் வாங்கியிருக்கான்.  அப்படியே தம்பூராவை வைச்சுப் பாடினான்னா கேட்டுக்கிட்டே இருக்கலாம்” என்று லக்ஷ்மி வக்காலத்து வாங்கினாள்.

” என்ன பிரயோஜனம்?  கல்யாணம் ஆகிக் குடியும் குடித்தனமுமா இருன்னா கேட்கவே மாட்டேங்கிறான். எப்பவும் பிரம்மச்சாரியாதான் இருக்கப்போறேன்னு சவால் விட்டுக்கிட்டுத் திரியறான். போறாக்குறைக்கு ‘வருத்தப்படாத பிரம்மச்சாரிகள் சங்கம்’ அப்படின்னு ஆரம்பிச்சிருக்கானாம்.” சரஸ்வதி அங்கலாய்த்தாள்.

” அவன் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டபோது  விளையாட்டா நீங்க எல்லாரும் சேர்ந்து  அவன் மூஞ்சியைக் குரங்குமாதிரி மாத்திட்டீங்க ! அதைவிடக் கொடுமை  எங்கண்ணா விஷ்ணு  ஒருதடவை மாயையைக் காட்டுகிறேன்னு அவனை பொம்பளையா வேற மாத்தினார்.  அந்த மாயையிலே அவன் கல்யாணம்  பண்ணிக்கிட்டுக் குழந்தை வேறு பெத்துக்கிட்டானாம்.  பின்னாடி எல்லாம் மாயைன்னு விஷ்ணு சிரிச்சுக்கிட்டே சொன்னார்.  அன்னிக்கே  முடிவு செஞ்சுட்டானாம்,  இனிமே தீவிர பிரம்மச்சாரியா இருக்கறதுன்னு” பார்வதியும்  அவன் சார்பில் உச்சுக்கொட்டினாள். 

” நீங்க வேற! நான் என்ன சொன்னாலும் கேட்கமாட்டேங்கிறான், எப்பப் பார்த்தாலும் ஊர் சுத்திக்கிட்டே இருக்கான். கேட்டா திரிலோக சஞ்சாரி நான் என்கிறான். சின்ன வயசில ஆரம்பிச்ச விஷமம் இன்னும் குறையவேயில்லை. கேட்டா என் விஷமம் கடைசியில நல்லதாய்தான் முடியும் என்கிறான். “

” பேசாம  வலுக்கட்டாயமா   அவனுக்கு ஒரு கால்கட்டைப் போட்டுடு.  அப்பத்தான் ஒருவழிக்கு வருவான்.”

”  நானும் அதைத்தான் தீவிரமா யோசிச்சுக்கிட்டிருக்கேன்.  நம்ம பிரும்மலோகத்தில ஒரு பொண்ணும் அவனுக்குச்  சரியில்ல. யாரைப் பார்த்தாலும்,  ‘நாரதரா, அவர் எங்க அண்ணாமாதிரி’ என்று நழுவிவிடுகிறார்கள். கைலாசத்தில எல்லாம் பூதகணங்களா இருக்கு.  எப்படிப் பெண்  எடுக்கிறது?  வைகுந்தத்தில  விஷ்ணுவைத்தவிர வேறு யாரையும் பார்க்கவே மாட்டேன் என்கிறான்.  அவர் மோகினிமாதிரி ஏதாவது அவதாரம் எடுத்தா நல்லது.”

“ஏண்டியம்மா என் மடியில கையை வைக்கிறே? நான் ஏற்கனவே அந்த ஆண்டாளை நினைச்சுக் கவலைப்பட்டுக்கிட்டிருக்கேன்.”

” நாரதனை விடு! அந்த ஆண்டாள் அடிக்கடி வைகுந்தம் வந்துபோறாளாமே? அது உண்மையா?” சரஸ்வதியின் குரலில் சீரியல் பார்க்கும் ஆர்வம் தெரிந்தது.

” அந்தக் கூத்தை  ஏன் கேட்கிறே!  திவ்வியப் பிரபந்தம் படிக்கிறோம் என்கிற சாக்கில் அடிக்கடி  வந்துபோறா! இவரும் தினமும் திருப்பாவையைத்  தலைக்குமேலே வைச்சு ஆடிக்கிட்டிருக்கார்.”

”  லக்ஷ்மி!  தலைக்கு மேலேயா? அப்படின்னா கங்கைமாதிரின்னு சொல்லு.”  சரஸ்வதிக்கு வாக்கு சாதுர்யம் ஜாஸ்தி.

” ஏண்டியம்மா சரஸ்வதி,  என்னைக் குத்திக்காட்டுறே?” – பார்வதி படபடத்தாள்.

” அட, சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னா கோவிச்சுக்கிறியே?  இதெல்லாம்  நமக்கு நல்லாத் தெரிஞ்ச  சமாசாரம்தானே?  என்ன இருந்தாலும் இன்னிக்குத் தேதிக்குக்  கங்கையைப்பத்தியும், ஆண்டாளைப்பத்தியும் பேசாமலிருக்கிறதுதான் புத்திசாலித்தனம்.” – சரஸ்வதி சமாளித்தாள்.

அதற்குள் அவர்கள் வந்த வண்டி எமன்  இல்லத்தின்  வாசலில் நின்றது.  

நாரதரும் அதேசமயத்தில் அங்கு வந்துசேர்ந்தார். 

கதவைத் திறந்துகொண்டு அகில உலக அழகிகளையும் தோற்கடிக்கும் வடிவில் எமி வந்தாள். 

நாரதர் எமியின் அழகைப் பார்த்துத் திகைத்து அப்படியே நின்றார்.

முப்பெரும் தேவியர்களின் இதழ்களிலும் புன்னகை அரும்பியது. 

(தொடரும்)

 

 

 

 

விரைவில் வருகிறது – புத்தகக் கண்காட்சி

குவிகம் ரசிகர்கள் வெகு ஆவலுடன் எதிர்பார்க்கும்  புத்தகக் கண்காட்சி !!

விருட்சம் ஸ்டாலில் குவிகம் நண்பர்களைக் காணலாம்!

குவிகம் புத்தகப் பரிமாற்றமும் நடைபெறும்.

அனைவரும் வருக!! புத்தகங்கள் வாங்கி  மகிழ்க!!

 

சரித்திரம் பேசுகிறது – “யாரோ”

மயூரவர்மன்

MayurasharmaPic.jpeg

வலை போட்டுத் தேடுகிறோம்.
நாயகனோ, நாயகியோ யாரும் தென்படவில்லை!
குறுநில மன்னர்கள் இந்தியாவை ஆயிரம் துண்டுகளாக்கி அரசாண்டு வந்தனர்!
சதவாஹனர், களப்பிரர்கள் என்று பலர் தென்னிந்திய ராஜ்யங்களை ஆண்ட காலம்.

இந்த இடத்தில் ‘இடைவேளை’ என்று சினிமாவில் வருவதுபோல் நாமும் போட்டிருக்கலாம்.

ஆனால் நாம் அப்படிப்போட்டுவிட்டு .. நமது கோடிக்கணக்கான வாசகர்கள் கொதித்தெழுந்து விட்டால்?
எதிர்த்து … உண்ணாவிரதமும் … வேலை நிறுத்தமும் எங்கெங்கும் நடந்தால்?
நகர்கள் பற்றியெரிந்தால்?.
தமிழகம் ஸ்தம்பித்துப் போனால்?
நமக்கெதற்கு வம்பு.
அவர்களுக்கு மரியாதைகொடுத்து நாம் தொடர்ந்து கதைப்போம்.
(சரி.. நமது கற்பனையை சரித்திரத்தோடு நிறுத்திக்கொள்வோம்) ???

நெல்மணி சிறியதுதான் – ஆனால் மணிகளைச் சேர்த்தால் அது ஒருவேளைக்கான உணவாகுகிறது.
அதுபோல் பல சிறுகதைகள் நெல்மணிபோல் சரித்திரத்தில் சிதறிக் கிடக்கின்றது.
அவற்றைச் சேகரிப்போம்.
விருந்து சமைப்போம்!
“மீல்ஸ் ரெடி”!

கி பி 350

சற்றே பின்னோக்கிச் செல்வோம்.

பல்லவர்களை முதற்காலப் பல்லவர், இடைக்காலப் பல்லவர், பிற்காலப் பல்லவர் என்று பிரிக்கலாம். 

மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன் பிற்காலப் பல்லவர்கள் காலம்.

இந்த கதை முதற்காலப் பல்லவர் காலத்தில் துவங்குகிறது.

பப்புதேவன் என்பவன் பல்லவர் ஆட்சியைத் துவங்கினான்.

அவன் மகன் சிவஸ்கந்தவர்மன் மன்னனாகிக் காஞ்சியைத் தலைநகராக்கி, ‘தர்ம மகா ராசாதிராசன்’ என்று பட்டம் சூட்டிக்கொண்டான்.  அக்நிஷ்டோமம், வாஜபேயம், அஸ்வமேதம் என்னும் பெருவேள்விகள் செய்தான். அவன் மகன் இளவரசன் விஷ்ணுகோபன்.  தெற்கே களப்பிரர் … மேற்கே பல மன்னர்கள்… அவமுக்தாவின் நீலராஜன்…வேங்கியின் ஹஸ்திவர்மன். நாடுகளில் ஓரளவுக்கு அமைதி நிலவிவந்தது.

இன்றைய ஷிமோகா …அருகில் தளகுண்டா…

அங்கு மயூரசர்மா என்று ஒரு இளைஞன்!

ஏழ்மைக் குடும்பம்.

பிராமணக் குலம்.

இருபது வயது.

குழந்தைபோல் முகம்.

இரும்புக் கம்பிகளால் செய்ததுபோல் உடல்.

படித்த பாடங்களை உடனே கிரகித்துக்கொள்ளும் பெரும் அறிவு.

அவனது தாத்தா.. இந்தப் பேரனுக்கு நல்ல எதிர்காலம் உண்டென்று நம்பினார்.

காஞ்சி நகரப் புகழ் அன்று எங்கும் பரவியிருந்தது.

காஞ்சியின் பல்கலைக்கழகமும் பெரும் பிரசித்திபெற்றிருந்தது.

பாட்டனார் பேரனைக் காஞ்சிக்கு அழைத்துவந்தார்.

மயூரசர்மா வேதம், உபநிஷதம் பாடங்களைக் கற்க ஆரம்பித்தான்.

அதே பள்ளியில் மல்யுத்தம்-குத்துச்சண்டைப் பாடங்களும் பயிற்றுவிக்கப்பட்டது.

அதைக் காணும்பொழுதெல்லாம் மயூரனுக்குத் தானும் அதைக் கற்கவேண்டுமென்று பேராவல்.

இன்று இந்தியாவில் கிரிக்கெட் எப்படியோ அன்று காஞ்சியில் மல்யுத்தம்.

காஞ்சியின் மல்லர்கள் நாட்டின் புகழ்பெற்ற வீரர்கள்.

மல்லர்களது குருவிடம் அணுகித் தன் இச்சையைத் தெரிவித்தான்.

பிராமணனுக்கு மல்யுத்தம் கற்றுக்கொடுப்பதில்லை – என்றார் குரு!

மயூரன் ஆசையில் இடிவிழுந்தது.

அவன் ஏகலைவனானான்.

சக மாணவர்கள் மல்யுத்தம் மற்றும் போர்புரியும் முறைகளைக் கற்றுக்கொள்வதை – மறைந்திருந்து பார்த்தே பழகிக்கொண்டான்.
அறிவும் – பலமும் சேர்ந்ததால்…விரைவிலேயே மயூரன் சக்திகொண்ட மல்லனானான்.

காஞ்சியில் மல்லர் திருவிழா …ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடக்கும்.
கிரிக்கெட் வேர்ல்ட்கப் போல!!

அதில் மல்யுத்தப்போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம்.

மயூரன் பல மல்லர்களை வென்றான்.

காஞ்சி மக்கள் பெரும் ரசிகர்கள்.. இவனது அழகையும், வீரத்தையும் பாராட்டி ஆரவாரித்தனர்.

முடிவில்.. காஞ்சியின் தலைசிறந்த மல்லனுடன் ‘இறுதிச்சுற்று’ போட்டி!

மக்கள் அலைஅலையாகத் திரண்டிருந்தனர்!

இளவரசன் விஷ்ணுகோபன் அரங்கில் – அரியணையில் அமர்ந்து இருந்தான்.

மயூரன் வென்றான்…

மக்கள் கரகோஷம் வானைப் பிளந்தது.

விஷ்ணுகோபன் முகம் கறுத்தது.

‘எங்கிருந்தோ வந்த பரதேசி … எனது சிறந்த மல்லனை வெல்வதா’!

நான்கு சிறந்த குதிரை வீரர்களை அழைத்து, ‘மயூரனுக்கு ஒரு பாடம் சொல்லி வாருங்கள்’ என்றான்..

அவர்கள் புரிந்துகொண்டனர்…

(உங்களுக்குத் தெரியாதா என்ன அதன் பொருள்?  எத்தனை சினிமாவில் நம்பியார் செய்திருப்பார்!)
ஆனால் மயூரன் எம் ஜி ஆர் போல்!

குதிரை வீரர்களிடமிருந்து தப்பினான்.

ஆனால் குதிரை வீரர்கள் உதிர்த்த அவமானச்சொற்கள் அவன் மனத்தைக் காயப்படுத்தின.

விஷ்ணுகோபனும் ‘பல்லவ நாட்டில் பிச்சை எடுக்க வந்தவன் பிச்சையோடு போகவேண்டியது தானே’ என்றான்!

மயூரன் தன் வாளை உயர்த்தி:

‘இளவரசே! வாளுக்குக் குலம் தெரியாது.. தொழில் தெரியாது. வீரமும் வலிமையும்தான் தெரியும். இந்த அவமானத்திற்கு என் வாள்மூலம் பதில்சொல்கிறேன்’ என்றான்.

அன்று தென்னிந்தியாவிலேயே வாட்போரில் தலை சிறந்தவன் என்று பெயரெடுத்திருந்தான் விஷ்ணுகோபன்.

பெருஞ்சிரிப்புடன் தன் வாளை உயர்த்திய இளவரசனின் சிரிப்பு வெகு விரைவில் மறைந்தது!

முகம் வேதனையில் துடித்தது.

விஷ்ணுகோபன் தோல்வியுற்றான்!

விஷ்ணுகோபன் மன்னரிடம் சென்று :

“தந்தையே… மயூரன் ஒரு ராஜத்துரோகி..அவனைத் தண்டிக்கவேண்டும்”.

மன்னன் சிவஸ்கந்தவர்மன் மகனது கூற்றை நம்பி, மயூரனுக்குத் தூக்குத் தண்டனை அறிவித்தான்.

செய்தி காட்டுத்தீப்போல காஞ்சியில் பரவியது…

நலம்விரும்பி நண்பர்களின் உதவியால் மயூரன் காஞ்சியிலிருந்து தப்பினான்.

ஸ்ரீ சைலம் காட்டில் அங்கிருந்த காட்டு மனிதர்களைக் கூட்டுசேர்த்து சிறு படைஉருவாக்கினான்.

அப்பொழுதுதான் ஒரு செய்தி வந்தடைந்தது… இடி போல வந்தது.. மன்னர்களது மடிகலங்கியது..

வடநாட்டின் பேரரசன் – குப்தர்களின் இரும்பு மனிதன்.. இந்திய நெப்போலியன்… சமுத்திரகுப்தன் தென்னிந்தியாவுக்குப் படையெடுத்துவருகிறான் என்ற சேதிதான் அது..
சமுத்திரகுப்தன் வருமுன்னர் அவனது வெற்றியும் வலிமையும் பீதியைக் (பேதியைக்) கிளப்பியது.

மன்னன் சிவஸ்கந்தவர்மன் நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் இருந்தான்.

ஆயினும் வீரத்தில் குறைந்தவனல்லன்.

மகன் விஷ்ணுகோபனை அழைத்தான். அவனும் பொறாமைக்காரனே ஒழிய – கோழை அல்ல.
மன்னன்:

“விஷ்ணுகோபா!  நமது பல்லவ ராஜ்யத்தை இப்பொழுதுதான் ஸ்தாபித்திருக்கிறோம்.. இது பல நூறாண்டு வளர்ந்து புகழ் பெறவேண்டும்.. சமுத்திரகுப்தனின் தீரத்தையும், வீரத்தையும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.. தனியாக நாம் அவனை வெல்லமுடியாது… அவமுக்தாவின் நீலராஜன், வேங்கியின் ஹஸ்திவர்மன் மற்றும் சாதவாகன ராஜ்யத்திற்குப் பின்னால் வந்த குறுநில மன்னர்கள்அனைவரையும் அழைத்து ஒரு கூட்டணி அமைப்போம்”

மயூரன் என்ன நடக்கிறது என்று பார்த்துக்கொண்டிருந்தான்.

சமுத்திரகுப்தன் படை வந்தது… புயலாக வந்தது…தென்னிந்திய மன்னர்கள் திறமையாகப் போராடினர்.

சமுத்திரத்தின் முன் எந்தக் கூட்டணி தாங்கும்..

குப்தன் காஞ்சியை வென்றான்.

சமுத்திரகுப்தன் தென்னிந்திய வீரத்தைக்கண்டு வியந்தான். இந்தப் பகுதியை நம் நாட்டில் சேர்த்துக்கொண்டால் பாடலிபுத்திரத்திலிருந்து இதை ஆள்வது எவ்வளவு கடினம் என்பதை உணர்ந்தான்.

காஞ்சியில் சிவஸ்கந்தவர்மனைச் சந்தித்தான். சிவஸ்கந்தவர்மன் தெற்கே இருக்கும் களப்பிரர்களைப்பற்றிக் கூறி  அவர்கள் சேர சோழ பாண்டிய அரசுகளை அடக்கிச் சக்தியோடு இருப்பதைக் கூறினான்.

சமுத்திரகுப்தன் அஞ்சாநெஞ்சன்… இருப்பினும்.. அவனும் ‘சரி… இந்த தென்னிந்தியப் பயணம் போதும்’  என்று முடிவுசெய்தான். சிவஸ்கந்தவர்மன்மீது பெரு மதிப்புக்கொண்டான்.

‘பல்லவரே! காஞ்சியை நீங்களே ஆளுங்கள்…’

பல்லவரின் செல்வங்களைமட்டும் எடுத்துக்கொண்டு சமுத்திரகுப்தன் மகதம் திரும்பினான்.

பல்லவர்கள் தோல்வியுற்றுத் தளர்ந்திருந்தனர்.

மயூரன் இதுதான் சமயம் என்று தனது படைகளைத் திரட்டி, காஞ்சிமீது படையெடுத்தான்.

சக்தி குறைந்த விஷ்ணுகோபனால் தாக்குப் பிடிக்கமுடியவில்லை.

மயூரன் காஞ்சி நகரில் தனக்குப் பெரும் அன்பு செலுத்திய மக்களைப் பார்த்தான்.

நெஞ்சு நெகிழ்ந்தது.

காஞ்சிக்கு ஓரழிவும் வாராமல்செய்து திரும்பினான்.

ஸ்ரீ சைலம் அருகில் கன்னட, ஆந்திரப் பகுதிகளைக் கைப்பற்றினான்.

பானவசியைத் தலைநகராகக்கொண்டு தனது கடம்ப அரசாட்சியைத் துவங்கினான்.

நாட்டின் பிராமண சமூகத்தின் வேண்டுகோளின்படி க்ஷத்ரியனாக மாறி…பெயரை மயூரவர்மன் என்று மாற்றிக்கொண்டான். அவன் துவங்கிய கடம்ப ராஜ்ஜியம் 200 ஆண்டுகள் ஆண்டது.

சரித்திரத்தில் மயூரவர்மன் ஒரு சிறிய நெல்மணி.

அது பொன்மணி!

அவனது கதையை சரித்திரம் பேசுகிறது..

வேறு கதைகள்?  விரைவில்…

ஆற்றோரக் கல்லறை ! – தில்லை வேந்தன்

ஆற்றோரக் கல்லறை !

 

Image result for கற்பகம் மன்னவனே அழலாமா

ஆற்றோரம், ஆற்றோரம் குளிரெ டுக்க
ஆராரோ,ஆராரோ பாட்டி சைக்கும்
காற்றேநீ, காற்றேநீ மெதுவாய்ப் பாடு,
கண்மணியை, கண்மணியை எழுப்பி டாதே.
தோற்றோட , தோற்றோடச் செய்யும் துன்பம்
தூக்கத்தில், தூக்கத்தில் விட்டுப் போனாள்.
நேற்றேநான், நேற்றேநான் போன போது
நெருஞ்சிப்பூ, நெருஞ்சிப்பூ விரியக் கண்டேன்.

நெருஞ்சிப்பூ, நெருஞ்சிப்பூ விரிந்த போது
நெஞ்சத்தாள் ,நெஞ்சத்தாள் சிரிக்கக் கண்டேன்.
கருஞ்சிறகு, கருஞ்சிறகுக் குயிலின் பாட்டில்
காதலியின், காதலியின் குரலைக் கேட்டேன்.
அருஞ்செக்கர், அருஞ்செக்கர் ஒளிரும் வானில்
அவள்சேலை, அவள்சேலை மிளிரக் கண்டேன்.
கருஞ்சிவப்பு கருஞ்சிவப்புக் கல்ல றையில்
காய்ந்தமலர், காய்ந்தமலர் ஆமோ காதல்?

காய்ந்தமலர், காய்ந்தமலர் ஆவ தற்கோ
காலமெலாம், காலமெலாம் காத லித்தோம் ?
சாய்ந்தமனம், சாய்ந்தமனம் ஓயும் மட்டும்
சருகாகி, சருகாகிக் காயும். மட்டும்,
வேய்ந்தவுடல், வேய்ந்தவுடல் சாயும் மட்டும்
வேரற்று, வேரற்று மாயும் மட்டும்,
ஓய்ந்திடுமோ,ஓய்ந்திடுமோ உண்மைக் காதல் ?
உயிர்பிரிந்தால்,உயிர்பிரிந்தால் சேர்வோம் மீண்டும்!

— தில்லைவேந்தன்

வாணி ராமமூர்த்தியின் அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்ரம்

ரஞ்சனி – காயத்ரி அவர்களின் பிரதம சிஷ்யை.  இசையில் இன்று சென்னையைக் கலக்கும் ஒரு இளம் புயல்.

அதுதான் வாணி ராமமூர்த்தி.

வாணி,   இன்னொரு கர்நாடக இசைப் புயல் அனன்யாவுடன்  இணைந்து வழங்கிய இசை ஆல்பம் வரிசையில் வந்திருப்பது ‘அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்ரம்’

என்ன இனிமை! என்ன இனிமை!

கேட்டு மகிழுங்கள்.

நோட்டுக்கு ஓட்டு…! — நித்யா சங்கர்

Related image

ஞாயிற்றுக்கிழமை. காலை எட்டுமணி.

வாசற்கதவு தட்டும் சத்தம் கேட்டது. உள்அறையில் பேப்பர் படித்துக்கொண்டிருந்த சிவஞானம் மெதுவாகச்சென்று கதவைத் திறந்தான்.

வாசலில் மூன்று காலேஜ் பையன்கள் நின்றிருந்தனர்.

ஸார்.. சிவஞானம் என்பது..” என்றான் ஒருவன் தன் கையில் வைத்திருந்த பேப்பரைப் பார்த்தபடியே.

ஆமாம்.. நான்தான் சிவஞானம்.. என்ன வேணும்..”

ஸார்.. நம்ம கிருஷ்ணபுரம் தொகுதியிலே இன்னும் ரெண்டுமாசத்திலே இடைத்தேர்தல் வருது.  நாங்க மாரி அண்ணன் கட்சிக்காரங்க..  அவர் இந்த எலக்ஷன்லே போட்டியிடறாரு..”  என்றான் இரண்டாவது வாலிபன்.

ஸார்.. உங்க வீட்டிலே மொத்தம் நாலு ஓட்டுக்கள் இருக்கு..நீங்க எங்க அன்பளிப்பைப் பெற்றுக்கொண்டு, எல்லோரும் நிச்சயமா மாரி அண்ணனுக்கு ஓட்டுப்போடணும்” என்றான் முதலாமவன்.

மூன்றாவது வாலிபன் தான் கொண்டுவந்த பையிலிருந்து நாலு கவர்களை எடுத்து சிவஞானத்திடம் கொடுத்தான்.

என்னப்பா இது..? எலகஷனுக்கு இன்னும் ரெண்டுமாசம் இருக்கேஅதுக்குள்ளே என்ன இதெல்லாம்..” என்றபடியே அந்தக் கவர்களை வாங்கிக்கொண்டான் சிவஞானம்.

நீங்க என்ன ஸார்.. பேப்பரே படிக்கிறதில்லையா..?  இப்பல்லாம் எலக்ஷன் அதிகாரிகள் கெடுபிடி ஜாஸ்தியாயிருக்கு..முன்னேயெல்லாம் எலக்ஷனுக்குப் பத்துப் பதினஞ்சுநாள் முன்னிருந்து கெடுபிடிபண்ண ஆரம்பிப்பாங்க.. இந்தத்தடவை  ஒரு மாதம் முன்பிருந்தே ஸ்ட்ரிக்டா மானிடர்பண்ண ஆரம்பிக்கப்போறாங்களாம்.. அதனாலேதான் நாங்க கொஞ்சம் முன்னாலேயே எங்க வேலையை ஆரம்பிச்சுட்டோம்.. மறந்துடாதீங்க ஸார்.. உங்க வீட்டு நாலு ஓட்டுக்களும் எங்க மாரிஅண்ணனுக்கு வந்துடணும்.. தாங்க் யூ ஸார்..” என்றபடியே அடுத்த வீட்டிற்கு நகர்ந்தார்கள்.

சிவஞானம் கதவைச் சாத்திவிட்டு உள்ளேவந்து கவர்களைப் பிரித்துப்பார்த்தான். ஒவ்வொரு கவரிலும் இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுக்கள் இருந்தன.

விட்ட இடத்திலிருந்து பேப்பரைப் படிக்கஆரம்பித்தான்.

காலை பத்துமணி. பேப்பரையெல்லாம் படித்து முடித்துவிட்டுக் குளிக்கலாம் என்று எழுந்தான்.

மீண்டும் வாசற்கதவு தட்டும் சத்தம்.

போய்க் கதவைத் திறந்தான். வயது முப்பதிலிருந்து நாற்பதுக்குள் இருக்கும்.  மூன்று இல்லத்தரசிகள் நின்றிருந்தனர்.

ஸார் நம்ம இடைத்தேர்தல்லே குருசரண் ஸார் போட்டியிடப்போறார்.  உங்களுக்கு அவரைப்பற்றி நன்றாகத் தெரியும்.
பெரிய சோஷியல் வர்கர். நம்ம ஜனங்களுக்காகக் குரல்கொடுப்பவர்.  உங்க வீட்டிலே உள்ள நாலு ஓட்டுக்களையும் அவருக்கே போடணும்.  எங்களுடைய சிறிய அன்பளிப்பு.. ” என்றாள் ஒரு இல்லத்தரசி.

இரண்டாமவள் தன் கையில் வைத்திருந்த லிஸ்டைப் பார்த்தபடியே நாலு கவர்களை எடுத்து நீட்டினாள்.

தாங்க் யூ ஸார்.” என்று அவர்கள் விடைபெற்றுச் சென்றபின் கதவைச் சாத்திவிட்டு உள்ளே வந்தான் சிவஞானம்.  கவரைப் பிரித்துப்பார்த்தான். ஒவ்வொரு கவரிலும் மூன்று ஐநூறு ரூபாய் நோட்டுக்கள் இருந்தன.

இன்னிக்கு என்ன..! லக்ஷ்மிதேவி கண்ணை நன்றாகத் திறந்துபார்த்து அருள்பாலிக்கிறாளா..! கவர் கவராக வரவு..ஒருவேளை மூன்றாவது வேட்பாளர் தொண்டர்களும் இன்னிக்கே வருவார்களோ..?

நண்பகல் பன்னிரண்டுமணி.

மீண்டும் வாசற்கதவு தட்டும் சத்தம். மீண்டும் தொண்டர்கள்.

ஸார்.. நாங்க சுந்தரம் ஐயாவுடைய கட்சித் தொண்டர்கள்உங்கள் வீட்டு நாலு ஓட்டுக்களையும் அவருக்கே போடவேண்டும். எங்களுடைய அன்பளிப்பு..” என்று நான்கு கவர்களைக் கொடுத்துவிட்டுச் சென்றனர்.

ஒவ்வொரு கவரிலும் நாலு ஐநூறு ரூபாய் நோட்டுக்கள் இருந்தன.

அவற்றைப்பார்த்து மெதுவாகச் சிரித்தபடியே, கைபேசியை எடுத்து சில நம்பர்களை அழுத்தினான் சிவஞானம்.

யாரு.. குமரன் ஸாரா.. நான் சிவஞானம் பேசறேன்.. நாம நெனச்சபடியே மூணு போட்டியாளர்களும் வந்து அன்பளிப்பு கொடுத்துட்டுப் போயிட்டாங்க.. நாம ப்ளான்பண்ணியபடியே ஆக்ஷன் இனீஷியேட்பண்ணிடலாம்னு தோணுது.  நம்ம
மெம்பர்ஸ் எல்லோருக்கும் சொல்லிடுங்க.. சாயந்திரம் ஐந்துமணிக்கு நம்ம யூஷ்வல் ப்ளேஸ்லே மீட்பண்ணி டிஸ்கஸ்பண்ணி ஆக்ஷன் எடுக்க ஆரம்பிச்சிடுவோம்..”

காலம் யாருக்காகவும் நிற்பதில்லை.  அதுபாட்டுக்கு உருண்டு ஓடுகிறது.  அடுத்து வந்த இரண்டு மாதங்களும், மீட்டிங் என்ன..ஊர்வலங்கள் என்ன.. விழாக்கோலம் பூண்டிருந்தது கிருஷ்ணாபுரம்.

தேர்தல் முடிந்து இதோ இன்றுதான் ஓட்டுக்களை எண்ணி முடிவைத் தெரிவிக்கும் நாள்.

நாட்டு மக்கள் எல்லோரும்,  குறிப்பாக கிருஷ்ணாபுரம் தொகுதி மக்கள், ஆர்வமாக டி.வி. திரையையே பார்த்துக்கொண்டிருந்தனர்.

டி.வி. செய்தி வாசிப்பாளர் ஒரு புன்னகையோடு திரையிலே தோன்றினார். அவர் சொல்லப்போகும் முடிவையே கண்இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தனர் தொகுதி மக்கள்.

நடந்து முடிந்த கிருஷ்ணாபுரம் தொகுதி எலக்ஷன் முடிவுகள் இதோ என் கையில்.  அதன்கூட சில ஆச்சரியமும், அதிசயமுமான சம்பவங்களும் இருக்கின்றன.  அந்தத்  தொகுதியில் போட்டியிட்ட  திரு.சுந்தரம் அவர்கள் இரண்டாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கிறார்.  இதில் ஆச்சரியமானஅதிசயமான விஷயம் என்னவென்றால், இந்தத் தொகுதியில்
அடங்கும் பத்தாம் வார்டு பகுதியில் நூறு பர்ஸன்ட் வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.  அவற்றில் செல்லாத ஓட்டுக்கள் ஒன்றுகூட இல்லை.. அந்த நூறு பர்ஸன்ட் ஓட்டுக்களில் ஒன்றுகூட ஒரு வேட்பாளருக்கும் கிடைக்கவில்லை.. அவையெல்லாம்நோட்டாவிற்குப் போடப்பட்டிருக்கின்றன.  இந்த ஆச்சரியமான, அதிசயமான விஷயத்தைப்பற்றி,  அதை நிறைவேற்றிக் காட்டிய காரணகர்த்தாக்களில் ஒருவரான சிவஞானம் என்பவரைப் பேட்டிகண்டுள்ளோம்..  அவரின் பேட்டி இதோ உங்களுக்காக..”  என்று செய்தி வாசிப்பாளர் திரையிலிருந்து மறைய, சிவஞானமும்,அவரைப் பேட்டிஎடுப்பவரும் திரையிலே தோன்றினார்கள்.

வணக்கம் மிஸ்டர் சிவஞானம்.. இது உண்மையிலேயே ஒரு சாதனை என்றுதான் சொல்லவேண்டும்..எப்படி உங்களுக்கு இப்படி ஒரு ஐடியா தோன்றியது..?’ என்றார் நிருபர்.

சிவஞானம் மெதுவாகச் சிரித்தபடியே, ” ஒவ்வொரு தேர்தல் வரும்போதும், போட்டியிடும் வேட்பாளர்கள்இதைச் செய்கிறேன்..அதைச் செய்கிறேன்‘.. என்று ஏகப்பட்ட வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்கள்.. ஆனால் தேர்தல் முடிந்து வெற்றிபெற்ற வேட்பாளரை அடுத்த ஐந்து வருடங்களுக்குஅவர் எங்கேஎன்று தேடவேண்டியிருக்கு. அவர்களது வாக்குறுதிகளெல்லாம் தண்ணீர்மீது எழுதப்பட்டவைதான்”

ஆமா.. அப்படி ஒரு கம்ப்ளெய்ன்ட் மக்கள் மத்தியிலே இருக்கத்தான் செய்கிறது..”

ஆனாஅது ஒரு கொந்தளிப்போடு, பேச்சோடு நின்றுவிடுகிறது. அதற்கு என்ன செய்யலாம்..?  என்ன செய்யவேண்டும்? என்று யாராவது யோசிக்கிறார்களா..?  இல்லை.. எங்களது வார்டில் உள்ள ரெஸிடென்ட்ஸ் வெல்·பேர் அஸோஷியேஷன் அதைப்பற்றி யோசித்தது.  ஸார் நமது நாடு குடியரசு நாடு..நமது ஓட்டு,  நம்மை ஆள்பவரைத் தேர்ந்தெடுக்கக் கொடுக்கப்பட்ட நமது உரிமை.. அது விற்பனைப் பொருளல்ல காசு கொடுத்து வாங்குவதற்கு. அதனாலே முதற்படியா காசுகொடுத்து ஓட்டுக் கேட்பவர்களுக்கு ஓட்டுப் போடுவதில்லை என்று முடிவுபண்ணினோம். ஐயா ஒவ்வொரு வேட்பாளரும் கொடுக்கும் காசு வறுமையில் வாடும் மக்களுக்கு எத்தனை நாட்களுக்கு வரும்பத்து நாளோ.. ஒரு மாதமோ வரும்.. அப்புறம்அந்தப் பணத்தை மக்களுக்கு  வேலை வாய்ப்புகள் செய்துகொடுப்பதற்கோ, அந்தப் பகுதியில் புகையும் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண்பதற்கோ பயன்படுத்தினால் எத்தனை நன்றாக இருக்கும்அது நிரந்தரமாகவும் இருக்குமேமக்களின் வாழ்க்கைத்தரமும் உயருமே..” என்று நிறுத்தினான் சிவஞானம்.

” ஆனா.. அவர்கள் கொடுத்த காசை வாங்க நீங்கமறுத்திருக்கலாம்.. நீங்களும் வாங்கிக்கொண்டீர்களே.. வாங்கிக்கொண்டு ஒரு வேட்பாளருக்கும் ஓட்டுப்போடாதது துரோகம் இல்லையா?”

நீங்க சொல்வது சரிதான்.. அதைப்பற்றியும் யோசித்தோம்.பல வார்டுகள்கொண்டது எங்கள் தொகுதி.. நாங்கள் இந்தத் தடவை ஆஸ் அன் எக்ஸ்பெரிமென்ட் ஒரே ஒரு வார்டிலேதான் இதைச் செய்திருக்கிறோம்.. மற்ற வார்டுகளில் மக்கள் ஓட்டுப்
போட்டிருப்பார்கள்.  வேட்பாளர்களில் ஒருவர் எப்படியும் ஜெயிப்பார்.. அதனாலே தேர்தல் செலவுகளால் அரசாங்கத்திற்கு இழப்பு ஏற்படாது..”

ஆனா.. வேட்பாளர்களிடமிருந்து பணம் வாங்கிக்கொண்டு அவர்கள் யாருக்குமே ஓட்டுப்போடாமல் இருந்தது துரோகம் இல்லையா..?”

ஏதேதோ வாக்குறுதிகள் கொடுத்து எங்களது வாக்குகளை வாங்கிக்கொண்டு ஒரு வாக்குறுதியையும் நிறைவேற்றாதது மக்களுக்குச் செய்யும் துரோகம் இல்லையா..?  ஓட்டுக்குக் கிடைத்த பணத்தைமட்டும் அல்ல.. இப்போதுதான் கட்சிகள், கூட்டங்களுக்கும் , ஊர்வலங்களுக்கும் வரும் மக்களுக்குத் தலைக்கு இவ்வளவு என்று பணம் கொடுக்கிறார்களேஎங்கள் வார்டிலே உள்ள மக்கள் யார் யாருக்கெல்லாம் முடிகிறதோ அவர்களும் அவற்றில் கலந்து கொண்டுவந்த பணத்தையும் சேர்த்து ஒரு அக்கவுண்டில் போட்டோம். அப்படிக் கிடைத்த பணம் அத்தனையையும் வார்டு மக்கள் நன்மைக்காகச் செலவுசெய்யத் தீர்மானித்தோம். அந்தப் பணத்தால் எங்களது வார்டிலுள்ள பல வருடங்களாகச் சீராக
இல்லாத ரோடுகளைச் செப்பனிட்டோம்.  கழிப்பறை இல்லாத வீடுகள் எல்லாவற்றிற்கும் கழிப்பறை கட்டிக்கொடுத்தோம். இப்போது எங்களது வார்டைப் போய்ப்பாருங்கள்.  ‘ஓபன் டெ·பகேஷன் ·ப்ரீயான வார்டாக மாறியிருப்பதை நீங்கள் பார்க்கலாம். இதை அரசாங்கம் செய்ய முற்பட்டிருந்தால் வருடக்கணக்காகி இருக்கும். நாங்கள் மக்கள் ஒத்துழைப்போடு ஒருமாசத்தில் செய்துமுடித்துட்டோம்.  இதுலே இன்னொரு ப்யூட்டி என்னன்னா, நார்மலா அரசாங்கத்துக்குப்பண்ணற கான்டிராக்டர்ஸ்தான் எங்களுக்கும் பண்ணிக்கொடுத்தார்கள்.  பட் இந்த ப்ராஜக்ட் காஸ்ட் அரசாங்க காஸ்ட்கூட கம்பேர் பண்ணினா பாதிகூட ஆகவில்லை.  ஆனா தரமான வேலை.. பல வருடங்களுக்குச் சீர்கெடாமல் அப்படியே இருக்கும்.”

அதெப்படி சாத்தியம்..? அப்படீன்னா அந்த கான்ட்ராக்டர்ஸ் அரசாங்கத்தை ஏமாத்தறாங்கன்னு அர்த்தமா..?”

அப்படிச் சொல்லமுடியாது.. அவர்கள் என்ன செய்வார்கள் பாவம்.  கான்ட்ராக்ட் கிடைப்பதற்கு எல்லோருக்கும் பணம் கொடுக்கவேண்டியிருக்கு.  நஷ்டத்திலே செய்யமுடியுமா..? அதைத் தரத்திலே காட்டிடறாங்க.”

அப்படீன்னா இதுக்கு என்னதான் செய்யறது….?”

இனி வரும் எலக்ஷன்லே வாக்காளர்கள் யாரும் ஓட்டுகளை விற்கக்கூடாது. ‘நோட்டுக்கு ஓட்டுஎன்று வருபவரை மக்கள் ஓரங்கட்டவேண்டும்.  இதனால் வேட்பாளர்களுக்குத் தேர்தல் செலவுகள் கணிசமாகக் குறைந்துவிடும். வேட்பாளர்கள் தங்கள் தொகுதி மக்களை அடிக்கடி சந்திக்கவேண்டும்.  இப்பொழுதுதான் வார்டுக்கு வார்டு  வெல்·பேர் அஸோஸியேஷன் இருக்கே. .அவர்களிடம் தொகுதியின் குறைகளைக் கேட்டறிந்துகொண்டுஅவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் என்ன செய்ய இருக்கிறார்கள் என்று விரிவாகத் தொகுதி மக்களுக்குச் சொல்லவேண்டும்.  மக்களும் எந்த வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டால் அதிகமாக நன்மைகள் கிடைக்கும் என்றும் ஆராய்ந்து அவரைத் தேர்ந்தெடுக்கலாம். வேட்பாளர்களுக்கோ ஓட்டுக்காகச் சல்லிக்காசு செலவு செய்யவேண்டாம்.  பதிலாக தொகுதியில் வேலைவாய்ப்பு பெருகவும், ஆலைகள் நிறுவவும் என்னவெல்லாம் செய்யலாம் என்று கலந்தாலோசித்து நடைமுறைக்குக் கொண்டுவரலாம்.  இவர்கள் தேர்தலுக்காகச் செய்யும் செலவுகள் கணிசமாகக் குறைந்துவிடுவதால் அதைச் சரிசெய்ய சம்பாதிக்கும் வழிகளைப்பற்றி யோசிக்கவேண்டிய அவசியமே இருக்காது.”

கேட்பதற்கு நன்றாக இருக்கிறது.. இது எல்லா இடத்திலும் சாத்தியமா…?” என்றார் நிருபர் சந்தேகத்துடன்.

நீங்கதான் அதை சாத்தியமாக்கி விட்டீர்களே..!  எங்கள் வார்டில் நடந்த இந்தப் புரட்சியை இப்போது நாடு முழுக்கக் கேட்டுக்கொண்டிருக்கும்.  நாமும் இதைப்போல் பண்ணினால் என்ன என்ற எண்ணம் இப்போது எல்லாத் தொகுதி மக்களுக்கும் கண்டிப்பாகத் தோன்றி இருக்கும்.  இந்தநோட்டாஇயக்கம்அடுத்த தேர்தல் வருவதற்குள் எல்லாத் தொகுதிகளிலும் பரவிவிடும்.  இனி வேட்பாளர்களுக்கு நோட்டுக்கொடுத்து ஓட்டு வாங்கலாம் என்ற தைரியம் வரக்கூடாது.  ‘எங்கே கிருஷ்ணாபுரம் தொகுதி பத்தாம் வார்டு மாதிரி ஆகி விடுமோ’ என்ற பயம் இருக்கவேண்டும்.  அதேபோல் நோட்டை வாங்கி ஓட்டுப்போடலாம் என்ற சபலம் மக்கள் மத்தியிலும் தோன்றக்கூடாது. அனாவசிய ஆடம்பரத் தேர்தல் செலவுகள் கணிசமாகக் குறையவேண்டும். சொந்தக் காசைப் போட்டு.த் தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களுக்குஅதை எப்படித் தங்கள் பதவிக் காலத்துக்குள் வட்டியுடன் மீட்டலாம் என்று எண்ணவேண்டிய அவசியமே இருக்காது.”

ஆமாம்.. இதை எப்படி இவ்வளவு ரகசியமாக வைத்திருந்தீர்கள்?”

அதற்கு எங்கள் வார்டு மக்களைத்தான் பாராட்டவேண்டும்.அதுமட்டுமல்ல.. அந்த வேட்பாளர்களுக்காக எங்கள் வார்டில் உள்ள பூத்தில் வேலைசெய்த ஏஜன்டுகளுக்கும் இதுதெரியும்.அவர்களும் இதை மிக ரகசியமாக வைத்திருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் என் நன்றிகள்.”

நீங்கள் ஒட்டுமொத்தமாக இப்படிச்செய்திருக்கிறீர்களே..பணம் கொடுத்த வேட்பாளர்கள் உங்கள்மீது கோபம்கொண்டால்..?”

நிச்சயமாக மாட்டார்கள்.  இந்த நிகழ்ச்சியை அவர்களும் பார்த்துக்கொண்டிருப்பார்கள்.  எங்கள் பக்க நியாயத்தை நன்றாகப் புரிந்துகொண்டிருப்பார்கள்அதுமட்டுமல்ல. நாங்கள் இப்படிக் கிடைத்த பணத்தைவைத்துச் செஞ்ச எல்லாக் கட்டுமானத்திலேயும்உபயம்திரு. சுந்தரம், திரு. குருசரண், திரு. மாரிஎன்று மறக்காமல் குறிப்பிட்டிருக்கோம்நன்றி.. வணக்கம்,,”

டி.வி. திரையிலிருந்து சிவஞானமும், நிருபரும் மறைந்தனர்.

 

ஹைகூ கவிதைகள் – காரை. இரா. மேகலா

Image result for ஹைகூ கவிதை

ஹைக்கூ கவிதைகள்……

மழைக்காலம்
நனைந்து கனக்கிறது
குடிசை இழந்த மனம்.

கோப்பை நிறைய தேனீர்
ஆறவில்லை
உன்னை காணாத மனம்.

பழச்சாறு கடை
பிழிந்து எடுத்தார்
வேலைக்கார சிறுவனை.

பாரதியும் பாரதிதாசனும்
அடைக்கப்பட்டே அறைகளில்
நூலகங்கள்.

வேலைக்கார அம்மாவிடம்
இல்லை நாணயம்
செலவு செய்ய.

விளையாட
ஆள் தேடும்
என் வீட்டு பொம்மைகள்.

 

குவிகம் பொக்கிஷம் – குளத்தங்கரை அரசமரம்- வா வே சு அய்யர்

 

Image result for குளத்தங்கரை அரசமரம்

குருகுலக் குழந்தைகளை, பள்ளிக்கு வெளியே சுற்றுலாவாக அழைத்துச் செல்வதை கல்வியின் ஒரு பாகமாக வைத்திருந்தார்கள். அப்படியான ஒரு பாபநாசம் யாத்திரையின்போது, பாபநாசம் பாணதீர்த்த அருவியிலிருந்து தண்ணீருக்குள் தவறி விழுந்த வ.வே.சு. ஐயரின் மகள் சுபத்ராவைக் காப்பாற்ற நீருக்குள் குதித்த ஐயர், சுழலில் சிக்கி காலமானார். 1925 ஜூன் 4-ம் நாள் அவர் மறைந்தார்

(இது  தான் தமிழில் வந்த முதல்  சிறுகதை எனபர் பலர்)                       

பார்க்கப்போனால் நான் மரந்தான். ஆனால் என்மனஸிலுள்ளதையெல்லாம் சொல்லுகிறதானால் இன்னைக்கெல்லாம் சொன்னாலும் தீராது. இந்த ஆயுஸுக்குள் கண்ணாலே எத்தனை கேட்டிருக்கிறேன் ! காதாலே எத்தனை கேட்டிருக்கிறேன். உங்கள் பாட்டிகளுக்குப் பாட்டிகள் தவுந்து விளையாடுவதை இந்தக் கண்ணாலே பார்த்திருக்கிறேன். சிரிக்கிறீர்கள். ஆனால் நான் சொல்லுகிறதிலே எள்ளளவேணும் பொய்யில்லை. நான் பழைய நாளத்தது மரம்- பொய் சொல்லக் கத்தவில்லை. இப்போ தொண்ணூறு நூ று வருஷமிருக்கும். உங்கள் கொள்ளு பாட்டிகளின் பாட்டிகளெல்லாம் நம்ம குளத்துங்கரைக்குத்தான் குடமுங் கையுமாக வருவார்கள். சில பேர் குழந்தைகளையுங் கூட கூட்டி வருவார்கள். பட்டு பட்டாயிருக்கும் குழந்தைகள். அதுகளை கரையில் விட்டுவிட்டுப் புடவைகளை அழுக்குப் போகத் தோய்த்து, மஞ்சள் பூசிக்கொண்டு அழகாக ஸ்நானம் பண்ணுவார்கள். குழந்தைகளெல்லாம் ராஜகோபாலன் போலத் தவுந்துகொண்டு மல்லிகைச் செடியண்டே போய் மல்லிகை மொக்குகளை பார்த்து சிரிக்கும். அந்தக் காலத்திலே ஒரு பவள மல்லிகைச் செடி, முத்து முத்தாய்ப் பூப் பூத்துக் கொண்டு அந்த ஓரத்திலிருந்தது.
l
குளத்தங்கரையெல்லாம் கம் என்று மணம் வீசும். இப்பொழுது ஆதரிப்பாரில்லாமல் பட்டுப்போய்விட்டது. கொஞ்சம் பெரிய குழந்தைகள் அதன்அதன் புஷ்பங்களை பொறுக்கி ஆசையுடன் மோந்து பார்க்கும்…ஆ! அந்த நாளையெல்லாம் நினைத்தால் ஆசையாயிருக்கிறது! ஆனால் இப்போது நான் உங்களுக்கு அந்தக் காலத்துக் கதை ஒன்றும் சொல்லுவதாக இல்லை. மனசு சந்தோஷமாயிருக்கும்போது சொல்லுகிறேன்.

ஏழெட்டு நாளாய் எனக்கு ருக்மிணியின் ஞாபகமாகவே இருக்கிறது. பதினஞ்சு வருஷமாச்சு. ஆனால் எனக்கு நேற்று போலிருக்கிறது. உங்களில் ஒருவருக்கும் ருக்மிணியைத் தெரியாது. பார்த்தால் சுவர்ண விக்கிரகம் போலிருப்பாள் குழந்தை. அவளுடைய சிரிச்ச முகத்தை நினைச்சால் அவளே எதிரில் வந்து நிற்பது போலிருக்கிறது எனக்கு. அவள் நெத்தியின் அழகை இன்னைக்கெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம். நல்ல உயரமாக இருப்பாள். அவள் கையும் காலும் தாமரைத் தண்டுகள் மாதிரி நீளமாயிருக்கும். அவள் சரீரமோ மல்லிகைப் புஷ்பம் போல் மிருதுவாக இருக்கும். ஆனால் அவள் அழகெல்லாம் கண்ணிலேதான். என்ன விசாலம்! என்ன தெளிவு! என்ன அறிவு! களங்கமற்ற நீல ஆகாசம் ஞாபகத்துக்கு வரும். அவள் கண்களை பார்த்ததும் நீலோற்பலம் நிறைஞ்ச நிர்மலமான நீரோடையைப் போலிருக்கும். பார்வையிலுந்தான் எத்தனை அன்பு! எத்தனை பரிவு!

ஸோமவார அமாவசைகளில் பரமாத்மாவைப் பூஷிக்கிறதற்காக என்னைப் பிரதஜிணம் செய்வாள். அப்போது அவள் என்னைப் பார்க்கும் பார்வையிலிருக்கும் அன்பை என்னவென்று சொல்லுவேன்! என்னுடைய காய்ந்துபோன கப்புகளுங்கூட அவளுடைய பிரேமையான பார்வை பட்டதும் துளிர்த்துவிடுமே!
ஐயோ, என் ருக்மிணித் தங்கமே! எப்போ காண்பேன் இனிமேல் உன்னைப் போலக் குழந்தைகள்? அவள் குழந்தைப் பருவம் முதல், அவளுடைய கடைசி நாள் வரையில், இங்கே வராத நாளே கிடையாது. அஞ்சாறு வயஸின் போதெல்லாம் ஸதா ஸர்வ காலமும் இங்கேயேதான் விளையாடிக்கொண்டிருப்பாள். அவளைப் பார்த்ததும் வாரியெடுத்து முத்தங் கொடுக்க வேணுமென்று நினையாதவர் இல்லை. எத்தனை அவசரமான காரியமிருந்தாலும் சரி, நம்ம வேணுகோபால் சாஸ்திரி இருந்தாரே, அவர் காலமே ஸ்நாநஞ் செய்துவிட்டு, குழந்தை கை நிறைய மல்லிகைப் பூப்பறித்துக் கொடுத்துவிட்டுத்தான் போவார். மாடு கன்றுகள் கூட, எத்தனை முரடாக இருந்தாலும் சரி, அவளைக்கண்டதும் உடனே முரட்டுத்தனத்தையெல்லாம் விட்டுவிட்டு, அவளுடைய சிறிய கைகளால் தடவிக் கொடுக்க வேணுமென்று அவள் பக்கத்திலேயே போய்க் காத்துக் கொண்டிருக்கும்.
குழந்தைகள் என்றால் எனக்கு எப்பொழுதுமே ஆசை. அனால் அவள் வந்துவிட்டால் போதும், மெய் மறந்து போய்விடுவேன். அவள் பேரில் துளி வெயில் படக்கூடாது. அவள் கொஞ்சம் ஒதுங்கியிருந்தால்கூட என் கைகளை நீட்டி அவளுக்கு குடை பிடிப்பேன். என்னுடைய நாதனான சூரியனுடைய முகத்தை காலமே ஆசை பயபக்தியோடு தரிசனம் செய்தானதும் எனக்குக் குழந்தை ருக்மிணியின் ஞாபகம் வந்துவிடும். அவள் வரவை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டேயிருப்பேன். அவள் வந்ததும் எனக்குள் அடங்காத ஆனந்தம் பிறந்துவிடும். குழந்தைகளுக்குள் பேதம் பாராட்டக்கூடாதுதான். ஆனால் மற்ற யார் வந்தாலும் எனக்கு அவள் வருகிறது போல் இருப்பதில்லை.
நான் மாத்திரமா? ஊரில் உள்ள மற்ற குழந்தைகள்கூட அவள் வந்த பிறகுதான் பூரணமான ஆனந்தத்துடன் விளையாடும். அவள்தான் அவர்களுக்குள்ளே ராணி. அத்தனை காந்த சக்தியிலிருந்து அவளிடத்தில்.

அப்போதெல்லாம் அவள் அப்பா காமேசுவரையர் நல்ல ஸ்திதியில் இருக்கிறார். குழந்தை பேரில் அவருக்கு மிகுந்த பிரேமை. அவளுக்குச் செய்வதற்கு என்றால் அவருக்கு சலிக்கிறதே இல்லை. கடை வீதியில் பட்டுத்தினுசுகள் புதுசாக வந்திருப்பது ஏதாவது பார்த்தால் நம்ம ருக்மிணி அணிந்துகொண்டால் அழகாக இருக்கும்’ என்று உடனே வாங்கி வந்துவிடுவார். முதல் தரமான வைரமும் சிவப்பும் இழைத்து அவளுக்கு நிறைய நகைகள் செய்திருந்தார். அவளுக்குப் பத்து வயசாயிருந்தபோது கோலாட்ட ஜோத்ரைக்கு என்று ஒரு பாவாடையும் தாவணியும் வாங்கியிருந்தார். அந்த நிலாவுக்கும் அவளுடைய அலங்காரத்திற்கும் அவளுடைய அழகுக்கும் என்ன ஏர்வை! கண்கொள்ளா காட்சியாயிருந்தது எனக்கு!

அவள் குரலைப்பற்றி உங்களுக்குச் சொல்ல மறந்து போய்விட்டேன். குயில் என்னத்துக்கு ஆச்சு! தங்கக் கம்பிபோல் இழையும் அவள் சாரீரம். இன்னைக்கெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தாலும் சலிக்காது. ஜோத்ராக்களின் போதுதான் அவள் பாட்டை நான் கேட்டிருக்கிறேன். இப்போது நினைச்சாலுங்கூட அவளுடைய குரல் அதே இனிமையுடன் நயத்துடன் என் மனசில் கேட்கிறது. அவளுக்கு வயசாக ஆக, அவளுடைய அன்பு வளர்ந்த அழகை என்ன என்று சொல்லுவேன்? குழந்தையாக இருக்கும்போதே யாரிடத்திலும் ஒட்டுதலாக இருப்பாள். இந்தக் குணம் நாளுக்கு நாள் விருத்தியாய்க் கொண்டே வந்தது. தோழிகள் வேறு, தான் வேறு என்கிற எண்ணமே அவளுக்கு இராது. ஏழை வீட்டுப் பெண்ணாயிருந்தாலும் சரி, பணக்காரர் வீட்டுப் பெண்ணாயிருந்தாலும் சரி, அவளுக்கு எல்லா தோழிகள் பேரிலும் ஒரே பயந்தான். இன்னும் பார்க்கப்போனால் ஏழைக் குழந்தைகள் பேரில் மற்றவர்கள் பேரில் விட அதிக பாசம் காட்டுவாள். பிச்சைக்காரர்கள் வந்தால் கை நிறைய அரிசி கொண்டு வந்து போடுவாள். கண் பொட்டையான பிச்சைக்காரர்களைப் பார்க்கும் போது அவளை அறியாமலேயே அவள் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் பெருகுவதை பார்த்திருக்கிறேன்! அவர்களுக்கு மற்றவர்களுக்குப் போடுவதை விட அதிகமாகவே போடுவாள். இப்படி அளவு கடந்த தயையும் இரக்கமும் அவளுக்கு இருந்ததனால்தான் அவளை நினைக்கும்போதெல்லாம் எனக்கு கடினமான கோடைக்குப் பிறகு நல்ல மழை பெய்யும்போது உண்டாகுமே, அந்த நிரதிசயமான ஆனந்தம் உண்டாகிறது.

இவ்விதம் கண்ணுக்குக் கண்ணாய் நான் பாவித்து வந்த என் அருமைக் குழந்தையின் கதி இப்படியா போகணும்! நான் பாவி வெச்ச ஆசை பழுதாய் போகனுமா! பிரும்ம தேவனுக்குக் கொஞ்சங்கூடக் கண்ணில்லாமல் போய்விட்டதே! ஆனால் பிரும்மதேவன் என்ன பண்ணுவான், மனுஷாள் செய்யும் அக்கிரமத்துக்கு?
ருக்மிணிக்கு பன்னிரண்டு வயசானதும் அவள் அப்பா அவளை நம்ம மணியம் ராமசுவாமி ஐயர் குமாரன் நாகராஜனுக்கு கன்னிகாதானமாகக் கொடுத்தார். கல்யாணம் வெகு விமரிசையாக நடந்தது. தோழிப் பொங்கலன்னிக்கும், ஊர்கோலத்தன்னிக்கும் அவள் வருவதைப் பார்த்தேன். கண்பட்டுவிடும், அத்தனை அழகாயிருந்தது. அவள் தோழிகளுக்கு மத்தியில் இருந்ததை பார்க்கும்போது, மின்னற் கொடிகளெல்லாம் சேவித்து நிற்க மின்னரசு ஜொலிக்குமே அந்த மாதிரியேதான் இருந்தது.
காமேசுவரையர் ருக்மிணிக்கு கல்யாணப் பந்தலில் நிறைய சீரும் செனத்தியும் செய்திருந்தார். ருக்மிணியின் மாமியாருக்கும் மாமனாருக்கும் ரொம்ப திருப்தியாயிருந்தது. கல்யாணத்துக்குப் பிறகு மாமியார் அவளை அடிக்கடி அழைச்சுக் கொண்டுபோய் அகத்திலேயே வைச்சுக் கொள்ளுவாள். ஆசையோடு அவளுக்கு தலை பிண்ணிப் பூச்சூட்டுவாள். தன் பந்துக்களைப் பார்க்கப் போகும்போது அவளை அழைச்சுக் கொண்டு போகாமல் போகவே மாட்டாள். இப்படி சகல விதமாகவும் ஜானகி (அதுதான் ருக்மிணி மாமியார் பேர்) தனக்கு ருக்மிணியின் பேரிலுள்ள அபிமானத்தை காட்டி வந்தாள்.

மாப்பிள்ளை நாகராஜனும் நல்ல புத்திசாலி. அவனும்ருக்மிணியின் பேரில் மிகவும் பிரியமாய் இருப்பான். கிராமத்தில்அவர்கள் இருவருந்தான் ரூபத்திலும் புத்தியிலும் செல்வத்திலும் சரியானஇணை என்று நினைக்காதவர், பேசிக்கொள்ளாதவர் கிடையாது. இப்படி என்று வருஷ காலம் சென்றது.
அந்த மூணு வருஷத்துக்குள் எத்தனை மாறுபாடுகள்!

காமேசுவரையருக்குக் கையிளைச்சு போய்விட்டது. ரொக்க வேஷியையெல்லாம், ஏதோ அருபத்து நாட்டுக் கம்பெனியாம், அதில் வட்டிக்குப் போட்டிருந்தார். நம்ம பணம் நாலுகோடி ரூபாயையும் முழுங்கிவிட்டு அது ஏப்பம் விட்டுவிடவே, காமேசுவரையர் ஒரு நாளில் ஸர்வ ஏழையாய்ப் போய்விட்டார். ருக்மிணியின் தாயார் மீனாட்சியம்மாள் உடம்பிலிருந்த நகைகள்தான் அவருக்கு மிச்சம். பூர்வீக சொத்தான வீட்டையும் நிலங்களையும் வித்துதான் அவர் கொடுக்க வேண்டிய கடன்களைதத் தீர்க்க வேண்டியதாயிருந்தது.

இப்போ குப்புசாமி ஐயர் இருக்காரே வாய்க் காங்கரையோரத்திலே, அந்த வீட்டில் வந்து அவர் குடியிருக்கலானார். மீனாட்சியும் பார்க்கிறதுக்கு மஹாலட்சுமி மாதிரி இருப்பாள். அவளுடைய சாந்தத்துக்கு எல்லையே இல்லை. எத்தனை பெரிய கஷ்டம் வந்துவிட்டதே, இருந்தாலும் அவள் மனம் கொஞ்சமேனும் இடியவில்லை. ஏதோ இத்தனை நாள் சுகமாக வாழ்ந்தோம். யாரைக் கேட்டுக் கொண்டு ஸ்வாமி கொடுத்தார்! அவர் கொடுத்ததை அவரே எடுத்துக்கொண்டு விட்டார். இதனாலே என்ன இப்போ? அவாளும் ருக்மிணியும் ஆயுஸோடு இருக்கிறவரையில் எனக்கு குறைச்சலுமில்லை. இந்த தை மாஸத்திலே ருக்மிணிக்கு சாந்தி முகூர்த்தம் பண்ணிப் புக்காத்துக்கு அனுப்பிவிட்டால் அப்புறம் எங்களுக்கு நிர்விசாரம். கஞ்சியோ கூழோ சாப்பிட்டுக்கொண்டு வழக்கம் போல் பகவத்தியானம் பண்ணிக்கொண்டே எங்கள் காலத்தைக் கழித்து விடுகிறோம்” என்று சொல்லுவாள்.

ஐயோ பாவம், நடக்கப் போகிற சங்கதியை அவள் எப்படி அறிஞ்சிருப்பாள்?

காமேசுவரையர் ஐவேஷியில் கொஞ்சமேனும் தேறாது என்று ஏற்பட்டதும் ராமசுவாமி ஐயருக்கு அவருடனிருந்த சிநேகம் குளிர் ஆரம்பித்துவிட்டது. இதற்கு முன்னெல்லாம் அவர் காமேசுவரையர் அகத்துக்கு அடிக்கடி வருவார். வழியில் அவரைக்கண்டால் பத்து நிமிஷம்பேசாமல் போகவே மாட்டார். இப்பொழுதோ காமேசுவரையர் தூர வருகிறதை கண்டுவிட்டால், ஏதோ, அவசர காரியமாகப் போகிறதுபோல இன்னொரு பக்கம் திரும்பி வேகமாக போய்விடுவார். இப்படி செய்பவர், அவர் வீட்டுக்கு வருவதை நிறுத்திவிட்டார் என்று நான் சொல்லாமலேநீங்கள் நினைத்துக்கொண்டுவிடுவீர்கள். அவர் சம்சாரம் ஜானகியும் அதே மாதிரி மீனாட்சியம்மாளிடம் நெறுங்குவதை நிறுத்திவிட்டாள் ஆனால் இதையெல்லாம் மீனாட்சியம்மாளும் காமேசுவரையரும் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. செல்வமுள்ளபோது உறவு கொண்டாடுகிறது; அது போய்விட்டபோது வேத்து மனுஷாள்போல போய்விடுகிறது- இதெல்லாம் ஒரு சிநேகிதத்தோடு சேர்த்தியா? ஆனால்அவர்கள் ருக்மிணி விஷயத்திலுங்கூட வேத்துமை பாராட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.
அறுபத்துநாட்டு உடைகிறதற்கு முந்தி சில மாதங்களாக ஜானகி பிரதி வெள்ளிக்கிழமையும் சாப்பிட்டானதும், ருக்மிணியை அழைத்துக்கொண்டுவரும்படி வேலைக்காரியை அனுப்பிவிடுவாள். அன்னைக்கு, அவளுக்குத் தலைப்பின்னி, மை சாந்திட்டு, சிங்காரிச்சு, அகிலாண்டேசுவரி கோவிலுக்கு கூட்டிக்கொண்டு போய்த் தரிசனம் பண்ணிவிட்டு, அன்னைக்கு ராத்திரி முழுவதும் தங்கள் அகத்திலேயே வைத்துக்கொண்டிருந்து அடுத்தநாள் காலமேதான் அவளை அகத்துக்கு அனுப்புவாள்.

ஆனால், அறுபத்துநாட்டில் போனது போனதுதான் என்று ஏற்பட்டுவிட்டபிறகு வந்து முதல் வெள்ளிக்கிழமையன்னைக்கே, எனக்கு ஆத்தில் இன்னைக்கு ரொம்ப வேலையாக இருக்கும்’ என்பாள். அடுத்த வெள்ளிக்கிழமை முதல் அவ்விதம் சொல்லியனுப்புவதைக்கூட நிறுத்திவிட்டாள். இது மீனாட்சிக்கும் காமேசுவரையருக்கும் மிகுந்த துக்கத்தை தந்தது. ருக்மிணியும், நம்மை இவ்வளவு இளக்காரம் செய்கிறாள் பார்த்தாயா! நம்ப மாமியார் கூட, என்று மிகவும் வருத்தப்பட்டாள். இப்படி கொஞ்ச நாளாச்சு. ஊரெல்லாம் குசு குசு’என்று பேசிக்கொண்டிருப்பார்கள். எல்லா ரகசியங்களும் குளத்தங்கரையிலேதான். அரைவார்த்தையும் குறை வார்த்தையுமாகத்தான் என் காதில் விழுமேயோழிய முட்ட முழுக்க ஒரு பேச்சும் எனக்கு எட்டாது. ஊரிலே இப்படி எப்போதும் இருந்ததில்லை.எனக்கு மனசு குறுகுறுத்துக் கொண்டேயிருந்தது. ஏதோ கெடுதலுக்குத்தான் இத்தனை ரகசியம் வந்திருக்கிறது என்று எனக்கு அப்பொழுதே தோன்றிவிட்டது. ஆனால் யாருக்கு என்று மாத்திரம் தெரியவில்லை. கடைசியாக அப்படியும் இப்படியுமாய், அத்தையும் இத்தையும் கூட்டிச் சேர்த்துப் பார்க்கப் பார்க்க, கொஞ்சங் கொஞ்சமாய் சமாசாரம் என் மனசுக்கு அத்துபடியாச்சு.

ராமசாமி ஐயரும் ஜானகியும் ருக்மிணியை வாழாதே பண்ணிவிட்டு நாகராஜனுக்கு வேறு கல்யாணம் செய்து வைக்க நிச்சயித்து விட்டார்கள்!

என்ன பண்ணுவேன்! என் மனசு இடிஞ்சி போய்விட்டது. குழந்தை ருக்மமிணியைத் தள்ளி வைக்கத் துணியுமா மனுஷாளுக்கு? அடிப்பாவி! உன்னைப் போலே அதுவும் ஒரு பெண்ணில்லையா! என்ன பண்ணித்து அது உன்னை! அதை கண்ணாலே பார்த்தால் கல்லும் இரங்குமே! கல்லையும்விட அழுத்தமா உன் நெஞ்சு! காமேசுவரையருக்கும் மீனாட்சிக்கும் முகத்தில் ஈ ஆடாது. எனக்கே இப்படி இருந்தபோது, பெத்த தாயார் தகப்பனாருக்கு கேட்கனுமா? இனிமேல் நாகராஜனைப்பற்றி ஏதாவது நம்பிக்கை வைத்தால்தான் உண்டு! அவன் பட்டணத்தில் படித்துக்கொண்டிருந்தான். மார்கழி பிறந்துவிட்டது. அவன் வருகிற நாளை எண்ணிக்கொண்டே இருந்தேன். கடைசியாக வந்து சேர்ந்தான். வந்த அன்னைக்குக் காலமே அவன் முகத்தில் சிரிப்பும் விளையாட்டுமாக இருந்தது. சந்தோஷம் மாறி வேறாகிவிட்டது. தாயார் தகப்பனார் அவன் மனத்தைக் கலைக்க ஆரம்பித்துவிட்டார்கள். நாளுக்கு நாள் முகத்தில் கலக்கம் 
அதிகரித்துக்கொண்டே வந்தது. கரைப்பார் கரைச்சால் கல்லுங்கரையும் என்பார்கள். அவன் கலங்கின முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு வயித்திலே பகீர் என்னும். இனிமேல் ஏது? இந்த ஆசை இருந்தது. அதுவும் போய்விட்டது. ருக்மிணியின் கெதி அதோகெதிதான் என்று நினைத்துவிட்டேன்.

தை பிறந்தது. வெளிப்படையாகப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். ஏதோ கிழக்கத்தி பெண்ணாம். தகப்பனாருக்கு நாலு லட்ச ரூபாய்க்கு பூஸ்திதியாம். பிள்ளை கிடையாதாம். இந்த பெண்ணைத் தவிர காலக்கிரமத்தில் இன்னும் ஒரே ஒரு பெண்தானாம். ராமசாமி ஐயர் குடும்பத்துக்கு இரண்டு லட்ச ரூபாய் சொத்து சேர்ந்து விடுமாம். இதெல்லாம் எனக்கு கர்ணகடூரமாக இருக்கும். ஆனால் என்ன செய்கிறது? தலைவிதியே என்று கேட்டுக்கொண்டிருப்பேன்.

இந்தப் பேச்சுப் புறப்பட்டது முதல், மீனாட்சி பகலில் வெளியிலேயே வருவதில்லை. சூரியோதையத்துக்கு முன்னேயே குளத்துக்கு வந்து ஸ்நாநம் செய்துவிட்டு தீர்த்தம் எடுத்துக்கொண்டு போய்விடுவாள். அவள் முகத்தைப் பார்த்தால் கண்ட்ராவியாயிருக்கும். சரியான தூக்கமேது? சாப்பாடேது? ஓஹோவென்று வாழ்ந்துவிட்டு, இந்த கதிக்கு ஆளானோமே என்கிற ஏக்கம் அவள் அழகை அழித்துவிட்டது. வீடு வாசல் போய்விட்டதே என்றாவது , நகை நட்டெல்லாம் போய், வெறும் உரிசல் தாலியை மாத்திரம் கட்டிக்கொண்டிருக்கும்படியாகிவிட்டதே என்றாவது அவள் வருத்தப்படவில்லை. கிளிபோல் குழந்தை அகத்திலிருக்க , ஜானகி அதன் பேரில் கொஞ்சம் கூட இரக்கம் வைக்காமல் கண்ணுக்கெதிராகவே பிள்ளைக்கு வேறு விவாகம் பண்ணிவைக்க நினைத்துவிட்டாள் பார்த்தயா என்னும் ஏக்கந்தான் அவளுக்கு இரவு பகலெல்லாம். அவள் முகத்தைப் பார்த்தால் ஜானகிக்குக் கூட மனசு உருகிப் போய்விடும். ஆனால் ராணி, அவளெங்கே பார்ப்பாள்! அப்போதெல்லாம் ருக்மிணி எப்படி இருந்தாளோ, என்ன நினைத்தாளோ, எனக்கொண்ணுந்தெரியாது. அறியாக்குழந்தை அது என்ன நினைத்திருக்குமோ! ஒரு வேளை, மாமியார் நம்மை கட்டோடே கெடுத்துவிடமாட்டாள் என்று நினைத்தாளோ? அல்லது மாமியார் என்னநினைத்தாலும், நாகராஜன் சம்மதிக்கமாட்டான் என்று நினைத்தாளோ?


இன்னும் முட்ட முழுக்க ஐந்து வருஷமாகவில்லையே அவர்களிருவரும் ஜோடியாய் நம்ம குளக்கரையில் விளையாடி! கல்யாணமான பிறகுங் கூட ஒருவருக்குந் தெரியாமல் எத்தனை தடவை பார்த்துப் பழைய நாள் போலவே அன்பும் ஆதரவுமாக நாகராஜன் அவளோடு பேசியிருக்கிறான்!அவன் கைவிடமாட்டான் என்றேதான் ருக்மிணி நினைத்திருப்பாள். ஆனால் நாளாக ஆக நாகராஜனுடைய கல்யாணப் பேச்சு முத்திக்கொண்டே வந்தது. நாகராஜனுடைய மனதில் மாத்திரம் இன்னது இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. பட்டணத்திலிருந்து வந்த அன்று, மாமனாரையும் மாமியாரையும் நமஸ்காரம் செய்வதற்காக அகத்துக்கு வந்தானே அவ்வளவுதான். பிறகு ருக்மிணியை அவன் ஸ்மரித்தான் என்பதற்கு எள்ளளவுகூட அடையாளமில்லை. ஆனால் முகத்தை விட்டு முதனாள் போன உல்லாஸக்குறி மறுபடியும் திரும்பி வரவேயில்லை. யாருடனும் பேசாமல் எப்பொழுதும் சுளித்த முகமாகவேயிருப்பான்.

கடைசியாக, நாள் வைத்தாகிவிட்டது. பெண் அகத்துக்காரர் வந்து லக்கினப் பத்திரிக்கையையும் வாசித்துவிட்டுபோய்விட்டார்கள், ஐயோ! அன்னைக்கு மேளச் சத்தத்தைக் கேட்க என் பஞ்சப் பிராணனும் துடித்தது. காமேஸ்வரையருக்கு எப்படியிருந்திருக்குமோ? மீனாட்சி மனசு எப்படி துடித்ததோ? ருக்மிணி எப்படி சகித்தாளோ? எல்லாம் ஈசுவரனுக்குதான் தெரியும். நாகராஜனுக்குக்கூடத் துளி இரக்கம் பச்சாத்தாபமில்லாமற் போய்விட்டது பார்த்தாயா என்று நான் அழாத நாள் கிடையாது. சில வேளைகளில், இப்படியெல்லாம் பண்ணினால் இவன் மாத்திரம் நன்றாக இருப்பானோ என்று கூடச் சொல்லிவிடுவேன்….

இப்படி என் மனசு தளும்பி தத்தளித்துக் கொண்டிருக்கிறபோது, ஒரு நாள் வயித்திலே பால் வார்த்தார்போல ஒரு சங்கதி என் காதில் விழுந்தது. நாகராஜனோடு கூட படித்துக்கொண்டிந்தவனாம் ஸ்ரீநிவாசன் என்ற ஒரு பையன். அவன் நாகராஜனை பார்க்கறதற்கென்று வந்தான். அவர்களுக்கெல்லாம் ரகசியமாகப் பேச இடம் வேறெங்கே ? நம்ம குளத்தங்கரைதானே? ஒரு நாள் சாயங்காலம் ஏழெட்டு மணிக்கு எல்லோரும் போய்விட்ட பிறகு இவர்கள் இரண்டு பேரும் இங்கே வந்தார்கள்.
ஸ்ரீநிவாசன் ரொம்ப நல்லவன். அவன் ஊர் ஐம்பது அறுபது கல்லுக்கந்தண்டை இருக்கிறது. நாகராஜன், பெண்ணிருக்க, பெண் கல்யாணம் பண்ணிக்கொள்ள போகிறான் என்று யாரோ அவனுக்கு எழுதிவிட்டார்களாக்கும். உடனே தபால் வண்டி மாதிரி ஓடிவந்துவிட்டான். குளத்தங்கரைக்கு வந்ததும், தான் கேள்விப்பட்டதைச் சொல்லி அதெல்லாம் வாஷ்தவந்தானா என்று அவன் நாகராஜனைக் கேட்டான். நாகராஜனும், அம்மாவும் அப்பாவும் சேர்ந்து நிச்சயம் செய்துவிட்டபோது நான் மாட்டேன் என்று சொன்னால் தான் தீரப்போகிறதா? தவிர, பெண்ணும் லட்சணமாக இருக்கிறதாம். அவள் தகப்பனார் லட்ச ரூபாய் ஆஸ்தி அவள் பேருக்கு எழுதி இருக்கிறாராம். அவருக்குப் பிற்காலத்தில் இன்னொரு லட்ச ரூபாய் சொத்து சேருமாம். இப்படி, தானே வருகிற ஸ்ரீதேவியை எதற்கு வேண்டாமென்று சொல்லுகிறது?” என்று சொன்னான்.

இந்த வார்த்தையெல்லாம் சொல்லும் போது ஸ்ரீநிவாசன் முகம் போன போக்கை என்ன என்று சொல்வது? நாகராஜன் நிறுத்தினதும் அரைமணி தேசகாலம் ஸ்ரீநிவாசன் அவனுக்கு எத்தனை லட்சந்தான் வரட்டுமே, ஒரு பெண் பாவத்தைக் கட்டிக் கொள்ளலாமா? கல்யாணப் பந்தலில் மந்திர ரூபமாகச் செய்த பிரமாணத்தையெல்லாம் அழித்துவிடலாமா?” என்று நானாவிதமாய்த் தர்மத்தையும் நியாயத்தையும் எடுத்துச் சொல்லி, கல்லுங்கரையும் படியாக ருக்மிணிக்காக பரிஞ்சு பேசினான். அவன் நன்றாக இருக்க வேணும், க்ஷேமமாக இருக்கவேணும், ஒரு குறைவுமில்லாமல் வாழ வேணும் என்று நிமிஷத்துக்கு நிமிஷம் நான் வாழ்த்திக்கொண்டே இருந்தேன்.
ஆனால் அவன் பேசினதும் நாகராஜன் அவனைப் பார்த்து , ஸ்ரீநிவாசா, உன்னிடம் இதுவரை சொன்னதெல்லாம் விளையாட்டாக்கும். நான் காசுக்காக இவ்வளவு அற்பமாக போய்விடுவேன் என்று நினைக்கிறாயா? நான் யாருக்கும் தெரியாமல் வைத்துக்கொண்டிருக்க வேணும் என்றிருந்தேன். ஆனால் எப்போ இவ்வளவு தூரம் பேசிவிட்டோமோ, இனிமேல் உனக்குதெரியாமல் வைக்கிறதில் காரியமில்லை, என்று நினைத்துவிட்டேன். ஆனால் ஒன்று மாத்திரம்; இதை நீ யாருக்கும் சொல்லக்கூடாது. இவர்களெல்லாம் ஆரியத் தன்மையை விட்டு மிலேச்சத்தனமாய் நடக்க உத்தேசித்திருக்கிறபடியால், இவர்களை நன்றாக அவமானம் செய்துவிட வேண்டியது என்று நிச்சயித்துவிட்டேன். நான்எத்தனை மறுத்தும் அம்மாவும் அப்பாவும் ஒரே பிடிவாதமாக இருக்கிறார்கள். ஆகையால் மன்னார் கோவிலுக்கே போகிறேன். அங்கே போயும் மாட்டேனென்றே சொல்லுவேன். ஆனால் கட்டாயப்படுத்தத்தான் போகிறார்கள். முகூர்த்தப் பந்தலிலும் உட்காருவேன். ஆனால் என்ன இருந்தாலும் திருமாங்கல்யத்தில் நான்தானே முடிச்சு போடவேணும்? வேறு ஒருவரும் போட முடியாதே. அந்தச் சமயத்தில் கண்டிப்பாக மாட்டேனென்று சொல்லிவிடப் போகிறேன். எல்லோரும் இஞ்சித்தின்ற குரங்கு போலே விழிக்கட்டும். ருக்மிணியைத் தொட்ட கையினாலே இன்னொரு பெண்ணையும் நான் தொடுவேன் என்றிருக்கிறாயா?” என்று சொல்லி முடித்தான்

. ஆனால் நீ விவாகத்துக்கென்று போகுங்காலத்தில், ருக்மிணி, அவள் அப்பா அம்மா மனதெல்லாம் எப்படியிருக்கும் என்று யோசித்துப் பார்த்தாயா?” என்று ஸ்ரீநிவாசன் கேட்டான். அதற்கு நாகராஜன், யோசித்தேன்; ஆனால் எல்லாம் போய்விட்டதென்று அவர்கள் நிராசையாய்த் தவித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் , திடீரென நான் ஓடிவந்து மாமியார் மாமனாரை வணங்கி, துயரப்படாதீர்கள்! என் ருக்மிணியை நான் ஒரு நாளும் கைவிடமாட்டேன்! பணத்தாசை பிடித்தவர்களையெல்லாம் மணப்பந்தலில் மானபங்கம் செய்துவிட்டு இங்கே வந்துவிட்டேன்’ என்று நான் சொல்லுங்காலத்தில் அவர்களுக்கு எத்தனை ஆனந்தமாக இருக்கும்! அதைப்பார்த்து அனுபவிக்க விரும்புகிறேன்” என்றான்.
அந்த நாள் வரையில் அவர்கள் மனசு எப்படி அடித்துக்கொண்டிருக்கும்? நினைத்துப்பார்” என்றான் ஸ்ரீநிவாசன். அதற்கு நாகராஜன், இன்னும் ஐந்து நாளில்லை; இன்று வெள்ளிக் கிழமை. ஞாயிற்று கிழமை இவ்விடமிருந்து எல்லோரும் புறப்படப்போகிறோம். அடுத்த நாள் முகூர்த்தம் அன்றைக்கே புறப்பட்டு அடுத்தநாள் காலையில் இங்கே திரும்பிவிடுவேன். இத்தனை நாள் பொறுக்க மாட்டார்களா? என்றான்.

என்னவோ அப்பா, எனக்கு இது சரியில்லை என்று தோன்றுகிறது” என்று ஸ்ரீநிவாசன் பேசிக் கொண்டிருக்கும் போதே இருவரும் நகர ஆரம்பித்துவிட்டார்கள்.
எனக்கு மேலே ஒன்றும் கேட்கவில்லை. அன்னைக்கு ராத்திரியெல்லாம் எனக்கு தூக்கமே வரவில்லை. பார்த்தாயா, நாகராஜனை வையக்கூட வைதேனே பாவி, அவனைப்போல ஸத்புத்திரன் உண்டா உலகத்திலே’ என்று சொல்லிக் கொண்டேன். இனிமேல் பயமில்லை; அஞ்சு நாளென்ன, பத்து நாளென்ன? நாகராஜன் பிடிவாதக்காரன்; சொன்னபடியே செய்துவிடுவான். ருக்மிணிக்கு இனிமேல் ஒரு குறைச்சலுமில்லை’ என்று பூரித்துப் போய்விட்டேன்.

ஞாயிற்றுக் கிழமை; இவர்களெல்லாம் மன்னார் கோவிலுக்குப் புறப்படுகிறார்களென்று ஊரெல்லாம் அல்லோல கல்லோலப் பட்டது. ராமஸ்வாமி ஐயரையும் ஜானகியையும் வையாதவர்கள் கிடையாது ஆனால் அவர்களை கூப்பிட்டு நல்ல புத்தி சொல்வதற்கு மாத்திரம் ஒருவரும் இல்லை. அப்படியே யாரேனும் சொன்னாலும் அவர்கள் கட்டுப்படுபவர்களும் இல்லை. அவர்கள் புறப்படுகிற அன்னைக்கு ஊரிலிருந்து கண்ணாலே பார்த்தால் இன்னுங்கொஞ்சம் வயித்தெரிச்சல்தான் அதிகமாகுமென்று நினைத்து, காமேசுவரையரும் மீனாட்சியும் சனிக்கிழமை மத்தியானமே புறப்பட்டு மணப்பாறைக்குப் போய்விட்டார்கள். அகத்தில் ருக்மிணிக்கு அவள் அத்தை சுப்புலட்சுமி அம்மாள்தான் துணை.

சனிக்கிழமை ராத்திரியாச்சு. ஊரடங்க ஆரம்பித்துவிட்டது. ஒன்பது ஒன்பதரை மணி இருக்கும். நாகராஜன் தனியாக குளத்தங்கரைக்கு வந்தான். வந்து வேப்பமரத்தடியில் உட்கார்ந்துகொண்டு ஏதோ யோசித்துக் கொண்டிருந்தான். சில நாழிக்கெல்லாம் தூரத்தில் ஒரு பெண் உருவம் தென்பட்டது. அது குளத்தங் கரைப்பக்கம் வந்து கொண்டிருந்தது. ஆனால் அடிக்கொருதடவை பின் பக்கம் திரும்பி பார்த்துக்கொண்டே வந்தது. கடைசியாக நாகராஜன் உட்கார்ந்து கொண்டிருந்த இடத்தில் வந்து நிற்கும்போதுதான் அது ருக்மிணி என்று நான் அறிந்து கொண்டேன். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. ஆனால் உடனே தெளிஞ்சுக் கொண்டு என்ன நடக்கிறது பார்க்கலாம் என்று கண்ணைத் துடைத்துக்கொண்டு உன்னிப்பாய் கவனிக்கலானேன். ஐந்து நிமிஷம் வரையில் நாகராஜன் கவனிக்கவேயில்லை. ஆழ்ந்த யோசனையில் இருந்தான். ருக்மிணி அசைவற்று அப்படியே நின்று கொண்டிருந்தாள். எதேச்சையாய் நாகராஜன் தலையை தூக்கினான். ருக்மிணியைப் பார்த்தான். பார்த்ததும் அவனும் திடுக்கிட்டுப் போய்விட்டான்.

ஆனால் உடனே நிதானித்துக்கொண்டு, ருக்மிணி, இத்தனை நாழிகைக்கு மேலே தனியாக இங்கே வரலாமா நீ?” என்று கேட்டான்.

நீங்கள் இருக்கிற இடத்தில் தனியாக நான் இருக்க வேண்டிய நாள் வரவில்லையே ” என்று பதில் சொல்லிவிட்டு ருக்மிணி நின்றாள்.

இரண்டு ன்று நிமிஷத்துக்கு ஒரு வரும் வாய்திறக்கவில்லை. இரண்டு பேர் மனதும் குழம்பிக் கொண்டிருந்தது. ஆனால் எப்படி ஆரம்பிக்கிறது, என்ன பேசுகிறது என்று அவர்களுக்கு ஒன்றுந்தெரியவில்லை. கடைசியில் நாகராஜன், இந்த வேளையில் நாம் இங்கே இருப்பது தெரிந்தால் ஊரில் ஏதாவது சொல்லுவார்கள்; வா, அகத்துக்கு போய்விடலாம் என்றான்.

அதற்கு ருக்மிணி, உங்களிடத்தில் சில வார்த்தைகள் சொல்ல உத்தரவு கொடுக்க வேணும்” என்றாள். சொல்லேன்” என்று நாகராஜன் சொல்ல, ருக்மிணி பேசலானாள்: எனக்கு உங்களிடத்தில் என்ன சொல்லுகிறது என்று தெரியவில்லை. இந்த மூணு மாசமாய் மனசு படுகிறபாடு அந்த அகிலாண்டேசுவரிக்குத்தான் தெரியுமே யொழிய மனுஷாளுக்கு தெரியது நீங்கள் பட்டணத்திலேயிருந்து வந்தவுடன் என் கலக்கமெல்லாம் போய்விடும் என்றிருந்தேன். மாமாவும் மாமியும் என்ன செய்தாலும் நீங்கள் என்னைக் கை விடமாட்டீர்கள் என்று நம்பியிருந்தேன். ஆனால் நீங்களும் என்னைக் கைவிட்டுவிட்டால் அப்புறம் எதை நம்பிக்கொண்டு நான் வாழ்வேன்? வேலியே பயிரைஅழித்துவிட ஆரம்பித்தால், பயிரின் கதி என்னவாகும்? இது வரையில் நடந்ததெல்லாம் என் மனசை உடைத்துவிட்டது . நீங்கள் அதைச் சேர்த்து வைத்தால்தான் உண்டு, இல்லையானால் என் ஆயுசு இவ்வளவுதான்; அதில் சந்தேகமில்லை.” இந்த வார்த்தையைப் பேசும்போது ருக்மிணியின் கண்களில் ஜலம் வந்துவிட்டது. அத்தோடு நின்றுவிட்டாள். நாகராஜன் பேசவில்லை. ருக்மிணியும் சில நாழி வரைக்கும் பார்த்துவிட்டு, நாளைக்குப் பயணம் வைத்திருக்காப் போலிருக்கிறதே; நீங்கள் போகத்தானே போகிறீர்கள்?” என்று கேட்டாள். கொஞ்ச நாழி யோசித்துவிட்டு நாகராஜன், ஆமாம், போகலாம் என்றுதான் இருக்கிறேன்” என்றான். அப்படி அவன் சொன்னதும் ருக்மிணிக்கு நெஞ்சை அடைத்துக்கொண்டு துக்கம் வந்துவிட்டது. உடம்பு கிடு கிடு என்று நடுங்கியது. கண்ணில் ஜலம் தளும்பிவிட்டது. ஆனால் பல்லைக் கடித்துக்கொண்டு அதையெல்லாம் வெளியே காட்டிக்கொள்ளாமல் அப்படியானால் நீங்கள் என்னை கைவிட்டு விட்டீர்கள்தானே ?” என்று கேட்டாள். அதற்கு நாகராஜன், உன்னை நான் கைவிடுவேனா ருக்மிணி? ஒரு நாளும் விடமாட்டேன். ஆனால் அம்மா அப்பாவைத் திருப்தி பண்ணி வைக்க வேண்டியதும் கடமைதானே? ஆனால் நீ கவலைப்படாதே, உன்னை ஒரு நாளும் தள்ளிவிட மாட்டேன்” என்றான். ருக்மிணிக்குப் பொறுக்கவில்லை. நீங்கள் மறுவிவாகம் பண்ணிக்கொண்டுவிடுகிறது. நான் கவலைப்படாமல் இருக்கிறது. என்னை ஒரு நாளும் கைவிடமாட்டீர்கள். ஆனால் அம்மா அப்பா சொல்லுகிறதை இது விஷயத்தில் தட்டமாட்டீர்கள். நான் சொல்லக்கூடியது இனிமேல் என்ன இருக்கு? என் கதி இத்தனைதானாக்கும்”என்று சொல்லிக்கொண்டு அப்படியே உட்கார்ந்துவிட்டாள்.

நாகராஜன் ஒன்றும் பேசவில்லை. கல்யாணத்தை நிறுத்திவிடுகிறேன்’ என்கிற ஒரு வார்த்தையைத் தவிர வேறே எந்த வார்த்தையை சொன்னால் தான் ருக்மிணியின் மனதைத் தேற்றலாம் ? அந்த வார்த்தையை இப்போது சொல்லவோ அவனுக்கு சம்மதமில்லை. ஆகையால் அவன் வாயால் ஒண்ணும் பேசாமல் தன் மனதிலுள்ள அன்பையும் ஆதரவையும் சமிக்கினையால் மாத்திரம் காட்டினான். அவள் கையைத் தன்னுடைய கைகளால் வாரி எடுத்து மடியில் வைத்துக் கொண்டு மிருதுவாய்ப் பிடித்தான். குழந்தையைத் தட்டிக் கொடுத்துத் தேத்துவது போல், முதுகில் ஆதரவோடு தடவினான்.

அப்பொழுது அவள் தலைமயிர் அவன் கையில் பட்டது. உடனே திடுக்கிட்டுப் போய், என்ன ருக்மிணி, தலை சடையாய்ப் போய்விட்டதே; இப்படித்தானா பண்ணிக்கொள்கிறது? உன்னை இந்த அலங்கோலத்தில் பார்க்க என் மனசு சகிக்கவில்லையே! எங்கே உன் முகத்தைப் பார்ப்போம்! ஐயோ, கண்ணெல்லாம் செக்கச் செவேர் என்று சிவந்து போயிருக்கிறதே! முகத்தின் ஒளியெல்லாம் போய்விட்டதே ! என் கண்ணே, இப்படி இருக்காதே. உன்னை நான் கைவிடமாட்டேன் என்று சத்தியமாய் நம்பு. உன் மனசில் கொஞ்சங்கூட அதைரியப்படாதே. என் ஹிருதய பூர்வமாகச் சொல்லுகிறேன், எனக்கு பொறுக்கவில்லை உன்னை இந்த ஸ்திதியில் பார்க்க. சின்ன வயது முதல் நாமிருந்த அன்னியோன்யத்தை மறந்துவிட்டேன் என்று கனவில் கூட நீ நினையாதே. வா, போகலாம், நாழிகையாகிவிட்டது, இனிமேல் நாம் இங்கே இருக்கக்கூடாது” என்று சொல்லி முடித்தான்.

ருக்மிணி எழுந்திருக்கவில்லை. ஏக்கம் பிடித்தவள் போல் உட்கார்ந்திருந்தாள். அதைப் பார்த்ததும் நாகராஜனுக்குக் கண்ணில் ஜலம் ததும்பிவிட்டது. அந்தச் சமயத்தில் தன் மனதிலுள்ள ரகசியத்தைச் சொல்லித்தான் விடலாமே என்று அவன் புத்தியில் தோன்றியது போலிருந்தது.

சொல்லித்தான் வைத்தானா பாவி! ஆனால் அவனுக்கு அவனுடைய விளையாட்டுதான் பெரிதாய்பட்டது. ஆகையினாலே அதை மாத்திரம் அவன் வாய்விடவில்லை. ஆனால் அவனுக்குத்தான் எப்படித் தெரியும் இப்படியெல்லாம் வரும் என்று? அத்தனை வயசாகி எனக்கே தெரியவில்லையே. அந்த சமயத்திலே, எங்கே தெரிந்திருக்கப்போகிறது குழந்தைக்கு? அப்படி நினைத்துபோய் உட்கார்ந்திருந்த ருக்மிணியை நாகராஜன் மெல்லப் பூத்தாப்போல் தூக்கி மார்போடே அணைத்துக்கொண்டு, என்ன, ஒன்றும் பேசமாட்டேன் என்கிறாயே ருக்மிணி; நான் என்ன செய்யட்டும்?”என்று கருணையோடு இரங்கி சொன்னான்.

ருக்மிணி தலை நிமிர்ந்து அவனை ஏரிட்டு பார்த்தாள். அந்த பார்வையின் குறிப்பை உங்களுக்கு எப்படிச் சொல்வேன்? பிரவாகத்தில் அகப்பட்டுக் கை அலுத்துப்போய் ஆத்தோடு போகிற ஒருவனுக்கு, தூரத்தில் கட்டை ஒன்று மிதந்து போவது போல் தென்பட, அவனும் பதை பதைத்துக் கொண்டு ஆசையும் ஆவலுமாய் அதன் பக்கம் நீந்திக்கொண்டு போய் அப்பா, பிழைத்தோமடான்னு சொல்லிக்கொண்டு அதைப் போய்த் தொடும்போது, ஐயோ பாவம், அது கட்டையாக இராமல், வெறும் குப்பை செத்தையாக இருந்துவிட்டால் அவன் மனசு எப்படி விண்டுவிடும், அவன் முகம் எப்படியாகிவிடும், அப்படி இருந்தது ருக்மிணியின் முகமும், அந்த முகத்தில் பிரதிபலித்துக்காட்டிய அவள் மனசும். எல்லையில்லாத துன்பம், எல்லையில்லாத கஷ்டம், அந்தப் பார்வையில் இருந்தது.

அதைக் கண்டும் நாகராஜன் மௌனமாக இருப்பதைப் பார்த்து ருக்மிணி மெல்ல ஒதுங்கிக் கொண்டு, “நான் சொல்லக்கூடியது இனிமேல் ஒன்னுமில்லை. மன்னார்கோவிலுக்குப் போகிறதில்லை என்கிற வார்த்தையை நீங்கள் எனக்கு சொல்லமாட்டேன் என்கிறீர்கள்; இன்றோடு என் தலைவிதி முடிந்தது. நீங்கள் எப்போது என்னை இவ்விதம் விடத்துணிந்தீர்களோ, நான் இனிமேல் எதைநம்பிக்கொண்டு யாருக்காக, உயிரை வைத்துக்கொண்டிருப்பது? உங்கள் மீது எனக்கு வருத்தமில்லை. உங்கள் மனது இந்தக் காரியத்துக்குச் சம்மதியாது. என்னுடைய விதிவசம், என் அப்பா அம்மாவுடைய கஷ்டம், உங்களை இப்படியெல்லாம் செய்யசொல்லுகிறது. இனிமேல் ருக்மிணி என்று ஒருத்தி இருந்தாள். அவள் நம் பேரில் எல்லையில்லாத அன்பு வைத்திருந்தாள், பிராணனை விடுகிறபோது கூட நம்மையே நினைத்துக் கொண்டுதான் பிராணனை விட்டாளென்று எப்பொழுதாவது நினைத்துக்கொள்ளுங்கள். இதுதான் நான் உங்களிடம் கடைசியாகக் கேட்டுக்கொள்வது” என்று சொல்லிக்கொண்டு நாகராஜன் காலில் விழுந்து, காலை கெட்டியாய் பிடித்துக்கொண்டு தேம்பி தேம்பி அழுதாள்.

நாகராஜன் உடனே அவளை தரையிலிருந்து தூக்கியெடுத்து, பைத்தியமே, அப்படி ஒன்றும் பண்ணிவிடாதே, நீ போய்விட்டால் என் ஆவியே போய்விடும். அப்புறம் யார் யாரை நினைக்கிறது? மழைத்தூற்றல் போடுகிறது. வானமெல்லாம் கறுகும்மென்றாகிவிட்டது. இன்னும் சற்று போனால் சந்தரத்தாரையாய்க் கொட்டும் போலிருக்கிறது; வா அகத்துக்கு போகலாம்” என்று அவள் கையைப் பிடித்துக்கொண்டு ரெண்டடி எடுத்துவைத்தான்.

ஆகாயத்தில் சந்திரன், நட்சத்திரம், ஒன்றும் தெரியவில்லை. எங்கே பார்த்தாலும் ஒரே அந்தகாரம். சித்தைக்கொருதரம் மேகத்தை வாளால் வெட்டுகிறது போலே மின்னல் கொடிகள் ஜொலிக்கும். ஆனால் அடுத்த நிமிஷம் முன்னிலும் அதிகமான காடாந்தகாரமாகிவிடும். பூமியெல்லாம் கிடுகிடுவென்று நடுங்க ஆகாயத்தையே பிளந்துவிடும்போலே இடிஇடிக்கும். காற்று ஒன்று சண்டமாருதம்போல அடித்துக் கொண்டிருந்தது. தூரத்தில் மழை பெய்து கொண்டிருநத இரைச்சல் அதிகமாகவே நெருங்கிக் கொண்டு வந்தது. இந்தப் பிரளய காலத்தைப் போல இருந்த அரவத்தில் ருக்மிணியும் நாகராஜனும் பேசிக்கொண்டு போன வார்த்தைகள் என் காதில் சரிவரப்படவில்லை. அவர்களும் அகத்துப்பக்கம் வேகமாக சென்றுகொண்டிருந்தார்கள்.
ஒரு மின்னல் மின்னும்போது, ருக்மிணி வீட்டுக்கு போக மனமில்லாமல் பின்வாங்குவதும், ஆனால் நாகராஜன் தடுத்து முன்னால் அழைத்துச் செல்வதும் மாத்திரம் கண்ணுக்கு

தென்பட்டது. அவர்கள் வார்த்தையும் ஒண்ணும் ரெண்டுமாகத்தான் என் காதில் பட்டது. …..பிராணன் நிற்காது….அம்மாவுடைய ஹிருதயம் திருப்தி…..வெள்ளிக்கிழமை காலமே…..ஸ்திரீகளின். ….உடைந்து விடும்….. சொல்லாதே….. கொடுத்துவைத்ததுதானே…..அந்தப் பெண்ணையாவது நன்றாக வைத்துக் கொள்ளுங்கள்…..மனப்பூர்த்தியாக வாழ்த்துகிறேன்…..அன்றைக்கு தெரிந்து கொள்வாய்…..கடைசி நமஸ்காரம்… வரையில் பொறுத்துக்கொள்…..” இந்த வார்த்தைகள்தான் இடி முழக்கத்திலும், காற்றின் அமலையிலும், மழை இரைச்சலிலும் எனக்கு கேட்டது. மழை தாரை தாரையாகக் கொட்ட ஆரம்பித்துவிட்டது. ருக்மிணியும் நாகராஜனும் மறைந்து போய்விட்டார்கள்.
ஆச்சு, அடுத்த நாள் காலமே விடிந்தது. மழை நின்றுவிட்டது. ஆனால் ஆகாயத்திலே தெளிவு வரவில்லை.மேகங்களின் கருக்கல் வாங்கவில்லை. காற்று, ஸமாதானஞ் செய்ய மனுஷாள் இல்லாத குழந்தைபோல, ஓயாமல் கதறிக் கொண்டேயிருந்தது. என் மனசிலும் குழப்பம் சொல்லி முடியாது . எப்படி நிதானித்துக் கொண்டாலும் மனசுக்குச் சமாதானம் வரவில்லை.

என்னடா இது, என்னைக்கும் இல்லாத துக்கம் இன்னைக்கு மனசில் அடைத்துக்கொண்டு வருகிறது? காரணம் ஒண்ணும் தெரியவில்லையே’ என்று நான் எனக்குள் யோசித்துக்கொண்டேயிருக்கும்போது மீனா, என்னடியம்மா, இங்கே ஒரு புடவை மிதக்கிறது!” என்று கத்தினாள்.

உடனே பதட்டம் பதட்டமாய், அந்த பக்கம் திரும்பினேன். குளத்திலே குளித்துக் கொண்டிருந்த பெண்களெல்லோரும் அப்படியே திரும்பிப் பார்த்தார்கள். பார்த்துவிட்டு காதோடு காதாக ரகசியம் பேச ஆரம்பித்துவிட்டார்கள். எனக்கு பஞ்சப்பிராணணும் போய்விட்டது. புடவையைப் பார்த்தால் காமாக்ஷியம்மாள் புடவை போல் இருந்தது. சரி, அம்மா, அப்பா தலையிலே கல்லை தூக்கிப் போட்டுவிட்டு ருக்மிணிதான் மறுபடியும் வந்து குளத்திலே விழுந்துவிட்டாள் என்று நினைத்தேன் அதுதான் தெரியும். அப்படியே மூர்ச்சை போட்டுவிட்டேன். அப்புறம் சித்த நாழி கழித்து எனக்குப் பிரக்கினை வந்தது. அதற்குள்ளே குளத்தங்கரையெல்லாம் கும்பலாய்க் கூடிப் போய்விட்டது. ஜானகியையும் ராமசுவாமி ஐயரையும் வையாதவர் இல்லை. இனிமேல் வைதாலென்ன,வையாதெ போனாலென்ன?

ஊரின் சோபையையும் தாயார் தகப்பனார் ஜீவனையும், என்னுடைய சந்தோஷத்தையும் எல்லாம் ஒண்ணாய் சேர்த்துக் கட்டிக்கொண்டு ஒரு நிமிஷத்தில் பறந்துபோய்விட்டாளே என் ருக்மிணி. கீழே, அந்த மல்லிகைக்கொடி ஓரத்திலேதான் அவளை விட்டிருந்தார்கள். எத்தனை தடவை அந்த மல்லிகை மொக்குகளைப் பறித்திருக்கிறாள். அவள் பொன்னான கையாலே! குளத்தங்கரையெல்லாம், அவள் குழந்தையாயிருக்கிற போது அவள் பாதம் படாத இடம் ஏது, அவள் தொடாத மரமேது, செடியேது! ஐயோ, நினைக்க மனம் குமுறுகிறது. அந்த அழகான கைகள், அந்த அழகிய பாதங்கள், எல்லாம் துவண்டு, தோஞ்சு போய்விட்டன. ஆனால் அவள் முகத்தின் களை மாத்திரம் மாறவே இல்லை. பழையதுக்கக் குறிப்பெல்லாம் போய் முகத்தில் ஒருவித அத்தியாச்சரியமான சாந்தம் வியாபித்திருந்தது! இதையெல்லாம் கொஞ்சந்தான் கவனிக்கப் போது இருந்தது.

அதற்குள்ளே, நாகராஜன் வ’றான், நாகராஜன் வ’றான், என்ற ஆரவாரம் கூட்டத்தில் பிறந்தது. ஆமாம், நிசந்தான், அவன்தான் தலைகால் தெரியாமல் பதைக்கப் பதைக்க ஓடி வந்துகொண்டிருந்தான். வந்துவிட்டான். மல்லிகை செடியண்டை வந்ததும், கும்பலையாவது, கும்பலில் இருந்த தாயார் தகப்பனாரையாவது கவனிக்காமல், ருக்மிணி, என்ன பண்ணிவிட்டாய் ருக்மிணி!”என்று கதறிக்கொண்டு கீழே மரம் போல் சாய்ந்துவிட்டான். கூட்டத்தில் சத்தம், கப் பென்று அடங்கிப் போய்விட்டது. எல்லோரும் நாகராஜனையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். ரொம்ப நாழி வரைக்கும் அவன் தரையில் மூர்ச்கை போட்டே கிடந்தான்.

ராமசுவாமி ஐயர் பயந்து போய் அவன் முகத்திலே ஜலத்தைத் தெளித்து விசிறியால் விசிறிக்கொண்டிருக்கையில் அவனுக்குக் கடைசியாய் பிரக்கினை வந்தது. கண்ணை முழித்தான். ஆனால் தகப்பனாரிடத்தி லே ஒரு வார்த்தைகூட பேசவில்லை. ருக்மிணியின் உயிரற்ற சரீரத்தை பார்த்து, என்னுடைய எண்ணமத்தையும் பாழாக்கிவிட்டு ஜூலியத் மாதிரி பறந்தோடிபோய்விட்டாயே ருக்மிணி! ஸ்ரீநிவாசன் சொன்னது சரியாய் போய்விட்டதே! பாவி என்னால்தான் நீ உயிரை விட்டாய், நான்தான் உன்னைக் கொலைசெய்த பாதகன்! நேற்று நான் உன்னிடம் ரகஸ்யம் முழுவதையும் சொல்லியிருந்தால் இந்த கதி நமக்கு இன்று வந்திருக்காதே! குஸும ஸத்ருசம் ……ஸத்ய: பாதி ப்ரணயி ஹ்ரதயம்” * என்கிற ஆழமான வாக்கியத்தை வேடிக்கையாக மாத்திரந்தான் படித்தேனேயொழிய அதன் சத்தியத்தை நான் உணரவில்லையே! இனிமேல் எனக்கென்ன இருக்கிறது? ருக்மிணி நீயோ அவசரப்பட்டு என்னை விட்டுவிட்டுப் போய்விட்டாய். எனக்கு இனிமேல் சம்சார வாழ்க்கை வேண்டாம். இதோ சன்னியாசம் வாங்கிக் கொள்ளுகிறேன்!” என்று சொல்லிக்கொண்டே யாரும் தடுப்பதற்கு முந்தி தான் உடுத்தியிருந்த வேஷ்டியையும் உத்திரீயத்தையும் அப்படியே தாராய் கிழித்து விட்டான்.

அவன் தாயார் தகப்பனார் ஒருவரும் வாய் பேசவில்லை. நாகராஜனும் அவர்கள் திடுக்கிட்டதிலிருந்து சுதாரிச்சுக் கொள்ளுகிறதற்குள்ளே அவர்கள் காலில் சாஷ்டாங்கமாய் விழுந்து நமஸ்காரம் பண்ணிவிட்டு யாருடனும் பேசாமல் கௌபீனதாரியாய்ப் புறப்பட்டுப் போய்விட்டான்.

. இப்படி முடிந்தது என் ருக்மிணியின் கதை! என் அருமைக் குழந்தைகளே! பெண்கள் மனசு நோகும்படி ஏதாவது செய்யத் தோணும்போது இனிமேல் இந்தக் கதையை நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள். விளையாட்டுக்காகக் கூடப் பெண்ணாய்ப் பிறந்தவர்களின் மனதைக் கசக்கவேண்டாம். எந்த விளையாட்டு என்ன வினைக்கு கொண்டுவந்து விடும் என்று யாரால் சொல்லமுடியும்?

பெண்ணியலாரின் அன்பு நிறைந்த இருதயம் பூப்போல மிகவும் மெல்லியது ; அன்புக்குக் கேடுவரின், உடனே விண்டு விழுந்துவிடும்.

காமராஜர் அம்மானை

சென்ற மாதம் அம்மானையைப்பற்றி ஒரு கட்டுரை எழுதினோம்.

Image result for பெண்கள் அம்மானை விளையாட்டு

 

அதெல்லாம் சரி , நாமும் ஒரு அம்மானை எழுதுவோமே என்று ஆரம்பித்ததன் விளைவு  இந்தப் பாடல். 

பாடல் தலைவர் பெருந்தலைவர் காமராஜர் என்றதும் வார்த்தைகள் தாமே வந்துவிழுந்தன. 

 

Related image

 

தன்னுடல் பொருள்ஆவி அனைத்தையும் நாட்டுக்குத்  

   தந்தவர் கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜர்

என்றுமவர் பணம்பெண் பொருளையும்  நாடார்

   அன்னவரை வணங்கி ஆடுகின்றேன்  அம்மானை

 

கர்மவீரர் ஆனாலும்  தேர்தலிலே தோற்றாரே

   காரணம் என்னவென்று சொல்லடீநீ  அம்மானை  

 

தேர்தலில் தோற்றது அவரல்ல நாம்தாமென

   கர்மத்தைப்  புரிந்து ஆடடிநீ  அம்மானை  

 

 

சென்னையில் பாரதிவிழா

ரஜினிகாந்த் முதற்கொண்டு பத்துப் பதினைந்து பிரபலங்கள்  ‘காணொளியில்’ மகிழ்ச்சியோடு அழைத்த  நிகழ்வு!

சென்னையில்  வானவில் பண்பாட்டுக் கழகமும் தமிழக அரசும் இணைந்து நடத்திய பாரதி விழா !

டிசம்பர் 8,9,10 தேதிகளில் சென்னை கலைவாணர் அரங்கத்திலும் திருவல்லிக்கேணி பாரதி இல்லத்திலும்  மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 

 

நண்பர் மந்திரமூர்த்தியின் முகநூல் பக்கத்திலிருந்து: 

 

நண்பர் நானா Nana Shaam Marina அவர்களும் நானும் இணைந்து வாழும் பாரதியான ஆசுகவி இசைக்கவி ரமணன் அவர்களுக்கும், SB creations பாரதி நாடகக்கலைக் குடும்பத்துக்கும் இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம் .

வானவில் பண்பாட்டு மையம் வழக்கறிஞர் ரவி அவர்கள் தமிழக அரசுடன் இணைந்து டிசம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் சென்னை திருவல்லிக்கேணி கலைவாணர் அரங்கில் நடத்திய இரண்டு நாட்கள் நிகழ்வுகளும் மேதகு ஆளுநர் தொடங்கி வைக்க மிகச் சிறப்பாக நடைபெற்றன.

பாரதிவிழாவில் கலைவாணர் அரங்கில் கடைசி நிகழ்வாக, முத்தாய்ப்பாக திருமிகு.எஸ்.பி.இராமன் இயக்கத்தில் நடைபெற்ற பாரதியார் நாடகம் நேற்று ( டிசம்பர் 9, ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணியளவில் தொடங்கி இரவு சுமார் 9.45 அளவில் நிறைவு பெற்றது. நாடகத்தின் ஒவ்வொரு காட்சியும் மிக நுணுக்கமாக சிற்பம் போல செதுக்கி அமைக்கப்பட்டு இருந்தது. நாடகத்தில் பங்கேற்ற அனைவரும் தங்கள் பங்கை மிக நிறைவாகச் செய்திருந்தார்கள். நாடகம் அரங்கில் திரளாகக் குழுமியிருந்த அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. நாடகம் முடிந்தவுடன் விழாவுக்குச் சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த நடிகர் சிவகுமார் இருக்கையில் இருந்து எழுந்திருந்து கைதட்டி நாடகத்திற்குத் தனது பாராட்டை வெளிப்படுத்தினார். அரங்கில் இருந்த மக்கள் அனைவரும் எழுந்து கரவொலி எழுப்பினர்.

இசைக்கவி ரமணன் அவர்களை விட சுமார் 12 ஆண்டுகள் மூத்தவரான நடிகர் சிவகுமார் நாடகத்தைப் பாராட்ட மேடையில் ஏறியவுடன் இசைக்கவி ரமணன் அவர்களின் கால்களில் பணிந்து வணங்கினார். இது பாரதிக்குச் செலுத்தும் வணக்கமும், மரியாதையும் என்று குறிப்பிட்டார் சிவகுமார். அந்த அளவிற்கு மேடையில் முழுக்கப் பாரதியாராகவே வாழ்ந்தார் இசைக்கவி ரமணன் அவர்கள்.  இசைக்கவி ரமணன் அவர்களின் உடல் வெளிப்படுத்தும் மொழிகளையும் திரு.சிவகுமார் வெகுவாகப் பாராட்டினார்.

” பாரதியாரைச் சிறுவயதில் இருந்து ரத்தத்தில் கலந்துவிட்ட ஒருவரால்தான் பாரதியின் வேடத்தில் இவ்வளவு பொருத்தமாக நடிக்க முடியும்.  தேடிச் சோறு நிதம் தின்று என்ற பாடலுக்கு முன் சில கவிதை வரிகளைக் கூறினார் இசைக்கவி ரமணன். இசைக்கவியே கவிஞரானதால் அந்த முந்தைய வரிகள் அவருடைய சொந்தக் கவிதையா? பாரதியின் கவிதையா? என்ற சந்தேகம் வந்து விட்டது. அதுவும் பாரதியின் கவிதைதான் என்று அருகில் இருந்தவர்களிடம் உறுதிபடுத்திக் கொண்டேன். இசைக்கவி ரமணன் அவர்கள் மட்டுமே மகாகவி பாரதியாக நடிக்க இன்று இந்த உலகிலேயே மிகவும் பொருத்தமான, தகுதியான, சிறப்பான நடிகர்” என்று நடிகர் சிவகுமார் மனம் திறந்து பாராட்டினார். நாடகம் காலத்திற்கேற்ப தகவமைக்கப்பட்டுள்ள தன்மையும் சிறப்பாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுப் பாராட்டினார்.

விழாவிற்கு வந்த ஒவ்வொருவரும் பாரதி, செல்லம்மாள் உள்ளிட்ட அனைவரது நடிப்பு குறித்தும் தங்களது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

நாடகத்தின் இயக்குநர் எஸ்.பி. இராமன் அவர்கள் கூறியுள்ளது போல தமிழ்ச்சாதி பாரதி கண்ட வழியில் செல்லட்டும்.

ஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (18) – புலியூர் அனந்து

Image result for meivazhi salai meeting

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்..
வாரிவாரி வழங்கும் போது வள்ளலாகலாம்
வாழைப் போல தன்னைத் தந்து தியாகியாகலாம்
உறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம்

கடவுள் மனிதனை படைத்தானா?
கடவுளை மனிதன் படைத்தானா?

அன்று இரவு உணவு ஏழுமணிக்கெல்லாம் முடித்துக்கொண்டாகிவிட்டது. என்னைப் பத்திரமாக நிர்ணயிக்கப்பட்ட ஹோட்டல் அறையில் விட்டுவிட்டு அண்ணன் திரும்பிவிட்டான். அறையில் நாங்கள் இருவர், தமிழகத்தின் வேறொரு பகுதியைச் சேர்ந்தவர்  அறை நண்பர்.  சற்றுநேரம் ஏதேதோ பேசிக்கொண்டு இருந்தோம். நான் தூங்குவதற்குத் தயார் செய்துகொண்டேன்.

நண்பர் தனது படுக்கையில் சம்மணமிட்டு அமர்ந்து ஒரு பிரேம்போட்ட படத்தினை எதிரில் வைத்துக்கொண்டவர், கண்களை மூடிக் கொண்டார்.  ஏதோ தியானம் செய்வதுபோல் இருந்தது.  சற்று நேரம் கழித்து உடல் பயிற்சி அல்லது ஆசனம்போன்று செய்துவிட்டு, விளக்கினை அணைத்துவிட்டு உறங்கத்தொடங்கினார்.

குளியல் அறையும் இணைக்கப்பட்டிருந்த அந்தத் தங்குமிடம் வசதியாக இருந்தது. காலையில் எல்லாம் சாதாரணமாகத்தான் இருந்தது. அவர் முதலில் குளித்துவிட்டு வந்தார். பிறகு நான் குளித்துவிட்டு வெளியேவந்தேன.

நண்பர் அதற்குள் வித்தியாசமான ஒரு போஸில் ஊதுபத்தி மணம் கமழ,  தமிழ்போலத் தோன்றினாலும் ஏதோ புரியாத மொழியில் மந்திரம்போல் சொல்லிக்கொண்டு இருந்தார்.  கொஞ்சம் பயந்தேன் என்றுதான் சொல்லவேண்டும்.

அவையெல்லாம் முடிந்து உடைகள் மாற்றிக்கொண்டு பயிற்சிமையம் போனோம். மாலையில் திரும்பி வரும்போது ஒரு விலாசம் எழுதிய காகிதத்தைக் காட்டி,  அங்கு  போகவிருப்பதாகவும், நானும் வந்தால் துணையாக இருக்கும் என்று சொன்னார். எனக்கும் செய்வதற்கு ஏதுமில்லா காரணத்தால் போனேன்.  அவரும் சென்னைக்குப் புதியவர்தான்.  ஆனால் போகவேண்டிய இடத்தைக் கண்டுபிடித்துவிட்டார்.

பெரிய மைதானம்.  ஓரிரு மரங்கள்மட்டுமே இருந்தன. நடந்துசெல்ல நீண்ட சிமெண்ட் பாதை இருந்தது. ஒரு கோடியில் இருந்த கட்டிடத்திற்கு நாங்கள் நடந்து போகும்போது அவ்வப்போது சிலர் எதிரே வந்தார்கள்.  முதலில் பார்த்த மனிதர் கைகளை விசித்திரமாக வளைத்துத் தலைக்கருகில் கொண்டுசென்று ஏதோ சொன்னார்.  நான் நண்பரைப் பார்த்தேன்.  அவரும் அவ்வாறே செய்தார்.  எதிரில் வந்தவர் என்னை முறைத்துப் பார்த்துவிட்டுப் போனார்.  எதிரில் யாராவது வரும்போது இது மீண்டும் நடந்தது. ஆனால், யாரும் முறைத்துப்பார்க்கவில்லை. நான் ஏதும் கேட்கவில்லை.  நண்பரும் ஏதும் சொல்லவில்லை.

 

Image result for meeting of a village swami with red turban in tamilnaduகட்டிடம் வந்தது.  காலணிகளைக் கழட்டிவிட்டு உள்ளேசென்றோம்.  ஒரு ரப்பர் குழாயில் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. கால்களைக் கழுவிக்கொண்டோம். மஞ்சள், காவி, ரோஸ் என்றெல்லாம் அனுமானிக்க இயலாத ஒரு நிறத்தில் ஒரு துணியால் எங்கள் இருவருக்கும் தலைப்பாகைபோன்று ஒருவர் கட்டிவிட்டார். உள்ளேபோனோம்.

சிம்மாசனம்போன்ற இருக்கை. அதில் வயதினை அனுமானிக்க இயலாத ஒரு நபர் விசித்திர உடை அணிந்து அமர்ந்திருந்தார். சுமார் அறுபதுபேர் தலைப்பாகை அணிந்து குரு சிஷ்ய பாவத்தில், ஒரு கையால் வாயை மறைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். அதனையே நண்பரும் அவரைப் பார்த்து நானும் அமர்ந்தோம்.

பேசிக்கொண்டிருந்தவர் தமிழில்தான் பேசிக்கொண்டு இருந்தார்.  உச்சரிப்பு அவர் தமிழரல்லர் என்று கணிக்கமுடிந்தது. கிட்டத்தட்ட ஒன்றரைமணி நேரம் அவர் விடாமல் பேசினார். எனது தொடக்கப்பள்ளி ஆசிரியரோ, என் தாத்தா பாட்டியோ சொல்லாத ஏதும் அவர் சொல்லவில்லை. அந்த அறுபதுபேரும் அதனை ஞானோபதேசம்போலக் கேட்டுக்கொண்டிருந்தது எனக்கு வியப்பாக இருந்தது.

பேசி முடித்ததும் எல்லோரும்   ஒரு க்யூ ஏற்படுத்திக்கொண்டார்கள். வரிசையாகச்சென்று அவர் காலைத தொட்டு வணங்க, அவரும் எல்லோர் தலையிலும் ஆசீர்வதிப்பதுபோலக் கையை வைத்தார். பலர் அப்போது மெய்சிலிர்த்தது வெளிப்படையாகத் தெரிந்தது. அருகிலேயே வைக்கப்பட்டிருந்த அண்டாபோன்ற ஒரு பாத்திரத்தில் எல்லோரும் ரூபாய் போட்டார்கள். நான் வரிசையில் பாதியிலேயே நழுவிவிட்டேன். அன்று ஒரு கணிசமான தொகை கல்லா கட்டியிருப்பார்கள்.

வெளியே வந்தோம்.

எங்கே போகிறோம் என்று சொல்லாமல் அழைத்துப் போன நண்பர், திரும்பி வரும்போது அந்த ‘”ஞானி”யின் (அப்படித்தான் நண்பர் குறிப்பிட்டார்) மகிமையைப்பற்றி வாய் மூடாமல் பேசிக்கொண்டே வந்தார். அவர் பெருமையாகச்சொன்ன எதுவும் எனக்குப் பெரிய விஷயமாகப்படவில்லை.

உதாரணத்திற்கு ஒன்று.

ஒரு விசேஷ தினத்தில்  ஆயிரக்கணக்கில் கூடி இருந்தார்களாம்.  எல்லோருக்கும் அந்த ஞானி வாழைப்பழம் பிரசாதமாக கொடுத்துக்கொண்டிருந்தார்.  நிகழ்ச்சி அமைப்பாளர் ஒருவர் பிரசாதம் வாங்க வரிசையில் போய்க்கொண்டு இருந்தாராம். நெருங்கும் சமயங்களில் யாரேனும் அழைப்பதாலோ அல்லது வேறு  எதனாலோ தடைபட்டுக்கொண்டே இருந்ததாம். கடைசியாக இவர்சென்று கும்பிட்டபோது வாழைப்பழங்கள் எல்லாம் தீர்ந்துபோயிருந்தன. பக்தி சிரத்தையுடன் பல வேலைகளைச் செய்தும் பிரசாதம் மட்டும் கிட்டவில்லை.

பெருத்த  ஏமாற்றத்துடன் வீடு போய்ச்சேர்ந்தாராம். வீட்டைத் திறந்து விளக்கைப் போட்டபோது, வீட்டு வாசலில் ஒரு கூடை வாழைப்பழம் இருந்ததாம்.  தற்செயல் என்று ஒதுக்குவதோ அற்புதம் என்று  நம்புவதோ அவரவர் விருப்பம். கேட்டதைக் கொடுத்தால்தான் சாமி.  அற்புதம் செய்தால்தான் மகான் என்பதுதான்  உலக நடப்பு  அல்லவா?

பிற்காலத்தில் சற்றுப் பெரிய ஊர் ஒன்றில் நான் வேலைபார்த்தேன். அங்கே ஒரு கட்டிடத்தில் ஒரு சங்கம் இருந்தது. அந்தக் கட்டிடத்தில் உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி. பின்வரும் செய்திகள் நான் கேள்விப்பட்டதுதான். எவ்வளவு உண்மை என்று தெரியாது.

புதியதாக ஒருவர் உறுப்பினர் ஆகவேண்டுமென்றால் தற்போது இருக்கும் உறுப்பினர் சிபாரிசு செய்யவேண்டும்.  ஒரு குழு ஒன்று பரிசீலிக்கும். குழுவில் ஒருவர் வேண்டாம் என்று சொன்னாலும் சேர்க்க மாட்டார்களாம். குழு ஒப்புக் கொண்டால், அடுத்த கூட்டத்திற்கப்  புதிய நபர் கோட் சூட், (அல்லது குறைந்தபட்சம் ஒரு டை) அணிந்து செல்லவேண்டும். அவர்கள் நடவடிக்கை ஆரம்பிப்பதற்குமுன் பொதுஅரங்கில் மற்ற உறுப்பினர்களுடன் புதியவரும் அறிமுகம் செய்யப்பட்டோ அல்லது அறிமுகம் செய்துகொண்டோ வளைய வருவாராம். அன்றைய நிகழ்வில் இவர் பங்குகொள்ள முடியாது.  திரும்பிவிட வேண்டியதுதான்,

மற்றவர்கள் கூடியதும் புதியவர் சேரலாமா என்று முடிவெடுப்பார்களாம்.  ஒரு உறுப்பினர் ஆட்சேபனை செய்தாலும் இவரைச் சேர்த்துக்கொள்ளமாட்டார்கள்.  இந்தக் கட்டுப்பாட்டையும் தாண்டி ஒருவர் உறுப்பினர் ஆகிவிட்டால் முதல் கூட்டத்தில் அவருக்கு ஒரு ரகசிய சொற்றொடர்  உபதேசிக்கப்படுமாம். அந்தச் சொற்றொடரையோ சங்கத்தில் என்னென்ன நடக்கிறது என்பதையோ (தனது மனைவி /கணவன் உட்பட) யாருக்கும் சொல்லக்கூடாதாம். பலான சங்கத்தில் இவர் ஒரு அங்கத்தினர் என்பதுதவிர வேறு ஏதும் வேலையில் தெரியக்கூடாதாம். 

இந்தச் சங்கக் கிளைகள் உலகில் பல ஊர்களில் உள்ளதாம். எந்த ஊரில் ஒருவர் உறுப்பினர் ஆனாலும் எந்த ஊர் சங்கத்திலும் பங்கு கொள்ளலாமாம்.  ஒரு ரகசிய சங்கத்தில் ரகசியம் இந்த அளவிற்கு அம்பலமாகிவிட்டது ஒரு வேடிக்கைதானே? ஆனால் இதில் உண்மை எவ்வளவு பிற்சேர்க்கை எவ்வளவு என்று தெரியாது.

அந்த ‘தலை வெட்டி’ சங்கம் கிடக்கட்டும். நம் தோழரைப் பார்ப்போம்.

வாழ்க்கையில் சந்தோஷங்களை அனுபவிக்கும் வயதில் சாமியாரைத் துரத்திக்கொண்டிருந்த அவர் பெயர் ஞானப்பிரகாசம்..  திருமணத்திற்குப்பிறகும் அவரது.இந்த “பக்தி” நீடித்ததும், மணவாழ்வில் நிம்மதி கிட்டாததும், குடும்பத்தையும் வேலையையும் உதறி நாற்பது வயதிலேயே காணாமல்போனதும் பின்னாட்களில் நடந்த கதை.

ஞானப்பிரகாசத்தின் வாழ்க்கை பிரகாசமாக இருந்ததா, அவருக்கு ஞானம்கிட்டியதா என்று புரியவில்லை.

(தொடரும்)

2.0 சினிமா விமர்சனம்

Image result for 2.0 திரைப்படம்

 

தமிழ் நாட்டில் 2.0 பார்க்காமல் யாரும் இருக்கக்கூடாது என்று தீர்மானிக்கப்பட்டு சங்கர் எடுத்த படம் !

3-டி கிராபிக்சில் ஆங்கிலப் படங்களைத் தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு அமைத்திருக்கிறார்கள்.

போதாக்குறைக்கு நம்ம தலைவர் ரஜினிகாந்த் வேறு வசீகரன், சிட்டி -நல்லவன், சிட்டி- வில்லன், என்று ஏற்கனவே எந்திரனில் அறிமுகமானவர்களுடன்  3.0  என்று ஒரு குட்டி ரோபோவாகவும் வந்து கலக்குகிறார்.   

அக்ஷயகுமார்தான் கதையின் நாயகன். அவர் தற்கொலையில் ஆரம்பிக்கிறது படம்.  அவருக்குப் பறவைகளுடன் தொடரும் பாசம். ( சலீம் அலி?)   பறவையினத்தை அழிக்கும் செல்போன் டவர்களை எதிர்த்து அவர் நடத்தும் போராட்டம். அதில்  தோல்வியுற்றுத் தற்கொலை செய்துகொண்டு பறவைகளின் ‘ஆரோவினால்’ பக்ஷிராஜன் என்ற மாபெரும் சக்திவாய்ந்த ராட்சசனாகமாறி மனிதர்களை அழிக்கும்விதம். முடிவில் ரஜினிகாந்தின் பறவைக் கவசத்தால் அழியும் மாபெரும் சக்தி. அதுதான் அக்ஷயகுமார். ( கமல ஹாசனுக்காக உருவாக்கப்பட்ட பாத்திரமாம் இது) 

கதை என்னவோ காதில் பூ சூடும் அளவுதான். 

ஆனாலும் குழந்தைகள் முதல் ரஜினி ரசிகர்வரை அனைவரையும் இரண்டரை மணிநேரம் கட்டிப்போடும் படம். 

வசூலிலும் பட்டையைக் கிளப்பும் படம். ( 700 கோடிக்கு மேல் தாண்டிவிட்டதாமே?) 

ஒரு தமிழ்ப்படம் இப்படி வருவது தமிழ்நாட்டுக்கே பெருமை! 

அம்மா கை உணவு (10) – ஜி.பி. சதுர்புஜன்

 

Related image

நம் வீடுகளில் அன்றாடமோ அல்லது விசேஷ நாட்களிலோ தயாரிக்கும் உணவு வகைகளை வரிசைப்படுத்தி அவற்றின் மகிமைகளை வியந்து எளிய தமிழில் பாடப்படும் கவிதைப் பாடல்கள் இவை. இது ஒரு அறுசுவைத் தொடர். ஒவ்வொரு மாதமும் ஒரு கவிதைப் பாடலை வாசகர்களுக்கு வழங்கி மகிழ்கிறேன்.

  1. கொழுக்கட்டை மஹாத்மியம் மார்ச் மாதம் 2018 குவிகம்  மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
  2. இட்லி மகிமை ஏப்ரல் மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
  3. தோசை ஒரு தொடர்கதை மே மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
  4. அடைந்திடு சீசேம் ஜூன் மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது. 
  5. ரசமாயம் ஜூலை மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது
  6. போளி புராணம் ஆகஸ்ட் மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது
  7. அன்னை கைமணக் குறள்கள் செப்டம்பர் மாதம் 218 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது. 
  8. கலந்த சாதக் கவிதை அக்டோபர் மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது. 
  9. கூட்டுக்களி கொண்டாட்டம் நவம்பர் மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது

10.சேவை செய்வோம் !

பக்தி செய்தல் இறைக்கு சேவை ;
அன்பு செய்தல் மனிதர்க்கு சேவை ;
நாளையை நினைத்தால் இயற்கைக்கு சேவை ;
நற்செயல் அனைத்தும் நமக்கே சேவை ;

இறங்கி வருவோம் இல்லறத்திற்கே –
இதைவிட சுவையாய் உணவொன்றுண்டோ ?
எதைச் சொல்கிறேன் என்றறியீரோ ?
நமக்கெல்லாம் பிடித்த நல்லதொரு சேவை !

பார்வைக்கு எளிமை ; பகட்டுகள் இல்லை –
உதட்டிலே ஒட்டா நூல் போல் சேவை !
எவர்க்கும் இனியனாய் இருக்கும் நண்பன் –
பல உருக்கொள்ளும் இனியதொரு சேவை !

தேங்காய் சேவை திகட்டாதிருக்கும் !
தின்னத் தின்ன தொடர்கதையாகும் !
எலுமிச்சை சேவை சுறுசுறுப்பாக்கும் !
உப்பும் காரமும் சுரணையைத் தூண்டும் !

தேனாய்த் தித்திக்கும் சர்க்கரைச் சேவை !
மாற்றாய் வாய்க்கு மிளகுச் சேவை !
எவ்விதச் சுவையும் ஏற்றுக்கொள்ளும் –
எங்கள் வீட்டுச் செல்லச் சேவை !

திருநெல்வேலித் தமிழரா நீங்கள் ?
வெறும் சேவை உங்கள் தேவைக்குண்டு.
காரசாரமாய் மோர்க்குழம்புண்டு !
குழைத்து அடித்தால் சொர்க்கமுண்டு !

சேவை செய்வோம் அனைவரும் வாரீர் !
செய்த சேவையை சுவைத்தே வாழ்வோம் !
புதிய உணவுகள் ஆயிரம் உண்டு –
பழைய சேவைக்கு இணைதான் ஏது ?

 

கோபல்ல கிராமம்

சமீபத்தில் நான் படித்த நாவல், தமிழ் எழுத்துலகின் மாபெரும் ஜாம்பவான் திரு கி ராஜநாராயணன் எழுதிய ‘கோபல்ல கிராமம்’ என்ற நூல். 

படிக்கப் படிக்க அப்படியே திரைப்படம்போல விரிகிறது. 

நம்மை அந்தக் காலட்டத்திற்கே அழைத்துச்செல்கிறது. 

ஆந்திராவிலிருந்து தமிழகத்துக்குத் தப்பிவந்த குடும்பங்கள் எப்படித் தமிழ்நாட்டின் ஒரு மூலையில் குடிபெயர்ந்து, தங்கள் அயராத உழைப்பால் அடர்ந்த காட்டை அழித்து,  கரிசல் பூமியாகமாற்றிப்    பரம்பரை பரம்பரையாக மண்மணத்தோடு பெருமிதத்தோடு வாழ்ந்தார்கள் என்பதை விளக்கும் அற்புதக் கதை. 

கிட்டத்தட்ட 200  பக்கங்களில் விரியும் இந்த நாவல் 2000 பக்கங்களில் எழுதக்கூடிய கதைக்களத்தின் சுருக்கமோ என்று நினைக்கத்தோன்றும். 

இந்த நாவலைச் சற்று விரித்து எழுதிய ‘கோபால கிராமத்து மக்கள்’ என்ற அவருடைய நூலுக்கு சாகித்ய அகாதமி வெகு காலம் முன்பே விருது வழங்கியுள்ளது.  

 

இந்த நாவலைப்பற்றி இணையதளத்தில் ‘ரஞ்சனி நாராயணன் என்பவர் எழுதிய ரத்தினச் சுருக்கத்தை இங்கு தருவதில் பெருமை கொள்கிறேன்.  

இணைய தளத்திலிருந்து: 

 

ஒரு கிராமத்தின் விடியலுடன் தொடங்குகிறது கதை. ஒரு ஜீவ இயக்கத்துடன் கிராமம் பூரணமாக விழித்துச் செயல்பட ஆரம்பிப்பதை படிக்கத் துவங்கும்போது நமக்குள் தோன்றும் நவரசமான உணர்வுகள் புத்தகத்தை முடிக்கும்வரை நீடிக்கிறது.  கோட்டையார் வீடு, அதன் வாரிசுகள் என்று கொஞ்சம் கொஞ்சமாக நம் கண் முன் கோபல்ல கிராமம் விரிகிறது. கோட்டை கட்டி வாழ்ந்தவர்கள் இல்லை; அந்த வீட்டை சுற்றி கோட்டைச்சுவர் கட்டியிருந்ததனால் கோட்டையார். ‘ரொம்பத் தாட்டியாக வாழ்த்த குடும்பம்; இப்போது சிதிலமடைந்த வீடும், இடிபாடுகள் அடைந்த கோட்டைச் சுவரும் புராதன சின்னங்கள் போல சோகமாய் நின்று கொண்டிருக்கின்றன’. கோட்டையார் வீட்டு சகோதரர்கள் ஏழு பேர்கள். அண்ணன் தம்பி ஏழுபேரும் குடும்பத்தில் ஒவ்வொரு ‘இலாகா’வை நிர்வகித்தார்கள்.

இந்த சகோதரர்களின் கதையை வாசித்துக் கொண்டே இருக்கும்போது அந்த கதைக்குள் ஒரு கதைசொல்லியாக 137 வயதான பூட்டி மங்கத்தாயாரு அறிமுகம் ஆகிறாள்.  ‘எலும்பும் தோலுமாய் நீண்ட மூக்குடன் இருக்கும்’ மங்கத்தாயாருவை ‘பார்க்கும்போதெல்லாம் ரோமத்தை எல்லாம் இழந்துவிட்ட ரொம்ப வயசான ஒரு கழுகின் ஞாபகம் வரும்’ என்கிறார் கி.ரா.

இவள் கதை சொல்லும் அழகில் நாமும் அவளைப்போலவே நேரம் காலம் தெரியாமல் லயித்து விடுகிறோம். அந்த லயிப்பில் இவள் வர்ணிக்கும் சில அமானுஷ்யங்கள், இவள் எந்தத் தலைமுறையைச் சேர்ந்தவள் என்பதெல்லாம் கேள்வி கேட்கப்படாமல் நம்மால் ஒத்துக்கொள்ளப்பட்டுவிடுகிறது. மங்கத்தாயாரு தாங்கள் துலுக்க ராஜாவிடமிருந்து தப்பி வந்த கதையை சொல்லும்போது அந்தக் கதைக்குள்  ஒரு பெண்மணி தனது பெண் துளசியின் கதையை சொல்லுகிறார். கதைக்குள், கதைக்குள், கதை!

மங்கத்தாயாருவின் கதையின் கதாநாயகி சென்னாதேவி தன் அழகால் எல்லோரையும் தன்னை கையெடுத்துக் கும்பிடும் தேவியாக நினைக்க வைக்கிறாள். ஆனால் அத்தனை அழகு இருக்கும் பெண்ணின் வாழ்க்கை துன்பமயமாகத்தான் இருக்கும் என்று மங்கத்தாயாரு சொல்லும்போதே நம் மனம் பதறத் தொடங்கிவிடுகிறது. என்ன ஆகியிருக்கும் சென்னாதேவிக்கு? துலுக்க ராஜாவிற்கு ராணியாக வாழ்க்கைப்படும் ‘அதிர்ஷ்டம்’ உண்டாகிறது சென்னாவிற்கு. திருமணத்திற்கு முன் தினம்தான் தெரிகிறது மாப்பிள்ளை வீட்டவர்கள் பசு மாமிசத்தை தங்களுக்கு விருந்தாகக் கொடுக்க இருக்கிறார்கள் என்று! அதிர்ந்து போய் அங்கிருந்த தப்பி ஓடிவரும் இவர்கள் வந்து சேருவது ‘அரவ’ (தமிழ்) தேசத்திற்கு. அங்கு தங்களுக்கென்று ஒரு கிராமத்தை அமைத்துக் கொள்ளுகிறார்கள். இதுதான் கோபல்ல கிராமம். இந்தப் பூர்வ கதை மங்கத்தாயாருவின் மூலம் சொல்லப்படுகிறது.

நிகழ்காலத்தில் நடக்கும் கதை இரண்டாம் அத்தியாத்தில் தொடங்குகிறது. ‘காதுல பாம்படம் போட்டுக்கொண்டு, சேப்புக் கண்டாங்கிச் சேலை கட்டியிருக்கும் ஈருசுரு ஆள்’ மங்கம்மா கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வருகிறாள். வழியில் ஊருணியில் இறங்கி நீர் குடிக்கும்போது ஒரு வழிப்போக்கனால் கொல்லப்படுகிறாள் அவளது காதுகளில் தொங்கும் பாம்படங்களுக்காக. முதல் அத்தியாயத்திலேயே கோபல்ல கிராமத்தின் பஞ்சாயத்து பற்றி ஆசிரியர் விலாவாரியாகச் சொல்லிவிடுவதால் இந்தக் கொலைக்கு என்ன தண்டனை, அது எப்படி நிச்சயிக்கப்படுகிறது, எப்படி நிறைவேற்றப்படுகிறது என்பதெல்லாம் நமக்குள் கதையை ஊன்றிப் படிக்க உத்வேகம் கொடுக்கும் விஷயங்கள். பூர்வ கதைக்கும் இப்போது நடக்கும் கதைக்கும் நடுவில் வேறு வேறு மனிதர்களின் கதைகள் – எல்லாமே கோபல்ல கிராமத்தின் கதைதான்.

சீரியஸ்ஸான கதையாக இருக்குமோ என்று இந்தப் புத்தகத்தைப் படிக்க யோசிப்பவர்களுக்கு இந்த கோபல்ல கிராமத்தின் காமெடியன் அக்கையாவின் வேடிக்கை வினோதங்கள் நல்ல சிரிப்பு விருந்து. சுந்தரப்ப நாயக்கரை ‘புதூச் சுண்ணாம்பு எடுத்துக்க…’ என்று சொல்லி ஏமாற்றுவதும், தான் ரொம்பவும் அழகி என்ற இறுமாப்பால் இவரை மதிக்காமல் இருக்கும் துண்டபண்டு (கோவைப்பழம் போல சிவப்பாக இருந்ததால் வந்த பெயர்) வெங்கிடம்மாவை விளையாட்டாக ஒரு பொய்யைச் சொல்லி பழி வாங்குவதும் இவரது முத்திரை காமெடிகள். இவர் வெறும் காமெடியன் மட்டுமல்ல; ஒரு கண்டுபிடிப்பாளியும் கூட! கோடை உழவு முடிந்து, முதல் மழை பெய்ததும் விதைப்புக்குத் தயாராக்க நிலத்தை உழ ஆரம்பிக்கும் உழவுக்கு எழுப்படிப்பு என்று சொல்லுவார்கள். இதற்கு ஒத்தைக் கலைப்பையை வைத்துக் கொண்டு உழுவதால் உழுது முடிக்கும் முன்பு மழை வந்துவிடும். மழைக்கு முன் உழுது முடிக்க அன்று அக்கையாவால் கண்டுபிடிக்கப்பட்ட இரட்டைக் கலப்பை கரிசல் காட்டில் பெருத்த மாறுதலையும், பரபரப்பையும் அந்த நேரத்தில் உண்டு பண்ணியது. அக்கையா சொல்லும் ராஜகுமாரனின் கதை நிச்சயம் படித்து, ரசித்து, சிரித்து மகிழ வேண்டிய ஒன்று. அக்கையாவின் தலைமையில் கிராம மக்கள் தீவட்டிக் கொள்ளைக்காரர்களுடன் ‘சந்திப்பு’ நடத்துவது இந்நாளைய திரைப்படங்களில் வரும் ‘க்ளைமேக்ஸ்’ காட்சிகளுக்கு சற்றும் சளைத்ததில்லை!

ஜோஸ்யம் எங்க்கட்ராயலு, மண்ணுதின்னி ரெங்க நாயக்கர், பச்சைவெண்ணெய் நரசய்யா, பயிருழவு பங்காரு நாயக்கர், வைத்தி மஞ்சையா, வாகடம் புல்லையா, ஜலரங்கன் யாரைச் சொல்ல, யாரை விட? இவர்களது ஒவ்வொரு பெயருக்கும் ஒரு கதை! ஒரு நிகழ்வு! இப்படி பல பாத்திரங்கள் நம்முடன் சகஜமாக உலா வருகிறார்கள். எழுத்தாளருக்கும் நமக்கும் இடையில் இடைவெளி என்பதே இல்லை என்பதே இந்தக் கதையின் சிறப்பம்சம்.

நான் இங்கு சொன்னது 25% அவ்வளவே. மீதி 75% புத்தகம் வாங்கி நீங்களாக படித்து ரசிக்க வேண்டியவை. திரு கிரா வின் நடையின் கோபல்ல கிராமம் நம் கண் முன் உயிர்த்தெழுந்து வருகிறது என்று சொன்னால் மிகைப்படுத்தல் இல்லை.

(நன்றி: https://ranjaninarayanan.wordpress.com/2014/01/26/கோபல்ல-கிராமம்)

 

இந்த நாவலைப் பற்றிய அருமையான தொகுப்பு வீடியோ வடிவில் உங்கள் பார்வைக்கு: 

 

 

குவிகம் புத்தகப் பரிமாற்றம்

குவிகம் புத்தகப் பரிமாற்றம்பற்றி ஒரு நிகழ்வு குவிகம் இல்லத்தில் நவம்பர் 18இல்  நடைபெற்றது.
அந்த விழாவில் நிறைய நண்பர்கள் தங்களுக்குப் பிடித்த புத்தகத்தைப்பற்றிப் பேசி அந்தப் புத்தகத்தையே பரிமாற்றம் செய்ய வழங்கினார்கள்.
அந்த நிகழ்வு பற்றி ஹிண்டு நாளிதழில் டவுன் டவுன் என்ற பகுதியில் முன்னோட்டமாக  வழங்கிய  செய்தி:
DOWN TOWN

Book exchange drive on Nov. 18

Time: At 3.30 p.m.

Also, there will be a book exchange drive in which a participant can lend a book he has read and borrow another book.

Both Tamil and English books can be exchanged.

Participants are requested to give a brief introduction and review about the books they are lending, says a press release.

The programme will be held at Kuvikam Illam, Flat No:6, Third Floor, Silver Park Apartments, Thanikachalam Road, T.Nagar.

For details, call 9791069435 / 8939604745

ஏ ஆர் ரஹ்மானின் குறும்படம்

கண்ணீல் நீர்மல்க இந்தக் குறும்படத்தைப் பார்த்து இசைக்குப் புது வடிவம் கொடுத்த நிதிலாவையும் அதை வடிவமைத்த ஏ ஆர் ரஹ்மான் அவர்களையும் எப்படிப் பாராட்டுவதேன்றே தெரியவில்லை. 

பார்த்துப் பெருமிதமடையுங்கள்!  

திரைக்கவிதை – கண்ணதாசன்

Image result for பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சவுக்கியமா

பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்யமா
யாரும் இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்யமே
கருடன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது!

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும்கூட மிதிக்கும்!
மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
மானமுள்ள மனிதனுக்கு ஒளவை சொன்னது
அது ஒளவை சொன்னது அதில் அர்த்தம் உள்ளது! (பரம சிவன்)

வண்டி ஓடச் சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும் அந்த
இரண்டில் ஒன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும்
உனைப்போல் அளவோடு உறவாட வேண்டும்
உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது
அது சிறுமை என்பது அதில் அர்த்தம் உள்ளது! (பரமசிவன்)

நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவும் வானும் போலே
நான் நிலவு போலத் தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே
என் உள்ளம் எனைப் பார்த்து கேலி செய்யும்போது
இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதியேது
இது கணவன் சொன்னது இதில் அர்த்தம் உள்ளது. (பரமசிவன்)

 

பஞ்ச தந்திரக் கதைகள்

Image result for பஞ்சதந்திரம்

கி.மு மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த விஷ்ணு சர்மாவால் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட 86 கதைகளின் தொகுப்பே இந்த பஞ்சதந்திரக் கதைகள். 

பஞ்சதந்திரக் கதைகள் பிறந்த வரலாறு: ( நன்றி:  https://ta.wikipedia.org/wiki/)

தென்னிந்தியாவில் மகிலாரோப்பொயம் என்று ஒரு நகரம் இருந்தது. அந்த நகரத்தில் அமரசக்தி எனும் ஒரு மன்னன் ஆண்டு வந்தான். அம்மன்னனுக்கு பகுசக்தி, உக்கிரசக்தி, அனந்த சக்தி எனும் மூன்று மகன்கள் இருந்தனர். இவர்கள் மூவருமே முட்டாள்கள், குறும்புக்காரர்கள், தொல்லை தருபவர்கள்.  இவர்களுக்குக் கல்வி பயில்வதில் சிறிதுகூட ஆர்வமோ, ஆசையோ கிடையாது.

மன்னன் அமரசக்தி தனது மகன்களின் இந்த தீயகுணங்களைக் கண்டு மனம் வெதும்பினான். தன் மகன்கள் கல்வி கற்கவில்லையே எனக் கவலையில் ஆழ்ந்தான். இந்தக் கவலையை ஒரு நாள் அரசவையில் வெளியிட்டு மனம் வருந்தினான். அரசனின் வருத்தத்தை அறிந்து சபையினர் அனைவரும் அமைதியாக இருந்தனர்.

இந்நிலையில் விஷ்ணு சர்மா என்கிற ஒரு பண்டிதர், “அரச குமாரர்களை என்னிடம் விட்டுவிடுங்கள். ஆறே மாதங்களுக்குள் நான் அவர்களுக்கு அரசியல் குறித்த இரகசியங்களை எல்லாம் கற்பித்து விடுகிறேன்” என்றார்.

மன்னன் அமரசக்தியும் இதற்கு ஒப்புக் கொண்டான். மூன்று அரச குமாரர்களும் விஷ்ணு சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

விஷ்ணு சர்மா அந்த மூன்று அரச குமாரர்களையும் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அவர்களுக்கு எளிமையாகப் புரிந்து கொள்ளும்படியான, அவர்களது மனத்தைக் கவரும் கதைகளைக் கூறினார். அந்தக் கதைகள் அனைத்தும் சுவையாக இருந்தன. அவற்றை அரச குமாரர்கள் மகிழ்ச்சியுடன் கேட்டனர்.  இந்தக் கதைகள் மூலமாக விஷ்ணு சர்மா அவர்களுக்கு அரசியல்பற்றிய உத்திகளையும், இரகசியங்களையும் சொல்லிக் கொடுத்தார். ஆறு மாதங்களுக்குள்ளாக முன்று அரச குமாரர்களும் அரசியலில் தேர்ச்சி பெற்றவர்களாக அரண்மனைக்குத் திரும்பிச் சென்றனர்.

விஷ்ணு சர்மா அரச குமாரர்களுக்குச் சொன்ன கதைகள் “பஞ்ச தந்திரக் கதைகள்” என அழைக்கப்படுகின்றன.

தமிழில் பஞ்சதந்திரக் கதைகள் நிறையப் பதிப்புகள் வந்துள்ளன. பல ஆண்டுகளுக்கு முன் தமிழ்ப் பாடப் புத்தகங்களிலும்  இடம்பெற்ற கதைகள் இவை.

Cover art

 

கிழக்குப் பதிப்பகத்தில்  சரவணன் அவர்கள் எழுதிய பஞ்ச தந்திரக் கதைகள் புத்தகத்திற்கு எழுதிய முன்னுரையைப் படித்தாலே அந்தக் கதைகளின் மீது நமக்கு புதிய ஈர்ப்பு பிறக்கும்.

காலம் காலமாகச் சொல்லப்பட்டு வருபவை என்றாலும் ஒருசேர பஞ்சதந்திரக் கதைகளை வாசிக்கும்போது ஒரே சமயத்தில் குதூகலமும் மலைப்பும் ஏற்படுகிறது. ஒரு கதை, அந்தக் கதையையொட்டி இன்னொன்று, அந்த இன்னொன்றின் வாலைப் பிடித்து மற்றொன்று என்று அடுத்தடுத்து விரிந்துசெல்லும் இந்தக் கதைகளை சுவாரஸ்யத்துக்காகவே திகட்டத் திகட்டப் படித்து மகிழலாம்.  அல்லது, ஒவ்வொரு கதையிலும் ஒளிந்துள்ள ஆழமான அரசியல் பாடங்களையும் ராஜதந்திர நுணுக்கங்களையும் கண்டறிந்து மலைத்துப் போகலாம்.

அப்போதைய அரசர்களுக்கு உதவும்பொருட்டு மிகுந்த சாதுரியத்துடன் உருவாக்கப்பட்ட இந்தக் கதைகள் இன்றைய காலகட்டத்துக்கும் கச்சிதமாகப் பொருந்துவதைப் பார்க்கும்போது மலைப்பும் மகிழ்ச்சியும் இரட்டிப்பாகின்றன.

பல நூறு ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் நம்மை மகிழ்விக்கும் இந்தப் பஞ்சதந்திரக் கதைகள் மேலும் பல நூற்றாண்டுகளுக்கு நிலைத்து நிற்கும். காலத்தைக் கடந்து நிற்கும் இந்த அற்புத கிளாசிக்கை நமக்கு நெருக்கமான மொழியில், ஈர்க்கும் முறையில் மறு வார்ப்பு செய்திருக்கிறார் நூலாசிரியர் ப. சரவணன்.

குழந்தைகள், பெரியவர்கள் இருவரிடமும் உரையாடுவதற்கு பலவித மிருகங்களும் பறவைகளும் இந்தப் புத்தகத்தில் காத்திருக்கின்றன. மொத்தம் 81 கதைகள். படிக்க, பாதுகாக்க, பரிசளிக்க ஏற்ற அற்புதமான புத்தகம் இது.

பஞ்ச தந்திரம் என்றால் என்ன?

 

1.மித்திர பேதம் – நட்பை கெடுத்து பகை உண்டாக்குவது.

2.மித்ரலாபம் – தங்களுக்கு இணையானவர்களுடன்கூடி பகை இல்லாமல் வாழ்வது

3.சந்தி விக்ரகம் -பகைவரை உறவுகொண்டு வெல்லுதல்

4.லப்தகாணி (artha nasam) -கையில் கிடைத்ததை அழித்தல்

5.அசம்ரெஷிய காரியத்துவம் – எந்த காரியத்தையும் விசாரணை செய்யாமல் செய்வது.

பஞ்ச தந்திரக் கதைகளைப் படிக்கும்போது  உங்களுக்கு 96 படம் பார்க்கிறமாதிரி உங்கள் இளமைக் கால நினைவுகள் பறந்துவரும். 

இந்த வீடியோவைப் பாருங்கள்:  ( கமல் மூன்றாம் பிறை ஞாபகம் வருகிறதா? )

 

 இந்தப் படங்களையாவது பாருங்கள்:

 

Related imageImage result for பஞ்சதந்திரக் கதைகள்

 

ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு படம் என்பார்கள். இந்தக் கதையைப் படியுங்கள்: 

 

Short Stories from Panchatantra - The Stork and The Crab Story with Moral: Excess of greed is harmful.

நண்டு, கொக்கைக் கொன்ற கதை!

வசந்த புரம் என்றொரு ஊர் இருந்தது. அழகிய வனாந்தரமும் நீர் நிலைகளும் இருக்கும் அந்த ஊரில் ஒரு பெரிய குளம் இருந்தது.

அதில் ஒரு கொக்கு தினசரி மீன் பிடித்து உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தது. தினசரி அதிக நேரம் காத்திருந்து மீனைப் போராடிப் பிடிப்பதால் கொக்கு சலிப்புற்றிருந்தது.

ஒரு நாள் கொக்கின் மூளையில் ஒரு யோசனை தோன்றியது. இந்த மீன்களை அவைகளின் சம்மதத்தோடே நாம் விரும்பிய இடத்தில் கொண்டு போய் திண்றால் எப்படி இருக்கும் என்று யோசித்தது. அதற்கு ஒரு வஞ்சகமான திட்டமும் தயாரித்தது.

ஒரு நாள் கொக்கு வருத்தமுடன் ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தது. துள்ளிக் கொண்டிருந்த மீன்களில் ஒன்றுக்கு சந்தேகம் வந்தது. “கொக்கு நம்மைப் பார்த்தவுடன் கவ்விக் கொள்ளுமே. சும்மாவிடாதே, ஆனால் இது செயலற்று நிற்கின்றதே என்னவாக இருக்கும்” என்று, யோசித்தவாறே அதன் முன் வந்தது.

“என்ன கொக்காரே! உன் ஆகாரத்தைக் கொத்தாமல் சும்மா நிற்கிறீர்”? என்றது. அதற்கு கொக்கு கூறிற்று “நான் மீனைகொத்தித் தின்பவன்தான், ஆனாலும் இன்று எனக்கு மனசு சரியில்லை” என்றது.

“மனசு சரியில்லையா ஏன்”? என்றது மீன்.

‘அதையேன் கேட்கிறாய்..” என்று அலட்டியது கொக்கு.

“பரவாயில்லை சொல்லுங்களேன்’ என்றது மீன். சொன்னால் உனக்கு அதிர்ச்சியாக இருக்கும் என்றது மீன்.

மீனுக்குப் பரபரத்தது. “சொன்னால்தான் தெரியும்” என்றது.

“வற்புறுத்திக் கேட்பதால் சொல்கிறேன். இப்போது ஒரு மீனவன் இங்கே வரப்போகிறான்”, என்று இழுத்தது கொக்கு.

“வரட்டுமே” என்றது மீன்.. “என்ன வரட்டுமே? உங்களையெல்லாம் ஒட்டுமொத்தமாகப் பிடித்துச் சென்றுவிடப் போகிறான்” என்றது கொக்கு.

இதைக் கேட்ட மீன்கள் அனைத்தும் அதிர்ச்சியடைந்தன. அவை தங்களைக் காப்பாற்று மாறு கொக்கிடமே வேண்டின.

ஆனால் கொக்கு “நான் என்ன செய்வேன்? என்னால் மீனவனோடு சண்டை போட முடியாது. கிழவன் நான், வேண்டுமானால் உங்களை இக்குளத்திலிருந்து வேறொரு குளத்துக்குக் கொண்டு போகிறேன். அதனால் எனக்கும் நல்ல பெயர் வரும். நீங்களும் பிழைத்திருப்பீர்கள்”, என்றது மிகவும் இறக்கம் கசிய.

மீன்கள் எல்லாம் தம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அதன் பேச்சை நம்பின.

“எங்கள் உயிரைக் காக்க நீங்களே உதவி செய்கிறேன் என்கிறீர்கள். அதன்படியே செய்யுங்கள்”, என்றன மீன்கள் எல்லாம் ஒருமித்த குரலில்.

கொக்குக்குக் கசக்குமா காரியம்?. நடைக்கு ஒவ்வொன்றாக குலத்திலிருக்கின்ற மீன்களை யெல்லாம் கௌவ்விக் கொண்டுபோய் சில மீன்களைத் தின்று, மற்ற மீன்களை ஒரு பாறையில் உலரவைத்து.

குளத்திலிருந்த நண்டு ஒன்று இதைப் பார்த்துக் கொண்டே இருந்தது. அதற்கும் வேறு குளத்திற்குச் செல்ல உள்ளுக்குள் ஆசை சுரந்தது.

அந்த நண்டு கொக்கிடம் வந்து “வயோதிகக் கொக்கே! இந்த மீன்களையெல்லாம் எங்கே கொண்டு போகிறீர்களோ அங்கேயே என்னையும் கொண்டு போங்கள், என்னையும் மீனவனிடமிருந்து காப்பாற்றுங்கள்”, என்று கெஞ்சியது. நண்டு கெஞ்சுவதைப் பார்த்த கொக்கு அதன் மேல் இறக்கப்பட்டு நண்டையும் கௌவிக்கொண்டு பறந்தது. பறக்கும் போது வழியில் மீன்களின் முள்ளுடல்கள் ஆங்காங்கே சிதறிக் கிடப்பதை கண்டது நண்டு.

அதைப் பார்த்த நண்டுக்கு ஒரே அதிர்ச்சி.

வேறு நீர்நிலைக்குக் கொண்டுச் செல்வதாகக் கூறி மீன்களைத் தின்றுவிடும் கொக்கின் வஞ்சகம் நண்டுக்குச் சட்டென்று புரிந்துவிட்டது. தன் நிலையும் அப்படித்தானா? என்று நண்டு பயப்படத் துவங்கியது.

உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நண்டுக்கு ஒரு உபாயம் தோன்றியது. வைரத்தை வைரத்தால் அறுப்பது போல் அதற்கு மூளை வேலை செய்தது. கொக்காரே! நீங்கள் என்மேல் இறக்கப்பட்டு எடுத்துக்கொண்டு வந்தீர்கள். ஆனால் அங்கே என் உறவினர்கள் பலர் வரப்போகும் ஆபத்து தெரியாமல் இருப்பதால், என்னை மீண்டும் அங்கே கொண்டு சென்றால் அவர்களிடம் விஷயத்தைச் சொல்லி அவர்களையும் உங்களுடன் வரத் தயார் செய்வேன்” என்றது நண்டு.

கொக்குக்கு ஒரே சந்தோஷம். இன்னும் நிறைய நண்டுகள் கிடைக்கப் போவதை நினைத்து மகிழ்ச்சி அடைந்து.

“அப்படியா, இன்னும் இருக்கிறதா நண்டுகள்?”. என்று கேட்டுக் கொண்டே பழைய குளத்திற்கு மீண்டும் நண்டைக் கொண்டு போனது.

குளத்துக்கு நேராக வரும்போதும் அதுவரை அமைதியாக இருந்த நண்டு தன் கொடுக்கினால் கொக்கின் கழுத்தை இரண்டு துண்டாக்கிவிட்டுக் குளத்து நீரில் வீழ்ந்து உயிர் பிழைத்துக் கொண்டது.

குளத்தில் மிச்சம் இருந்த மீன்கள் பிழைத்துக் கொண்டன.

பாடம்: மீனைத் தின்பது தான் கொக்கின் குணமே என்னும் போது, கொக்கு மீன்களைக் காப்பதாகச் சொன்னதை மீன்கள் நம்பியிருக்கக் கூடாது. வாஞ்சக மனத்தான் உதவி செய்தாலும் அது அபாயத்தில் முடியும் ஆபத்துண்டு. எனவே ஒருவரை நம்பும் முன்பாக அவரது இயல்பான குணத்தை நன்கறிந்தே நம்புதல் வேண்டும் என்ற கதையை மந்திரியார் இளவரசர்களுக்கு எடுத்துச் சொன்னார்.:

நமது பாரம்பரியக் கதைகளை அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்வது நமது கடமையே ஆகும்.

(நன்றி: இணையதளம்)

எஸ் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு சாகித்ய அகாடமி 2018 விருது

Image may contain: 4 people, text

 

 

 

 

 

 

 

 

2018 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது மதிப்பிற்குறிய எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு ” சஞ்சாரம்” என்ற நூலுக்காக வழங்கப்பட்டிருக்கிறது. 

இலக்கிய உலகில் அனைவரும் ஒருசேர இதை வரவேற்றிருக்கிறார்கள். 

தகுதி வாய்ந்தவருக்கும் தகுதி வாய்ந்த நூலுக்கும் கிடைத்த  விருது இது. 

இலக்கிய வாசகர்கள் அனைவரும் இந்த விருதைத் தாங்களே பெற்றதுபோல் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். 

புத்தக நண்பர்கள் குழுவில் இந்த நூலைப்பற்றி விமர்சனம் செய்தபோதே  இந்த நூலுக்கு விருதுகள் குவியவேண்டும் என்பதே அனைவரது எண்ணமாக இருந்தது. 

 திரு எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு குவிகம் இதய பூர்வமான வாழ்த்துதல்களைத் தெரிவித்துக் கொள்கிறது! 

 இதற்கான அவரது ஏற்புரையை சுருதி டிவி  வழங்கியுள்ளது. அதை இங்கே பதிவுசெய்வதில் பெருமகிழ்வு எய்துகிறோம். 

(நன்றி சுருதி டிவி )

 

கார்த்திகை

Image result for கார்த்திகை திருவிழா

 

தீபாவளிக்குப் பிறகு நாம் சிறப்பாகக் கொண்டாடுவது கார்த்திகை!

கார்த்திகைக்கு  அவல் மற்றும் நெல்  பொரி உருண்டைகள் ,  வேர்கடலை உருண்டை , பொட்டுக்கடலை உருண்டை, அப்பம், சுகியன் , வடை பாயசம் செய்வார்கள்.
கார்த்திகை முருகப் பெருமானின் ஜன்ம நட்சத்திரம். முருகன் கோவில்களிலெல்லாம் அன்று அமோகமான அலங்காரம், அபிஷேகம்!அறுபடை வீடுகளில்  கார்த்திகை நாட்களின் தரிசனத்திற்கு வரும் கூட்டத்தின் அளவிற்கு எல்லையே கிடையாது. 

நலமிகு கார்த்திகை நாட்டவரிட்ட…’, `கார்த்திகைச் சாற்றில் கழிவிளக்கைப் போன்றனவே….’ ஆகிய வரிகளின் மூலம் வீடுகளும் தெருக்களும் விளக்குகளால் நன்கு அலங்கரிக்கப்பட்டுள்ளன என்பதை சங்க இலக்கியங்களின்வழி அறியமுடிகிறது.

பன்னிரு தமிழ் மாதங்களுள் ஒன்று கார்த்திகை.  இந்த மாதத்தில் பெளர்ணமி, கார்த்திகை நட்சத்திரத்துடன் வருகின்ற நாளைத்தான் நாம் கார்த்திகை தீபமாகக் கொண்டாடுகின்றோம்.

கார்த்திகை என்பதற்கு `அழல்’, `எரி’, `ஆரல்’ போன்றவற்றைப் பொருளாகக் கொள்ளலாம். கார்த்திகை தீபம் என்றவுடன், நம் அனைவரின் கண்முன்னே வலம்வரும் காட்சி,  திருவண்ணாமலை தீபம் என்றால் அது மிகையில்லை.

இந்த கார்த்திகை விளக்கீடு எங்கெல்லாம் சொல்லப்பட்டிருக்கு நம் இலக்கியங்களில்?

கார் நாற்பது:

நலம் மிகு கார்த்திகை, நாட்டவர் இட்ட
தலை நாள் விளக்கின் தகை உடையவாகி,
புலம் எலாம் பூத்தன தோன்றி;-சிலமொழி!-
தூதொடு வந்த, மழை.

சீவக சிந்தாமணி:

தார்ப் பொலி தரும தத்தன்
தக்கவாறு உரப்பக் குன்றில்
கார்த்திக விளக்கு இட்டு அன்ன வியர்த்துப் பொங்கி
கடி கமழ் குவளப் பந்தா

நற்றிணை: பாடல் 58

“வீரை வேண்மான் வெளியன் தித்தன்
முரசு முதல் கொளீஇய மாலை விளக்கின்
வெண் கோடு இயம்ப, நுண் பனி அரும்ப,
கையற வந்த பொழுதொடு மெய் சோர்ந்த

வீரை என்னும் ஊரிலிருந்துகொண்டு ஆண்ட வேளிர்குடி அரசன் வெளியன். அவன் மகள் தித்தன். அவன் முரசில் திரி போட்டு விளக்கேற்றி வைத்தான். மாலையில் அந்த விளக்கை ஏற்றியபோது வெண்சங்கு ஊதப்பட்டது. பனி பொழிந்தது. (இந்தக் காலத்தில் போருக்குச் சென்ற தன் தலைவன் மீள்வான் எனத் தலைவி நம்புகிறாள்.)

கார்த்திகைக்கு இன்னொரு பெயர் ஆரல்(ஆஅல்).

மலைபடுகடாம் – பாடல் 99-101

பெயலொடு வைகிய வியன்கண் இரும்புனத்து
அகலிரு விசும்பின் ஆஅல் போல
வாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை’

 

தமிழ் நூல்கள் குறிப்பிடுவது மட்டுமன்றி கல்வெட்டுகளும், கார்த்திகைப் பெருவிழா கொண்டாடியதை எடுத்துக்காட்டுகிறது. முதலாம் ராசேந்திர சோழனின் ஒன்பதாம் ஆட்சியாண்டில் (கி.பி.1021) வெட்டப்பட்ட கல்வெட்டில் கார்த்திகைத் திங்கள் கார்த்திகை நாளில் விளக்கெரித்ததற்கு பதினாறு நாழி நெய்க்காக பதினாறு ஆடுகளை திருப்பாற்றுத்துறை மக்கள் கோவிலுக்குத் தானமாகக் கொடுத்த செய்தியினைக் குறிப்பிடுகிறது.

தமிழ் மக்களின் பண்டைய விழாவான கார்த்திகை விழா, பிற்காலத்தில் புராணக் கதையோடு தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. சமஸ்கிருத காவிய நாடகங்களில் கார்த்திகை பவுர்ணமி அன்று கவுமுதி மகோற்சவம் என்ற நிறைமதி விழா நடைபெற்றதை குறிப்பிடுகிறது. ஈராயிரம் ஆண்டுகளாக இப்பெருவிழா சிறப்புற நடைபெற்று வந்ததை இலக்கியங்களும், கல்வெட்டுகளும் துணைநின்று நமக்கு சான்று பகர்கின்றது.

கார்த்திகை என்பது கார் -அதாவது மேகம் திகையும் காலம்.

கார்காலம் (மழைக் காலம்) முடிந்து கூதிர்காலம் (குளிர் காலம்) ஆரம்பிப்பது. மழையும் நின்று, பனியும் துவங்கும் ஒரு மயக்கமான காலம்.

அந்நாளில் போர் நடக்கும்போது ஊரைவிட்டு, வீட்டைவிட்டுச் சென்ற வீரர்கள் கார் (மழைக்கு) முன்பே வீடு திரும்பிவிடுவர். மழைக் காலத்தில் போர் நடக்காது.

ஆனால் முக்கியப் பணி/களத்தலைவர் மட்டும் களம் நாட்டி இருந்து, கூதிர் காலம் வரும்போது திரும்பி வரல் மரபு!

பனி பெய்யும்முன் வரும், படைத் தலைவர்களை வரவேற்க விளக்கு ஏற்றி வைப்பது. சீக்கிரம் இருட்டிவிடும் காலமாதலால், ஒளி பழக தீபம் நிறைப்பதே விளக்கீடு!

ஆஅல் என்பது கார்த்திகை மாதத்தில் தோன்றும் கார்த்திகை என்னும் விண்மீன் கூட்டத்தைக் குறிக்கும். இந்த மீன் கூட்டத்தின் வெண்ணிறம் போல முசுண்டைப் பூ மலர்ந்ததாம்.

இவையெல்லாம் இயற்கை / பருவ கால மாற்றத்தைக் குறிக்கும் தீபங்களே. எதிலும் புராணக் கதைகள் இல்லை.

மெய்த் தமிழ் அறிவோம். கார்த்திகை விளக்கீடு வாழ்த்துக்கள் !

தலையங்கம்

 

Image result for election 2019

 

வரப்போகிற 2019 நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்  வருகிற 5 மாநிலங்களுக்கான தேர்தல் அதன் முக்கியத்துவத்தைக் கருதி அரை இறுதித் தேர்தல் ( செமி  பைனல்)  என்று சொல்லப்பட்டது.

அப்படிப்பட்ட தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது.

அதன் முடிவுகள்பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

பாரதிய ஜனதா கட்சி  மூன்று மாநிலங்களை இழந்துள்ளது. ராஜஸ்தான், சத்தீஸ்கர்,மத்தியப்பிரதேசம் மூன்றும் பா ஜ க விற்கு தூண்கள் என்று சொல்லப்பட்டன.  அந்தத் தூண்கள் சரிந்துள்ளன.

தெலுங்கானாவின் சந்திரசேகர் ராவ் அமோக வெற்றிபெற்று காங்கிரஸ் மற்றும் தெலுகுதேசம் கூட்டணியை மண்ணைக் கவ்வச் செய்திருக்கிறார்.பா ஜ க மருந்துக்காக ஓரிரு  தொகுதிகளில்  வெற்றி பெற்றிருக்கிறது.

காங்கிரஸ் வசம் இருந்த மிசோரம் தற்போது உள்ளூர் கட்சியின் கையில்.

அதுமட்டுமல்ல;

பா ஜ க ஆண்ட  மூன்று மாநிலங்களிலும்  காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது.

எந்த காங்கிரஸ் ? முழுதும் அழிக்கப்பட்டுவிட்டது என்று   பா ஜ கா வினால் அறிவிக்கபட்ட கட்சி!

பப்பூ என்று தனிப்பட்ட முறையில் தாக்கப்பட்ட ராகுலின் தலைமையில் காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது.

இதை பா ஜ கவின் தோல்வி என்று குறிப்பிடவேண்டுமேதவிர காங்கிரஸின் வெற்றி என்று எடுத்துக்கொள்ள முடியாது.

பா ஜ க பல ஆண்டுகளாக இந்த மாநிலங்களில் ஆண்டு வந்ததால் மாற்றத்தை வேண்டி மக்கள் பா ஜ க வை நிராகரித்திருக்கலாம்.

அல்லது மாநில அளவில், மக்களின்  எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படவில்லை என்ற நிராசையின் காரணமாயிருக்கலாம்.

அல்லது மதச்சார்பின்மையா இந்துஸ்தானா என்ற ஒற்றையா ரெட்டையா கேள்விக்கு மக்கள் அளிக்கும் பதிலாயிருக்கலாம்.

யாராலும் சொல்லமுடியாது.

முக்கியமான கேள்வி எல்லோர் மனதிலும் தற்சமயம் எழுவது:

இது 2019இல் வரப்போகும் பொதுத் தேர்தலை எப்படிப் பாதிக்கும்?

பாதிக்காது என்பது நம் எண்ணம்.

மாநில அரசியல் வேறு, மத்திய அரசியல்  வேறு.

கூட்டணி இல்லாத ஒரே கட்சி ஆண்டால்தான் நாட்டுக்கு நல்லது.

அதற்கு பா ஜ க தான் வரமுடியும்.

அதற்காக பா ஜ க வும் தங்கள் கொள்கையில் சரியான மாற்றங்கள் கொண்டுவரவேண்டும்.

செய்வார்களா?

 

 

இலக்கியச் சிந்தனை + இலக்கிய வாசல்

இடம்:  ஶ்ரீனிவாச காந்தி நிலையம், அம்புஜம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டை

நாள்: 29.12.18 சனிக்கிழமை மாலை 6 மணி அளவில்

இந்த மாதம் இலக்கியச் சிந்தனை சார்பில் புதுவை ராமசாமி அவர்கள்

“ரசிகமணி  டி கே சி ” அவர்களைப் பற்றி பேசுகிறார்.

அதைத் தொடர்ந்து அதே இடத்தில் குவிகம் இலக்கியவாசல் சார்பில்  எஸ் கண்ணன்

அவர்கள் தீபாவளி மலர்களில் மிளிரும் இலக்கியத்தைப்பற்றி உரையாடுகிறார்.

அனைவரும் வருக.

 

சென்ற மாதம் நடைபெற்ற நிகழ்வுகள்:

 

 

கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்

அனுபவம் !

விருட்சம் அழகியசிங்கர், ‘மனதுக்குப் பிடித்த கவிதைகள்’ – தொகுதி 1 ஐ பாரதி பிறந்தநாள் பரிசாகக் கொடுத்தார்! அதில் தனக்குப் பிடித்த கவிதைகளில் ஒரு நூற்றினைத் தொகுத்திருந்தார். நூறு கவிஞர்களின் கவிதைகளை ஒரு சேரப் படிக்கும்போது வித்தியாசமாக இருந்தது. எனக்குக் கவிதை எழுத வருமோ வராதோ, தெரியாது, ஆனால் ரசிப்பேன்! நூறாம் பக்கத்தில் உள்ள ஒரு கவிதை ‘அனுபவம்’ பற்றியது – ‘நீ மணி; நான் ஒலி!’ – படித்தபோது மனதில் தோன்றியவைகளை எழுதலாம் என்று தோன்றுகிறது! (கவிதையும் கவிஞரும் வியாசத்தின் கடைசியில்!).

அனுபவம் என்பது ‘பட்டறிவு’ – வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனிதர்கள், இடங்கள், நிகழ்வுகள், உணர்வுகள் இவை புதிதாய்த் தோற்றுவிக்கும் ‘அக அறிவு’ அல்லது ‘முன்னமேயே உணர்ந்திருத்தல்’ என்பதாய்க் கொள்ளலாம். இந்த வார்த்தையின் மூல வேர் சமஸ்கிருதத்திலிருந்து வருகிறது. “பவ” என்றால் ‘நிகழ்வது’, ‘ஆவது’ என இருபொருள் – நிகழ்வதை அறிவதும் ஆவதை உணர்வதுமே ‘அனுபவம்’ என்கிறது விக்கிபீடியா!

புரியும்படியாகச் சொல்லவேண்டுமானால், எக்ஸ்பீரியென்ஸ் (EXPERIENCE) தான் அனுபவம்!

ஐம்புலன்களுக்கும் அனுபவம் பெறும் அல்லது தரும் திறமை உண்டு – கேட்பது, பார்ப்பது, சுவைப்பது, உணர்வது என அனுபவம் நம்மை ஆக்ரமிக்கவல்லது.

படிப்பறிவைவிட, பட்டறிவு எப்போதுமே உயர்ந்ததாகப் படுகிறது. தனது அனுபவத்தினால் ஒன்றைச் செய்து முடிப்பவர், புதிதாய்ப் படித்து வரும் இளைஞரை விடச் சிறிது நன்றாகவும், நேர்த்தியாகவும் அந்த வேலையைச் செய்யக்கூடும். இதற்கு அவரது வயது மற்றும் அனுபவத்தினால் கிடைத்த திறமை காரணமாக இருக்கும். ஆனாலும், இன்றைய இளைஞர்களில் சிலர் இதற்கு விதிவிலக்காக இருக்கக்கூடும். ‘அனுபவம்’ ஒரு மனிதனை எப்படிப் புடம் போட்டு, முழுமையாக்குகிறது என்பதற்காக இதைச் சொன்னேன். (‘பெரிசுங்க எல்லாம் எப்பொவும் இப்படித்தான் பேசும்’ என்ற இளசுகளின் முணுமுணுப்பு காதில் விழுகிறது!)

குலம், தவம், கல்வி, குடிமை, மூப்பு எல்லாம் இருந்தாலும், உலகம் அறியாமை – அனுபவ ஞானம் இல்லாமை – என்பது நெய்யில்லாத வெண்சோற்றைப் போன்றதாகும் என்கிறது ‘பேதமை’ அதிகாரத்தின் பாடல் ஒன்று (நாலடியார் – 333 ஆம் பாடல்)!

அனுபவம் நம்மையறியாமலே நம்முடன் சேர்ந்துவிடுகிறது – நல்ல அனுபவங்கள் மனதுக்கு மகிழ்ச்சியைத் தருகின்றன. கெட்ட அல்லது தீய அனுபவங்கள் மனதுக்கு வருத்தத்தை அளிக்கின்றன. எந்த அனுபவமானாலும், அது ஏதோ ஒன்றை மனிதனுக்குக் கற்றுக்கொடுக்கத் தவறுவதில்லை! கற்றுக்கொள்ள மறுப்பவன் முன்னேற்றம் காண்பதில்லை! கற்றுக்கொண்டு அனுபவசாலியானவன் ஞானத்தை அடைகின்றான்!

நம் அனுபவம் மட்டும் அல்ல – நம்மைச் சுற்றியுள்ள அனைவரின் அனுபவங்களும் நம்மை செம்மைப்படுத்துகின்றன. பிறருக்கு ஒரு நன்மையோ அல்லது தீமையோ நிகழும்போது, அந்த அனுபவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்வதுதான் புத்திசாலித்தனம். நெருப்பு சுடும் என்பதை நாம் சுட்டுக்கொண்டுதான் அறிந்துகொள்ள வேண்டும் என்பதில்லை – பிறர் அனுபவத்திலிருந்தும் அறிந்துகொள்ளலாம். வாழ்க்கையில் அனுபவங்களைவிட வேறு சிறந்த ஆசான் இல்லை!

கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் முழுவதும் அனுபவங்களின் படிப்பினைகள்தான் – வாழ்வின் அனைத்து அனுபவங்களையும், இந்து மத சித்தாந்தங்களுடன் இணைத்து அவர் சொல்லியிருக்கும் கருத்துக்கள் என்றென்றும், எல்லோருக்கும் பொருந்தி வருபவை!

‘பரமசிவன்  கழுத்திலிருந்து பாம்பு கேட்டது
‘கருடா செளக்கியமா?’
‘யாரும் இருக்குமிடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் செளக்கியமே’ கருடன் சொன்னது,
அதில் அர்த்தம் உள்ளது!

அவரது இந்தப் பாடல் அனுபவத்தின் வெளிப்பாடுதானே!

அனுபவங்கள் வாழ்க்கையைச் செப்பனிடுகின்றன – அனுபவங்களால் ஞானம் பெற்றவர்கள்தானே பட்டினத்தாரும், பத்ரகிரியாரும்?

எல்லாவற்றுக்கும் அனுபவம் தேவை என்கின்றன ‘வேலை வாய்ப்பு’ விளம்பரங்கள்!

அனுபவம் நிராகரிக்கப்படும் ஒரே விளம்பரம் “மணமக்கள்” தேவை என்னும் மேட்ரிமோனியல் விளம்பரம் மட்டுமே!

இப்போது அந்தக் கவிதையும் கவிஞரும்!

கவிதை:
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்;
……………….

வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்;

‘அனுபவித் தேதான் அறிவது வாழ்வெனில்
ஆண்டவனே நீ ஏன் எனக் கேட்டேன்
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
அனுபவம் என்பதே நான்தான்’ என்றான்!
-கவிஞர் – கண்ணதசன்.

அனுபவமே ஆசான். அனுபவமே கடவுள்! அனுபவமே நீயும். அனுபவமே நானும்!!

டாக்டர் ஜெ.பாஸ்கரன்.